Saturday, 13 June 2009

ஆஸ்திரேலியாவுல ஏன் அடிக்க மாட்டாயிங்க???

இங்க அமெரிக்காவுல….என்னடா திரும்ப அமெரிக்கா புராணத்தை ஆரம்பிச்சுட்டான்னு நினைக்காதிங்கண்ணே..வாழ்க்கையில ஒரு தடவையாவது இங்க வந்து பாருங்கண்ணே..சிலவற்றைத் தவிர்த்து பார்த்தா சொர்க்கம்னே..மனுசனை மனுசனா மதிக்கிறாயிங்கண்ணே..யாரும் யார எதிர்பார்த்து இருக்க மாட்டாயிங்கண்ணே..சொந்த காலுல நிக்கிறாயிங்கண்ணே..வயசானவங்களுக்கு என்னமா மரியாதை தராங்கண்ணே..எங்க போனாலும் ஊனமுற்றவர்களுக்குதான்னே முன்னுரிமை..எல்லா இடத்துலயும் ஊனமுற்றவங்களுக்கு தனி வசதி செஞ்சு இருப்பாயிங்கண்ணே..பார்க்கிங் கூட தனி வசதிண்ணே..அது மாதிரி யாரும் எந்த வேலையையும் கேவலமா நினைக்க மாட்டாயிங்கண்ணே……நம்ம ஊருல எங்கேயாவது கூலித்தொழிலாளிகளை மதிச்சுருக்கிராயிங்களண்ணே..இங்க மரியாதையா பார்ப்பாயிங்கண்ணே..தொழிலை வச்சு ஒரு ஏற்ற தாழ்வு இருக்காதுண்ணே..

எங்க ஆபிஸ்ல ஒரு வெள்ளைக்காரர் ஒருத்தர் கிளீனிங் வேலை பார்ப்பாருண்ணே..பேரு “ஜோ”..நல்ல தன்மையான மனுசண்ணே..எப்ப பார்த்தாலும் சிரிச்ச முகமா இருப்பாரு..ஒவ்வொரு நாளும் நம்ம கேபினுக்கு வந்து குப்பைய எடுத்துட்டு போவாரு..எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும்..அவரோட டெய்லி கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருப்பேன்..தன்னோட வேலைய ரொம்ப உயர்வா நினைப்பாரு..ரொம்ப சுயமரியாதைக்காரர்ணே..என்னோட பொறந்த நாளுக்கு கூட நம்ம பசங்க டிரீட் வாங்கிட்டு ஓடிப்போயிட்டாயிங்க..ஆனா அவரு தன் பொண்ணு கையால செஞ்ச ஒரு சின்ன பொம்மையக் குடுத்து “நீங்க பொறந்ததுக்காக நான் பெருமைப்படுறேன்..எனக்கு ஒரு நண்பன் கிடைச்சுருக்கான்ல” என்றார்..எனக்கு ஒரு மாதிரி ஆயிடுச்சுண்ணே..

இப்படி போயிட்டுருக்கப்ப, நம்ம ஊருக்கார பயபுள்ள இங்க மேனேஜரா வந்தாண்ணே..பேரு “சேஷ கோபால்”..ரொம்ப முசுடுக்காரண்ணே..பேசாம அவனுக்கு “கேஸ் கோபாலு”ன்னு வச்சிருக்கலாம்….எப்ப பார்த்தாலும் “கேஸ்” டரிபுள் வந்ததுமாதிரியே திரிவான்..ஒரு நாள் நானும் ஜோவும் பேசிக்கிட்டு இருக்கறதப் பார்த்து என்னைத் தனியா கூப்பிட்டாரு….”ராசா..ஏம்பா இவிங்க கூட எல்லாம் பேசிக்கிட்டு இருக்க..தரையக் கூட்டுற ஆளுயா அவன்..அவிங்க கூட எல்லாம் ஒரு டிஸ்டன்ஸ் வச்சிக்கனும்பா..” அட்வைஸ் பண்றாராம்..அப்பயே நான் முடிவு பண்ணிட்டேன், சேஷக்கோபாலுக்கிட்ட நிக்கிறப்பே கொஞ்சம் தள்ளியே நிக்கணும்னு..தொத்து வியாதி பாருங்க..

ஜோ, ஒருநாள் நம்ம சேஷகோபாலு கேபினுக்கு போய் குப்பைய எடுக்க போயிருக்காரு….நம்ம சேஷு நம்ம ஊரு நினைப்புல அவர் சாப்பிட்ட டேபிளைக் கிளீன் பண்ண சொல்லியிருக்காரு..ஜோ அதுக்கு மறுக்கவே..நம்ம ஆளுக்கு கோவம் பாருங்க..”டே நாயே..உனக்கு என்ன பெரிய மேனேஜர்ன்னு நினைப்பா..தரையக் கூட்டுற உனக்கு கொழுப்பா..உங்களுக்கு எல்லாம் அறிவு பத்தலைன்னு சொல்லித்தாண்டா நாங்க இங்க வந்து இருக்கோம்”..வார்த்தையக் கொட்டிட்டாருண்ணே…நம்ம ஜோ,ஆளு தான் பாந்தமா இருப்பாரு..ஆனா அர்னால்ட் பாடி..நல்லா கைய மடக்கி மூஞ்சில ஒரு குத்து விட்டாரு பாருங்க..நம்ம சேஷு அப்படியே உக்கார்ந்துட்டாருன்னே..காதுல “கொயிங்க்” ன்னு ஒரு சத்தம்..மூக்கு சிவந்து போச்சுண்ணே..அவ்வளவுதான்..வானத்துக்கும் பூமிக்கும் எகிறிக் குதிக்க ஆரம்பிச்சுட்டாரு..மேலிடத்துல கம்பிளையின் பண்ண ஜோ வுக்கு வேலைய தூக்கிட்டாயிங்க..எனக்கு மனசு கஷ்டமா போச்சுண்ணே….

அதுக்கப்புறம் “ஜோ” கிட்ட இருந்து ஒரு தகவலையும் காணோம்..போன வாரத்துல ஒரு பிளாசா போயிருந்தேன்..நம்ம ஜோ அவுங்க குடும்பத்தோட வந்திருந்தார்..வேலை போன கஷ்டத்தை முகத்துல காட்டலைன்னாலும் அவரோட மனசுல தெரிஞ்சதுண்ணே..

“ராசா, எப்படி இருக்கீங்க..”

“நல்லா இருக்கேன் ஜோ..என்ன ஜோ, இப்படி மெலிஞ்சுட்டீங்க..வேற வேலைக் கிடைச்சுடுச்சா..”

“இல்ல ராசா..தேடிக்கிட்டு இருக்கேன்..எங்க போனாலும் வேலைக்கு பெரிய கியூ..எல்லாத்துக்கும் போட்டி வந்துடுச்சு..எல்லாத்தையும் ஆப்சோர் பண்ணிட்டதுன்னால கம்யூட்டர் படிச்சவன் கூட எங்க வேலைக்கு கீயூல நிக்கிறான்..இதுல இந்த ரெண்டு பொண்ணுங்க வேற படிக்க வைக்கணும்..ஆனாலும் எனக்கு உழைப்பு இருக்கு ராசா..கண்டிப்பா நான் முன்னேறிருவேன்..”

எனக்கு யாரோ செருப்பைக் கழட்டி அடிச்ச மாதிரி இருந்ததுண்ணே….அவரோட சின்ன குழந்தை எங்கிட்ட வந்து..

“அங்கிள்..நீங்கதான் ராசாவா..அப்பா நிறையவாட்டி சொல்லி இருக்காரு..உங்க பொறந்த நாளைக்கு நான்தான் பொம்மை என் கையால செஞ்சேன்….அடுத்த பொறந்த நாளைக்கு பாருங்க..உங்களுக்காக ஒரு டெடி பியர் பொம்மை செஞ்சு தரேன்..”

அந்த பிஞ்சு கைய எடுத்து அப்படியே ஒரு முத்தம் குடுத்து என் கண்ணுல வைச்சுக்கிட்டேண்ணே..என்னால அங்க நிக்க முடியல..கிளம்பி வந்துட்டேன்..

மறுநாள் ஆபிஸுக்கு போனப்ப..நம்ம சேஷு வந்திருந்தார்..ஜோவைப் பார்த்த விசயத்தை சொன்னேன்..

சேஷு சொல்றார்..

“அவன் இன்னும் உசிரோட இருக்கானா..வேலைக்கார நாயி.என்ன கொழுப்பு..அவனுக்கு எங்க போனாலும் வேலை கிடைக்காது பாருங்க ராசா..ஒரு வேலைக்காரனுக்கு இவ்வளவு திமிரு ஆகாது..”

ஆஸ்திரிலியாவுல ஏன் அடிக்க மாட்டாயிங்க…

47 comments:

Suresh said...

அப்போ அப்போ இது மாதிரி ஆள கரைச்சுபுடுறிங்க ராசா

Suresh said...

//அவரு தன் பொண்ணு கையால செஞ்ச ஒரு சின்ன பொம்மையக் குடுத்து “நீங்க பொறந்ததுக்காக நான் பெருமைப்படுறேன்..எனக்கு ஒரு நண்பன் கிடைச்சுருக்கான்ல” //

ரொம்ப நெகிழ்ச்சி ஆகி போச்சு நமக்கு டீ கொடுக்குற பையன் முதல் ஆபிஸில் குப்பை எடுக்கிற பையன் வரை எல்லாரும் நட்பு தான்..

ரொம்ப சந்தோசம்.. மச்சான் அந்த பொம்மையின் விலை மதிப்பற்ற சந்தோசமான வாழ்த்து உனக்கு கிடைச்சு இருக்கு

Suresh said...

//”ராசா..ஏம்பா இவிங்க கூட எல்லாம் பேசிக்கிட்டு இருக்க..தரையக் கூட்டுற ஆளுயா அவன்..அவிங்க கூட எல்லாம் ஒரு டிஸ்டன்ஸ் வச்சிக்கனும்பா..”//

உண்மை தான் எனக்கும் சில நண்பர்கள் ஏன் டா உன் லைவல் என்ன ஏன் டா டீ காபி, குப்பை அள்ளுற பச்ங்க கூட எல்லாம் பிரண்சிப் நாளைக்கு காசு கேட்பாங்க அப்புறம் தோழமையா கைய போடுவாங்க உன் தலை மேல ஏறி நிப்பாங்க என்று எல்லாம் போட்டாங்க .. அஹ்ம்..

இது எல்லாம் போய் அவர்களும் மனிதர்களே ... நம்மை விட யோக்கியமான நல்லவங்க , பாச கார பசங்க

Suresh said...

//இருக்கோம்”..வார்த்தையக் கொட்டிட்டாருண்ணே…நம்ம ஜோ,ஆளு தான் பாந்தமா இருப்பாரு..ஆனா அர்னால்ட் பாடி..நல்லா கைய மடக்கி மூஞ்சில ஒரு குத்து விட்டாரு //

:-) கை தட்டிய சீன் தலைவா சூப்பர் பஞ்ச்

Suresh said...

//“அவன் இன்னும் உசிரோட இருக்கானா..வேலைக்கார நாயி.என்ன கொழுப்பு..அவனுக்கு எங்க போனாலும் வேலை கிடைக்காது பாருங்க ராசா..ஒரு வேலைக்காரனுக்கு இவ்வளவு திமிரு ஆகாது..”//

அவன கொளுத்தனும்யா..

நீங்க அந்த பெண்ணு சொன்ன விஷியத்தை சொன்ன போதும் அந்த பிஞ்சு கைக்கு இப்படி ஒரு பரிசா பாவம் யா நக்கல செய்ய முடியவில்லை..

மனசு சும்மா அழுதுடுச்சு ... நல்ல பதிவு ராசா..

ஜோவையும் அவரது மகளையும் கேட்டதாய் சொல்லுங்க..

ஜோவுக்கு சீக்கிரமே நல்ல வேளை கிடைக்கும், அவரிடம் இருக்கும் தன்நம்பிக்கையே காரணம்

Thangavel Manickadevar said...

ராஜா ஜோவைப் போன்றோர்கள் நடமாடும் தெய்வங்கள். சேஷா நடமாடும் அரக்கன். இவர்களைப் போன்றோரிடம் நிர்வாகம் சென்றால் அக்கம்பெனி எப்படி முன்னுக்கு வரும். கொடுமை...

குடுகுடுப்பை said...

இந்தக்கதை சொல்லும் நீதி நன்றாக உள்ளது, ஒரு அமெரிக்கன் கை நீட்டி அடிப்பான் என்பதை என்னால் நம்ம முடியவில்லை.

அப்பாவி முரு said...

அந்த கேசு மாதியான ஆட்களால் தான், ராஜா போன்ற என் போன்ற ஆட்களுக்கும் கெட்ட பேர், ஆபத்து.

போன இடத்துல வாலை வச்சுக்கிட்டு சும்ம இருக்கிறதில்லை.

என்ன தான் வெளிய ஆட்டம் போட்டாலும், உள்ளூருல ஒரு பய மதிக்க மாட்டான் இந்த மாதிரியான கேசுகளை

Unknown said...

//இங்க மரியாதையா பார்ப்பாயிங்கண்ணே..தொழிலை வச்சு ஒரு ஏற்ற தாழ்வு இருக்காதுண்ணே.//

இதவிட வேற என்னங்க வேணும்........

ராசா உங்களோட எழுத்து நடையும் சொல்ற விசயமும் ரொம்ப நல்லா இருக்கு.

வாழ்த்துகள்......

கலையரசன் said...

''எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்... ஷேசு ரொம்ம்ப நல்லவன்னோ?"
நீங்களாச்சும் ஜோ வுக்கு ஒரு வேலை பார்த்து கொடுங்கண்ணே!

Anonymous said...

very nice article. Thanks for your post.
I am also very friendly with people at all levels. We have a lot to learn from everyone.

S.A. நவாஸுதீன் said...

ரொம்ப நெகிழ்ச்சியான பதிவு.

“அங்கிள்..நீங்கதான் ராசாவா..அப்பா நிறையவாட்டி சொல்லி இருக்காரு..உங்க பொறந்த நாளைக்கு நான்தான் பொம்மை என் கையால செஞ்சேன்….அடுத்த பொறந்த நாளைக்கு பாருங்க..உங்களுக்காக ஒரு டெடி பியர் பொம்மை செஞ்சு தரேன்..”

அந்த பிஞ்சு கைய எடுத்து அப்படியே ஒரு முத்தம் குடுத்து என் கண்ணுல வைச்சுக்கிட்டேண்ணே..என்னால அங்க நிக்க முடியல..கிளம்பி வந்துட்டேன்.."

ரொம்ப ஃபீல் பண்ண வச்சிட்டீங்க ராசா

SUREஷ்(பழனியிலிருந்து) said...
This comment has been removed by the author.
SUREஷ்(பழனியிலிருந்து) said...

நல்ல பகிர்வு

வெற்றி-[க்]-கதிரவன் said...

//சேஷக்கோபாலுக்கிட்ட நிக்கிறப்பே கொஞ்சம் தள்ளியே நிக்கணும்னு..தொத்து வியாதி பாருங்க..
//

ராசா டச் -:)

ManivKa said...

அண்ணே ராசா அண்ணே இங்கே அவுஸ்திரேலியாவிலும் அதுமாதிரித்தாண்ணே. நா முதல் நாள் வேலைக்கு கார்லே போறப்போ வழி தவறி போய்ட்டேண்ணே. ஒருத்தன் வந்து என்ன Mate பாதை தவறிடிச்சான்னு கேட்டு வழி சொன்னாண்ணே. சிங்கபூரிலே யாரும் அப்படி பண்ண மாட்டாய்ங்கண்ணே. இவய்ங்க உள்ள ஏரியாவுலே இவ்வளவு நாளும் வயசு போனவங்ககிட்டேயும் மற்றவங்ககிட்டேயும் பணம், கைத்தொலைபேசி எல்லாம் பறிச்சுகிட்டு இருந்தாய்ங்க இந்த லெபனான் காரங்க. நம்ம மவராசங்க வந்தாங்க, நேரம் கெட்ட நேரத்திலே வேலை முடிஞ்சு வந்தாங்களா, பணம், லேப்டாப், கைத்தொலைபேசி எல்லாம் வச்சிருந்தாங்களா, அவய்ங்க இவங்களை புடிச்சுகிட்டு வயசானவங்களை விட்டுட்டாய்ங்கண்ணே. இதைப்போய் இனத்துவேஷம்ன்னு பத்திரிகை காரங்க கலாய்க்கிறாய்ங்க. தங்களை அடையாளம் காட்டிட்டாய்ங்களா? இப்ப எந்த நாளும் எங்காவது ஒரு திருட்டு நடக்குதுங்க! என்னத்த சொல்ல, கெடுத்துட்டாய்ங்கண்ணே.

அப்புறம் இவய்ங்கள்ளே இரண்டுபேர் முடிவெட்ட போய் இருக்கிறாய்ங்க. அங்கே போனா, அவன் ஷாருக் கான், சுனில் தத் போஸ்டர் எல்லாம் வைச்சிருந்தாய்ங்க. அங்க முடி வெட்டுற பொண்ணுக்கு முடி சுருட்டைண்ணே. இதில ஒருத்தன் அவளை பார்த்து "முடி சுருட்டை உள்ளவங்களுக்கு மூளை இல்லைன்னு" கமென்ட் அடிச்சிருக்கிறாய்ங்கண்ணே. முதலாளிக்கு ஹிந்தி தெரிஞ்சதாலே கடுப்பாகிட்டாருண்ணே. அப்புறம் ஒரு மாதிரி சமாளிச்சுட்டாய்ங்க

ஆஸ்திரிலியாவுல ஏன் அடிக்க மாட்டாயிங்க…

உங்க பாணி தொத்திகிச்சு, மன்னிசுகிங்க

பதி said...

நல்ல பதிவு...

புரிய வைக்கப்பட வேண்டிய பல விசயங்களை எளிமையான நடையில் விளக்கியுள்ளீர்கள்.....

Thekkikattan|தெகா said...

எங்க போனாலும் நாயீ நக்கித் தானே குடிக்கணும்...

சட்டியில இருக்கிறதுதான் அகப்பையில வருமின்னு சும்மாவா சொல்லி வைச்சிருப்பாய்ங்க - எல்லாம் வளர்ப்புதான்.

நல்ல வேல "ஜோ"வுக்கு குடும்பம் இருந்து போச்சு, டேமேஜரு தப்பிச்சாரு, இல்லன்னா நெத்தியில "ரத்தப் பொட்டு" வாங்க வாய்ச்சிருக்கும்.

வெத்து வேட்டு said...

you should have complained about Shesha...he discriminate people based on work/caste...

Anonymous said...

ஜோவுக்கு நடந்தது மிகப்பெரிய கொடுமை.... எப்படி இப்படியெல்லாம் மனித தன்மை இல்லாமல் நடக்கின்றார்கள்!!

Anonymous said...

Seshuvukku avnga pashiyila sonna koluppu kummalam podura vasu. Mansule periya alavulla athikara pothai thiruppi ithupol thanaku nerum podhaavathu unaruma antha maramandai. Jovukku velai kidaikka prarthikren athe samayam antha damagerkku antha aandavan thaan nalla padam kodukkanum.

Anonymous said...

Usually , I dont write comments (due to lazy).

But, this post makes to write comments....

So, touching, keep it up and carry on....

சித்து said...

ரொம்ப உருக்கமா இருந்தது அண்ணே, ஆனா இதுக்கும் அதுக்கும் முடிச்சி போடுறது????? எதோ ஒரு சேஷு சரி இல்லைனா எல்லாரும் அப்படியா?? இப்ப நீங்க கூட தான் இருக்கீங்க??

குப்பன்.யாஹூ said...

nice post thanks for sharing

கடைக்குட்டி said...

டச் பண்ணிட்டியே தலைவா.... :-)

ஆனந்த் பாபு said...

அருமையான பதிவு.....
உங்களுடைய எழுத்து நடை நன்றாக உள்ளது

Joe said...

அருமையான பதிவு, நெகிழ வைத்து விட்டீர்கள்.

ஜோ-ன்னு பேரு இருந்தாலே நல்ல மனுஷனா தான் இருப்பாங்க போல. ;-)
அவருக்கு சீக்கிரம் வேலை கிடைக்க வாழ்த்துக்கள்.

நம்மாளுங்க அங்க போனாலும் ஜாதித் திமிரு, ஆதிக்க மனோபாவத்தை விடுறதில்ல. என்னமோ நாமெல்லாம் நாசா விஞ்ஞானிகள் மாதிரியும், அவுங்க ஏதோ கீழ்த்தரமானவங்க மாதிரியும் பண்ற அலம்பல் இருக்கே? அடங்குங்கடா டேய்!

இதே போல தூயா ஒரு இடுகையிட்டுருந்தாங்க. "இந்தியர்கள் ஆஸ்திரேலியா-வில அடி வாங்கி சாவுங்கடா"-ன்னு கொஞ்சம் காட்டமா...

Anonymous said...

sariya sonnenga...
intha thimiru than indianukku aagauthu....

அவிய்ங்க ராசா said...

////////////////
Suresh said...
அப்போ அப்போ இது மாதிரி ஆள கரைச்சுபுடுறிங்க ராசா
13 June, 2009 8:57 PM
////////////////
நன்றி சுரேஷ்..எல்லாம் உங்களை மாதிரி நண்பர்கள் தர்ற ஊக்கம்தான்

அவிய்ங்க ராசா said...

//////////////////
13 June, 2009 9:16 PM
தங்கவேல் மாணிக்கம் said...
ராஜா ஜோவைப் போன்றோர்கள் நடமாடும் தெய்வங்கள். சேஷா நடமாடும் அரக்கன். இவர்களைப் போன்றோரிடம் நிர்வாகம் சென்றால் அக்கம்பெனி எப்படி முன்னுக்கு வரும். கொடுமை...
13 June, 2009 9:37 PM
//////////////////////
நன்றி தங்கவேல்

அவிய்ங்க ராசா said...

13 June, 2009 9:37 PM
குடுகுடுப்பை said...
இந்தக்கதை சொல்லும் நீதி நன்றாக உள்ளது, ஒரு அமெரிக்கன் கை நீட்டி அடிப்பான் என்பதை என்னால் நம்ம முடியவில்லை.
13 June, 2009 9:52 PM
//////////////////////
நன்றி குடுகுடுப்பை அண்ணா..ஜோ அமைதியா இருந்தாலும் தன்மானம் ஜாஸ்திண்ணே..அதான் அடிச்சிட்டாரு

அவிய்ங்க ராசா said...

//////////////////
13 June, 2009 9:52 PM
அப்பாவி முரு said...
அந்த கேசு மாதியான ஆட்களால் தான், ராஜா போன்ற என் போன்ற ஆட்களுக்கும் கெட்ட பேர், ஆபத்து.

போன இடத்துல வாலை வச்சுக்கிட்டு சும்ம இருக்கிறதில்லை.

என்ன தான் வெளிய ஆட்டம் போட்டாலும், உள்ளூருல ஒரு பய மதிக்க மாட்டான் இந்த மாதிரியான கேசுகளை
13 June, 2009 9:56 PM
என் பக்கம் said...
//இங்க மரியாதையா பார்ப்பாயிங்கண்ணே..தொழிலை வச்சு ஒரு ஏற்ற தாழ்வு இருக்காதுண்ணே.//

இதவிட வேற என்னங்க வேணும்........

ராசா உங்களோட எழுத்து நடையும் சொல்ற விசயமும் ரொம்ப நல்லா இருக்கு.

வாழ்த்துகள்......
13 June, 2009 10:13 PM
//////////////////////
நன்றி முருகன், என் பக்கம்..சரியா சொன்னீங்க.,,.

அவிய்ங்க ராசா said...

/////////////////////
கலையரசன் said...
''எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்... ஷேசு ரொம்ம்ப நல்லவன்னோ?"
நீங்களாச்சும் ஜோ வுக்கு ஒரு வேலை பார்த்து கொடுங்கண்ணே!
13 June, 2009 10:26 PM
Anonymous said...
very nice article. Thanks for your post.
I am also very friendly with people at all levels. We have a lot to learn from everyone.
13 June, 2009 10:31 PM
S.A. நவாஸுதீன் said...
ரொம்ப நெகிழ்ச்சியான பதிவு.

“அங்கிள்..நீங்கதான் ராசாவா..அப்பா நிறையவாட்டி சொல்லி இருக்காரு..உங்க பொறந்த நாளைக்கு நான்தான் பொம்மை என் கையால செஞ்சேன்….அடுத்த பொறந்த நாளைக்கு பாருங்க..உங்களுக்காக ஒரு டெடி பியர் பொம்மை செஞ்சு தரேன்..”

அந்த பிஞ்சு கைய எடுத்து அப்படியே ஒரு முத்தம் குடுத்து என் கண்ணுல வைச்சுக்கிட்டேண்ணே..என்னால அங்க நிக்க முடியல..கிளம்பி வந்துட்டேன்.."

ரொம்ப ஃபீல் பண்ண வச்சிட்டீங்க ராசா
13 June, 2009 10:46 PM
/////////////////////////
நன்றி கலை,அனானி, நவாஸ்..நானும் எழுதும்போதே இதை அனுபவித்தேன்..

அவிய்ங்க ராசா said...

////////////////
SUREஷ் (பழனியிலிருந்து) said...
This post has been removed by the author.
13 June, 2009 11:02 PM
SUREஷ் (பழனியிலிருந்து) said...
நல்ல பகிர்வு
13 June, 2009 11:03 PM
பித்தன் said...
//சேஷக்கோபாலுக்கிட்ட நிக்கிறப்பே கொஞ்சம் தள்ளியே நிக்கணும்னு..தொத்து வியாதி பாருங்க..
//

ராசா டச் -:)
13 June, 2009 11:12 PM
////////////////
நன்றி பித்தன், சுரேஷ்…

அவிய்ங்க ராசா said...

/////////////////
ManivKa said...
அண்ணே ராசா அண்ணே இங்கே அவுஸ்திரேலியாவிலும் அதுமாதிரித்தாண்ணே. நா முதல் நாள் வேலைக்கு கார்லே போறப்போ வழி தவறி போய்ட்டேண்ணே. ஒருத்தன் வந்து என்ன Mate பாதை தவறிடிச்சான்னு கேட்டு வழி சொன்னாண்ணே. சிங்கபூரிலே யாரும் அப்படி பண்ண மாட்டாய்ங்கண்ணே. இவய்ங்க உள்ள ஏரியாவுலே இவ்வளவு நாளும் வயசு போனவங்ககிட்டேயும் மற்றவங்ககிட்டேயும் பணம், கைத்தொலைபேசி எல்லாம் பறிச்சுகிட்டு இருந்தாய்ங்க இந்த லெபனான் காரங்க. நம்ம மவராசங்க வந்தாங்க, நேரம் கெட்ட நேரத்திலே வேலை முடிஞ்சு வந்தாங்களா, பணம், லேப்டாப், கைத்தொலைபேசி எல்லாம் வச்சிருந்தாங்களா, அவய்ங்க இவங்களை புடிச்சுகிட்டு வயசானவங்களை விட்டுட்டாய்ங்கண்ணே. இதைப்போய் இனத்துவேஷம்ன்னு பத்திரிகை காரங்க கலாய்க்கிறாய்ங்க. தங்களை அடையாளம் காட்டிட்டாய்ங்களா? இப்ப எந்த நாளும் எங்காவது ஒரு திருட்டு நடக்குதுங்க! என்னத்த சொல்ல, கெடுத்துட்டாய்ங்கண்ணே.

அப்புறம் இவய்ங்கள்ளே இரண்டுபேர் முடிவெட்ட போய் இருக்கிறாய்ங்க. அங்கே போனா, அவன் ஷாருக் கான், சுனில் தத் போஸ்டர் எல்லாம் வைச்சிருந்தாய்ங்க. அங்க முடி வெட்டுற பொண்ணுக்கு முடி சுருட்டைண்ணே. இதில ஒருத்தன் அவளை பார்த்து "முடி சுருட்டை உள்ளவங்களுக்கு மூளை இல்லைன்னு" கமென்ட் அடிச்சிருக்கிறாய்ங்கண்ணே. முதலாளிக்கு ஹிந்தி தெரிஞ்சதாலே கடுப்பாகிட்டாருண்ணே. அப்புறம் ஒரு மாதிரி சமாளிச்சுட்டாய்ங்க

ஆஸ்திரிலியாவுல ஏன் அடிக்க மாட்டாயிங்க…

உங்க பாணி தொத்திகிச்சு, மன்னிசுகிங்க
14 June, 2009 2:15 AM
பதி said...
நல்ல பதிவு...

புரிய வைக்கப்பட வேண்டிய பல விசயங்களை எளிமையான நடையில் விளக்கியுள்ளீர்கள்.....
14 June, 2009 3:31 AM
rapp said...
super post
14 June, 2009 5:04 AM
///////////////////////////
நன்றி பதி, மணி, ராப்..

அவிய்ங்க ராசா said...

/////////////
14 June, 2009 5:04 AM
Thekkikattan|தெகா said...
எங்க போனாலும் நாயீ நக்கித் தானே குடிக்கணும்...

சட்டியில இருக்கிறதுதான் அகப்பையில வருமின்னு சும்மாவா சொல்லி வைச்சிருப்பாய்ங்க - எல்லாம் வளர்ப்புதான்.

நல்ல வேல "ஜோ"வுக்கு குடும்பம் இருந்து போச்சு, டேமேஜரு தப்பிச்சாரு, இல்லன்னா நெத்தியில "ரத்தப் பொட்டு" வாங்க வாய்ச்சிருக்கும்.
14 June, 2009 5:40 AM
வெத்து வேட்டு said...
you should have complained about Shesha...he discriminate people based on work/caste...
///////////////
நன்றி தெகா, வெத்து வேட்டு..சேஷு மாதிரி ஆளுகள ஒன்னும் பண்ண முடியாது

அவிய்ங்க ராசா said...

/////////////////////
♥ தூயா ♥ Thooya ♥ said...
ஜோவுக்கு நடந்தது மிகப்பெரிய கொடுமை.... எப்படி இப்படியெல்லாம் மனித தன்மை இல்லாமல் நடக்கின்றார்கள்!!
14 June, 2009 7:02 AM
Anonymous said...
Seshuvukku avnga pashiyila sonna koluppu kummalam podura vasu. Mansule periya alavulla athikara pothai thiruppi ithupol thanaku nerum podhaavathu unaruma antha maramandai. Jovukku velai kidaikka prarthikren athe samayam antha damagerkku antha aandavan thaan nalla padam kodukkanum.
14 June, 2009 7:36 AM
Anonymous said...
Usually , I dont write comments (due to lazy).

But, this post makes to write comments....

So, touching, keep it up and carry on..
///////////////////////
நன்றி தூயா..இதைப் பற்றிய உங்கள் பதிவு மிகவும் நன்றாக இருந்தது..

அனானி, உங்களுடைய கமெண்ட்ஸ்க்கு நன்றி..ஊக்கம் கொடுக்கும் கமெண்ட்ஸ்கள்தான் இன்னும் எழுத ஊக்கம் அளிக்கிறது

அவிய்ங்க ராசா said...

//////////////
சித்து said...
ரொம்ப உருக்கமா இருந்தது அண்ணே, ஆனா இதுக்கும் அதுக்கும் முடிச்சி போடுறது????? எதோ ஒரு சேஷு சரி இல்லைனா எல்லாரும் அப்படியா?? இப்ப நீங்க கூட தான் இருக்கீங்க??
14 June, 2009 9:06 AM
//////////////////
நன்றி சித்து..நம்ம ஆளுங்க இப்படி நடக்குறதும் வருத்தமா இருக்கு என்பதையே பதிவு செய்திருக்கேன்

அவிய்ங்க ராசா said...

////////////////
குப்பன்_யாஹூ said...
nice post thanks for sharing
14 June, 2009 10:11 AM
கடைக்குட்டி said...
டச் பண்ணிட்டியே தலைவா.... :-)
14 June, 2009 10:20 AM
Eravin-nisaptham said...
அருமையான பதிவு.....
உங்களுடைய எழுத்து நடை நன்றாக உள்ளது
14 June, 2009 11:00 AM
Joe said...
அருமையான பதிவு, நெகிழ வைத்து விட்டீர்கள்.

ஜோ-ன்னு பேரு இருந்தாலே நல்ல மனுஷனா தான் இருப்பாங்க போல. ;-)
அவருக்கு சீக்கிரம் வேலை கிடைக்க வாழ்த்துக்கள்.

நம்மாளுங்க அங்க போனாலும் ஜாதித் திமிரு, ஆதிக்க மனோபாவத்தை விடுறதில்ல. என்னமோ நாமெல்லாம் நாசா விஞ்ஞானிகள் மாதிரியும், அவுங்க ஏதோ கீழ்த்தரமானவங்க மாதிரியும் பண்ற அலம்பல் இருக்கே? அடங்குங்கடா டேய்!

இதே போல தூயா ஒரு இடுகையிட்டுருந்தாங்க. "இந்தியர்கள் ஆஸ்திரேலியா-வில அடி வாங்கி சாவுங்கடா"-ன்னு கொஞ்சம் காட்டமா...
14 June, 2009 1:09 PM
mugunthkumar said...
sariya sonnenga...
intha thimiru than indianukku aagauthu....
14 June, 2009 5:05 PM
//////////////////////
நன்றி குப்பன்..உங்க புரொபைல் பார்த்தேன்..படத்திலிருப்பது நீங்கள் தானா??
நன்றி கடைக்குட்டி..இந்த வார ஸ்டாருக்கு வாழ்த்துக்கள்
நன்றி ஜோ..தினமும் உங்க பதிவு படிப்பேன்..நல்லா இருக்கு
நன்றி முகுந்தன்

தீப்பெட்டி said...

நல்ல அவசியமான பதிவு..

கேசு மாதிரி ஆளுங்களாம் எப்போ திருந்த போறாங்களோ..

ஜோ/Joe said...

//ஜோ-ன்னு பேரு இருந்தாலே நல்ல மனுஷனா தான் இருப்பாங்க போல//
நன்றி ராஜா :)

Joe said...

//
நன்றி ஜோ..தினமும் உங்க பதிவு படிப்பேன்..நல்லா இருக்கு
//
நன்றி ராஜா, எப்போவாச்சும் பின்னூட்டமும், எப்போதும் வோட்டும் போட்டிடுங்க!

Maathu said...

நல்ல பதிவு ராசா..

ஜோவையும் அவரது மகளையும் கேட்டதாய் சொல்லுங்க..

ஜோவுக்கு சீக்கிரமே நல்ல வேளை கிடைக்கும், அவரிடம் இருக்கும் தன்நம்பிக்கையே காரணம்

Anonymous said...

Dear Raja,

You are totally right. Most of the Indians have attitude problems. I have seen several north indians who thinks they are the only indians or citizens of this country. Though we behave very well, they express unhealthy and sick behavior towards us in return. I have recently read this article by Thooya, that confers my views and experience with the attitude problems of Indians.

http://thooya.blogspot.com/2009/06/blog-post.html

Off late, there are more and more people who like to read your article. Good work.

Keep Going.

With regards,

Swamy.

Anonymous said...

really very good.keep it up

ரவிஷா said...

நீங்க ஒரு அப்பாவி! இப்போதைக்கு அதை மட்டும்தான் சொல்லமுடியும்! (அந்த சேஷகோபால் செய்தது சரி என்று சொல்லவில்லை)!

Anonymous said...

Rasa Sir,

Mr.Joe ungalakku sonna Birthday wishes sooper sir. I pray my good God for Mr.Joe's New Job.
My Best Regards to you.

Post a Comment