Friday 9 August, 2013

எழுதுறேன்யா நானும் சாப்பாட்டுக்கடை இல்லாட்டி உணவக பதிவு



இந்த கோவாலு இருக்கான்ல கோவாலு..எமகாதக பயபுள்ளைண்ணே..அன்னைக்கி அவன் கண்ணுல படக்கூடாதுண்ணு, அப்படியே கொல்லைப்புறமா எஸ்கேப் ஆகலாம்னு ஓடுறேன், வந்தாண்ணே குறுக்கால...

"ராசா..எங்குட்டுடா ஓடுற.."

"கோவாலு..அதுவந்து..ஆரம்பம் படம் யூடிபுல வந்துருச்சுன்னு யாரோ சொன்னாய்ங்க..அதுதாண்டா ஓடுறேன்.."

"படம் பார்க்கவா.."

"அய்யோ..கோவாலு..சிஸ்டத்தை தூக்கி கடாசுறதுக்கு..ஆமா..நீ ஏண்டா குறுக்கால வந்து ஜெர்க் அடிக்குற.."

"ராசா..நீயெல்லாம் பிரபல பதிவரா.."

எனக்கு மூக்குமேல சுர்ருன்னு கோவம் வந்துருச்சுண்ணே..எனக்கு மூக்கு வேற கொஞ்சம் பெரிசு வேறயா..இன்னும் அதிகமாயிடுச்சு..

"கோவாலு..என்னப் பார்த்து இந்த கேள்வி எப்படிடா கேக்கலாம்..டெய்லி ஆயிரம் பேரு படிக்கிறாய்ங்க..10 வாசகர் கடிதம் வருது..20 போன் காலு வருது..நாலு பேரு கமெண்டு போடுறாய்ங்க..என்னைப்போயி எப்படிடா அந்த கேள்விய கேட்கலாம்.."

"போடா ராசா..என்னைக்காவது ஒரு சாப்பாட்டுக்கடை அல்லாட்டி உணவக பதிவு எழுதியிருக்கயா.."

"அப்படின்னா.."

"இப்ப..இங்க ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட போற..சாப்பிட்டு என்ன பண்ணுவ.."

"கைய கழுவுவேன்.."

"போடாங்க..கைய கழுவுயோ, மாட்டாயோ..உடனே லேப்டாப்பை தூக்கிட்டு ஒரு பதிவை போட்டுடணும்.."

"ஆங்க்..சாப்பாட்ட பத்தி என்னடா எழுதுறது.."

"அட ராசா..எம்புட்டு இருக்கு..கிரேவி திக்கா இருக்கு...முட்டை சரியா வேகலை....சர்வ பண்ணுன ஆளு, மஞ்சக்கலர் சட்டை போட்டுருந்தாரு..கோழி கால்மேல கால் போட்டு உக்கார்ந்துருச்சு..அப்படியே நடு நடுவுல மானே தேனே பொன்மானே மாதிரி..டிவைன்..ம்ம்..எக்சலண்ட்..வொண்டர்புல்..ப்யூட்டிபுல்..அப்படின்னு நாலு வார்த்தை கோர்த்து விடணும்..."

"ஆஹா..அம்புட்டு ஈசியா..எழுறேண்யா நானும் சாப்பாட்டுக்கடை பதிவு..இந்த வார பதிவு கீழே.."

சிட்டிக்கு நடுவுல நட்ட நடுவுல இருக்கு இந்த உணவகம்..என்ன கொஞ்சம் காஸ்ட்லி..ஏன்னா,.வர்றதுக்கு நீங்க விசா எடுக்கணும்..பிளைட் புடிக்கணும்..டிக்கெட் எடுக்கணும், முக்கியமா, இன்சூரன்ஸ் எடுக்கணும்.."

பிளைட்டு கிடைக்கலைன்னா, இந்திய பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடலுல ஒரு சுவிம்மிங்க போட்டிங்கன்னா பாடி 1 மாசத்துல வந்துரும்..இது..ஒரு மாசத்துல ஆளு வந்துருவிங்க..ஆமாண்ணே..அமெரிக்காலதான் இருக்கு...

நிறைய பசியோடு உள்ளே சென்றேன்..மனம் நிறைய அன்போடு வரவேற்கவில்லையென்றாலும், முகம் சுழிக்கவில்லை..இந்த இடத்தில் ஓனரை பற்றி சொல்லி ஆகவேண்டும்..அவ்வளவு சிரித்தமுகம்..நன்றாக பேசினார்..அம்மா, அப்பா, குடும்பம் பற்றி எல்லாம் விசாரித்தார்..ஸ்கைப்பில் பயன்களைப் பற்றி பேச, பேச வியந்தே போனேன்..

பசி வயிற்றை கிள்ள, என் மனம் அறிந்து ஒரு டம்ளரில் என் மனம் போல நிறைய ஒரு வஸ்து வைத்தார்கள்..அந்த வஸ்து என்ன கலர் என்று என்னால் கணிக்க முடியவில்லை...இருக்கின்ற பசியில் அதை எடுத்து மடமடவென்று குடித்துமுடித்தேன்..வாவ்..வொண்டர்புள்..டிவைன்..பேர் என்ன என்று கேட்டேன்..கேட்டதற்கு ஏதோ "தண்ணீர்" என்று பேர் சொன்னார்கள்..என் வாழ்க்கையில் இப்படி ஒன்றை சாப்பிட்டதே இல்லை..அட..அட..அட..புயூட்டிபுல்..ஊருக்கு சென்றால், இன்னும் நான்கு டம்ளர் குடிக்கவேண்டும்..ஓ..வாட் எ நேம்.."தண்ணீர்.." வாவ்..

இன்னும் என்ன கொண்டு வருவார்களோ என்ற அவா, என்னுள் மேலோங்கியது..ஆவலாக பார்த்தேன்..என் மனத்தை அறிந்து ஒரு பண்டத்தை அழகாக வைத்தார்கள்..அது சதுரமாக இருந்தது..சற்று வெள்ளையாகவும் இருந்தது..நான்கு புறங்களிலும், சற்று பூசினார் போல, சாம்பல் நிறத்தில் இருந்தது..எனக்கு எழுந்த ஆசைக்கு, ஒரு பத்தாவது சாப்பிட்டுவிடுவேன் போல இருந்தது..

அதை அப்படியே பிய்த்து, ஒரு விள்ளல் எடுத்து வாயில் போட்டேன்..டிவைன்..ஒரு மாதிரி க்ரேவி மாதிரி இல்லாமல், திக்காகவும் இல்லாமல், மொருமொருவென்றும் இல்லாமல்,,ஏதோ புதுமாதிரி அயிட்டமா இருந்தது..அடக்கமுடியாமல் பேர் என்ன என்று கேட்டேன்..அதன் பெயர் "பிரட்" டாம்..வாவ்..வாட் எ நேம்..அதற்கு தொட்டுக்கொள்ள, ரோஸ் கலரில் திக்காக, ஒரு பாட்டிலும், கத்தியும் வைத்தார்கள்..

நான் சாப்பிட்ட சாப்பாட்டு கடைகளிலே இதுபுதுமாதிரி அனுபவம்..அந்த கத்தியை எடுத்து, அந்த பாட்டிலில் உள்ள க்ரேவியை எடுத்து பிரட்மேல் தடவி சாப்பிடவேண்டுமாம்..க்ரேசி..தித்திப்பாக இருந்தது..டோட்டலா அதற்கு பேர் என்ன என்று கேட்டேன்..பெயர் ப்ரட்டும் ஜாம்முமாம்..சூப்பர்..இரண்டு பிரட்டுகளை சாப்பிட்டவுடன் பாத்ரூம் நோக்கி விரைந்தேன்..வாந்தி எடுத்துவிட்டு வந்தபோது, அன்று முழுவதும் தொல்லைப்படுத்தி கொண்டு இருந்த தலைவலி முற்றிலுமாக காணாமல் போயிருந்தது..உணவுக்கு மட்டுமில்லாமல், நம் ஆரோக்கியம் மேலும் அவ்வளவு அக்கறையான உணவகத்தை இதுவரை கேள்வியே பட்டதில்லை..வாவ்...

இவ்வளவு அருமையாக இருக்கிறதே..பயங்கர காஸ்ட்லியாக இருக்குமே என்று பயந்து, பயந்து எவ்வளவு என்று கேட்டேன்..என்ன ஒரு ஆச்சர்யம்..காசெல்லாம் வேண்டாமாம்..மாசம், சம்பாதிக்கிற பணத்தை, ஒழுங்கா கையில கொடுத்தா போதுமாம்..

ஓ மை காட்..வாட் எ டிவைனான, தித்திப்பான, க்ரேவியான, திக்கான, ஹெல்த்தியான் வொண்டர்புல்லான உணவகம்...

8 comments:

கார்த்திக் சரவணன் said...

ஹா ஹா ராசா... இது மட்டும் பத்தாது... கொண்டு வர்ற சாப்பாடை போட்டோ எடுத்துப் போடணும்...

சென்னை பித்தன் said...

அடுத்த சாப்பாட்டுக் கடைக்குப் போகும் முன் ஸ்கூல் பையன் கிட்ட காமிராவைக் கடன் வாங்கிட்டுப் போங்க!திருப்பிக் கொடுப்பதும் கொடுக்காததும் உங்கள் இஷ்டம்!

கார்த்திக் சரவணன் said...

//சென்னை பித்தன் said...
அடுத்த சாப்பாட்டுக் கடைக்குப் போகும் முன் ஸ்கூல் பையன் கிட்ட காமிராவைக் கடன் வாங்கிட்டுப் போங்க!திருப்பிக் கொடுப்பதும் கொடுக்காததும் உங்கள் இஷ்டம்!//

ஹா ஹா ஹா...

இரா. கண்ணன் said...

இது கேபிள்சங்கர் பதிவை கிண்டல் பண்ணுவது என்ற அனைவருக்கும் அப்பட்டமாக தெரியுது..

Unknown said...

கோவாலு கோவாலு

ராமுடு said...

Divine - Unable to control my laugh and its hard not to think about Cable.. Good one.

மாதேவி said...

ஹா.........ஹா

தனிமரம் said...

ஹீ கூப்பிட்டா அடுத்த சாப்பாட்டுக்கடைக்கு நானும் வாரேன் சார்!ஹீ

Post a Comment