Tuesday, 21 July 2009

அன்புள்ள செந்தழல் ரவி…

(இந்த பதிவை படிக்கும்முன் இந்த லிங்கை கிளிக் செய்து படிக்கவும்..அப்போதான் இந்த பதிவு புரியும்..)

அன்புள்ள இரந்தழல் செவி..சாரி..செந்தழல் செவி..கடவுளே..இரந்தழல் இவி..

பாருங்கண்ணே, முதல்முறையா உங்களைப் பாராட்டி எழுதப் போறேன்..வாய் குழறுது..ஒரு நிமிசம்..

அன்புள்ள செந்தழல் ரவி..அய்..வந்துடுச்சு.. கொஞ்ச நாளைக்கு முன்னாலயே உங்களுக்கு இந்த லெட்டர் எழுதனும்னு நெனைச்சேன்...ஆனா இப்ப தான் நேரம் கிடைச்சது...

இந்த உலகத்தில் நான் ரசிச்ச இம்சைன்னு எடுத்துக்கிட்டா…இம்சை அரசன் இரண்டாம் புலிகேசி, அமெரிக்காவுல கூட என்னைத் தேடி வந்து கடிக்குற கொசு..அடுத்தபடியா நீங்கதான்..

கண்ணீர் விடுறமாதிரி எழுதுனா தான் அது இம்சை, மீதி எல்லாம் ஊறுன உளுந்துன்னு நினைக்கிற இந்த காலத்தில, என்னை மாதிரி தற்குறியும் சிரிக்கிற மாதிரி நீங்க எழுதுறதுதான் உங்களை எனக்கு பிடிச்சதுக்கு காரணம்..

ஆமாம் ஏதோ கேள்விப்பட்டேன்..நீங்க சுவராசிய பதிவர்க்குரிய அவார்டு ஒன்னு ஆரம்பிச்சு எல்லோரும் அவார்டு கொடுத்து சந்தோசப்படுறாங்களாம்..

ஏம்பா…

நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்துச்சு..எப்படி இந்த திடீர் முடிவு..

பார் எக்ஸாம்பிள்..

நீங்க 200 பேர் இருக்குற பதிவுலகத்துல பிரபல பதிவரா இருக்கீங்க..திடிர்ன்னு அடிக்கடி பதிவர்களுக்குள்ளார சண்டை போட்டுக்குறாங்க..புதிய பதிவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கலைன்னு ஒரு பேச்சு வருது..

இப்ப நீங்க என்ன செய்வீங்க..

  1. நல்லா சண்டை போடுங்கப்பான்னு சொல்லி இம்சையக் கொடுப்பீங்க
  2. அய்யோ அப்படி பேசுறானுங்களே..அப்படின்னு கவலைப்பட்டு கண்டுக்காம விட்டுறுவீங்க..
  3. சுவாராஸ்ய பதிவர்ன்னு ஒரு அவார்டு ஆரம்பிச்சு..எல்லாரையும் சந்தோசப்படுத்துவீங்க..

இம்சை ராஜாவான நீங்கள் முதல் ஆப்சனைத்தான் எடுப்பீங்கன்னு நினைச்ச நேரத்தில மூன்றாவது ஆப்சனை எடுத்து எல்லாரையும் சந்தோசப்படுத்திட்டீங்க..

அதே நேரம் உங்களைப் பற்றித் தெரிந்த அதே பதிவுலகத்தில் இருக்கும் மற்றவர்கள் சண்டையெல்லாம் மறந்து எல்லாரும் புதிய பதிவர்களுக்கு அவார்டு கொடுக்குறதைப் பார்த்து சந்தோசமா இருக்குண்ணே..இந்த அவார்டு தொடர்னால கடந்த இரண்டு வாரங்களா இருந்த சண்டை மறந்து ஓரளவு சந்தோசமா இருக்காங்கண்ணே..

உங்களுக்கு தெரியுமா என்று தெரியாது, என் போன்று புது பதிவர்களுக்கு இது உற்சாக டானிக்ணே..ஒவ்வொரு பதிவரும் இந்த அவார்டு வாங்கிட்டு அடுத்தவங்களுக்கு கொடுக்கும் போது எவ்வளவு சந்தோசப்படுறாங்க தெரியுமாண்ணே..நீங்க திரும்ப ஒரு புதிய பதிவரா மாறிப் பாருங்கண்ணே..தன்னோட எழுத்தையும் ஒவ்வொருத்தரும் மதிக்கிறாங்கன்னு நினைச்சாலே ஒரு தனி இன்பம் கிடைக்கும்ணே..அது அனுபவிச்சால்தான் தெரியும்னே..நானும் அனுபவிக்கிறேன்னே..நானும் புது பதிவர்தானே..

எப்போதும் உங்களைக் கிண்டல் பண்ணி பதிவு போடும் நான், நீங்க நல்லது பண்ணும் போது பாராட்டனும்லனே..அதுதானன்னே நியாயம்….நீங்க ஆரம்பிச்சு வைச்ச அவார்டுக்காகத்தான்னே உங்களுக்கு இந்தப் பாராட்டு..

எனக்கும் அவார்டு கொடுத்துக்கிறாயிங்கண்ணே..நானும் 6 பதிவர்களுக்கு அவார்டு கொடுக்கப் போறேன்ணே.. இதுபோல நீங்கள் பல முயற்சிகளை எடுத்து வலையலகம் எப்போதும் சந்தோசமா இருக்க ஆவலாயிருக்கும் நண்பனின் மடல்..

9 comments:

அப்பாவி முரு said...

உலக அரசியலே புரியமாட்டேங்குது, இந்த மரமண்டைக்கு(என்னைச் சொன்னேன்)

ஷங்கரலிங்கம் said...

ரசித்து படித்தேன் இந்த பதிவை...

நாமக்கல் சிபி said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

டச்சிங்கா இருங்கு இந்த கடிதம்!

S.A. நவாஸுதீன் said...

ஹா ஹா ஹா, பழங்காநத்தம் போயிட்டு வந்த மாதிரி இருக்கு

Suresh said...

ஹா ஹா ;) இதை படிச்சிட்டு யாருக்கு அவர்ட்டுனு பார்த்த நம்ம பெயர் இருக்கு அண்ணே :) ரொம்ப சந்தோசம்..

இந்த பதிவு செம ;) உங்க நடையில்

அவிய்ங்க ராசா said...

///////////////////
அப்பாவி முரு said...
உலக அரசியலே புரியமாட்டேங்குது, இந்த மரமண்டைக்கு(என்னைச் சொன்னேன்)
21 July, 2009 9:35 PM
////////////////////////
:))))))) எனக்கும் ஒன்னும் புரியலண்ணே..

அவிய்ங்க ராசா said...

////////////////////////
21 July, 2009 9:35 PM
புதியவன் said...
ரசித்து படித்தேன் இந்த பதிவை...
21 July, 2009 10:49 PM
பிரபல பதிவர் நாமக்கல் சிபி said...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

டச்சிங்கா இருங்கு இந்த கடிதம்!
21 July, 2009 11:22 PM
S.A. நவாஸுதீன் said...
ஹா ஹா ஹா, பழங்காநத்தம் போயிட்டு வந்த மாதிரி இருக்கு
22 July, 2009 1:15 AM
Suresh said...
ஹா ஹா ;) இதை படிச்சிட்டு யாருக்கு அவர்ட்டுனு பார்த்த நம்ம பெயர் இருக்கு அண்ணே :) ரொம்ப சந்தோசம்..

இந்த பதிவு செம ;) உங்க நடையில்
22 July, 2009 8:06 PM
//////////////////////////
நன்றி புதியவன், சிபி, நவாஸ், சுரேஸ்

ரவிஷா said...

ஏம்பா, ரெண்டு மூணு வாரத்துக்கு முன்னாடிதான் தமிழ் பதிவுலகில் நடக்கும் அரசியலைப் பத்தி ஒரு பதிவு போட்டீங்க! இப்போ என்னடான்னா நீங்களும் அதில் கலந்துக்குறீங்க? நீங்களும் பத்தோடு பதிணொண்ணா ஆயிட்டீங்களே....

அவிய்ங்க ராசா said...

///////////////////
ரவிஷா said...
ஏம்பா, ரெண்டு மூணு வாரத்துக்கு முன்னாடிதான் தமிழ் பதிவுலகில் நடக்கும் அரசியலைப் பத்தி ஒரு பதிவு போட்டீங்க! இப்போ என்னடான்னா நீங்களும் அதில் கலந்துக்குறீங்க? நீங்களும் பத்தோடு பதிணொண்ணா ஆயிட்டீங்களே....
27 July, 2009 4:01 PM
/////////////////////
என்னண்ணே…நீங்ககூட புரிஞ்சுக்கலை..என்னைத் தொடர்ந்து படிக்கிறீங்க..ஒருத்தர் நல்லது பண்ணினா, எதிரியா இருந்தா கூட பாரட்டனும்னே..இதுல அரசியல் எங்கிருந்து வந்ததுண்ணே…

Post a Comment