Saturday 11 July, 2009

தயவு செய்து எழுதுறதை நிறுத்திவிடு ராசா.

சனிக்கிழமைன்னாலே, தூக்கம்தான்..நல்லா போர்வைய காலு வரைக்கும் இழுத்துப் போர்த்தி, தூங்கிப் பாருங்க….நான் அதுக்கு அடிமைண்ணே..அப்படிப் தூங்குறப்ப யாராவது கத்திய வச்சிக் குத்தினாலும், கொசு கடிக்குதுன்னு தட்டி விட்டு தூங்குவண்ணே..

“என்னங்க..எந்திரிங்க..இன்னைக்கு அத்தை, மாமா, இன்டெர்னெட்ல வெப்கேம்ல வர்றேன் சொன்னாங்கல்ல..டைம் ஆகிடுச்சு..”

“அய்யோ..ஆமா..கொஞ்சம் முன்னாடியே எழுப்பி விட்டிருக்கலாம்ல..குளிச்சிட்டாவது வந்திருப்பேன்ல, பார்த்து பயந்து கியந்து போகப் போறாங்க”

“அட்லீஸ்ட் மூஞ்சியாவது கழுவிட்டு வாங்க..வெப்கேம் பயந்துக்கிட்டு ஆன் ஆகாம இருந்துரப் போகுது..”

“உனக்கு என்னை விட நக்கல் ஜாஸ்திதாண்டி.”

“உங்க பொண்டாட்டிதான..அதுதான்..”

“சரி, அந்த போன் அடிக்குது பாரு..யாருன்னு பாரு..”

“அம்மாங்க”

“கொண்டா இங்கே..அம்மா, நல்லா இருக்கீங்களாம்மா..எங்க இருக்கீங்க ..பிரௌசிங்க சென்டர்லயா?”

“தம்பி ராசா..எப்படிப்பா இருக்க..குரலைக் கேட்டு ஒரு வாரம் ஆச்சு..ஆமாப்பா, இங்க கம்ப்யூட்டர் கடையிலதான்பா இருக்கேன்..போன வாரம்தான் இந்த கடையத் தொறந்திருக்காயிங்கப்பா..இரு இங்க இருக்குற தம்பிக்கிட்ட கொடுக்கிறேன்”

“சார், எங்க அம்மாவுக்கு கம்யூட்டர் பத்தி சரியா தெரியாது…நீங்க ஒன்னு பண்ணுங்க உங்க ஜீசாட் ஐ ஓபன் பண்ணிக் கொடுங்க..நான் வெப்கேமை இன்வைட் பண்றேன்”

“சாரி சார்..எங்களுக்கு யாகூ ஐ.டி தான் இருக்கு..நான் வேணா ஓப்பன் பண்ணிக் கொடுக்கிறேன்..ஆனா என்னால கூடவே இருக்க முடியாது..நாங்க ஜெராக்ஸ் மிஷின் வேற வைச்சிருக்கோம்..பிசினஸ் பாதிக்கும்..”

“சரி சார். கனெக்ட் பண்ணி, இன்வைட் பண்ணுங்க..”

“ம்..கனெக்ட் ஆகுது..வெப்கேம் இன்வைட் பண்ணுங்க..அப்படியே ஹெட்செட்டை அம்மாக்கிட்ட குடுங்க”

“அம்மா கேக்குதா..”

“தம்பி ராசா கேக்குதா..எனக்கு கேக்குதுப்பா..பிரௌசிங் சென்டர் தம்பி, என் பையன் பேசுறது நல்லா கேக்குதுப்பா..என் பையன் அமெரிக்காவுல இருக்கான்..மருமகளும் அங்கதான் இருக்கா..எங்க குடும்பத்துல யாரும் காலேஜ் வாசப்படிகூட மிதிச்சதுல்ல..இவன் மட்டும்தான் படிச்சு, அமெரிக்காவுக்கு போயிருக்கான்”

“ஐயோ அம்மா, ராசா பேசுறேன்..எத்தனை பேருக்கிட்டதான் சொல்லுவீங்க..சோழவந்தான்ல நீங்க சொல்லாத ஆளே இருக்க மாட்டாங்க..”

“எனக்கு பெருமைதான்டா ராசா..”

“அம்மா, என்னைப் பார்க்க முடியுதா..”

“பார்க்க முடியுதுப்பா..என்னப்பா இப்படி இளைச்சுப் போயிட்ட..ஒழுங்கா சாப்பிட மாட்டிங்குறயா?”

“ஆமா..இங்க வந்து 10 கிலோ ஏறிட்டேன்..இதுதான் எங்க ரூம் பாருங்க..”

“தம்பி ராசா..ஒன்னுமே தெரியலேப்பா..கருப்பாத்தான் தெரியுது”

“ஐயோ..டிஸ்கனெக்ட் ஆயிடுச்சுன்னு நினைக்கிறேன்..நீங்க ஒன்னு பண்ணுங்க..உங்க பக்கத்து இருக்குற மௌஸை எடுத்து அங்க “யாஹூ” ன்னு ஒரு வின்டோ இருக்கும்”

“ஏம்பா, தம்பி எனக்கு என்னப்பா தெரியும்..இரு பிரௌசிங்க சென்டர் தம்பிய கூப்பிடுறேன்..”

“தம்பி, தம்பி, இங்க வாங்க..ஏதோ ஆயிடுச்சு..”

“சார், நான் ஏற்கவனே உங்களுக்கு சொன்னேன்..எனக்கு ஜெராக்ஸ் மிஷின் வேற இருக்கு..பிசினஸ் பாதிக்கும்..என்னால இதுக்கு மேல ஹெல்ப் பண்ண முடியாது..”

“என்ன தம்பி, ஒரே ஊர்க்காரனா இருந்துக்கிட்டு இந்த உதவி கூட பண்ண மாட்டிங்குறீங்க..”

“சார், இதுதான் கடைசி, திரும்ப கனெக்ட் பண்றேன்..இதுக்கு மேல என்னால வர முடியாது..”

“சரி, ஹெட்செட்டை அம்மாக்கிட்ட குடுங்க..”

“அம்மா, தெரியுதா..இருங்க என் ரூமை சுத்திக் காமிக்கிறேன்..”

“உன்னைப் பார்த்ததே எனக்குப் போதும்பா தம்பி ராசா..இதுவே ஒரு வாரத்துக்குத் தாங்கும்பா..அப்பாக்கிட்ட பேசுப்பா..கோவிச்சுக்கப் போறாரு..என்னங்க இந்தாங்க உங்க மகன் கிட்ட பேசுங்க..தம்பி, அப்பா காது மிசினை எடுத்துட்டு வர மறந்துட்டாரு..கொஞ்சம் சத்தமா பேசுப்பா..”

“அப்பா..நல்லா இருக்கீங்களாப்பா..என்னை பார்க்க முடியுதாப்பா..”

“ராசா.நல்லா இருக்கேம்பா..சந்தோசமா இருக்குப்பா..இது போதும்பா..ரெண்டு வருசம் முன்னாடிப் பார்த்தது..கண்ணுக்குள்ளயே நிக்கிறப்பா..எப்ப இங்க வர்றப்பா..”

“தெரியிலப்பா..ப்ராஜெக்ட் எப்ப முடியுதுன்னு தெரியல..எனக்கும் உங்களப் பார்க்க ஆசையா இருக்குப்பா..சீக்கிரம் வந்தடவா”

“வந்துடுப்பா தம்பி..”

“ஏங்க..மூத்த மகன் போன வாரம்தான திட்டுனான்..இப்பத்தான் அமெரிக்கா போகுறது கஷ்டாமாமே..நம்ம இன்னும் எத்தனை நாளைக்கோ..பையன் எதிர்காலம் முக்கியங்க..”

“கரெக்ட்தான்..தம்பி ராசா..அம்மா சொல்லுறதுதான் கரெக்ட்..நான் தெரியாம சொல்லிட்டேன்..அவசரப்பட்டு வந்துறாதேப்பா..எங்களைப் பத்தி நீ கவலைப் பட வேணாம்..நாங்க எல்லாம் வாழ்ந்து முடிச்சவங்க..இன்னைக்கோ, நாளைக்கோ..”

“ஏங்க..பிள்ளைக்கிட்ட போய் இப்படி சொல்லிக்கிட்டு..”

“நீ…மெதுவா…வாப்பா..”

“என்னங்க…என்ன சிள்ளைப்புள்ள மாதிரி அழுதுக்கிட்டு..கடையில எல்லாரும் பார்க்குறாங்கள்ள..கண்ணைத் துடைங்க..”

“அப்பா..கவலைப்படாதிங்கப்பா..நான் அங்க வர்றப்ப எல்லாரும் இருப்பீங்க..இருங்க உங்க மருமக ஏதோ பேசனும்மா..தெரியுதா..”

“ஒன்னும் தெரியிலயேப்பா..கருப்பா ஆயிடுச்சு..”

“கடவுளே..திரும்பவும் டிஸ்கனெக்ட் ஆயிடுச்சு..நீங்க அந்த பிரௌசிங்க சென்டர் தம்பியக் கூப்பிடுங்க..”

“வேணாம்பா தம்பி ராசா..அவரைத் தொந்தரவு பண்ண வேணாம்..இது பார்த்ததே, எங்களுக்கு போதும்பா..இனிமே நாங்க கவலை இல்லாம் இருப்போம்….நல்லா வேலைப் பாரு ராசா..அம்மா அப்பா, உனக்காக வேண்டிக்கிறோம்..அப்பாவும் அம்மாவும் போனவாரம் உனக்காக சாப்பிடாம கோவிலுக்கு விரதம் இருந்தோம்….அம்மா பக்கத்துல இல்லயேன்னு கவலைப்படாதே..நான் எப்பவுமே உனக்காக சாமிக்கிட்ட வேண்டிக்குறேன்..”

இதுக்குமேல என்னால அவுங்களோட பேச முடியலண்ணே..ஹெட்செட்டை தூக்கி எறிஞ்சுட்டு வேற ரூமுக்கு போய் அழுதுட்டேன்..என்ன மாதிரியான அன்புண்ணே அது..தன் உசிரையே கொடுத்து என்னைப் படிக்க வைச்சு, கண்கலங்க ஏர்போர்ட்ல நின்னு, கையில கொஞ்சப் பணத்தை திணிச்சு, என்னைக் கட்டிப்பிடிச்சு அழுதாங்க பாருங்க..உண்மையான அன்புண்ணே..எங்க அம்மாவுக்கும், அப்பாவுக்கும் 75 வயசு ஆகுதுண்ணே….என்னைப் பார்க்கனும்னு ஆசை இருந்தாலும், என்னோட எதிர்காலத்துக்காக வரவேணாம்னு சொல்லுறாயிங்க பாருங்க..அம்மா, அப்பா கடவுள் கொடுத்த வரம்னே..அவிங்களை கண்கலங்காம வச்சுங்கங்கண்ணே..புண்ணியாமாப் போகும்….

அப்படியே..கண்ணாடியில் என்னைப் பார்த்தேன்..என்ன ஜென்மம் நான்..காசுக்காக பெத்த அம்மாவை, அப்பாவை பார்க்க முடியாமல் கையறு நிலையில் நிற்கிறேனே..லட்ச, லட்சமா சம்பாதிச்சு ஊருக்குப் போய் அம்மா, அப்பா இல்லாம அதைத் தொட்டால் கூடப் பாவமாப் போகுமே….என் மனசாட்சி கண்ணாடி முன் நின்று சொல்லியது….

“தயவு செய்து எழுதுறதை நிறுத்திவிடு ராசா..செத்துப் போய்விடு இந்தப் பாவக் காசை சம்பாதிக்கிறதுக்கு…”


36 comments:

நாமக்கல் சிபி said...

//“தயவு செய்து எழுதுறதை நிறுத்திவிடு ராசா..செத்துப் போய்விடு இந்தப் பாவக் காசை சம்பாதிக்கிறதுக்கு…”//

:((

S.A. நவாஸுதீன் said...

ரொம்ப பீலிங்கா இருக்கு ராசா. நெகிழ்ச்சியான பதிவு.

S.A. நவாஸுதீன் said...

ரொம்ப பீலிங்கா இருக்கு ராசா. நெகிழ்ச்சியான பதிவு.

வினோத் கெளதம் said...

:(

Jaleela Kamal said...

ரொம்ப பீலிங் இத படிச்சிட்டு அழுகைதான் வருது

♫சோம்பேறி♫ said...

pch.. :-(

மணிகண்டன் said...

ராஜா, செண்டிமெண்டல் காட்சிகள் அருமையா எழுதறீங்க. சீக்கிரமே தமிழ்மண நட்சத்திரம் ஆக வாழ்த்துக்கள். டாப்பிகல் தலைப்பு வேற.

அப்துல்மாலிக் said...

நிச்சயம் கண்கள் கலங்கியது

வெளிநாட்டில் வாழும் எல்லோருக்கும் பொருந்தும் பதிவு

சோ டச்சிங்

அப்பாவி முரு said...

//“தயவு செய்து எழுதுறதை நிறுத்திவிடு ராசா..செத்துப் போய்விடு இந்தப் பாவக் காசை சம்பாதிக்கிறதுக்கு…”//

ராஜா என்ன இது?

இதைத்தான வயசான அப்பா - அம்மா ஆசைப்பட்டாங்க?

அவிய்ங்க ராசா said...

/////////////////////
நாமக்கல் சிபி said...
//“தயவு செய்து எழுதுறதை நிறுத்திவிடு ராசா..செத்துப் போய்விடு இந்தப் பாவக் காசை சம்பாதிக்கிறதுக்கு…”//

:((
11 July, 2009 12:24 AM
//////////////////////
நன்றி சிபி...

அவிய்ங்க ராசா said...

///////////////
S.A. நவாஸுதீன் said...
ரொம்ப பீலிங்கா இருக்கு ராசா. நெகிழ்ச்சியான பதிவு.
11 July, 2009 12:42 AM
///////////////////
வருகைக்கு நன்றி நவாஸ்

அவிய்ங்க ராசா said...

/////////////////////
வினோத்கெளதம் said...
:(
11 July, 2009 12:48 AM
/////////////////////

நன்றி வினோத்.........

அவிய்ங்க ராசா said...

///////////////////////
Jaleela said...
ரொம்ப பீலிங் இத படிச்சிட்டு அழுகைதான் வருது
11 July, 2009 1:16 AM
///////////////////////
நன்றி ஜலீலா..

அவிய்ங்க ராசா said...

//////////////
♫சோம்பேறி♫ said...
pch.. :-(
11 July, 2009 1:45 AM
////////////////

நன்றி சோம்பேறி

அவிய்ங்க ராசா said...

///////////////////////
11 July, 2009 1:45 AM
மணிகண்டன் said...
ராஜா, செண்டிமெண்டல் காட்சிகள் அருமையா எழுதறீங்க. சீக்கிரமே தமிழ்மண நட்சத்திரம் ஆக வாழ்த்துக்கள். டாப்பிகல் தலைப்பு வேற.
11 July, 2009 1:48 AM
/////////////////////
நன்றி மணி..அதுக்கெல்லாம் பிரபல பதிவரா இருக்கனும்..நம்ம எல்லாம் சின்னப் பசங்கதான..

அவிய்ங்க ராசா said...

///////
அபுஅஃப்ஸர் said...
நிச்சயம் கண்கள் கலங்கியது

வெளிநாட்டில் வாழும் எல்லோருக்கும் பொருந்தும் பதிவு

சோ டச்சிங்
11 July, 2009 1:51 AM
//////////////////
நன்றி அபு..வெளிநாட்டில் இருக்கும் அனைவரும் இதைக் கடந்திருப்பார்கள்

அவிய்ங்க ராசா said...

////////////////////
அப்பாவி முரு said...
//“தயவு செய்து எழுதுறதை நிறுத்திவிடு ராசா..செத்துப் போய்விடு இந்தப் பாவக் காசை சம்பாதிக்கிறதுக்கு…”//

ராஜா என்ன இது?

இதைத்தான வயசான அப்பா - அம்மா ஆசைப்பட்டாங்க?
11 July, 2009 2:30 AM
//////////////////
நன்றி முருகன்..கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன்..

jothi said...

அட்டகாசமான படைப்பு. ஏற்கனவே இங்க வந்ததிலிர்ந்து நெஞ்சிக்குள் அம்பு தைத்துகொண்டே இருக்கு. இதுல நீங்க வேற கடப்பாறை வச்சிட்டு குத்துறீங்க,.. அப்புறம் நான் இந்தியா வந்துட்டா எனக்கு பதில நீங்கதான் ஹோம் லோன் கட்டணும் ஆமா,..

ஈரோடு கதிர் said...

உருக்கமான பதிவு
உண்மை சுடுகிறது

suresh said...

idhu veli naattil vaalum anaiththu thamilargalin unarvu..nadri..

Cable சங்கர் said...

arumai

நிலாமதி said...

இதயத்தை தொட்டது .....மகனே நீ நீடூழி வாழ்க. நாலாயிருப்பா . நிலா

தினேஷ் said...

அழுகாச்சியா வருதுண்ணே..

கதிரவன் said...

ரொம்ப நல்லா எழுதறீங்க ராஜா

அவிய்ங்க ராசா said...

/////////////////////
jothi said...
அட்டகாசமான படைப்பு. ஏற்கனவே இங்க வந்ததிலிர்ந்து நெஞ்சிக்குள் அம்பு தைத்துகொண்டே இருக்கு. இதுல நீங்க வேற கடப்பாறை வச்சிட்டு குத்துறீங்க,.. அப்புறம் நான் இந்தியா வந்துட்டா எனக்கு பதில நீங்கதான் ஹோம் லோன் கட்டணும் ஆமா,..
11 July, 2009 8:27 AM
/////////////////////////
என்மேல அம்புட்டு பாசமாண்ணே..

அவிய்ங்க ராசா said...

///////////////////
கதிர் said...
உருக்கமான பதிவு
உண்மை சுடுகிறது
11 July, 2009 8:54 AM
/////////////////////
நன்றி கதிர்..

அவிய்ங்க ராசா said...

///////////////////////
suresh said...
idhu veli naattil vaalum anaiththu thamilargalin unarvu..nadri..
////////////////////////
வருகைக்கு நன்றி சுரேஸ்

அவிய்ங்க ராசா said...

///////////////////
Cable Sankar said...
arumai
11 July, 2009 11:05 AM
///////////////////
நன்றி கேபிள் சங்கர்..

அவிய்ங்க ராசா said...

////////////////////
நிலாமதி said...
இதயத்தை தொட்டது .....மகனே நீ நீடூழி வாழ்க. நாலாயிருப்பா . நிலா
11 July, 2009 11:41 AM
சூரியன் said...
அழுகாச்சியா வருதுண்ணே..
11 July, 2009 12:24 PM
கதிரவன் said...
ரொம்ப நல்லா எழுதறீங்க ராஜா
11 July, 2009 1:06 PM
///////////////////
நன்றி நிலாமதி, சூரியன், கதிரவன்..

Thamiz Priyan said...

நல்லா எழுதுறீங்க ராஜா!

Senthil said...

Raja,

U made me cry!!!!!!!!

heart touching post!!!!

Anonymous said...

test...

Anonymous said...

yov enna velayadreengala...

america-la velai paarkira naayi (sorry for this word) veetukku oru nalla computer and internet connection vaangi kodukka mudiyatha?

apparum ethanayo nalla nanbargal vundu uthavi seyya... they can help in making the video chat..

Vijay Anand said...

எனக்கும் இதே மாதிரி பீலிங்க்ஸ் தான் என் அம்மா உடன் பேசும் போது..

Anonymous said...

ஐயோ என்னது இது? இப்படி எதுக்கு இப்படி நினைக்கணும், நம்ம குழந்தைகள் பெரியவங்க ஆகும்போது நாமும் இப்படித்தான் நினைப்போம்...

ILA (a) இளா said...

வாழ்க்கை ஒரு வட்டம், எங்க தாத்தா கிராமத்துல இருந்துட்டு சொன்னாரு, அப்பா நகரத்துல இருந்து கேட்டுகிட்டாரு. இப்போ அப்பா நகரத்துல இருந்து நாம வெளிநாட்டுல இருந்து.. ஆமா பாவ காசுங்கிறீங்களே? அப்படி என்ன தப்பாம்? அவனவன் சொந்த ஊர்ல இருந்துகிட்டே பார்க்கிறது இல்லையாம். இம்புட்டு ஆசை இருந்தா போதுங்க.

Post a Comment