Sunday, 28 June 2009

பிரபல பதிவர்களின் ஸ்கூல் அனுபவங்கள்



சமீபகாலமா பதிவுலகத்தைப் பார்த்தா ஒரே சண்டையா இருக்குண்ணே..இதெல்லாம் பார்க்குறப்ப எனக்கு ஸ்கூலுல போட்ட சண்டைதான் ஞாபகம் வருது..அப்படியே நம்ம பிரபல பதிவர்களையும் ஒரு ஸ்கூலுல ஒரு நாள் வச்சிருந்தா எப்படி இருக்கும்னு நினைச்ச கற்பனையே இந்த பதிவு..இது யாருடைய மனத்தையும் புண்படுத்தும் நோக்கமல்ல..எல்லோரும் வாய் விட்டு சிரிக்கவே இந்த பதிவு..இந்த பதிவில் உள்ள பெயர்கள் அந்த பாத்திரங்களின் குணாதிசியத்தை குறிப்பதல்ல..அது போல இங்கு உள்ள கதாபத்திரங்கள் ஸ்கூல் பையன்கள் போல சித்தரிக்கப்பட்டுள்ளதால் வாடா, போடா என்று பேசிக்கொள்வர்

(ஸ்கூல் மணி அடிக்க எல்லோரும் வகுப்பறைக்கு வருகின்றனர்..டீச்சர் வர லேட் ஆகிறது)

செந்தழல் ரவி : என்ன தல..கிளாஸ் ரொம்ப அமைதியா இருக்கு..கூடாதே..ஏதாவது இம்சையக் கொடுப்போமா..??

லக்கிலுக் : ஏ..யப்பா நீ சும்மா இருக்க மாட்டியா..டீச்சர் வரப் போறாங்க

(பின்னூட்ட குரல்கள்) மீ த பர்ஸ்டு..மீ த செகெண்டு..ரீப்பிட்டு..பின்னீட்ட தல..

லக்கிலுக் : ஆகா, ஆரம்பிச்சிட்டாயிங்கப்பா..இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படியெல்லாம் பின்னுறீங்க..அமைதி..நான் கூப்பிட்டா மட்டும் வந்தாப் போதும்

செந்தழல் ரவி : தல..யாரயாவது ஓட்டனுமே..இந்த சக்கரை சுரேஸ் பயல பாரு..ஒரு மாசமா அம்னீசியா வந்த மாதிரி இருக்கான்..ஏ சுரேஷ்..எங்கயா உங்க லட்சிய நாயகன் சரத்பாபு..ஹலோ எப்.எம்ல விளம்பரம் கொடுத்துட்டு, காசு கொடுக்காம ஓடிப் போயிட்டாராமே..நல்லா கூகிள் விளம்பரம் மட்டும் சைட்டுல குடுக்கத் தெரியுதுல்ல..

சக்கரை சுரேஸ்(பாவமான முகத்துடன்) : மச்சான்..ஏன்யா என்னைய ஓட்டுறீங்க…பதிவுலகம் ஒரு போதை மச்சான்..இனிமேல் மாசத்துக்கு ஒரு பதிவுதான் போடப் போறேன்..பதிவுலகப் பெருமக்களே..

லக்கிலுக் : ஆஹா..புஸ்ஸுன்னு போச்சே..சுரேசு, முதல்ல அதப் பண்ணு..தண்ணியனாவேன்..

செல்வேந்திரன் : என்னது தண்ணியடிப்பியா..போடுறேன்யா ஒரு கிசு கிசு..மக்களே பிரபல பதிவர் ஒருவருக்கு தண்ணியடிக்கும் பழக்கம் இருக்கிறதாம்..அவரைப் பற்றிய ஒரு க்ளூ..பெயரில் இரண்டு வார்த்தைகள்தான் இருக்கும்..ஒன்று லக், மற்றொன்று லுக்..இடையில் வேறு வார்த்தைகள் இருக்காது..

லக்கிலுக் : யே..தண்ணியனாவேன்னா வேறு அர்த்தம்யா..விட்டா நமக்கே கோல் போட்டுறாயிங்க போலிருக்குதே..

செந்தழல் ரவி : இரு தல..நான் பார்த்துக்கிறேன்..என்ன செல்வா..ஒன்னுக்கொன்னா பழகிட்டு என்ன இருந்தாலும் நம்ம ஜ்யோவ்ராம் சுந்தர் பத்தி இவ்வளவு மட்டமா எழுதி இருக்க கூடாது..சுந்தர் நீங்க என்ன பீல் பண்றீங்க..(தல, எப்படி..லக்கியைப் பார்த்து கண்ணடிக்கிறார்)

சுந்தர்(டெர்ராகி) : கும்மாங்குத்து..என்ன பார்த்து என்ன சொன்னாலும் தாங்கி இருப்பேன்யா..என்னப் பார்த்து தாத்தா ன்னு சொல்லிப்புட்டாயிங்கய்யா..என்னப் பார்த்தா தாத்தா மாதிரியா இருக்கு..யூத்துய்யா..

லக்கிலுக் : (மனசுக்குள்…ஆகா நினைப்புத்தான் பொழப்பைக் கெடுத்துச்சாம்) ஒருவேளை உங்க ஹேர் ஸ்டைலப் பார்த்து சொல்லி இருப்பாரோ..

செந்தழல் ரவி : பின்னிட்டீங்க போங்க..

செல்வேந்திரன் : ஐயோ ..உங்க கூட சண்டை போடுறதுக்கெல்லாம் நேரம் இல்ல..ஆயிரத்தெட்டு வேலை இருக்கு..நேத்துக் கூட பாருங்க..விஜய் டி.வில ஒரு பல்பு எரியலையாம்..என்னத்தான் கூப்பிடுறாயிங்க..

சுந்தர் : ஆமா..அமெரிக்காவுல சி.என்.என் கூப்பிட்டாயிங்க..யு.கேவுல பி.பி.சி கூப்பிட்டாயிங்க..என்னையா கலர் கலரா ரீல் விடுறீங்க..

கேபிள் சங்கர் : என்னது விஜய் டி.வியா..அத யாரும் பாக்காதிங்கப்பா..ஜெயா டி.வி பாருங்க..பிண்ணி எடுக்குறாயிங்க..

செந்தழல் ரவி : ஆமா……நீங்க நடிச்ச சீரியல் போடுறாயிங்கள்ள..அதுதான்..சீரியல்ல நடிங்க..வேணான்னு சொல்லல்ல..ஆனா, அதுல நடிச்ச போட்டோவை தயவு செஞ்சு பதிவுல போடாதீங்க..குழந்தைங்க பயப்படுதுல்ல…அங்க யாரு உக்கார்ந்து இருக்கிறது..உண்மைத் தமிழனா..என்ன 15 நாளா பதிவே போடல..

உண்மைத் தமிழன் : ஆமாப்பா..எங்க நேரம் கிடைக்குது..ஏதோ எம்பெருமான் முருகன் தயவுல ஓடுது..பதிவு எல்லாத்தையும் டைப் பண்ண ரெண்டு நாள் ஆகுதுப்பா..சின்னதா பதிவு போட்டாலும் ஏத்துக்க மாட்டுராயிங்க..நீயாவது ஏன் மேல அக்கரைப் பட்டு கேட்டியே..இப்பவே எழுத ஆரம்பிச்சுறேன்..

செந்தழல் ரவி : (மனதுக்குள்..ஆகா..15 நாள் இம்சை இல்லாம இருந்தோம்..இப்படியே கன்டினியூ பண்ணுங்கன்னு சொல்லுறதுக்குள்ள முந்திக்கிட்டாரே..) அங்க யாரு வர்றது..அவிங்க ராசவா..

அவிங்க ராசா : அண்ணே..வணக்கம்ணே….இப்படித்தான் இங்க அமெரிக்காவுல….

செந்தழல் ரவி : அடியே..இருக்குடி உனக்கு..பாவம் சின்னப் பையன்னு விட்டா, எங்களயே கட்டையக் குடுக்குறீயா….இனிமே பிரபலப் பதிவர்களுடன் படகுப் பயணம், ஸ்கூல் அனுபவம்ன்னு ஏதாவது எழுது..மகனே இருக்கு..

லக்கிலுக் : எதுக்கு ரவி டென்சனாகுற..ஏ ராசா, நீ சிறுகதைப் போட்டிக்கு உன்னோட சிறுகதை அனுப்பி இருக்கீல்ல..ரவி, விமர்சனம் பண்ணுயா..

அவிங்க ராசா : அண்ணே.வேணான்னே..இது தெரிஞ்சா அனுப்பியே இருக்க மாட்டேண்ணே..

ஜாக்கி சேகர் : லக்கி..அவனை ஏன்யா ஓட்டுறீங்க..என்னோட உடை களையும் முன் யோசிங்க பெண்களேன்னு ஒரு பதிவு எழுதி இருந்தேனே படிச்சீங்களா..எவ்வளவு எதிர்ப்பு தெரியுமா..ஒரு நல்ல விசயம் யாரும் சொல்ல விட மாட்டிங்குறாயிங்க..

கேபிள் சங்கர் : எது….நடிகை அனுஷ்கா கவர்ச்சியா போஸ் கொடுத்த மாதிரி, சும்மா குளுகுளுன்னு ஒரு பதிவு போட்டிருந்தீங்களே..அதுவா..சூப்பருண்ணா..நீங்க கொடுத்த எச்சரிக்கையில உள்ள புளூபிலிம்மை விட சும்ம டகால்டியா இருந்துச்சு..

செந்தழல் ரவி : சங்கரு..ஜாக்கிதான் பிட் படம் பார்ப்பேன்னு ஒத்துக்கிட்டாரே..ஜாக்கி சேகர்..நீங்க தைரியமா எழுதுங்க..

லக்கிலுக் : ஆமா..உங்க கருத்து உங்களது..என் கருத்து என்னோடது..உங்க கருத்தை நிலைநிறுத்த போராடினால் நானும் என் கருத்தை….

சுந்தர் : ஆஹா….ஆரம்பிச்சுட்டாருய்யா..இனி யாருக்கும் புரியாது..

(டீச்சர் வகுப்புக்குள் என்டர் ஆக எல்லாரும் எழுந்து கோரஸாக)

டீச்சர்..பக்கத்துல உள்ள பதிவர் என்னைக் கிள்ளி வைச்சிட்டான் டீச்சர்…


19 comments:

ஆனந்த் பாபு said...

மீ த பர்ஸ்டு........

கல்கி said...

இதென்ன புது கலாட்டா?? :-)

ஆனந்த் பாபு said...

ராசா.......உங்கள நெனச்சா ரொம்ப பெருமையா இருக்கு ராசா......

வெண்பா said...

இது கற்பனையா?.... இல்ல... பதிவர் சந்திப்பு பற்றிய பதிவா?

Suresh said...

ஹா ஹா ;) பெங்களூர் இருந்து இறங்கி இப்போ தான் வந்து ஆன் செய்தால் உங்க பதிவு , ஹம் யாரையும் விட்டுவைக்கவில்லை போல ;)

நான் ;)இரண்டு வாரம சில பதிவுகள் தான் படித்தேன், சில கதைகள், கவிதைகள், நியுஸ்கள், இந்த பாலிடிக்ஸ் இஸ்கூள் மேட்டரல ஒரு அளவுக்கு இன்றய நிலை என்ன என்ன நடந்துச்சு, ஓ அப்படி இப்படினு தெரியந்தது அதுக்கு நன்றி ராசா..

சில இடங்களில் சிறிப்பு வந்து

உண்மைய சொல்ல வேண்டும் என்றால் ..

உங்க படகு பயணத்தை விட இதில் சிரிப்பு கம்மி தான்.. அதுக்கு விழுந்து விழுந்து சிரித்தேன், சில இடங்களில் கண்டோரல் செய்ய முடியாத சிறிப்பு,

இதுவும் நல்லா இருக்கு, சிரிப்பு வந்தது அந்த படைப்பை ஒரு பெண்ச் மார்க் ( இஸ்கூல் க்கு கரகெட்டா இருக்கு ஹீ ) பார்த்தா இது கம்மி,

ஒரு வேளை நான் நீங்க சொன்ன அனைத்து பதிவுவையும் ஒரு முறை பார்த்தோ படித்தோ இருந்தால் இன்னும் அதிகமாய் சிரித்து இருப்பேனோ என்னவோ

தவறு என்னதாய் கூட இருக்கலாம் ;)

நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்குனு சொல்லியா தெரியனும் அது திருப்பதிக்கு லட்டு பேமஸ் என்று சொல்லுவது போல

Suresh said...

//சக்கரை சுரேஸ்(பாவமான முகத்துடன்) : மச்சான்..ஏன்யா என்னைய ஓட்டுறீங்க…பதிவுலகம் ஒரு போதை மச்சான்..இனிமேல் மாசத்துக்கு ஒரு பதிவுதான் போடப் போறேன்..பதிவுலகப் பெருமக்களே..//

ஹா ஹா ;) நேரம் கிடைக்கும் போது சக்க்ரையை தூவ வேண்டியது தான் ஹீ ஹி

நம்ம என்றைக்க்கும் பாவமா மூஞ்சி எல்லாம் வச்சிகிட்டது இல்லை, நீங்க கற்பனை என்பதால் ஹீ ஹீ சரி

ஆமா இந்த /தண்ணியனாவேன்/ என்றால் என்ன ரிலாக்ஸ் ஆவேன் என்று அர்த்தமா.. சத்தியமா தெரியாது பாஸ்

Suresh said...

சரி நீங்க இதுக்கு ரிலேட்ட டா சொன்ன பதிவுகளை எல்லாம் படிச்சிட்டு வரேன் உங்க கதையை தவிர இதுக்கு சம்பந்தமான பதிவுகள் ஏதும் படிக்கவில்லை, கேபிள் பதிவு படிச்சேன் அந்த ஜெயாடிவி மேட்டர் தெரியும் மறுபடி வந்து இதை படிச்சா இன்னும் நல்லா ஒரு ரிலேட் செய்து சிரிக்கமுடியும்..

Suresh said...

இதுல இருந்து ஒண்ணே ஒன்னு நல்லா தெரியுது

நீங்க பின்னூட்டம் போடவில்லை என்றாலும்
பதிவுலக நாட்டு நடப்பில் எல்லா பதிவையும் ஒரு படி படிச்சிட்டு சுவைச்சி ஒரு சம்மரி அடிச்சிட்டிங்க வெரி குட் ;)

S.A. நவாஸுதீன் said...

ஆட்டத்துல உப்புக்கு சப்புக்கு உங்களையும் சேத்துகிட்டீங்களாக்கும். நல்ல காமெடியா இருந்தது ராசா

Joe said...

நல்ல நகைச்சுவை, தொடர்ந்து கலக்குங்க!

ரவி said...

வந்து ஒரு லிங்க் போட்டிருக்கக்கூடாதா ? எதேச்சயா பார்த்தேன்...!!!

ஜாலி பட்டாசு.

அவிய்ங்க ராசா said...

////////////
Eravin-nisaptham said...
மீ த பர்ஸ்டு........
28 June, 2009 12:25 PM
////////////
பர்ஸ்டு வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி

அவிய்ங்க ராசா said...

///////////////
கல்கி said...
இதென்ன புது கலாட்டா?? :-)
28 June, 2009 12:26 P
///////////////
ஆமாண்ணே..ஒரே வெட்டுக்குத்தாதான் இருக்கு

அவிய்ங்க ராசா said...

///////////////
வேங்கடவாணன் said...
இது கற்பனையா?.... இல்ல... பதிவர் சந்திப்பு பற்றிய பதிவா?
28 June, 2009 12:47 PM
/////////////////
வருகைக்கு நன்றி..கற்பனைதாண்ணே

அவிய்ங்க ராசா said...

//////////////
28 June, 2009 6:35 PM
Suresh said...
இதுல இருந்து ஒண்ணே ஒன்னு நல்லா தெரியுது

நீங்க பின்னூட்டம் போடவில்லை என்றாலும்
பதிவுலக நாட்டு நடப்பில் எல்லா பதிவையும் ஒரு படி படிச்சிட்டு சுவைச்சி ஒரு சம்மரி அடிச்சிட்டிங்க வெரி குட் ;)
28 June, 2009 6:38 PM
//////////////////////
நன்றி சுரேஷ்..பின்னூட்டம் போட முடியலைன்னு வருத்தமாத்தான் இருக்கு..நேரம்தான் ஆளை சாப்பிடுது..

அவிய்ங்க ராசா said...

///////////////
S.A. நவாஸுதீன் said...
ஆட்டத்துல உப்புக்கு சப்புக்கு உங்களையும் சேத்துகிட்டீங்களாக்கும். நல்ல காமெடியா இருந்தது ராசா
29 June, 2009 1:03 AM
//////////////////
வருகைக்கு நன்றி.

அவிய்ங்க ராசா said...

/////////////
29 June, 2009 1:03 AM
Joe said...
நல்ல நகைச்சுவை, தொடர்ந்து கலக்குங்க!
29 June, 2009 11:06 AM
///////////////////
வருகைக்கு நன்றி.

அவிய்ங்க ராசா said...

///////////////
செந்தழல் ரவி said...
வந்து ஒரு லிங்க் போட்டிருக்கக்கூடாதா ? எதேச்சயா பார்த்தேன்...!!!

ஜாலி பட்டாசு.
30 June, 2009 6:01 AM
/////////////////
நன்றி ரவி..நீங்கள் எப்படி எடுத்து கொள்வீர்கள் என்று ஒரு தயக்கம் இருந்தது..ஆனால் அது இப்போது இல்லாமல் ஆகி விட்டது…நகைச்சுவையாக எடுத்து கொண்டதற்கு நன்றி..தினமும் உங்க பதிவுக்கு விசிட் அடிப்பேன்..நீங்கள் போடும் பின்னூட்டங்களை மிகவும் ரசிக்கிறேன்..

நாடோடிப் பையன் said...

It is nice to know that you care about that person. Did you try checking with local police about his whereabouts?

It makes me wonder how many of us will do the same about a begger in India?

Post a Comment