Saturday, 11 July, 2009

எனக்குத் தெரிந்த பதிவுலகம்

என்னுடைய நாலு மாத பதிவுலக அனுபவத்தில் பதிவுலகம் பற்றி நான் தெரிந்து கொண்டது..

1) மும்பை எப்படி தாவூத் இப்ராகிம் கையில் இருந்ததோ, அதுபோல பதிவுலகத்தில் நான்கு, ஐந்து தாதாக்கள் இருக்கிறார்கள்..இவர்களை அனுசரித்து போகவில்லையெனில் காலிதான்..

2) இவர்களை எதிர்த்து ஏதாவது பதிவு போட்டால் அவ்வளவுதான்..ஒரே அனானி கமெண்ட்தான்..என்னோட போன பதிவுக்கு “மதுரை மல்லி” ங்கிற பெயரில் ஒரு ஆபாச வெப்சைட்டுக்கு போறமாதிரி ஒரு கமெண்ட்..கஷ்டமாக இருந்தது..அழித்து விட்டேன்..என் மனைவிகூட அதிர்ந்து விட்டாள்..அந்த பதிவுத் தலைப்பையே என்னிடம் கேட்டு விட்டாள்..”பேசாம எழுதுறதை நிறுத்திடுங்க..”

3) என்ன பிரச்சனைன்னு தெரியல..வாரத்துக்கு ஒரு சண்டை..எல்லாத்துலயும் அரசியல்..நிறைய பேர் கூட இருந்துகொண்டு குழிபறிப்பது தெரிகிறது..நிறைய பேர் தூண்டிவிட்டு குளிர்காய்வதும் தெரிகிறது..நிறைய பேர் தூர நின்று ரசிப்பதும் தெரிகிறது..

4) ஒரு இ.மெயில், அல்லது ஒரு சின்ன போன் காலில் முடியவேண்டிய வேண்டிய பிரச்சனை, வேண்டுமென்றே பெரிசாக்கப்படுகிறது..அதையே பெரிசாக்கி பல பதிவுகள் போடப்படுகின்றன..ரசிக்கப்படுகின்றன..

5) பிடிக்காதவர்கள் பதிவில் அனானி என்ற பெயரில் திட்டும் வன்முறையும் தொடர்கிறது..சில நேரம் ஆபாச கமெண்டுகளும் வருவது கஷ்டமாக உள்ளது..அதைவிட பதிவு போட்டவுடனே பதிவைப் படிக்காமலே “மீ த பர்ஸ்டு, ரீப்பிட்டு..வாழ்த்துக்கள்’ கமெண்டுகள் இன்னும் கொடுமை..

6) சில திரட்டிகளிலும் அரசியல் நடப்பது கண்கூடாகத் தெரிகிறது..போனவாரம் முழுக்க ஒரு திரட்டியில் ஒரு பிரச்சனையப் பத்தி யார் எழுதினாலும் ஓட்டு பிச்சிக்கிட்டு போனது..முக்கியமாக சில திரட்டிகளில் 20 ஓட்டுக்கள் வாங்கினாலும், முதல் பக்கத்தில் வருவதில்லை

7) இதெல்லாம் மீறி, நிறைய புது பதிவர்கள் நன்றாக எழுதுகிறார்கள்..ஆரோக்கியமான பின்னூட்டமும் வருகிறது..சில திரட்டிகளில் புதுப் பதிவர்களைப் பாராட்டி அவார்டு கொடுத்ததும் ஊக்கப்படுத்துகிறது..

8) நான் எழுத ஆரம்பிக்கிறதுக்கு முன்னால் நான் படித்த, பதிவர்களின் சாயம் வெளுக்கும்போது “இவரா, இப்படி” என்று என்னத் தோன்றுகிறது..ஆனால் மனுசங்க யாரும் கடவுள் இல்லையே என்று எண்ணும்போது அதையெல்லாம் மறக்கத் தோன்றுகிறது..

9) தனிப்பட்ட வாழ்க்கை நேரத்தை சாப்பிடுகிறது..புரிந்து கொள்ளக்கூடிய மனைவி இல்லையேல் வாழ்க்கையே சாப்பிட்டு விடும் அபாயம் உண்டு

10) நிறைய நண்பர்களைக் கொடுக்கிறது..இன்றும் என் பதிவிற்கு முதல் ஓட்டுப் போடும் விஜய் ஆனந்த் முதல் கடைசியாக என் பதிவில் சேர்ந்த கேபிள் சங்கர் வரை….சக்கரை சுரேஷ், பித்தன், முருகன் போன்றவர்களுடன் நட்பு இமெயிலும், சாட்டிலும் தொடர்கிறது..அவர்களுடன் இதுவரைப் பேசாவிட்டாலும் அவர்களை முதலில் சந்திக்கும்போது அந்த நட்பு சூடு இருக்கும்…

11) யாரைப் பத்தி மொக்கைப் போடாமலும், அரசியல் பண்ணாமலும் சில பதிவர்கள் துறைச் சார்ந்த விசயங்களை எழுதும்போது பெருமையாக உள்ளது..உதாரணமாக, லதானந்த், தமிழ்நெஞ்சம், டாக்டர் புருனோ..

12) பின்னூட்டத்தில் நிறைய நம்பிக்கையளிக்கிறார்கள்..உண்மையாக பதிவு சிரிப்பாக இருக்கும் பட்சத்தில், கண்டிப்பாக மனம் திறந்துப் பாராட்டுகிறார்கள்..சென்டிமென்டாக எழுதும் பட்சத்தில் என்னுடன் சேர்ந்து அழுகிறார்கள்..என் குடும்பத்தை பிரிந்து இருந்தாலும் ஏதோ என் குடும்பே எனக்கு பின்னூட்டம் போடுவது போல் இருக்கிறது..

ஒரு மனிதன் மேலே வருவதுற்கு கண்டிப்பாக ஊக்கம் தேவை..இன்னும் நான் எழுதுவதற்கு காரணமே என்னை ஊக்கப்படுத்தி வரும் பின்னூட்டங்கள் தான்..நான் எழுத ஆரம்பித்து நான்கு பதிவுக்கு யாருமே கமெண்ட் போடவில்லையெனில் கண்டிப்பாக நிறுத்தி இருப்பேன்..பதிவர்கள் ஒரு நாடக நடிகர்கள் போல..மேடையில் நடிக்கும்போது யாருமே கைதட்டவே இல்லையெனில் எப்படி நடிப்பான்..அட்லீஸ்ட் ஒரு கல்லெறி கிடைச்சாலும் அதுவும் வெற்றிதான்….

ஒரு பதிவைப் படிக்கும் போது, உங்களுக்கு உண்மையிலே பிடிச்சிருந்தா, நல்லா இருக்குன்னு ஒரு பின்னூட்டமும், ஒரு ஓட்டும் போடுங்க..எதிர்பார்த்து எழுதும் அந்த பதிவர்க்கு அது கண்டிப்பாக அவார்டா இல்லைன்னாக் கூட, ஒரு சின்ன டானிக்காக இருக்கும்..மனசாட்சிக்கு விரோதமா ஆபாசமா வெப்சைட்டுக்கு லிங்க் குடுத்தோ, கமெண்டோ போடாதீர்கள்..பிளீஸ்….அப்படி செய்வதற்குப் பதிலா அந்தப் பதிவரை தனியேக் கூப்பிட்டு கத்தியே எடுத்து ஆத்திரம் தீர மட்டும் முதுகில் குத்தியே கொன்று விடலாம்..பதிவருக்கும் உங்களை போலவே அம்மாவும், தங்கையும் இருக்கிறார்கள்..விழியில் கண்ணீரோடு வாசற்படியில் அமர்ந்திருக்கிறார்கள்…

என்றும் தங்கள் ஊக்கத்தை விரும்பும்..

அவிங்க ராசா

(நம்பர் 10. விவேகானந்தர் குறுக்கு சந்து, சின்சினாட்டி மெயின்ரோடு, சின்சினாட்டி, பேரிக்கா..சாரி, அமெரிக்கா)

71 comments:

Cable Sankar said...

/(நம்பர் 10. விவேகானந்தர் குறுக்கு சந்து, சின்சினாட்டி மெயின்ரோடு, சின்சினாட்டி, பேரிக்கா..சாரி, அமெரிக்கா)
//

என்னடா ரொம்ப நெஞ்ச நக்கிறானேன்னு நினைச்சிட்டு இருந்தேன்.. கடைசி வரியில உங்க புத்திய காட்டிட்டியே ராசா.. :)

Cable Sankar said...

ஒரு முறை என்னுடய ப்ளாககை பற்றி..உங்களுக்கு பிடித்த ப்ளாக்குகளில் போட்டு.. என் கதைகளை பற்றி கருத்து சொல்லியிருந்தீர்கள்.. அங்க தான் உங்க நேர்மை எனக்கு பிடிச்சது ராசா.. :)

jackiesekar said...

தனிப்பட்ட வாழ்க்கை நேரத்தை சாப்பிடுகிறது..புரிந்து கொள்ளக்கூடிய மனைவி இல்லையேல் வாழ்க்கையே சாப்பிட்டு விடும் அபாயம் உண்டு---//
கரியா சொன்னிங்க....

நல்ல பதிவு ராஜா சரியான அலசல்... நடுநிலையான அலசலும் கூட....

சென்ஷி said...

//பின்னூட்டத்தில் நிறைய நம்பிக்கையளிக்கிறார்கள்..உண்மையாக பதிவு சிரிப்பாக இருக்கும் பட்சத்தில், கண்டிப்பாக மனம் திறந்துப் பாராட்டுகிறார்கள்..//

அப்படியே பழகிப்போச்சுங்க.. பாசக்காரப் பயலுகளா இருக்கோம் பாருங்க. அதான்!

//சென்டிமென்டாக எழுதும் பட்சத்தில் என்னுடன் சேர்ந்து அழுகிறார்கள்..//

ஹைய். இது நல்ல கதையா இருக்குதே.. அதுக்கெல்லாம் தனியா பேமண்ட் செட்டில் செய்யணும் :-)))))

சும்மா ஜோக்கு..!

நல்ல பதிவு. எதைப் பற்றியும் கவலைப்படாமல் நீங்க உங்க வழியில போய்கிட்டே இருங்க..

வினோத்கெளதம் said...

//மும்பை எப்படி தாவூத் இப்ராகிம் கையில் இருந்ததோ, அதுபோல பதிவுலகத்தில் நான்கு, ஐந்து தாதாக்கள் இருக்கிறார்கள்..இவர்களை அனுசரித்து போகவில்லையெனில் காலிதான்..//

சத்தியமாக உண்மை..
சில பேரை விமர்சனம் பண்ணினால் அதோடு அவர்கள் கதை முடிந்தது..
நம்ம குடும்பத்தயே இழுத்து நடுத்தெருவுல விட்டுட்டு போய்டுவாங்க வார்த்தைகள்ல..
பிரபலங்கள் பெரும்பாலும் நேர்மையான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்..
சில பேர் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று பலப்பேர் நம்புகிறார்கள்,அந்த பிம்பத்தைையும் ஏற்ப்படுத்தி வைத்து இருக்கின்றனர்.
ரொம்ப நல்ல பதிவு..டாப் டக்கர்..

Anonymous said...

யார் அந்த ரவுடிகள் என்று சொல்லுங்க ராஜா சார்

அப்பாவி முரு said...

//நிறைய நண்பர்களைக் கொடுக்கிறது..இன்றும் என் பதிவிற்கு முதல் ஓட்டுப் போடும் விஜய் ஆனந்த் முதல் கடைசியாக என் பதிவில் சேர்ந்த கேபிள் சங்கர் வரை….சக்கரை சுரேஷ், பித்தன், முருகன் போன்றவர்களுடன் நட்பு இமெயிலும், சாட்டிலும் தொடர்கிறது..//

ராசா, இதுல முருகன் அப்படிங்கிறது யாரு??

ராஜா said...

//////////////////////
Cable Sankar said...
/(நம்பர் 10. விவேகானந்தர் குறுக்கு சந்து, சின்சினாட்டி மெயின்ரோடு, சின்சினாட்டி, பேரிக்கா..சாரி, அமெரிக்கா)
//

என்னடா ரொம்ப நெஞ்ச நக்கிறானேன்னு நினைச்சிட்டு இருந்தேன்.. கடைசி வரியில உங்க புத்திய காட்டிட்டியே ராசா.. :)
11 July, 2009 8:31 PM
/////////////////////
வருகைக்கு நன்றி கேபிள் அண்ணே..என்ன பண்றது..மதுரக் குசும்பு ஆட்டோமேட்டிக்கா வந்துருது..)))

ஐந்தினை said...

பதிவுலகைப் பற்றி தெரிந்துகொண்டேன், நன்றி

ராஜா said...

////////////////////
jackiesekar said...
தனிப்பட்ட வாழ்க்கை நேரத்தை சாப்பிடுகிறது..புரிந்து கொள்ளக்கூடிய மனைவி இல்லையேல் வாழ்க்கையே சாப்பிட்டு விடும் அபாயம் உண்டு---//
கரியா சொன்னிங்க....

நல்ல பதிவு ராஜா சரியான அலசல்... நடுநிலையான அலசலும் கூட....
11 July, 2009 8:36 PM
////////////////////////
நன்றி சேகர் அண்ணே..உங்க பெங்களூர் ஆஞ்சநேயர் பதிவு சூப்பர்..தமிழிஸ்ஸில் போஸ்ட் பண்ணாததால் ஓட்டுப் போட முடியவில்லை..

ராஜா said...

///////////////////
சென்ஷி said...
//பின்னூட்டத்தில் நிறைய நம்பிக்கையளிக்கிறார்கள்..உண்மையாக பதிவு சிரிப்பாக இருக்கும் பட்சத்தில், கண்டிப்பாக மனம் திறந்துப் பாராட்டுகிறார்கள்..//

அப்படியே பழகிப்போச்சுங்க.. பாசக்காரப் பயலுகளா இருக்கோம் பாருங்க. அதான்!

//சென்டிமென்டாக எழுதும் பட்சத்தில் என்னுடன் சேர்ந்து அழுகிறார்கள்..//

ஹைய். இது நல்ல கதையா இருக்குதே.. அதுக்கெல்லாம் தனியா பேமண்ட் செட்டில் செய்யணும் :-)))))

சும்மா ஜோக்கு..!

நல்ல பதிவு. எதைப் பற்றியும் கவலைப்படாமல் நீங்க உங்க வழியில போய்கிட்டே இருங்க..
11 July, 2009 8:45 PM
//////////////////////
நன்றி சென்ஷி..ஒரே ஒரு சந்தேகம்..நாகேஷ் உங்களுடைய குருவா..? அறிய ஆசை..

Anonymous said...

selventhiran sonnathu pol, mugam teriyatha aalungalakku neriya mukkiyathuvam kodukka aaramthivittiom....

pakkathu veedu, ethir veedu pondra edangalail nanagbargalai kana mudivathillai ippothu... :-(

ராஜா said...

////////////////////////
11 July, 2009 8:45 PM
வினோத்கெளதம் said...
//மும்பை எப்படி தாவூத் இப்ராகிம் கையில் இருந்ததோ, அதுபோல பதிவுலகத்தில் நான்கு, ஐந்து தாதாக்கள் இருக்கிறார்கள்..இவர்களை அனுசரித்து போகவில்லையெனில் காலிதான்..//

சத்தியமாக உண்மை..
சில பேரை விமர்சனம் பண்ணினால் அதோடு அவர்கள் கதை முடிந்தது..
நம்ம குடும்பத்தயே இழுத்து நடுத்தெருவுல விட்டுட்டு போய்டுவாங்க வார்த்தைகள்ல..
பிரபலங்கள் பெரும்பாலும் நேர்மையான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்..
சில பேர் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று பலப்பேர் நம்புகிறார்கள்,அந்த பிம்பத்தைையும் ஏற்ப்படுத்தி வைத்து இருக்கின்றனர்.
ரொம்ப நல்ல பதிவு..டாப் டக்கர்..
11 July, 2009 8:48 PM
////////////////////////
நன்றி வினோத்..

ராஜா said...

//////////////////
Anonymous said...
யார் அந்த ரவுடிகள் என்று சொல்லுங்க ராஜா சார்
11 July, 2009 8:52 PM
///////////////////////

வருகைக்கு நன்றி அண்ணே..வேணான்னே..பதிவோட நோக்கமே மாறிடும்..

ராஜா said...

/////////////////
அப்பாவி முரு said...
//நிறைய நண்பர்களைக் கொடுக்கிறது..இன்றும் என் பதிவிற்கு முதல் ஓட்டுப் போடும் விஜய் ஆனந்த் முதல் கடைசியாக என் பதிவில் சேர்ந்த கேபிள் சங்கர் வரை….சக்கரை சுரேஷ், பித்தன், முருகன் போன்றவர்களுடன் நட்பு இமெயிலும், சாட்டிலும் தொடர்கிறது..//

ராசா, இதுல முருகன் அப்படிங்கிறது யாரு??
11 July, 2009 9:12 PM
//////////////////
முருகன் என்கிற ஒரு நண்பர் கூட அப்பப்ப சாட் பண்ணுவேன்ணே..ஆஹா..அது நீங்க இல்லையாண்ணே..

ராஜா said...

///////////////////
11 July, 2009 9:14 PM
ஐந்தினை said...
பதிவுலகைப் பற்றி தெரிந்துகொண்டேன், நன்றி
11 July, 2009 9:17 PM
/////////////////
நன்றி ஐந்திணை..

ராஜா said...

////////////////////
Anonymous said...
selventhiran sonnathu pol, mugam teriyatha aalungalakku neriya mukkiyathuvam kodukka aaramthivittiom....

pakkathu veedu, ethir veedu pondra edangalail nanagbargalai kana mudivathillai ippothu... :-(
////////////////////////
வருகைக்கு நன்றி அனானி அண்ணே..சரியா சொன்னீங்க....

தமிழ்நெஞ்சம் said...

I disabled comments section in my blogs. what to do? getting lots of those kind of illegal spam comments. what to do? (:

பித்தன் said...

//சென்ஷி said...
//பின்னூட்டத்தில் நிறைய நம்பிக்கையளிக்கிறார்கள்..உண்மையாக பதிவு சிரிப்பாக இருக்கும் பட்சத்தில், கண்டிப்பாக மனம் திறந்துப் பாராட்டுகிறார்கள்..//

அப்படியே பழகிப்போச்சுங்க.. பாசக்காரப் பயலுகளா இருக்கோம் பாருங்க. அதான்!

//சென்டிமென்டாக எழுதும் பட்சத்தில் என்னுடன் சேர்ந்து அழுகிறார்கள்..//

ஹைய். இது நல்ல கதையா இருக்குதே.. அதுக்கெல்லாம் தனியா பேமண்ட் செட்டில் செய்யணும் :-)))))

சும்மா ஜோக்கு..!

நல்ல பதிவு. எதைப் பற்றியும் கவலைப்படாமல் நீங்க உங்க வழியில போய்கிட்டே இருங்க..
///

ரிப்பீட்டு

தேவன் மாயம் said...

இந்த சங்கடங்கள் இருக்கத்தான் செய்யும்!! எல்லா இடங்களிலும்!!

சங்கா said...

அரசியலும் ரவுடித்தனமும் எங்கும் இருக்கத்தானே செய்கிறது!. நாம் நம் வேலையைப் பார்ப்போம்.

☀நான் ஆதவன்☀ said...

//(நம்பர் 10. விவேகானந்தர் குறுக்கு சந்து//

இதெல்லாம் நம்புற மாதிரி இல்ல இராசா. இந்த அட்ரெஸெல்லாம் துபாய்க்கு மட்டும் தான் சொந்தம். நீங்க போடக்கூடாது :)

வந்த நாலு மாசத்தில எல்லாத்தையும் புட்டு புட்டு வைக்கிறீங்க :)

S.A. நவாஸுதீன் said...

அந்த மதுரை மல்லி கொடுத்த பின்னூட்டம் எந்த அளவு உங்கள் மனதை பாதித்திருக்கிரதென்பது உணர முடிகிறது ராசா. இந்த பதிவுலகில் மட்டுமல்ல, நீங்கள் எங்கு போனாலும் இதுபோன்ற சில விஷமிகள் இருக்கத் தான் செய்வார்கள். அவர்களுக்காக நீங்கள் வருத்தப்படலாமே தவிர கவலைப்படாதீர்கள். என்ன சொன்னாலும் திருந்தாத ஜென்மங்கள் என்ற ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.

Jaleela said...

//மும்பை எப்படி தாவூத் இப்ராகிம் கையில் இருந்ததோ, அதுபோல பதிவுலகத்தில் நான்கு, ஐந்து தாதாக்கள் இருக்கிறார்கள்..இவர்களை அனுசரித்து போகவில்லையெனில் காலிதான்..//

நெசமா வா சொல்றீங்க, இப்படில்லா கூட இருக்கா? ரொம்ப உஷாரா இருக்கானும் போல இருக்கே,

நல்ல பதிவு,

அது சரி said...

கெட்ட வார்த்தைல வர்ற கமெண்ட் பத்தி கவலைப்படாதீங்க ராசா...ஊர்ல நல்ல காரியம் நடக்கும் போது வேணும்னே வம்பிழுக்க ஒரு கோஷ்டி இருக்கும்....அது மாதிரி தான் இதுவும்...கமெண்ட்ட டெலீட் பண்ணிட்டு அடுத்த இடுகையை பாருங்க...

♫சோம்பேறி♫ said...

/* பதிவு போட்டவுடனே பதிவைப் படிக்காமலே “மீ த பர்ஸ்டு, ரீப்பிட்டு..வாழ்த்துக்கள்’ கமெண்டுகள் இன்னும் கொடுமை.. */

ரீப்பிட்டு to the whole post.. I like this post :-)

Keep rocking man.. Just ignore the idiots..

Cable Sankar said...

/மும்பை எப்படி தாவூத் இப்ராகிம் கையில் இருந்ததோ, அதுபோல பதிவுலகத்தில் நான்கு, ஐந்து தாதாக்கள் இருக்கிறார்கள்..இவர்களை அனுசரித்து போகவில்லையெனில் காலிதான்.//

அப்படியெல்லாம் எவரும் இருப்பதாய் தெரியவில்லை ராசா... எல்லாம் மன பிராந்தி..தான்..

Cable Sankar said...

/இதெல்லாம் மீறி, நிறைய புது பதிவர்கள் நன்றாக எழுதுகிறார்கள்..ஆரோக்கியமான பின்னூட்டமும் வருகிறது..சில திரட்டிகளில் புதுப் பதிவர்களைப் பாராட்டி அவார்டு கொடுத்ததும் ஊக்கப்படுத்துகிறது..//

எழுதுவதில் புது பதிவர், பழைய பதிவர் என்று என்ன இருக்கிறது. ராஜா.. உங்களை பொறுத்த வரை நான் பழைய பதிவர்.. நீங்கள் எழுதுவது நன்றாக இருப்பதாக உங்கள் பின்னூட்டத்திலேயே சொல்லியிருக்கேன். உங்களை பின் தொடர்வதும் அதனாலேயேதான். அப்படியானால் பழைய பதிவர்கள் நன்றாக எழுதவில்லையா..? என்ற கேள்வி வருகிறது.. இல்லையா ராஜா..?

Cable Sankar said...

/நான் எழுத ஆரம்பிக்கிறதுக்கு முன்னால் நான் படித்த, பதிவர்களின் சாயம் வெளுக்கும்போது “இவரா, இப்படி” என்று என்னத் தோன்றுகிறது..ஆனால் மனுசங்க யாரும் கடவுள் இல்லையே என்று எண்ணும்போது அதையெல்லாம் மறக்கத் தோன்றுகிறது.//

ராஜா.. இதெல்லாம் வேணாமே..?

Anonymous said...

ராஜா, நீங்கள் சொல்லும் அனைத்தும் நூறு சதவீதம் உண்மை.

ராம் said...

ரொம்ப நல்ல பதிவு..சமீப காலமாக பதிவுலகிற்கு வந்த என்னை போன்ற புதிய பதிவர்களுக்கு இங்கு நடக்கும் அரசியல் அதிர்ச்சி அளிக்கிறது..இதனை போன்ற அரசியல் யார் பிரபல பதிவர் என்பதை முடிவு செய்யும் தேர்தலுக்கான கூட்டணிகளை நமக்கு அடையாளம் காண்பிக்கும் முயற்சியாகவே கருதுகிறேன்..ஆனால் உங்கள் கருத்துக்கள் எல்லாம் முழுக்க முழுக்க உண்மை..

குடுகுடுப்பை said...

நல்ல பதிவு, இதுதான் உலகம் , இதில்தான் வாழவேண்டும்.

Anonymous said...

பதிவுலகில் முன்னணி எழுத்தர் என்ற பிம்பத்தை உடைக்க வேண்டும்...
நிறைய பதிவு எழுதினால் அவர் முன்னணியா ?
வேலை வெட்டி இல்லாதவர்கள் பதிவுலகில் நிறைய உண்டு....

Anonymous said...

பதிவுலகம் முழுக்க முழுக்க ஒரு சுய தம்பட்டம் அடிக்கும் தளம். முன்பெல்லாம் personal diary எழுதி தம் எண்ணங்களை பதிவார்கள். Personal இப்போது public ஆகி விட்டது. கத்திரிக்கா கட வீதிக்கு வந்தா, நாலு பேரு கிள்ளியும் பாப்பான், சில பேரு தடவியும் பாப்பான்.

ஆனா, உலக அழகி போட்டியில ஜெயிச்சவ, பல கோடி அழகிகள் போட்டியிலேயே கலந்துக்கல என்ற உண்மைய உணராம, மெதப்புல திரியறதப் போல, இந்த பதிவுலக 'பிரபலங்க' மெதப்ப பாக்க பரிதாபமாத்தான் இருக்கு!!

அப்பாவி சொக்கன்

Senthil said...

Mr.Raja

This is my very first comment in the blogs. I started reading your blogs recently and impressed with your Madurai slang. Ignore them and keep writting. It will motivate for new comers to start the blogs.

-Senthil

புருனோ Bruno said...

// யாரைப் பத்தி மொக்கைப் போடாமலும், அரசியல் பண்ணாமலும் சில பதிவர்கள் துறைச் சார்ந்த விசயங்களை எழுதும்போது பெருமையாக உள்ளது..உதாரணமாக, லதானந்த், தமிழ்நெஞ்சம், டாக்டர் புருனோ..//

நன்றி பாஸ் :) :)

MOHAMED SALEEM said...

தமிழ் நண்பர்களுக்கு, ராஜா அவர்களின் பதிவு அற்புதம் தொடர்ந்து எழுதுங்கள் என் பதிவை பார்க்க http://www.mohamedsaleem.co.cc நன்றி

ச.செந்தில்வேலன் said...

மிகவும் நேர்மையான பதிவு!

என்னைப் போன்ற புதிய பதிவர்கள் படிக்க வேண்டிய பதிவு! இதைப் படிக்கும் போது கொஞ்சம் நம்ம பாட்டுக்கு அப்படியே ஒரு ஓரமா பதிவு எழுதீட்டு போறது நல்லதுன்னு தோனுது!

உங்களுக்கு வந்த அந்த வோட்டு, முதல் பக்க ஐயம் எனக்கும் வந்ததுண்டு.

எனது நேற்றைய பதிவைச் சமர்பித்துப் பல மணி நேரம் ஆகியும் வரவில்லை. பிறகு மின் அஞ்சல் அனுப்பிய பின் வெளியாகிறது. எனக்கு வந்த பதில், "உங்கள் இடுகையில் ஆங்கிலக் கலப்பு இருந்தால் வடிகட்டப்படும்" என்பது தான்.

சில ஆங்கில சொற்களுக்கு தமிழாக்கம் கொடுக்க ஆங்கிலத்தில் எழுதாமல் எப்படி?

அந்தப் பதிவின் தலைப்பு என்ன தெரியுமா? "நமது பயன்பாட்டில் தமிழ்".. சிரிக்கத்தான் வேண்டியிருக்கிறது :)

ராஜா said...

////////////////////////
தமிழ்நெஞ்சம் said...
I disabled comments section in my blogs. what to do? getting lots of those kind of illegal spam comments. what to do? (:
11 July, 2009 9:44 PM
////////////////////////
வருகைக்கு நன்றி தமிழ்நெஞ்சம்

ராஜா said...

///////////////////////
பித்தன் said...
//சென்ஷி said...
//பின்னூட்டத்தில் நிறைய நம்பிக்கையளிக்கிறார்கள்..உண்மையாக பதிவு சிரிப்பாக இருக்கும் பட்சத்தில், கண்டிப்பாக மனம் திறந்துப் பாராட்டுகிறார்கள்..//

அப்படியே பழகிப்போச்சுங்க.. பாசக்காரப் பயலுகளா இருக்கோம் பாருங்க. அதான்!

//சென்டிமென்டாக எழுதும் பட்சத்தில் என்னுடன் சேர்ந்து அழுகிறார்கள்..//

ஹைய். இது நல்ல கதையா இருக்குதே.. அதுக்கெல்லாம் தனியா பேமண்ட் செட்டில் செய்யணும் :-)))))

சும்மா ஜோக்கு..!

நல்ல பதிவு. எதைப் பற்றியும் கவலைப்படாமல் நீங்க உங்க வழியில போய்கிட்டே இருங்க..
///

ரிப்பீட்டு
11 July, 2009 10:03 PM
/////////////////////////
நன்றி பித்தன்

ராஜா said...

//////////////////////
11 July, 2009 10:03 PM
தேவன் மாயம் said...
இந்த சங்கடங்கள் இருக்கத்தான் செய்யும்!! எல்லா இடங்களிலும்!!
11 July, 2009 10:10 PM
/////////////////////
வேறு வழியில்லை..அனுசரித்துதான் போக வேண்டியிருக்கு

ராஜா said...

//////////////////
11 July, 2009 10:10 PM
சங்கா said...
அரசியலும் ரவுடித்தனமும் எங்கும் இருக்கத்தானே செய்கிறது!. நாம் நம் வேலையைப் பார்ப்போம்.
11 July, 2009 10:13 PM
/////////////////////
நன்றி சங்கா, அரசியலுல இதெல்லாம் சகஜம் என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்

ராஜா said...

/////////////////
☀நான் ஆதவன்☀ said...
//(நம்பர் 10. விவேகானந்தர் குறுக்கு சந்து//

இதெல்லாம் நம்புற மாதிரி இல்ல இராசா. இந்த அட்ரெஸெல்லாம் துபாய்க்கு மட்டும் தான் சொந்தம். நீங்க போடக்கூடாது :)

வந்த நாலு மாசத்தில எல்லாத்தையும் புட்டு புட்டு வைக்கிறீங்க :)
11 July, 2009 10:59 PM
////////////////////
வருகைக்கு நன்றி ஆதவன்

ராஜா said...

/////////////////////
S.A. நவாஸுதீன் said...
அந்த மதுரை மல்லி கொடுத்த பின்னூட்டம் எந்த அளவு உங்கள் மனதை பாதித்திருக்கிரதென்பது உணர முடிகிறது ராசா. இந்த பதிவுலகில் மட்டுமல்ல, நீங்கள் எங்கு போனாலும் இதுபோன்ற சில விஷமிகள் இருக்கத் தான் செய்வார்கள். அவர்களுக்காக நீங்கள் வருத்தப்படலாமே தவிர கவலைப்படாதீர்கள். என்ன சொன்னாலும் திருந்தாத ஜென்மங்கள் என்ற ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.
11 July, 2009 11:12 PM
Jaleela said...
//மும்பை எப்படி தாவூத் இப்ராகிம் கையில் இருந்ததோ, அதுபோல பதிவுலகத்தில் நான்கு, ஐந்து தாதாக்கள் இருக்கிறார்கள்..இவர்களை அனுசரித்து போகவில்லையெனில் காலிதான்..//

நெசமா வா சொல்றீங்க, இப்படில்லா கூட இருக்கா? ரொம்ப உஷாரா இருக்கானும் போல இருக்கே,

நல்ல பதிவு,
12 July, 2009 1:55 AM
அது சரி said...
கெட்ட வார்த்தைல வர்ற கமெண்ட் பத்தி கவலைப்படாதீங்க ராசா...ஊர்ல நல்ல காரியம் நடக்கும் போது வேணும்னே வம்பிழுக்க ஒரு கோஷ்டி இருக்கும்....அது மாதிரி தான் இதுவும்...கமெண்ட்ட டெலீட் பண்ணிட்டு அடுத்த இடுகையை பாருங்க...
12 July, 2009 2:07 AM
///////////////////////
வருகைக்கு நன்றி ஜலால், அதுசரி, நவாஸ்

ராஜா said...

//////////////////////
12 July, 2009 2:15 AM
Cable Sankar said...
/மும்பை எப்படி தாவூத் இப்ராகிம் கையில் இருந்ததோ, அதுபோல பதிவுலகத்தில் நான்கு, ஐந்து தாதாக்கள் இருக்கிறார்கள்..இவர்களை அனுசரித்து போகவில்லையெனில் காலிதான்.//

அப்படியெல்லாம் எவரும் இருப்பதாய் தெரியவில்லை ராசா... எல்லாம் மன பிராந்தி..தான்..
12 July, 2009 2:58 AM
/////////////////////////
வருகைக்கு நன்றி சங்கர் அண்ணே..நான் ஒருத்தன் மட்டும் சொன்னால் பரவாயில்லை, அதிகம் பேர் சொல்கிறார்கள் அண்ணே

ராஜா said...

///////////////////
Cable Sankar said...
/இதெல்லாம் மீறி, நிறைய புது பதிவர்கள் நன்றாக எழுதுகிறார்கள்..ஆரோக்கியமான பின்னூட்டமும் வருகிறது..சில திரட்டிகளில் புதுப் பதிவர்களைப் பாராட்டி அவார்டு கொடுத்ததும் ஊக்கப்படுத்துகிறது..//

எழுதுவதில் புது பதிவர், பழைய பதிவர் என்று என்ன இருக்கிறது. ராஜா.. உங்களை பொறுத்த வரை நான் பழைய பதிவர்.. நீங்கள் எழுதுவது நன்றாக இருப்பதாக உங்கள் பின்னூட்டத்திலேயே சொல்லியிருக்கேன். உங்களை பின் தொடர்வதும் அதனாலேயேதான். அப்படியானால் பழைய பதிவர்கள் நன்றாக எழுதவில்லையா..? என்ற கேள்வி வருகிறது.. இல்லையா ராஜா..?
12 July, 2009 3:03 AM
///////////////////////
வாஸ்தவமான கேள்வி சங்கர் அண்ணே..ஆனால் நான் எந்த இடத்திலும், பழைய பதிவர்கள் நன்றாக எழுதவில்லை என்று சொல்லவே இல்லையேண்ணே..பழைய பதிவர்களின் எழுத்தைப் பார்த்து உந்தப்பட்டே புது பதிவர்கள் எழுத வருகின்றனர் அண்ணே..யாராவது “இப்ப வர்ற புது டைரக்டர்ஸ் நல்லா படம் எடுக்கிறாங்க”ன்னு சொன்னா “அப்ப பழைய டைரக்டர்ஸ் நல்லா படம் எடுக்கலையான்னு கேக்குர மாதிரி இருக்கு..

ராஜா said...

/////////////////
Cable Sankar said...
/நான் எழுத ஆரம்பிக்கிறதுக்கு முன்னால் நான் படித்த, பதிவர்களின் சாயம் வெளுக்கும்போது “இவரா, இப்படி” என்று என்னத் தோன்றுகிறது..ஆனால் மனுசங்க யாரும் கடவுள் இல்லையே என்று எண்ணும்போது அதையெல்லாம் மறக்கத் தோன்றுகிறது.//

ராஜா.. இதெல்லாம் வேணாமே..?
12 July, 2009 3:05 AM
//////////////////////
என்னுடைய மனநிலையை விளக்கவே இவ்வாறு எழுதியிருந்தேன்ணே..யாருடைய மனசையும் காயப்படுத்தும் எண்ணம் இல்லைண்ணே..

ராஜா said...

/////////////////
மயில் said...
ராஜா, நீங்கள் சொல்லும் அனைத்தும் நூறு சதவீதம் உண்மை.
12 July, 2009 4:57 AM
ராம் said...
ரொம்ப நல்ல பதிவு..சமீப காலமாக பதிவுலகிற்கு வந்த என்னை போன்ற புதிய பதிவர்களுக்கு இங்கு நடக்கும் அரசியல் அதிர்ச்சி அளிக்கிறது..இதனை போன்ற அரசியல் யார் பிரபல பதிவர் என்பதை முடிவு செய்யும் தேர்தலுக்கான கூட்டணிகளை நமக்கு அடையாளம் காண்பிக்கும் முயற்சியாகவே கருதுகிறேன்..ஆனால் உங்கள் கருத்துக்கள் எல்லாம் முழுக்க முழுக்க உண்மை..
12 July, 2009 6:55 AM
குடுகுடுப்பை said...
நல்ல பதிவு, இதுதான் உலகம் , இதில்தான் வாழவேண்டும்.
12 July, 2009 7:21 AM
Anonymous said...
பதிவுலகில் முன்னணி எழுத்தர் என்ற பிம்பத்தை உடைக்க வேண்டும்...
நிறைய பதிவு எழுதினால் அவர் முன்னணியா ?
வேலை வெட்டி இல்லாதவர்கள் பதிவுலகில் நிறைய உண்டு....
12 July, 2009 7:34 AM
////////////////////////
மிகவும் நன்றி ராம், மயில், குடுகுடுப்பை, அனானி,

ராஜா said...

//////////////////////////
Senthil said...
Mr.Raja

This is my very first comment in the blogs. I started reading your blogs recently and impressed with your Madurai slang. Ignore them and keep writting. It will motivate for new comers to start the blogs.

-Senthil
12 July, 2009 9:07 AM
புருனோ Bruno said...
// யாரைப் பத்தி மொக்கைப் போடாமலும், அரசியல் பண்ணாமலும் சில பதிவர்கள் துறைச் சார்ந்த விசயங்களை எழுதும்போது பெருமையாக உள்ளது..உதாரணமாக, லதானந்த், தமிழ்நெஞ்சம், டாக்டர் புருனோ..//

நன்றி பாஸ் :) :
////////////////////////
நன்றி டாக்டர் சார், செந்தில்

ராஜா said...

///////////////////////
MOHAMED SALEEM said...
தமிழ் நண்பர்களுக்கு, ராஜா அவர்களின் பதிவு அற்புதம் தொடர்ந்து எழுதுங்கள் என் பதிவை பார்க்க http://www.mohamedsaleem.co.cc நன்றி
12 July, 2009 9:19 AM
ச.செந்தில்வேலன் said...
மிகவும் நேர்மையான பதிவு!

என்னைப் போன்ற புதிய பதிவர்கள் படிக்க வேண்டிய பதிவு! இதைப் படிக்கும் போது கொஞ்சம் நம்ம பாட்டுக்கு அப்படியே ஒரு ஓரமா பதிவு எழுதீட்டு போறது நல்லதுன்னு தோனுது!

உங்களுக்கு வந்த அந்த வோட்டு, முதல் பக்க ஐயம் எனக்கும் வந்ததுண்டு.

எனது நேற்றைய பதிவைச் சமர்பித்துப் பல மணி நேரம் ஆகியும் வரவில்லை. பிறகு மின் அஞ்சல் அனுப்பிய பின் வெளியாகிறது. எனக்கு வந்த பதில், "உங்கள் இடுகையில் ஆங்கிலக் கலப்பு இருந்தால் வடிகட்டப்படும்" என்பது தான்.

சில ஆங்கில சொற்களுக்கு தமிழாக்கம் கொடுக்க ஆங்கிலத்தில் எழுதாமல் எப்படி?

அந்தப் பதிவின் தலைப்பு என்ன தெரியுமா? "நமது பயன்பாட்டில் தமிழ்".. சிரிக்கத்தான் வேண்டியிருக்கிறது :)
12 July, 2009 9:49 AM
///////////////////////
வாழ்த்துக்கள் சலீம், கேட்பதற்கு கஷ்டமாக உள்ளது செந்தில்வேலன்

Vijay Anand said...

//இன்றும் என் பதிவிற்கு முதல் ஓட்டுப் போடும் விஜய் ஆனந்த் முதல் //

ரொம்ப நன்றி ராஜா ...

Rajavel_2k12 said...

யாரோ நாலு பேர பாத்து நீங்க ஏன் கவலைபடுறீங்க. இவிங்க இப்புடித்தான். எனக்கு ஒரு விவரம் சொல்லுங்கண்ணே உங்கள பாராட்டி ஊக்கப்படுத்தி எத்தன பின்னூட்டம் வருது நீங்க சொல்ற மாதிரி irritating எத்தன பின்னூட்டம் வருது. விடுங்கண்ணே நம்மலாம் மதுரை காரைங்க இதுக்கு போய் tension ஆகலாமா நம்ம தாண்ணே அடுத்தவிங்கள tension ஆக்கணும்.இப்ப இந்த அல்டாப்பு அனானிகளுக்கு மாப்ளைகளா அண்ணே அங்க இருக்கட்டும் நாங்க இங்க தாண்டி இருக்கோம் போட்டுருவோம்டி...

Ram said...

your blogs are really good and fun to read! so continue your work.

Jaleela said...

ராஜா நான் ஜலால் இல்லை ஜலீலா

Bleachingpowder said...

//மும்பை எப்படி தாவூத் இப்ராகிம் கையில் இருந்ததோ, அதுபோல பதிவுலகத்தில் நான்கு, ஐந்து தாதாக்கள் இருக்கிறார்கள்..இவர்களை அனுசரித்து போகவில்லையெனில் காலிதான்..//

அட நீங்க வேற, எல்லாம் சின்ன பசங்க, ராத்திரி தனியா உச்சா போகவே பயப்புடுறவங்க, இவங்களை போய் தாவுத்,ஒசாமான்னு சொல்லி காமெடி பண்ணாதீங்க.

அந்த கும்பலே அப்படி தான், எப்போதுமே ஒருத்தருக்கு ஒருத்தர், முதுகு சொறிஞ்சிட்டு, பேன் பாத்துட்டு இருப்பாங்க. இவங்களை எதாச்சு சொன்னா கும்பலா ஓடி வருங்க, ஒரு சின்ன கல்லை எடுத்து காமிச்சா வந்த வேகத்துல ஆளுக்கு ஒரு திசையில திரும்பி ஓடிருங்க.

இங்க யாராவது ஒருத்தர் தப்பு பண்ணுனா அதை தப்புன்னு சொல்ல கூடாது, சொன்னா நட்பு கெட்டிடுமாம், இந்த இழவு லாஜிக் எனக்கும் இன்னும் புரியலை.

நீங்க கூட, "ஆணவம்=திமிரு=கர்வம்" பதிவை எழுதீட்டு அப்புறம் கொஞ்ச நேரத்துல அதை எடிட் பண்ணுணிங்களே. அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு தீடீருன்னு ஒரு யு டர்ன் அடிச்சு, "பிரபல பதிவர்களின் ஸ்கூல் அனுபவங்கள்" ஒரு பதிவை போட்டீங்க, அதை ஏன் போட்டீங்கன்னு எனக்கு இன்னமும் தெரியலை.

சரிங்க வந்த விசியத்தை சொல்லிடுறேன், நம்ம எந்த கும்பலுடன் சேராமல் இருப்பதே நல்லது, அப்ப தான் மனசுல் பட்டதை தைரியமா சொல்ல முடியும். So stay away and keep distance, if you want to be yourself

Anonymous said...

//உதாரணமாக, லதானந்த், தமிழ்நெஞ்சம், டாக்டர் புருனோ..//

லதானந்த்???? அரசியல் பண்ணாமலும்????

Varsha said...

I like the post..Its nice.

பயமில்லாதவன் said...

விடுங்க BOSS இவ்ங்க யப்பவும் இப்படிதான்...

கபிலன் said...

"அதைவிட பதிவு போட்டவுடனே பதிவைப் படிக்காமலே “மீ த பர்ஸ்டு, ரீப்பிட்டு"

"சில திரட்டிகளிலும் அரசியல் நடப்பது கண்கூடாகத் தெரிகிறது"

மனசுல இருக்குறத தைரியமா வெளியில சொல்லி இருக்கீங்க....அருமை!
வாழ்த்துக்கள்!

அக்பர் said...

உங்கள் பதிவின் ஆதங்கம் நியாய‌மானது.

அடுத்தவர்கள் மனதை புண்படுத்தாமல் இருப்பது நலம்.

வால்பையன் said...

கஷ்டமா தான் இருக்கு! என்ன செய்ய!
இப்போ எல்லாம் பழகியிருச்சு!

ராஜா said...

/////////////////////////
Vijay Anand said...
//இன்றும் என் பதிவிற்கு முதல் ஓட்டுப் போடும் விஜய் ஆனந்த் முதல் //

ரொம்ப நன்றி ராஜா ...
12 July, 2009 6:48 PM
/////////////////////////
வருகைக்கு நன்றி விஜய் ஆனந்த்

ராஜா said...

/////////////////
Rajavel_2k12 said...
யாரோ நாலு பேர பாத்து நீங்க ஏன் கவலைபடுறீங்க. இவிங்க இப்புடித்தான். எனக்கு ஒரு விவரம் சொல்லுங்கண்ணே உங்கள பாராட்டி ஊக்கப்படுத்தி எத்தன பின்னூட்டம் வருது நீங்க சொல்ற மாதிரி irritating எத்தன பின்னூட்டம் வருது. விடுங்கண்ணே நம்மலாம் மதுரை காரைங்க இதுக்கு போய் tension ஆகலாமா நம்ம தாண்ணே அடுத்தவிங்கள tension ஆக்கணும்.இப்ப இந்த அல்டாப்பு அனானிகளுக்கு மாப்ளைகளா அண்ணே அங்க இருக்கட்டும் நாங்க இங்க தாண்டி இருக்கோம் போட்டுருவோம்டி...
12 July, 2009 7:26 PM
/////////////////////
எம்மேல அம்புட்டு பாசமாண்ணே..நன்றிண்ணே

ராஜா said...

//////////////////
Ram said...
your blogs are really good and fun to read! so continue your work.
12 July, 2009 8:49 PM
////////////////////

வருகைக்கு நன்றி ராம்

ராஜா said...

///////////////////////////
Bleachingpowder said...
//மும்பை எப்படி தாவூத் இப்ராகிம் கையில் இருந்ததோ, அதுபோல பதிவுலகத்தில் நான்கு, ஐந்து தாதாக்கள் இருக்கிறார்கள்..இவர்களை அனுசரித்து போகவில்லையெனில் காலிதான்..//

அட நீங்க வேற, எல்லாம் சின்ன பசங்க, ராத்திரி தனியா உச்சா போகவே பயப்புடுறவங்க, இவங்களை போய் தாவுத்,ஒசாமான்னு சொல்லி காமெடி பண்ணாதீங்க.

அந்த கும்பலே அப்படி தான், எப்போதுமே ஒருத்தருக்கு ஒருத்தர், முதுகு சொறிஞ்சிட்டு, பேன் பாத்துட்டு இருப்பாங்க. இவங்களை எதாச்சு சொன்னா கும்பலா ஓடி வருங்க, ஒரு சின்ன கல்லை எடுத்து காமிச்சா வந்த வேகத்துல ஆளுக்கு ஒரு திசையில திரும்பி ஓடிருங்க.

இங்க யாராவது ஒருத்தர் தப்பு பண்ணுனா அதை தப்புன்னு சொல்ல கூடாது, சொன்னா நட்பு கெட்டிடுமாம், இந்த இழவு லாஜிக் எனக்கும் இன்னும் புரியலை.

நீங்க கூட, "ஆணவம்=திமிரு=கர்வம்" பதிவை எழுதீட்டு அப்புறம் கொஞ்ச நேரத்துல அதை எடிட் பண்ணுணிங்களே. அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு தீடீருன்னு ஒரு யு டர்ன் அடிச்சு, "பிரபல பதிவர்களின் ஸ்கூல் அனுபவங்கள்" ஒரு பதிவை போட்டீங்க, அதை ஏன் போட்டீங்கன்னு எனக்கு இன்னமும் தெரியலை.

சரிங்க வந்த விசியத்தை சொல்லிடுறேன், நம்ம எந்த கும்பலுடன் சேராமல் இருப்பதே நல்லது, அப்ப தான் மனசுல் பட்டதை தைரியமா சொல்ல முடியும். So stay away and keep distance, if you want to be yourself
13 July, 2009 1:19 AM
/////////////////////////////////
வருகைக்கு நன்றி பிளீச்சீங்க் பௌடர்

ராஜா said...

///////////////
Anonymous said...
//உதாரணமாக, லதானந்த், தமிழ்நெஞ்சம், டாக்டர் புருனோ..//

லதானந்த்???? அரசியல் பண்ணாமலும்????
13 July, 2009 1:40 AM
/////////////

வருகைக்கு நன்றி அனானி..அப்பிடியா???

ராஜா said...

//////////////////////////
Varsha said...
I like the post..Its nice.
13 July, 2009 1:42 AM
பயமில்லாதவன் said...
விடுங்க BOSS இவ்ங்க யப்பவும் இப்படிதான்...
13 July, 2009 2:11 AM
கபிலன் said...
"அதைவிட பதிவு போட்டவுடனே பதிவைப் படிக்காமலே “மீ த பர்ஸ்டு, ரீப்பிட்டு"

"சில திரட்டிகளிலும் அரசியல் நடப்பது கண்கூடாகத் தெரிகிறது"

மனசுல இருக்குறத தைரியமா வெளியில சொல்லி இருக்கீங்க....அருமை!
வாழ்த்துக்கள்!
13 July, 2009 6:02
////////////////////////
வருகைக்கு நன்றி வர்சா, பயமில்லாதவன், கபிலன்

ராஜா said...

/////////////////
Jaleela said...
ராஜா நான் ஜலால் இல்லை ஜலீலா
12 July, 2009 11:08 PM
/////////////////
சுட்டிக் காட்டியதற்கு நன்றி ஜலீலா..தவறுக்கு மன்னிக்கவும்

ராஜா said...

/////////////////////////
13 July, 2009 6:02 AM
அக்பர் said...
உங்கள் பதிவின் ஆதங்கம் நியாய‌மானது.

அடுத்தவர்கள் மனதை புண்படுத்தாமல் இருப்பது நலம்.
13 July, 2009 7:22 AM
வால்பையன் said...
கஷ்டமா தான் இருக்கு! என்ன செய்ய!
இப்போ எல்லாம் பழகியிருச்சு!
13 July, 2009 10:13 AM
///////////////////////////
வருகைக்கு நன்றி வால் பையன், அக்பர்

Post a Comment