என் உசிரை எடுக்குறதுக்குன்னே கடவுள் கோவாலை படைச்சிருப்பார் போலண்ணே….உசிரை உறிஞ்சி எடுத்துருவான்….என்னது கோவாலைத் தெரியாதா..என்னண்ணே..கொஞ்சம் எட்டிப்பாருங்க.உங்களுக்கும் கடவுள் அது போல ஒரு நண்பனைக் கொடுத்துருப்பான்..பேரு வேணா வேற இருக்கலாம்..எனக்கு கிடைச்ச கோவாலு உண்மையிலயே ஒரு அப்பாவியா அல்லது அடப்பாவியான்னு தெரியாம இவ்வளவு நாள் முழிச்சுருக்கேண்ணே..
நம்ம கோவாலுக்கு கொஞ்சம் சாம் ஆண்டர்சன் உடம்புண்ணே..அதனாலயே நம்ம அர்னால்டு மாதிரி ஆளுங்களைப் பார்த்தா கொஞ்சம் ஏக்கமா பார்ப்பான்….எப்படியாவது அர்னால்ட் மாதிரி இல்லைன்னாக் கூட ஒரு ராமராஜன் பாடியாவது கொண்டு வந்துடனும்னு மூக்கம்புட்டு ஆசையா இருந்தாண்ணே..அவனும் ரெண்டு வேலை சாப்பிடாம, வயித்துல ஈரத்துணியக் கட்டிக்கிட்டு அலைஞ்சுப் பார்த்தான்..வயிறு வலி வந்து டாக்டர் பீஸ் குடுத்ததுதான் மிச்சம்..ஒரு தடவை எல்லாம் ஒரு வாரம் முழுக்க வெறும் காய்கறி, பழம்தான்..நாங்க எல்லாம் அவனைக் கடுப்பேத்துறதுக்குன்னே, நல்லா சிக்கன், மட்டனுன்னு வெட்டுவோம்..பாவம் பய, ஒரு வாரம் கூட தாக்குப் பிடிக்க முடியாது..ஓய்ஞ்ச வாழைப்பழம் மாதிரி ஆகிடுவான்..அதுக்கடுத்து சாப்பிடுவான் பாருங்க….ஒரு வருசமா, ரூமுக்குள்ள அடைச்சு வைச்சிருந்த மாதிரி..2 கிலோ கம்மி பண்ணியிருந்தான்னா, 6 கிலோ ஏறியிருப்பான்..
ஒரு முறை பரபரப்பா எங்கிட்ட வந்தான்…
“ராசா…பக்கத்துல ஜிம் ஒன்னு ஆரம்பிச்சிக்கிராயிங்கடா..செலவு கம்மியாம்டா..நான் போகப் போறேன்..”
“சரி, நீ திரும்பவும் ஆறு கிலோ ஏத்தப்போற..நல்லாப் போயிட்டு வாடா..”
“மச்சான்..நீயும் வரனும்டா..கம்பெனிக்கு..”
“அடப்பாவி..ஏதோ சின்னப்புள்ளையில ஒன்னுக்கு போறதுக்கு கம்பனிக்கு கூப்புடுற மாதிரி கூப்பிடுற..எனக்கும் ஜிம்முக்கும் ஆகாது..நான் வரலைடா..”
“டே..நானும் நீயும் இப்படியாடா பழகியிருக்கோம்….வாடா..”
“இத விட கேவலமா பழகியிருக்கோம்..ஆள விடு..”
சின்னக் குழந்தை மாதிரி நச்சரிக்குறான்னே..சரி தொல்லை தாங்க முடியாம் சரின்னு சொல்லிப்புட்டேன்..நாளைக்கு வந்து கூட்டிட்டுப் போறேன்னு சொல்லிக் கிளம்பிப் போயிட்டேன்..எத்தனை மணிக்குன்னு ஒரு வார்த்தை கேக்காததுதான்னே நான் வாழ்க்கையில பண்ணுன ரெண்டாவது தப்பு..முதல் தப்பு எதுன்னு கேக்குறீங்களா..அவன் பிரண்ட்ஷிப் புடிச்சதுதான்..நான் ஏற்கனவே சொன்ன மாதிரி, நானெல்லாம் தூங்க ஆரம்பிச்சா, கத்திய வைச்சு குத்தினாலும். கொசு கடிக்குதுன்னு தட்டி விட்டு கண்டினியூ பண்றவன்….அன்னிக்கு வேற சரியான கனவு..சிம்பு டைரக்ட் பண்ணி பேரரசு நடிக்கிற மாதிரி..இதுல பேரரசு குளோசப்ல வேற பஞ்ச் டயலாக் பேசுறாரு..அலறிட்டேண்ணே..பக்கத்துல “ராசா..ராசா..”ன்னு பாசமா யாரோ கூப்பிடுற மாதிரி இருந்துச்சுண்ணே..
ஆஹா..பேரரசுக்கு நம்ம பெயர் எப்படிடா தெரியும்னு பயந்துப் போய் கண்ணத் தொறந்தா, பேய் மாதிரி நம்ம கோவாலு நிக்குறாண்ணே..
“ராசா..டவுசரப் போடுடா..ஜிம் போகலாம்..”
“அடங்கொய்யாலே..மணி என்னத் தெரியுமா..நாலு மணிடா..தூங்க விடு..”
கோவாலுக்கிட்ட புடிக்காதது எது தெரியுமா..அடம் புடிப்பாண்ணே..நச்சரிச்சே தூக்கத்த கலைச்சிட்டான்..நான் வேற பேரரசு பார்த்த கோவத்துல இருந்தேன்னா..முணங்கிக்கிட்டே எழுந்து தயாராகிப் போனேன்..ஜிம் போய் ரிசப்சன் போனா..பாசமா வரவேற்தாயிங்க..40 டாலர் கட்டிட்டு கோச்சை அறிமுகப்படுத்துறேன்னு கூட்டிக்கிட்டு போனாயிங்க..போய் பார்த்தா..ஆத்தாடி..நல்லா ஓங்குதாங்க அர்னால்டு அண்ணன் மாதிரி ஒருத்தர் நிக்குறாருண்ணே..பேர் “மார்க்”..எனக்கு குலை நடுங்கிருச்சுண்ணே…நம்மெல்லாம் அவர் பக்கத்துல நின்னா ஏதோ யானைப் பக்கத்துல கொசு நின்ன மாதிரி இருந்துச்சுன்ணே..நான் மெதுவா கோவாலுக்கிட்ட சொன்னேன்..
“கோவாலு..இப்பக்கூட ஒன்னுமில்லை..40 டாலர் போனா போயிட்டுப் போகுது..இப்படியே கொல்லைப்புறம் வழியா ஓடிப்போகிடலாம்..”
அவ்வளவுதான்..கோவலுக்கு கோவம் வந்துருச்சு..”ஏண்டா உடம்பு ஆரோக்கியத்து மேல உனக்கு அக்கறையே இல்லையா” ன்னு ஹார்லிக்ஸ் மம்மி மாதிரி பேச ஆரம்பிச்சுட்டான்..மார்க் கேட்டாரு..
“மிஸ்டர் கோபால்..உங்களுக்கு என்ன மாதிரி உடம்பு வேனும்னு சொல்லுங்க..அதுக்கேத்த மாதிரி உங்களுக்கு பயிற்சி கொடுக்குறேன்..”
“மார்க்..எனக்கு..வந்து…ம்..நல்லா கட்டுமஸ்தா, ஜிம் பாடியா..செக்சியா சிக்ஸ் பேஸ் வேண்டும்..”
அடப்பாவி, வினைய 40 டாலர் குடுத்து வாங்குறேயேடா..பயிற்சி முடிஞ்சப்பிறகு நம்ம பேஸ்ஸே இருக்குமான்னு சந்தேகமா இருக்கு..இதுல சிக்ஸ் பேஸ் வேறயாடா..
“மிஸ்டர் கோபால் பயிற்சி கொஞ்சம் கடுமையா இருக்கும்..பரவாயில்லையா..”
சரின்னு கோவாலு தலையாட்டுனதுதான் கோவாலு வாழ்க்கையில பண்ணுன முதல் தப்புன்னு நினைக்குறேன்னே..முதல்ல எளிமையாத்தான் கோச் ஆரம்புச்சாரு..போகப் போக கொடுத்தார் பாருங்க பயிற்சி..ஸ்..அப்பா..கோவாலு ஒரு கட்டதுல கதறிட்டாண்ணே..நானெல்லாம் அவ்வளவு பெரிய இரும்பெல்லாம் காய்லாங்கடையிலதான்னே பார்த்து இருப்பேண்ணே..நல்லா தூக்கி தலையச் சுத்தி 20 சுத்து சுத்த சொல்லுறாருண்ணே..ஒரு தடவைக்கு மேல எனக்கு கிறு கிறுன்னு வந்துருச்சுண்ணே..கண் முழி பிதிங்கிறுச்சுண்ணே..அப்படியே பின்னாடித் திரும்பி கோவாலு என்ன செய்றான்னுப் பார்த்தா..பாவம்னே..நல்லா இரும்புக் கம்பிய எடுத்து வய்த்துல அடி, அடி அடிண்ணே..கோவாலு கண்ணுல தண்ணி முட்டிக்கிட்டு வந்துருச்சு….சரி அந்தப்பக்கம் ஏதாவது கொல்லைப்புறக் கதவு தொறந்து கிடந்தா ஓடிப்போயிடலாம்னு பார்த்தா, ஒரு நாயை வேற அந்தப் பக்கம் கட்டி வைச்சுருந்தாயிங்க..
ஒரு வழியா எங்க உடம்புல மட்டும் உசிரை வைச்சுட்டு மத்தது எல்லாம் எடுத்தட்டு மார்க் சொல்றாரு..
“இன்னைக்கு இது போதும்..நாளைக்கு கண்டினியூ பண்ணலாம்..”
நாளை வரைக்கும் எனக்கு உசிரு இருக்குமான்னு சந்தேகமா இருந்துச்சுண்ணே..கோவாலைப் பார்த்தேன்..நல்லா தண்ணியில முக்கி பிழிஞ்ச டவல் மாதிரி ஆயிட்டான்..அப்படியே வீட்டுக்கு போய் படுக்கையில சரிஞ்சுட்டேன்..இதுல என் பொண்டாட்டி வேற “என்னங்க..இப்பயே ரெண்டு கிலோ குறைஞ்ச மாதிரி இருக்கு” ன்னு கடுப்பேத்துனா..அவகிட்ட பேசக்கூட வாயைத் தொறக்க முடியல..சைகையிலே..”என்னை ஒரு 24 மணி நேரத்துக்கு எழுப்பாதே” ன்னு சொல்லிட்டு தூங்க ஆரம்பிச்சுட்டேன்..எங்க ஆரம்பிச்சேன்..வாங்குன அடியில அதுவா வருது..
என்ன நடந்துச்சுன்னே தெரியலண்ணே..யாரோ கூப்பிடுற மாதிரி இருந்துச்சு..
“என்னங்க..என்னங்க..ஒரு நாள் முழுக்கத் தூங்கிட்டு இருக்கீங்க..என்ன ஆச்சுங்க..மறுநாள் காலை ஆகிடுச்சு..ஒரு வாயாவது சாப்பிடுங்க..”
“என்னால கையத்தூக்க முடியலடி..நீ..ஒன்னு பண்ணு..காபிய நல்லா ஆற வைச்சு, ஒரு ஸ்ட்றா போட்டு கொண்டுவா..உறிஞ்சி, உறிஞ்சி குடிச்சுக்குறேன்..”
யாரோ கதவைத் தட்டுற மாதிரி இருந்துச்சுண்ணே..என்னால எழுந்து நடக்க முடியாததால் மனைவி போய் கதவைத் தொறந்தா..பார்த்தா நம்ம கோவாலு என்னை நோக்கி ஓடி வர்றான்..
“ராசா..இன்னைக்கு நம்ம ஜிம் போக முடியலைல்ல..அந்தக் கோச் மார்க் வீடு தேடியே வந்துட்டான்..காரை வெளிய நிப்பாட்டிக்கிட்டு வீட்டு வெளியே நிக்குறான்டா..நான் பின்புற கேட் வழியா ஏறிக் குதிச்சு ஓடி வந்துட்டேன்டா..உன்னோட அட்றஸ்ஸூம் அவன் கிட்ட இருக்குடா..அவன் இங்க வந்தா என்னைக் காட்டிக் கொடுத்துராதடா..என் உசிரைக் காப்பாத்துடா..” ங்கிரான்..
ஜிம் போய் சிக்ஸ் பேஸ் வாங்க நினைச்சது தப்பாண்ணே…
25 comments:
அருமைங்க ராஜா... நல்லா கல கலப்பா எழுதியிருக்கீங்க... ஆமா, இங்க எந்த ஊருல இருக்கீங்க நீங்க? கண்டிப்பா நீங்க சொல்லற மாதிரி எல்லாருக்கும் உங்க கோவாலு மாதிரி ஒரு நண்பர் இருப்பாங்கன்னு தான் நினைக்கறேன். :)
என்னை இதுவரைக்கும் யாரும் எக்ஸர்சைஸ் செய்ய மட்டும் யாரும் கூப்பிட்டதே இல்லப்பா.
அருமை... வயிறு குலுங்க சிரித்தேன்... :) அந்த நிழற்படத்தில் உள்ளது கோவாலு வா?
மீண்டும் என்னை சிரிக்க வைத்த ஒரு பதிவு. கோவாலுகள் பெரும்பாலானவர்களுக்கு உண்டு. ஆனால் அந்த அன்புத் தொல்லைகள் இல்லாமல் நம் வாழ்வின் இனிமையான தருணங்கள் இல்லை.
அண்ணே அண்ணேன்னு அப்பாவியா போட்டுத் தாக்குற தாக்கு தாள முடியலண்ணே. சிரிச்சி சிரிச்சே சிக்ஸ் பேக் வந்துடும்ணே.
ராஜா, கலக்கறீங்க போங்க.. உங்க கோவாலக் கேட்டதா சொல்லுங்க.
அவுரு நிசமான நண்பரானு எனக்குத் தெரியல.. ஆனா ரொம்ப சுவாரஸ்யமா இருக்காரு கோவாலு...
கோவாலு..........................அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
:-) i want to meet Mr. Kovalu :)
good one, could not able to control my laugh :)
LOL....... kalakkal.... :)
அடுத்த பாகத்தை ஆவலா எதிர்பார்க்குறோம்ணே. :))
அய்யோ அய்யோ என்னால முடியல . , , , , ,
அட போங்க பா வயிரு வலிக்குது
Raja...Really super
ஆமா கோவாலு இப்ப எப்படி இருக்காரு. ஒரு படம் போட கூடாதா?
once again again nice post....
////////////////
ராசுக்குட்டி said...
அருமைங்க ராஜா... நல்லா கல கலப்பா எழுதியிருக்கீங்க... ஆமா, இங்க எந்த ஊருல இருக்கீங்க நீங்க? கண்டிப்பா நீங்க சொல்லற மாதிரி எல்லாருக்கும் உங்க கோவாலு மாதிரி ஒரு நண்பர் இருப்பாங்கன்னு தான் நினைக்கறேன். :)
15 August, 2009 9:55 PM
/////////////////
நன்றி ராசுக்குட்டி(எங்க அம்மா என்னை இப்படித்தான் கூப்பிடுவாக)
///////////////
குடுகுடுப்பை said...
என்னை இதுவரைக்கும் யாரும் எக்ஸர்சைஸ் செய்ய மட்டும் யாரும் கூப்பிட்டதே இல்லப்பா.
15 August, 2009 10:17 PM
//////////////
வருகைக்கு நன்றி குடுகுடுப்பை..தப்பிச்சிக்கிடீங்க,,,))
///////////////
கவியரசு செல்லப்பன் said...
அருமை... வயிறு குலுங்க சிரித்தேன்... :) அந்த நிழற்படத்தில் உள்ளது கோவாலு வா?
15 August, 2009 10:30 PM
Anonymous said...
மீண்டும் என்னை சிரிக்க வைத்த ஒரு பதிவு. கோவாலுகள் பெரும்பாலானவர்களுக்கு உண்டு. ஆனால் அந்த அன்புத் தொல்லைகள் இல்லாமல் நம் வாழ்வின் இனிமையான தருணங்கள் இல்லை.
15 August, 2009 10:41 PM
வானம்பாடிகள் said...
அண்ணே அண்ணேன்னு அப்பாவியா போட்டுத் தாக்குற தாக்கு தாள முடியலண்ணே. சிரிச்சி சிரிச்சே சிக்ஸ் பேக் வந்துடும்ணே.
16 August, 2009 12:06 AM
////////////////
நன்றி கவியரசு, படத்தில் உள்ளது அவர் இல்லை..நன்றி அனானி, வானம்பாடி
/////////////////////
ச.செந்தில்வேலன் said...
ராஜா, கலக்கறீங்க போங்க.. உங்க கோவாலக் கேட்டதா சொல்லுங்க.
அவுரு நிசமான நண்பரானு எனக்குத் தெரியல.. ஆனா ரொம்ப சுவாரஸ்யமா இருக்காரு கோவாலு...
கோவாலு..........................அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
16 August, 2009 12:40 AM
Suresh said...
:-) i want to meet Mr. Kovalu :)
16 August, 2009 5:42 AM
Mullai said...
good one, could not able to control my laugh :)
16 August, 2009 8:55 AM
//////////////////
நன்றி செந்தில், முல்லை(எங்க இருக்கீங்க(, சுரேஷ்
/////////////////
இராம்/Raam said...
LOL....... kalakkal.... :)
16 August, 2009 9:09 AM
துபாய் ராஜா said...
அடுத்த பாகத்தை ஆவலா எதிர்பார்க்குறோம்ணே. :))
16 August, 2009 9:30 AM
சரவணன். ச said...
அய்யோ அய்யோ என்னால முடியல . , , , , ,
அட போங்க பா வயிரு வலிக்குது
16 August, 2009 10:59
////////////////////
நன்றி ராஜா(கண்டிப்பா) ராம், சரவணன்
//////////////////
16 August, 2009 10:59 AM
Vijay Anand said...
Raja...Really super
16 August, 2009 6:22 PM
Vijay Anand said...
This post has been removed by the author.
16 August, 2009 6:24 PM
யோ (Yoga) said...
ஆமா கோவாலு இப்ப எப்படி இருக்காரு. ஒரு படம் போட கூடாதா?
16 August, 2009 9:23 PM
sikkandar said...
once again again nice post....
16 August, 2009 11:58 PM
//////////////////////
நன்றி விஜய், யோ, சிக்கந்தர்
/////////////////
நன்றி ராசுக்குட்டி(எங்க அம்மா என்னை இப்படித்தான் கூப்பிடுவாக)
////////////////
அப்படிங்களா ராஜா... சந்தோசம். நான் சிறுவனாக இருந்த போது இப்படித்தான் என்னை எல்லோரும் கூப்பிடுவார்கள்...
நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு ..
சாந்தகுமார்
Anandavel : Beleive me, i have never laughed alone in my life like this. I was laughing so much it made tears and with stomach pain.
so great. i can see the power in ur words. Please continue....
romba naal aachuyaa ipdi siruchu....... hayyo hayyo
Post a Comment