Sunday, 12 February, 2012

இனிமேலு நான் விசயகாந்து கட்சி…ஆங்க்…..
ஆங்க்…(தலைவர் விசயகாந்து மாதிரியே பல்லை கடித்துக்கொண்டுப் படிக்கவும்)..விசயகாந்த் அரசியலுக்கு வந்தபோது, முதலில் கேலிபண்ணியவன் நாந்தான்..அட நம்புங்கப்பா..அட..இத்தனைக்கும் அவரு நம்ம ஊருதேன்..ஊருப்பாசம் கொஞ்சம் கூட இல்லாம, நாக்கு மேல பல்ல போட்டு, கிண்டல் பண்ணிப்புட்டேன்அதுக்கு இப்ப நொம்ப(ரொம்ப) வருத்தப்படுறேண்ணே..

அன்னைக்கு டி.வில பார்க்குறேன்..ஆத்தி, எம்புட்டு கோவப்படுறாப்புல..நாக்கை துருத்திக்கிட்டு, புருவத்தை உசத்திக்கிட்டு..அவரு பண்ணுதுல ரெண்டே, ரெண்டு தாண்ணே எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு..ஒன்னு சுகன்யா தொப்புளுல பம்பரம் விட்டதுரெண்டாவது, இப்படி நாக்கை துருத்திக்கிட்டு சட்டசபையில பேசுனது.

ஆங்க்..இன்னொண்ணும் எனக்கு புடிச்சது..எம்.எல். கேண்டிடேட்ட, நடுமண்டையில நச்சு, நச்சுன்னு ஒரு கொட்டுவைச்சார் பாருங்கண்ணே..நின்னுட்டாருண்ணே எந்தலைவரு..யாருண்ணே..இப்படி கொட்டுவா..பக்கத்துவீட்டுப் பையன் பாஸ்கரு கூட இப்படி கொட்டமாட்டாண்ணா பார்த்துக்குங்களேன்..

ஆனாலும் தலைவருக்கு ரொம்ப தில்லுண்ணே..எங்க 11 மணிநேர கரண்டு கட்டு பண்ணுறத எதிர்த்துக் கேட்டா, மிச்சம் இருக்குற 13 மணிநேர(ஏண்ணே..ஒரு நாளைக்கு 24 மணிநேரம்தானே#டவுட்டு) கரெண்டையும் கட்டு பண்ணிருவாய்ங்ங்கிற பயத்துல, கவுந்தடிச்சு படுத்திருக்குற நேரத்துல, வந்தாம் பாருயா எந்தலைவன்….தலைவன்யா..தன்னை நோக்கி வர்ற புல்லட்டையே, தாம்பாள தட்டைவைச்சு தடுத்து, திருப்பி விட்ட பரம்பரைங்க
4 வருசம் நல்லா ஜால்ரா போட்டுட்டு, நாலாவது வருசத்திலஆளுங்கட்சியின் அராஜகம் பாருங்கள்அப்படின்னு கோஷம் போடுற தலைவரு இல்லைண்ணே எங்க தலைவரு..தப்பா இருந்தா, சட்டசபையிலேயே, நாக்கை கடிச்சு..இது..சாரி..பல்லை கடிச்சு, பஞ்ச் டயலாக்கு பேசுவாருய்யா..ஆங்க்..உன்னால முடியுமா

ஒருநிமிசம் சட்டசபையே ஆடிப் போயிருச்சுல்ல..அன்னைக்கு புல்லா, டி.வி முழுக்க தலைவன்தான்..பிச்சு உதறிப்புட்டாருல்ல
அதுவும்..” உக்காருயா..” என்று சொல்லும்போது கிடைத்த
ஆரவாரம்..களை கட்டுச்சுல….

இனிமேல் திமுகவெல்லாம்அழகிரியா, ஸ்டாலினாங்கிற போராட்டத்தில இருக்குறதுனால, மக்கள் பிரச்சனையில கவனிப்பு செலுத்தமுடியுமான்னு தெரியலண்ணேஆனால், விசயகாந்து கட்சியில, அண்ணி பிரேமலதா, மச்சான் சுதீஷ்ன்னு குறைந்தபட்ச குடும்ப உறுப்பினர் உள்ள கட்சிண்ணே..அதனால மக்கள் பிரச்சனையை முன்னிறுத்தி எடுப்பாய்ங்க பாருங்க போராட்டம்..ஆங்க்….

அதனால, இப்போதைக்கு போராட்டத்துல மின்னாடி நிக்கிறதாலே, கரண்டு வராத இந்த புழுக்கத்துலயும், கடலை பர்பிய தின்னுக்கிட்டு, பன ஓலை விசிறியை ஆட்டிக்கிட்டு, சொல்லுதேன்..நல்லா கேட்டுக்குங்க

இனிமேலு நானெல்லாம் விசயகாந்து கட்சி..ஆங்க்…..”

(கரெண்டு வந்தவுடனே மானடா மயிலாட பார்க்கணும்..தக்காளி..சனிக்கிழமை ராத்திரி, டிவியில போடுற பலான படத்தை விட, இதுதாம்லணே டாப்பு..ஆங்க்…)

2 comments:

Post a Comment