Saturday, 8 August 2009

கருப்பனுங்க

அமெரிக்காவில் நிறவெறி இருக்கிறது என்று பலவித செய்திகளில் படித்திருப்போம்..உண்மையில் நிறவெறி இருக்கிறதா??..உண்மையை சொல்லப் போனால் வெள்ளையர்களிடம் இருக்கும் நிறவெறியைக் காட்டிலும் சில இந்தியர்களிடம் தான் நிறவெறி அதிகமாக இருக்கிறது என்று சொல்லுவேன்..அதிர்ச்சியாக உள்ளதா..எனக்கும்தான்..இரண்டு மூன்று அனுபவங்களைப் பெறும்முன்பு..

பொதுவாக கருப்பாக இருப்பவர்களெல்லாம் ஒருவித தாழ்வு மனப்பான்மையில் இருப்பார்கள் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்..எனக்கெல்லாம் கருப்பாக இருப்பதுதான்னே பெருமை..எந்த நிலையில் கேட்டாலும் சத்தம் போட்டு சொல்லுவேன் நான் கருப்பனென்று..உடம்பு தோலில் என்ன இருக்கிறது..இந்த தோல் எவ்வளவு நாள் வரும் என்று நம்ம ஆளுங்களுக்குத் தோணுவதில்லை..மூப்பெய்து தோல் சுருங்கி கால் தள்ளாடும்போது தெரியும், எது உண்மையென்று..அதுவரையில் சில ஆளுங்க போடும் ஆட்டம் இருக்கிறதே..அய்யோடா..

எனக்கு ஏற்பட்ட இரண்டு அனுபவங்கள் மிகவும் கொடியதுண்ணே..நான் 12 ஆம் வகுப்பு படிக்கும் போது எனக்கு இயற்பியல் எடுத்த ஆசிரியர் மிகவும் பணத்தாசை பிடித்தவர்ண்ணே..அவரிடம் டியூசன் செல்லவில்லையென்றால் அவ்வளவுதான்..அவர்களை எவ்வளவு அவமானம் செய்ய வேண்டுமோ, அவ்வளவும் செய்வார்..நம்மெல்லாம் டியூசன் படிக்கிற அளவுக்கு காசு வைச்சிருந்தோம்னா எதுக்குன்னே ஹாஸ்டலில் தங்கிப் படிக்கிறோம்..ரெண்டு வேலை கஞ்சி குடிச்சுத்தாண்ணே நம்மளையெல்லாம் படிக்க வைச்சாயிங்க..சோழவந்தான் புழுதிக்காட்டுல வெயிலுல விளையாண்டு ஆத்துல புரண்ட நமக்கு சேட் வீட்டுப் பையன் கலராண்ணே வரும்..ஆனாலும் இறுமாப்போடத் திரிவோம்ணே..

ஒருநாள் அந்த இயற்பியல் வாத்தியார் டீயூசன் படிக்காத ஓரே காரணத்துக்காக என்னை கஷ்டமான கேள்வி கேட்டு டேபிள் மேலே நிக்க வைச்சாருண்ணே..அந்த அவமானத்தைக் கூட என்னால் தாங்க முடிஞ்சதுண்ணே..அடுத்து சொன்னார் பாருங்கண்ணே..

“எல்லாரும் இவனைப் பாருங்கடா..எந்த ஊருடா இவன்..ஆளும் கலரும்..டே..ராசா..என்ன கலருடா நீயி..உங்க வீட்டுல நீ பிறக்குறப்ப தாருல முக்கி எடுத்தாயிங்களா..நீ வெள்ளைக் கலரு சோப் போட்டாலும் அது கருப்பாயிடும்டா..நீங்களெல்லாம் ஏண்டா பொறக்குறீங்க..”

எவ்வளவுதான் இறுமாப்பா இருந்தாலும் சின்னப் பையந்தானுங்கண்ணே..ஹாஸ்டலுக்கு வந்து தேம்பி தேம்பி அழுதேண்ணே..முதல் முறையா என்னை நானே வெறுத்த மாதிரி இருந்தது..கருப்பாக பிறந்தால் செத்துவிட வேண்டுமோ??அம்மாவைப் பார்க்கும்போது கேட்டேன்..

“அம்மா..நம்ம வீட்டுல எல்லாரும் கலரா இருக்காங்களம்மா..என்னை மட்டும் ஏம்மா கருப்பா பெத்த..”

அப்படியே கட்டி அணைச்சுக்கிட்டாங்கண்ணே..காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுதானே..

“தம்பி ராசா..கலருல என்னடா இருக்கு..சாமியெல்லாம் உன் கலர்தாண்டா….உன்னைக் கேலி பண்றவங்களுக்கெல்லாம் உடம்புதாண்டா வெள்ளை, மனசு கருப்புடா..உனக்கு உடம்பு கருப்புடா..மனசு தங்கம்டா..நீ நல்லா படிச்சு முன்னேறுடா….அதுதாண்டா உலகம்..”

வெறி கொண்டு படிச்சேன்னே..12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் இயற்பியலில் 182 மார்க்....பள்ளியில் இயற்பியலில் நாந்தான் முதல்.. மார்க் சீட்டு வாங்கிக் கொண்டு வெளியே வந்தேன்..இயற்பியல் வாத்தியார் நின்றுருந்தார்..

“ராசா..ஹெட்மாஸ்டர் கூப்பிட்டு என்னைப் பாராட்டினார்..நீதான் நம்ம பள்ளிக்கூடத்துல முதல்…”

நீங்க நம்புறீங்களோ நம்பலையோ தெரியாதுண்ணே..எங்க இருந்து இந்த வேகம் வந்ததுன்னு தெரியலண்ணே..

“ஏன் சார்..கருப்பா இருக்கிறவய்ங்க்ளெல்லாம் படிக்கக் கூடாதா..நாங்களெல்லாம் பொறந்தது தப்பா சார்..இனிமேல் யாரோட மனசையும் இப்படி கொலை பண்ணாதிங்க சார்..”

அதுக்கப்பறம் கல்லூரியில் படிக்கும்போது இதைப்பற்றி நினைப்பே வந்ததில்லை, என் கல்லூரி ஆண்டு விழா வரும்வரைக்கும்..கல்லூரி ஆண்டு விழாவுக்கு ஒரு பிரபலத்தை அழைத்திருந்தனர்..நாமதான் முந்திரிக் கொட்டை மாதிரி எல்லாத்தையும் முன்னின்று செய்வோமே..எல்லா வேலையும் பார்த்துவிட்டு அவரை ரிஷப்சனில் நின்று வரவேற்க வேண்டும்..நல்லா டிரஸ் போட்டு நின்று இருந்தேன்..என் கூட படிக்கும் ஒரு குஜராத்திப் பையன் வந்தான்.,.

“ராசா..நீ..இங்க நிற்க வேண்டாம்..நான் வரவேற்கிறேன்..”

“ஏண்டா..நாந்தானே எல்லா வேலையும் செய்தேன்..என்னப் பிரச்சனை.”

“இல்ல..நீ கருப்புல..வரவேற்கும்போது கொஞ்சம் கலரா இருந்தா நல்லா இருக்கும்னு புரொபசர் நினைக்கிறாரு..”

எனக்கு செருப்பைக் கழட்டி அடித்த மாதிரி இருந்துச்சு..சொன்ன புரபசர் யாருண்ணா, சேட் வீட்டுக்காரரில்ல..நம்ம திண்டுக்கல்லுகாரர்..எல்லா வேலையும் இழுத்துப் போட்டு செய்த எனக்கு ஏன் இந்த தகுதி மட்டும் பறிக்கப்பட்டது..அந்த கேள்விக்கு பதில் கூட நான் நினைத்துப் பார்க்க விரும்பாமல் வீடு சென்றேன்.

கல்லூரி மட்டும் இல்லைண்ணே..இங்க அமெரிக்காவுல நம்ம ஆளுங்ககிட்டயும் இந்த அழுக்கு மனப்பான்னை இருக்குண்ணே..அது ஏனோ தெரியல..அடுத்தவங்க மனசை சாகடிக்கும் குரூரப் புத்தி இயல்பாக வந்து விடுகிறது..இந்த ஊருல கருப்பா உள்ளவங்கெல்லாம் கடின வேலை செய்வதால் கொஞ்சம் ஓங்குதாங்க இருப்பாங்கண்ணே..நம்ம ஆளுங்களுக்கதான் கலர்காரங்களாச்சே..அவர்கள் கண்டு பிடிக்க கூடாது என்று இந்தியிலோ, தமிழிலிலோ கமெண்ட் அடிப்பாயிங்க பாருங்க..யாராவது..கருப்பு இனத்தவர் ரோட்டில் நடந்து போனால் போதும்..

“டே..மச்சான்..கருப்பனுங்க வர்றாங்க..பத்திரமா நடந்துப் போ..அந்த நாயிங்கள நம்ப முடியாது..திருட்டுப் பசங்க..”

நான் அமெரிக்காவில் வந்து இறங்கும்போது, நம்ம பசங்க எனக்கு கிடைத்த முதல் அறிவுரை..”கருப்பனுங்கள நம்பாதே..திருடனுங்க..”

ஏன் இப்படி..திருடனுங்க எல்லாம் கருப்பனுங்கதானா..எனக்கு நம்ம ஆளுங்க புத்திப் பார்த்து மனசே வெறுத்துப் போச்சுண்ணே..அதுல என்னை அவமானப்படுத்த வேண்டுமே..அப்பதானே நம்ம ஆளுங்க மனசு நிறையும்..

யாராவது கருப்பு இனத்தவர் நடந்து வந்தால் போதும், குரூர புத்தி வந்து விடும்..

“ராசா..என்ன உன் இனத்து ஆளுங்க வர்ராயிங்க..எதுவும் மாநாடு போடுறீங்களா..பார்த்துடா உங்க கலரப் பார்த்து, ஆப்பிரிக்கா காட்டுல உள்ள மிருகங்கெளெல்லாம் பயந்துடப் போகுது..”

நான் சிரித்துக் கொள்வேன்..என்ன செய்ய..உன் மனதில் உள்ள மிருகத்தை விட ஆப்பிரிக்கா காட்டில் உள்ளது எவ்வளவோ மேல்..

இப்படித்தான் இங்கு உள்ள ஒரு நண்பனுக்கு கருப்பர்கள் என்றாலே ஒரு அலர்ஜி..அவர்களைக் கண்டாலே இந்தியிலே திட்டுவான்..ஒரு முறை நான் அவனுடன் தூரப்பயணம் மேற்கொண்டிருந்த போது நாங்கள் சென்ற கார் ஒரு கம்பத்தில் மோதி நிலை குலைந்தது..எனக்கு சின்ன அடி..அவனுக்கு சரியான அடி….கையிலுள்ள தோல் கிழிந்து ரத்தம் ஓடுகிறது..எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை..911 க்கு கால் பண்ணலாம் என்று பார்த்தால் விழுந்த வேகத்தில் செல்போன் வேலை செய்யவில்லை..என்னாலும் நடக்க முடியவில்லை..இரவாகியதால் யாரும் அந்தப் பக்கம் நடந்துகூட வரவில்லை..

இன்னும் கொஞ்ச நேரம் போனால் என் நண்பனின் கதியை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை..அந்த நேரம் பார்த்து என் நண்பன் “ஆப்பிரிக்க மிருகம்” என்று அழைக்கும் கருப்பினத்தவர்(26 வயது இருக்கும்) நடந்து வந்து கொண்டிருந்தான்..பார்த்தவுடனே பதறிப் போய்விட்டான்னே..தன்னோட இரண்டு கைகளிலாலும் என் நண்பனை தூக்கிக் கொண்டு அப்படியே ஓடுறான்னே..பக்கத்தில்தான் ஆஸ்பத்திரி உள்ளதாம்..அப்படியே என் நண்பன் உடம்பில் உள்ள ரத்தம் முழுக்க அந்தக் கருப்பன் மீது..என் நண்பனைக் காப்பாற்றி விடவேண்டுமென்று வெறி..

“பிரதர்..டோண்ட் வொர்ரி..என்னைக் கெட்டியாக பிடித்துக் கொள்..நான் உன்னை எப்படியும் காப்பாற்றி விடுவேன்..”

நானும் அவன் கூட ஓடுறேன்னே..அப்படியே அவன் குழந்தையத் தூக்கிட்டு ஓடுற மாதிரி இருந்துச்சு..அவன் என் நண்பனை தூக்கிக் கொண்டு ஓடும்போது காலணி கழன்று விழ, அதைப் பற்றி கவலைப்படாமல் கல்லு, மண் பார்க்காம ஓடுனான் பாருங்க..தெய்வம்னே..

மருத்துவமனை அடைந்தப் போதுதான், எனக்கு மூச்சே வந்தது..என் நண்பனை ஆஸ்பத்திரியில் அனுமதித்து கிளம்ப எத்தனித்தான்..என் நண்பன் அவன் கையப் பிடித்துக் கொண்டான்..

“ரொம்ப நன்றி சார்..நீங்க இல்லையின்னா நான் இறந்திருப்பேன்..”

“ஹே..கம் ஆன் மேன்……நாமெல்லாம் மனுசங்கதானே..”

அவனை அப்போதுதான் பார்த்தேன் அவன் உடம்பெல்லாம் என் நண்பனின் ரத்தம்..சட்டை கிழிந்திருந்தது..காலணி கழண்டு விழுந்தும் கல் மண் பார்க்காமல் ஓடியதால் அவன் பாதங்களில் ஒரு கல் கிழித்து சிறிது ரத்தம் வந்தது..அவனுடைய ரத்தமும், என் நண்பனுடைய ரத்தமும் ஒரே கலருதாண்ணே..

63 comments:

துளசி கோபால் said...

மனசை அப்படியே அள்ளிருச்சு.

நல்ல இடுகைண்ணே.

ரத்தம் ஒரே நிறமுன்னு என்னைக்கு இந்த ஆளுங்க புரிஞ்சுக்கப் போறாய்ங்களோ?

SUREஷ்(பழனியிலிருந்து) said...

same blood

vasu balaji said...

அருமையா சொல்றீங்க ராஜா. ஆணா பொண்ணா பார்த்ததும் அடுத்த பார்வை காதுமடலத் தானே இன்னும் பார்க்குதுங்க பெருசுங்க. வளர்ந்தா கருப்பா செவப்பான்னு.வளர்ரப்போவும் சரி வளர்ந்த பொறவும் சரி அதும் மனச யாரு பாக்குறா?

Joe said...

கருத்துள்ள இடுகை.

வெள்ளையர்களின் மனோபாவம் இந்தியர்களில் ஆழமாக ஊடுருவியிருக்கிறது.

"யார் இனவெறியர்கள்?" என்ற இடுகையில் மற்ற நாட்டவரை இன வெறியர்கள் என்று கூறும் அருகதை இந்தியர்களுக்கு இல்லை என்று சொல்லியிருந்தேன்.

Rangs said...

Arumai nanbaa

லெமூரியன்... said...

எப்டிங்க உங்களால மட்டும் இப்டி உணர்ச்சிபூர்வமா எழுத்துக்களை கொண்டுவர முடியுது......கண்கள் குளமாயிடிச்சு உங்க இடுகை படிச்சி முடிச்ச பிறகு .....பால் வெள்ளை நிறத்துல இருக்கும் என்னையும் கூட கருப்பினத்துல தப்புன வெள்ளை பறையன்ன்னு கேலி பண்ணிருக்காங்க தலைவா......

வெற்றி-[க்]-கதிரவன் said...

தமிழனின் நிறமே கருப்புதானே -:) நோ மோர் திராவிடன் :)

வெற்றி-[க்]-கதிரவன் said...

கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு -:)

வெள்ளையா இருந்தா கேவலம்ன்னு ஆரம்பத்திலேயே மாற்றி சொல்லாறம்பிசிருந்தா இன்னைக்கு கதையே வேற...

என்னசெய்ய வெள்ளையா இருந்தவன் முந்திகிட்டான்,,, நாம அப்ப ஏமாந்துட்டோம் :(

பதிவு பட்டாசு

துபாய் ராஜா said...

//அம்மா..நம்ம வீட்டுல எல்லாரும் கலரா இருக்காங்களம்மா..என்னை மட்டும் ஏம்மா கருப்பா பெத்த..”//

'சிவாஜி' படத்துல 'ரஜினி' கேட்பது நியாபகம் வந்ததுண்ணே !!

//அப்படியே கட்டி அணைச்சுக்கிட்டாங்கண்ணே.. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுதானே..

“தம்பி ராசா..கலருல என்னடா இருக்கு..சாமியெல்லாம் உன் கலர்தாண்டா….உன்னைக் கேலி பண்றவங்களுக்கெல்லாம் உடம்புதாண்டா வெள்ளை, மனசு கருப்புடா..உனக்கு உடம்பு கருப்புடா..மனசு தங்கம்டா..நீ நல்லா படிச்சு முன்னேறுடா….அதுதாண்டா உலகம்..”//

இதுதாண்ணே தாய் உள்ளம்.

//வெறி கொண்டு படிச்சேன்னே..12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் இயற்பியலில் 182 மார்க்.... பள்ளியில் இயற்பியலில் நாந்தான் முதல்.. மார்க் சீட்டு வாங்கிக் கொண்டு வெளியே வந்தேன்..இயற்பியல் வாத்தியார் நின்றுருந்தார்..

“ராசா..ஹெட்மாஸ்டர் கூப்பிட்டு என்னைப் பாராட்டினார்..நீதான் நம்ம பள்ளிக்கூடத்துல முதல்…”

நீங்க நம்புறீங்களோ நம்பலையோ தெரியாதுண்ணே..எங்க இருந்து இந்த வேகம் வந்ததுன்னு தெரியலண்ணே..

“ஏன் சார்..கருப்பா இருக்கிறவய்ங்க்ளெல்லாம் படிக்கக் கூடாதா..நாங்களெல்லாம் பொறந்தது தப்பா சார்..இனிமேல் யாரோட மனசையும் இப்படி கொலை பண்ணாதிங்க சார்..”//

சாதிச்ச பிறகு கேட்டதுதாண்ணே சரி......

//என் நண்பன் “ஆப்பிரிக்க மிருகம்” என்று அழைக்கும் கருப்பினத்தவர்(26 வயது இருக்கும்) நடந்து வந்து கொண்டிருந்தான்..பார்த்தவுடனே பதறிப் போய்விட்டான்னே..தன்னோட இரண்டு கைகளிலாலும் என் நண்பனை தூக்கிக் கொண்டு அப்படியே ஓடுறான்னே..பக்கத்தில்தான் ஆஸ்பத்திரி உள்ளதாம்..அப்படியே என் நண்பன் உடம்பில் உள்ள ரத்தம் முழுக்க அந்தக் கருப்பன் மீது..என் நண்பனைக் காப்பாற்றி விடவேண்டுமென்று வெறி..

“பிரதர்..டோண்ட் வொர்ரி..என்னைக் கெட்டியாக பிடித்துக் கொள்..நான் உன்னை எப்படியும் காப்பாற்றி விடுவேன்..”

நானும் அவன் கூட ஓடுறேன்னே..அப்படியே அவன் குழந்தையத் தூக்கிட்டு ஓடுற மாதிரி இருந்துச்சு..அவன் என் நண்பனை தூக்கிக் கொண்டு ஓடும்போது காலணி கழன்று விழ, அதைப் பற்றி கவலைப்படாமல் கல்லு, மண் பார்க்காம ஓடுனான் பாருங்க..தெய்வம்னே..//

அம்மா சொன்னது சரிதாண்ணே.சாமியெல்லாம் கருப்பாதாண்ணே இருக்கும்.

/அவனை அப்போதுதான் பார்த்தேன் அவன் உடம்பெல்லாம் என் நண்பனின் ரத்தம்..சட்டை கிழிந்திருந்தது..காலணி கழண்டு விழுந்தும் கல் மண் பார்க்காமல் ஓடியதால் அவன் பாதங்களில் ஒரு கல் கிழித்து சிறிது ரத்தம் வந்தது..அவனுடைய ரத்தமும், என் நண்பனுடைய ரத்தமும் ஒரே கலருதாண்ணே..//

இந்த உண்மை எல்லாருக்கும் புரிஞ்சா இந்த பூமியே சொர்க்கமா மாறிடும்ணே........

Anonymous said...

very good posting :)

Anonymous said...

மறைந்த மாபெரும் கலைஞர்கள் நாகேஷ் மற்றும் சுந்தர்ராஜன் நடித்த 'சர்வர் சுந்தரம்' வாங்கி பாருங்க. நம் பல பேருடைய பலதரப்பட்ட மன போராட்டங்களுக்கு அதில் நிறைய விடைகள் இருக்கு.

பதிவு அருமை. சுடும் உண்மைகள் மனதை பிழிந்தன. 'படித்தது தமிழ்'படத்தில் தமிழ் மானவர்களை மற்றவர்கள் 'முனுசாமி' என பட்டப்பெயர் வைத்து அழைப்பது போல்தான் இதுவும். உக்கார இடம் கொடுத்தால் உறங்க இடம் கேட்டவர்கள் இன்று உள்ளவர்களையே வெளியே போகும் அளவிற்கு வளரவிட்டதுதான் பெரிய தவறு.

மாசிலன் said...

உங்களது மன வேதனைகளையும் அதன் பாரங்களையும் உங்களுடன் பகிர்ந்து மனச்சுமைகளை இரக்கி தாழ்வு மனப்பான்மை எனும் கற்பனை பிம்பத்தை உடைத்தெறிப்போம்.

அப்பாவி முரு said...

உலகம் ஆயிரம் சொல்லட்டும் ராசா,

நானெல்லாம் பாலுமகேந்திராவோட ரசனைக்கு இணையான ரசனை கொண்டவன்.

காந்தல் கருப்பு, அட்டக்கருப்பு, எண்ணைக்கருப்பு... என எல்லா கருப்பும் நமக்கு பிடிட்டதுதான்.

Anonymous said...

ஒபாமா பாதி வெள்ளையன் தானே? அப்ப ஏன் கறுப்பன் எண்டனும்? பேசாமல வெள்ளையன் எண்ட வேண்டியது தானே?

Unmai said...

Dey karuppa.. nee eppo enna solla varrae?

Vijayashankar said...

ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க. நிச்சயம் நிறைய விசயங்களை மனதுக்குள் புதைத்து வைத்திருக்கிறீர்கள் நண்பரே.

Senthil said...

as usual!!!!!!!!!!!
touching!!!!!!!!

நிகழ்காலத்தில்... said...

இறை கருப்புதான்.

கருப்பு தோலின் சிறப்பை மருத்துவரிடம் கேளுங்கள்.

Balaganesan Swaminathan said...

Very nice post.
I have seen and experience this many times. So, I understand what you mean.

கவியரசு செல்லப்பன் said...

அருமை அண்ணே

Rajinikanth AJ said...

Cant believe it.. your way of delievery is simply superb... keep rocking!!!!

தினேஷ் said...

தல , நானும் இதை பல முறை அனுபவித்திருக்கிறேன் .. சிறு வயதில் அழுதிருக்கிறேன் நண்பர்கள் கேலி பண்ணூவதால் . ஆனால் 10 வதுக்கு பிறகு போங்கட வெண்ணைகளானு போய்ட்டே இருப்பேன்.. இனியும் எவனாச்சும் எங்கேயாச்சும் இத பத்தி பேசுனா உங்க பதிவ ஒரு பிரிண்ட எடுத்து கொடுத்தி படி நாயினு போய்ட்டே இருக்கலாம். ரொம்ப நன்றி தல

Pradeep said...

அருமை

Suresh said...

PAdikum mun oru thagaval ennoda oru pathivu draft la iruku thalaipu Nan Karupan da :-) ingae athae irukum endru ninaikiran, its about I feel proud to be black but india la karuparai eppadi pakuranga racisim mathiri ... eluthi vachi irukan... sari unga pathiva padichitu varan

Suresh said...

Sema Sema Sema Sema Article raja especially last la unga friend incident eppa sami alae urukiduchu ithu unmai thalaiva nalla post..

sari parthu ponga boss vandila friend oda ponalum

Bharathi said...

சிறந்த பதிவு.

அவிய்ங்க ராசா said...

//////////////////
துளசி கோபால் said...
மனசை அப்படியே அள்ளிருச்சு.

நல்ல இடுகைண்ணே.

ரத்தம் ஒரே நிறமுன்னு என்னைக்கு இந்த ஆளுங்க புரிஞ்சுக்கப் போறாய்ங்களோ?
8 August, 2009 8:59 PM
////////////////////////
நன்றி துளசி அய்யா..

அவிய்ங்க ராசா said...

////////////////
8 August, 2009 8:59 PM
SUREஷ் (பழனியிலிருந்து) said...
same blood
8 August, 2009 9:16 PM
/////////////////
yes anna..thanks..

அவிய்ங்க ராசா said...

/////////////////////
8 August, 2009 9:16 PM
வானம்பாடிகள் said...
அருமையா சொல்றீங்க ராஜா. ஆணா பொண்ணா பார்த்ததும் அடுத்த பார்வை காதுமடலத் தானே இன்னும் பார்க்குதுங்க பெருசுங்க. வளர்ந்தா கருப்பா செவப்பான்னு.வளர்ரப்போவும் சரி வளர்ந்த பொறவும் சரி அதும் மனச யாரு பாக்குறா?
8 August, 2009 9:18 PM
/////////////////
ஆமாங்க..நம்ம தலைமுறையிலாவது இதை மாற்றுவோம்..

அவிய்ங்க ராசா said...

/////////////////////
Joe said...
கருத்துள்ள இடுகை.

வெள்ளையர்களின் மனோபாவம் இந்தியர்களில் ஆழமாக ஊடுருவியிருக்கிறது.

"யார் இனவெறியர்கள்?" என்ற இடுகையில் மற்ற நாட்டவரை இன வெறியர்கள் என்று கூறும் அருகதை இந்தியர்களுக்கு இல்லை என்று சொல்லியிருந்தேன்.
8 August, 2009 9:45 PM
///////////////////////
நன்றி ஜோ..நல்ல இடுகை..

அவிய்ங்க ராசா said...

////////////////
Rangs said...
Arumai nanbaa
8 August, 2009 10:15 PM
/////////////////////
thanks ranga..

அவிய்ங்க ராசா said...

/////////////////////
ramesh said...
எப்டிங்க உங்களால மட்டும் இப்டி உணர்ச்சிபூர்வமா எழுத்துக்களை கொண்டுவர முடியுது......கண்கள் குளமாயிடிச்சு உங்க இடுகை படிச்சி முடிச்ச பிறகு .....பால் வெள்ளை நிறத்துல இருக்கும் என்னையும் கூட கருப்பினத்துல தப்புன வெள்ளை பறையன்ன்னு கேலி பண்ணிருக்காங்க தலைவா......
8 August, 2009 10:23 PM
[பி]-[த்]-[த]-[ன்] said...
தமிழனின் நிறமே கருப்புதானே -:) நோ மோர் திராவிடன் :)
8 August, 2009 11:18 PM
///////////////
நன்றி ரமேஷ்..பித்தன்

அவிய்ங்க ராசா said...

////////////////////
துபாய் ராஜா said...
//அம்மா..நம்ம வீட்டுல எல்லாரும் கலரா இருக்காங்களம்மா..என்னை மட்டும் ஏம்மா கருப்பா பெத்த..”//

'சிவாஜி' படத்துல 'ரஜினி' கேட்பது நியாபகம் வந்ததுண்ணே !!

////////////////////
நன்றி ராசா..துபாயில இருக்கீங்களா?

அவிய்ங்க ராசா said...

/////////////////////
மயில் said...
very good posting :)
9 August, 2009 12:42 AM
Anonymous said...
மறைந்த மாபெரும் கலைஞர்கள் நாகேஷ் மற்றும் சுந்தர்ராஜன் நடித்த 'சர்வர் சுந்தரம்' வாங்கி பாருங்க. நம் பல பேருடைய பலதரப்பட்ட மன போராட்டங்களுக்கு அதில் நிறைய விடைகள் இருக்கு.

பதிவு அருமை. சுடும் உண்மைகள் மனதை பிழிந்தன. 'படித்தது தமிழ்'படத்தில் தமிழ் மானவர்களை மற்றவர்கள் 'முனுசாமி' என பட்டப்பெயர் வைத்து அழைப்பது போல்தான் இதுவும். உக்கார இடம் கொடுத்தால் உறங்க இடம் கேட்டவர்கள் இன்று உள்ளவர்களையே வெளியே போகும் அளவிற்கு வளரவிட்டதுதான் பெரிய தவறு.
9 August, 2009 2:05 AM
மாசிலன் said...
உங்களது மன வேதனைகளையும் அதன் பாரங்களையும் உங்களுடன் பகிர்ந்து மனச்சுமைகளை இரக்கி தாழ்வு மனப்பான்மை எனும் கற்பனை பிம்பத்தை உடைத்தெறிப்போம்.
9 August, 2009 2:15 AM
/////////////////////
நன்றி மயில், மாசிலன், அனானி

அவிய்ங்க ராசா said...

/////////////////
அப்பாவி முரு said...
உலகம் ஆயிரம் சொல்லட்டும் ராசா,

நானெல்லாம் பாலுமகேந்திராவோட ரசனைக்கு இணையான ரசனை கொண்டவன்.

காந்தல் கருப்பு, அட்டக்கருப்பு, எண்ணைக்கருப்பு... என எல்லா கருப்பும் நமக்கு பிடிட்டதுதான்.
9 August, 2009 2:47 AM
////////////////
நீங்க நம்ம கட்சி..

அவிய்ங்க ராசா said...

////////////////
pukalini said...
ஒபாமா பாதி வெள்ளையன் தானே? அப்ப ஏன் கறுப்பன் எண்டனும்? பேசாமல வெள்ளையன் எண்ட வேண்டியது தானே?
9 August, 2009 2:53 AM
Unmai said...
Dey karuppa.. nee eppo enna solla varrae?
9 August, 2009 3:21 AM
////////////////////////
புகலினி, ஒபாமா, இன்றும் கருப்பராகவே கருதப்படுகிறார்
உண்மை..ரொம்ப சந்தோசம்..

அவிய்ங்க ராசா said...

//////////////////////
9 August, 2009 3:21 AM
Vijayashankar said...
ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க. நிச்சயம் நிறைய விசயங்களை மனதுக்குள் புதைத்து வைத்திருக்கிறீர்கள் நண்பரே.
9 August, 2009 6:07 AM
Senthil said...
as usual!!!!!!!!!!!
touching!!!!!!!!
9 August, 2009 6:09 AM
நிகழ்காலத்தில்... said...
இறை கருப்புதான்.

கருப்பு தோலின் சிறப்பை மருத்துவரிடம் கேளுங்கள்.
9 August, 2009 6:28 AM
BG said...
///////////////////////
நன்றி விஜய்சங்கர், நிகழ்காலம்,பி.ஜீ..

அவிய்ங்க ராசா said...

/////////////////
கவியரசு செல்லப்பன் said...
அருமை அண்ணே
9 August, 2009 7:29 AM
Rajinikanth AJ said...
Cant believe it.. your way of delievery is simply superb... keep rocking!!!!
9 August, 2009 7:59 AM
சூரியன் said...
தல , நானும் இதை பல முறை அனுபவித்திருக்கிறேன் .. சிறு வயதில் அழுதிருக்கிறேன் நண்பர்கள் கேலி பண்ணூவதால் . ஆனால் 10 வதுக்கு பிறகு போங்கட வெண்ணைகளானு போய்ட்டே இருப்பேன்.. இனியும் எவனாச்சும் எங்கேயாச்சும் இத பத்தி பேசுனா உங்க பதிவ ஒரு பிரிண்ட எடுத்து கொடுத்தி படி நாயினு போய்ட்டே இருக்கலாம். ரொம்ப நன்றி தல
9 August, 2009 8:14 AM
/////////////////
நன்றி கவியரசு, ரஜினி(என்னடா போனை காணோம்), சூரியன்

அவிய்ங்க ராசா said...

//////////////////////
9 August, 2009 8:14 AM
Pradeep said...
அருமை
9 August, 2009 10:09 AM
Suresh said...
PAdikum mun oru thagaval ennoda oru pathivu draft la iruku thalaipu Nan Karupan da :-) ingae athae irukum endru ninaikiran, its about I feel proud to be black but india la karuparai eppadi pakuranga racisim mathiri ... eluthi vachi irukan... sari unga pathiva padichitu varan
9 August, 2009 11:45 AM
//////////////////
நன்றி சுரேஷ், பிரதீப்

அவிய்ங்க ராசா said...

/////////////////
9 August, 2009 11:50 AM
Bharathi said...
சிறந்த பதிவு.
9 August, 2009 6:32 PM
////////////////
நன்றி பாரதி

Anonymous said...

சில கருப்பர்கள் போதையில், ஏழ்மையில் இருப்பதால் குற்றத்தில் ஈடு படுவதால் அனைத்துக் கருப்பர்களுமே குற்றவாளிகளாகப் பார்க்கப் படுகின்றனர்.இந்தியர்களின் குழந்தைப் பருவத்திலிருந்தே நிறமான,அழகான துணை என்று மூளைச் சலவை.
அமெரிக்காவில் பல இந்தியர்களுக்குக் கருப்பர்கள் அவசரர்த்தில் சாலைகளில் செய்துள்ள உதவிகள் பற்றிப் பல படங்களே எடுக்கலாம்.இருந்தாலும் ஒரு வெள்ளையரை மணம் புரிந்தால் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் கருப்பை மணந்துகொண்டால் ஏற்றுக் கொள்ளப் பெற்றோர்களுக்கு இல்லை.
இருந்தாலும் அமெரிக்காவில் பிறந்து வளரும் இந்திய இளையதுகள் நிற வெறி குறைந்து பல கருப்பு மணங்களும் நடக்கின்றன.பெரிசுகள்தான் கிராக்கி!பட்டாத் தெரியும்.

Rajinikanth AJ (ajrajini) said...

Sir i want your appointment...

நந்தன் said...

50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் ....... இனிமேலாவது "நெஞ்ச நக்கற" மாதிரி எழுதரத விட்டு நல்லபடியா நாலு பதிவு போடு ராசா.....

மத்தபடி....."துளசி சார்" இல்ல....துளசி டீச்சர்....."வரலாறு முக்கியம்" ராசா....

--நந்தன்--

Prasanna Rajan said...

என்னமோ போங்க தல... பின்னுறீங்க... சூப்பர் பதிவு. அப்படியே நம்ம ப்ளாக் பக்கம் கொஞ்சம் எட்டிப் பாருங்க...

அமுதா கிருஷ்ணா said...

சூப்பர் பதிவு. நிறவெறியை நிச்சயம் குழந்தைகள் மனதில் நாம் அறவே ஒழிக்க வேண்டும்.ஆசிரியர்கள் எக்காரணம் கொண்டும் கலர் பற்றி கமெண்ட் அடிக்கவே கூடாது.

taaru said...

இது உங்க ஏரியா .... [நெஞ்ச பிழியுறது.. அப்பட்டமா உண்மைய வலிக்க வலிக்க சொல்றது..]

So.. again a Century [100 from 42 balls] from Black master blaster..

Ganesh said...

Nalla Pathivu...

யோ வொய்ஸ் (யோகா) said...

எனககு தெரிந்த வரை நிறவெறி, இன வெறி, மொழிவெறி, ஆதிக்க வெறி இவை எல்லாவற்றிலும் தமிழனை மிஞ்ச யாருமே இல்லை. இன்னொன்னையும் சொல்ல மறந்துட்டேன். மத வெறி..

நாகராஜன் said...
This comment has been removed by the author.
நாகராஜன் said...

அப்படியே இன்னொன்னுங்க ராஜா,

கறுப்பு என்பது தான் சரி-ன்னு நினைக்கறேன்... கருப்பு என்பது தவறான பயன்பாடு (நிறத்தை குறிப்பதால்)... எனக்கு சரியா தெரியலை... இப்படி தான் இருக்கணும்னு தோணினதுனால சொல்லறேன்... தப்பா இருந்தா கண்டுக்காதீங்க.

நாகராஜன் said...

ராஜா,

அருமையா எழுதியிருக்கீங்க போங்க... நான் இருப்பது நியூ யார்க்கில். இங்கே தினம் தினம் நிறைய பேரை பார்க்கிறேன்... நானும் ஒரு சில தடவை நீங்க குறிப்பிட்டிருப்பது போல சொல்லியிருந்தாலும் மனசில் ஒரு வினயம் இல்லாம தான் இருந்துச்சு... உங்க பதிவை படிச்சதுக்கு அப்புறம் கொஞ்சம் மனசு வலிக்கற மாதிரி இருக்குதுங்க. நல்ல பதிவு...

மற்ற நண்பர்கள் குறிப்பிட்டிருப்பது போல, குழந்தை பிறந்த உடனே காதை பார்த்து கறுப்பா வருவானா/ளா இல்லை சிவப்பா வருவானா/ளா என்று பார்ப்பது தான் இன்னமும் நடக்கிறது. ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்... எப்போ மாற போறோமோ...

அவிய்ங்க ராசா said...

//////////////////
Anonymous said...
சில கருப்பர்கள் போதையில், ஏழ்மையில் இருப்பதால் குற்றத்தில் ஈடு படுவதால் அனைத்துக் கருப்பர்களுமே குற்றவாளிகளாகப் பார்க்கப் படுகின்றனர்.இந்தியர்களின் குழந்தைப் பருவத்திலிருந்தே நிறமான,அழகான துணை என்று மூளைச் சலவை.
அமெரிக்காவில் பல இந்தியர்களுக்குக் கருப்பர்கள் அவசரர்த்தில் சாலைகளில் செய்துள்ள உதவிகள் பற்றிப் பல படங்களே எடுக்கலாம்.இருந்தாலும் ஒரு வெள்ளையரை மணம் புரிந்தால் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் கருப்பை மணந்துகொண்டால் ஏற்றுக் கொள்ளப் பெற்றோர்களுக்கு இல்லை.
இருந்தாலும் அமெரிக்காவில் பிறந்து வளரும் இந்திய இளையதுகள் நிற வெறி குறைந்து பல கருப்பு மணங்களும் நடக்கின்றன.பெரிசுகள்தான் கிராக்கி!பட்டாத் தெரியும்.
9 August, 2009 8:39 PM
Rajinikanth AJ (ajrajini) said...
Sir i want your appointment...
10 August, 2009 1:58 AM
நந்தன் said...
50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் ....... இனிமேலாவது "நெஞ்ச நக்கற" மாதிரி எழுதரத விட்டு நல்லபடியா நாலு பதிவு போடு ராசா.....

மத்தபடி....."துளசி சார்" இல்ல....துளசி டீச்சர்....."வரலாறு முக்கியம்" ராசா....

--நந்தன்--
10 August, 2009 5:38 PM
பிரசன்னா இராசன் said...
என்னமோ போங்க தல... பின்னுறீங்க... சூப்பர் பதிவு. அப்படியே நம்ம ப்ளாக் பக்கம் கொஞ்சம் எட்டிப் பாருங்க...
11 August, 2009 12:14 AM
/////////////////
நன்றி அனானி, சவுடையா, பிரசன்னா

அவிய்ங்க ராசா said...

///////////////////////
அமுதா கிருஷ்ணா said...
சூப்பர் பதிவு. நிறவெறியை நிச்சயம் குழந்தைகள் மனதில் நாம் அறவே ஒழிக்க வேண்டும்.ஆசிரியர்கள் எக்காரணம் கொண்டும் கலர் பற்றி கமெண்ட் அடிக்கவே கூடாது.
11 August, 2009 6:29 AM
taaru said...
இது உங்க ஏரியா .... [நெஞ்ச பிழியுறது.. அப்பட்டமா உண்மைய வலிக்க வலிக்க சொல்றது..]

So.. again a Century [100 from 42 balls] from Black master blaster..
12 August, 2009 5:21 AM
Ganesh said...
Nalla Pathivu...
12 August, 2009 8:12 AM
////////////////////////
நன்றி அமுதா, அய்யனாரே, கணேஷ்

அவிய்ங்க ராசா said...

////////////////////
யோ (Yoga) said...
எனககு தெரிந்த வரை நிறவெறி, இன வெறி, மொழிவெறி, ஆதிக்க வெறி இவை எல்லாவற்றிலும் தமிழனை மிஞ்ச யாருமே இல்லை. இன்னொன்னையும் சொல்ல மறந்துட்டேன். மத வெறி..
13 August, 2009 4:15 AM
ராசுக்குட்டி said...
This post has been removed by the author.
13 August, 2009 1:55 PM
ராசுக்குட்டி said...
அப்படியே இன்னொன்னுங்க ராஜா,

கறுப்பு என்பது தான் சரி-ன்னு நினைக்கறேன்... கருப்பு என்பது தவறான பயன்பாடு (நிறத்தை குறிப்பதால்)... எனக்கு சரியா தெரியலை... இப்படி தான் இருக்கணும்னு தோணினதுனால சொல்லறேன்... தப்பா இருந்தா கண்டுக்காதீங்க.
13 August, 2009 2:01 PM
////////////////////////
நன்றி யோகா..ராசுக்குட்டி, சரியாகச் சொன்னீர்கள்..திருத்திக் கொள்கிறேன்..

Earn Staying Home said...

A great writing.

krishna said...

good blog raasa...

வால்பையன் said...

பில்லா கருப்பா பயங்கரா இருப்பான்!
நீங்க பயங்கர கருப்பா இருப்பிங்களே!

சும்மா லுலுலாயிக்கு!

கருப்பா இருக்குறவங்களுக்கு தோல்நோய் வாய்ப்பு ரொம்ப ரொம்ப கம்மி!

வஜ்ரா said...

என்னமோ போங்க...குசுபு, சிம்ரன், நமீதா தான் நம்மூரில் டாப் ஹீரோயின்கள். அப்படி இருக்கும் போது எப்படி உங்களை வெள்ளைத்தோல்காரனுங்க மதிப்பாய்ங்க ?

Anonymous said...

ரொம்ப நெஞ்ச நக்கிடியே ராசா..... கருத்த ராசா

Anonymous said...

ellai karisatti,

ppl don't like u not becoz ur black.... but ur both black and ugly

Subramanian Vallinayagam said...

hi

I came from this link http://www.jeyamohan.in/?p=5971
I know this is very late to comment but I want to comment this,

"நானும் அவன் கூட ஓடுறேன்னே..அப்படியே அவன் குழந்தையத் தூக்கிட்டு ஓடுற மாதிரி இருந்துச்சு..அவன் என் நண்பனை தூக்கிக் கொண்டு ஓடும்போது காலணி கழன்று விழ, அதைப் பற்றி கவலைப்படாமல் கல்லு, மண் பார்க்காம ஓடுனான் பாருங்க..தெய்வம்னே.."

உணர்ச்சிபூர்வமா எழுத்துக்கள்.....கண்கள் குளமாயிடிச்சு உங்க இடுகை படிச்சி முடிச்ச பிறகு. nice to read.

Subramanian Vallinayagam
Bangalore

Anandhu said...

SABAAASH!!!!!

Shan Nalliah / GANDHIYIST said...

Prejudice,arrogance,idiotism,ignorance,hatred,fear never disappear from this wonderful world!

Post a Comment