நேத்தைக்கு கோவாலு நம்ம வீட்டுக்கு சாப்பிட வந்திருந்தான்..சரி, சாப்பிடறப்ப ஏதாவது நிகழ்ச்சி போடலாம்னு டி.விய போட்டா விஜய் டி.வி. அவார்டஸ் ஒன்னு போட்டாயிங்கண்ணே..நம்ம கோவாலுக்கு சந்தோசம் தாங்க முடியல….”டே..ராசா..சூப்பர்டா..இன்னைக்கு புல்லா பார்த்துட்டுத்தான் போவேண்டா..”ன்னு சொன்னான்..எனக்கு கண் கலங்கிருச்சுண்ணே..”டே கோவாலு..பரவாயில்லைடா..கலைஞர்கள் அவார்டு வாங்குறத பார்த்து சந்தோசப்படுறயேடா..” அதுக்கு கோவாலு..”போடாங்க..அவார்டு யாருக்குடா வேணும்..இங்கதாண்டா ஜிகிடிங்க அரைகுறையா டிரெஸ் போட்டு சும்மா குமால்டியா வருவாயிங்க..வீட்டுல இதெல்லாம் இந்த மாதிரி நிகழ்ச்சியெல்லாம் பார்க்க முடியலடா..பொண்டாட்டி உதைக்கிறா…”ன்றான்..அடப்பாவி ஒரு நிமிசத்துல உன்னை நல்லவனுன்னு நினைச்சிட்டனடா..
என்னையே நொந்துகிட்டு நிகழ்ச்சிய போட்டேண்ணே..கோவாலு அலறிட்டான்..”டே..ராசா..விஜய் டி.வி போடச் சொன்னா டிஸ்கவரி சானல் போடுறயா..இங்க பாரு ஒரு காட்டுப் பல்லி வந்து கீச், கீச் ன்னு கத்துது..” நல்லா உத்து பார்த்தா நம்ம திவ்யதர்சினி(D.T). கோவலு மிரண்டுட்டான்..”டே வேணான்டா ராசா..ஆப் பண்ணிடுடா..இத பேச ஆரம்பிச்சுட்டா நிப்பாட்டவே நிப்பாட்டாது..தான் உசிரு போக கத்துறது மட்டுமில்லாம அடுத்தவய்ங்க உசிரு போக கத்தும்..” நாந்தான் அவனை சமாதானப்படுத்தி பார்க்க வைச்சேன்..
பார்த்தா நம்ம “நீயா நானா கோபிநாத்”..நான் விசிலடிக்க ஆரம்பிச்சுட்டேன்..நம்மளுக்கு பிடிச்ச ஆளு..கொஞ்சம் காது கொடுத்து கேக்க ஆரம்பிச்சா, அறுவை தாங்க முடியலை..சார் என்ன இது..உங்க மேல இருந்த மதிப்பு மரியாதை எல்லாம் போயிடுச்சு..நீங்களும் ரபி பெர்னாட் மாதிரி இப்படி ஜால்ரா தட்ட ஆரம்பிச்சிட்டிங்களே..உங்களுக்கே கூசாதா..ஏன் சார் ஒரு சபை நாகரிகம் இல்லை..ஹாரிஸ் ஜெயராஜ், கவுதம் மேனன் டீசண்டா பேசுறாங்களே..உங்களுக்கு ஏன் இந்த சின்னப்புள்ளத்தனம்..ஏதோ அவிங்க ஸ்கூலுல டூ விட்டுக்கிட்ட மாதிரி மேடையில வச்சுக்கிட்டு “பிரிந்து போன ஆடுகள் சேர்ந்த போது..” ன்னு பேசிக்கிட்டு..உங்களை கொஞ்சம் அறிவு ஜீவின்னு நினைச்சது எங்க தப்புத்தான் சார்..அதை விடுங்க..கமல் என்ன கடவுளா..இப்படி ஜால்ரா தட்டிறீங்க..”உலக நாயகன்..” “படைத்தளபதி..”,”சொறித்தளபதி….” நீயா நானால நீங்க பேசுறதக் கேட்டுட்டு ரொம்ப ஏமாந்துட்டோம் சார்
அவார்டு வாங்க வர்றவய்ங்க எல்லாம் “கமல் சார் வாங்குற இந்த அவார்ட்ஸ்..”, “கமல் சார் எவ்வளவு பெரிய ஜீனியஸ்”, “கமல் சார்ன்னா எனக்கு உசிரு..””கமல், கமல்..” என்னதான்யா நடக்குது..கமல் அவார்ட்ஸா, விஜய் அவார்ட்ஸா….இப்பத் தெரியுது ரஜினி ஏன் பங்க்சனுக்கு வரலைன்னு..ஏன்னா அவரு இதை விட எதிர்பார்ப்பாரு..அப்புறம் வர்றவயிங்க எல்லாம் “ரஜினி சார், கமல் சார்” சொல்லியே மூச்சை விட்டுறுவாயிங்க..அட ராசாக்களா, கமல், ரஜினி எல்லாம் லெஜண்ட்ஸ்தான் ஒத்துக்குறோம்..அதை ஏன்யா இந்த மேடையில ஜால்ரா தட்டுறீங்க..வேணுன்னா ஒன்னு பண்ணுங்க..”கமல், ரஜினிக்கு ஜால்ரா தட்டும் நிகழ்ச்சி” ன்னு வச்சிக்கிட்டு நல்லா ஜால்ரா தட்டுங்க..விஜய், சன் டி.வி நேரடி ஒளிபரப்பு பண்ணுவாயிங்க….
அடுத்து கௌதமிக்கு “சிறந்த டிசைனர்” ன்னு அவார்ட்ஸ் கொடுத்தவுடனே நம்ம கோவாலு டென்சன் ஆயிட்டான்..”ராசா..இதை தட்டிக் கேக்கணும்டா”..விடுடா அவிங்க அவார்டு, யாருக்கு வேணும்னாலும் கொடுத்துட்டு போறாயிங்க..
நம்ம லஷ்மிராய் வந்து டான்ஸ் ஆடினப்புறம்தான் நம்ம கோவாலு கோவம் குறைஞ்சுச்சு….கொஞ்ச நேரத்துல நம்ம கோவாலு அழுக ஆரம்பிச்சுட்டான்….படத்துல கூட சிவக்குமார் இப்படி ஆக்ட் கொடுக்க மாட்டாரு..நவரசத்தை பிழிஞ்சி எடுத்துட்டாரு….”மாயாண்டி குடும்பத்தார்” மாதிரு “சிவக்குமார் குடும்பத்தார்” ன்னு வச்சிருக்கலாம்..முடியலடா சாமி….எனக்கு லைட்டா கண்ணக் கட்ட நம்ம கோவாலு கேவி கேவி அழுதுக்கிட்டு இருக்கான்..”கோவாலு..உனக்கு அழுகனும்னு ஆசையா இருந்து இதப்பார்த்து அழுகாதே..இத விட நல்ல சீரியல் போடுவாய்ங்க.. அதப்பார்த்து அழு.” விஜய் டி.விக்கு நல்லா கொண்டாட்டமா இருந்திருக்கும்..அழுக அழுக டி.ஆர்.பி ரேட்டிங் கூடுமில்ல..இதுல நம்ம கோபிநாத் வேற..”என்ன ஒரு உணர்வுப்பூர்வமான நிகழ்ச்சி..நல்லா அழுவுங்க சார்..இன்னும் நல்லா அழுவுங்க சார்.. எல்லாரும் எந்திருச்சு நின்னு ஒரு ஸ்டாண்டிங் அழுவேசன் கொடுங்க” ஸ்..அப்பா..முடியல கோபி சார்..
எனக்கு தெரிஞ்சு மேடையில பேசத்தெரியாவதங்க ரெண்டு பேர்..ஒன்னு ரஜினி, அடுத்தது, மனோரமா ஆச்சி….வழக்கம் போல சுத்தமா பேசத்தெரியாம ஏதோ பேசிக்கிட்டே இருந்தாங்க..போதும் ஆச்சியம்மா..இதோட முடிச்சுக்கிருவோம்.. கொஞ்சம் மனசைக் நெகிழ வச்சது எதுன்னா, அஞ்சாதே ரமேஷ் அவர்களின் பேச்சுதான்..மத்தவர்கள் மாதிரி மனசுல ஒன்னு வச்சிக்கிடு வாயில ஒன்னு பேசாம மனசில் இருக்குறத அப்பிடியே பேசினார்..ஆனா அவரும் “நான் டம்மி குருவி..நிஜக் குருவி நம்ம இளையத் தளபதிதான்” ன்னு சொல்லுறப்ப மனசு கஷ்டமாப் பேச்சு…….ஒரு பெரியார் என்ன ஆயிரம் பெரியார் வந்தாக் கூட இவிங்களைத் திருத்த முடியாதுண்ணே..
இவிங்களை மாதிரியே நானும் அவார்டு கொடுப்பேண்ணே..கீழ பாருங்க
சிறந்த கொலைவெறியைக் கிளப்புதல் அவார்டு
திவ்யதர்சினி(D.T) – காட்டுக் கத்தல் கத்துனதுக்கு
சிறந்த ஜால்ரா மற்றும் அறுவையாளர் அவார்டு
எல்லாத்துக்கும் ஜால்ரா தட்டி வளவளன்னு பேசி அறுத்ததுக்கு
சிறந்த செண்டிமெண்ட் திலகம்
சிவக்குமார்..நல்லா இருக்கீங்களான்னு கேட்டாக்கூட அழுததற்கு
சிறந்த பேசத்தெரியாதவர் அவார்டு
மனோரமா ஆச்சி..செண்டிமென்டா பேசுறேன்னு ஏதெதோ பேசுனதுக்கு
சிறந்த அப்பாவி அவார்டு
அஞ்சாதே ரமேஷ்..அப்பாவியா மனசுல உள்ளதை பேசுனதுக்கு
சிறந்த மோசமான அவார்டு
கௌதமிக்கு கொடுத்த அவார்டு…
சிறந்த மோசமான பேச்சு அவார்டு
பார்த்திபன்..ஜோக்கா பேசுறேன்னு சினேகாவை பத்தி அடிச்ச கமெண்ட்
சிறந்த ஏமாத்துறவயிங்க அவார்டு
நல்லா செண்டிமெண்ட் காட்டி காசு பார்த்ததுக்கு
சிறந்த காண்டு ஆனவியிங்க அவார்டு
சன்.டிவி..
சிறந்த மாட்டிக்கிட்டவயிங்க அவார்டு
வேற யாரு..நம்மளுக்குதான்..
40 comments:
//சிறந்த அப்பாவி அவார்டு
அஞ்சாதே ரமேஷ்..அப்பாவியா மனசுல உள்ளதை பேசுனதுக்கு//
ராசா.,
எனக்கே தெரியாம எம்பேருலயும் அவார்டாஆஆஆ?????
கமல்-விஜய் விருதுகள் ஒரு குழப்பம்
படித்துவிட்டீர்களா தல..,
ஞாயிறு உங்க பதிவை எதிர் நோக்கி உட்காந்து இருந்தேன் வெரி குட்.. இதோ படிச்சிட்டு வரேன்
/போடாங்க..அவார்டு யாருக்குடா வேணும்..இங்கதாண்டா ஜிகிடிங்க அரைகுறையா டிரெஸ் போட்டு சும்மா குமால்டியா வருவாயிங்க..வீட்டுல இதெல்லாம் இந்த மாதிரி நிகழ்ச்சியெல்லாம் பார்க்க முடியலடா..பொண்டாட்டி உதைக்கிறா…”/
நண்பனை பற்றி சொல் நான் உன்னை பற்றி சொல்கிறேன் என்று சொல்லுவாங்க
இப்போ தெரியுது நம்ம ஏன் பிரண்டஸா இருக்கோம்னு.. ஹா ஹா
//“நீயா நானா கோபிநாத்”..நான் விசிலடிக்க ஆரம்பிச்சுட்டேன்..நம்மளுக்கு பிடிச்ச ஆளு..கொஞ்சம் காது கொடுத்து கேக்க ஆரம்பிச்சா, அறுவை தாங்க முடியலை//
200/100 உண்மை நானும் அதே நினைத்தேன் டைமிங்கா பேசி கலக்கும் கோபி இதில் ரொம்ப சோதப்பி கோட்டை தான் விட்டாரு...
//அடுத்து கௌதமிக்கு “சிறந்த டிசைனர்” ன்னு அவார்ட்ஸ் கொடுத்தவுடனே நம்ம கோவாலு டென்சன் ஆயிட்டான்..”ராசா..இதை தட்டிக் கேக்கணும்டா”..விடுடா அவிங்க அவார்டு, யாருக்கு வேணும்னாலும் கொடுத்துட்டு போறாயிங்க..//
இப்போ தெரிஞ்சு போச்சு நம்ம கோவாலு உங்க மனசாட்சி ஹீ ஹீ
//நம்ம லஷ்மிராய் வந்து டான்ஸ் ஆடினப்புறம்தான் நம்ம கோவாலு கோவம் குறைஞ்சுச்சு….//
ஹா ஹ மிஸ் செஞ்சிட்டேனே சரி டவுன்லோட் செய்து பார்த்துவிடலாம் கோவாலு
//இப்படி ஆக்ட் கொடுக்க மாட்டாரு..நவரசத்தை பிழிஞ்சி எடுத்துட்டாரு…//
நல்ல தருணம் ஆனா ரொம்ப மிக படுத்தி பேசி பேசி அதை கெடுத்துடாங்க கொஞ்சம் ஒவர் ஆக்டிங் மாதிரி ஆகி போச்சு காரணம் நம்ம கோபி அண்ணே எடுத்து எடுத்து கொடுக்க ஜிங் ஜிங் ஏன்யா ஏன்
//இதுல நம்ம கோபிநாத் வேற..”என்ன ஒரு உணர்வுப்பூர்வமான நிகழ்ச்சி..நல்லா அழுவுங்க சார்..இன்னும் நல்லா அழுவுங்க சார்.. எல்லாரும் எந்திருச்சு நின்னு ஒரு ஸ்டாண்டிங் அழுவேசன் கொடுங்க” ஸ்..அப்பா..முடியல கோபி சார்..//
கோபி அண்ணாச்சி இதுல இப்படி சோதப்பு சோதப்பு அதவாது இவர் கரெக்ட்டா பேசுவார் ஒவர் ஜிங் ஓவர் டோஸ் ஓவர் பேச்சு எல்லாம் இருக்காது என்ற என் எண்ணத்தை அண்ணாத்தை அன்று சுக்குநூறா நீ எப்படி இப்படி நிணைக்காலம் என்று :-( கிழிச்சிட்டாரு
//சிறந்த அப்பாவி அவார்டு
அஞ்சாதே ரமேஷ்..அப்பாவியா மனசுல உள்ளதை பேசுனதுக்கு//
ஹா ஹா ஆமாம் நான் பார்க்கவில்லை இதில் கொடுமை என்னவென்றால் கமலுக்கு விஜய் டிவி விஜய் கையால் அவார்ட் கொடுத்து அவரை அசிங்க படித்தியது தான்.. வாங்கியது அவரது பெருந்தண்மை என்ன செய்ய
விஜய் டிவி அவர்ட்ஸ் இந்த தடவை சரி சொத்ப்பல் அவர்ட்ஸ்
உணர்ச்சி வசப்பட்டு பேசறதுல சிவகுமர்க்கு அடுத்து இங்க ஒருத்தர் அந்த அவார்ட் வாங்கிட்டு போறதுக்கு தயாரா இருக்காரு..
அது யார்னு சொல்றவங்களுக்கு என் சார்பா 50 பின்னுட்டங்கள் இலவசம்..:))
//வினோத்கெளதம் said...
உணர்ச்சி வசப்பட்டு பேசறதுல சிவகுமர்க்கு அடுத்து இங்க ஒருத்தர் அந்த அவார்ட் வாங்கிட்டு போறதுக்கு தயாரா இருக்காரு..
அது யார்னு சொல்றவங்களுக்கு என் சார்பா 50 பின்னுட்டங்கள் இலவசம்..:))
//
One and Only Sakkarai
sakkaraiyaa pesuravarunnu solla vanthen
//நாந்தான் அவனை சமாதானப்படுத்தி பார்க்க வைச்சேன்..//
அப்போ அந்த சதிக்கு நீங்களும் உடந்தையா?
//ஒரு பெரியார் என்ன ஆயிரம் பெரியார் வந்தாக் கூட இவிங்களைத் திருத்த முடியாதுண்ணே.//
................
சரியா சொன்னீங்கண்ணே...
இந்த அவார்ட்டு படுத்துற பாடு,
கூப்பிட்டுவச்சி மண்டையில ஒரே போடு!
தாமரை பேச்சு கேட்டீங்கள? மிகவும் அருமை!
உண்மையிலயே தாமரைதான் நல்லா இயல்பா வந்துட்டு இயல்பா பேசிட்டும் போனாங்க..
என்னன்னே நாங்க தான் வேற வழி இல்லாம இந்த மொக்கைய பாத்து கெடக்கோம் நீங்க அங்க உக்காந்துட்டு இதையே தான் பார்க்கனுமா???
//One and Only Sakkarai
sakkaraiyaa pesuravarunnu solla vanthen//
சைகிள் கேபில் ;) ஹா ஹா அட பாவிகளா ஆட்டோ இல்லை புல் டவுஸர் விட்டு காலி பண்ணிடுவான் அந்த வினோத்...
தவறவிட்டுவிட்டேன்,கண்டிப்பாக பார்த்துவிடுகிறேன்.
நல்ல பதிவு...!
http://vetripages.blogspot.com/2009/06/blog-post_6845.html
எனது கன்னி எழுத்து முயற்சிக்கு உங்கள் பின்னூட்டம் வழியாகவும்,ஓட்டு போட்டும் ஆதரவு தருக..!
குறைகள் இருப்பின் பின்னூட்டம் வாயிலாகச் சுட்டிக்காட்டவும்
I like it :-)
:-))
கமலுக்கு விருத, விஜய் கால்ல விழுந்துல்ல கொடுத்தாரு?
/////////////////
அப்பாவி முரு said...
//சிறந்த அப்பாவி அவார்டு
அஞ்சாதே ரமேஷ்..அப்பாவியா மனசுல உள்ளதை பேசுனதுக்கு//
ராசா.,
எனக்கே தெரியாம எம்பேருலயும் அவார்டாஆஆஆ?????
20 June, 2009 7:16 PM
////////////////////////
ஆமாங்க முருகன்..நானே அசந்து போயிட்டேன்..)))
/////////////////////
20 June, 2009 7:16 PM
SUREஷ் (பழனியிலிருந்து) said...
கமல்-விஜய் விருதுகள் ஒரு குழப்பம்
படித்துவிட்டீர்களா தல..,
20 June, 2009 7:45 PM
//////////////////////
படிச்சுட்டேன்…சூப்பர் தல
////////////////
Suresh said...
//சிறந்த அப்பாவி அவார்டு
அஞ்சாதே ரமேஷ்..அப்பாவியா மனசுல உள்ளதை பேசுனதுக்கு//
ஹா ஹா ஆமாம் நான் பார்க்கவில்லை இதில் கொடுமை என்னவென்றால் கமலுக்கு விஜய் டிவி விஜய் கையால் அவார்ட் கொடுத்து அவரை அசிங்க படித்தியது தான்.. வாங்கியது அவரது பெருந்தண்மை என்ன செய்ய
விஜய் டிவி அவர்ட்ஸ் இந்த தடவை சரி சொத்ப்பல் அவர்ட்ஸ்
20 June, 2009 7:58 PM
/////////////////
வருகைக்கு நன்றி சுரேஷ்..நீங்கள் சொன்னது 100% உண்மை
/////////////////
வினோத்கெளதம் said...
உணர்ச்சி வசப்பட்டு பேசறதுல சிவகுமர்க்கு அடுத்து இங்க ஒருத்தர் அந்த அவார்ட் வாங்கிட்டு போறதுக்கு தயாரா இருக்காரு..
அது யார்னு சொல்றவங்களுக்கு என் சார்பா 50 பின்னுட்டங்கள் இலவசம்..:))
20 June, 2009 9:59 PM
பித்தன் said...
//வினோத்கெளதம் said...
உணர்ச்சி வசப்பட்டு பேசறதுல சிவகுமர்க்கு அடுத்து இங்க ஒருத்தர் அந்த அவார்ட் வாங்கிட்டு போறதுக்கு தயாரா இருக்காரு..
அது யார்னு சொல்றவங்களுக்கு என் சார்பா 50 பின்னுட்டங்கள் இலவசம்..:))
//
One and Only Sakkarai
sakkaraiyaa pesuravarunnu solla vanthen
20 June, 2009 10:28 PM
//////////////////
ஆஹா..இந்த விளையாட்டுக்கு நான் வரலைப்பா..))
////////////////
20 June, 2009 10:28 PM
என் பக்கம் said...
//நாந்தான் அவனை சமாதானப்படுத்தி பார்க்க வைச்சேன்..//
அப்போ அந்த சதிக்கு நீங்களும் உடந்தையா?
//ஒரு பெரியார் என்ன ஆயிரம் பெரியார் வந்தாக் கூட இவிங்களைத் திருத்த முடியாதுண்ணே.//
................
20 June, 2009 11:30 PM
கலையரசன் said...
சரியா சொன்னீங்கண்ணே...
இந்த அவார்ட்டு படுத்துற பாடு,
கூப்பிட்டுவச்சி மண்டையில ஒரே போடு!
21 June, 2009 12:01 AM
/////////////////
வருகைக்கு நன்றி என்பக்கம், கலை..கரெக்டா சொன்னீங்க..))
/////////////////////////////////
21 June, 2009 12:01 AM
ரஜினி ரசிகன் said...
தாமரை பேச்சு கேட்டீங்கள? மிகவும் அருமை!
21 June, 2009 12:17 AM
தீப்பெட்டி said...
உண்மையிலயே தாமரைதான் நல்லா இயல்பா வந்துட்டு இயல்பா பேசிட்டும் போனாங்க..
21 June, 2009 2:14 AM
////////////////////////
தாமரைப் பேச்சு சூப்பர்..நான் அத எழுத மறந்துட்டேன்
//////////////////////
சித்து said...
என்னன்னே நாங்க தான் வேற வழி இல்லாம இந்த மொக்கைய பாத்து கெடக்கோம் நீங்க அங்க உக்காந்துட்டு இதையே தான் பார்க்கனுமா???
21 June, 2009 2:34 AM
/////////////////////
நன்றி சித்து..கோவாலு சதி பண்ணிட்டான்..))
//////////////////
21 June, 2009 5:35 AM
♥♪•Vetri•♪♥ said...
தவறவிட்டுவிட்டேன்,கண்டிப்பாக பார்த்துவிடுகிறேன்.
நல்ல பதிவு...!
http://vetripages.blogspot.com/2009/06/blog-post_6845.html
எனது கன்னி எழுத்து முயற்சிக்கு உங்கள் பின்னூட்டம் வழியாகவும்,ஓட்டு போட்டும் ஆதரவு தருக..!
குறைகள் இருப்பின் பின்னூட்டம் வாயிலாகச் சுட்டிக்காட்டவும்
21 June, 2009 7:47 AM
/////////////////////////
நல்லா எழுதுறீங்க..வாழ்த்துக்கள்
//////////////
21 June, 2009 7:47 AM
♫சோம்பேறி♫ said...
I like it :-)
21 June, 2009 9:52 AM
///////////////
நன்றி சோம்பேறி..நமீதாவோட “இது” எப்படி போயிக்கிட்டு இருக்கு….))
////////////////
21 June, 2009 11:49 AM
சரவணகுமரன் said...
கமலுக்கு விருத, விஜய் கால்ல விழுந்துல்ல கொடுத்தாரு?
21 June, 2009 11:50 AM
///////////////////
நன்றி சரவணன்..அப்பா, அம்மா, ஆசிரியர், கடவுள் தவிர யார் காலிலும் விழுவதை நான் ஆதரிப்பதில்லை
//
சிறந்த ஜால்ரா மற்றும் அறுவையாளர் அவார்டு
எல்லாத்துக்கும் ஜால்ரா தட்டி வளவளன்னு பேசி அறுத்ததுக்கு
//
இது யாருக்கு கோபிநாதுக்கா?
//ராஜா said...
நன்றி சரவணன்..அப்பா, அம்மா, ஆசிரியர், கடவுள் தவிர யார் காலிலும் விழுவதை நான் ஆதரிப்பதில்லை
//
குட். நானும் அதே தான். அப்ரைசல் நேரத்தில் மட்டும் இந்த் லிஸ்டில் மேனேஜர் பேரையும் சேர்த்திப்பேன்
நான் ரொம்பவே லேட் போல...!!! எல்லாரும் பின்னி பெடல் எடுத்து இருக்கீங்க..... இருந்தாலும்..
1. நாகேஷ் பத்தி பேசினது... ரொம்பவே நல்ல தருணம்...
மத்த படி.. அண்ணன் கோபி ... "படவா" கோபிய விட படுத்தி எடுத்துட்டாரு.... தாங்கல...
உங்க மேல வச்சு இருந்த total respect போச்சு கோபி...
போன வருஷம் "பார்த்தி வீரன்" கார்த்திக்கு - 2008 ல "ராஜ மொக்கை" சாந்தனுவுக்கு BEST NEW FACE Award!! இந்த லட்சணத்துல அவனோட brilliant speech / Joke [mimic like Balram Naidu].. வேற.. நேர bathroom போய் ...
..............
..............
வாந்தி எடுத்துட்டேன்.. [அம்புட்டுத்தேன்...]
இந்த பங்க்சன்ல பயங்கர காமடி என்னன்னா? "எவ்வளவோ பண்ணிட்டோம்;இத பண்ண மாட்டோமா" னு சொல்லிட்டு.. அப்டியே ஈ ஆடாத விஜய் பேஸ் பத்து அதோ தல வந்து இருக்குனு பிரேம்ஜி சொன்னது தான்.....!!! [விழுந்து சிரிச்சதுல ரெண்டு ஓடு ஒடஞ்சுடுச்சு..]
இப்புடி எல்லாரையும் காலி பண்ணிடீங்க.... ராசா....
அவீங்கள [VIjay TV] vida... அவீங்க [ராசா] அவார்டு தான் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அவார்ட் மாதிரி தெரியுது....
last but not least...
அவ்வலவூ...... மோசமாவா இருந்த[த்]தூ...... [மொக்கைய முழுசா பாக்கல....]
nalla jaalra awards.. pongaya neengalum unga awards-m..
நான் பார்க்கவேயில்லையே!
muttaal thanama yedhuvum kirukkathinga.. blogna enna vaenaam yeludhalaama?
அண்ணனே இதெல்லாம் பரவாயில்லை. சிறந்த புதுமுக நடிகர்ன்னு 'சாந்தனு'வுக்கு குடுத்தானுங்க பாருங்க. அடப்பாவிகளா... 'சக்கரகட்டி'ன்ற மகா மொக்கை படத்தை பார்த்தீங்களா இல்லையா???!!!
Post a Comment