Wednesday 15 July, 2009

பலான படம்

தரித்திரம் நிரம்பிய நம்ம சரித்திரத்தை திருப்பிப் பார்த்தீங்கண்ணா(இது சிட்டிசன் இல்லீங்க..ஜட்டிசன்), பலான படம் பார்க்காதவய்ங்கள விரல் விட்டு எண்ணி விடலாம்ணே..பசங்க வயசுக்கு வந்துட்டாயிங்கிறதுக்கு ஒரு அத்தாட்சியா நம்ம ஊருப் பசங்க இதைப் பார்ப்பாயிங்கண்ணே…

இதெல்லாம் எப்ப நடக்கும்னு பார்த்தீங்கண்ணா, நம்ம 11, 12 ஆம் வகுப்பு படிக்கும் போதுதான்..அப்பத்தான் நம்ம பசங்களுக்கு ஞானதோயம் பொறக்கும்ணே..நட்டுவாக்காலிய நெஞ்சுக்குள்ள(கரெக்டா படிங்கண்ணே..ஏன்னா, பதிவு அப்பிடி) விட்டமாதிரி எப்பப் பார்த்தாலும் பரபரப்பா திரிவாயிங்க..முகத்துல ஆசை ஆசையா அரும்பு மீசைய வளர்ப்பாயிங்க. எந்த பொண்ணப் பார்த்தாலும் வெள்ளை டிரஸ் போட்ட ஏஞ்சல் மாதிரி பார்ப்பாயிங்க..ஏதாவது ஒரு பொண்ணு பஸ்ல போறப்ப “எக்ஸ்கியூஸ் மீ” ன்னு சொன்னாப் போதும், காசேயில்லாம சுவிட்சர்லாந்துல டூயட் பாடுவாயிங்க..அதே பொண்ணு யார் கூடயாவது நடந்து போறதப் பார்த்தா தேவதாஸ் மாதிரி “பீலிங்ஸ் ஆப் இண்டியா”வா மாறி அழுவாயிங்க..

இதே பருவத்துல நானும் மாட்டினேன்.. திண்டுக்கல்ல செயிண்ட் மேரிஸ்ல 12ம் வகுப்பு படிச்சேண்ணே….வகுப்புல எல்லாருமே பிஞ்சுல பழுத்திருந்தாயிங்க..நம்மதான் சோழவந்தான் பக்கம் வந்திருந்தோமே..ஒரு மண்ணாங்கட்டியும் தெரியல..பலான படம் போஸ்டர் பார்க்கவே பயந்துக்கிட்டு இருந்தேன்..பஸ்ல போறப்ப சுப்ரமணியபுரம் சுவாதி மாதிரித்தான் பலான போஸ்டரை ஓரக் கண்ணாலப் பார்ப்பேன்..அப்படியே பார்த்தாலும் போஸ்டருல எல்லாமே அவுட் ஆப் போகஸாகி எங்க அப்பா நாக்கைத் துருத்திக்கிட்டு அருவாள கையில எடுத்துக்கிட்டு என்னை நோக்கி ஓடி வர்ர மாதிரியே இருக்கும்..அப்பிடியே கண்ணை மூடிக்கிருவேன்..

எங்க வகுப்புல ஒரு கணக்கு வாத்தியார் இருந்தாரு.மனுசன் ரொம்ப ஸ்ட்ரிக்டு..அவர் நடத்துற கணக்கை விட அவர் பார்க்குற பார்வை ரொம்ப பயங்கரமா இருக்கும்..என் வகுப்புல ஒரு ரவுடிப் பையன் இருந்தாண்ணே..பேர் “சிங்கார வேலு”..அவனை எல்லாம் “சீன் சிங்காரம்” தான் கூப்பிடுவாயிங்க..சீன் படம் ரீலிஸ் ஆச்சுன்னா போதும், ரஜினி படம் மாதிரி, முதல் நாள், முதல் ஷோ..”அஞ்சரைக்குள்ள வண்டி” க்கு அஞ்சு மணிக்கெல்லாம் போய் எடத்த போட்டிடுவான்..வந்து படத்தை நம்ம ஆளுங்க விமர்சனம் பண்றது மாதிரி பிச்சு உதறுவான்..அந்த காட்சியல லைட்டிங்க சரியில்லடா..இந்த காட்சியில எடிட்டிங்க சரியில்லடான்னு குத்தம் வேற…அவனோட ஒரே ஆதங்கம் பிட் படத்த சட்டுன்னு முடிச்சிறாயிங்கன்னுதான்..

ஒரு நாள் “பாவம் கொடூரன்” னு பலான படம் போட்டுருந்தாயிங்க..கிளாஸ் ரூமே பரபரப்பாயிடுச்சு…அவனவன் காசு கலெக்ட் பண்ண ஆரம்பிச்சிட்டாயிங்க..ஒரு வாரம் அவனவன் மந்திரிச்சி விட்டமாதிரி இருந்தாயிங்க..அடுத்த வாரம் தான் அது நடந்தது..கணக்கு வாத்தியார் ஒரு குண்டைப் போட்டார்..

“திருட்டு பசங்களா..பள்ளிக்காலத்துல படிக்காம, சீன் படமா பாக்குறீங்க..போன வாரத்துல ஒரு உளவாளி வைச்சு தியேட்டர் வெளியில நிக்க வச்சு யார் யார் வந்தாயிங்க நோட் பண்ணிட்டேன்..அவிங்களெல்லாம் மரியாதையா எழுந்து நிக்கணும்..இல்ல அப்படியே ஹெட்மாஸ்டர் கிட்ட போயிடும்..”

அவனவன் நடுங்கிட்டாயிங்க..ஒவ்வொருத்தனா எழுந்து நிக்க கடைசியில உக்கார்ந்து இருந்தது நானும், டேவிட்டும் தான்..அவிங்களையெல்லாம் கடிச்சு குதறிட்டாரு..வாத்தியார் போன பிறகு, நானும் டேவிட்டும் பெருமையா அவிங்களைப் பார்த்தோம்..சீன் சிங்காரம் எங்கிட்ட வந்தான்..

“டே..ராசா, மனுசயிங்களாடா..நீங்களெல்லாம்..”

“போடாங்க..இந்த கண்ராவியெல்லாம் எப்படித்தான் பாக்குறீங்களோ..”

“டே..ராசா..நீங்களெல்லாம் ஆம்பிளைங்களான்னே சந்தேகமா இருக்கு..ஆம்பிளையா இருந்தா இதெல்லாம் பார்க்கனும்டா..”

எனக்கு ரொம்ப பயமாப் போயிருச்சுண்ணே..

“டே சிங்காரம்..இதெல்லாம் தப்பில்லையாடா..”

“ராசா..இதெல்லாம் இந்த வயசில பார்க்காம தாத்தா ஆனப்பிறகா பார்க்கப் போற..ஒரு படம் பாரு..அப்புறம் பாரு உன் வாழ்க்கையே சேஞ்ச் ஆகிடும்..”

எனக்கும் ஆசையா இருந்தாலும் மனசோரம் பயமா இருந்துச்சு..டேவிட்டைப் பார்த்தேன்…

“டேவிட்..என்னடா ஒரு படம் பார்ப்போமாடா..”

அவன் என்னை விடக் காய்ஞ்சு கிடந்தான் போல..டக்குன்னு தலையாட்டிட்டான்..சீன் சிங்கராம் இதுல அனுபவசாலின்னால அவங்கிட்டயே உதவி கேட்டோம்..அடுத்த சனிக்கிழமை “திருட்டுப் புருசன்” ரீலிஸ். திருட்டுப் புருசனைத் திருட்டுத்தனமா பார்ப்பதாக திட்டம் வகுத்தோம்..

ஜரூரா சனிக்கிழமை 10 மணிக்கெல்லாம் கிளம்பிட்டேண்ணே..ஒரு தொப்பி போட்டுக்கிட்டு முகம் வெளியே தெரியாதபடி மறைச்சுக்கிட்டு கவுண்டர் பக்கம் போனேன்..சீன் சிங்காரம் பெருமையா நின்னுக்கிட்டு இருந்தான்..டேவிட் ஆளக் காணோம்..ஆளைத் தேடிக்கிட்டு இருந்தப்பா, ஒரு உருவம் என் முதுகை பிராண்டியது..யாருடான்னு பார்த்தா..துண்டை முக்காடு மாதிரிப் பார்த்துக்கிட்டு நம்ம டேவிட்..சீன் சிங்காரம் கடுப்பாயிடான்..

“டே..டேவிட்டு எனக்குன்னு இந்த தியேட்டர்ல ஒரு இமேஜ் இருக்கு..அதக் கெடுத்து என் மானத்தை வாங்காதே..முதல்ல துண்டைக் கழட்டுடா..”

டேவிட் துண்டைக் கழட்டிட்டு புதுப்பொண்ணு மாதிரி தலையக் குனிஞ்சுக்கிட்டான்..நான் சுத்தி முத்திப் பார்க்குறேன்..முக்காவாசி பல் போன தாத்தாங்கண்ணே..அப்புறம் என்னைய மாதிரி பள்ளிக்கூடம் படிக்கிரவயிங்க..ஒருத்தனெல்லாம் அப்பிடியே இன்டர்வியூல இருந்து வந்துருப்பான் போல..கோட், சூட்..பயோடேட்டா ஒன்னுதான் பாக்கி..எல்லார் முகத்துலயும் ஒரு எதிர்பார்ப்புடன் கூடிய வெட்கம்..அப்ப வேற நம்ம “ஷகீலா” கலைச்சேவையத் தொடங்கலையா..அவனவன் படம் பார்த்தா போதும்ன்ற மூடுல இருந்தாயிங்க..

கூட்டத்துல கஷ்டப்பட்டு டிக்கெட் வாங்கிட்டோம்..இருட்டுல நடக்குற படம்கிறதுனால தியேட்டரே அரை இருட்டா இருந்துச்சு..தட்டுத் தடுமாறி சீட்ல உக்கார்ந்து இருக்கோம்..நியூஸ் ரீல் போட்டாயிங்க..நம்ம சீன் சிங்காரம் விசில் அடிக்க ஆரம்பிச்சுட்டான்..எனக்கு திரை சரியா தெரியல..

“டே..சிங்காரம் முன்னாடி எவனோ ஒரு தாத்தா உக்கார்ந்து இருக்கான்டா..மறைக்குதுடா..”

“அட ராசா..கஷ்டப்பட்டு வந்துருக்கோம்டா…இந்த கிழவங்க தொல்லைத் தாங்க முடியலடா சாமி..இரு நான் சௌண்ட் கொடுக்குறேன்..”

“ஹலோ சார் கொஞ்சம் நகர்ந்து உக்காருங்க..மறைக்குதுல்ல..”

அவர்கிட்ட இருந்து ஒரு ரியாக்சனையும் காணோம்..நம்ம சிங்காரம் திரும்ப சௌண்ட் கொடுத்தான்..நோ ரெஸ்பான்ஸ்..அவ்வளவுதான் நம்ம சீன் சிங்காரம் ரௌடியாகிட்டான்..இந்த ஆளுக்கு இவ்வளவு திமிரான்னு கைய மடக்கிட்டு அவர் வழுக்கத் தலையில ஒரு கொட்டு வச்சான் பாருங்க..அந்த ஆளு அலறிக்கிட்டே திரும்பினான்..ஆத்தாடி..பார்த்தா நம்ம கணக்கு வாத்தியாரு..குலையே நடுங்கிடுச்சுண்ணே..பின்னங்கால் பிடரியிலடிக்க ஒரே ஓட்டம்..வீடு வந்துதான் நிப்பாட்டுண்ணே..

நைட் எல்லாம் தூக்கமே இல்லண்ணே..பயந்துக்கிட்டே கிளாசுக்கு போனேன்..கணக்கு வாத்தியார் வந்து இருந்தார்..போச்சுடா மாட்டுனோம்னு பயந்துக்கிட்டு இருந்தா மனுசன் எங்க பக்கம் திரும்பவே இல்லை..சமர்த்தா பாடம் நடத்திக்கிட்டு கிளம்பிப் போயிட்டார்..எனக்கு ரொம்ப ஆச்சர்யம்..சிங்கராத்துக்கிட்ட போனேன்..

“என்னடா சிங்காரம்..கணக்கு வாத்தி ஒன்னும் சொல்லலை..”

“ஆமா, நம்ம சீன் படம் பார்க்க போனா..அவர் அங்க என்ன கதாகாலாட்சேபமா பார்க்க வந்தார்..அதுதான் மனுசன் உக்கிப் போயிட்டாரு..நம்மளாவது இளவயசு..அவருக்கெல்லாம் சீன் படம் பார்க்குற வயசாடா இது..அதுல எங்களை மிரட்டுறது வேற..இப்பல்ல தெரியுது..அந்த ஆளு உளவாளி வைக்கலைன்னு..டெய்லி ஷோ பார்த்திருக்கான்டா..அவரு கணக்கு வாத்தியில்லடா..கணக்கு பண்ற வாத்திடா..”..

எங்களால் சிரிப்பை அடக்க முடியல..வருடங்கள் செல்ல, எனக்கு வேலை கிடைத்து சென்னையிலிருந்தேன்..ஒரு நாள் ரோட்டில் சீன் சிங்காரத்தை பார்த்தேன்..ஆச்சர்யமா இருந்துச்சு..

“டே..சீன் சிங்காரம்..எவ்வளவு நாளா ஆச்சு..உன்னைப் பார்த்து. என்னடா வேலைப் பார்க்குற..”

“டே ராசா..நல்லா இருக்கேன்டா..பிலிம் டிஸ்டிரிபூட்டரா இருக்கேன்டா..”

“சூப்பர்டா…என்ன படமெல்லாம் டிஸ்டிரிபியூட் பண்றடா..”

“வேறென்ன சீன் படந்தான்..”

----------------------------

ராசா..நீங்க சீன் படம் பார்த்தீங்களா..வெக்கமாயில்லன்னு பின்னூட்டம் போடுறதுக்கு முன்னாடி கீழ உள்ள பைபிள் வாசகத்த ஒரு தடவைப் படிச்சிருங்கண்ணே..

பைபிள் வாசகம் : உங்களில் ஒரு பாவமும் செய்யாதவன் இவள் மேல் முதற் கல்லை எறியட்டும்

ஹீ…ஹீ..சும்மாச்சுங்கண்ணே..ஏதாவது ஆபாசமா எழுதியிருந்தா திட்டிருங்கண்ணே..நம்மெல்லாம் தாயா புள்ளையாத் தானே பழகிட்டு இருக்கோம்..))))

47 comments:

Anonymous said...

SIRACCO padam pathurukeengala?
Raja

அப்பாவி முரு said...

என்ன ராஜா, எந்த தியேட்டன்னு சொல்லாம விட்டுட்டீங்களே?

சக்தியா? அபிராமியா?

இராகவன் நைஜிரியா said...

ம்... நடக்கட்டும்... சிரிச்சு சிரிச்சு வயிறு வலிச்சதுதான் மிச்சம்..

இராகவன் நைஜிரியா said...

// அப்பாவி முரு said...
என்ன ராஜா, எந்த தியேட்டன்னு சொல்லாம விட்டுட்டீங்களே?

சக்தியா? அபிராமியா? //

ஓ தம்பி மதுரையில இதத்தான் பண்ணிகிட்டு இருந்தீயளா?

அப்பாவி முரு said...

//இராகவன் நைஜிரியா said...
// அப்பாவி முரு said...
என்ன ராஜா, எந்த தியேட்டன்னு சொல்லாம விட்டுட்டீங்களே?

சக்தியா? அபிராமியா? //

ஓ தம்பி மதுரையில இதத்தான் பண்ணிகிட்டு இருந்தீயளா?//

மருதை இல்லீண்ணா, திண்டுக்கலு...

கலையரசன் said...

கணக்கு வாத்திய படத்தோட கடைசியில பாத்தீங்களா? இல்ல பிட்டு ஓட்டும் போது பாத்தீங்களா?
ஏன்னா.. வரலாறு ரொம்ப முக்கியம் அமைச்சரே!!

எம்.எம்.அப்துல்லா said...

நம்ம 11, 12 ஆம் வகுப்பு படிக்கும் போதுதான்..அப்பத்தான் நம்ம பசங்களுக்கு ஞானதோயம் பொறக்கும்ணே

//

உங்க ஊர் பயலுக ரொம்ப நல்லவைய்ங்கண்ணே. பதினொன்னாப்பு படிக்கையில்தான் சாமி படத்துக்கு போய்ருக்காய்ங்க :)

எம்.எம்.அப்துல்லா said...

இதே கதைண்ணே எங்கூர்ல...அவசானத்து இராத்திரி படத்துக்கு, கணக்கு வாத்தியாருக்கு பதிலா எங்களுக்கு எங்ககூட வந்திருந்த ஃபிரண்டோட அப்பா.

எம்.எம்.அப்துல்லா said...

SIRACCO padam pathurukeengala?

//

குதிரைய மறக்க முடியுமா அனானி??

எம்.எம்.அப்துல்லா said...

//பைபிள் வாசகம் : உங்களில் ஒரு பாவமும் செய்யாதவன் இவள் மேல் முதற் கல்லை எறியட்டும்

//

நல்லவேளை...”இவள்”னு போட்டுருக்கு. அதுக்கு பதிலா “இவன்”னு போட்டு இருந்தா நான் உங்க மேல கல்லுவுட்டுருப்பேன்.

இஃகிஃகிஃகிஃகிஃகி :)

S.A. நவாஸுதீன் said...

ரொம்ப கலகலப்பா எழுதி இருக்கீங்க ராசா. உங்களுக்குன்னு ஒரு தனி ஸ்டைல் Maintain பண்றது சூப்பர்.

taaru said...

//அப்ப வேற நம்ம “ஷகீலா” கலைச்சேவையத் தொடங்கலையா..//
நெம்ப வருசத்துக்கு முன்னாடி +1 & +2 படிச்சு இருப்பீக போல....

//டேவிட் துண்டைக் கழட்டிட்டு புதுப்பொண்ணு மாதிரி தலையக் குனிஞ்சுக்கிட்டான்..நான் சுத்தி முத்திப் பார்க்குறேன்..முக்காவாசி பல் போன தாத்தாங்கண்ணே..//
அப்பெல்லாம் எவன பாத்தாலும் நம்மள பாத்து ஒரு நக்கல்ஸ் லுக் விடுற மாறியே தோணும்... அந்த பய உணர்ச்சிய நல்லாவே விவரமா சொல்லி இருக்கலாம்.. அத பத்தி நெறையா சொல்லுவீகனு எதிர்பார்த்தேன்..

ஒன்னு ரெண்டுக்கு மேல பாக்க வாய்ப்பு கிடைக்கல.. இல்லனா இந்த பதிவு இன்னும் சுவாரசியமா இருந்து இருக்கும்...

better luck next time [நன் எனக்கு சொன்னேன்..]

Anonymous said...

எம்.எம்.அப்துல்லா said...

SIRACCO padam pathurukeengala?

//

குதிரைய மறக்க முடியுமா அனானி??

//

Great Abdullah!

By
Raja

Anonymous said...

அப்பாவி முரு said...

என்ன ராஜா, எந்த தியேட்டன்னு சொல்லாம விட்டுட்டீங்களே?

சக்தியா? அபிராமியா?
///

Not now, currently those who are in 30++ aged, knows about SIRACCO. In Trichy, this movie was released in almost all theaters for few days.
Of course, they made good collection. Not sure about the popularity in other cities.
Raja

Anonymous said...

nalla eludhi irukreenga.. adhulayum NOTE : nachunu iruku..:)

Cable சங்கர் said...

இப்பல்லாம் அவனவன் ஆறாவதுலேயே பார்க்க ஆரம்பிச்சிட்டானுவ..

உடன்பிறப்பு said...

ராசாண்ணே உங்க வலைப்பக்க ஓரத்தில் வரும் விளம்பரம் கூட ரொம்ப செக்ஸியா இருக்குண்ணே

இளைய கவி said...

தல ஒரு சின்ன மேட்டரு உங்கள கேக்காம உங்களோட ஒரு பதிவுக்கு தொடுப்பு குடுத்திருக்கேன் என்னோட வலைப்பூல.. தயவு செய்து தப்பா நினைக்காதீங்க தல. என்னோட பதிவு முகவரி http://dailycoffe.blogspot.com/2009/07/blog-post_16.html

அவிய்ங்க ராசா said...

//////////////////////
Anonymous said...
SIRACCO padam pathurukeengala?
Raja
//////////////////////
மொராக்கோ தான் பார்த்திருக்கேன்..வேர்ல்ட் மேப்ல

அவிய்ங்க ராசா said...

//////////////////////////
15 July, 2009 8:37 PM
அப்பாவி முரு said...
என்ன ராஜா, எந்த தியேட்டன்னு சொல்லாம விட்டுட்டீங்களே?

சக்தியா? அபிராமியா?
15 July, 2009 8:51 PM
/////////////////////
பயத்துல மறந்திடிச்சு..அபிராமி தான் நினைக்கிறேன்

அவிய்ங்க ராசா said...

///////////////////
15 July, 2009 8:51 PM
இராகவன் நைஜிரியா said...
ம்... நடக்கட்டும்... சிரிச்சு சிரிச்சு வயிறு வலிச்சதுதான் மிச்சம்..
15 July, 2009 9:00 PM
/////////////////////
வருகைக்கு நன்றி ராகவன்

அவிய்ங்க ராசா said...

///////////////////
ரெட்மகி said...
;)
15 July, 2009 9:58 PM
//////////////
நன்றி ரெட்மகி

அவிய்ங்க ராசா said...

///////////////////
கலையரசன் said...
கணக்கு வாத்திய படத்தோட கடைசியில பாத்தீங்களா? இல்ல பிட்டு ஓட்டும் போது பாத்தீங்களா?
ஏன்னா.. வரலாறு ரொம்ப முக்கியம் அமைச்சரே!!
15 July, 2009 10:16 PM
///////////////////
ஹா..ஹா..இதுலயும் எனக்கு அதிர்ஷ்டம் இல்லண்ணே..நியூஸ் ரீல் போடுறப்பதான் இது நடந்தது

தினேஷ் said...

அண்ணே உமக்கூ கணக்கு வாத்தியார் , எனக்கு தலைமை ஆசிரியர் உடன் பார்த்த அனுபவம்னே..

அவிய்ங்க ராசா said...

/////////////////////
வஎம்.எம்.அப்துல்லா said...
நம்ம 11, 12 ஆம் வகுப்பு படிக்கும் போதுதான்..அப்பத்தான் நம்ம பசங்களுக்கு ஞானதோயம் பொறக்கும்ணே

//

உங்க ஊர் பயலுக ரொம்ப நல்லவைய்ங்கண்ணே. பதினொன்னாப்பு படிக்கையில்தான் சாமி படத்துக்கு போய்ருக்காய்ங்க :)
15 July, 2009 10:51 PM
எம்.எம்.அப்துல்லா said...
இதே கதைண்ணே எங்கூர்ல...அவசானத்து இராத்திரி படத்துக்கு, கணக்கு வாத்தியாருக்கு பதிலா எங்களுக்கு எங்ககூட வந்திருந்த ஃபிரண்டோட அப்பா.
15 July, 2009 10:53 PM
எம்.எம்.அப்துல்லா said...
SIRACCO padam pathurukeengala?

//

குதிரைய மறக்க முடியுமா அனானி??
15 July, 2009 10:54 PM
எம்.எம்.அப்துல்லா said...
//பைபிள் வாசகம் : உங்களில் ஒரு பாவமும் செய்யாதவன் இவள் மேல் முதற் கல்லை எறியட்டும்

//

நல்லவேளை...”இவள்”னு போட்டுருக்கு. அதுக்கு பதிலா “இவன்”னு போட்டு இருந்தா நான் உங்க மேல கல்லுவுட்டுருப்பேன்.

இஃகிஃகிஃகிஃகிஃகி :)
15 July, 2009 10:57 PM
//////////////////////
வருகைக்கு நன்றி அப்துல்லா அண்ணே..ஒரு படம் கூட பார்த்தது இல்லையா?? அம்புட்டு நல்லவராண்ணே நீங்க??

அவிய்ங்க ராசா said...

//////////////////////
S.A. நவாஸுதீன் said...
ரொம்ப கலகலப்பா எழுதி இருக்கீங்க ராசா. உங்களுக்குன்னு ஒரு தனி ஸ்டைல் Maintain பண்றது சூப்பர்.
15 July, 2009 11:33 PM
//////////////////
வருகைக்கு நன்றி நவாஸ்

அவிய்ங்க ராசா said...

/////////////////////////
Anonymous said...
அப்பாவி முரு said...

என்ன ராஜா, எந்த தியேட்டன்னு சொல்லாம விட்டுட்டீங்களே?

சக்தியா? அபிராமியா?
///

Not now, currently those who are in 30++ aged, knows about SIRACCO. In Trichy, this movie was released in almost all theaters for few days.
Of course, they made good collection. Not sure about the popularity in other cities.
Raja
16 July, 2009 2:06 AM
Anonymous said...
nalla eludhi irukreenga.. adhulayum NOTE : nachunu iruku..:)
16 July, 2009 2:49 AM
//////////////////////////
வருகைக்கு நன்றி அனானி, ராஜா

அவிய்ங்க ராசா said...

/////////////////////
Cable Sankar said...
இப்பல்லாம் அவனவன் ஆறாவதுலேயே பார்க்க ஆரம்பிச்சிட்டானுவ..
16 July, 2009 2:58 AM
///////////////////////

ஆஹா..அப்பிடியாண்ணே..நாடு அம்புட்டு திருந்திருச்சா?

அவிய்ங்க ராசா said...

//////////////////////
16 July, 2009 2:58 AM
உடன்பிறப்பு said...
ராசாண்ணே உங்க வலைப்பக்க ஓரத்தில் வரும் விளம்பரம் கூட ரொம்ப செக்ஸியா இருக்குண்ணே
16 July, 2009 3:52 AM
/////////////////////
வருகைக்கு நன்றி உடன்பிறப்பு அண்ணே…கஷ்டப்பட்டு எழுதி இப்படி ஆகிடுச்சே..:))

அவிய்ங்க ராசா said...

///////////////////
இளைய கவி said...
தல ஒரு சின்ன மேட்டரு உங்கள கேக்காம உங்களோட ஒரு பதிவுக்கு தொடுப்பு குடுத்திருக்கேன் என்னோட வலைப்பூல.. தயவு செய்து தப்பா நினைக்காதீங்க தல. என்னோட பதிவு முகவரி http://dailycoffe.blogspot.com/2009/07/blog-post_16.html
16 July, 2009 4:28 AM
///////////////////////

வருகைக்கு நன்றி அண்ணே..அது என் பாக்கியம்ணே..கண்டிப்பா போட்டுக்குங்க

அவிய்ங்க ராசா said...

/////////////////////
சூரியன் said...
அண்ணே உமக்கூ கணக்கு வாத்தியார் , எனக்கு தலைமை ஆசிரியர் உடன் பார்த்த அனுபவம்னே..
16 July, 2009 5:18 AM
/////////////////////
வருகைக்கு நன்றி சூரியன்..எல்லா ஊரிலயும் இப்படித்தான் இருப்பாயிங்க போல

பீர் | Peer said...

இந்த பலான படம் பலான படம்ன்னு சொல்றீங்களே... அப்டின்னா என்ன?

உண்மைத்தமிழன் said...

ராஜா

திண்டுக்கல்லு செயிண்ட் மேரீஸ்லதான் நானும் படிச்சேன்.!

நம்ம ஸ்டூடண்ட்டா நீங்க..! அப்ப சரிதான்..!

நான் படிக்கும்போது என்.வி.ஜி.பி.யும், கணேஷ் தியேட்டரும்தான் பிட்டு ஓட்டினாங்க..!

நாங்க படிச்சு முடிச்சிட்டு சும்மா திரியும்போதுதான் அபிராமியும், சக்தியும் ஓட்டுனாங்க..!

ஸோ.. தம்பியா நீங்க..!

நல்லாயிருங்க..!

kishore said...

ம்ம்... ரொம்ப லேட்டா தான் வயசுக்கு வந்துஇருக்கீங்க போல இருக்கு...

kishore said...

ஓ! நடுவுல பிட் போட்டு படம் ஓட்டுனா அது தான் பலான படமா? இது தெரியாம நான் ஒரு 100, 120 தடவ பார்துடனே...

jothi said...

//திண்டுக்கல்ல செயிண்ட் மேரிஸ்ல 12ம் வகுப்பு படிச்சேண்ணே…//

அண்ணே, வாங்கண்ணே,.. நான் MSP,..

jothi said...

//என்ன ராஜா, எந்த தியேட்டன்னு சொல்லாம விட்டுட்டீங்களே?

சக்தியா? அபிராமியா?//

//ராஜா

திண்டுக்கல்லு செயிண்ட் மேரீஸ்லதான் நானும் படிச்சேன்.!

நம்ம ஸ்டூடண்ட்டா நீங்க..! அப்ப சரிதான்..!

நான் படிக்கும்போது என்.வி.ஜி.பி.யும், கணேஷ் தியேட்டரும்தான் பிட்டு ஓட்டினாங்க..!

நாங்க படிச்சு முடிச்சிட்டு சும்மா திரியும்போதுதான் அபிராமியும், சக்தியும் ஓட்டுனாங்க..!

ஸோ.. தம்பியா நீங்க..!

நல்லாயிருங்க..!//

அடடா, நம்ம ஊரு கூட்டம் நிறைய தேறும் போல,..

வாங்கண்ணே எல்லோரும் ஒட்டுக்கா மதுரைக்கு போய் "மது" அருந்திட்டு வரலாம். பதிவர் சந்திப்பு காலை காட்சிலயா? மதியக்காட்சியலயா??

அவிய்ங்க ராசா said...

//////////////////////
16 July, 2009 5:29 AM
பீர் | Peer said...
இந்த பலான படம் பலான படம்ன்னு சொல்றீங்களே... அப்டின்னா என்ன?
16 July, 2009 7:46 AM
//////////////////////
இன்னும் குழந்தைப் புள்ளையா இருக்கிறீங்களே அண்ணே..இப்படி இருக்காதிங்கண்ணே…ஊருக்குள்ள ஏமாத்திப் புடுவாயிங்க..))

அவிய்ங்க ராசா said...

////////////////////////
16 July, 2009 7:46 AM
உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ராஜா

திண்டுக்கல்லு செயிண்ட் மேரீஸ்லதான் நானும் படிச்சேன்.!

நம்ம ஸ்டூடண்ட்டா நீங்க..! அப்ப சரிதான்..!

நான் படிக்கும்போது என்.வி.ஜி.பி.யும், கணேஷ் தியேட்டரும்தான் பிட்டு ஓட்டினாங்க..!

நாங்க படிச்சு முடிச்சிட்டு சும்மா திரியும்போதுதான் அபிராமியும், சக்தியும் ஓட்டுனாங்க..!

ஸோ.. தம்பியா நீங்க..!

நல்லாயிருங்க..!
16 July, 2009 7:46 AM
////////////////////////
ஆஹா..நம்ம ஊருக்காரரா நீங்க..இவ்வளவு பாசமா இருக்குறப்பயே நினைச்செண்ணே..

அவிய்ங்க ராசா said...

/////////////////////////
16 July, 2009 8:40 AM
KISHORE said...
ஓ! நடுவுல பிட் போட்டு படம் ஓட்டுனா அது தான் பலான படமா? இது தெரியாம நான் ஒரு 100, 120 தடவ பார்துடனே...
16 July, 2009 8:47 AM
///////////////////////
100, 200 வாட்டியா..ஆத்தாடி…)))

அவிய்ங்க ராசா said...

/////////////////
jothi said...
//என்ன ராஜா, எந்த தியேட்டன்னு சொல்லாம விட்டுட்டீங்களே?

சக்தியா? அபிராமியா?//

//ராஜா

திண்டுக்கல்லு செயிண்ட் மேரீஸ்லதான் நானும் படிச்சேன்.!

நம்ம ஸ்டூடண்ட்டா நீங்க..! அப்ப சரிதான்..!

நான் படிக்கும்போது என்.வி.ஜி.பி.யும், கணேஷ் தியேட்டரும்தான் பிட்டு ஓட்டினாங்க..!

நாங்க படிச்சு முடிச்சிட்டு சும்மா திரியும்போதுதான் அபிராமியும், சக்தியும் ஓட்டுனாங்க..!

ஸோ.. தம்பியா நீங்க..!

நல்லாயிருங்க..!//

அடடா, நம்ம ஊரு கூட்டம் நிறைய தேறும் போல,..

வாங்கண்ணே எல்லோரும் ஒட்டுக்கா மதுரைக்கு போய் "மது" அருந்திட்டு வரலாம். பதிவர் சந்திப்பு காலை காட்சிலயா? மதியக்காட்சியலயா??
16 July, 2009 10:28 AM
/////////////////////
ஆத்தி..நம்ம ஊருக்கார பயபுள்ளைங்க எம்புட்டு பேரு இருக்கோம்..சந்தோசம்ணே..மதுரை வந்தா, கண்டிப்பா சந்திப்போம் அண்ணே..

sikkandar said...

seenoo seen..... super seen

ராமய்யா... said...

அண்ணே நானும் மதுரைக்காரன் தான்னே.. ஆனா எனக்கு என்னமோ மலையாளப் படத்துல அவ்ளோ இடுபாடு இல்லன்னே.. அட அதுகுள்ள என்ன நல்லவேன்ன்னு நம்பீராதிக.. எனக்கு இங்கிலீஷ் தான்ணே புடிக்கும்... கதையோட கருத்தாழத்த (நல்லா கவனமா படிக்கனும்.. தப்பா புரிஞ்சிகிட்டா கம்பேனி பொருப்பாகாது) பார்த்தா அது தனி கிக்குண்ணே..

அப்புறம் நான் ஆரம்பிச்சது பத்தாவதுலண்ணே...

ஹி ஹி..

Saravana said...

Super Raja. Ippothan konja naala padikka aaranbichurukken. Nalla ( namma) thamil.
Idhae kadhayilae kanakka thookkittu Biology vaathi-ya podunga. adhan namma kadha.

கபிலன் said...

"ராசா..நீங்க சீன் படம் பார்த்தீங்களா..வெக்கமாயில்லன்னு பின்னூட்டம் போடுறதுக்கு முன்னாடி கீழ உள்ள பைபிள் வாசகத்த ஒரு தடவைப் படிச்சிருங்கண்ணே..

பைபிள் வாசகம் : உங்களில் ஒரு பாவமும் செய்யாதவன் இவள் மேல் முதற் கல்லை எறியட்டும்"

இந்த டீலிங்க் எனக்கு ரொம்ப புடிச்சுருக்கு! :)

கைப்புள்ள said...

படிச்சி முடிச்சிட்டு இன்னும் சிரிச்சுக்கிட்டு இருக்கங்கண்ணே. ரொம்ப அருமையா எழுதிருக்கீங்கண்ணே.
:))

Anonymous said...

super
something missing......
when u saw the full film wit whom

Post a Comment