Sunday, 19 February, 2012

தோனி, மகான் கணக்கு, முப்பொழுதும் - விமர்சனம்சின்னவயதாக இருந்தபோது, எப்போதும் கிரிக்கெட் மட்டையைத் தூக்கிகொண்டு கிரவுண்டுக்கு ஓடிவிடுவேன்..பத்தாம் வகுப்பு படிக்கும்போதும் அதே தான்..கபிலதேவாக மாறிவிடவேண்டும் என்ற ஒரு வெறிநல்லவேளையாக, அம்மா அப்போது குச்சியை எடுத்துக்கொண்டு விளாசிய விளாசிலில்தான், கிரிக்கெட்டை மறந்து, நன்றாக படித்து(நம்புங்கையா…) இப்போது நல்ல நிலைமையில் உள்ளேன்(ஆமா..இல்லைன்னாலும், சென்னையில 10 கிரவுண்டு நிலம் வாங்கிப் போட்டிருப்பேன்..ஆகாங்க்…). பிள்ளைகளிடத்தில் உள்ள திறமையை பார்த்து, அவர்களை அந்த துறையில் பெரிய ஆளாக்கவேண்டும், என்பதே இந்த படத்தின் மையக்கருத்து. நடுத்தரவர்க்கமாகிய நமக்கு, இது எந்த அளவுக்கு சாத்தியம் என்ற மாறுபட்ட கருத்து என்றாலும், பிரகாஷ்ராஜின் இயல்பான(சிலநேரம் ஓவர்ஆக்டிங்க்???) நடிப்பால், படம் ஒருபடி முன்னே நிற்கிறது.

சிலநேரங்களில் பிரகாஷ்ராஜ் நடிப்பும், ராஜாவின் பிண்ணனி இசையும், போட்டி போட்டு முன்னேறுகின்றன. ஆனால், பாடல்களில்..சாரி ராஜா சார்இன்னமும், ஒரே மாதிரியான பாடல்கள்..ஒரு பாடலும், மனதில் நிற்கவில்லை. வழக்கம்போல, பிரகாஷ்ராஜின் செல்லங்களான, அறிவுஜீவிகள், நாசர், தலைவாசல் விஜய், பிரம்மானந்தம், அப்புறம் ஒரு தெலுங்கு நடிகர், ஒரு பாடலில், ஏகபத்தினி விரதன் பிரபுதேவா..என்று ஒரே மாதிரியான ஸ்டீரியோ டைப் பாத்திரங்கள். ஆனாலும், குத்துவிளக்கு மாதிரியான ஹீரோயின்(யாருண்ணே அது..) கொஞ்சம் ஆறுதலளிக்கிறார்

மற்றபடி, மொக்கையாகவும், ஆபாசமாகவும் வரும் திரைப்படங்களுக்கு மத்தியில், இந்தப்படம் ஒரு வைரம்.அடுத்து, மகான் கணக்கு….ராணாவை அடிக்கடி வடபழனி ஜிம்மில்(அது ஒரு அழகிய கனாக்காலம்) பார்த்திருப்பதால், சரி இந்தப்படம் பார்க்கலாமே என்று பார்த்தால், இன்பஅதிர்ச்சி..ஒரு நல்ல கருத்தை, நன்றாக ஆரம்பித்து, கடைசியில் படக்கென்று கமர்சியல் வெங்காயமாய் பிய்த்து எறிந்திருக்கிறார்கள். படம்பார்த்த உடனே, வீட்டுக்கடனை உடனே அடைக்கவேண்டும் என்ற பயம் வந்தது, இயக்குநரின் வெற்றி. மற்றபடி, ராணா, பேங்கை ஏமாற்றுவது, நொடியில் கம்பெனி ஆரம்பிப்பது, ஒரு புத்தகம் எழுதும் அளவுக்கு பேமசான புரொபசர், 90,000 க்கு தற்கொலை செய்து கொள்வது என்று வண்டிவண்டியாக மல்லிகைப்பூ சுத்துகிறார்கள்..

அண்ணனாக வரும் ஸ்ரீநாத்தும், நண்பர்களும் செம கலகல..அதுவும் ஸ்ரீநாத்தும் அடிக்கும் டைமிங்க் கமெண்டுகள், பலநேரங்களில் சந்தானம் டைப்..ஹீரோயினுக்கு ஒழுங்கா சாப்பாடு போடலையா என்று தெரியவில்லை..சிலநேரங்களில், ஹீரோயினா என்று கேட்கவைக்கிறார். மத்தபடி, லோன் மற்றும் கிரெடிட்கார்டு கொடுத்துவிட்டு, அதிகவட்டிக்கும் பேங்க் செய்யும் அட்டகாசங்களை, கிழிகிழியென்று கிழித்திருக்கிறார்கள்(.சி..சி பேங்க்..நட்டி பேங்க்..) அட

கேபிள் பாணியில் சொல்லவேண்டுமானால், இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டுருந்தால், அட்லீஸ்ட் ஹிட் படமாவது ஆயிருக்கும்.அடுத்து முப்பொழுதும் உன் கற்பனைகள்வெறியேறி போயிருக்கிறேன்..வேண்டாம்அதர்வா..சீக்கிரம் தப்பிச்சு டைரக்டர் பாலா கிட்ட ஓடிடு….

5 comments:

Thuvarakan said...

nice one....

சங்கர் நாராயண் @ Cable Sankar said...

:))

வலைஇல்லம் said...

ராஜா எப்படி இதல்லாம் உங்களால் மட்டும் .நான் சினிமா விமர்சனம் அதிகம் படித்ததில்லை அனால் உங்கள் விமர்சனம் படித்தபிறகு கண்டிப்பாக படம் பார்க்க தோனுகிறது.

Anonymous said...

ஏகபத்தினி விரதன் பிரபுதேவா......hahahahahahahah

shanuk2305 said...

eagapatta pathini viradhan. aadhu dhan correct

Post a Comment