Thursday 25 June, 2009

தொட்டு விடும் தூரம்தான் சொர்க்கம்

(வீட்டிலுருந்து அம்மா போன் பண்ணியிருந்தார்கள்..என் 75 வயது மாமா சீரியஸாகி டாக்டர் கைவிரித்துவிட்டாராம். ஒரு வாரம் டைம் கொடுத்திருக்காரம்..வீட்டுக்கு கொண்டு வந்து விட்டார்கள்..அவருடைய மனநிலையில் நின்று யோசித்த போது கிடைத்தவை)

என்ன ஆயிற்று என் கால்களுக்கு..அசைக்கக் கூட முடியவில்லையே..டாக்டர் ஒரு வாரம்தானே கெடு கொடுத்திருந்தார்..இரண்டு நாள்கள்தானே ஆயிற்று..இந்த கண் வேறு சரியா தெரியவில்லை..இதுவரைக் கோடுகளாய் தெரிந்த பிம்பங்கள் புள்ளிகளாய் தெரிகிறதே..அப்போ நான் செத்து போகப் போகிறனா??? என்னை சுற்றி ஒரு 10 புள்ளிகள் நிற்கும் போல இருக்கிறதே..இவர்களுக்கு என்ன வேண்டும்..ம்…ஒரு புள்ளி பக்கத்தில் வருகிறது..ஓ..மூத்தவனா..அருகில் இருப்பது யார்..மூத்த மருமகளா..

“அப்பா…ஆபிஸ்ல லீவு கொடுக்க மாட்டேங்குறாங்க..ஏற்கனவே உங்களை ஹாஸ்பிடல்ல பார்க்குறதுக்காக ஒரு வாரம் லீவு போட்டிருந்தேன்..லாஸ் ஆப் பே..நான் கிளம்புரேன்பா..எல்லாம் முடிஞ்சப் பிறகு வரேன்..”

ம்…எனக்கு சிரிப்புத்தான் வருது..எல்லாம் முடிஞ்சப் பிறகுன்னா, நான் செத்தப்பிறகா..அப்புறம் நீ வந்தால் என்னா, வராவிட்டால் என்ன..மனசை யாரோ இறுக்கி பிசைவது போல இருந்தது..சொல்லிவிட்டு கிளம்பிச் சென்றான் போல. அவனுடைய கால்களை மட்டும்தான் பார்க்க முடிந்தது..எத்தனை தடவை அந்த பிஞ்சுக் கால்கள் நெஞ்சில் உதைத்திருக்கும்…அவன் சின்னப்பிள்ளையா இருக்கும்போது மஞ்சக்காமாலை வந்த போது நான் டாக்டர் காலை பிடித்து கெஞ்சியது நினைவுக்கு வந்து தொலைத்தது..ஒரு மாசம் மூத்தவனுக்காக ஹாஸ்பிடலில் இருந்து பகலில் தூங்கி, ராத்திரியில் மருந்து கொடுத்து “லாஸ் ஆப் லைவ்” வுக்கு கிடைத்த நன்றி “லாஸ் ஆப் பே..”

“அப்பா..நாந்தாப்பா..கேக்குதாப்பா”…இது யாரு, சன்னமாய் ஒரு குரல் கேட்கிறதே..மூத்த பொண்ணு…அம்மாடி, வாயை திறந்து உன்னை வான்னு சொல்லக்கூட முடியலயே..கூட யாரு..அருமைப் பேத்தியல்லவா..வாடி செல்லம்..நான் படுத்திருக்கும்போது என் நெஞ்சில உக்கார்ந்துக்கிட்டு ரைம்ஸ் சொல்லுவியே..இப்பச் சொல்லுடா..

“ஏண்டி..அந்த உயிலைப் பத்திக் கேளுடி..” யார் முணுமுணுக்கிறது..மருமகனா….பொண்ணைக் கல்யாணம் பண்ணும்போது “மாமா..உங்க சொத்து எதுவும் வேணாம்..உங்க மகளும், நீங்களும்தான் எனக்கு பெரிய சொத்து..” நீங்க தானே

“சும்மா இருங்க..அப்பாவால கண்ணைத் தொறக்க முடியல..வாய் கூடத் தொறக்க முடியல..எப்படிங்க சொல்லுவாரு.நான் அண்ணங்கிட்ட பேசிக்கிறேன்..என் பங்கை எப்படிங்க விடுவேன்..”

எங்கே என் கடைக்குட்டிப் பையன்..ஆசைஆசையா படிக்க வச்சு அமெரிக்காவுக்கு அனுப்புறப்ப நானும் உங்க அம்மாவும் கண் முழுக்க தண்ணிய வச்சுக்கிட்டு பிளைட்ட பார்த்து அழுதோமே..எங்க என் செல்வம்…அதோ..என்னை நோக்கி வர்றான்..என்னால வாயைத் திறக்க முடியலேயே..என் ராசா, பார்த்து இரண்டு வருசம் ஆச்சேப்பா..இப்படி இளைச்சுப் போயிட்டேயேப்பா..

“அக்கா, அமெரிக்காவுல இருந்து வந்து 2 வாரம் ஆச்சு..நான் போகனும்..உனக்குத்தான் இப்ப அமெரிக்காவுல இருக்கிற நிலவரம் தெரியுமே..நான் கண்டிப்பா இருக்கணுமா??..நீங்களே எல்லாக் காரியத்தையும் பண்ணலாமே..நான் வேணா 10,000 குடுத்துட்டு போறேன்..”

ம்ம்…..பம்பரம் வாங்குறதுக்காக உன் உள்ளங்கையில ஒரு ரூபாய வைக்கிறப்ப, உன் முகத்துல தெரிஞ்ச சந்தோசத்தைப் பார்த்துக்கிட்டே இருக்கலாம்னு உங்கம்மாக்கிட்ட சொன்னேன்

அய்யோ உங்கம்மாவை மறந்துட்டேனே..எவ்வளவுதான் அவமானப்பட்டாலும் சிரிச்சிக்கிட்டே முந்தானையால என் கண்ணீரத் தொடச்சு விட்டாளே..கண்டிப்பா நீ சொர்க்கத்துலதாண்டி இருப்ப..எனக்கு தெரியும்..சாகுறப்ப உன் கையப் புடிச்சிக்கிட்டு அழுதேனே..அப்பக்கூட சின்னப்புள்ள மாதிரு உன் முந்தானயால கண்ணீரைத் தொடச்சி விட்டீயே..என் உயிரே..கொஞ்ச நேரம் பொறு..இதோ, வந்து விடுகிறேன்..அங்கு யாரும் நமக்கு இல்லை..சந்தோசமா இருப்போம்..உயில் இல்ல, காசு இல்ல, மருமகள், மகன் , சொந்தக்காரன் இல்ல, கண்ணீர் இல்ல, அவமானம் இல்ல..இங்க நாம் தவறிய வாழ்க்கைய அங்கு வாழ்வோம்..

“ஏம்பா, பெரியவர் கண்ணு சொருகுற மாதிரி தெரியுது..சொந்தக்காரங்களுக்கு சொல்லி அனுப்புங்கப்பா..”

“ஏதோ, வாயில பால் ஊத்தனும்னு சொல்லுவாங்களேப்பா, யாராவது பால் கொண்டுவாங்குப்பா..”

“ஏன்யா..யாராவது மேளத்துக்கு சொன்னீங்களாய்யா..”

“அவிங்க அப்பவே வந்துக்கிட்டாயிங்கப்பா..”

இதோ வந்துவிட்டேண்டி என் மனையாளே, உன் முகமா அது..சிரிக்காதடி..எனக்கு பிடித்த அடைத் தோசைப் பண்ணிக் கொடுப்பாயா..பசிக்குதுடி..இந்த சிரிப்புதானடி 50 வருடமாக என்னைக் கட்டிப் போட்டது..

“அப்பா..நாங்க பேசுறது கேக்குதா..”

“அப்பா, அப்பா..”

“அய்யா..நாங்க பேசுறது கேக்குதா..முடிஞ்சுடுச்சுன்னு நினைக்கிறேன் தம்பி..மேளத்தை அடிக்கச் சொல்லுங்க..”

வந்து விட்டேண்டி என் செல்லம்..நீ இருக்கிற இடத்துக்கு…

(மேளம்)

டர்டக்க, டர்டக்க, டர்டக்க, டர்டக்க, டர்டக்க………

டர்டக்க, டர்டக்க, டர்டக்க, டர்டக்க………..

டர்டக்க, டர்டக்க, டர்டக்க………

டர்டக்க, டர்டக்க………..

டர்டக்க……

டர்டக்……..

டர்ட……

டர்…….

ட………

……….

(பாதி பதிவு எழுதிக் கொண்டிருக்கும்போது அம்மாவிடம் இருந்து போன் வந்தது..மாமா தவறி விட்டார்..)

இது 'உரையாடல்: சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது

http://thatstamil.oneindia.in/art-culture/essays/2009/0626-short-story-competition.html


17 comments:

ஷங்கி said...

என்ன சொல்றதுன்னு தெரியலை! இடுகையின் Flow வைப் பாராட்டறதா இல்ல... ப்ச்! மாமா குணமடைய பிரார்த்திப்போம்.

ManivKa said...

தொட்டுடீங்க, நம்ம அக்கா மக லண்டன்லே அல்ப்ப ஆயுசிலே உயிரை மாய்ச்சுக்கிட்டா. பயணம் 24 மணி நேரம். சனி காலையிலே லண்டனில் இறங்கி, ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுவிட்டேன் செவ்வாய் வந்து சேர்ந்தேன். ஏனென்றால் சொந்த வேலை, அங்கிருந்தால் உழைப்பு வராது. மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கு.

Vadielan R said...

மனது பிசைந்து விட்டது. மாமாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்

சித்து said...

மாமா அத்தையுடன் நிம்மதியாக சொர்க்கத்தில் அடைத் தோசை சாப்பிட ஏன் பிரார்த்தனைகள்.

இளைய கவி said...

மனது பிசைந்து விட்டது. மாமாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்

இளைய கவி said...

sorry i couldn't type in tamil thts why copy past.

roja said...

really nice .I am also pray for ur uncle.I hope his soul has gone with full of peace.

உடன்பிறப்பு said...

நெஞ்சை தொட்ட பதிவு

ஷங்கி said...

என் முதல் பின்னூட்டத் தவறுக்கு வருந்துகிறேன். பதிவின் வலியில் கண்கட்டி, அடைப்புக்குள் இருந்த கடைசி வரியைப் பார்க்கவில்லை. மாமாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். மீண்டும் தவறுக்கு வருந்துகிறேன்!

அவிய்ங்க ராசா said...

//////////////
ManivKa said...
தொட்டுடீங்க, நம்ம அக்கா மக லண்டன்லே அல்ப்ப ஆயுசிலே உயிரை மாய்ச்சுக்கிட்டா. பயணம் 24 மணி நேரம். சனி காலையிலே லண்டனில் இறங்கி, ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுவிட்டேன் செவ்வாய் வந்து சேர்ந்தேன். ஏனென்றால் சொந்த வேலை, அங்கிருந்தால் உழைப்பு வராது. மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கு.
25 June, 2009 8:50 P
/////////////////
வருகைக்கு நன்றி மணி, சில நேரம் இந்த தியாகங்களை செய்ய வேண்டி இருக்கிறது

அவிய்ங்க ராசா said...

//////////////
25 June, 2009 8:50 PM
வடிவேலன் ஆர். said...
மனது பிசைந்து விட்டது. மாமாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
25 June, 2009 10:51 PM
////////////////////
நன்றி வடிவேல்

அவிய்ங்க ராசா said...

///////////////
25 June, 2009 10:51 PM
சித்து said...
மாமா அத்தையுடன் நிம்மதியாக சொர்க்கத்தில் அடைத் தோசை சாப்பிட ஏன் பிரார்த்தனைகள்.
26 June, 2009 4:06 AM
/////////////
சோகத்திலும் சிரிப்பு வருகிறது..))

அவிய்ங்க ராசா said...

////////////////////
இளைய கவி said...
sorry i couldn't type in tamil thts why copy past.
////////////

பரவாயில்லை இளையக்கவி..நீங்கள் பின்னூட்டம் போட்டதே எனக்கு ஆறுதல்

அவிய்ங்க ராசா said...

/////////////////
சங்கா said...
என் முதல் பின்னூட்டத் தவறுக்கு வருந்துகிறேன். பதிவின் வலியில் கண்கட்டி, அடைப்புக்குள் இருந்த கடைசி வரியைப் பார்க்கவில்லை. மாமாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். மீண்டும் தவறுக்கு வருந்துகிறேன்!
26 June, 2009 10:31 A
////////////////
பரவாயில்லை சங்கர்..வருகைக்கு நன்றி

அவிய்ங்க ராசா said...

////////////////
26 June, 2009 6:53 AM
உடன்பிறப்பு said...
நெஞ்சை தொட்ட பதிவு
26 June, 2009 10:28 AM
//////////////////
நன்றி உடன்பிறப்பு அண்ணே

S.A. நவாஸுதீன் said...

நிச்சயம் பரிசு உங்களுக்குத்தான் ராசா. ரொம்ப நெகிழ்ச்சியான அதே சமயம் சீரான நடையுடன். ரொம்ப நல்லா இருக்கு. வெற்றி பெற வாழ்த்துக்கள்

Suresh said...

வாழ்த்துகள் வெற்றி பெற நானும் ஒரு கதை எழுதி இருக்கேன் டைம் இருந்தா படிச்சுங்க நண்பா

Post a Comment