கொஞ்ச நாளா ஏதோ தெரியலை, மனசு கொஞ்சம் கஷ்டமாவே இருந்துச்சுண்ணே..வேலை வேற கொஞ்சம் அதிகம்..கொடுக்குற காசுக்கு மாடு மாதிரி வேலை வாங்குறாயிங்க..சனிக்கிழமை நைட் தூங்குறப்ப எல்லாம் “Testing, defect” ன்னு சொல்லி புலம்புறேனாம்..பொண்டாட்டி வேற, யாரை Test பண்ணுறீங்கன்னு சந்தேகப்பட ஆரம்பிச்சுட்டேண்ணே..
சரி, வலையுலகம் பக்கம் வந்தா ஒரே அடிதடியா இருக்குண்ணே..ஆளுக்காளு பிச்சு உதறுராயிங்க..சாரு, ஜெயமோகன், லக்கி, பைத்தியக்காரன்னு ஒரே சண்டை..எனக்கு சாதரணமாகவே இந்த மாதிரி சண்டை எல்லாம் பார்த்தாலே கும்மாளம் ஆகிடும்..எனக்கென்னமோ எல்லாம் சேர்ந்து நம்மளை முட்டாளாக்க பாக்குறாயிங்களோன்னு சந்தேகமா இருக்கு(யோவ் யாருய்யா அது, “உங்களை முட்டாள் ஆக்க வேணாம்..அப்பிடித்தான் இருக்கீங்க”ன்னு பின்னூட்டம் போடுறது..) அதுல “சாரு” டைஜஸ்ட்ன்னு லக்கிலுக் பதிவை பார்த்தவுடனே கொலைவெறி அதிகம் ஆகிடுச்சு.
இந்த கோழிச் சண்டையெல்லாம் பார்த்து சிரிச்சுக்கிட்டே சன்னல் வழியா பார்த்தேண்ணே..ஒரு உருவம் என்னை உத்து பார்த்துச்சுண்ணே..திக்குன்னு ஆயிடுச்சு..கிழிஞ்ச ஜீன்ஸ், ஒரு பழைய சட்டை, கையில ஒரு அட்டை “ஹெல்ப் மீ” ன்னு. அமெரிக்காவுல பிச்சைக்காரனை இப்பத்தான் பார்க்குறேன்..யாருக்கும் எந்த தொந்தரவும் இல்ல..அமைதியா எதையோ வெறிச்சு பார்த்தபடி உக்கார்ந்திருக்கார்..அந்த பக்கம் போறவயிங்க எல்லாம் ஒரு டாலர், ரெண்டு டாலர் போட்டுட்டு போறாயிங்க..அதை கையில எடுத்துக்கிட்டு சிரிச்ச முகத்தோட “தேங்கஸ்” ன்னு சொல்லுறார். நம்மளும் அவர் மாதிரி இருந்திருந்தா எப்படி இருந்திருக்கும்னு நினைச்சுப் பார்த்தேன்..எந்த கவலையும் இல்லாம, எதிர்காலத்தப் பத்தி கவலைப்படாம, அன்னைக்கு வாழ்க்கை அன்னைக்கு..கொஞ்சம் குளிர் அடிக்க ஆரம்பித்தது..அவர் கை, காலெல்லாம் நடுங்கி போயிடுச்சுண்ணே..போட்டுருக்கிற சட்டைய நல்லா இழுத்து குளிரை மறைக்க முயற்சித்தாலும், அவருடைய ஜீன்ஸ் பேண்ட்டில் இருந்த கிழிஞ்சல்கள் வழியா குளிர் தாக்கி இருக்கும் போல..பாவம்ணே..எங்கிட்ட ஒரு குளிர்தாங்கும் ஜெர்கின் ரெண்டு இருந்துச்சு..ஒன்ன எடுத்துக்கிட்டு கீழ போய் அவர்கிட்ட கொடுத்தேன்..எடுத்துப் போர்த்திட்டு நன்றியா பார்த்தாருண்ணே..
“தம்பி..குளிர் கொஞ்சம் அதிகமா இருக்கு..ஒரு சிகரெட் வாங்கித் தர முடியுமா” ன்னு கேட்டாரு..பக்கத்துல இருக்குற என் நண்பன் வீட்டிக்குப் போய் ஒரு சிகரெட் வாங்கிக் கொடுத்தேன்….நன்றின்னு சொன்னவரு என் கையப் புடிச்சுக்கிட்டாரு..என்னைப் பத்திக் கேட்டாரு..ஒரு கம்பெனியில குப்பை அள்ளுற வேலை பார்த்திருக்கார்..இப்ப உள்ள நிலமையில கம்பெனிய மூடிட்டாய்ங்க..சேர்த்து வைக்காம இருந்ததால, இந்த நிலமைக்கு வந்துட்டாரு..
டெய்லி ஆபிஸ் போகும்போது அவர் இருக்கிறாரான்னு பார்ப்பேன்..சிநேகமா சிரிப்பாரு..காலை வணக்கம் சொல்லுவாரு..அப்பப்ப கூப்பிட்டு பேசுவாரு…எனக்கும் கொஞ்சம் சந்தோசமா இருக்கும்..
நேத்து ஜன்னல் வழியா எட்டிப் பார்த்தேன்..அவர் உக்கார்ந்திருந்த இடம் காலியா இருந்துச்சு..எனக்கென்னமோ என் மனசே காலியா ஆன மாதிரி ஆயிடுச்சு..நண்பனிடம் சென்று அவரைப் பத்தி கேட்டேன்..
“போலிஸ் புடிச்சிட்டு போயிட்டாயிங்கடா” ன்னு சொன்னான்..எங்க அப்பார்ட்மெண்டில் உள்ளவயிங்க யாருக்கும் அவர் அங்க உக்கார்ந்து இருந்தது பிடிக்கலை போல..ஏதோ வீட்டுச் சன்னலை வெறிச்சுப் பார்த்து இருக்காரு..அந்த அம்மா “911” க்கு போன் பண்ணி, தூக்கிட்டு போயிட்டாயிங்க போல..மனசே கஷ்டமா போச்சு..அப்படியே போய் தூங்கிட்டேன்..
காலையில எழுந்துருச்சு சன்னல் வழியாப் பார்த்தேன்..இன்னும் காலியாத்தான் இருந்த்துச்சு..உடை மாற்றிக் கொண்டு வெளியே வந்து அவர் இருந்த இடத்தை எட்டிப் பார்த்தேன்..இன்னும் காலியாத்தான் இருந்துச்சு..”குட்மார்னிங்க் ராஜா” ன்னு அவர் குரல் கேக்குமான்னு ஏக்கமா இருந்துச்சு..மொத்தம் ஒரு வாரம்தான் தான் பேசி இருப்பேன்..என்னமோ தெரியல, பத்து வருசம் பழகின மாதிரிப் பாதிப்பா இருந்துச்சுண்ணே..
லேப்டாப்ப தொறந்து தமிழ்மணம் பக்கம் போனா, நர்சிம் எழுதின “பைய்த்தியக்காரன் சாருவின் புத்தகங்களை திருடி விட்டார்” ன்னு பதிவு..அடப் போங்கையா நீங்களும் உங்க அரசியலும்..
37 comments:
சரி விடுங்கண்ணே வெளியில இருந்து குளுர்லையும் பசியிலையும் வாடுரத விட அவர் நிம்மதியா உள்ள இருப்பாரு.
நல்ல பதிவு.
நைஸ்.. ராஜா.. சமீபத்தில் வந்த புது பதிவர்களில் நான் விரும்பி படிக்க்கும் பதிவராகிவிட்டீர்கள்.
/////////////////
சித்து said...
சரி விடுங்கண்ணே வெளியில இருந்து குளுர்லையும் பசியிலையும் வாடுரத விட அவர் நிம்மதியா உள்ள இருப்பாரு.
3 July, 2009 8:56 PM
////////////////
ஆமாண்ணே..நீங்க சொல்லுறதும் கரெக்ட்தான்
//////////////
3 July, 2009 8:56 PM
ச.செந்தில்வேலன் said...
நல்ல பதிவு
//////////////
நன்றி செந்தில். செந்தில் என்கிற பெயரில் மட்டும் எனக்கு 10 நண்பர்கள் இருக்கிறார்கள்
/////////////////
Cable Sankar said...
நைஸ்.. ராஜா.. சமீபத்தில் வந்த புது பதிவர்களில் நான் விரும்பி படிக்க்கும் பதிவராகிவிட்டீர்கள்.
3 July, 2009 9:54 PM
//////////////
நன்றி சங்கர் அண்ணே..அது என்னோட பாக்கியம்….சென்னை வரும்போது ஒரு பதிவர் சந்திப்புக்கு வந்து எல்லோரையும் பார்க்க ஆசை….
Ada Ponga ellorum appadi thaan irukkiranga..
vanthamaa eluthunama ponamaanu illama,
panchayat pannuren pervalinu kilambiranga..
naa kooda aduthu oru kattapanchayat pathivu podalamnu irukken..
Appuram sila per peyarai neradiyaga sollathiragal..
Pala per avargalin aabathpanthavargal..
ungal mel idiyaga irangi viduvargal..:)
நல்ல பதிவு அண்ணே. இந்த ஊருக்கு வர்றதுக்கு முன்னாடி பல பிம்பங்கள் இருந்துச்சு. வந்து எறங்குன ரெண்டாவது நாளே ரோட்டுல ஒரு பிச்சைக்காரரை பார்த்தேன். என்னங்க சொல்ல. எல்லா ஊர்லயும் வறுமை கோடுன்னு ஒன்னு இருக்கு...
நல்ல பதிவு ...
நல்ல எழுதுறிங்க
ராஜா.,
பின்னிப் பெடலெடுக்குறீங்களே...
அடுத்தவங்களைப் பத்தி கவலைப் படாம, நீங்க உங்களுக்காக எழுதுங்க.
அருமை ..:-)))))))
-:)
மதுரை பாஷையில் ரொம்ப அழகா எழுதுறீங்க(ண்ணே..:))..படிச்சா நம்ம ஊர்ல போயி நண்பர்களுடன் பேசிகிட்டு இருக்கிற மாதிரி தோணவைக்குது.
.....ஆனாலும், சில பதிவுகளில் (இப்பதிவில் இல்லை.!) தேவைக்கு அதிகமா அண்ணே-னு சொல்லுறமாதிரியும் தோனுது....கொஞ்சம் கவனமா/குறைவா பயன்படுத்தலாம்...நம்ம ஊர்ல எதுக்கெடுத்தாலும் சார் சார்-னு சொல்லுற மாதிரி ஆயிடக்கூடாதுன்னு சொல்லுறேன்..தவறா எடுத்துக்காதீங்க.
அவீங்க....... தொடர்ந்து படித்து வருகிறேன்.... பதிவுலகத்தில் ரொம்பவே வித்தியாசப்பட்டு நிற்கிறீர்கள்...
ம்ம்ம்
உங்களது இன்னொரு பதிவிலும் இவர் போல இன்னொரு கேரக்டர் வருவார்.......
மனித நேய பதிவு
வாழ்த்துக்கள்
/////////////////
3 July, 2009 10:39 PM
வினோத்கெளதம் said...
Appuram sila per peyarai neradiyaga sollathiragal..
Pala per avargalin aabathpanthavargal..
ungal mel idiyaga irangi viduvargal..:)
3 July, 2009 10:43 PM
///////////////
நன்றி வினோத்..மதுரைக்காரன் என்பதால் கொஞ்ச தைரியம்..))
///////////////
பிரசன்னா இராசன் said...
நல்ல பதிவு அண்ணே. இந்த ஊருக்கு வர்றதுக்கு முன்னாடி பல பிம்பங்கள் இருந்துச்சு. வந்து எறங்குன ரெண்டாவது நாளே ரோட்டுல ஒரு பிச்சைக்காரரை பார்த்தேன். என்னங்க சொல்ல. எல்லா ஊர்லயும் வறுமை கோடுன்னு ஒன்னு இருக்கு...
4 July, 2009 2:15 AM
/////////////////////
ஆமாம் பிரசன்னா…முதல்முறையா பார்த்ததும் அதிர்ந்துதான் போனேன்.....
/////////////////////
4 July, 2009 2:15 AM
ramesh said...
நல்ல பதிவு ...
4 July, 2009 2:27 AM
ரெட்மகி said...
நல்ல எழுதுறிங்க
4 July, 2009 2:48 AM
அப்பாவி முரு said...
ராஜா.,
பின்னிப் பெடலெடுக்குறீங்களே...
அடுத்தவங்களைப் பத்தி கவலைப் படாம, நீங்க உங்களுக்காக எழுதுங்க.
4 July, 2009 3:55 AM
கார்த்திகைப் பாண்டியன் said...
அருமை ..:-)))))))
4 July, 2009 4:33 AM
பித்தன் said...
-:)
4 July, 2009 5:16 AM
//////////////////////
நன்றி ரெட்மகி, கார்த்திகைப் பாண்டியன்(பெயர் நல்லா இருக்கு), முருகன்(ஜீடாக்ல ஆளைக் காணோம்??), , பித்தன்(உங்க பயணப்பதிவு சூப்பர்)
////////////
Niru said...
மதுரை பாஷையில் ரொம்ப அழகா எழுதுறீங்க(ண்ணே..:))..படிச்சா நம்ம ஊர்ல போயி நண்பர்களுடன் பேசிகிட்டு இருக்கிற மாதிரி தோணவைக்குது.
.....ஆனாலும், சில பதிவுகளில் (இப்பதிவில் இல்லை.!) தேவைக்கு அதிகமா அண்ணே-னு சொல்லுறமாதிரியும் தோனுது....கொஞ்சம் கவனமா/குறைவா பயன்படுத்தலாம்...நம்ம ஊர்ல எதுக்கெடுத்தாலும் சார் சார்-னு சொல்லுற மாதிரி ஆயிடக்கூடாதுன்னு சொல்லுறேன்..தவறா எடுத்துக்காதீங்க.
4 July, 2009 6:12 AM
//////////////////////
நன்றி நிரு, கண்டிப்பாக தப்பா எடுத்துக் கொள்ள மாட்டேன்..மாற்ற முயற்சிக்கிறேன்
////////////////////
4 July, 2009 6:12 AM
Sukumar Swaminathan said...
அவீங்க....... தொடர்ந்து படித்து வருகிறேன்.... பதிவுலகத்தில் ரொம்பவே வித்தியாசப்பட்டு நிற்கிறீர்கள்...
4 July, 2009 6:33 AM
கடைக்குட்டி said...
ம்ம்ம்
4 July, 2009 7:22 AM
இரவுப் பறவை said...
உங்களது இன்னொரு பதிவிலும் இவர் போல இன்னொரு கேரக்டர் வருவார்.......
மனித நேய பதிவு
வாழ்த்துக்கள்
4 July, 2009 7:23
////////////////
நன்றி இரவுப்பறவை, கடைக்குட்டி, சுகுமார்(உங்க படத்துக்கான டயலாக் பதிவு சூப்பர் அண்ணே..)
மனதை நெகிழவைத்த பதிவு
very much impressed with yr writing style. U made me an addict of yr posts. keep going.
Senthil
உங்களிடம் கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்....உங்கள் கம்பெனி இல வேலை செய்த ஜோவுக்கு இப்போது வேலை கிடைத்துவிட்டதா ??????
//
போட்டுருக்கிற சட்டைய நல்லா இழுத்து குளிரை மறைக்க முயற்சித்தாலும், அவருடைய ஜீன்ஸ் பேண்ட்டில் இருந்த கிழிஞ்சல்கள் வழியா குளிர் தாக்கி இருக்கும் போல..பாவம்ணே..எங்கிட்ட ஒரு குளிர்தாங்கும் ஜெர்கின் ரெண்டு இருந்துச்சு..ஒன்ன எடுத்துக்கிட்டு கீழ போய் அவர்கிட்ட கொடுத்தேன்..எடுத்துப் போர்த்திட்டு நன்றியா பார்த்தாருண்ணே..
//
ஏண்ணே, ஒரு சந்தேகம், நீங்க உண்மையிலேயே NRI தானா?
நான் பாத்த பக்கிக பல வருஷமா வெளிநாட்டில இருந்தாலும், நைஞ்சு போன ஒரே ஜாக்கெட் தான் குளிர் காலத்தில போட்டு திரியுதுக. போன வருஷம் பாத்தா மங்கி கேப், அரதப் பழசான வின்டெர் கோட்-ன்னு வந்தான், என்னேடான்னா, எங்க தாத்தா கொடைக்கானலிலே போட்டது, ரொம்ப ராசியானது-ன்னு கொடுத்தாருங்கிறான்.
///////////////
அபுஅஃப்ஸர் said...
மனதை நெகிழவைத்த பதிவு
4 July, 2009 9:04 AM
/////////////////////
நன்றி அபுஅசர்
/////////////////////
Senthil said...
very much impressed with yr writing style. U made me an addict of yr posts. keep going.
Senthil
/////////////////////
கேக்கவே சந்தோசமா இருக்கு..நன்றி
//////////////////////
கிருபாகரன் said...
உங்களிடம் கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்....உங்கள் கம்பெனி இல வேலை செய்த ஜோவுக்கு இப்போது வேலை கிடைத்துவிட்டதா ??????
4 July, 2009 9:23 AM
//////////////////////////
நன்றி கிருபா..அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.. முயற்சிக்கிறேன்
//////////////////
Joe said...
//
போட்டுருக்கிற சட்டைய நல்லா இழுத்து குளிரை மறைக்க முயற்சித்தாலும், அவருடைய ஜீன்ஸ் பேண்ட்டில் இருந்த கிழிஞ்சல்கள் வழியா குளிர் தாக்கி இருக்கும் போல..பாவம்ணே..எங்கிட்ட ஒரு குளிர்தாங்கும் ஜெர்கின் ரெண்டு இருந்துச்சு..ஒன்ன எடுத்துக்கிட்டு கீழ போய் அவர்கிட்ட கொடுத்தேன்..எடுத்துப் போர்த்திட்டு நன்றியா பார்த்தாருண்ணே..
//
ஏண்ணே, ஒரு சந்தேகம், நீங்க உண்மையிலேயே NRI தானா?
நான் பாத்த பக்கிக பல வருஷமா வெளிநாட்டில இருந்தாலும், நைஞ்சு போன ஒரே ஜாக்கெட் தான் குளிர் காலத்தில போட்டு திரியுதுக. போன வருஷம் பாத்தா மங்கி கேப், அரதப் பழசான வின்டெர் கோட்-ன்னு வந்தான், என்னேடான்னா, எங்க தாத்தா கொடைக்கானலிலே போட்டது, ரொம்ப ராசியானது-ன்னு கொடுத்தாருங்கிறான்.
5 July, 2009 3:18 AM
////////////////////////////////
http://aveenga.blogspot.com/2009/05/blog-post_11.html
இதைப் படிச்சப்புறகுமா இந்த கேள்வி கேட்டுப்புட்டீங்க..)))
மிக மிக வித்தியாசமான பார்வை. யதார்த்தத்தை நீங்கள் இருkகும் ஊரில் பார்ப்பது கடினம். இந்த உணர்ச்சியும் நெகிழ்ச்சியும் உங்களிடம் எப்பவும் மாறாமல் இருக்கட்டும். வாழ்த்துகள்.
ராஜா நான் ச்னி கிழமை திருச்சியில் ஒரு சினிமா நபரை சந்தித்தேன் ஹம் அவர் நீங்கள் விரும்பி படிக்கும் பதிவர் யாரு என்று கேட்டார் யோசிக்காமல் உடனே உங்க பெயரை சொன்னேன் ... மேலும் மேலும் நீங்க என் மனைச் உலுக்கி எடுக்குறீங்க ... பதிவு என்றால் இப்படி தான் இருக்கனும் என்ற வரைமுறை எனக்கு பிடிக்காத ஒன்று அதை உடைத்த நபர்களில் நீங்களும் ஒருவர்... நல்லா இருக்கு ராஜா..
மனிதனின் அன்பு பாசம் காதல் இந்த ஏக்கம் இது தான் மனிதனின் மகத்தான பன்பு அதை உங்கள் பதிவுகளில் பார்ப்பது உண்டு பல நேரம் ஆளை கரைச்சு ஒரு மெல்லிய சோகத்தை உண்டு செய்து விடுகிறீர்கள் சபாஷ் .. நடப்பதை எல்லாரும் சரியாக எழுத்தாய் எழுதுவார்கள் என்று சொல்ல மிடியாது.. இதோ திங்கள் எங்கும் எதையும் ஓப்பன் செய்யவில்லை உங்க பதிவை மட்டும் பார்த்தேன் படித்தேன்... தமிழ்ஷ், தமிழர்ஸ் தமிழ்மணம் எல்லாம் அவ்வளவா போறதே இல்லை.. அதுவும் நல்லது தான்..
இருந்தாலும் நண்பர்கள் மச்சான் இதுல இது வந்து இருக்கு, இவங்க பதிவில் உன்னை பத்தி இருக்குனு விடாம சொல்லுவதால் சில பதிவுகளை பார்ப்பது உண்டு, அப்படி பார்த்தது தான் சில பதிவுகள்...
ஹம்.. நல்ல பதிவு ராசா.. சென்னை வரும் போது சொல்லுங்க உங்களை பார்க்கனும், உங்க மேல ரொம்ப மரியாதை வளர்ந்துவிட்டது அதற்க்கு காரணம் உங்க எழுத்து
Bloody Indian pathivu, Joe, mattrum intha pathivugal ellam ungal mayilkarkal..
Pasanga padam nethu mendum parthaen appo neenga sonna sandai than neyabagam vanathu innum nerya nanae yosichi sirithaen...
இப்பிடி எல்லாத்தையும் கரக்டாவே பேசிடுறீங்க...
//.இப்ப உள்ள நிலமையில கம்பெனிய மூடிட்டாய்ங்க..சேர்த்து வைக்காம இருந்ததால, இந்த நிலமைக்கு வந்துட்டாரு.///
இத பாத்த ஒடனே வேற ஒரு தளத்துக்கு போக போறீங்கனு நினச்சேன்... டப்புன்னு வேற பக்கமா கூட்டிட்டு போய்டீங்க. பாசு....
//எங்கிட்ட ஒரு குளிர்தாங்கும் ஜெர்கின் ரெண்டு இருந்துச்சு.//
இத கொஞ்சம் பிழை திருத்தம் பண்ணிடுங்கோ....
ஆமா அது சரி.. ரொம்ப blog ஆ கேக்கனும்னே இருந்தேன்...
சொச்சம் இருக்குற பாரி வள்ளல் பரம்பயாண்ணே நீயீ.... :-))))))))))
அள்ளி அள்ளி கொடுக்குரியேபா....
ஏ சூப்பர் பா..
இப்புடி ஒரு ஆள பாத்ததே இல்லபா...[பருத்திவீரன் குட்டி சாக்கு மேரி படிக்காதீங்க ராசா]
இப்புடி எல்லாம் சண்ட போட்டு நாறிப்போய் கிடக்கு வலைத்தளம்... சோ நீங்க ஏன்!!! தலைப்ப "நாறப்பய !!! " நு மாத்த கூடாது...
Ellam nanmaikkae .. Raja
Nalla velai police pidichittu pochu , nimathiya nalla araikul sappadu kedaikkum namma ooru policestaion mathiri illai ..
Nalla Velai Police antha vetridathai neenga en manathilum uruvakkitinga rasa..
Post a Comment