Thursday, 6 August 2009

சாரு - விஜய் டீவி - நீயா நானா

போன வாரம் நெட்டில் ஆனந்த விகடன் “மேய்ந்து(நன்றி லக்கி)” கொண்டிருந்த போது எதேச்சையாக கண்ணில் பட்டது அந்தப் பக்கம்..சாரு விஜய் டீ.வி யை வாரு, வாருன்னு வாரியிருந்தார் அவர் கலந்து கொண்ட “நீயா, நானா” ஷோவுக்கு பணம் வரவில்லையென்று....கொஞ்சம் மோரு சாப்பிட்டுக் கொண்டு(ஒன்னுமில்லண்ணே..காமெடிக்காக குறள் டீ.வி பார்க்கிறேன்), ஆராய்ந்து படித்த போதுதான் தெரிந்தது..தப்பு யார் பக்கம் என்று..

யாருய்யா அது சாரு யாருன்னு பின்னூட்டம் போடுறது..தினமும் ஒரு லட்சம் வாசகர்கள் படிக்கும்(ஹிட் கவுண்டர்..நானும் மாத்தனும்னே..30,000 தான் காமிக்குது..) சைட்டுக்கு சொந்தக்காரர்னே..அவரோட சைட்டுக்கு ஒரு நாளைக்குப் போனால் டெய்லி அவரைப் படிக்கும் வியாதி உங்களைத் தொத்திக் கொள்ளும்..ஒன்று அவரைத் திட்டுவதற்கு, மற்றொன்னு அவரை சிலாகிப்பதற்கு..நான் முதல் வகையறா..

என்னதான் அவரைப் பிடிக்கவில்லையென்றாலும் தப்பு விஜய் டீ.வி பக்கம்தான் இருக்கிறது என்பது என்னோட கருத்து..முதலில் அவரைக் கூப்பிடுவதற்கு முன்னால் தெளிவாக சொல்லி இருக்க வேண்டும்..பேமண்ட் கொடுப்பார்களா, இல்லையென்று..மற்றொன்று அலைக்கழிப்பது..இவ்வளவு பெரிய ஸ்டார் குழுமத்தின் சானல் ஒன்று, ஒரு மனிதரை பணத்துக்காக இவ்வளவு அலைக்கழித்திருக்க வேண்டாம்..அவரை கூப்பிட்டு அவமானப்படுத்துதல் போல இருந்தது..கோபிநாத்தும், அந்த நிகழ்ச்சியின் டெக்னீசியனும் சும்மாவா வேலைப் பார்க்கிறார்கள்..அல்லது அந்த நிகழ்ச்சியின் ஸ்பான்சர்களுக்கு இலவசமாகவா விளம்பரம் தருகிறார்கள்..

மற்றொன்று நேரம் தவறியது..விஜய் டீ.வியின் நேர ஒழுங்கு பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டு இருக்கிறேன்..ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று அத்தனை பேரையும் இரவு 12 மணி வரைக் காக்க வைத்திருக்கிறார்கள்..ஏன் இப்படி..பங்கேற்பாளர்கள் என்றால் அவ்வளவு இளக்காரமா..

என்னுடைய நண்பன் ஒரு வருடத்துக்கு முன்னால் இந்த ஷோவுக்கு போய் இருந்தான்..ஷோ முடிந்து வீட்டுக்கு வந்தவன் வாய் விட்டு கதறியது இன்னும் ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறது..தெரிந்தவர்கள் யாரோ, அவர்களுக்கு மட்டுமே பேச வாய்ப்பு கொடுக்கிறார்கள்..அப்படி யாரிடமாவது மைக் போய் விட்டால்., மைக் கனெக்சனை கட் பண்ணி விடுகிறார்கள்..என் நண்பன் போய் அமைப்பாளரிடம் கேட்டதற்கு வந்த பதில்..”பிடிச்சிருந்தா இரு..இல்லைனா நடையைக் கட்டுக்கிட்டே இரு..”,

அப்புறம் அந்தக் கூட்டத்தில் யார் சென்டிமென்டான ஆளு என்று அடையாளம் பார்த்துக் கொள்கிறார்கள்..அவர்களை அதிகம் பேச வைத்து, அழ வைத்து..அதை டிரெய்லர் வேறு போட்டுக் கொள்கிறார்கள்..என் நண்பன் அந்த நிகழ்ச்சிக்காக நன்றாக தயார் பண்ணி இருந்தாலும் ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை..என்னக் கொடுமை இது...சமுதாயத்தில் நடக்கும் நியாய அநியாயங்களை “நீயா நானா” வில் அலசுவதாக சொல்கிறார்கள்..இந்த அநியாயத்தையும் அலசுவார்களா..அது எப்படி..விளம்பரதாரர், டீ.ஆர்.பி ரேட்டிங்க் வேண்டுமே.

அது சரி, இப்பேர்பட்ட நிகழ்ச்சியில் சாரு, ஏன் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்கிறீர்களா..அதுதான் அவரே சொல்லி விட்டாரே..”எனக்கு சினிமாவில் தலைகாட்ட ஆசை..சரி அதுக்கு முன்னாடி டீ.வியிலவாவது தலை காட்டலாமே என்று ஒரு நப்பாசைதான்..”

என்னத்தைச் சொல்லண்ணே..நீங்க என்ன நினைக்கிறீங்க..யாரு மேலத் தப்பு?? பின்னூட்டம் போடுங்கண்ணே..ஒருவேளை இதையெல்லாம் பார்க்குற நம்ம மேல இருக்குமோ??

26 comments:

Prathap Kumar S. said...

விஜய் டிவியின் தப்புதான்...அதன் நிகழ்ச்சிகள் மட்டுமே தரமாக உள்ளது. அதன் உள்விவகாரங்கள் மிக மோசகமாக இருக்கும் என எதிர்பார்க்கவில்லை. ஒரு கார்ப்பெரட் கம்பெனி போல நடந்து கொள்ளாதது சலிப்பை ஏற்படுத்துகிறது.

Raju said...

நாட்டிலே ரொம்ப முக்கியமான பிரச்சனை இது! துவரம் பருப்பு விலை குறையுமா?

அப்பாவி முரு said...

ஒழுங்கா நேராநேரத்துக்கு சாப்பபுடுறீயா ராசா??

(ஏங்கவலை இவ்வளவுதான்)

துபாய் ராஜா said...

//(ஹிட் கவுண்டர்..நானும் மாத்தனும்னே..30,000 தான் காமிக்குது..) //

அது எப்படின்னு சொல்லுங்கண்ணே !!.நாங்களும் மாத்திகிடுவோம். :))

Barari said...

NALLA VELAI TV YIL SARUVAI KAATTIYATHARKKU AVARIDAME PANAM VAANGGAMAL VITTAARKALE ATHUVARAI MAKILCHCHITHAAN.

vasu balaji said...

சரியாத்தான் சொல்றீங்க.

Anonymous said...

துவரம் பருப்பு விலை குறையுமா?

THIS IS OUR PROBLEM.

வெற்றி-[க்]-கதிரவன் said...

மனிதர்களை மனிதர்களாக மதிக்க வக்கில்லைனா என்ன ஹேருக்கு இந்த மாதரி நிகழ்ச்சி நடத்துரானுகன்னு தெரியல.... இதுல என்னமோ மனுதர்மத்த காக்கவந்தவங்க மாதரி நிகழ்சிகள்ள பேசுறது எல்லாம் ஓவர்...

காசு சம்பாரிக்கதானே ஒரு பக்கம் தமிழ் பேச்சி எங்கள் மூச்சி அத தவற மற்ற நிகழ்சிகள்ள பார்த்தா எதோ இங்கிலீஷ் சேனல் பாக்குற மாதரி இருக்கு....

தமிழ் தமிழ்ன்னு பெருமையா பாடிட்டு பாட்டுமுடிச்தும் விஜய்ன்னு ஆங்கிலத்துல போடுவாக...

காசுக்காக இன்னும் எவ்வளவு தூரம் கீழ இறங்குவாங்கன்னு தெரியல :(

கலகலப்ரியா said...

// பின்னூட்டம் போடுங்கண்ணே//

இப்டிப் போட்டா.. அண்ணைங்கதாண்ணே பின்னூட்டம் போடுவாய்ங்க.. நாம எல்லாம் போடா மாட்டோம்.. <<(இது பின்னூட்டம் இல்லை.. இல்லை.. இல்லை..)

தினேஷ் said...

ஒருவேளை இதையெல்லாம் பார்க்குற நம்ம மேல இருக்குமோ??

ஆமாண்ணே இதுதான் உண்மை .. இப்போ பாருங்க உலகத்துல இருக்குற பல பிரச்சனைல இந்த கொசுத்தொல்லைய பத்தி நீங்க சொல்லி நான் வேற கொசு மருந்து அடிக்க வேண்டியதா போச்சு.

சதங்கா (Sathanga) said...

//ஒருவேளை இதையெல்லாம் பார்க்குற நம்ம மேல இருக்குமோ??//

கலந்துகிறவிங்கள விட்டுடீங்களேன்னே.

பாலகுமார் said...

ஒரு நண்பர் சொன்னது... ஒரு சைடு கூட்டம் குறைவா இருக்குனு சொல்லி அவர opposite
சைடுல ஒக்கார சொல்லிட்டாங்களாம்.

அவிய்ங்க ராசா said...

////////////////////
விமர்சகன் said...
விஜய் டிவியின் தப்புதான்...அதன் நிகழ்ச்சிகள் மட்டுமே தரமாக உள்ளது. அதன் உள்விவகாரங்கள் மிக மோசகமாக இருக்கும் என எதிர்பார்க்கவில்லை. ஒரு கார்ப்பெரட் கம்பெனி போல நடந்து கொள்ளாதது சலிப்பை ஏற்படுத்துகிறது.
5 August, 2009 11:59 PM
/////////////////////////
சரியாக சொன்னீர்கள் விமர்சகன்

அவிய்ங்க ராசா said...

//////////////////////
Raju said...
நாட்டிலே ரொம்ப முக்கியமான பிரச்சனை இது! துவரம் பருப்பு விலை குறையுமா?
6 August, 2009 12:05 AM
//////////////////////
வருகைக்கு நன்றி ராஜூ..துவரம்பருப்பு விலை ஏறியிருக்கிறதே என்று சினிமா பார்க்கமாலா இருக்கிறோம்….தப்பு நடக்கும்போது தட்டிக் கேட்க துவரம் பருப்பு விலை தேவையில்லை..

அவிய்ங்க ராசா said...

////////////////
அப்பாவி முரு said...
ஒழுங்கா நேராநேரத்துக்கு சாப்பபுடுறீயா ராசா??

(ஏங்கவலை இவ்வளவுதான்)
6 August, 2009 12:17 AM
////////////////
என்னைப் பத்தி கவலைப்பட ஒரு ஜீவன் இருக்குன்னு நினைக்கிறப்ப கண்ணுல தண்ணி வருதுண்ணே..

அவிய்ங்க ராசா said...

//////////////////////
துபாய் ராஜா said...
//(ஹிட் கவுண்டர்..நானும் மாத்தனும்னே..30,000 தான் காமிக்குது..) //

அது எப்படின்னு சொல்லுங்கண்ணே !!.நாங்களும் மாத்திகிடுவோம். :))
6 August, 2009 12:39 AM
///////////////////
அது தெரிஞ்சா எப்பவே 10 லட்சத்துக்கு மாத்தியிருப்பேனே..நீங்களும் தமிழில் பத்து லட்சம் கடந்த முதல் வலைப்பூவை மேஞ்சுக்கிட்டு இருப்பீங்க.

அவிய்ங்க ராசா said...

/////////////////////
Barari said...
NALLA VELAI TV YIL SARUVAI KAATTIYATHARKKU AVARIDAME PANAM VAANGGAMAL VITTAARKALE ATHUVARAI MAKILCHCHITHAAN.
6 August, 2009 12:42 AM
வானம்பாடிகள் said...
சரியாத்தான் சொல்றீங்க.
6 August, 2009 12:44 AM
Anonymous said...
துவரம் பருப்பு விலை குறையுமா?

THIS IS OUR PROBLEM.
6 August, 2009 2:39 AM
/////////////////////
வருகைக்கு நன்றி பராரி,வானம்பாடிகள், அனானி..

அவிய்ங்க ராசா said...

//////////////////
[பி]-[த்]-[த]-[ன்] said...
மனிதர்களை மனிதர்களாக மதிக்க வக்கில்லைனா என்ன ஹேருக்கு இந்த மாதரி நிகழ்ச்சி நடத்துரானுகன்னு தெரியல.... இதுல என்னமோ மனுதர்மத்த காக்கவந்தவங்க மாதரி நிகழ்சிகள்ள பேசுறது எல்லாம் ஓவர்...

காசு சம்பாரிக்கதானே ஒரு பக்கம் தமிழ் பேச்சி எங்கள் மூச்சி அத தவற மற்ற நிகழ்சிகள்ள பார்த்தா எதோ இங்கிலீஷ் சேனல் பாக்குற மாதரி இருக்கு....

தமிழ் தமிழ்ன்னு பெருமையா பாடிட்டு பாட்டுமுடிச்தும் விஜய்ன்னு ஆங்கிலத்துல போடுவாக...

காசுக்காக இன்னும் எவ்வளவு தூரம் கீழ இறங்குவாங்கன்னு தெரியல :(
6 August, 2009 8:07 AM
///////////////////////////
நன்றி பித்தன்..சமீபகாலமாக பதிவுலகத்தில் கலக்குறீங்க..உங்க கவுஜை, அவார்டு, சூப்பர்

அவிய்ங்க ராசா said...

///////////////////
கலகலப்ரியா said...
// பின்னூட்டம் போடுங்கண்ணே//

இப்டிப் போட்டா.. அண்ணைங்கதாண்ணே பின்னூட்டம் போடுவாய்ங்க.. நாம எல்லாம் போடா மாட்டோம்.. <<(இது பின்னூட்டம் இல்லை.. இல்லை.. இல்லை..)
6 August, 2009 10:34 AM
////////////////////////
யக்கா..ஏதோ சின்னப் பையன் தெரியாம பண்ணிட்டேன்..மன்னிச்சுடுங்கக்கா..))

அவிய்ங்க ராசா said...

///////////////////////
சூரியன் said...
ஒருவேளை இதையெல்லாம் பார்க்குற நம்ம மேல இருக்குமோ??

ஆமாண்ணே இதுதான் உண்மை .. இப்போ பாருங்க உலகத்துல இருக்குற பல பிரச்சனைல இந்த கொசுத்தொல்லைய பத்தி நீங்க சொல்லி நான் வேற கொசு மருந்து அடிக்க வேண்டியதா போச்சு.
6 August, 2009 12:31 PM
சதங்கா (Sathanga) said...
//ஒருவேளை இதையெல்லாம் பார்க்குற நம்ம மேல இருக்குமோ??//

கலந்துகிறவிங்கள விட்டுடீங்களேன்னே.
6 August, 2009 5:44 PM
Balakumar said...
ஒரு நண்பர் சொன்னது... ஒரு சைடு கூட்டம் குறைவா இருக்குனு சொல்லி அவர opposite
சைடுல ஒக்கார சொல்லிட்டாங்களாம்.
6 August, 2009 6:50 PM
///////////////////////
வருகைக்கு நன்றி சூரியன், பாலா, சதங்கா

குப்பன்.யாஹூ said...

It is participants' mistake.,Not the mistake of Vijay TV.
charu or your friend whoveer should stop attaneding vijay programme immediatelyt after the 1st incident.

I too heard that Vijay TV made people to wait for hours/days for Airtel super singer prograames. But still lot of crowd going to participate in Airtel junior singers.

Not only Vijay TV, it happens to Sun TV, kalaignar TV, Raj Tv, NDTV and all.

அவிய்ங்க ராசா said...

///////////////////////
It is participants' mistake.,Not the mistake of Vijay TV.
charu or your friend whoveer should stop attaneding vijay programme immediatelyt after the 1st incident.

I too heard that Vijay TV made people to wait for hours/days for Airtel super singer prograames. But still lot of crowd going to participate in Airtel junior singers.

Not only Vijay TV, it happens to Sun TV, kalaignar TV, Raj Tv, NDTV and all.
/////////////////////
சரியாக சொன்னீர்கள்..நாமெல்லாம் இன்னும் விட்டில் பூச்சிகளாய் தானே உள்ளோம்..

Unmai said...

Charu intha mathiri paetti kuduthu vijay tv'ah thaakunna.. neer charuvaya ravshu panni blog yaeluthirirae yoi!!! (blog hit kudukkah root pottu yosipingalo??)

Suresh said...

:-)

Pradeep said...

நான் கேள்விப்பட்ட வரைக்கும் , விஜய் டிவி மட்டும் அல்ல...அனைத்து டிவிகலும் இப்படிதான் நடந்து கொள்கின்றன.

Anonymous said...

ANNA THAMIZHLA BLOG ELUDURADHA PATHI SOLLUNGA PLS,
TAMILSELVA

Post a Comment