Monday 16 January, 2012

நீயா நானாவில் கலந்து கொண்ட 20 ஆண் பொம்மைகள்..




விஜய் டி.வி நடத்தும் நீயா நானா பற்றி ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், கருத்து பரிமாற்றத்துக்கான ஒரு களம் என்பதை யாரும் மறுக்கமுடியாது. விளம்பரத்துக்காக, அதில் நடைபெறும் கூத்துக்களை, அவ்வப்போது கிண்டல் அடிக்க தவறுவதில்லை.. அதே சமயத்தில், சமூகம் பற்றிய பலரது பார்வைகளை மறுபரிசீலனை செய்ய, இந்த நிகழ்ச்சி பெரும் பங்காற்றி இருக்கிறது என்பதே உண்மை

என்ன சொல்லவருகிறார்கள் என்று கேட்பதற்காவது கண்டிப்பாக இந்த நிகழ்ச்சியை பார்த்துவிடுவேன். இந்த பொங்கல் அன்று எடுத்த ஒரு கருத்துமோதல், பல சிந்தனைகளை கிளறிவிட்டது.
நகரத்தில் உள்ள பெண்களை, திருமணம் செய்ய ஆண்கள் ஏன் தயங்குகிறார்கள்….இதுவே அன்றைய தலைப்பு

முதல் விவாதமே, படு அதிர்ச்சியாக இருந்தது. ஆண்கள் எவ்வளவுவீக்காகஅல்லதுபிற்போக்குத்தனமாகஅல்லதுபொம்மைகளாகஇருக்கிறார்கள் என்பதை பட்டவர்த்தனமாக தோலுரித்து காட்டியது, இந்தக் கேள்வி…”உங்களுக்கு வரப்போகும்
பெண் எப்படி இருக்கவேண்டும்…”. அதற்கு ஆண்கள் சொல்லிய பதில் இருக்கிறதே….ஒருத்தர் கூட, என் இன்ப துன்பத்தை பங்கிட்டு கொள்ள ஒரு துணைவி வேண்டும் என்று சொல்லவில்லை. வந்த பதில் என்ன தெரியுமா

வீட்டு வேலையெல்லாம் பார்த்துக்கணும்…”
எங்க அம்மா, அப்பாவை நல்லா கவனிச்சுக்கணும்…”
மாடர்ன் டிரன்ஸ் போடக்கூடாது..”
தலை குனிஞ்சு தான் நடக்கணும்..”
சேலை தான் கட்டிக்கணும்..ஆனா நான் விருப்பப்பட்டா ஜீன்ஸ் போட்டுக்கலாம்..அதுவும் நாலு சுவத்துக்குள்ள…”

யோவ்..என்னங்கையா..இதுகஷ்ட நஷ்டத்தில் பங்குபெற ஒரு துணைவி தேடுறீங்களா..அல்லது, வீட்டு வேலை செய்ய, ஒரு ரோபோர்ட் தேடுறீங்களாஎவ்வளவு பிற்போக்குத்தனம்..தன் தங்கை, தன் அம்மா எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்..ஆனால் தனக்கு வரும் மனைவி தன்னை எதிர்த்து ஒரு வார்த்தை பேசக்கூடாது..எவ்வளவு ஆதிக்கத்தனம்

அவர்களை குறை சொல்லி ஒரு பிரஜோயனம் இல்லை..நாம் அவ்வாறுதானே வளர்க்கப்பட்டிருக்கிறோம்அப்பாவை பார்த்து தலைகுனிந்தே பேச பழக்கப்பட்ட அம்மாவை பார்த்துதானே வளர்ந்தோம். இந்த சமூகமே, அதைத்தானே சொல்லிக்கொடுத்திருக்கிறது

அடப்பாவமே..பெண் என்ன அடிமையா..நான் சொல்லும் வேலைகளை மட்டுமே செய்வதற்கு..அதற்குதானா, அவர்கள் வீட்டில் அரும்பாடுபட்டு, திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்கள். கோபிநாத் ஒரு தவறு செய்துவிட்டார். அந்த பெண்களிடமும் ஒரு கேள்வி கேட்டிருக்கவேண்டும்..உங்களுக்கு வரும் கணவர் எப்படி இருக்கவேண்டும் என்று……அப்போது தெரியும், மேலே உள்ள பதில்கள் எந்த அளவுக்கு பாதிக்கும் என்று

இதைவிட ஒரு பெரிய கொடுமை என்னவென்றால், ஒரு அன்பர் பேசியது தான்முகத்தை ஒரு அலட்சியமாக வைத்துக்கொண்டு..

இவுங்க எல்லாம், பைக்குல போவாங்க..தியேட்டருக்கு போவாங்கஅதெல்லாம் தப்பா தெரியாது..”

அடங்கொன்னியா..நாம் என்ன கற்காலத்திலயா வாழ்ந்து கொண்டிருக்கிறோம்..ஏன் பெண்கள், ஆண்களோடு, பைக்கில் செல்லக்கூடாதா..திரைப்படத்துக்கு செல்லக்கூடாதா..உடனே கலாச்சாரம் கெட்டுப்போய்விடுமா..அங்கு இருந்த பெண், நாக்கை பிடுங்கி கொள்வது போன்று, இரண்டு கேள்விகள் கேட்க, அவரால் ஒரு வார்த்தை கூட அதற்கு மேல் பேசமுடியவில்லை. இதில் இன்னொரு நபர், திரைப்பட உதவி கேமிராமேனாம்..”கரும்பை ருசிக்கலாம்..ஆனால் சுமப்பது கடினம்என்று  சொன்னபோது, ஆத்திரத்தின் உச்சிக்கே செல்ல நேர்ந்தது..என்ன ஒரு உவமை பாருங்கள்..அவர் எடுக்கும் படங்களும், இதுபோன்று பிற்போக்குத்தனமாகத்தானே இருக்கும்

ஆனால், அங்குள்ள ஆண்கள் மட்டுமில்லை, இங்குள்ள பல ஆண்களும் அதே மனப்பான்மையில்தான் இருக்கிறோம். நல்லா,..மாடர்ன் டிரஸ் போட்ட பெண் பிரண்ட்ஸ் நிறைய வேண்டும்..எந்த எல்லை வரை சென்று சோசியலாக பழகும் பெண் நண்பிகள் நிறைய வேண்டும்..,திரைப்படங்களில் தொப்புள் காட்டும் நடிகைகள் வேண்டும்..ஆனால் தனக்கு வரும் மனைவி., அடக்கமாக, சேலை கட்டி, பராம்பரியம் மிக்கதாக இருக்கவேண்டும்..குனிந்த தலை நிமிரக்கூடாது..எதிர்த்து பேசக்கூடாது..நாலு பேரு பார்க்குற மாதிரி நடக்ககூடாது..எந்த ஊரு நியாய்ம்யா இது..

தயவுசெய்து, பெண்களையும், சதையும், ஆன்மாகவும் உள்ள ஒரு உயிராக மதிப்போம். வெறும் சேலை கட்டிய அடிமைகளாகவும், பொம்மைகளாகவும், ரோபோக்களாகவும் அல்ல..ஏனென்றால், நம்மைப் பெற்றவளு, கூடப்பிறந்தவளும், ஒரு பெண்தான்….

அதைத்தான், அங்கு சிறப்பு அழைப்பார்களாக பேச அழைக்கப்பட்ட, ஓவியாவும், ஷாலினியும், சாருவும் சொன்னர்கள்..ஆனாலும், இந்த கலவரத்துக்கு நடுவிலும், ஔவை கள் குடித்ததை பற்றி "நித்தியானந்தாவிடம் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்று சொன்னவரும், அவருடைய தொண்டர்களால், "வாழும் பெரியார்" என்று அழைக்கப்படுவரும், போன முறை கலந்து கொண்டபோது, பீஸ் கிடைக்காததால் "நீயா நானாவை தடை செய்ய வேண்டும்" என்று சொன்னவருமான சாரு சொன்ன டயலாக்குதான் இந்த நூற்றாண்டின் செம காமெடி..

“குடிப்பழக்கத்தை நான் என்றுமே ஆதரித்ததில்லை….”

அவருடைய தொண்டர்கள், இனிமேல் இவ்வாறு சொல்லக்கூடும்…

“தானே உக்கார்ந்தா  தானைத்தலைவன் வாழ்க, வாழ்க…”

ஏனென்றால் எழுத்தாளர் என்ன சொன்னாலும், கொண்டாட வேண்டுமல்லவா..இல்லையென்றால், தமிழ் எலக்கியத்திற்கு செய்த துரோகமாகிவிடாதா..இந்நேரம் கேரளா, இல்லாட்டி பிரான்ஸ்சா இருந்தா….

“அடப்போங்கையா…”

தவறு செய்துவிட்டது என்று தெரிந்தவுடனே, “யானோ அரசன்..யானே கள்வன்” என்று உயிர்நீத்த தமிழ்பரம்பரையில் இருக்கிறோம் என்பதையே சிலநேரங்களில் நம்பமுடியவில்லை.

17 comments:

சிவக்குமார் said...

நீயா நானா நான் பார்ப்பதைத் தவிர்த்து விடுவது வழக்கம். எனக்கு ரத்தம் சூடேறிவிடுகிறது. நல்ல வேளை நான் பார்க்கவில்லை என்று பெருமூச்சு விடுகிறேன் உங்கள் பதிவைப் படித்ததும்.

//பெண், நாக்கை பிடுங்கி கொள்வது போன்று, இரண்டு கேள்விகள் கேட்க, அவரால் ஒரு வார்த்தை கூட அதற்கு மேல் பேசமுடியவில்லை// அப்டிப் போடு!

நல்ல பதிவு

PUTHIYATHENRAL said...

நல்லபதிவு தோழரே வாழ்த்துக்கள்.

SATHISH said...

நல்ல பதிவு

☀நான் ஆதவன்☀ said...

இதுல ஓவியா மறைமுகமா சாருவை தாக்கி பேசினாங்களே கவனீச்சிங்களா?

CS. Mohan Kumar said...

உங்கள் கருத்துடன் உடன் படுகிறேன். சாரு பற்றி கூறியது உட்பட..

Barari said...

போங்க இதை போய் சீரியசாக எடுத்து கொள்ளாதீர்கள்.யார் எப்படி பேச வேண்டும் என்பதை ரிகர்சலிலேயே தீர்மானித்து விடுகிறார்கள்.நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் என்ன சொல்ல நினைக்கிறார்களோ அதற்க்கு தகுந்தவாறு ஆட்களை தெரிவு செய்கிறார்கள் .இதெல்லாம் ஒரு செட்டப் தலைவா?

அமுதா கிருஷ்ணா said...

கிராமத்து பெண்கள் எல்லாம் ஏதோ ஏமாந்தவர்கள்,அடக்க ஒடுக்கமானவர்கள்,குடும்பத்திற்கு ஏற்றவர்கள் என்ற நினைப்பு அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும். எதனால் அப்படி ஒரு முடிவிற்கு வந்தார்கள் என்றே தெரியவில்லை.அசல் கிராமத்து பெண்கள் மிக விவரமானவர்களாக இருப்பார்கள்.யாரையும் எளிதில் நம்ப மாட்டார்கள்.அங்கு பேசிய ஆண்கள் இப்படி தான் பேச வேண்டும் என்று கட்டாயத்தில் பேசியதை மாதிரி இருந்தது. சும்மா நமக்கு கோபத்தை உண்டாக்க இந்த ப்ரோக்ராம் என்று தோன்றுகிறது.

pudhiyavan said...

kopinath avaroda heroisom tha develop panna ithai oru karuviyaga payanpduthrar ena ninaikren.....avaru thedu pen vendumanal avar vivadham seiya mudiyathmadhiri murpokuvathiyaga select pannalam!

வலிப்போக்கன் said...

அட,செட்டப்புகுள்ள ஒரு செட்டப்பா?

Anonymous said...

Chumma etho pesanumnu sola kudathu.. nejama solunga intha kalathu ponnunga apdiya irukaranga??? !!! Enakanamo appadi thonala...

Anonymous said...

boss, ithkellam oru pathiva..antha maathri pesara payalungala select panni show nadathi kaasu paakaranunga.. neenga avanungala thittikkitu.

Anonymous said...

i dont agree this view of the author of this article..

Vetirmagal said...

Well said,. Either with a set up or without , there are certain social responsibilities , that are required to be followed by TV anchors/programme producers.

Someone in the producing stage, had decided that by showing women in a old fashioned way, the arguments will be welcomed by the general public. Which could be his view alone.

It is sad that such a popular programme , could not have one man/young man speak for the women and say, I would want a wife for sharing my life and I will share her responsibilities.

That would have made a decent impression on the young audience.

There is also a danger of all those young guys who participated in the programme , to be inclined think about a wife , in the way the programme made them to think!

It is all due to ambition of the producers for perceived TRP rating and shock value.

Irresponsible I would say.

ராமுடு said...

Kalakkal Rasa.. I haven't seen this show yet (Pongal one).. Its so sad to know the content from your blog. Whatever they learn from education, is not helping them to grow them personally.

ராமுடு said...

Kalakkal Rasa.. I haven't seen this show yet (Pongal one).. Its so sad to know the content from your blog. Whatever they learn from education, is not helping them to grow them personally.

CrazyBugger said...

Ji.. enna ithu? nee naana mathiri neengalum scene podringa. kadantha kaala vaalkaiya konjam rewind panni yaeluthunga

FREIND-நண்பன் said...

Please check this link
useful for travellers in chennai metero buses.

http://rsksudhakar.blogspot.com/2012/01/useful-travellers-in-chennai-buses.html

Post a Comment