Sunday 19 July, 2009

நாய்…நாய்..நாய்…நாய்க்காதல்


போன வாரம் பக்கத்துல உள்ள ஒரு இந்தியன் ரெஸ்டாரண்ட்க்கு போயிருந்தேன்.ஒரு ஓரமா உக்கார்ந்து சோத்து மலைய வெட்டிக்கிட்டு இருந்த போதுதான் அவன் என் கண்ணில பட்டான்..பேரு கமலக் கண்ணன்..என்னோட பழைய கம்பெனியில என்னோட வேலை செஞ்சிக்கிட்டு இருந்தவன்..நம்ம மதுரைக்காரண்ணே..எனக்கு ரொம்ப அதிர்ச்சியா இருந்துச்சுண்ணே..பக்கத்துல யாருன்னு பார்த்தா, சேட்டு வீட்டுப் பொண்ணு கணக்கா ஒரு பொண்ணு. பக்கத்துல வேற என் பொண்டாட்டி வேற இருந்தாளா..அப்படியே போகஸை கமலக் கண்ணனுக்கு மாத்தினேன்..நாலு வருசத்துக்கு முன்னாடி என்னோட ப்ராஜெக்டுக்கு அவன் முதல் முதலாக வந்து சேர்ந்த போது பேசியது எனக்கு நினைவுக்கு வந்துச்சுண்ணே…

“ராசா அண்ணே..நான் கமலக்கண்ணன்..நானும் மதுரைக்காரண்ணே..இன்னிக்குத்தான் சேர்ந்துருக்கேன்..பிராஜெக்ட் எப்படிண்ணே”

“வாப்பா கண்ணா..சந்தோசம்யா..நல்ல பிராஜெக்ட்யா..நல்லா முன்னேறலாம்..”

“அண்ணே..அது வந்து..அது வந்து..”

என்னடா இப்படி வெக்கப்படுறான்னு அவன் காலைப் பார்த்தா, நேத்து சமைஞ்ச பொண்ணு மாதிரி பெரு விரலால கோலம் போடுறாண்ணே..

“ஏதாவது பிகர் இருக்காணே..நம்ம பிராஜெக்ட்ல..”

அடங்கொய்யாலே..அவனா நீயி….அப்பவே தெரிஞ்சு போச்சுண்ணே..அவன் எந்த பிராஜெக்ட் பண்ண வந்துருக்கானுன்னு..அவன என்ன குறை சொல்ல..அவன் வயசு அப்பிடி..இப்பத்தான் காலேஜ் முடிச்சான்..கேம்பஸ் இண்டர்வியூல வேலை..அப்பா பள்ளிக்கூடத்துல ஆசிரியரா வேலை பார்க்குறார்..

வந்த நாளில இருந்தே பரபரப்பா திரிஞ்சான்..எப்படி டிபக்டை கரெக்ட் பண்ணறதுக்குன்னு இல்ல..எப்படி பிகரை கரெக்ட் பண்றதுக்குன்னு..அப்பத்தான் ஒரு பொண்ணு பம்பாயில இருந்து கேம்பஸ் இன்டெர்வியூல செலெக்ட் ஆகி எங்க கிளைக்கு வந்தா..பேரு “ஸ்வேதா..” சுண்டி விட்டா ரத்தம் வருமுன்னே..கண்ணாடி மாதிரி கலருண்ணே..சிம்பிளா சொல்லணும்னா இந்த பதிவுல சைடுல இருக்குற என் போட்டாவை பாருங்க..அதுக்கு அப்படியே எதிர்கலரு..நம்ம கமலக்கண்ணனும் என் கலரு…நம்ம ஊருக்காரயிங்க தானே..அமிர்கான் கலரா வரும்….காக்காவையும் நம்மளையும் போட்டி வைச்சா, ஒரு பாயிண்ட் வித்தியாசத்துல நம்ம ஜெயிப்போமுல..அதுக்கெண்ணனே..வெள்ளை மனசுண்ணே…

ஸ்வேதாவைப் பார்த்தவுடனே நம்ம ஆளு அலறிட்டாண்ணே..

“டே..ராசா..என்ன பிகருடா….என் கனவு தேவதைடா..”

“கமலக்கண்ணா..வேணான்டா..அதுக எல்லாம் பார்த்தா பெரிய ரேஞ்சாத் தெரியுது..நம்மளையெல்லாம் மதிக்க கூட மாட்டாயிங்க..கலரே ஒத்துப் போக மாட்டீங்கேதேடா..நம்மளும் அவளும் நின்னா பாலும் டிக்காசனும் கலந்த மாதிரு இருக்கும்டா..”

“போங்கண்ணே..அப்பத்தான காபி கிடைக்கும்..”

எப்படிதான் கண்டு பிடிப்பாயிங்கன்னு தெரியல..அப்பயே தெரிஞ்சு போச்சுண்ணே..இவன் செத்தால் தான் திருந்துவாண்ணு..

நம்ம கமலக்கண்ணனுக்கு அந்த பொண்ணு மனசுல இடம் பிடிக்கிறத விட, பக்கத்துல இடம் பிடிக்கிறதுதான் முதல் நோக்கமா இருந்துச்சு..அந்த பொண்ணு சென்னைக்கு புதுசா வந்திருக்குறதனால ஒரு இழவும் தெரியல..பொதுவா பார்த்தீங்கண்ணா வட இந்தியால இருந்து வந்து சென்னையில தங்கி இருக்கிறவயிங்க ஏதோ நரகத்துல இருக்குற மாதிரி நினைப்பாய்ங்க..ஏதோ அவிங்க சொர்க்கத்துல இருந்து வந்த மாதிரி..ஒரு நாள் பாம்பே போயிருந்த போதுதான் நினைச்சேன்..அடப்பாவிங்களா..ஊராயா அது..எங்க பார்த்தாலும் பான்பராக்கை போட்டு புளிச், புளிச்சுன்னு துப்பி வைச்சிருக்காயிங்கண்ணே..தமிழ்நாடு சொர்க்கம்ணே..

ஸ்வேதா நம்ம கமலக் கண்ணன் பக்கம் வந்தாள்..அப்பயே நம்ம கமலக் கண்ணணுக்கு வாயோரம் ஜொள்ளு ஆரம்பித்தது..

“எக்ஸ்கியூஸ் மீ..நான் ஸ்வேதா..பம்பாய்ல இருந்து வந்துருக்கேன்..எனக்கு இந்த ஊரு ஒன்னும் புரியல..நீங்க இந்தி பேசுவீங்களா..”

நம்ம ஆளுக்கு தமிழே கோளாறு..இந்தி எங்கிட்டு..

“ஹி..ஹி..தோடா..தோடா மாலும்..”

இதோடா..பிகருன்னா ஆப்பிரிக்க பாஷையே கத்துக்கிருவாயிங்க போல இருக்குண்ணே….ஸ்வேதா கொஞ்ச ஆரம்பித்தாள்

“இந்த சென்னை எனக்கு பிடிக்கவேயில்லை..யாருமே இந்தி பேச மாட்றாங்க….எங்க ஊரு சப்பாத்தி கிடைக்கா மாட்டீங்குது..ஒரு பப் இல்லை, டிஸ்கோதே இல்லை..ஒரு என்டெர்டெயிண்ட் இல்லை..”

எனக்கு அங்கயே அவளை செருப்ப கழட்டி அடிக்கணும் போல இருந்துச்சு..ஒருவேளை ஆஸ்திரேலியாவுல நடக்குற தாக்குதலுக்கு இதுவும் ஒரு காரணமோ..கோபத்தை கட்டுப் படுத்திக்கிட்டு நான் சொன்னேன்..

“ஸ்வேதா..அப்புறம் ஏன் சென்னைக்கு வந்தீங்க..இப்படி பிடிக்காத இடத்துல குடி இருக்கணுமா என்ன..வேலையத் தூக்கிப் போட்டுட்டு உங்க சொர்க்கத்துக்கு போக வேண்டியதுதானே..”

ஸ்வேதா முகம் லைட்டா மாறவே, நம்ம ஆளு டென்சானாகிட்டான்..

“ஸ்வேதா..ஊராங்க இது..நீங்க கவலைப்படாதிங்க..உங்களுக்கு நல்ல ஹாஸ்டல் பார்க்க வேண்டியது என்னோட பொறுப்பு..நல்ல நார்த் இண்டியன் ரெஸ்டாரண்ட் நான் பார்க்குறேன்..”

அதுமுதல் அவளுக்கு பிஸ்கட் கொடுக்காத நாய்க்குட்டி மாதிரியே திரிஞ்சாண்ணே..என்னையெல்லாம் கண்டுக்கவேயில்லை..காலையில வண்டிய எடுத்து ஸ்வேதாவை ஹாஸ்டலில் இருந்து கூப்பிட்டு வருவான்..சாயிந்தரம் ஆனா, செக்யூரிட்டி மாதிரி வீட்டுல விடுறது..ரெஸ்டாரண்ட் போயி பார்சல் வாங்கிட்டு வர்றது..உண்மையிலேயே இதுக்கு அடிமாடா வேலைப் பார்த்திருக்கலாம்ணே….அவளும் நம்ம ஆளு வீக்னஸ் பார்த்து நல்லா வேலை வாங்கினா..அவளுக்கு ஒரு பைசா செலவு இல்லண்ணே..நம்ம ஆளுதான் சம்பாதிக்கிற பணத்தை எல்லாமே செலவழிக்கிறானே.. ஒருநாள் செம பிசியா போயிக்கிட்டு இருந்தவனை புடிச்சேன்..

“டே..கமலக் கண்ணா..நான் ராசாடா..ஞாபகம் இருக்கா..ஏண்டா இப்படி மாறிட்ட..பேண்ட் போட்டா மதிப்பே இல்லையாடா??”

“டே ராசா..காதல்டா..நான் அவளை உண்மையா காதலிக்கிறேன்டா..அவளும் என்னைக் காதலிக்கிறான்னு தான் நினைக்கிறேன்டா..வித் லவ்வுன்னு கீரீட்டிங் கார்டு தர்றாடா..நீதான் எனக்கு எல்லாம் சொல்றாடா..”

“டே கமலக் கண்ணா..இதெல்லாம் வேணான்டா..அவிங்க அப்படித்தான்டா பேசுவாயிங்க..நம்மளுக்கெல்லாம் ஒத்து வராதுடா..”

“போடா..காதல் பத்தி உனக்கு என்னடா தெரியும்.வேலையப் பாருடா..”

எனக்கு யாரோ செருப்பை கழட்டி அடித்த மாதிரி இருந்துச்சு..போடா நீயும் உன் காதலும்..நான் அவனைக் கண்டுக்கவே இல்லைண்ணே..எப்படியும் சாகப் போறான்னு தெரிஞ்சிருச்சு..அப்பப் போய் பால் ஊத்திக்கலாமுன்னு விட்டுட்டேன்..அப்புறம் நான் வேற கம்பெனிக்கு மாறி நாலு வருசம் ஆகி அமெரிக்கா வந்து இப்பத்தாண்ணே அவனைப் பார்க்குறேன்…என்னைப் பார்த்தவுடனே அவன் முகம் பிரகாசமாகியது..என்னை நோக்கி வந்தான்..

“டே..ராசா..எப்படிடா இருக்க..நாலு வருசத்துக்கு முன்னாடி பார்த்தது..கல்யாணம் ஆகிடுச்சா..எங்கடா உன் பொண்டாட்டி..”

“நல்லா இருக்கேன்டா..கல்யாணம் ஆகிடுச்சு..மனைவி சாப்பிட்டு கை கழுவ போயிருக்காடா…ஆமா நீ எங்கடா அமெரிக்காவுல..”

“சின்ன பிராஜெக்டக்கு வந்திருக்கேன்டா..”

“சந்தோசம்டா கமலக்கண்ணா..என்னடா உனக்கு எப்ப கல்யாணம்..ஸ்வேதா வீட்டுல சம்மதம் வாங்கிட்டயா..?”

“ஸ்வேதாவா..அவ கிடக்குறா நாயி..மனுசியாடா அவ..அவளுக்கு எவ்வளவு பண்ணினேன்..மனசாரக் காதலிச்சேன்டா..ஏமாத்திட்டாடா..என்னை லவ் பண்ற மாதிரியே பேசுனாடா..அத நம்பி நான் சம்பாதிச்சதெல்லாம் அவளுக்குத்தான்டா செலவழிச்சேன்..ஷாருக்கான் மாதிரி ஒரு பையன் பாம்பேல இருந்து வந்துருந்தாண்டா..அவிங்க ஆளுடா..அவன் கூட சேர்ந்து சுத்த ஆரம்பிச்சுட்டாடா..என்னை ஈசியா கை கழுவிட்டாடா..”

“அடப்பாவமே..அப்பவே படிச்சு, படிச்சு சொன்னனேடா..நீ கேக்கலை…”

“ஆமாண்டா….எவ்வளவு காசு செலவழிச்சேன்..அட்லீஸ்ட் கையாவது வச்சிருக்கணும்டா..தப்பு பண்ணிட்டே..எவ்வளவு சான்ஸ் கிடைச்சுச்சு தெரியுமா..இப்படி பண்ணுவான்னு தெரிஞ்சா அப்பவே அவ மேல கை வச்சுருப்பேன்டா..”

நான் அதிர்ச்சியில அப்படியே உறைஞ்சு போயிட்டேண்ணே..இதுதானா காதல்..உடம்பைத் தொட்டா எல்லாம் முடிஞ்சுடுமா..இதுக்குத்தான் பிறந்தோமா..மண் திங்குற உடம்புதானா எல்லாம்..

“டே..இந்த தடவை ஏமாற மாட்டேன்டா..அங்க என் டேபிளுல உக்கார்ந்து இருக்கா பாரு..இங்க வந்து புடிச்சேன்…எப்படியாவது மேட்டரை முடிச்சுட்டுத்தான் காதலிக்கவே செய்வேன்..”

நாய்…நாய்..நாய்…நாய்க்காதல்…..

20 comments:

Vijay Anand said...

Raja.. Really super

Vijay Anand said...

//காக்காவையும் நம்மளையும் போட்டி வைச்சா, ஒரு பாயிண்ட் வித்தியாசத்துல நம்ம ஜெயிப்போமுல.. ///

ஹா ஹா ஹா ஹா

//அதுக்கெண்ணனே..வெள்ளை மனசுண்ணே… //
ரொம்ப கரெக்ட் ..ராஜா

Cable சங்கர் said...

நைஸ்..

அப்பாவி முரு said...

//..எப்படியும் சாகப் போறான்னு தெரிஞ்சிருச்சு..அப்பப் போய் பால் ஊத்திக்கலாமுன்னு விட்டுட்டேன்//

என் இனமடா நீ...

S.A. நவாஸுதீன் said...

வழக்கம்போல, உங்க பாணியில நல்லா சொல்லி இருக்கீங்க ராசா.

வினோத் கெளதம் said...

நல்லா தான் சொல்லி இருக்கீங்க..

லெமூரியன்... said...

நல்ல சொல்லிருக்கீங்க ராஜா....காதலின் உச்சம் ஸ்பரிசம் நண்பா....ஆனால் அங்கே காதல் உண்மையாக இருக்கும் பட்சத்தில்.....

ajrajini said...

எனக்கு ஒரு சந்தேகம்... நீங்கள் ஏன் அந்த கமலகண்ணன் ஆக இருக்க கூடாது..!!!! தெளிவுபடுத்துங்கள்

அப்துல்மாலிக் said...

Really excellent

Swami www ji said...

superubbbbuuuuu!!!!

அவிய்ங்க ராசா said...

/////////////////////
Vijay Anand said...
Raja.. Really super
19 July, 2009 6:52 PM
Vijay Anand said...
//காக்காவையும் நம்மளையும் போட்டி வைச்சா, ஒரு பாயிண்ட் வித்தியாசத்துல நம்ம ஜெயிப்போமுல.. ///

ஹா ஹா ஹா ஹா

//அதுக்கெண்ணனே..வெள்ளை மனசுண்ணே… //
ரொம்ப கரெக்ட் ..ராஜா
19 July, 2009 7:02 PM
//////////////////////
நன்றி விஜய் ஆனந்த்

அவிய்ங்க ராசா said...

///////////////////
Cable Sankar said...
நைஸ்..
19 July, 2009 7:32 PM
/////////////////////
நன்றி சங்கர் அண்ணே..

அவிய்ங்க ராசா said...

////////////////
அப்பாவி முரு said...
//..எப்படியும் சாகப் போறான்னு தெரிஞ்சிருச்சு..அப்பப் போய் பால் ஊத்திக்கலாமுன்னு விட்டுட்டேன்//

என் இனமடா நீ...
19 July, 2009 8:00 PM
///////////////
நன்றி முருகன்

அவிய்ங்க ராசா said...

/////////////////////
S.A. நவாஸுதீன் said...
வழக்கம்போல, உங்க பாணியில நல்லா சொல்லி இருக்கீங்க ராசா.
19 July, 2009 10:39 PM
//////////////////////
நன்றி நவாஸ்

அவிய்ங்க ராசா said...

/////////////////////
19 July, 2009 10:39 PM
வினோத்கெளதம் said...
நல்லா தான் சொல்லி இருக்கீங்க..
19 July, 2009 11:03 PM
ramesh said...
நல்ல சொல்லிருக்கீங்க ராஜா....காதலின் உச்சம் ஸ்பரிசம் நண்பா....ஆனால் அங்கே காதல் உண்மையாக இருக்கும் பட்சத்தில்.....
19 July, 2009 11:58 PM
/////////////////////
நன்றி வினோத்..ரமேஷ்

அவிய்ங்க ராசா said...

///////////////////////
ajrajini said...
எனக்கு ஒரு சந்தேகம்... நீங்கள் ஏன் அந்த கமலகண்ணன் ஆக இருக்க கூடாது..!!!! தெளிவுபடுத்துங்கள்
20 July, 2009 12:49 AM
அபுஅஃப்ஸர் said...
Really excellent
20 July, 2009 2:31 AM
Swami www ji said...
superubbbbuuuuu!!!!
20 July, 2009 4:20 AM
//////////////////////
நன்றி ரஜினி என்கிற கமலக்கண்ணன், அபு, சுவாமி

♫சோம்பேறி♫ said...

:-)

ரெட்மகி said...

முக்கால்வாசி பேர் இப்படிதான் திரியறாங்க ... நல்லா சொன்னிங்க.. அருமை

Unknown said...

Pala pasamga edha padichavadhu thirundhuvangala paapom ..

கரிகாலா said...

காதல் என்ற பெயரில் நடக்கும் அவலங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளீர்கள். உங்கள் நடை எனக்குப் புதிதாய் இருந்தாலும், பிடித்திருக்கிறது.

காதலைப் ப்ற்றி நான் கூட ஒரு பதிவு எழுத இருக்கிறேன். விரைவில் எதிர் பாருங்கள். (இது தேவை தானாங்கிற கேள்வி நிச்சயம் வரும்)

Post a Comment