Sunday 20 November, 2011

8MM – திரை விமர்சனம்(18+)





“பேஸ் ஆப்” படத்தை பார்த்தபோது அதில் நடித்த நிக்கோலஸ் கேஜ் மற்றும் டிரவால்டோ நடிப்பினைப் பார்த்து மயங்கியவன் தான். இவர்கள் நடித்த எந்த படத்தின் டிரெய்லரை பார்த்தாலும், கண்ணை மூடிக்கொண்டு(எப்படின்னு கேட்ககூடாது) பார்த்துவிடுவேன். அதே மாதிரி, நம்ம தல டென்சல் வாஷிங்க்டன் படம் என்றால் சொல்லவே வேண்டாம்..;முதல் ஷோ, முதல் டிக்கெட்டுதான்..நெட்பிளிக்சை மேய்ந்தபோது, இரண்டு பழைய படங்களை பார்க்கநேர்ந்தது..அப்படி பார்த்த படங்கள், நிக்கோலஸ் கேஜ் நடித்த 8MM மற்றும் டென்சல் வாஷிங்க்டன் நடித்த The SIEGE.

முதலில் 8MM. பிரைவேட் டிடெக்டிவாக இருக்கும் நம் நாயகன் கேஜ்ஜூக்கு ஒரு பெரிய இடத்திலிருந்து அழைப்பு வருகிறது. அழைத்தவர், ஒரு பணக்கார, வயதான பெண்மணி. செல்வந்தரான தனது கணவர் இறந்து போக, தனியாக அந்த பங்களாவில் வாழ்ந்து வருபவர். “எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, எனக்கு நீங்கள் உதவ வேண்டும்” என்று நாம் டாக்டரிடம் கேட்பது போல் கேட்கிறார். நிக்கோலஸ் கேஜ் குழப்பமாக, அவருடைய கையில் ஒரு படச்சுருளை திணிக்கிறார். இது தன்னுடைய கணவரின் ரகசிய லாக்கரில் இருந்து எடுத்ததாகவும், அதைப் பார்க்கவேண்டும் என்று சொல்கிறார். அதை தனியறையில் பார்த்த நிக்கோலசுக்கு அதிர்ச்சியோ, அதிர்ச்சி, பஸ் கட்டணைப் பார்த்த நமக்கு ஏற்பட்டது போல்.. அந்த வீடியோவில், ஒரு பெண் பாதி போதையில் இருக்கிறார். ஒரு முகமூடி அணிந்த ஒருவன் கையில் ஆயுதத்தோடு நெருங்கி சித்திரவதை செய்ய ஆரம்பிக்கிறான். கடைசியாக, கத்தியை எடுத்து சதக்..சதக்..நம் மேல் ரத்தம் தெறிக்கிறதா என்று பயப்பட வேண்டியிருக்கிறது..


பார்த்து விட்டு வெளியே வரும் ஹீரோவிடம், “இவள் யாரென்று தெரியவேண்டும்..அவள் உயிரோடு இருக்கிறாளா..அல்லது, இதெல்லாம் நாடகமா” என்று கண்டுபிடிக்கவேண்டியது உன் வேலை என்று சொல்லி அனுப்பிவிடுகிறாள் பணக்காரப் பாட்டி..தனக்கு தெரிந்த ஆபிஸரை வைத்து அந்த வீடியோவில் உள்ள பெண் யாரென்று தெருகிறது. சினிமாவில் சேர ஆசைப்பட்டு ஹாலிவுட் வந்த பெண் என்று தெரிந்து ஹாலிவுட் வீதிகளில் சுற்றி கடைசியாக பலான புத்தகங்கள் விற்கும், ஜாக்வின் என்றவரின் அறிமுகம் கிடைக்கிறது..

ஹாலிவுட் தெருக்களில் அலைந்து திரிந்து கடைசியாக அந்த வீடியோவை யார் எடுத்தது கண்டுபிடிக்கிறார். அவனைப் போய் பார்த்து, நானும் அதுபோல ஒரு படம் எடுக்கவேண்டும்..எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, அந்த மாஸ்க் அணிந்தவன்தான் வேண்டும் என்று செட் அப்பாக சொல்ல, ஷூட் செய்வதற்காக ஹீரோவை ஒரு இடத்திற்கு வரச்சொல்கிறார்கள்..அந்த இடத்திற்கு சென்ற ஹீரோவிற்கு கிடைக்கும் அதிர்ச்சி, நமக்கும் ஏற்பட,மீதியை நீங்களே பார்த்து கொள்ளுங்கள்..

முதலில் கண்டிப்பாக இந்த படம் 18+வயதினருக்கு மட்டுமே..”போர்ன்” என்று அழைக்கப்படும், பலான இண்டஸ்டரியைப் பற்றி அக்குவேறு ஆணிவேறாக சொல்லியிருக்கிறார்கள். அந்த பெண்ணை கண்டுபிடிப்பதற்காக, அனைத்து பலான வீடியோக்களையும் ஹீரோ பார்க்கும்போது, நாமும் பார்க்கவேண்டியிருக்கிறது, என்பதை நீங்கள் புண்ணியம் என்று சொன்னால், ஏற்று கொள்ளமுடியவில்லை..ஏனென்றால் அந்த படங்களின் முடிவில், கத்தியை எடுத்து சதக்..சதக்… அமெரிக்காவில் இப்படிப்பட்ட தெருக்களும் உண்டு என்பதை அறியமுடிகிறது..எங்கு பார்த்தாலும், பாதி போதையில் பெண்கள்..பலான புத்தகங்களையே பிரிவுவாரியாக பிரித்து விற்கப்படும் சி.டிக்கள் புத்தகங்கள் என்று ஒரு தொழிற்சாலையே நம் கண்முன் நிறுத்துகிறார்கள்...(யாருண்ணே, இப்பவே சி.டி வாங்குறதுக்கு ஓடுறது)


நிக்கோலஸ் கேஜ் பற்றி சொல்லவா வேண்டும்..வீடியோவை பார்த்து திடிக்கிடுவதாகட்டும், தெரு தெருவாக, அந்த பெண்ணைத் தேடி அலைவதாகட்டும், கடைசியில் அந்தகும்பலோடு நடக்கும் சண்டையாகட்டும், மனைவி, குழந்தை மேல் காட்டும் அன்பிலாகட்டும், நிக்கோலஸ் கேஜ் நன்றாக நடித்திருக்கிறார் என்று சொல்லுவது, “சங்கரன் கோவில்” இடைத்தேர்தலிலும் இரட்டை இலைதான் ஜெயிக்கும் என்று சொல்லுவது போல் இருக்கும்.

ஒருவேளை பலான படம் எடுத்திருப்பாரோ என்று சந்தேகப்படவைக்கும் அளவுக்கு, அந்த ஏரியாக்களில் பிரித்து மேய்ந்திருக்கிறார், டைரக்டர் “ஜோயல் ஷூமேக்கர்..” அவரோடு கண்போல கூடவே செல்லும் கேமிராமேனுக்கும் ஒரு சபாஷ்….முகத்தை மறைத்துக்கொண்டு, மாஸ்க் அணிந்து, அனைத்து பெண்களையும் கொலை செய்யும், வில்லன், தான் அப்படி செய்வதற்கான காரணத்தை சொல்லும்போது, “அடங்கொன்னியா என்று சொல்லவேண்டியிருக்கிறது.

மத்தபடி, பலான படம் பார்க்கபோகிறோம் என்று பார்க்காமல், ஒரு திரில்லரை எதிர்நோக்கி சென்றால், இந்த படம் ஒரு 60% வது திருப்திப்படுத்தும் என்பது உறுதி..

(அடுத்து நம்ம தல டென்சல் வாஷிங்க்டன் நடித்த “தி சீஜ்” படத்தின் விமர்சனம் கூடிய சீக்கிரம்)



7 comments:

அவிய்ங்க ராசா said...

/////////////////////////////////////
Online Works For All said...
Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html


Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html
/////////////////////////////////
என்னடா இன்னும் வரலையேன்னு பார்த்தேன்..சென்னை ஒருநாளைக்கு வருவேன்..அன்னைக்கு இருக்கு....)))

சி.பி.செந்தில்குமார் said...

>>. அந்த பெண்ணை கண்டுபிடிப்பதற்காக, அனைத்து பலான வீடியோக்களையும் ஹீரோ பார்க்கும்போது, நாமும் பார்க்கவேண்டியிருக்கிறது,

ஹி ஹி ஓக்கே ஓக்கே பார்த்து தொலைச்சுட வேண்டியதுதான்

சி.பி.செந்தில்குமார் said...

டைட்டில்தான் சரி இல்லை.. நானா இருந்தா படத்துக்கு மர்டர் இன் கில்மா ஸ்ட்ரீட்னு வெச்சிருப்பேன் ஹி ஹி

அவிய்ங்க ராசா said...

மர்டர் இன் கில்மா ஸ்டிரீட்..ஆஹா..வடை போச்சே...))) வருகைக்கு நன்றி செந்தில்

ஆனந்தி.. said...

//Online Works For All said...
Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html


Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html
/////////////////////////////////
என்னடா இன்னும் வரலையேன்னு பார்த்தேன்..சென்னை ஒருநாளைக்கு வருவேன்..அன்னைக்கு இருக்கு....)))////
ha ha ha..;-))))))

nirvana said...

Watch the movie Red Rock West by Nicholas Cage . There is a twist every 10 minutes.

காப்பிகாரன் said...

எனக்கு அந்த படத்தோட dvd அனுபுகன்னே

Post a Comment