Sunday, 27 November 2011

விலையேற்றம், குண்டுகுழியான ரோடுகள் – யார் காரணம்



அதிமுக, திமுகவோ, காங்கிரசோ, பிஜேபியோ, யார் வந்தாலும், மக்கள் நிலைமை மாறப்போவதில்லை என்று ஆணித்தரமாக நிரூபிக்கப்பட்டுள்ளது, தற்போதைய அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் மூலமாக. மாதம் 45,000 வாங்கும் சாப்ட்வேர் இஞ்சினியர்கள் வேண்டுமானால், “இட்ஸ் டூ காஸ்ட்லியா..” என்று சர்வசாதரணாமாக கடந்து செல்லலாம். ஆனால், 2000 ஆயிரம், 3000 ஆயிரம் வாங்கும் கூலித்தொழிலாளி என்ன செய்வான் என்று நினைக்கும்போதே பயமாக உள்ளது.

வாங்கும் சம்பளம், பேருந்திற்கும், பால் வாங்குவதற்கும், மின் கட்டணம் செலுத்துவதற்கே செலவானால், சாப்பிடுவதற்கு. அநேகமாக, தஞ்சை டெல்டா பகுதிகளில் மட்டுமல்ல, சென்னை, மதுரை போன்ற பெருநகரங்களில்கூட எலிக்கறி சாப்பிடும் நிலை வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஏற்கனவே விலையேற்றத்தால் நொந்து போயிருக்கும் தமிழனுக்கு, கூடிய சீக்கிரம் பெட்ரோல் விலையேற்றம் வந்து பம்படிக்கும்..

எனக்கு ஒன்றுதான் புரியவில்லை. பெட்ரோல் விலையேற்றம் ஏன் என்று கேட்டால், “கச்சா விலை ஏறிவிட்டது, தவிர்க்கமுடியாதது” என்று சப்பைக்கட்டு கட்டும் அரசிற்கு ஒரே கேள்விதான், “அது என்னங்கண்ணா..கச்சா விலை என்ன, ராக்கெட்டா, மேல்நோக்கியே போய்கிட்டு இருக்குமா..கண்டிப்பா குறையுதுல்ல..அப்படி குறையும்போது, ஏன், பெட்ரோல் விலையும் குறைய மாட்டுங்குது..” என்று ஒரு பய கேள்வி கேட்டுடக்கூடாது..கேட்டால் அவ்வளவுதான்..”ஜி.டி.பி என்ன தெரியுமா..இண்டெர்நேசனல் மார்க்கெட்டு நிலவரம் என்ன தெரியுமா..” என்று பயப்படுத்தும் அளவுக்கு பதிலளிக்கப்படும்..

“அடங்கொய்யாலே, ஜி.டி.பி என்ன இருந்தா என்னய்யா..காலையில போய் 1 லிட்டர் போடணும்னா, பெருங்கொள்ளையா இருக்கு” என்று நம்மளுக்குள்ளே புலம்ப வேண்டியதை தவிர வேறு வழியில்லை..என்ன செய்யமுடியும்..ஓட்டு போட்டாகிவிட்டது..

சமீபத்தில் ஒரு நகைச்சுவை துணுக்கை கேட்டு, வயிறும் மனதும் சேர்ந்து வலித்தது. ஒரு கருத்தரங்கத்தில் சைனாக்காரன், “எங்கள் நாடுதான் உயர்ந்தது. நாங்கள், கடலுக்கு அடியில் இவ்வளவு ஆழம் வரை செல்லக்கூடிய கப்பல் வைத்திருக்கிறோம்” என்றானாம். அமெரிக்காகாரனுக்கு சொல்லவா வேண்டும், “அதை அழிக்ககூடிய போர்க்கப்பல் எங்களிடம் உள்ளது..” என்றானாம். இப்படி ஒவ்வொரு நாடும் பெருமையை எடுத்துவிட, இந்தியா சார்பாக போயிருந்த தமிழ்நாட்டுக்காரன் எல்லாத்தையும் பார்த்து சிரித்துக்கொண்டு இருந்தானாம், எல்லாருக்கும் வியப்பு..கடைசியாக தமிழன் சொன்னானாம்..

“நீங்க எல்லாம் கடலுக்கு அடியில் தான் கப்பல் விடுவீர்கள்..எங்கள் சென்னை வந்து பாருங்கள், நாங்கள் ரோடு மேலேயே, நீர்மூழ்கி கப்பல் விடுவோம்..” என்றானாம்..

இதை விட கொடுமையான நிலைமையில்தான் சென்னை உள்ளது..ஓங்கி ஒரு மழை அடித்தால் போதும், சாக்கடை தண்ணீர் எல்லாம் வீட்டுக்குள். தெருவில் போகவேண்டுமானால், படகுதான்..இருக்கிற குப்பை கூளம் எல்லாம் தெருவில் அப்படியே..அப்புறம் ஏன் காலரா, சிக்கன் குனியா வராது. ஒரு வருடம், இரண்டு வருடம் ஆனாலும் பரவாயில்லை. இந்த கொடுமை காலங்காலமாக தொடர்ந்து கொண்டுதானே இருக்கிறது. “ஏன் இதையெல்லாம் மாற்றவே முடியவில்லை. அல்லது மாற்றவே முடியாதா” என்று கேட்டால் ஒரே பதில்தான். “மக்கள் மாறும் வரை..”

ஒரேயடியாக அரசை சொல்லியும் பிரயோஜனம் இல்லை, மக்களுக்கும் பொறுப்பு இருக்கிறது.. கொஞ்சம் நிலம் இருந்தால் போதும், அங்கே ஒரு அபார்ட்மெண்ட், அல்லது வீடு கட்டிவிட்டு “15 ஆயிரம்” ரூபாய் வாடகைக்குவிடுவது., அதுதான் குடிவருவதற்கு சாப்ட்வேர் இஞ்சினியர்கள் இருக்கிறார்களே அப்புறம் என்ன கவலை. குப்பையை அப்படியே ரோட்டில் எறிவது. அப்புறம் சாக்கடை அடைக்காமல் என்ன செய்யும்.

ரோட்டில் ஒரு மரத்தையும் விடுவதில்லை. ஏதாவது மரம் இருந்தால் போதும், அதை வெட்டி, விற்றுவிடுவது..அப்புறம் எப்படி சுற்றுபுறம் நன்றாக இருக்கும். “ஐயோ கூவம் நாறுதே” என்று மூக்கைபிடித்துக்கொண்டு ஓடவேண்டியது. கூவம் இப்படி மாறுவதற்கு தான் மட்டுமே காரணம் என்று பிரக்ஞை எதுவுமில்லாமல் இருப்பது..அப்புறம் எப்படி உருப்படும் இந்த நாடு..

கடைசியில் ஐந்து வருடம் பல்லை கடித்து பொறுத்துக்கொண்டு, அடுத்த எலக்சனில் “ரெட்டை இலைக்கும், உதயசூர்யனுக்கும்” மாறி, மாறி ஓட்டு போட்டுவிட்டு, “ஐயோ விலையேத்துறானே, ரோடு சரியில்லையே” என்று புலம்புவது…

விளங்குமுறீங்க…?????

11 comments:

SATHISH said...

பங்காளி ராசா,
அருமையான பதிவு..

//
விளங்குமுறீங்க…?????
//

விளங்கவே விளங்காது..
சென்ற வருடம் லண்டன், சிங்கபூர் சென்று வந்தேன்..
அந்த ரோடுகளையும் இந்த ரோடுகளையும்
பார்த்த பிறகு என் மனதும் நம் ரோடு போலானது
அத்தனையும் காயங்கள்...

பங்காளி சதீஷ்
sathish.chandran@asia.xchanging.com

SATHISH said...

அட நாமதான் முதல் பின்னூட்டம்!!!!!!!


பங்காளி சதீஷ்
sathish.chandran@asia.xchanging.com

VANJOOR said...

வாசகர்களின் கனிவான பார்வைக்கு !

இஸ்லாமியர்களை திட்டமிட்டே 'தீவிரவாதி' களாக ஆக்கும் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., காங்கிரஸ் கள்ளக் கூட்டணியும், உலகளாவிய அமெரிக்க பயங்கரவாதமும், பார்ப்பன, பனியா மேல்சாதி இந்துத்வா தீவிரவாதமும்,

இந்த மாபெரும் நெட்வொர்க்கின் பிரச்சார ஏஜெண்டுகளாக அச்சு, எலக்ட்ரானிக், திரைப்பட ஊடகங்களும் இயங்குகின்றன.

"அமைதிக்காலங்களில் தான் எதிர்கால வகுப்புக் கலவரங்களுக்கான விதைகள் சத்தமின்றித் தூவப்படுகின்றன, ஆனால் நாம் அப்போது சும்மா இருக்கின்றோம்"

சுட்டியை சொடுக்கி படியுங்கள்.

***** திட்டமிட்டே 'தீவிரவாதி' களாக்கும் மிருகங்கள். அவசியம் படியுங்கள். *****

.

அமுதா கிருஷ்ணா said...

ஓவென்று அழ வேண்டும் போல் உள்ளது மழை வந்தால்.இயலாமையில் மன வியாதி வந்திடும்..சென்னை மட்டும் இல்லை மொத்த தமிழ் நாடும் சாபம் வாங்கி உள்ளது. பஸ் டிக்கெட் விலையேற்றம் அம்மா ப்ரைவேட் பஸ் கம்பெனிகளிடம் மொத்தமா துட்டு வாங்கிட்டதா சொல்றாங்களே. யாருக்கு சேர்க்கிறார்கள் என்பது தான் மர்மம்.

Anonymous said...

Sir, you should be back in India at the earliest, to bring change for all of us. Thanks a lot. I will pray to Jesus for you.

Anonymous said...

அவசியம் படியுங்கள்.

மருமகளும் வேத வெளிப்பாடும்

இறைத் தூதரின் வரலாறு

மரியாவை வாழ்த்திய இறைத்தூதர்

ஜுவரியா - திகில் கதை

அவிய்ங்க ராசா said...

நன்றி சதீஷ்
நன்றி வாஞ்சூர்
நன்றி அமுதா
நன்றி அனானி

சி.பி.செந்தில்குமார் said...

உங்க பிளாக்ல பின்னூட்டங்களை விட அவங்கவங்க தள விளம்பரம் தான் அதிகமா இருக்கு, ஒய் திஸ் கொலை வெறி ? ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

சார், லெட்டர்ஸ் எல்லாம் ரொம்ப சின்ன ஃபாண்ட்ல இருக்கு கொஞ்சம் பெரிசு பண்ணவும்

அவிய்ங்க ராசா said...

செந்தில்..நம்ம தளம் அப்படியாவது பயன்படட்டும்..விவகாரமில்லாத விளம்பரமாய் இருக்கும்வரை ஓகேதான்...))

பாண்ட் சைசை மாற்றுகிறேன்..ஆனால் "normal" செலக்ட் பண்ணினால், மிகவும் பெரிய எழுத்தாக் வருகிறது..எந்த பாண்ட் செலக்ட் செய்வது..ஆலோசனை தேவை..ப்ளீஸ்...

Balamurali A said...

இது நமக்கு தெரியுது அரசாங்கத்துக்கு தெரியலயே...

Post a Comment