Saturday 25 July, 2009

ஏர்டெல் அழுவாச்சி சிங்கர் ஜூனியர்

ஏர்டெல் சூப்பர் சிங்கருக்கு அப்புறம் விஜய் டி.வி காரய்ங்க ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர்ன்னு போடுறாயிங்களாம். எனக்கு தெரியவே தெரியாதுண்ணே..என் பொண்டாட்டிதான் சொன்னா.. என்னைக்கு ராகினிஸ்ரீய செலக்ட் பண்றதுக்கு வைல்ட்கார்டு ரவுண்டு 1, 2..மற்றும் பல ன்னு கொண்டு வந்தாயிங்களோ, அப்ப இருந்தே நான் இந்த நிகழ்ச்சிய பார்க்குறத விட்டுட்டேன்.இதுல யுகேந்திரன் வாசுதேவ நாயர்(டீ ஆத்துறவர் இல்லங்கண்ணே) மாலினி பண்ற கொடுமையில கொஞ்ச நாள் விஜய் டீ.வி பார்க்குறதே இல்லை.

இங்க அமெரிக்காவுல(ஆஹா..ஆரம்பிச்சுட்டான்யா..)என் பக்கத்து வீட்டுல சுப்ரமணின்னு ஒருத்தர் இருக்காரு. ஒண்டியாத்தான்னே இருக்காரு. பொண்டாட்டியும் குழந்தையும் சென்னையில இருக்காங்க..சார் ஊரில இருந்து வந்து 2 வருசம் ஆச்சு..நல்ல தன்மையான மனுசண்ணே..வீட்டு மேல ரொம்ப பாசம் வைச்சுருப்பாருண்ணே.எப்ப பார்த்தாலும் அவரோட 6 வயது மகள் பத்திதான் பேசுவாரு. அப்படிப் பேசும்போது அவர் கண்ணோரம் கண்ணீர் முட்டிக்கிட்டு நிக்கும்ணே..எனக்கே சங்கடமாக இருக்கும். போன வாரம் வீட்டுக்கு வந்திருந்தார்..

“ராசா..நல்லா இருக்கீங்களா..”

“நல்லா இருக்கேன் சார்..என்ன இந்த பக்கம்..”

“ஒன்னுமில்ல ராசா..வீட்டுல லேப்டாப் கொஞ்சம் ரிப்பேர் ஆகிடுச்சு..உங்க வீட்டுலதான் டீ.வீ இருக்குல..என் பொண்ணு ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர்ல கலந்துக்கிட்டாளாம்…இன்னைக்கு ஒளிபரப்புறாயிங்களாம்….எனக்காக போட முடியுமா..”

“ஐயோ , இதை கேக்குறதுக்கு ஏன் சார் தயக்கம்..வாங்க உக்காருங்க..இப்ப ஆன் பண்றேன்..”

டீ.வி போட்டேண்ணே..பார்த்தா ஒரு பெரிய பாப்பா சின்ன கவுன் போட்டுக்கிட்டு

“இது ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர்.சின்ன குழந்தைகளின்..”

பார்த்தா நம்ம திவ்யதர்சினி..ஏற்கனவே விஜய் டீ.வி அவார்ட்ஸ் பார்த்த கடுப்புல கொலை வெறி ஆகிட்டேன்..கடவுளே குழந்தைகளின் ஷோவுலயுமா….என் பொண்டாட்டி என் கையப் புடிச்சுக்கிட்டா..எங்க டீ.விய ஒடைச்சுப் புடுவனோன்னுதான்.,அவ கவலை அவளுக்கு ..சீரியல் பார்க்கணுமில்ல,..

பார்த்தா, சின்ன சின்ன குழந்தைகள் அண்ணே..குழந்தைகள்னு சொல்லக்கூடாது..தெய்வங்க..ஏதாவது கோவமா இருக்குறப்பயோ, கவலையா இருக்குறப்பயோ, குழந்தைகள் சிரிப்பைப் பாருங்க..வேற உலகத்துக்கு போகிருவோம்னே..அந்த உலகம் கவலைகள் இல்லாத உலகம்னே..ஒரு பிரச்சனை கிடையாது..நாளைக்கு சோறு தண்ணி பத்தி கவலைப்பட வேண்டியதில்லை..வேலை பத்திக் கவலையில்லை..மனசுல வஞ்சகம் கிடையாது, பொறாமை கிடையாது..இதுக்குத்தானே குழந்தைகளை தெய்வமுன்னு சொல்லுறாயிங்க..

நிகழ்ச்சியில ஒவ்வொரு குழந்தையும் பாடுறதைக் கேக்குறதுக்கு ரெண்டு கண்ணு பத்தாதுண்ணே..அந்த மழலை சிரிப்பு கலந்த பாட்டு..அதுங்க குடுக்குற எக்ஸ்பிரஸன். சூது கலக்காத அக்மார்க் மனசுண்ணே..ஆனா, அந்த குட்டி, குட்டிப் பொண்ணுங்க எல்லாம் ரிஜெக்ட் ஆகி போகும்போது, ஏதோ நம்மளே வாழ்க்கையத் தொலைச்ச மாதிரி இருக்கும்னே..நம்ம எழுந்து போய் அவிங்க கண்ணைத் துடைக்கலாம் போல ஆசையா இருக்கும்னே..இங்க தான் விஜய் டி.வி மார்க்கெட்டிங்க் புத்தி இருக்குது..

குழந்தைகள் மனசு வெள்ளை மனசு..போட்டியில தோத்துட்டா கேமராவைத் தூக்கிக்கிட்டு ஓடிறுராயிங்க..அவிங்க அழுகுறதை அப்படியே படம் புடிச்சு காட்டும்போது மனசே ஆடிப் போகுதுண்ணே..எல்லாம் காசு..ரேட்டிங்க்..எனக்கு அதுக்கு மேல் பார்க்குறதை விருப்பம் இல்லாம எழுந்து போக முயற்சி பண்ணினேன்..

“இருங்க ராசா..என் பொண்ணு வந்துருச்சு..அதோ என் பொண்ணு..என் பொண்ணு..ராசா..பேரு ஸ்வேதா..இது என் பொண்ணுப்பா..அய்யோ எவ்வளவு கியூட் பாருங்களேன்..”

அவர் கண்ணுல தண்ணி நிக்குதுண்ணே..அப்பா பாசம்னே..இந்த உலகத்துல அம்மா பாசம் தெரியுற அளவுக்கு, அப்பா பாசம் வெளியில தெரியுறது இல்லண்ணே..அம்மா பாசத்துக்கு கொஞ்சம் கூட குறைஞ்சது இல்லண்ணே..தினமும் வேலை பார்த்துட்டு மேனஜர்கிட்ட திட்டு வாங்கிட்டு வந்தாலும், வீட்டுக்கு வந்தப் பிறகு “அப்பா” ன்னு சொல்லிக்கிட்டு மகள் வந்து கட்டிப் பிடிக்கும் பாருங்க..அப்படியே ஆபிஸ் பிரச்சனை எல்லாம் பஞ்சாய் பறந்து போயிரும்னே..அந்த உலகத்தில் அப்பாவும் மகளும் இருப்பதாய்தான் தெரியும்..நான் சின்னப்பிள்ளையா இருக்குறப்ப எவ்வளவோ நாள் என் அப்பா நான் சாப்பிடுறதுக்காக அன்னைக்கு சம்பாதிச்ச அவ்வளவுக்கும் பொம்மை வாங்கிட்டு வந்துருக்கார் தெரியுமாண்ணே..சோறு கூட சாப்பிட மாட்டாருண்ணே..நான் விளையாடுறதப் பார்த்து சிரிச்சுக்கிட்டே இருப்பாருண்ணே..

ஸ்வேதா மழலைக் குரலில் பாட ஆரம்பித்தாள்….

“உன்னைக் கண்டனே முதல் முறை..நான் என்னைத் தொலைத்தேனே..”

அவருக்குப் பெருமைண்ணே..

“பாருங்க ராசா..என்னமா பாடுது….அவளை நல்லா வளர்த்து கண்டிப்பா பெரிய ஆளா கொண்டு வருவேன் பாருங்க ராசா..”

நடுவர் சொன்னார்..

“ஸ்வேதா,..நல்லா கியுட்டா பாடுறீயே..இன்னும் நல்லா பிராக்டீஸ் பண்ணனும்பா..ஓகேயா..இந்தா சாக்லேட்”

ரெட் லைட் அழுத்தவே, நம்ம சுப்ரமணியன் சார் முகம் வாடிப் போய்டுச்சுண்ணே..

“சரி ராசா..கிளம்புறேன்..”

என் பதிலைக் கூட எதிர்பாராமல் கிளம்பினார்..கதவு வரைக்கும் போய் விட்டார்..

“சுப்ரமணியன் சார்..என்ன ஆச்சு..குழந்தை தோத்துட்டாண்ணேன்னு கவலையா விடுங்க சார்..குழந்தைப் போட்டிதான்னே..இன்னும் கொஞ்சம் வயசாகட்டும்..”

அவர் கண்கள் கலங்கி இருந்துச்சுண்ணே..

“இல்ல ராசா..குழந்தைய ரெண்டு வருசம் முன்னாடிப் பார்த்தது..எவ்வளவு பெரிய மனுசி ஆகிட்டா..அவ பாடும் போது எனக்கு சிலிர்க்குது ராசா..என்னால அதுக்கு மேல அங்க உக்கார முடியல ராசா..என் பொண்ணு ராசா..ரொம்ப பெரிய ஆளா வருவா பாருங்க..”

சொல்லுறப்ப அவர் முகத்தைப் பார்த்தேண்ணே..ஒரு பெருமிதம் தெரிந்தாலும், குழந்தை பக்கத்துல இல்லையேன்னு ஒரு ஏக்கம்..

அதுக்கு மேல அவரால பொறுக்க முடியல..கண்ணீரைத் துடைச்சுக்கிட்டு அவரு ரூமுக்கு நடந்து போனாருண்ணே..

உலகத்துலயே காசு குடுத்து வாங்க முடியாததுல அப்பா பாசமும் ஒன்னுன்னே..உங்க குழந்தை சிரிக்குறத ஒரு நிமிசம் பாருங்க உங்களுக்கே புரியும்..

32 comments:

Vijay Anand said...

//குழந்தைகள் சிரிப்பைப் பாருங்க..வேற உலகத்துக்கு போகிருவோம்னே..அந்த உலகம் கவலைகள் இல்லாத உலகம்னே..ஒரு பிரச்சனை கிடையாது..நாளைக்கு சோறு தண்ணி பத்தி கவலைப்பட வேண்டியதில்லை..வேலை பத்திக் கவலையில்லை..மனசுல வஞ்சகம் கிடையாது, பொறாமை கிடையாது..இதுக்குத்தானே குழந்தைகளை தெய்வமுன்னு சொல்லுறாயிங்க.. //

ரொம்ப கரெக்ட் ராஜா

Cable சங்கர் said...

arumaiyaana pathivu raja.. nice..

M.Rishan Shareef said...

உயிர்மை கட்டுரை-சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸும், விஜய்யின் அபத்த அவஸ்தையும்!http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=1674

இதைக் கொஞ்சம் பாருங்க !

அப்துல்மாலிக் said...

//உலகத்துலயே காசு குடுத்து வாங்க முடியாததுல அப்பா பாசமும் ஒன்னுன்னே//

நிதர்சனமான உண்மை

vasu balaji said...

ரொம்ப அருமையான இடுகை.

அப்பாவி முரு said...

ராஜா, வீட்டுல ஏதும் விசேசமா?

வாழ்த்துகள்!!!

:))

வினோத் கெளதம் said...

நான் தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் இதே போன்ற நிகழ்ச்சிகளை பார்த்ததில்லை..(வாய்ப்பு இல்லை)..நீங்கள் விஜய் டிவிக்கே இப்படி சொல்லுகிறிர்கள்..இங்கு சில சமயம் அதே போல் நிகழ்ச்சிகளை ஹிந்தி தொலைக்காட்சியில் காண நேரிடும்..அவர்கள் பண்ணும் அலும்பு இருக்கிறதே கொஞ்சம் நஞ்சம் அல்ல..பார்க்க வாய்ப்பு கிடைத்தால் அதேப்போல் எதாவது ஒரு நிகழ்ச்சியை காணவும்..அதன்ப்பின் விஜய் டிவியை கோவில்க்கட்டி கும்பிடுவிர்கள்..

சித்து said...

/*டீ.வி போட்டேண்ணே..பார்த்தா ஒரு பெரிய பாப்பா சின்ன கவுன் போட்டுக்கிட்டு*/

இது தாங்க ராஜா டச். ரொம்ப நெகிழ்வான பதிவு.

ambi said...

ரொம்ப எளிமையா, அழகா சொல்லிட்டீங்க ராஜா. சுப்ரமணி கண்ணுல மட்டுமல்ல படிச்ச எங்க கண்லயும் தான்.

உங்க பெற்றோர் பத்தின (வெப்காம்) பதிவும் ரொம்ப அருமை.

நாடோடி இலக்கியன் said...

நல்ல பதிவு ராஜா,
நல்லதொரு சிறுகதைக்கான கருவும் கூட.

எம்.எம்.அப்துல்லா said...

தாயுமானவர்களை இந்த உலகம் பெரும்பாலும் அறிவதில்லை. நல்ல இடுகை.

:)

Anonymous said...

//என் பொண்டாட்டி என் கையப் புடிச்சுக்கிட்டா..எங்க டீ.விய ஒடைச்சுப் புடுவனோன்னுதான்.,அவ கவலை அவளுக்கு ..சீரியல் பார்க்கணுமில்ல,..

ada athu illai karanam... enga tv kullala TD ya yollu vida poiduvinkaloo enda irukum.. ethukum wife kida kedu parunga :-))

துபாய் ராஜா said...

//என் பொண்டாட்டி என் கையப் புடிச்சுக்கிட்டா..எங்க டீ.விய ஒடைச்சுப் புடுவனோன்னுதான்.,அவ கவலை அவளுக்கு ..சீரியல் பார்க்கணுமில்ல,..//

சிரிக்க வைத்த வரிகள்.

//இந்த உலகத்துல அம்மா பாசம் தெரியுற அளவுக்கு, அப்பா பாசம் வெளியில தெரியுறது இல்லண்ணே..அம்மா பாசத்துக்கு கொஞ்சம் கூட குறைஞ்சது இல்லண்ணே..தினமும் வேலை பார்த்துட்டு மேனஜர்கிட்ட திட்டு வாங்கிட்டு வந்தாலும், வீட்டுக்கு வந்தப் பிறகு “அப்பா” ன்னு சொல்லிக்கிட்டு மகள் வந்து கட்டிப் பிடிக்கும் பாருங்க..அப்படியே ஆபிஸ் பிரச்சனை எல்லாம் பஞ்சாய் பறந்து போயிரும்னே..அந்த உலகத்தில் அப்பாவும் மகளும் இருப்பதாய்தான் தெரியும்..//

//உலகத்துலயே காசு குடுத்து வாங்க முடியாததுல அப்பா பாசமும் ஒன்னுன்னே..உங்க குழந்தை சிரிக்குறத ஒரு நிமிசம் பாருங்க உங்களுக்கே புரியும்..//

உண்மையான உண்மை.

//அவர் கண்கள் கலங்கி இருந்துச்சுண்ணே..//

படித்த எங்கள் கண்களும்தான் ராசா ....

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் said...

ய்ல்லாம் ரேட்ங்கும், காசுக்கும்தான் அண்ணாச்சி....

அவிய்ங்க ராசா said...

//////////////////
Vijay Anand said...
//குழந்தைகள் சிரிப்பைப் பாருங்க..வேற உலகத்துக்கு போகிருவோம்னே..அந்த உலகம் கவலைகள் இல்லாத உலகம்னே..ஒரு பிரச்சனை கிடையாது..நாளைக்கு சோறு தண்ணி பத்தி கவலைப்பட வேண்டியதில்லை..வேலை பத்திக் கவலையில்லை..மனசுல வஞ்சகம் கிடையாது, பொறாமை கிடையாது..இதுக்குத்தானே குழந்தைகளை தெய்வமுன்னு சொல்லுறாயிங்க.. //

ரொம்ப கரெக்ட் ராஜா
24 July, 2009 9:51 PM
///////////////////////
நன்றி விஜய் ஆனந்த்

அவிய்ங்க ராசா said...

////////////////
Cable Sankar said...
arumaiyaana pathivu raja.. nice..
24 July, 2009 9:59 PM
/////////////////
வருகைக்கு நன்றி கேபிள் சங்கர்

அவிய்ங்க ராசா said...

////
எம்.ரிஷான் ஷெரீப் said...
உயிர்மை கட்டுரை-சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸும், விஜய்யின் அபத்த அவஸ்தையும்!http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=1674

இதைக் கொஞ்சம் பாருங்க !
24 July, 2009 10:28 PM
////////////////
நன்றி ரிஷான்…இதே கருத்து உயிர்மையும் சொல்லியதில் சந்தோசம்

அவிய்ங்க ராசா said...

//////////////////////
அபுஅஃப்ஸர் said...
//உலகத்துலயே காசு குடுத்து வாங்க முடியாததுல அப்பா பாசமும் ஒன்னுன்னே//

நிதர்சனமான உண்மை
24 July, 2009 11:56 PM
பாலா... said...
ரொம்ப அருமையான இடுகை.
25 July, 2009 12:04 AM
/////////////////////////
வருகைக்கு நன்றி அபு, பாலா..

அவிய்ங்க ராசா said...

////////////////////
அப்பாவி முரு said...
ராஜா, வீட்டுல ஏதும் விசேசமா?

வாழ்த்துகள்!!!

:))
25 July, 2009 12:42 AM
//////////////////
இல்லண்ணே..:)) இருந்தா கண்டிப்பா சொல்றேன்..)

அவிய்ங்க ராசா said...

///////////////////////
வினோத்கெளதம் said...
நான் தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் இதே போன்ற நிகழ்ச்சிகளை பார்த்ததில்லை..(வாய்ப்பு இல்லை)..நீங்கள் விஜய் டிவிக்கே இப்படி சொல்லுகிறிர்கள்..இங்கு சில சமயம் அதே போல் நிகழ்ச்சிகளை ஹிந்தி தொலைக்காட்சியில் காண நேரிடும்..அவர்கள் பண்ணும் அலும்பு இருக்கிறதே கொஞ்சம் நஞ்சம் அல்ல..பார்க்க வாய்ப்பு கிடைத்தால் அதேப்போல் எதாவது ஒரு நிகழ்ச்சியை காணவும்..அதன்ப்பின் விஜய் டிவியை கோவில்க்கட்டி கும்பிடுவிர்கள்..
25 July, 2009 1:04 AM
/////////////////////
நானும் பார்த்தேண்ணே..விஜய் டீ.விக்கு அப்பங்களா இருக்காயிங்க…உஸ்..அப்பா..

அவிய்ங்க ராசா said...

/////////////////////
சித்து said...
/*டீ.வி போட்டேண்ணே..பார்த்தா ஒரு பெரிய பாப்பா சின்ன கவுன் போட்டுக்கிட்டு*/

இது தாங்க ராஜா டச். ரொம்ப நெகிழ்வான பதிவு.
25 July, 2009 1:06 AM
ambi said...
ரொம்ப எளிமையா, அழகா சொல்லிட்டீங்க ராஜா. சுப்ரமணி கண்ணுல மட்டுமல்ல படிச்ச எங்க கண்லயும் தான்.

உங்க பெற்றோர் பத்தின (வெப்காம்) பதிவும் ரொம்ப அருமை.
25 July, 2009 1:10 AM
நாடோடி இலக்கியன் said...
நல்ல பதிவு ராஜா,
நல்லதொரு சிறுகதைக்கான கருவும் கூட.
25 July, 2009 1:14 AM
//////////////////
நன்றி சித்து, இலக்கியன், அம்பி

அவிய்ங்க ராசா said...

////////////////
எம்.எம்.அப்துல்லா said...
தாயுமானவர்களை இந்த உலகம் பெரும்பாலும் அறிவதில்லை. நல்ல இடுகை.

:)
25 July, 2009 1:57 AM
////////////////////
ஆமாம் அபுதுல்லா அண்ணே..எனக்கும் அதுதான் தோணுகிறது

அவிய்ங்க ராசா said...

///////////////
Anonymous said...
//என் பொண்டாட்டி என் கையப் புடிச்சுக்கிட்டா..எங்க டீ.விய ஒடைச்சுப் புடுவனோன்னுதான்.,அவ கவலை அவளுக்கு ..சீரியல் பார்க்கணுமில்ல,..

ada athu illai karanam... enga tv kullala TD ya yollu vida poiduvinkaloo enda irukum.. ethukum wife kida kedu parunga :-))
25 July, 2009 2:14 AM
/////////////////
ஹி.ஹி.உண்மையெல்லாம் வெளியே சொல்லப்படாது..சோறு வேணுமில்ல..))

அவிய்ங்க ராசா said...

//////////////////
துபாய் ராஜா said...
//என் பொண்டாட்டி என் கையப் புடிச்சுக்கிட்டா..எங்க டீ.விய ஒடைச்சுப் புடுவனோன்னுதான்.,அவ கவலை அவளுக்கு ..சீரியல் பார்க்கணுமில்ல,..//

சிரிக்க வைத்த வரிகள்.

//இந்த உலகத்துல அம்மா பாசம் தெரியுற அளவுக்கு, அப்பா பாசம் வெளியில தெரியுறது இல்லண்ணே..அம்மா பாசத்துக்கு கொஞ்சம் கூட குறைஞ்சது இல்லண்ணே..தினமும் வேலை பார்த்துட்டு மேனஜர்கிட்ட திட்டு வாங்கிட்டு வந்தாலும், வீட்டுக்கு வந்தப் பிறகு “அப்பா” ன்னு சொல்லிக்கிட்டு மகள் வந்து கட்டிப் பிடிக்கும் பாருங்க..அப்படியே ஆபிஸ் பிரச்சனை எல்லாம் பஞ்சாய் பறந்து போயிரும்னே..அந்த உலகத்தில் அப்பாவும் மகளும் இருப்பதாய்தான் தெரியும்..//

//உலகத்துலயே காசு குடுத்து வாங்க முடியாததுல அப்பா பாசமும் ஒன்னுன்னே..உங்க குழந்தை சிரிக்குறத ஒரு நிமிசம் பாருங்க உங்களுக்கே புரியும்..//

உண்மையான உண்மை.

//அவர் கண்கள் கலங்கி இருந்துச்சுண்ணே..//

படித்த எங்கள் கண்களும்தான் ராசா ....
25 July, 2009 3:06 AM
தமிழ் வெங்கட் said...
ய்ல்லாம் ரேட்ங்கும், காசுக்கும்தான் அண்ணாச்சி....
25 July, 2009 3:25 AM
///////////////////////
வருகைக்கு நன்றி ராஜா, வெங்கட்

jothi said...

நல்ல பதிவு ராஜா,..

(திவ்யதர்ஷினி சின்ன கவுனு போட்டா என்ன, பெரிய கவுனு போட்டா என்ன? நமக்கு வெண்டியது கவுனா? பாட்டுதானா?)

Senthil said...

Heart touching post!!!!
as usual! u r great!!!

அவிய்ங்க ராசா said...

/////////////////////
jothi said...
நல்ல பதிவு ராஜா,..

(திவ்யதர்ஷினி சின்ன கவுனு போட்டா என்ன, பெரிய கவுனு போட்டா என்ன? நமக்கு வெண்டியது கவுனா? பாட்டுதானா?)
25 July, 2009 1:00 PM
//////////////////////
அதானே..இந்த பாழாய்ப் போன மனசுக்கு கொஞ்சம் உறைக்கிறமாதிரி சொல்லுங்க அக்கா..

அவிய்ங்க ராசா said...

////////////////
Senthil said...
Heart touching post!!!!
as usual! u r great!!!
26 July, 2009 9:16 AM
//////////////////
thanks senthil...

Anonymous said...

அப்பாடி, எவ்வளோ அருமையா எழுதியிருக்கீங்க. காமெடி, கருத்துன்னு எல்லாம் இருக்கு. நிறைய இது மாதிரி எழுதுங்க

இளைய கவி said...

நான் எழுத்துகளை படிக்கும் போது உணர்ச்சிவசப்படுவதில்லை. உங்கள் எழுத்துகளை படிக்கும் வரை. யோவ் கண்ணுல தண்ணி வருதுய்யா!

Ungalranga said...

நல்ல பதிவு சார்.

காலம்சென்ற எங்க அப்பாவை நினைவு படுத்திவிட்டீர்கள்.

நன்றிகள் பல.. வாழ்த்துக்கள்!!

கைப்புள்ள said...

//உலகத்துலயே காசு குடுத்து வாங்க முடியாததுல அப்பா பாசமும் ஒன்னுன்னே..உங்க குழந்தை சிரிக்குறத ஒரு நிமிசம் பாருங்க உங்களுக்கே புரியும்..//

எப்பவோ படிச்ச ஒரு சில பதிவுகள்னால நீங்க ஒரு "டேஷ் டேஷ்" பதிவர்ங்கிற இமேஜ் ஃபார்ம் ஆகிப் போயிடுச்சுங்கண்ணே.
http://aveenga.blogspot.com/2009/07/18.html - உங்களோட பதிவுல நீங்களே சொல்லிருக்கீங்களே, அந்த மாதிரிங்கண்ணே.

அது தப்பு தான் மன்னிச்சுக்கங்க.

காமெடியாவும் எழுதறீங்க, கண்கலங்க வைக்கிற மாதிரியும் எழுதறீங்க. ரொம்ப நல்லாருக்குங்கண்ணே. அதை அப்படியே மெயிண்டேன் பண்ணிக்கங்கண்ணே.

Post a Comment