Thursday 4 June, 2009

மச்சான் அடுத்த டிரீட்டு எப்படா…..

இங்க சின்சினாட்டில நம்ம ப்ராஜெக்டுக்கு நம்ம ஊரு பையன் புதுசா வந்திருந்தாண்ணே..பய புள்ள ரொம்ப அப்பாவிண்ணே….நமிதாவ பார்த்தாக் கூட கண்ணை மூடிக்கிறுவான்னான் பார்த்துங்களேன்..

இங்க ஒரு இருபது பேரு இருப்போம்ணே..எல்லாம் வேற வேற மாநிலத்துகாரயிங்க..நம்ம ஆளு அவீங்க கூட பேசுனா, பருந்து கூட்டத்துக்கு நடுவுல இருக்குற கோழிக்குஞ்சு மாதிரி தெரிவாண்ணே..

நம்ம ஊருப்பக்கம் நல்லா செலவழிச்சாலும், இங்க கொஞ்சம் சிக்கனமாத்தாண்ணே இருப்போம்….வேற வழியில்லேண்ணே..எல்லாம் டாலருல..அடிமை மாதிரி வேலை பாக்குறோம்ணே..கையில கொஞ்சம் காசு சேத்திருந்தா தானே கொஞ்சம் மருவாதையா இருக்கும்..இதுக்காகவே, யாருக்காவது பொறந்த நாள்ன்னா ஓடியே போயிருவாங்கண்ணே…டிரீட் கொடுக்கனும்லே..ரெண்டு நாள் கழிச்சுதான் திரும்ப வருவாய்ங்கண்ணே..

இது தெரியாமா நம்ம ஆளு அவனுக்கு பொறந்த நாளுன்னு வாய விட்டுடாங்கண்ணே..அவ்வளவுதான், நம்ம ஆளுங்க, “டிரீட்,டிரீட்” ன்னு கத்த ஆரம்பிச்சுட்டாயிங்கண்ணே..வலை விரிக்கிராயிங்கண்ணு தெரியாம நம்ம ஆளு சரின்னு சொல்ல ஆரம்பிச்சதுதான், அவன் வாழ்க்கையில பொறந்ததுக்கு அப்புறம் பண்ணிண பெரிய தப்பு..நம்ம பசங்க அலறிட்டாயிங்கண்ணே..அவனவன் 5 ஸ்டார் ரேஞ்சுக்கு ஹோட்டல் தேட ஆரம்பிச்சுட்டயிங்கண்ணே..கடைசியில ஒரு இந்தியன் ஹோட்டல் செலக்ட் பண்ணிட்டு நம்ம பையலுக்கு டைம் குறிச்சுட்டாயிங்கண்ணே..

சரி,எல்லாரும் ஹோட்டலுக்கு போய் வெயிட் பண்றோம், வர்ராயிங்க பாருங்க..அவனவன் கல்யாண வீட்டுக்கு போற மாதிரி வீட்டுல இருந்து, எல்லாத்தையும் கூப்பிட்டுக்கிட்டு..பையனுக்கே அப்பவே லைட்டா வேர்க்க ஆரம்பிச்சிருச்சு..ஒருத்தன் பார்த்தா நாய்க்குட்டியையும் கூட்டிக்கிட்டு வர்ரான்னா பாருங்கண்ணே..நம்ம ஆளு 10 பேர் எதிரு பார்த்து இருந்தா வந்தது 25  பேர்..நம்ம பய கொஞ்சம் ஆடித்தான் போயிட்டான்..

வந்ததுமே, ஆரம்பிச்சாயிங்க பாருங்க….சூப்புல இருந்து தொடங்குனாயிங்கண்ணே..ஒரு சூப் கண்டிப்பா ரெண்டு பேர்  ப்பிடலான்ணே..இதுதான் அடுத்தவன் காசாச்சே..அவனவன் தனி சூப்புதான்..அதுல என்னன்னா, ஒருத்தன், அவன் 1 வயசுக்கு குழந்தைக்கு தனி சூப் வாங்குறாண்ணே...அது புட்டிபால் கூட மிச்சம் வைக்கும்ணே..நம்ம ஆளுக்கு லைட்டா கிர்ருன்னு இருந்துச்சு..லைட்டா கர்ச்சிப்ப எடுத்து மூஞ்சிய தொடச்சுக்கிட்டாண்ணே..அடுத்து, ஸ்டார்டர்ஸ்…சொந்த காசுல சாப்பிட்டா ஒரு பய கூட அத எட்டிப் பார்க்கா மாட்டாயிங்கண்ணே..இப்ப ரெண்டு ஸ்டாட்டர்தான்..பிச்சு உதறிட்டாங்கண்ணே..

ஒருத்தனெல்லாம் கண்ணை மூடிக்கிட்டாண்ணே..அப்பிடியே மெனுகார்டுல கைய வச்சு அப்பிடியே கீழ வர்ரான்..”இதுல ரெண்டு குடுங்க..” சர்வரே கொஞ்சம் களைச்சுதான் போயிட்டான்..இன்னொருத்தன் ஒரு ஐயிட்டத்த காட்டி ரெண்டு வேணும்னு அடம் பிடிக்கிறான்..அது என்னடான்னு பார்த்தா..”நன்றி மீண்டும் வருக”ன்னு இந்தியில எழுதி இருக்குண்ணே..நம்ம ஆளு குடலுல கோல் போட்ட மாதிரி ஆயிட்டாண்ணே..

எல்லா ஆடித் தீர்த்த பின்னாடி டேபிள பார்த்தா, எல்லாம் மிச்சம் இருக்குண்ணே..முக்காவாசி வேஸ்ட்ண்ணே..அதோட நின்னாக்கூட பரவாயில்லையே..ஜூஸ் ஆரம்பிச்சுட்டாயிங்கண்ணே..சத்தியமா சொல்லுறேண்ணே..ஹோட்டலுக்கு வந்தா, காசு ஆகும்னு ஒருத்தன் கூட ஜூஸ் குடிச்சு பார்த்ததில்லண்ணே..ஒருத்தனுக்கு காளான் ஜூஸ் வேண்டுமாம்..சர்வரை சத்தம் போடுறாண்ணே..டே, அடுத்தவன் காசுனா காளான் என்னடா, கல்லுல கூட ஜூஸ் போடுவாயிங்கடா..நம்ம பையன் மூச்சடைச்சு போயிட்டாண்ணே..

பில் கொண்டு வந்து வைக்க நம்ம பையன் கொஞ்சம் பயத்தோட தொறந்து பார்க்க, அப்பிடியே கழுத்து கோணிக்கிச்சுண்ணே..கண்ணு கொஞ்சம் மேல தூக்கிருச்சுண்ணே..2300 டாலரு..நம்ம பையன் ஒரு மாசம் சம்பளம்..இதுல என்ன கொடுமைன்னா, நல்லா சாப்பிட்டிட்டு எல்லாரும் ஓடுறாயிங்கண்ணே..ஒரு ஜென்மம் கூட “ஹேப்பி பர்த்டே” ன்னு சொல்லலே..எனக்கு மனசு கஷ்டமா போச்சுண்ணே..

சத்தியமா சொல்லுரேண்ணே..எனக்கெல்லாம் அடுத்தவன் காசுல சாப்பிட்டா உடம்பு கூசும்னே..கூனிக் குறுகி போய்த்தான்னே உக்கார்ந்து இருந்தேன்…உழைச்சு நம்ம காசுல, சாப்பிட்டு பாருங்கண்ணே..பழைய சோறு கூட அமிர்தமா இருக்கும்னே..

பக்கத்துல போய் “ஹேப்பி பர்த்டே” டா மச்சான்னு சொன்னேன்..”என்னடா ராசா..ஒரு வார்த்தை சொல்லியிருந்தா தப்பிச்சிருப்பேனடா..” பாவமா சொல்லுராண்ணே..நம்மதான் மதுரை குசும்பனாச்சே..’சரி விடுடா..அடுத்த டிரீட் எப்படா” ன்னு கேட்டதுதான் தாமிசம், பின்னங்கால் பிடரில அடிக்க ஓடுறாண்ணே….

கீழ உள்ள ஓட்டைப் போட்டிங்கண்ணா, நான் உங்க ஊருப் பக்கம் வர்ரப்ப டிரீட் வைப்பேண்ணே, உங்க காசில..ஹி..ஹி..

 

 

 

 

26 comments:

சித்து said...

2300 டாலரா?? ஒரு லட்ச ரூபாய்க்கு மேல வருதே?? பாவமுங்க அவரு, நீங்க ஒரு வார்த்த சொல்லி இருக்கலாம். நீங்க இந்த பதிவு எழுதிய அதே நேரம் நம்ப பய ஜெட்லி இது நேர் எதிரா ஒரு பதிவு போட்டிருக்காரு http://nee-kelen.blogspot.com/2009/06/blog-post_04.html பாருங்க.

வேத்தியன் said...

உங்க ப்ளாக் தொடர்ந்து வாசித்து வருகிறேன்..
இன்னைக்கு தான் பின்னூட்டம் போட வாய்ப்பு கிடைச்சுதுங்க...

:-)

வேத்தியன் said...

பின்னங்கால் பிடரில அடிக்க ஓடுறாண்ணே….//

வேற எப்பிடி ஓடனும்????
வேகத்தை கணக்கு போட்டு பாத்தீங்களா???
உசைன் போல்ட்டை விட கொஞ்சம் கூடவே இருக்கும்ன்னு நம்புறேன்...

:-)

வேத்தியன் said...

உழைச்சு நம்ம காசுல, சாப்பிட்டு பாருங்கண்ணே..பழைய சோறு கூட அமிர்தமா இருக்கும்னே..//

அற்புதம் பாஸு...

மத்தது ரெண்டுலயும் ஓட்டு போட்டாச்சு...
இதுக்காகவே ட்ரீட் வைக்கலாமே???
:-)

ச.பிரேம்குமார் said...

பாவம் அந்த புள்ள :)

TAARU said...

பதிவு பண்ண விஷயம் OK...
ராசா touch ரொம்ப கொரைவாவுல இருக்கு....
இன்னும் நெறய எதிர் பார்க்கும் அமைப்பு...
- அய்யனார்.

Bleachingpowder said...

பதிவை படிச்ச வுடனே நிஜமாவே மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு.பெங்களூர்ல இருநூறு குடுத்து pvrல படம் பார்த்தாலே, ஊருல அம்மா காசோட அருமை உனக்கு தெரியில அதான் இப்படி காச கரியாக்குறேன்னு திட்டுவாங்க.

2500 டாலரை செலவழிக்க விட்டதெல்லாம் ரொம்ப அநியாயங்க.

கலையரசன் said...

கமொடி + டச்சிங்..
ண்ணே.. ண்ணே.. ன்னு சொல்றப்ப,
தானா உங்க மேல ஒரு பாசம் வருது!
இனிமே.. உங்களையும் பாலோ பன்னவேன்டியதுதான்!
(அட.. பயப்படாதிங்கணே! பதிவுலதான் பாலோ பன்றேன்!)

கலையரசன் said...

ஹய்யா நான்தான் 50வது பாலோவர்!
(...ண்ணே! 50 போட்டுடீங்க! பார்ட்டீஇஇஇஇஇ..)

Anonymous said...
This comment has been removed by the author.
Suresh said...

அண்ணே நாங்க எல்லாம் இபப்டி தான் யூஎஸ் ரீடர்ன் ஆன ஒருத்தனை சென்னை தாஜ் ஹோட்டலில் டீரிட் வாங்கி ஹீ ஹீ ஊறுகாய் ஆக்கினோம்..

ஆமாம் ... எனக்கு கிங் பிராண் ஒத்துகவில்லை, வாந்தி எடுத்து மறு முறை ஹீ ஹீ ஒரு ரவுண்டு போனோம்...

பாவம் அந்த தியாகி கிட்ட நீங்களாவது ஏதாச்சும் சொல்லி இருக்கலாம்

அமர பாரதி said...

பல வருட அமெரிக்க வாழ்க்கையில் இப்போதுதான் இப்படி கேள்விப் படுகிறேன். நம்புவதற்கு சிரமமாக உள்ளது. இப்படி சாப்பிட்டால் தெளிவாக "நான் 250 டாலர் தான் எதிர் பார்த்தேன். அதனால் மீத பணத்தை அனைவரும் பிரித்து செலுத்துங்கள்" என்று சொல்லலாம்.

மேலும் பொதுவாக அமெரிக்காவில் பிறந்த நாள் ட்ரீட் என்பது அவரைத் தவிட அனைவரும் பணத்தைப் பிரித்து செலுத்தும் படியான ட்ரீட்டாகத்தான் இருக்கும்.

vasu balaji said...

அங்க போயும் அப்படித்தானா? பாவம்.

அவிய்ங்க ராசா said...

///////////////
சித்து said...
2300 டாலரா?? ஒரு லட்ச ரூபாய்க்கு மேல வருதே?? பாவமுங்க அவரு, நீங்க ஒரு வார்த்த சொல்லி இருக்கலாம். நீங்க இந்த பதிவு எழுதிய அதே நேரம் நம்ப பய ஜெட்லி இது நேர் எதிரா ஒரு பதிவு போட்டிருக்காரு http://nee-kelen.blogspot.com/2009/06/blog-post_04.html பாருங்க.
4 June, 2009 9:36 PM
/////////////////////
வருகைக்கு நன்றி..மிகவும் நகைச்சுவையான பதிவு

அவிய்ங்க ராசா said...

/////////////
4 June, 2009 9:36 PM
வேத்தியன் said...
உங்க ப்ளாக் தொடர்ந்து வாசித்து வருகிறேன்..
இன்னைக்கு தான் பின்னூட்டம் போட வாய்ப்பு கிடைச்சுதுங்க...

:-)
4 June, 2009 9:
/////////////////////
நன்றி வேத்தியன்..நானும் உங்கள் பதிவை படித்திருக்கிறேன்…நன்றாக எழுதுறீர்கள்

அவிய்ங்க ராசா said...

////////////
4 June, 2009 9:58 PM
ச.பிரேம்குமார் said...
பாவம் அந்த புள்ள :)
4 June, 2009 10:41 PM
////////////
ஆமா பிரேம்..பயலுக்கு ரெண்டு நாளா காயிச்சல் அதுக்கப்பரம்

அவிய்ங்க ராசா said...

////////////
4 June, 2009 10:41 PM
TAARU said...
பதிவு பண்ண விஷயம் OK...
ராசா touch ரொம்ப கொரைவாவுல இருக்கு....
இன்னும் நெறய எதிர் பார்க்கும் அமைப்பு...
- அய்யனார்.
4 June, 2009 10:46 P
//////////////////////
தொடர்ந்து தரும் ஊக்கத்துக்கு நன்றி அய்யனாரே..கண்டிப்பாக உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி பண்ண முயற்சி செய்கிறேன்

அவிய்ங்க ராசா said...

/////////////
Bleachingpowder said...
பதிவை படிச்ச வுடனே நிஜமாவே மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு.பெங்களூர்ல இருநூறு குடுத்து pvrல படம் பார்த்தாலே, ஊருல அம்மா காசோட அருமை உனக்கு தெரியில அதான் இப்படி காச கரியாக்குறேன்னு திட்டுவாங்க.

2500 டாலரை செலவழிக்க விட்டதெல்லாம் ரொம்ப அநியாயங்க.
5 June, 2009 12:00 AM
/////////////////////
நான் விரும்பி படிக்கும் பதிவர்களி நீங்களும் ஒருவர்..தொடர்ந்து எழுதுங்கள்

அவிய்ங்க ராசா said...

////////////
5 June, 2009 12:35 AM
கலையரசன் said...
ஹய்யா நான்தான் 50வது பாலோவர்!
(...ண்ணே! 50 போட்டுடீங்க! பார்ட்டீஇஇஇஇஇ..)
5 June, 2009 12:39 AM
/////////////////
நன்றி கலை..என்னால நம்பவே முடியலை

அவிய்ங்க ராசா said...

////////////
பித்தன் said...
-:)
////////////
நன்றி பித்தன்..வலைபக்கத்தில் கிடைத்த அருமையான நண்பர்களில் நீங்களும் ஒருவர்

அவிய்ங்க ராசா said...

///////////////
5 June, 2009 5:53 AM
Suresh said...
அண்ணே நாங்க எல்லாம் இபப்டி தான் யூஎஸ் ரீடர்ன் ஆன ஒருத்தனை சென்னை தாஜ் ஹோட்டலில் டீரிட் வாங்கி ஹீ ஹீ ஊறுகாய் ஆக்கினோம்..

ஆமாம் ... எனக்கு கிங் பிராண் ஒத்துகவில்லை, வாந்தி எடுத்து மறு முறை ஹீ ஹீ ஒரு ரவுண்டு போனோம்...

பாவம் அந்த தியாகி கிட்ட நீங்களாவது ஏதாச்சும் சொல்லி இருக்கலாம்
5 June, 2009 5:57 AM
////////////////
நன்றி சுரேஷ்..இனிமேல் பய யாருக்கும் டிரீட் கொடுக்க மாட்டான்..நம்ம ஊருல ட்ரீட் பிரச்சனை இல்ல

அவிய்ங்க ராசா said...

//////////////
5 June, 2009 5:57 AM
அமர பாரதி said...
பல வருட அமெரிக்க வாழ்க்கையில் இப்போதுதான் இப்படி கேள்விப் படுகிறேன். நம்புவதற்கு சிரமமாக உள்ளது. இப்படி சாப்பிட்டால் தெளிவாக "நான் 250 டாலர் தான் எதிர் பார்த்தேன். அதனால் மீத பணத்தை அனைவரும் பிரித்து செலுத்துங்கள்" என்று சொல்லலாம்.

மேலும் பொதுவாக அமெரிக்காவில் பிறந்த நாள் ட்ரீட் என்பது அவரைத் தவிட அனைவரும் பணத்தைப் பிரித்து செலுத்தும் படியான ட்ரீட்டாகத்தான் இருக்கும்.
5 June, 2009 6:20 AM
////////////////
வருகைக்கு நன்றி பாரதி..பொதுவா எதாவது கிளையண்டுக்கு பர்த்டேன்னாத்தான் அப்படி நடக்கும்..அதுவுமில்லாம பயபுள்ள புதுசு அதுதான்..

அவிய்ங்க ராசா said...

////////////
5 June, 2009 6:20 AM
பாலா... said...
அங்க போயும் அப்படித்தானா? பாவம்.
5 June, 2009 8:51 AM
//////////////
:((((((((((((((

Anonymous said...

அண்ணே நீங்க பதிவ அழிச்சாலும் பதிவு இங்கே http://www.tamilmanam.net/printer_friendly.php?id=367581 பத்திரமா இருக்கு. ஒரே கண்ணோட்டத்தோட மற்ற பதிவர்களை பார்ப்பதை மாற்றி கொள்ளுங்கள். மற்றவர்களை ஆணவம் திமிர் என்று குற்றம் சாட்டும் நீங்கள் யார்? என்பதை உங்கள் மனசாட்சியிடம் கேட்டு கொள்ளுங்கள். உங்கள் நோக்கம் என்றாவது ஒரு நாள் வெளிப்பட்டு விடும்.

*இயற்கை ராஜி* said...

ha..ha..ha...

aana avar paavam..neengalavathu solli irukalam illa?:-))

Sudharsan said...

அண்ணே ...காமெடியா கலக்குறிங்க ....
இதே போல எத்தனய்யோ சுரேஷ் பயல பார்த்துட்டோம்னே...ஆனா பய புள்ளைங்க திருந்தவே மாட்டேங்கிறாய்ங்க....என்னத்த சொல்ல ....

அமெரிகா போயி தான் பொறந்த நாள கொண்டாடுவொம்னு அடம்பிடிக்கிறாய்ங்க....

பாக்கி பயலுவ எல்லா உரூப்பட மாட்டய்ங்க்கண்ணே...பயப்படாதீக...என்னைய மாதிரி ஒரு சொன்ன கிடைக்காமளா போயிடுவான்..... அவங்கள சுரேஷ்க்கு பண்ண துரோகத்துக்கு பழி வாங்காம விட மாட்டேன்

நம்பர் மட்டும் குடுங்கண்ணே..பாக்கி (இருந்தா :-)) பார்த்துக்கிறேன்...

Post a Comment