Monday 16 January, 2012

நண்பன்




ஆரம்பிக்கும் முன்பே சொல்லிவிடுகிறேன், நண்பன் பட விமர்சனத்தை எதிர்பார்த்து வந்திருந்தால் "சாரி பாஸ்..".அந்தப் படத்தைப் பற்றி விமர்சனம் செய்ய விரும்பவில்லை. அது ஏன் என்று, பதிவின் இறுதியில் சொல்கிறேன்.


சற்று நாட்களுக்கு முன்பு, நண்பர்களோடு, ஒரு விவாதம் செய்ய நேர்ந்தது.. விவாதத்தின் தலைப்பு இதுதான். "எது சிறந்தது...குடும்ப உறவா, நட்பா...". வழக்கம்போல விவாதத்தை ஆரம்பித்து வைத்தது, நான்தான்.


என்னுடைய சார்பு, குடும்ப உறவே சிறந்தது. விவாதம் செம சூடாக இருந்தது. விவாதத்தின் தொடர்ச்சியாக, அனைத்து நண்பர்களின் கருத்தை கேட்பது மற்றும் ஒரு வாக்கெடுப்பு நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.


அனைத்து நண்பர்களும் ஓட்டுப் போட்டனர். முடிவை எண்ணும்போது, எங்களுக்கே அதிர்ச்சி...குடும்பம் மற்றும் நட்புக்கு சமஅளவிலான ஓட்டு. அதை வைத்து என்ன முடிவுக்கு வருவதென்று எங்களுக்கே தெரியவில்லை.


விளையாட்டுத்தனமாக ஆரம்பித்த அந்த ஓட்டுப்பதிவு, கடைசியில் விளையாட்டுத்தனமாக இல்லை. எந்த அளவுக்கு என்றால்,
ஒரு அன்பர் "ச்சே...உன்னைப் போயி ஒரு பிரண்டா நினைச்சேனேடா" என்று சொல்லும் அளவுக்கு.எனக்கே ஒரு கட்டத்தில் பயமாகிவிட்டது. ஒரு பிரபலமான கருத்து ஒன்றைக் கேள்விப்பட்டிருக்கிறேன்...


"இந்த உலகத்தில் அம்மா இல்லாதவங்க கூட இருக்கலாம். அப்பா இல்லாதவங்க கூட இருக்கலாம், மனைவி இல்லாதவங்க கூட
இருக்கலாம்..ஆனால் நண்பன் இல்லாதவன் என்று யாருமே இல்லை..."


அப்படி இதோ ஒரு ஆள் கண்ணாடி முன் நிற்கிறானோ என்று சொல்லத் தோன்றியது. ஒருவன் "எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள்"
என்று சொன்னால், அவன் பொய் சொல்கிறான் என்பது என் கருத்து..இங்கு ஒரு பையனையோ, பெண்ணையோ, புதிதாக பார்த்து, சில வார்த்தைகள்
பேசிவிட்டாலே, நண்பர்கள் வட்டத்தில் கொண்டு வந்துவிடுகிறோம். ஆனால் நண்பன் என்பவன் அதற்கும் மேல்.. 


எப்படி அப்பேற்பட்ட நண்பனைக் கண்டுபிடிப்பது என்றால், ரொம்ப ரொம்ப கடினம். நீங்கள் அழும்போது, உன்னை சுற்றி இருப்பவர்கள் எல்லோரும்
கஷ்டப்படுவார்கள்..நீ சந்தோசமாக இருக்கும்போது, எல்லோரும் பார்ட்டிக்கு வந்து உன்னோடு கொண்டாடுவார்கள். "நீதாண்டா என் பிரண்டு"
என்று புளகாங்கிதம் அடைவார்கள். கூடவே இருப்பார்கள். ஆனால் அவர்கள் எல்லாம் நண்பர்களா....??? இரண்டு சம்பவம் போதும்..


உண்மையான நண்பனை எவ்வாறு அடையாளம் கண்டுகொள்வது...கொஞ்சம் உடம்பு சரியில்லை என்று ஒரு வாரம் ஆஸ்பத்திரியில் இருந்து பாருங்கள்
எல்லோரும் வந்து, ஆரஞ்சு பழம் கொடுப்பார்கள். துக்கம் விசாரிப்பார்கள். முகத்தில் கவலையை வைத்துக்கொள்வார்கள்,. அவையெல்லாம் ஒரு மணிநேரம், 
இரண்டு மணிநேரம்தான். பின்னர் லேசாக, மணிக்கட்டை உயர்த்தி டைம் பார்ப்பார்கள்,... "அப்பறம்டா...உடம்பை பார்த்துக்கோ..அப்பப்ப வந்து பார்க்குறேன்"
என்று கிளம்பிக்கொண்டே இருப்பார்கள்...


ஆனால் உண்மையான நண்பன், முகத்தில் சலனத்தை காண்பிக்க மாட்டான்..ஏனென்றால், அவன் கலங்கினால், நீ பயப்படுவாய்..துவண்டு போவாய்...
ஆனால் கூடவே இருப்பான்..மணிக்கட்டை உயர்த்தி டைம் பார்க்கமாட்டான்...இரவானால் கண்முழித்து இருப்பான்...வேலைக்கு ஏற்கனவே லீவ் போட்டிருப்பான்.ஆனால் நீ சுகமாகும்போது கூட இருக்கமாட்டான். எதுவும் ஹெல்ப் செய்ததாய் காட்டிக்கொள்ளமாட்டான்..


இன்னுமொரு சம்பவம்....நீங்கள் உங்கள் வேலையில் ஒரு பெரிய பதவியை அடைந்ததாக சொல்லிப்பாருங்கள்.."மச்சான் டிரீட் எங்கடா...மச்சான் தண்ணி அடிக்கிறோம்டா"என்று கூடவே கொண்டாடுவதற்கு நிறைய ஆட்கள். ஆனால் நண்பன் முகத்தில் பெரிய சலனம் காட்டிக்கொள்ள மாட்டான். ஆனால் மனதில் சந்தோசம் வைத்திருப்பான்.உன்னை சந்தோசப்படுத்தும் பாசாங்கு வார்த்தைகள் சொல்லமாட்டான்...ஆனால் மற்றவர்கள் முகத்தில் சந்தோசத்தையும், மனதில் பொறாமையும் வைத்திருப்பார்கள்.ஆனால் நண்பன் நீ முன்னேறுவதைப் பார்த்து எட்ட நின்று சந்தோசப்படுவான்.


ஆண், பெண் நட்பு என்றால் வேலை மிகவும் ஈசி. நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால், நிறைய நண்பர்கள் உங்களைத் தேடி வருவார்கள். உருகுவார்கள். தினமும் போன் செய்வார்கள். தலைவலி என்றால் கூட துடிதுடித்து போவார்கள்..ஆனால் கழுகு மாதிரி சந்தர்ப்பத்துக்காக காத்திருப்பார்கள்...ஒரு சிறு சந்தர்ப்பம் கிடைத்தால் போதும்....உங்களுக்கு புரிந்து விடும் அவன் நண்பனா என்று..


அதே போல, உங்களுக்கு நிறைய பெண்நண்பர்கள் இருக்கலாம்..ஒன்றாக பைக்கில் அமர்ந்துகொண்டுகூட வரலாம்..நான்கு மணிநேரம் கூட போனில் பேசலாம்..ஆனால் உன்னைவிட வலியவன் வந்தால், "நீதாண்டா என் பிரண்டு" என்று நிற்பாள், உண்மையான நண்பி...அதுதான் நட்பு..


ஆனால், நல்ல நண்பனைக் கண்டுபிடிப்பதற்கு, முதலில் நீ நல்ல நண்பனாக இருக்கவேண்டும்..நடக்கவேண்டும்...ஆனால் நான் யாருக்கும் நல்ல நண்பனாகவோ,
அல்லது எனக்கு யாரும் நல்ல நண்பர்களாகவோ இருக்கும் பாக்கியம் இதுவரை அமையவில்லை. அது என் வாழ்க்கையின் துரதிருஷ்டம்....
ஏனென்றால், உங்கள் சூப்பர்ஸ்டார் சொல்லிய மாதிரி...


"நற்பு என்பது கற்பு மாதிரி...."


(நண்பன் படம் பார்த்தேன்..நீண்ட நாட்கள் கழித்து, விஜய்க்கு வெற்றிப்படம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், ஏழ்மையுடன் இருப்பதாக காட்ட்டப்படும் ஜீவாவின் 
தங்கை, அடர்கருப்போடு, இருப்பதை கிண்டல் பண்ணி அடிக்கும் லூட்டிகளைப் பார்த்து, உங்களுக்கு வேண்டுமானால் சிரிப்பாக இருக்கலாம். ஆனால், 
என்னால் ரசிக்கமுடியவில்லை. ஏனென்றால் அங்கவையும் சங்கவையும், கதாபத்திரங்கள் அல்ல. எம் தெருக்களிலும், வீதிகளிலும், கள்ளம்கபடம் இல்லாமல்
துள்ளி திரிந்து கொண்டிருக்கும், எம் தமிழினத்தின் உடன்பிறவா சகோதரிகள்...)

4 comments:

SATHISH said...

மிக அருமை

சதீஷ்

தமிழ்வாசி பிரகாஷ் said...

நண்பன், அடிச்சாலும் பிடிச்சாலும் தக்க நேரத்தில் உதவுபவன்..

அவிய்ங்க ராசா said...

நன்றி சதீஷ், பிர்காஷ்

Swami said...

pari vendan, poorivendan endru thamizh peyargalai marubhadi kindal seidhu irukiraagal.
sankarukku enindha kolaiveri?

Post a Comment