Saturday 2 February, 2013

கடல் – செத்தாண்டா சேகரு…


படத்தில் ஒரு வசனம் வருகிறது..பள்ளிக்கூடம் பக்கம் கூட நெருங்காத படத்தின் நாயகன், சர்ச் பாதரைப் பார்த்து..

பாதர்..நீங்க என் குரு..என் வாழ்க்கையில நீங்க எந்த பாதையை தேடுனீங்கன்னு எனக்கு தெரியல..அதுகூட என்னால வரமுடியலை..ஆனா, எனக்கு அந்த பாதையை ஒரு தேவதை காட்டுனா..அவ பின்னாடியே அந்த பாதையில கையபிடிச்சுக்கிட்டு நடந்துருவேன்..”

நல்லா பார்த்துக்க்குங்கண்ணே..பள்ளிக்கூடம் பக்கம் கூட நெருங்காத பயபுள்ள, பாதரை பார்த்து, இலக்கியத்தரமா மேலே உள்ள டயலாக்கை பேசுராறாம்மா..

மேலே உள்ள டயலாக்குதுதான் ஒரு பருக்கை..இப்ப ஒரு பானை சோறு எப்படி இருக்குமுன்னு தெரிஞ்சுக்குமே..அதான்..கடல்புறத்து படம் என்று சொல்லிவிட்டு, கடல்புறத்து வாழ்வியல் எங்க இருக்குன்னு கேட்டீங்கன்னா, பின்நவீனத்துவ கோவம் வந்துரும்..ஜாக்கிரதை..

அதாவதுண்ணே..நம்ம மணிரத்னம் சார்..பார்த்துருக்காரு..என்னடா ஹிட்டு குடுத்து ரொம்ப நாளாயிருச்சே..என்ன பண்ணலாம்னு, அசிஸ்டெண்ட் டைரக்டர்சோட காபிடேல உக்கார்ந்து யோசிச்சுக்கிட்டு இருந்தப்ப.,

எக்ஸ்க்யூஸ்..மீ..சார்..கேன் வீ கேவ் சம் சீ புட்....மீன்..பிஷ்..”

அப்படின்னு ஒரு பயபுள்ள மீனு சாப்பிட ஆசைப்பட்டு சொல்லியிருக்கும்..உடனே டய்ங்க்ன்னு, பல்ப் எறிய, “எடுடா அந்த கொக்ககோலா கேனைஅப்படின்னு ஒரு மாசம் நம்ம தூத்துக்குடி இல்லாட்டி நம்ம நாகர்கோவில் பக்கம் கேம்ப் அடிச்சிருப்பாய்ங்க..ஜீன்ஸ் போட்டுக்கிட்டு மை காட்..வாட் ஸ்மெல்அப்படி சொல்லிக்கிட்டே, சென்னையில இருந்து வந்திருக்கும், ஜீன்ஸ் போட்ட யுவதிகளுக்கும், யுவன்களுக்கும் லைட்டா, ஒரு கோட்டு கருப்பு பெயிண்ட் அடிச்சா..கடல் புறத்து மக்களாம்..ஆஹா..ஏதோ ஒன்னு மிஸ்ஸாகுதே..ஆங்க்..”ஏலே..மக்கா..வாலே இந்தப்பக்கம்..” அதாவது கடல்பாஷை பேசுறாங்களாமாம்..

அப்ப்புறம்சூசை..தாமஸ்(தொம்மை), பெர்ணாணடஸ்….கிறிஸ்டின் பெயர் வைச்சா..6 மாதத்தில்கடல்படம் ரெடி..இட்ஸ் சிம்பிள்

என்னது படத்தின் கதையா..சரி..கேட்டுத் தொலைங்க..அம்மா இல்லாமல் வளரும் கவுதம், சர்ச் பாதரான அரவிந்த் சாமியால் வளர்க்கப்படுகிறார்..ரவுடி மாதிரி இருக்கும் நாயகனை நல்வழிப்படுத்தி கொண்டிருக்கையில், சூழ்ச்சியால் அவரை கவிழ்க்கிறார் அர்ஜூன்..காரணம் என்னவென்றால், பழைய பகை..ஒரே மிஷுனரியில் படிக்கும், அரவிந்த்சாமி அர்ஜுன் ஒரு தவறு செய்யும்போது, காட்டி கொடுத்துவிடுகிறார்..அதற்கு பழிவாங்குறாராம்..என்னதுநாயகி பத்தியா..அடப்போங்கையா..

கடல்புறத்து வாழ்வியல் இப்படியா இருக்கும்..வேர்வையால் நனைந்து போன உடம்பு, எங்கும் வீசும் மீன்வாடை, கருவாட்டு வாசம்..உள்ளுக்குள்ளே அடங்கிகிடக்கும் சோகம்..என்று வெளியே வரும்போது, சட்டையை மோந்து பார்த்தால், மீன் கவிச்சி அடிக்கவேண்டாமா..ம்..ஹூம்பாரின் செண்ட் வாசம்தான் வருகிறது..

கடல்புறத்து வாழ்வியலா..கிலோ என்னவிலை என்று கடல் பற்றிய படத்தில் கேட்கவைத்திருப்பதுதான் கொடுமை..கொஞ்சம் ஆறுதலளிப்பது அரவிந்த்சாமிதான்..நன்றாக நடித்திருக்கிறார்..அர்ஜீன்..வில்லனா....மை..காட்..

படத்தில் கவுரவவேடத்தில் தோன்றியிருக்கும் நாயகன் கவுதமும், நாயகி துளசியும் படத்திற்கு ஒன்றும் உதவியதாக தெரியவில்லை...ஆர் ரகுமான் பாடல்கள், ஆடியோவாக கேட்க நன்றாக இருந்தாலும்..சாரி..சார்..எங்கள் கடல்புறத்து பாடல்கள் இப்படி இருக்காது..அதுவும் கடைசியாக, கிளைமாக்சில் அரவிந்த்சாமி பாடும் பாட்டு, ஏதோ அமெரிக்க சர்ச்சில் கேட்பது போல் இருக்கிறது.. ராங்க் சாங்க் பிரம் ராங்க் பிலிம்

நாவலுக்கு எழுதவேண்டிய வசனத்தை, படத்துக்கு எழுதினால் என்ன கதி என்பதற்கு படத்தின் வசனம் சான்று..வசனம் ஜெயமோகனாம்..படத்தின் ஒரே ஒரு ஆறுதல், ஒளிப்பதிவு..இதெல்லாம் நம்ம ஊருலயா இருக்குது என்று விசனப்படவைத்திருக்கிறார், ராஜீவ்மேனன்..அதுவும், மேல் எழும்பும் கடல்நீர் நம்மேல் தெளிப்பது போல் ஒரு பிரமை..மிகநன்று..

முடிவாக, கடல்புறத்து வாழ்வியலுக்கும், இந்தப் படத்துக்கும், கடலளவு தூரம்..மணிரத்னம், ஓய்வுபெறவேண்டிய நேரம் நெருங்கிவிட்டதோ


கவுதம் அப்பா நடிகர் கார்த்திக் பாணியில் சொல்லவேண்டுமென்றால்..

(வெத்தலையை வாயில் போட்டு நன்றாக குதக்கி கொள்ளவும்)

ம்..ஹே....இது..இட்ஸ்..அது வந்து........இட்ஸ்....இட்ஸ். மொக்கை..அது வந்து..இட்ஸ் ஒரு மொக்கைப் படம்...

3 comments:

UNMAIKAL said...

மொத்த திரையுலகமும் எங்களை இழிவுபடுத்தி விட்டனர் என்று பிரமாண்டமான போராட்டங்கள் நடத்தினர்.

>>>>>> Click to Read
விபச்சார வழக்கில் ஒரு கைதும்- ஊடகங்களின் கருத்து சுதந்திர‌ விபசாரங்களும்.


.

அமுதா கிருஷ்ணா said...

கிராமம்,கடல் சார்ந்த படம் எடுக்க வேற ஆட்கள் இருக்கும் போது சென்னை கூட்டத்துக்கு எதுக்கு இந்த ஆசை?

சாவி மாதமிருமுறை said...

kadal mani partha parvai kurudan partha kakkai kalar karuppu endrel athu vellayava irukkum

Post a Comment