Friday, 25 January, 2013

விஸ்வரூபம் – சுடச்சுட விமர்சனம்அமெரிக்காவில் விஸ்வரூபம் வெளியாகி, இன்று ப்ரீமியர் ஷோ என்று சொன்னவுடனே முடிவெடுத்துவிட்டேன்கண்டிப்பாக பார்க்கவேண்டும்என்று. இதில் வேறு, பலசர்ச்சைகள், போராட்டங்கள், தடைகள் என்று சேர்த்து எதிர்பார்ப்பை கூட்டியிருந்தன. பவர்ஸ்டார் படத்தையே பத்துவாட்டி பார்க்கும் நான், நிஜஸ்டார் கமல்ஹாசன் படத்தை விட்டுவிடுவோமா என்ன..

படத்தின் கதை என்ன. எல்லாப் புத்தகங்களிலும் வந்ததுதான். அமெரிக்க நடன ஆசிரியராக வேலைபார்க்கும் கமலுடன் இருக்கவே மனைவி பூஜாகுமாருக்கு பிடிக்கவில்லை. இதில் வேலை பார்க்கும் ஓனரோடு கள்ளத் தொடர்பு வேறு. “என்னோட ஆம்படையா எப்படி தெரியுமாஎன்று ஆரம்பித்தவுடன் கமலின் முகம் தெரிய ஆரம்பிக்கிறது. முகம் முழுவதும் பெண்மை கலந்த நளினத்தோடு, நடனம் சொல்லி கொடுக்கும் பாங்கு, கமலுக்கு சொல்லவா வேண்டும். ஜமாய்க்கிறார்..

தன் கள்ளத்தொடர்பு வைத்திருக்கும் ஓனரை மணப்பதற்கு விவாகரத்து வேண்டுமல்லவா..அதற்காக ஒரு பிரைவேட் டிடெக்டிவ் ஏஜென்சியை வைத்து கமலை பாலோ பண்ண வைக்க, அதிர்ச்சியாக கமல் ஒரு முஸ்லீம் என்று தெரியவருகிறது, படிபடியாக அல்கொய்தாவுக்கே ஆப்கானிஸ்தானில் டிரெய்னிங்க் கொடுத்தவர் என்று வாயில் போட்ட பாப்கானை வெளியே வரவைக்கிறார்கள். ஏன் அமெரிக்காவில் வந்து நடன ஆசிரியராக நடிக்கிறார், ஏன் ஆப்கானில் அல்கொய்தவுக்கு டிரெய்னிங்க் கொடுத்தார், என்று ரத்தம் தெறிக்க, தெறிக்க..நாம் ஏன்..ஏன் என்று கேட்க கேட்க துப்பாக்கி குண்டுகளாலேயே பதில் சொல்லியிருக்கிறார்கள். படம் முடிந்து வெளியே வரும்போது, சட்டையில் ரத்தம் எதுவும் ஒட்டி இருக்கிறதா என்று பார்க்கவேண்டியிருக்கிறது..சமீபத்தில் நான் பார்த்த படங்களில் இந்த அளவுக்கு வன்முறையை எப்போதும் பார்த்ததில்லை.. உடல் துண்டாக விழுவது..கழுத்தை அறுப்பது..குண்டு முகத்தில் துளைப்பது..நடுரோட்டில் தூக்குபோடுவது....மறந்துவிட்டேன்..கமல் யதார்த்தநாயகன் அல்லவா.. இந்த படத்துக்கு யூ. சான்றிதழ் என்பது கொஞ்சம் இல்லைநிறையவே ஓவருங்கோ

மற்றபடி, இந்த மாதிரியான படத்தை கமலால் மட்டுமே எடுக்கமுடியும். கமலின் ஒரே நோக்கம் ஹாலிவுட் மட்டும் என்பது தெளிவாக தெரிகிறதுஅதே போலவே படமும் முழுக்க முழுக்க ஹாலிவுட் தரம். முக்கியமாக, ஆப்கானில், தீவிரவாதிகளுக்கு போர்பயிற்சி கொடுக்கும் காட்சிகள், அமெரிக்க தாக்குதல் என அனைத்தும் ஹாலிவுட் தரம்..காதுக்குள் ஹெலிகாப்டர் பறக்கும் இன்னமும் கேட்கிறது..

குறிப்பாக ஒரு காட்சி..அப்பாவியான கமலை கட்டிவைத்துவிட்டு, அடிஅடியென அடித்துவிட்டு, உயிர்போகும் தருணத்தில், துவம்சம் பண்ணி எல்லோரையும் போட்டுதள்ளும் அந்த சீன். அரங்கு முழக்க கிளாப்ஸ், தீனாவில் கமர்சியல் காம்ப்ளக்சில் அஜீத் துவம்சம் செய்யும் காட்சிக்கு கைதட்டியவன், இப்போதுதான் ஒரு சீனுக்கு ஐந்து நிமிடம் தொடர்ந்து கைதட்டினேன்..

ஆப்கானிஸ்தானா..அல்லது செட்டா என்று தெரியவில்லை..செட்டாக இருந்தால் ஆர்ட் டைரக்டருக்கு ஒரு ஷொட்டு..முழுக்க, முழுக்க  ஒரு மணிநேரம் ஆப்கானில் இருந்த ஒரு உணர்வு.. டைரக்டர் கமல் ஓங்கி ஒன்றரை டன் வெயிட்டாக அடித்திருக்கிறார்..அனைத்தும் க்ளாஸ்..

ஆனால்..
ஆனால்..
ஆனால்..

என்னடா, கமலின் அறிவுஜீவித்தனம் இன்னமும் வெளிப்படவே இல்லையே என்று பார்த்தால், “இதோ இருக்கேன்பாஎன்று ஓடிவருகிறார். இவ்வளவு மொன்னையாக அமெரிக்க உளவுத்துறையும்,, போலீசையும் காட்டியதே இல்லை..நிமிட நேரத்தில் எப்.பி. க்கு கடுக்காய் கொடுத்து தப்பிப்பது..ஒரு நியூக்ளியர் பாம் பேக்டரியவே, நீயுயார்க் நகரத்தில் நடத்துவது..அதை கமல் சொன்னவுடன்தான் தெரிவது..ஸ்வாட் டீம் துப்பாக்கியை பிடித்து நடக்கும் விதம்., எப்.பி. ஆபிசர்களின் நேர்த்தி என்றும்..ஹீம்கமல் சார்..முதல் பகுதி முழுதும் ஹாலிவுட் தரத்தில் எடுத்துவிட்டு, கடைசி 20 நிமிடங்கள், இப்படி சிரிப்பு மூட்டினால் எப்படி

நியூக்ளியர்..செரனியம்..பீஜான் ரேடியேசன்.. என்று கமலத்துவம்..அதாவது, “கமல்” “த்துவம்நிறைந்த வார்த்தைகளை கேட்கும்போது, “இன்னாப்பா..ஒன்னும் பிரிய மாட்டிங்குதுப்பாஎன்று சொல்ல நினைக்கும்போது, சஸ்பென்ஸ் நிறைந்த கடைசிகாட்சிகள். சற்று நிமிர்ந்து உக்கார்ந்தால்.. …..மை..காட்..படம் முடிந்துவிட்டதா..ஆமா..கமல் என்னப்பா சொல்லுறாரு..அப்புறம் அந்த தீவிரவாதிக்கும் கமலுக்கும் சண்டை எப்படி வந்தது..ஆமா..கடைசில எதுக்கு பாராசூட்டில இருந்து குதிக்கிறாங்க..ஆமா..கமலுன்னா யாரு..ஆமா..நான் யாரு

நான் ஏற்கனவே சொன்ன மாதிரி..கமலால் மட்டுமே இப்படி தொழில்நுட்பத்தோடு ஒரு இந்திய படம் எடுக்கமுடியும்..கமல் என்ற பிற்விகலைஞனை புரிந்து கொள்ள வேண்டுமென்றால், அவர் கூடவே பயணிக்கவேண்டும். ஆனால் அப்படி பயணிப்பது முடியாத காரியம்..ஏனென்றால் அவர் தொட்ட/தொடவேண்டிய சிகரங்களை அண்ணாந்து பார்க்கவே ஒரு யுகம் ஆகும்…

சரி…படத்தின் ரிசல்ட்..??

தொழில்நுட்பத்தில் உலகத்தரம்.. ஆனால்ல்ல்…..பிரியாணி சமைக்கமுடியுமா என்பதுதான் மில்லியன் டாலர் சந்தேகம்..

24 comments:

moorthy said...

padam pokka movie

Anonymous said...

mokka movie

DiaryAtoZ.com said...

Thanks for your Review. Let it comes to Chennai

Anonymous said...

kamal ennathan solla varraaru

drogba said...

chenniku vaarum aana varathu...

Vinay Murthy said...

entha porambokku mokkai movie sollutho. antha porambakae padatha direct panna sollu

Velu Sathish said...

Yoow Vinayagamurthy, mokka padatha mokka padam nu sollama vera enna soluvanga

Velu Sathish said...

ஆமா..கமல் என்னப்பா சொல்லுறாரு..அப்புறம் அந்த தீவிரவாதிக்கும் கமலுக்கும் சண்டை எப்படி வந்தது..ஆமா..கடைசில எதுக்கு பாராசூட்டில இருந்து குதிக்கிறாங்க..ஆமா..கமலுன்னா யாரு..ஆமா..நான் யாரு…

Super comment, Vizhundu Vizhundu sirichen

Vinay Murthy said...

kamal ulaga naayagan. Nee oru loosu ku.....i

Velu Sathish said...

@Vinay Murthy, sollitaru da tight Ku....i

Anonymous said...

//பிரியாணி சமைக்கமுடியுமா என்பதுதான் மில்லியன் டாலர் சந்தேகம்//..

biriyani samaikrathu ellam mathavanga paathupaanga....ungalukku venumna 5$ r 10$ O kuduthu kadaila vaangikoppa.... :)

ethanvijay said...

We are Waiting to watch this movie un taminadu

raj kumar said...

கமல் பிறவிக்கலைஞன் என்பதை நிரூபிக்கிறார், ஆனால் பல சர்சைகளில் மாட்டி கொள்கிறார். ம்ம்ம் ஆயிரம் சூரியன் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை! கமலை புரிந்து கொள்ள "கமலாக நீ மாற வேண்டும்".

raj kumar said...

kamal great planing to running his movie! all is well by kamal 7th sense

Anonymous said...

"Anonymous said...
kamal ennathan solla varraaru"

kamal oscar vaankama vidamattaram

அமர பாரதி said...

//ஆயிரம் சூரியன் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை// சூரியனும் ஆதவனும் வேற வேறயா? கொடுமை.

bandhu said...

ராஜா.. விமர்சனத்தை தவிர்த்திருக்க வேண்டும்.. இப்போது எரிந்துகொண்டிருக்கும் பிரச்சனையில், 'படம் எப்படி இருக்கிறது' என்ற கேள்விக்கே இடமில்லை! இந்தியாவில் வெளியானபின் விமர்சனம் எழுதியிருக்கலாம்!

SUMAZLA/சுமஜ்லா said...

What is it all about? Express your free opinion here and let the world take a look at it: http://www.describia.com/Vishwaroopam

அவிய்ங்க ராசா said...

கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி...

பந்து..என்னுடைய விமர்சனத்தில் யாரையும் புண்படுத்தவோ, காயப்படுத்தவோ இல்லை. முக்கியமான சர்ச்சைக்குரிய படத்தின் பகுதிகளை பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. ஒரு விமர்சனாக என்னுடைய கருத்து சொல்லுவதில் எந்த தவறும் இருப்பதாக கருதவில்லை, அடுத்தவர் மனம் புண்படாதவரை...

bandhu said...

நீங்கள் சொல்வது சரி ராஜா. இருந்தாலும், நிறைய பேர் பார்த்திருக்க முடியாத வேளையில் ஸ்பாய்லர் அலர்ட் போட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.

LATEST APPS said...

அய்யா ராசா படத்திற்கு U/A சான்றிதழ் கொடுக்கப் படவில்லை. a தான் கொடுத்தார்கள்.

Anonymous said...

நேற்று தான் இந்த விஸ்வரூபம் படம் பார்த்தேன். ஒரு நடு நிலையானவான் என்ற அடிபடையில் என் கருத்து என்னே வென்றால் அப்கானிஸ்தான் பற்றியோ , தாலிபான்கள் பற்றியோ தெரியாத பாமர மக்கள் இந்த படத்தை பார்த்தால் இங்குள்ள இஸ்லாமியரை நிச்சயம் ஒரு காட்டு மிரண்டியாகவோ ,இரக்க மற்ற கொடுரகாரர்களாக தான் நினைக்க தோன்றும்.

பள்ளி மாணவர்கள் , சிறு குழந்தைகள் பார்த்தல் இஸ்லாமியரை பற்றி தவறான எண்ணமே மனதில் பதியும், நிச்சயம் தன இஸ்லாமிய நண்பனை தீவிரவாதி என்று தான் பட்ட பெயர் வைத்து அழைப்பார்கள்.எல்லா நண்பர் கூட்டத்திலும் ஒரு இஸ்லாமிய நண்பன் இருப்பான் அவனுக்கு தீவிரவாதி என்ற பட்டபெயர் உறுதியாகி விட்டது.

அமெரிக்க வீர்கள் அப்பாவி மக்களை, பெண்களை, குழந்தைகளை கொள்ள மாட்டார்கள் என்று முல்லா உமரே கூறுவது போல் ஒரு காட்சிஎனக்கு அக வாயால் சிரிப்பதா புற வாயால் சிரிப்பதா என்று குழப்பம் தோன்ற இரு வாயாலும் சிரித்து வைத்தேன்.

கமல் ஹாசன் வெள்ளைக்காரன் முன் மண்டி இட்டு ( இன்னும் பச்சையாக சொல்ல என் மனம் ஏங்குகிறது நாகரீகம் கருதி என்னால் அதை எழுத முடியவில்லை)அமெரிக்கர்கள் காலை கழுவி குடித்து விட்டார் .தீவிரவாதிகளை கண்காணிக்கும் காமிரா முன் வரும் கரப்பான் பூச்சியை ஊதி சாதனை செய்து விட்டு, அமெரிக்க அதிகாரி ஒரு புன்னகை மூலம் அப்ளாஸ் செய்வாரே அதானே. இந்த காட்சிக்கு பதிலாக ,கமல் நேரடியா அந்த அமெரிக்கனின் ஷூவை நக்கி இருக்கலாம்.

ஆஸ்கார் விருது மட்டும் உலகின் அங்கீகாரம் கிடையாது என்று சொன்னவர் அந்த அமெரிக்க அங்கீகாரத்திற்கு இந்தியனின் மானத்தை ஏலம் போட்டு விட்டார்.

மற்றபடி கதை பற்றி சொல்ல ஒன்றும் இல்லை . ஹேராம் படத்தில் அந்த சோடா பேக்டரி சீன எவளோ போர் அடிக்குமோ அதே போல தாலீபான்களை காட்டும் கட்சிகள் ஹிந்தி , அராப் ,இங்க்லீஸ் என்று எல்லா மொழிகளிலும் பேசி கடைசியில் நமக்கு தலை சுத்துவது தான் மிச்சம்.

இந்த படத்திற்கு நூறு கோடி என்று சொல்வது மிக பெரும் பொய் . சத்தியமா சொல்றேன் கமல் சம்பளம் இல்லாமல் முப்பது கோடி கூட ஆகிருகாது. கமல் இப்படிலேம்மா பொய் சொல்லி பொழப்பு நடதுனுமா ?

ஆப்கன் வீதி போல நாலு வீடு எல்லாம் செட்டிங் அந்த வீட்டை அமெரிக்கர்கள் பாம் போட்டு அழிப்பார்கள் . அதான் செலவு.அமெரிக்கால கார் சேசிங் மற்றபடி வேற செலவு ஏதும் தெரியல .மறுபடியும் கேக்குறேன் கமல் இப்படிலேம்மா பொய் சொல்லி பொழப்பு நடதுனுமா ?

கமல் தெரியாமலோ ,முற்போக்கு சிந்தனயோடோ இந்த படத்தை எடுக்க வில்லை மிக மிக திட்டமிட்டு தாலிபான்கள் என்ற பெயரில் ஒட்டு மொத்த இஸ்லாமியர்களை கேவல படுத்தி காட்டு மிராண்டிகளாக சித்தரித்து அமெரிக்க அங்கீகாரத்தை பெறவே இதனை மிகவும் கவனமுடன் செய்திருக்கிறார் .

இப்படத்தின் மூலம் கமலின் முற்போக்குவாதி என்ற சாயம் வெளுத்து உண்மை முகம் வெளி பட்டு விட்டது.

ஒரு வரியில் சொல்லவேண்டுமானால் விஸ்வரூபம் கமலின் சுயரூபம் .

எது எப்படியோ இந்த பிரச்சனையால் இந்த விளங்காத படம் எப்படியும் கமலுக்கு போனியாகிவிடும் .

Anonymous said...

முட்டாள்கள் இருக்கும்வரை இது போல முட்டாள்தனமான படம் வந்து கொண்டே தான் இருக்கும்

Jesslya Jessly said...

உங்களுக்குள்ள மழுங்கல் மூளைகளுக்கெல்லாம் விஜயகாந்த் படங்கள்தான் லாயக்கு!

Post a Comment