Friday, 17 August, 2012

இன்னும் எத்தனை குழந்தைகளை காவு கொடுக்க போகிறோம்என் புள்ள காண்வெண்ட் ஸ்கூலுல படிக்கிறானாக்கும்..”

என் புள்ள என்னமா இங்கிலீஸ்ல பேசுறான் தெரியுமா..எல்லாம் ஸ்கூல நடக்குற ஸ்பெசல் கோச்சிங்க் தான்..”

என் புள்ள இந்த வயசுலயே நீச்சல் அடிக்குறான்..காண்வெண்டு ஸ்கூலுன்னா, கான்வெண்டு ஸ்கூலுதான்..”

இப்பவே என் புள்ள என்னமா டான்ஸ் ஆடுறான் தெரியுமா.ஸ்கூல் முடிஞ்சுவுடனே டைரக்டா கோச்சிங்க் தான்..”

இப்படியே பேசிப் பழகிவிட்ட காண்வெண்ட் பெற்றோர்களுக்கு, கீழே உள்ள செய்தி, அதிர்ச்சி அலைகளை கண்டிப்பாக கொடுத்திருக்கும்.

சென்னையில் பிரபலபள்ளியின் நீச்சல் குளத்தில் விழுந்து சிறுவன் பலி..”

எல்.கே.ஜி அட்மிஷன் வாங்க, காலையிலேயே க்யூ..பையன் படிக்கிறானே இல்லையோ, தாங்கள் பரிட்சைக்கு படிப்பதற்கு போல, புத்தகமும் கையுமாய்..நேர்முகத்தேர்வாம், பெற்றோர்களுக்கு..எல்.கே.ஜி படிக்கிற பையன் சொல்லுகிறான்..

யப்பா..நல்லா படிச்சு, இண்டெர்வ்யூல ஒழுங்கா பதில் சொல்லிடுப்பா..என் எதிர்காலம் உன் கையில்தான் இருக்கு.”

எல்லாம் எதற்காக..பையன் எதிர்காலம் நன்றாக இருக்கவேண்டும் என்பதற்காகவா..எனக்கென்னமோ அப்படி தோன்றவில்லை..எல்லாம் சுயகௌரவம்..பக்கத்து வீட்டுப்பையன் என்னமா இங்க்லீஸ் பேசுறான்யா..நம்ம பையன் பேசுனாத்தான நமக்கு மதிப்பு..அவன் கான்வெண்டு ஸ்கூல படிச்சுட்டு, நம்ம புள்ள சாதாரண ஸ்கூலுல படிச்சா, பின்ன மரியாதை என்ன ஆகுறது..அவன் பையன் இப்பவே ஸ்விம்மிங்க் போறானாம், டான்ஸ் போறானாம்..அட..நம்மபையன் அவனுக்கு மேல ஒருபடி இருந்தாதான மதிப்பு..

இதோ நேற்று வாசித்தீர்களே..செய்தி..கான்வெண்டு பள்ளிகளின் லட்சணத்தை..”நீச்சல் குளத்தில் சிறுவன் பலி..”. ஒரு நொடியில் முடிந்து போனது, அந்தப் பெற்றோரின் அனைத்துக் கனவுகளும்..என்ன கனவெல்லாம் கண்டிருப்பார்களோ..காலை செய்தித்தாளைப் படித்துவிட்டு ஒரு கணம்..”ச்ச்..பாவம்லஎன்று ஒரு வரி அனுதாபத்தோடு அடுத்த வேலைக்கு சென்று விடுகிறோம்..ஆனால், இதே கொடுமை நம் பிள்ளைக்கு நடந்தால்..நடக்காது என்று என்ன நிச்சயம்..நம் பிள்ளையும் தானே, ஸ்கூல் பஸ்ஸில் போகும்..நம் பிள்ளையும் தானே, நீச்சல் பயிற்சிக்கு போகும்

எல்.கே.ஜிக்கு ஒரு லட்சம் கொடுக்க தயாராக இருக்கும்போது, ஏன் கொள்ளை அடிக்க மாட்டார்கள்..அவ்ர்களுக்கு, உங்கள் குழந்தை, ஒரு ப்ராடெக்ட்..பணம் தரும் ப்ராடெக்ட்..அவ்வளவுதான்..அவர்களுக்கு உங்கள் குழந்தைகள் மேலெல்லாம் அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை..இருந்திருந்தால், ஓட்டை பஸ்ஸுக்கு அனுமதியும், நீச்சல் குளத்திற்கு பயிற்சியாளர் போடாத அலட்சியமும் நடந்திருக்குமா

பொறுப்பு நம்பக்கமும் இருக்கிறதுநாம்தான் என்றைக்கு குழந்தைகளை, குழந்தைகளாய் இருக்கவிடுகிறோம்..காலையில் 5 மணிக்கு யோகா, 7 மணிக்கு, ஸ்விம்மிங்க், 8 மணிக்கு ஸ்கூல், 4 மணிக்கு ரிட்டர்ன்..5 மணிக்கு கராத்தே..7 மணிக்கு டான்ஸ், 8 மணிக்கு வீடு..குழந்தைகளா, அல்லது, இயந்திரங்களாய்யா..??


சரி, ஒரு லட்சம் கொடுத்திருக்கிறோமே..என்றைக்காவது, பள்ளியில் எல்லாம் ஒழுங்காக பரமாரிக்கிறார்களா, என்று பார்வையிட்டிருக்கிறோமா..”அதெல்லாம் காண்வெண்டு ஸ்கூல்..எல்லாம் பக்காவா இருக்கும்..ஒரு லட்சம் வாங்குறாய்ங்கல்ல..”

எனக்குத் தெரிந்து அரசாங்கப் பள்ளிகளிலோ, நடுத்தரப் பள்ளிகளிலோ, படிக்கின்ற மாணவர்கள், காண்வெண்டு ஸ்கூலில் படிக்கும் பிள்ளைகளை காட்டிலும், பாதுகாப்பாக இருப்பதாகவே கருதுகிறேன்….உங்களிடம் பணம் பிடுங்கும் வரை..நீங்களும், கேட்கும் ஒரு லட்சம் கொடுக்கும் வ்ரை, கொள்ளை நடந்துகொண்டு தான் இருக்கும்..அலட்சியம் இருந்துகொண்டுதான் இருக்கும்.. இன்றைக்கு சீயோன், பத்ம ஷேஷாத்ரி..நாளைக்குபணம்தான் குறிக்கோள் என்று ஆகிவிட்ட பிறகு..உங்கள் குழந்தைகள் மேல் அவர்களுக்கு என்ன அக்கறை இருக்கப் போகிறது.. என்ன பதில் வரும் தெரியுமா..

பஸ்ஸெல்லாம் காண்ட்ராக் விட்டிருக்கோம்..அதுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தம் இல்லை..”

நீச்சல் குளம் காண்ட்ராக்ட் விட்டிருந்தோம்..அதில் விபத்து நடந்தால் நிர்வாகம் எப்படி பொறுப்பாக முடியும்..”

எனக்கு இருக்கும் ஒரே கேள்வி..

பள்ளி சேரும்போது, ஒரு லட்சம் கொடுக்கிறோமே..ஒரு ரூபாய் குறையாமல் வாங்குகிறார்களே..அதை ஏன் அவர்களிடம் கொடுக்கவேண்டும்..நேரடியாக நாமே காண்ட்ராக்டர்களிடம் கொடுக்கச் சொல்லலாமே..”

மேலே படத்தில் உள்ள ஒரு பெற்றோர் அழுவதைப் பாருங்கள்..எவ்வளவு கனவு கண்டிருப்பார்கள், அந்தக் குழந்தையைப் பற்றி..எவ்வளவு சீராட்டியிருப்பார்கள்..எவ்வளவு பாசம் காட்டியிருப்பார்கள்..அனைத்தும் ஒரு நொடியில், ஒரு சிறு அலட்சியத்தால் தகர்ந்து போனதே..

ஆனால் நீங்கள் என்ன தான் கேள்வி கேட்டாலும், ஒன்றும் நடக்கப்போவதில்லை..இன்னும் ஒரு வாரம், இந்தச்செய்தி, பரபரப்பாக இருக்கும்..அப்புறம், அதே ஒரு லட்சம்..அதே க்யூ..அதே, பள்ளிக்கூட பேருந்து, நீச்சல்குள சாவுகள்..

இதையெல்லாம் படிக்கும்போதும், அனுபவிக்கும்போதும், ஆத்திரம் தாங்கமுடியாமல் அந்தக்கால பி.எஸ் வீரப்பா சொல்லிய டயலாக் தான் ஞாபகத்திற்கு வருகிறது...

இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாக போகட்டும்…”

13 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வருத்தமான விஷயம் :(

Anonymous said...

இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாக போகட்டும்

சேலம் தேவா said...

இன்னும் ஒரு வாரத்துக்கு ஊர்ல இருக்கற எல்லா ஸ்கூல்லயும் நீச்சல்குளத்த ஆய்வு செய்ய கிளம்பிருவாய்ங்க...வருமுன் காத்து தொலைங்க...

பட்டிகாட்டான் Jey said...

:(

Thuvarakan said...

நாட்டில இது மட்டும் இல்ல இன்னும் எத்தனையோ இருக்கு ....... யாரையுமே திருத்தமுடியாது .....

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//ஆனால் நீங்கள் என்ன தான் கேள்வி கேட்டாலும், ஒன்றும் நடக்கப்போவதில்லை..இன்னும் ஒரு வாரம், இந்தச்செய்தி, பரபரப்பாக இருக்கும்..அப்புறம், அதே ஒரு லட்சம்..அதே க்யூ..அதே, பள்ளிக்கூட பேருந்து, நீச்சல்குள சாவுகள்..//

இந்த நாட்டில் இது தான் தொடரும்....

பராசக்தி said...

எல்லாம் அளவுக்கு மீறின சனத்தொகையினால் வந்த அலட்சியம்

கோவை நேரம் said...

மிகவும் சோகமான நிகழ்வு..இப்போ பள்ளி குழந்தைகளுக்கு தான் ஆபத்து அதிகமாக நிகழ்கிறது..

திண்டுக்கல் தனபாலன் said...

வேதனை அளிக்கும் சம்பவம்...

sekar said...

உண்மையில் துயர சம்பவம் . காசு வாங்கும் பள்ளிகளை பெற்றோர்கள் கண் காணிக்க வேண்டும் .

அவிய்ங்க ராசா said...

கருத்துக்களை பதிவு செய்த அனைவருக்கும் நன்றி...

funasia said...

கல்விக்கூடமும் இப்பொழுது கொல்லைக்கூடமாய் மாறிவிட்ட அவலம்

Anonymous said...

இன்னும் எதனை குழந்தைகள் இறந்தாலும் திருந்த மாட்டார்கள் பெருமைக்கு ஆசைப்பட்ட பெற்றோர் மிருகங்களும், பணத்திற்கு ஆசைப்பட்ட தனியார் பள்ளிகளும்.

Post a Comment