அமெரிக்காவுல நம்ம மாதிரி அடிமைகளுக்கு ரெண்டு வாரத்துக்கு முன்னாடி ஒரு திங்கள்கிழமை விடுமுறை விட்டுறாயிந்தாயிங்க..நம்ம ஆளுங்களுக்கெல்லாம் ஒரே குஷிதான். அவனவன் ஒரு மேப் எடுத்து வச்சிக்கிட்டு கொலம்பஸ் மாதிரு பிளான் போடுறாயிங்க..சந்திர மண்டலம் ஒன்னுதான் பாக்கி..விட்டா அதுக்கும் கார் எடுத்துட்டு போயிடுவாயிங்க போல..
நாங்களும் ஒரு பிளான் போட்டோம்..நாங்க, ரெண்டு குடும்பம்,அப்புறம் நம்ம ஊருக்காரயிங்க ரெண்டு பேர், அப்புறம் நம்ம ஊருக்கார பையன் கோவாலு..இங்க “வெஸ்ட் விர்ஜினியா” ன்னு ஒரு மாகாணம் இருக்கு..அங்க ஒரு திரில்லிங் படகு சவாரி..அதுக்கு பேர் “ராப்டிங்(Raafting)”..படகு சவாரின்னா நம்ம ஊரு “ஏலேலா ஐலசா” மாதிரி இல்ல..ரெண்டு மலைக்கிடையில் ஒரு பெரிய ஆறு ஓடுது..நாலு ஆளு மட்டம் தண்ணி..காத்து நிரம்பிய ஒரு பலூன் மாதிரி ஒரு படகு குடுத்துருவாயிங்க..கோஆர்டினேட் பண்ண ரெண்டு பேர் கூட வருவாயிங்க..மத்தபடி நம்ம துடுப்பு போட்டதான் படகு போகும்..10 மைல் ஓட்டனும்..இடையில 10 இடத்துல பெரிய அலைமாதிரி அடிக்கடி எழும்பும்..அதுல துடுப்பு போடுறதுதான் பெரிய விசயம்..லைப் ஜாக்கெட் குடுத்துருவாயிங்க..
எல்லாரும் அந்த ஆபிஸ்க்கு போய் பணத்தைக் கட்டிட்டோம்..ஒரு பார்ம்(form) கொடுத்தாயிங்க..நம்மதான் எந்த பார்மை படிச்சிருக்கோம்..சொத்தை எழுதிக் குடுக்குற மாதிரி நீட்டுற இடத்துல கையழுத்து போட்டோம்..லைப் ஜாக்கெட் மாட்டி விட்டப்புறம் நம்ம ஆளு கோவாலுக்கு சின்ன டவுட்..
“ஏன் மேடம், எல்லாத்துக்கிட்டயும் கையெழுத்து வாங்கிறீங்களே..என்ன விசயம்..”
“அதுவா..துடுப்பு போடுறப்ப என்ன வேணுனாலும் நடக்கலாம்..உங்க உசிருக்கு நாங்க உத்திரவாதம் இல்லைங்கிறதுதான்..”
கோவாலு அலறிட்டான்..”அய்யோ அம்மா..உயிருக்கு ஏதாவது ஆபத்து இருக்குங்களா..நான் வீட்டுக்கு ஒரே பையங்க..”
“சீ..சீ..கவலைப்படாதிங்க..நாங்க இருக்கோம்ல..”
“எதுக்கு எத்தனைப் பேரு சாகுறோம்னு எண்ணுறதுக்கா..ஆளை விடுங்கடா சாமி..”
கோவலு லைப் ஜாக்கெட்டை கழட்ட நினைக்கும்போதுதான் அது நடந்தது..எங்களோட இன்னொரு படகும் வரும்போல..அதுக்கு வந்தவங்க நம்ம கோவலு மனமாற்றத்துக்கு காரணம்..செப்பு சிலைய செஞ்சு வச்ச மாதிரு 8 மும்பைக்கார பொண்ணுங்க வந்தாங்க..இங்க அமெரிக்காவுல ஏதொ ஒரு யுனிவர்சிட்டில படிக்கிறாயிங்களாம்..கோவாலு அலறிட்டான்..
“மச்சான்..நானும் வர்றேன்டா..”
“டே..கோவாலு..இப்பதான் வீட்டுக்கு ஒரு பையன் சொன்ன”
“போடாங்க..செத்தா இப்படி சாகணும்டா….டே..அவுங்க படகுல ஒரு இடம் இருக்கான்னு கேட்டு வர்றீயா….”
“அடப்பாவி..அப்பிடியே அவுங்க மனசுல ஒரு இடம் இருக்கான்னு கேப்ப போல..முதல்ல வாயில இருந்து வர்ற வாட்டர்பால்ஸை குளோஸ் பண்ணு..”
நம்ம கோவாலுக்கு கெட்ட நெரம்..படகுல ஆள் பத்தலைன்னு ஒரு ஒரு 60 வயசு பாட்டி, அவுங்க பேரன் ரெண்டு பேரையும் ஏத்திக்கிட்டாயிங்க..நமீதாவை எதிர்பார்த்து இருந்த நம்ம கோவாலுக்கு கே.பி.சுந்தராம்பாள் வந்தது மாதிரி ஆகிப்போச்சு..
புலம்பி தள்ளுறாயிங்கண்ணே..
”ஐய்யோ..ஐய்யோ..கொஞ்சம் லேட்டா வந்துருந்தா, அந்த படகுல போயிருக்கலாமே..” கதறுரான்..இதுல கோஆர்டினேட்டர், இங்க யாருக்கு நீச்சல் தெரியும்னு கேக்க., கோவாலுக்கு பிரஸ்டிஜ் குக்கர் பிராபளம் ஆக..”எனக்கு தெரியும்..நான் எல்லாத்தையும் காப்பாத்துறேன்..” பெருமையா சொல்லிக்கிட்டு பக்கத்து படகை பெருமையா பார்த்தான்..அதுக எதுவும் நம்ம கோவல கண்டுக்கலை..பிஸ்ஸா சாப்பிடுற இடத்துல கடலை முட்டாய பார்த்தா எப்படி இருக்கும், அதுமாதிரி கோவல பார்க்க மனசு ஒடிஞ்சு போயிட்டான்..அதுல அந்த பாட்டி வேற..”தம்பி நீங்க பாக்குறதுக்கு என் பேரான்டி மாதிரி இருக்கீங்க” ன்னு சொல்லிருச்சா, ஒரு மாதிரி ஆயிட்டான்....அவன் கண்ணு, மனசு எல்லாம் அந்த பொண்ணுங்க வர்ற படகு மேலதான்..துடுப்பு போடுறான்னு சொன்னா, கையில துடுப்பு போடுறான்..
அப்பதான் அது நடந்துச்சு..ஒரு பெரிய பாறைக்கிடையில தண்ணி நீர்வீழ்ச்சி மாதிரி போக கொஞ்சம் வேகமா துடுப்பு போடணும்..நம்ம ஆளுதான் கையில துடுப்பு போடுறானே..சரியா அந்த் பாறையில முட்டி அப்படியே படகு டைட்டானிக் படகு மாதிரி கவுந்துச்சு பாருங்கண்ணே.,அப்படியே எல்லாரும் தண்ணிக்குள்ள போயிட்டோம்..சொன்னா நம்ப மாட்டிங்க..உயிர் பயத்தை அன்னிக்குத்தான் பார்த்தேன்..அப்பிடியே உள்ள போயிட்டேன்..சபரிமலை பயணம் மாதிரி அப்பிடியே தண்ணிக்குள்ளே போயிட்டு இருக்கேன்..அப்படியே எனக்கு இந்த உலகமே ஒரு வெறுமையா தெரிஞ்சுச்சு..கடவுளுக்கும் எனக்கும் தூரம் இல்லன்னு மனசு சொல்ல, கொஞ்சம் கஷ்டமாவும் இருந்துச்சு..”ஐயோ..நம்மளை நம்பி ஒரு பொண்ணு இருக்கே..அது என்ன பண்ணும்….கடவுளே..இன்னொரு நாள் வர்றேன்..இப்ப வேண்டாம்..” தண்ணி வாய்க்குள்ள போக மூச்சு முட்டுது..யாரவது காப்பத்த மாட்டாங்களான்னு மனசு சொன்னாலும் அவ்வளவுதான் இந்த வாழ்க்கை ஆறாம் அறிவு சொல்லுச்சு..அப்பிடியே செத்து போன எங்க தாத்தாவ நேருல பார்க்குற மாதிரு இருந்துச்சு..
“தாத்தா..நீங்களா..எனக்கு ஒரு இடம் போடுங்க தாத்தா..இதோ வந்துடுறேன்..”
“வாடா பேராண்டி..,பார்த்து ரொம்ப நாளாச்சுடா..வீட்டில நல்லா இருக்காங்களடா..வர்றப்ப ஒரு பாக்கெட் செண்ட் பாட்டில் எடுத்துட்டு வாடா..இங்க ஓரே கப்பு அடிக்குது.. அப்பிடியே பத்மினி ஒரு இந்தி படத்துல கவர்ச்சியா நடிச்சு இருக்காம்ளடா..ரெண்டு படத்தை எடுத்து வந்துருடா..”
“ஐயோ தாத்தா..நீ அடங்கவே மாட்டியா..இரு கடவுள்கிட்ட கம்பிளையின் பண்றேன்..அய்யோ..வீட்டுல கேஸ் ஸ்டவ்வ ஆப் பண்ணிணேணா…நான் வீடு வரைக்கும் போயிட்டு…”
அப்பிடியே நான் போட்டுருந்த லைப் ஜாக்கெட் என்னை மேல தூக்கிச்சு..தலை மட்டும் நீருக்கு மேல வந்தது..தப்பிச்சுட்டோமா???
நம்ம கோவாலுக்குதான் நீச்சல் தெரியுமே..அதோ கோவலு தலை தண்ணிக்குள்ள தெரியுது..
“கோவாலு..காப்பத்….”
“ராசா..காப்பத்துடா..எனக்கு நீச்சல் தெரியாதுடா..”
அடங்கொய்யாலே..உன் வாயில எதையாவது கரைச்சு ஊத்த..ஐயோ யாராவது காப்பத்துங்களேன் நான் போய் ஒரு பதிவு போடணும்..பொதுவா இந்த மாதிரி சவாரில கம்பெனில இருந்து ரெண்டு பேர் காப்பத்த வருவாயிங்க..அவீங்களை வேற பார்க்க முடியல..
அப்பத்தாண்ணே அது நடந்துச்சு..அடுத்த படகுல வந்த சூப்பர் பிகருங்கன்னு நாங்க சொன்ன மூணு பொண்னுங்க அப்பிடியே தண்ணிக்குள்ளே குதிச்சுச்சு..என்னையும் கோவாலுவையும் தலை முடியப் புடிச்சுக்கிட்டு அப்படியே தரதரன்னு தண்ணிக்குள்ள இழுத்துக்கிட்டு போனாங்க..அப்பிடியே திமிங்கலத்தை தூக்கி போடுற மாதிரி..”நீயெல்லாம் ஒரு ஆம்பிளையாடா” ன்னு தூக்கி அவீங்க படகுக்குள்ள போட்டாயிங்க பாருங்க..அப்படியே நம்ம மனசுக்குள்ள இருக்குள்ள திமிரு, கெட்ட புத்தி, ஆணவத்தை எல்லாத்தையும் தூக்கி படகுல போட்ட மாதிரி இருந்துச்சு..ஒரு நிமிசம் உயிரு நம்மக்கிட்ட இல்லாம, ஒரு உடம்பை மட்டும் தூக்கி போடுற மாதிரி இருந்துச்சு..
கோவாலு அப்படியே அந்த பொண்ணுங்களை கையெடுத்து கும்பிடிறான்..எனக்கு ஒன்னுமே பேசத்தோணலை..
“கோவாலு..தப்பிச்சுட்டோம்டா..நினைச்சு கூடப் பார்க்கலைடா”
கோவாலு கும்பிடுற கைய இறக்கவேயில்லை...
“ராசா, இவுங்க பொண்ணுங்க இல்லடா, என் ஆத்தாடா..என் உயிரைக் காப்பாத்துன எங்க ஊரு மாரியாத்தாடா..”
எனக்கு கண்ணுல தண்ணி கோர்த்துக்கிச்சுண்ணே..
(மேல உள்ள படத்துல உயிருக்கு பயந்துக்கிட்டு ரெண்டாவது துடிப்பு போடுறது நான்தானுங்கண்ணே..உயிர் பயம் கண்ணுல தெரியுதா..)
36 comments:
//(மேல உள்ள படத்துல உயிருக்கு பயந்துக்கிட்டு ரெண்டாவது துடிப்பு போடுறது நான்தானுங்கண்ணே..உயிர் பயம் கண்ணுல தெரியுதா..)//
அட..,
அருமையாக எழுதியிருக்கிறீர்கள். ராஜா..
//மேல உள்ள படத்துல உயிருக்கு பயந்துக்கிட்டு ரெண்டாவது துடுப்பு போடுறது//
அப்படியே அந்த மாரியாத்தாக்கள் படத்தப் போட்டிருந்தா, நாங்களும் கொஞ்சம் தரிசனம் கண்டிருப்போம்... :))
செத்துப்போன தாத்தாவின் லொள் பகுதி நல்ல ரசனையாக இருந்தது.
ஆஹா அருமையான பயணமா இருந்திருக்கும் போல் தெரிகிறதே.
நானும் இது போன்ற பயணத்தை தாய்லாந்தின் புக்கட் தீவில் சென்றுள்ளேன். அந்த பயணத்தின் திரில்லே கீழே விழுந்து தண்ணீர் கவ்வுவது தான்.
அது சரி கோவாலு கோவாலு என்று சொல்றீங்களே அவருக்கு மறு பெயர் ராஜாவா?
நான் இது போன்ற இந்த பயணத்தை பெங்களூரில் கல்யாணத்துக்கு 1 வாரம் முன்னாடி டீம் மோட போனோம் சரி பயம், எலலாரும் என் வையிட் தாங்கினா , நான் கடலில் மீதந்ததால் ஜாக்கெட்டோட எல்லாரும் தெரியமா குதிசாங்க அந்த பயமுடிவில்..
இதோ அடுத்த வாரம் கூட போரம் நானும் இத பத்தி எழுதலாம் என்று எண்ணி இருந்தேன் நீங்க உங்க பாணியில் பிண்ணி எடுத்துடிங்க
//(மேல உள்ள படத்துல உயிருக்கு பயந்துக்கிட்டு ரெண்டாவது துடிப்பு போடுறது நான்தானுங்கண்ணே..உயிர் பயம் கண்ணுல தெரியுதா..)//
நன்னா துடுப்பு போடுறேள்... அப்புறம் என்ன பயம்? சோழவந்தான் தானே அண்ணே ஊரு..நீச்சு தெரியாதா? வைகைல கடப்பாரை நீச்சலே அடிப்பீங்கனுல நினச்சேன்....
///எனக்கு கண்ணுல தண்ணி கோர்த்துக்கிச்சுண்ணே.. ///
எது ? அந்த ஆத்து தண்ணியா ? :-P
///..அப்பிடியே செத்து போன எங்க தாத்தாவ நேருல பார்க்குற மாதிரு இருந்துச்சு..////
யாரு அந்த தாத்தா? கடல்ல நண்டு வறுத்து சாப்டுவாரே அவரா?
//ஐயோ..நம்மளை நம்பி ஒரு பொண்ணு இருக்கே..அது என்ன பண்ணும்….கடவுளே..இன்னொரு நாள் வர்றேன்..இப்ப வேண்டாம்..”///
அவீங்க ரொம்ப கொடுத்து வச்சவீங்க .... இந்த மாதிரி ஒரு புருஷன் கிடைக்கணுமே...?!!
நீங்க பாத்தீங்களா , என்னது பாக்கலையா ?....சரி இப்போ வந்து பாருங்க
http://tamil10blog.blogspot.com/2009/06/blog-post.html
//பிஸ்ஸா சாப்பிடுற இடத்துல கடலை முட்டாய பார்த்தா எப்படி இருக்கும்,///
துடுப்பு போட்டுகிட்டே யோசிப்பீங்களோ?
//எதுக்கு எத்தனைப் பேரு சாகுறோம்னு எண்ணுறதுக்கா..ஆளை விடுங்கடா சாமி..”//
எப்பூடி .... நாங்க எல்லாம் பின்னாடி வராத முன்னாடியே சொல்ரவீங்க...
இம்புட்டு சோகமான விசயமும் ராசா கை பட்டா... அதகளம் ஆயிடுது...
உங்கள beat பண்ண ஊருக்குள்ள ஆளே இல்ல... gun மாறி போயிட்டே இருங்க.. ஆமா!!!
-- அய்யனார்.
அருமை
ரொம்ப ரசிச்சேன்
இத ஏன் சிறுகதை போட்டிக்கு அனுப்பகூடாது
மிக அருமை
நன்றி
சூப்பர் அனுபவ பதிவுபா..
எழுதியவிதம் அதைவிட சூப்பர்..
//
(மேல உள்ள படத்துல உயிருக்கு பயந்துக்கிட்டு ரெண்டாவது துடிப்பு போடுறது நான்தானுங்கண்ணே..
//
எந்த ரெண்டாவதுனு சொல்லவே இல்லையே..?
சிறுகதை போட்டிக்குரிய கதை நண்பரே. உடனே அனுப்புங்க.
ராப்டிங் எல்லாம் போய் கலக்குறீங்க?
செத்துப் பொழச்சு வந்த ராசா, வாழ்க நீ பல்லாண்டு!
இந்தியாவுல ரிஷிகேஸ்ல ராப்டிங் போகலாம்... அதுவும் கங்கைல
உயிர் பயம் சூப்பர் :)
//ஐயோ யாராவது காப்பத்துங்களேன் நான் போய் ஒரு பதிவு போடணும்..//
சேட்டை...
ரசித்தேன் :)
ரொம்ப அருமையா பதிவுங்க..உங்க தாத்தாவுக்கும் குசும்பு ரொம்பங்க....இன்னும் கலக்க வாழ்த்துக்கள்!
ராசா உமக்கு ஆயுசு கெட்டி அய்யா, கலக்குங்க
really superb kathainga
poatti kathaina 1st prize idhukkuthaan
if it is real unga maru jenmathukku vaazhthukkal
//////////////////
SUREஷ் (பழனியிலிருந்து) said...
//(மேல உள்ள படத்துல உயிருக்கு பயந்துக்கிட்டு ரெண்டாவது துடிப்பு போடுறது நான்தானுங்கண்ணே..உயிர் பயம் கண்ணுல தெரியுதா..)//
அட..,
9 June, 2009 7:35 PM
///////////////
நன்றி பழனி சுரேஸ்
/////////////
9 June, 2009 7:35 PM
Cable Sankar said...
அருமையாக எழுதியிருக்கிறீர்கள். ராஜா..
9 June, 2009 7:53 PM
//////////////
ரொம்ப நன்றி கேபிள் சங்கர் அண்ணே..நீங்க என்னோட சைட்டுக்கு வந்து படிக்கிறது மிக்க சந்தோசம்
///////////////
9 June, 2009 7:53 PM
ஜியா said...
//மேல உள்ள படத்துல உயிருக்கு பயந்துக்கிட்டு ரெண்டாவது துடுப்பு போடுறது//
அப்படியே அந்த மாரியாத்தாக்கள் படத்தப் போட்டிருந்தா, நாங்களும் கொஞ்சம் தரிசனம் கண்டிருப்போம்... :))
///////////////
ஹி.ஹி..பொண்ணுங்க போட்டோவை அவுங்க அனுமதியில்லாம போடக்கூடாதுல்ல..அதுதான்
////////////////////////
9 June, 2009 8:07 PM
மாதேவி said...
செத்துப்போன தாத்தாவின் லொள் பகுதி நல்ல ரசனையாக இருந்தது.
9 June, 2009 8:24 PM
சித்து said...
ஆஹா அருமையான பயணமா இருந்திருக்கும் போல் தெரிகிறதே.
9 June, 2009 8:39 PM
//////////////////
நன்றி மாதேவி, சித்து..
////////////////
பூக்காதலன் said...
நானும் இது போன்ற பயணத்தை தாய்லாந்தின் புக்கட் தீவில் சென்றுள்ளேன். அந்த பயணத்தின் திரில்லே கீழே விழுந்து தண்ணீர் கவ்வுவது தான்.
அது சரி கோவாலு கோவாலு என்று சொல்றீங்களே அவருக்கு மறு பெயர் ராஜாவா?
9 June, 2009 9:13 PM
/////////////////////
எப்படிண்ணே கரெக்டா கண்டுபிடிச்சீங்க..அவர் பெயர் ராசகோவாலு
////////////////
9 June, 2009 9:13 PM
Suresh said...
நான் இது போன்ற இந்த பயணத்தை பெங்களூரில் கல்யாணத்துக்கு 1 வாரம் முன்னாடி டீம் மோட போனோம் சரி பயம், எலலாரும் என் வையிட் தாங்கினா , நான் கடலில் மீதந்ததால் ஜாக்கெட்டோட எல்லாரும் தெரியமா குதிசாங்க அந்த பயமுடிவில்..
இதோ அடுத்த வாரம் கூட போரம் நானும் இத பத்தி எழுதலாம் என்று எண்ணி இருந்தேன் நீங்க உங்க பாணியில் பிண்ணி எடுத்துடிங்க
9 June, 2009 9:57 PM
//////////////////////////////
கண்டிப்பா எழுதுங்க சுரேஷ்..ஆவலாக உள்ளேன்..
/////////////
9 June, 2009 10:07 PM
TAARU said...
//பிஸ்ஸா சாப்பிடுற இடத்துல கடலை முட்டாய பார்த்தா எப்படி இருக்கும்,///
துடுப்பு போட்டுகிட்டே யோசிப்பீங்களோ?
//எதுக்கு எத்தனைப் பேரு சாகுறோம்னு எண்ணுறதுக்கா..ஆளை விடுங்கடா சாமி..”//
எப்பூடி .... நாங்க எல்லாம் பின்னாடி வராத முன்னாடியே சொல்ரவீங்க...
இம்புட்டு சோகமான விசயமும் ராசா கை பட்டா... அதகளம் ஆயிடுது...
உங்கள beat பண்ண ஊருக்குள்ள ஆளே இல்ல... gun மாறி போயிட்டே இருங்க.. ஆமா!!!
-- அய்யனார்.
9 June, 2009 10:12 PM
/////////////////
நன்றி அய்யனாரே..ஒவ்வொரு பதிவு எழுதிய பின்பு உங்கள் போன்றவர்கள் கமெண்டுக்காக காத்திருப்பேன்..அருமை..
/////////////
என் பக்கம் said...
அருமை
ரொம்ப ரசிச்சேன்
இத ஏன் சிறுகதை போட்டிக்கு அனுப்பகூடாது
மிக அருமை
நன்றி
9 June, 2009 11:09 PM
சுரேஷ் குமார் said...
சூப்பர் அனுபவ பதிவுபா..
எழுதியவிதம் அதைவிட சூப்பர்..
//
(மேல உள்ள படத்துல உயிருக்கு பயந்துக்கிட்டு ரெண்டாவது துடிப்பு போடுறது நான்தானுங்கண்ணே..
//
எந்த ரெண்டாவதுனு சொல்லவே இல்லையே..?
10 June, 2009 2:17 AM
tamilcinema said...
சிறுகதை போட்டிக்குரிய கதை நண்பரே. உடனே அனுப்புங்க.
10 June, 2009 2:55 AM
//////////////
நன்றி..எப்படி, யாருக்கு அனுப்புவதுன்னுதான் தெரியல..கொஞ்சம் உதவி பண்ண முடியுமா??
/////////////////
10 June, 2009 2:55 AM
Joe said...
ராப்டிங் எல்லாம் போய் கலக்குறீங்க?
செத்துப் பொழச்சு வந்த ராசா, வாழ்க நீ பல்லாண்டு!
10 June, 2009 5:04 AM
பித்தன் said...
இந்தியாவுல ரிஷிகேஸ்ல ராப்டிங் போகலாம்... அதுவும் கங்கைல
உயிர் பயம் சூப்பர் :)
10 June, 2009 5:31 AM
Kanna said...
//ஐயோ யாராவது காப்பத்துங்களேன் நான் போய் ஒரு பதிவு போடணும்..//
சேட்டை...
ரசித்தேன் :)
10 June, 2009 6:03 AM
//////////////////
வாழ்த்துக்களுக்கு நன்றி...
//////////////
மருதநாயகம் said...
ராசா உமக்கு ஆயுசு கெட்டி அய்யா, கலக்குங்க
10 June, 2009 7:22 AM
தமிழர்ஸ் - Tamilers said...
வாழ்த்துகள்!
உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.
உங்கள் வருகைக்கு நன்றி,
அப்படியே ஓட்டுபட்டையை நிறுவி விட்டால் இன்னும் நிறைய ஓட்டுகள் கிடைக்கும்.எப்படி இணைக்கவேண்டு்ம் என்ற விவரங்களுக்கு Tamilers Blog
நன்றி
தமிழர்ஸ்
10 June, 2009 7:30 AM
NESAMITHRAN said...
really superb kathainga
poatti kathaina 1st prize idhukkuthaan
if it is real unga maru jenmathukku vaazhthukkal
10 June, 2009 11:33 AM
////////////////
வருகைக்கு நன்றி..
Dear Raja,
I have been very impressed with your writing style and the innate way of expressing your feelings nad ideas. In these days, I am undergoing some sort of depression and facing so much of troubles. However, by reading your writings, I am relaxing much and feeling free.
Please continue your works.
Sincerely,
V. R. Swamy
/////////////////////
10 June, 2009 4:22 PM
Anonymous said...
Dear Raja,
I have been very impressed with your writing style and the innate way of expressing your feelings nad ideas. In these days, I am undergoing some sort of depression and facing so much of troubles. However, by reading your writings, I am relaxing much and feeling free.
Please continue your works.
Sincerely,
V. R. Swamy
//////////////////////////
dear swamy,
nice to hear ur words...thanks for coming anr reading my blog.
raja
www.Tamilers.com
You Are Posting Really Great Articles... Keep It Up...
We have launched a Tamil Bookmarking site called "www.Tamilers.com" which brings more traffic to all bloggers
தமிழர்ஸ்.காம் தளத்தில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.
அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்
தமிழர்ஸின் சேவைகள்
இவ்வார தமிழர்
நீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.
இவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்
இவ்வார தமிழர் பட்டையை இது வரை 40 பிரபல பதிவர்கள் இணைத்துள்ளார்கள் நீங்களும் சுலபமாக நிறுவலாம்.
இவ்வார தமிழரை இணைக்க இந்த சுட்டியை சொடுக்குங்கள்
இணைத்துவிட்டு எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அல்லது ஒரு பின்னுட்டம்
சிறந்த தமிழ் வலைப்பூக்கள்
Add your Blog to Top Tamil Blogs - Powered by Tamilers.
It has enhanced ranking system. It displays all stas like Hits Today, Rank, Average hits, Daily status, Weekly status & more.
This Ranking started from this week.So everyone has the same start line. Join Today.
"சிறந்த தமிழ் வலைப்பூக்கள்" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.
இநத வாரம் தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்
சிறந்த வலைப்பூக்களில் சேர இந்த சுட்டியை சொடுக்குங்கள்
இன்னும் பல சேவைகள் வரப்போகுது, உடனே இணைத்துக்கொள்ளுங்கள். இது உலக தமிழர்களக்கான தளம்.
உங்கள் ஆலோசணைகளும் கருத்துகளும் services@tamilers.com என்ற மின்னஞ்சலுக்கு வரவேற்க்க படுகின்றன.
நன்றி
உங்கள் ஆதரவு, அன்பு மற்றும் தமிழுடன்
தமிழர்ஸ்
தமிழர்ஸ் பிளாக்
ஹாஹா அந்த நேரத்திலும் தாத்தாவை பற்றி எழுதின லொல்லு இருக்கே ஹி ஹி
ரொம்ப வே குதும்புதான், அப்படியே படகு சரிந்து விட்டாதா யம்மா நினைத்து பார்க்கவே பயமா இருக்கு.
//“வாடா பேராண்டி..,பார்த்து ரொம்ப நாளாச்சுடா..வீட்டில நல்லா இருக்காங்களடா..வர்றப்ப ஒரு பாக்கெட் செண்ட் பாட்டில் எடுத்துட்டு வாடா..இங்க ஓரே கப்பு அடிக்குது.. அப்பிடியே பத்மினி ஒரு இந்தி படத்துல கவர்ச்சியா நடிச்சு இருக்காம்ளடா..ரெண்டு படத்தை எடுத்து வந்துருடா..”//
ஹா ஹா
Post a Comment