என்னதான் ஹிட்ஸ், ஓட்டு, பின்னூட்டம் இதெல்லாம் பார்க்காதே, பதிவில் மட்டும் கவனம் செலுத்து என்று பல பேர் அறிவுரை சொல்லினாலும் இந்த பாழாய்ப் போன மனசு கேக்க மாட்டீங்குதுண்ணே..மாறி, மாறி மேடைப் பேச்சைக் கேட்டு கழகங்களுக்கு ஓட்டு போட்டவயிங்க தானே நம்மெல்லாம். பலான படம்னு ஒரு பதிவு போட்டு 1000 ஹிட்ஸ் வாங்குனதைப் பார்த்து என் கண் கலங்கிருச்சுண்ணே..இம்புட்டு பேர் படம் பார்த்துக்குறாயிங்களா..அம்மா, அப்பா பத்தி ரொம்ப உருக்கமான பதிவு போட்டெல்லப்பாம் 200, 250 ஹிட்ஸ் தான்னே வந்திருந்திச்சு..விடுப்பா, விடுப்பா..யூத்துன்னா பலான படம் பார்க்குறதும், பல் போனப்பறம் ஷகீலா படம் பார்க்குறதும் வாழ்க்கையோட அங்கம் தானே..
முதன் முறையா என்னோட பதிவு 1000 ஹிட்ஸ் வாங்குனவுடனே, ஒரு ஆர்வக் கோளாறுல தமிழ்மணத்துல எவ்வளவு வோட் வாங்கியிருக்குன்னு பார்த்தா எனக்கு அதிர்ச்சிண்ணே..நான் 2ம் வகுப்பு படிக்கும்போது கணக்கு பாடத்துல வாங்குன மார்க்குண்ணே..”0”..இதே பதிவு தமிலிஸ்சில் 37 ஓட்டு..1000 ஹிட்ஸ்ல ஒரு 250 பேர் படிச்சிருந்தாலும் ஒருத்தர் கூடயா ஓட்டு போடல..ஒருவேளை எம்மேலதான் ஏதோ தப்பு இருந்திருக்கும்னே..
அண்ணே..தமிழ்மணத்தை கலாயிக்கிறதுக்கு இந்தப் பதிவு எழுதலண்ணே..உண்மையிலயே தெரிஞ்சுக்கிறதுக்காக இதைக் கேக்குறேன்..கீழே ஒரு பத்து ஆப்சன் போட்டிருக்கேன்..உங்க மனசுக்கு பட்ட ஆப்சனை பின்னூட்டம் போடுங்கண்ணே..(1, 2, 3..என்று குறிப்பிடவும்). முடிந்தால் அந்த ஆப்சனைப் பற்றி உங்கள் கமெண்ட் போடவும்..நான் ஒரு ஆப்சனை நினைச்சுருக்கேன்..நான் நினைச்சது தப்பா என்று தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும்..ஏதாவது சிரமத்திற்கு மன்னிச்சுருங்கண்ணே..
2) ஓட்டு பற்றி அதிகம் அலட்டிக் கொள்ள வேண்டாம்..
3) அரசியல் செய்யத் தெரிந்திருக்க வேண்டும்..செய்யத் தெரியாவிட்டால் கூட பரவாயில்லை. யாரையும் தாக்கி எழுதியிருக்க கூடாது
4) ஜால்ரா போடத் தெரிந்துருக்க வேண்டும்..முடிந்தால் பதிவைப் படிக்கும் முன்னே, ரீப்பிட்டு, மீ த பர்ஸ்ட் என்று பின்னூட்டம் போடுதல் நலம்.
5) குரூப் சேர்த்துக் கொண்டு கும்மியடிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மாறி மாறி ஓட்டு குத்தினால் அதிக ஓட்டு வாங்குறதுக்கு சான்ஸ் இருக்கு.
6) டம்மியாக 4,5 பிளாக் வைத்துக் கொள்ள வேண்டும்..நமக்கே, நமக்கு ஓட்டு போட்டு கொள்ளலாம்
7) நிறைய பதிவுலக நண்பர்கள் வைத்துக் கொள்ள வேண்டும்..பதிவு போட்டவுடன், தூக்கத்திலிருந்தாலும் எழுப்பி ஓட்டுப் போட சொல்லணும்..தொல்லை தாங்க முடியாமல் ஒரு ஓட்டு விழும்
8) தமிழ்மணத்தில் யாராவது தெரிந்தவர் இருக்க வேண்டும்
9) இப்படி தமிழ்மணத்தைப் பற்றித் தாக்கி நாலு பதிவு போட வேண்டும்..தாக்கும் போது கவனமாக இருக்க வேண்டும்..ஒரேயடியாகத் தாக்கினால் உங்கள் பதிவு தூக்கப்படும் வாய்ப்பு உள்ளது
10) மொத்தமாக பிளாக்கை டெலிட் செய்து விட்டு போர்வையை நல்லா கால் வரைக்கும் போர்த்திக்கிட்டு உறங்க வேண்டும்..குறட்டை விட்டு பக்கத்தில் இருப்பவரை சாகடிக்காமல் இருப்பது நலம்
28 comments:
முன்பெல்லாம் தமிழ்மணத்தில் வாக்குப் போடுவது ரொம்ப சுலபாக இருந்தது. இப்போ யூசர் நேம், பாஸ்வேர்ட் எல்லாம் கேட்குது.
சரி நண்பர்களுக்காக, இதற்காகவே ஒரு யாஹூ அக்கௌண்ட் ஓப்பன் பண்ணி, நைஜிரியாவில் இருந்த வரைக்கும் ஓட்டு போட்டுகிட்டு இருந்தேன். நைஜிரியாவில் கூட வீட்டுக் கணினியில் இருந்து ஓட்டுப் போட்டால்தான் போகும். அலுவலகக் கணியில் இருந்து ஓட்டுப் போட முடியாது.
இப்போ லீவுல இந்தியா வந்திருப்பதால், ஒட்டு போட இயலவில்லை.
ஒட்டுப் போடுவதை மிகக் கஷ்டமாக்கிவிட்டார்கள். அதுதான் ஒட்டு விழாததற்கு காரணம்.
// 1) ஓட்டுப் போடுவது அவரவர் மனநிலையைப் பொறுத்தது..நீங்கள் நன்றாக எழுதி, அதை அந்த வாசகர் ரசித்தால் கண்டிப்பாக ஓட்டு விழும். இதில் அரசியல் எதுவும் இல்லை. //
ஓட்டுப் போடுவதில் கஷ்டமாக இருந்தால் யாரும் போட இஷ்டப் படமாட்டார்கள். நிச்சயமாக எந்தவிதமான அரசியலும் இல்லை.
தமிழிஷிலி ஒட்டு போட்டாச்சுங்க
// தமிழிஷிலி ஒட்டு போட்டாச்சுங்க //
தமிழிஷில் ... என்று படிக்கவும்
அப்படி இப்படின்னு ஒரு வழியா தமிழ் மணத்தில் ஓட்டுப் போட்டுட்டேன். 1/3 என்று காண்பிப்பதில் 1 என்னோட ஓட்டு...
2. ஓட்டு பற்றி அதிகம் அலட்டிக் கொள்ள வேண்டாம்..
ஆம். தமிழ்மணத்தில் ஓட்டுபோடுவது இன்னும் சரியாக எனக்கு விளங்கவில்லை.
பெரும்பாலான நேரங்களில் தமிழ்மணத்தில் ஓட்டுப்போட முடியவில்லை.
:(((
அனைத்து வழிகளும் அருமை
தமிழ் மணத்துல ஓட்டு வந்தா என்ன வராட்டி என்ன.. ராஜா.. என்னோடது எல்லாம் இரண்டு ஓட்டுக்கு மேல வந்ததே இல்லை.. ஆனா எனக்கு வரது வந்திட்டுதான் இருக்கு..வேலைய பாருஙக்..
//////////////////////////////
முன்பெல்லாம் தமிழ்மணத்தில் வாக்குப் போடுவது ரொம்ப சுலபாக இருந்தது. இப்போ யூசர் நேம், பாஸ்வேர்ட் எல்லாம் கேட்குது.
சரி நண்பர்களுக்காக, இதற்காகவே ஒரு யாஹூ அக்கௌண்ட் ஓப்பன் பண்ணி, நைஜிரியாவில் இருந்த வரைக்கும் ஓட்டு போட்டுகிட்டு இருந்தேன். நைஜிரியாவில் கூட வீட்டுக் கணினியில் இருந்து ஓட்டுப் போட்டால்தான் போகும். அலுவலகக் கணியில் இருந்து ஓட்டுப் போட முடியாது.
இப்போ லீவுல இந்தியா வந்திருப்பதால், ஒட்டு போட இயலவில்லை.
ஒட்டுப் போடுவதை மிகக் கஷ்டமாக்கிவிட்டார்கள். அதுதான் ஒட்டு விழாததற்கு காரணம்.
20 July, 2009 5:57 PM
//////////////////////////
வருகைக்கும், ஓட்டுக்கும் நன்றி ராகவன் அண்ணே..
இதைக் கண்டிப்பாக தமிழ்மணம் சரி செய்ய வேண்டும்
/////////////////////////
Vijay Anand said...
2. ஓட்டு பற்றி அதிகம் அலட்டிக் கொள்ள வேண்டாம்..
20 July, 2009 6:30 PM
/////////////////////////
நன்றி விஜயராகவன்..நான் நினைத்த ஆப்சனும் அதுவே
///////////////////////
'இனியவன்' என். உலகநாதன் said...
ஆம். தமிழ்மணத்தில் ஓட்டுபோடுவது இன்னும் சரியாக எனக்கு விளங்கவில்லை.
20 July, 2009 6:30 PM
//////////////////////
நன்றி உலகநாதன் நான் ஏற்கனவே சொல்லியபடி தமிழ்மணம் இதை சரி செய்தால் நன்றாக இருக்கும்
//////////////////
அப்பாவி முரு said...
பெரும்பாலான நேரங்களில் தமிழ்மணத்தில் ஓட்டுப்போட முடியவில்லை.
:(((
/////////////////////
வருகைக்கு நன்றி..தமிழ்மணம் இதை சரி செய்யவேண்டும் என்பது என் கருத்து
///////////////////
SUREஷ் (பழனியிலிருந்து) said...
அனைத்து வழிகளும் அருமை
20 July, 2009 7:13 PM
/////////////////////
வருகைக்கு நன்றி
///////////////////////
Cable Sankar said...
தமிழ் மணத்துல ஓட்டு வந்தா என்ன வராட்டி என்ன.. ராஜா.. என்னோடது எல்லாம் இரண்டு ஓட்டுக்கு மேல வந்ததே இல்லை.. ஆனா எனக்கு வரது வந்திட்டுதான் இருக்கு..வேலைய பாருஙக்..
20 July, 2009 7:52 PM
//////////////////////
நன்றி சங்கர் அண்ணே..நீங்கள் சொல்லியது இரண்டாவது ஆப்சனில் வருகிறது. என்னுடைய செலக்சனும் அதுவே..
/*பலான படம்னு ஒரு பதிவு போட்டு 1000 ஹிட்ஸ் வாங்குனதைப் பார்த்து என் கண் கலங்கிருச்சுண்ணே..இம்புட்டு பேர் படம் பார்த்துக்குறாயிங்களா..அம்மா, அப்பா பத்தி ரொம்ப உருக்கமான பதிவு போட்டெல்லப்பாம் 200, 250 ஹிட்ஸ் தான்னே வந்திருந்திச்சு..*/
பெரும்பாலும் இந்த மாதிரி எழுதினா தான் மக்களுக்கு புடிக்குது (பெரும்பாலும், மொத்தம் இல்லை) என்ன பண்றதுன்னே காலம் அப்படி ஆகிப் போச்சு. நான் கூட ரொம்ப எழுதறது இல்ல (எழுதிட்டாலும்!!!!!!). நீங்கள் தேர்வு செய்த ஆப்சன் தான் எனக்கும் மனதில் படுகிறது.
நம்ம அனுபவம் இதுல ரொம்ப கம்மிங்க ராசா. So 11-தான் என்னோடது
//5) குரூப் சேர்த்துக் கொண்டு கும்மியடிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மாறி மாறி ஓட்டு குத்தினால் அதிக ஓட்டு வாங்குறதுக்கு சான்ஸ் இருக்கு.//
இது மேட்டரு.. எங்க குரூப்ல ஜாயின் பண்ணிகோங்க, சப்ஸ்கிரிப்சன் இலவசம்!
2. ஓட்டு பற்றி அதிகம் அலட்டிக் கொள்ள வேண்டாம்..
ராஜா, உங்களுக்கு சுவாரசிய விருது கொடுத்து இருக்கேன். உங்களுக்கு பிடிச்ச மக்களுக்கு கொடுத்து இந்த தொடரை கொண்டு செல்லுங்க :) பாதில நிறுத்தினா இன்னபலது நடக்கும்னு forwarded mail ல படிச்சி இருப்பீங்க.
/////////////////////////
சித்து said...

20 July, 2009 9:09 PM
//////////////////////////
கரெக்டா சொன்னீங்க சித்து..நன்றி
///////////////
S.A. நவாஸுதீன் said...
நம்ம அனுபவம் இதுல ரொம்ப கம்மிங்க ராசா. So 11-தான் என்னோடது
20 July, 2009 10:26 PM
///////////////
நன்றி நவாஸ்
///////////////////////
கலையரசன் said...
//5) குரூப் சேர்த்துக் கொண்டு கும்மியடிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மாறி மாறி ஓட்டு குத்தினால் அதிக ஓட்டு வாங்குறதுக்கு சான்ஸ் இருக்கு.//
இது மேட்டரு.. எங்க குரூப்ல ஜாயின் பண்ணிகோங்க, சப்ஸ்கிரிப்சன் இலவசம்!
21 July, 2009 3:51 AM
//////////////////////
ஆஹா..குரு தட்சனை எதுவும் கொடுக்கனுமா?..)))
//////////////////
பித்தன் said...
2. ஓட்டு பற்றி அதிகம் அலட்டிக் கொள்ள வேண்டாம்..
21 July, 2009 5:46 AM
//////////////////
நன்றி பித்தன்..மன்னிச்சுங்க பாஸ்..கொஞ்சம் வேலை அதிகமானதால் அடிக்கடி சாட் பண்ண முடியல
////////////////////
மணிகண்டன் said...
ராஜா, உங்களுக்கு சுவாரசிய விருது கொடுத்து இருக்கேன். உங்களுக்கு பிடிச்ச மக்களுக்கு கொடுத்து இந்த தொடரை கொண்டு செல்லுங்க :) பாதில நிறுத்தினா இன்னபலது நடக்கும்னு forwarded mail ல படிச்சி இருப்பீங்க.
21 July, 2009 10:43
//////////////////////
உங்கள் அன்புக்கு நன்றி மணிகண்டன்..என்னோட அடுத்த பதிவில் கொடுக்கிறேன்..
பிடிச்சிருந்தா கண்டிப்பா பின்னூட்டம் போடுவேன், ஆனால் ஓட்டு போட்டதில்லை(எளிதாக இல்லாததால் சோம்பல்),நான் ஓட்டு போடாததால் எனக்கு ஓட்டு போட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இருந்ததில்லை.ஆனாலும் நல்ல பதிவிற்கு கண்டிப்பாக குழு மனப்பான்மையையும் தாண்டி ஓட்டு விழுகிறது,உதாரணம் முதன் முதலாக என்னுடைய பதிவு ஐந்து ஓட்டு வாங்கி தமிழ்மனம் வாசகர் பரிந்துரையில் தற்போது இருக்கிறது,இதை நான் எதிர்பார்க்கவே இல்லை.
அவியிங்க சார்
நீங்க நல்ல எழுதுறீங்க சார்.
" 1) ஓட்டுப் போடுவது அவரவர் மனநிலையைப் பொறுத்தது..நீங்கள் நன்றாக எழுதி, அதை அந்த வாசகர் ரசித்தால் கண்டிப்பாக ஓட்டு விழும். இதில் அரசியல் எதுவும் இல்லை.
2) ஓட்டு பற்றி அதிகம் அலட்டிக் கொள்ள வேண்டாம்.."
Post a Comment