Sunday, 18 September, 2011

அன்னா ஹசாரே, நரேந்திர மோடி, அப்பாலிக்கா நான்

அடுத்த உண்ணாவிரதம் ரெடியாகிவிட்டது, அமர்க்களமாய். நம் ஏடுகளுக்கும், சானல்களுக்கும் சொல்லவா வேண்டும். “அன்னா” இல்லை “அண்ணா..”, ஐயோ “அண்னா..”, ஒருவேளை, “அன்ணா” உண்ணாவிரதம் இருந்தபோது, மாய்ந்து கட்டிகொண்டு, விளம்பர இடைவேளைக்கு பிறகு ஒளிபரப்பப்பட்ட ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதம் செம சக்சஸாகி, தொடர்ச்சியாக 50 வது நாளாக அரங்கம் நிறைந்து ஓடிக்கொண்டிருக்கும்போது, மத நல்லிணக்கத்துக்கு ஆதரவான, குஜராத்தை வளர்ச்சிப்பாதையில் சைடுவாக்கில் கொண்டு செல்பவரான சொல்லப்படும், நரேந்திர மோடியின் உண்ணாவிரதமும் வந்தால் எப்படி இருக்கும்..எந்திரன் படம் ரீலிசான அடுத்த வாரம் ராணா ரீலிசானல் எப்படி இருக்குமோ அப்படி…

ஆனால் இந்த தடவை உண்ணாவிரதம் இருப்பது மோடி என்பதுதான் நகைச்சுவைக்குரியது, அதுவும் வடிவேலு பாணியில் சொல்லவேண்டுமானால் “சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு..”, சரி உண்ணாவிரதம் இருந்துட்டுப்போகட்டும், ஆனால் அதை மத நல்லிணக்கத்துக்கு ஆதரவாக என்று சொல்லும்போதுதான் விழுந்து விழுந்து சிரிக்கவேண்டியிருக்கிறது. இது எப்படி தெரியுமா இருக்கிறது, “தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு எதிராக ராஜபக்சே உண்ணாவிரதம்”. என்ன, படிக்கும்போது சிரிப்பு வருகிறதா…

அதுவும் உண்ணாவிரதத்துக்கு ஆதரவாக அமெரிக்காவிலும் பல இடங்களிலும் உண்ணாவிரதமாம். கேட்டால், உச்சநீதிமன்றமே சொல்லிவிட்டதாம். அடங்கொன்னியா..உச்சநீதி மன்றம் “நரேந்திர மோடி” தவறு செய்யவில்லை என்று சொல்லவில்லை. வழக்கு குறித்து மேற்பார்வை தேவையில்லை என்றுதான் சொல்லியிருக்கிறது.

இந்த தீர்ப்பு காங்கிரசுக்கு புளியை கரைத்ததோ, இல்லையோ கண்டிப்பாக அத்வானி ஐயாவுக்கு புளியைக் கரைத்திருக்கும். பின்ன, காங்கிரஸ் கன்னாபின்னாவென்று ஆண்டுகொண்டிருக்கும் இந்தவேளையில் நைசாக நடுவில் புகுந்து ஆட்டையைக் கலைத்துவிட்டு, பிரதமராகலாம் என்ற எண்ணத்தில் வண்டி வண்டியாக மண் விழுந்தால் எப்படி இருக்கும்.

ஆனால், இதற்கு பின்னால் உள்ள அரசியல் பலபேருக்கு புரியவில்லை. மோடி எப்படி திடீர் கதாநாயகனனார் என்றால், “குஜராத்” முன்ணனி மாநிலமாக திகழ்கிறதாம்….எப்படி, “பிணங்களில்” மேல் ஏறி நின்று மருத்துவம் பார்ப்பது போல..6 மாத கர்ப்பினியை கதற கதற வயிற்றைக் கிழித்து கருவை நெருப்பில் தூக்கி எறிந்து வெறித்தனமாக சிரித்த சிரிப்பெல்லாம் மறந்துவிட்டது, குஜராத் வளர்ச்சி பாதையில் செல்கிறதல்லவா. பேக்கரியில் நுழைந்து, குழந்தை, பெண்கள் என்று பாராமல், கதவைப்பூட்டி உயிரோடு எரித்தது மறந்துவிட்டது..குஜராத் வளர்ச்சிப்பாதையில் செல்கிறதல்லவா…

போனவாரம், இங்கு உள்ள ஒரு ஷாப்பிங்க் மாலுக்கு சென்றிருந்தேன்..தாகத்திற்கு , ஒரு ஜூஸ் கடை பக்கம் ஒதுங்கவே, கடைக்காரார் இந்தியர்..

“மதராசி…???”

“இல்லை..தமிழன்…”(விசயகாந்து மட்டும் இதை கேட்டிருக்கணும்.)

“ஓ..” என்று சொல்லிவிட்டு ஹிந்தியில் பேசவே, நமக்கு தான் ஹிந்தி தூரமாச்சே…

“சாரி..சார்.ஹிந்தி தெரியாது…”

உர்ரென்று பார்த்தார்..

“சாருக்கு எந்த ஊரு..”(சோறு போடும் ஆங்கிலத்தில்)

“குஜராத்த்த்த்த்த்…”

என்று சொல்லிவிட்டு சும்மா இருந்தால் பரவாயில்லை…சொரிஞ்சுவிட்ட மாதிரி கூடவே..

“நம்பர் ஒன் ஸ்டேட் இன் இண்டியா” என்றார்..

எனக்குப் பொத்துக்கொண்டு வந்தது..

“எதுல சார்..கொலை பண்ணுறதுலயா…”

அவ்வளவுதான்..டென்சன் ஆகிவிட்டார்..

“ஓ..மேன்..வீ ஹேவ் ஆல் பாக்டரிஸ்..இண்டஸ்டிரி…மோடி இஸ் நம்பர் ஒன் சீப்மினிஸ்டர்”

“சூப்பர்..உங்கள் பிரதமர் மோடிக்கு அமெரிக்கவிசா மறுக்கப்படது..எதற்கு தெரியுமா..” என்றேன்..

“தேட்ஸ்..தேட்ஸ்….தேட்ஸ்..” என்று தடுமாறினார்..

“ஐயா..குஜராத்துக்கும் எனக்கும் ஏதோ ஜென்மப்பகையெல்லாம் இல்லை. காந்தி பிறந்த மண் என்று எல்லோருக்கும் நல்ல மதிப்பே இருந்தது..ஆனால் மதத்தின் பெயரால் கொன்று கை முழுவதும் ரத்தக்கறையல்லா, படிந்திருக்கிறது, இப்போது..அதை எப்போது கழுவப்போகிறீர்கள்” என்றேன்…வெறித்துப்பார்த்தவர்

“ஜூஸ் ரெடி” என்றார்..சிரித்துக்கொண்டு வாங்கிவிட்டு நகர்ந்தேன்.

மும்பை குண்டுவெடிப்பாகட்டும், கோத்ரா ரயில் எரிப்பாகட்டும், குஜராத் கலவரமாகட்டும், நம்மில் பலபேருக்கு அது செய்திகளாகவே இருக்கிறது, நம் குடும்பத்தில் ஒருவர் பாதிக்கப்படாதவரை…யோசித்துப் பாருங்கள்..செல்லம், செல்லமாக பார்த்து பார்த்து நீங்கள் வளர்த்த ஒரு பச்சிளம் குழந்தையை தீயில் தூக்கி எறிந்தால் எப்படி இருக்கும். இதுதான் குஜராத்திலும் நடந்தது.

காலையில் பரபரப்பாக வேலைக்கு சென்ற உங்கள் மனைவியோ, கணவனோ, துடிக்க துடிக்க ரத்த வெள்ளத்தோடு, துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகி கிடந்தால் எப்படி இருக்கும்…இதுதான் நடந்திருக்கிறது மும்பை குண்டுவெடிப்பிலும், தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டிலும் இதுதான் நடந்தது…

செல்லமாக வளர்த்த சிறுவனும், மகன் வளர்ச்சியை பூரிப்பாக பார்க்கும் நீங்களும் மொத்தமாக உயிரோடு வேகும்போது எப்படி இருக்கும்..ஒரிசாவில் பாதிரியாருக்கு இதுதான் நடந்தது..

ஆனால் நெருப்பில் கருகியவை உடல்கள் அல்ல..சகமனிதனனின் உணர்வுகள்..கனவுகள்..எல்லாவற்றிற்கும் ஒரே காரணம், இந்தப் பாழாய்ப்போன மத வெறி..…அப்படி என்னதான் வெறியூட்டுகிறது, இந்த மதம்..எந்த மதம், “ரெண்டு மசூதியை இடித்துவிட்டு வா” என்று சொல்லுகிறது..எந்த மதம் “நாலு, இந்துக்களை சுட்டுவிட்டு வா” என்று சொல்லுகிறது..எந்த மதம், “பாதிரியாரை” எரித்துவிட்டு என்று சொல்லுகிறது..”

என்றைக்கு மதம், சாதி அடையாளங்களை மறந்து, சகமனிதனை, மனிதனாய் பார்க்கிறமோ, அன்றுதான், “நான் இந்தியன்” என்று பெருமை கொள்வதில் அர்த்தம் இருக்கும்..அன்று தான், “எங்கள் மாநிலம்தான் முதல்” என்று மார்தட்டுவதில் அர்த்தம் இருக்கும்..

இல்லையென்றால் “அவிங்களுக்கு வேணும்”, “எங்களை அடிச்சீங்கல்ல..வாங்குங்கடா..”, “அவிங்களுக்கு வீடு தரக்கூடாது” என்று ஆரம்பித்து, மெல்ல, மெல்ல வெறியேறி, ஒரு கட்டத்தில், “நாம் மனிதன்” என்ற அடையாளத்தையே இழந்துவிடுவோம்..

இந்துவோ, முஸ்லீமோ, கிருஸ்தவனோ, நம்மைப்போல, உணர்வு கொண்ட மனிதன் என்று மனிதாபிமானத்தோடு நினைத்தாலே போதும், மனிதம் வளரும். இல்லையென்றால், “இந்தியா, ஒரு மதச்சார்பற்ற நாடு..வேற்றுமையில் ஒற்றுமை” என்ற கோஷங்கள் “ஜனகனமன” என்று அர்த்தம் தெரியாமல், தேசியகீதம் பாடுகிற மாதிரி இருக்கும்..

அன்னா ஹசாரே, நரேந்திர மோடிக்கு அடுத்து, இனிமேல் யாரும் உண்ணாவிரதம் இருக்கக்கூடாது, என்று என் தலைமையில் , மெரினாவில் உண்ணவிரதம் இருக்கப்போவதாய், உத்தேசம்..யாராவது வர்றீங்களா, கையில் மெழுகுவர்த்தியோடு..

15 comments:

VJR said...

Haha, good one.Haha, good one.

Anonymous said...

http://www.fas.org/sgp/crs/row/RL33529.pdf

Philosophy Prabhakaran said...

நகைச்சுவையாக ஆரம்பித்து காட்டமாக முடித்திருக்கிறீர்கள்... இன்னமும் குஜராத் முன்னணியில் இருக்கும் மாநிலம், மோடி திறமையான முதல்வர், தமிழகம் குஜராத்தை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் சிலர் நம்பிக்கொண்டிருக்கின்றனர்....

அவிய்ங்க ராசா said...

நன்றி விஜேஆர்
நன்றி அனானி
நன்றி பிரபாகரன்..

Anonymous said...

அருமையான தகவல்

100% Without Investment Data Entry Jobs !

FOR MORE DETAILS VISIT OUR WEBSITE : http://bestaffiliatejobs.blogspot.com

bala7884 said...

super

MANASAALI said...

வரவேற்கிறேன்.... தொடர்கிறேன்.......

Anonymous said...

kalakkal thalai.

surya

Anonymous said...

நல்ல கருத்தான பதிவு!
-
வெங்கடேஷ்

அவிய்ங்க ராசா said...

நன்றி பாலா, மனசாலி, சூர்யா, வெங்கடேஷ்

Karthik said...

If it is right whatever u said, why the riot doesn't happen again after 2001.Modi ruled a decade after that.Not even a single incident happens.Even though Ahmedabad is the hot target for terrorist.You are reflecting medias intentions to spoil the real.If you want to know the truth................go to Gujarat or ask some one been in Gujarat.......


Karthik
Karur

Karthikc111982@gmail.com

Anonymous said...

super post, if u start a fasting in marina, for that reason u told, i will be there to support to u. - rajakamal

Anonymous said...

romba nalla seruppala adicha mathiri solli irukreenga, ethanai perukku oraikum nu than theiryala

அவிய்ங்க ராசா said...

கார்த்திக்..இப்போதெல்லாம் குண்டுவெடிப்பு நடப்பதேயில்லை என்பதனால், செய்த தவறு எல்லாம் இல்லை என்றாகி விடுமா..மத உணர்வுகளை தூண்டியதலாயே, அவர் அடுத்தமுறை ஆட்சிக்கு வரமுடிந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள்

நன்றி ராஜ்கமல்..))

நன்றி அனானி நண்பர்

Anonymous said...

அன்புள்ள ராசா,
நான் சொல்ல vanthathu அதுவல்ல.நீங்கள் கூறியது pol மோடி இந்துக்களுக்கு ஆதரவாக irunthaal,மறுபடியும் இந்து theeviravathigal கலவரத்தில் eedupattiruppaarkale? yen மறுபடி நடக்கவில்லை? 2001 ல் nadantha kalavarathirku பிறகு மிகவும் திறமையான ஒரு நிர்வாகத்தின் மூலம் அனைத்து theeviravatha சக்திகளையும் முறியடித்து தன்னுடைய மாநிலத்தை வெற்றி paathaiyil கொண்டு செல்லும் ஒரு thalaivarai நீங்கள் பார்க்கும் konam இது தான் என்றால் என்ன சொல்ல? அவர் islamiyarkalin எதிரி என்றால் இஸ்லாமிய மக்கள் அதிகமாக உள்ள இடங்களிலும் அவரது வேட்பாளர்கள் வெற்றி பெற்றது எப்படி? கள்ள ottu என்றோ? ஓட்டுக்கு பணம் கொடுத்து vendraarkal என்றோ தயவு seythu கூற வேண்டாம்! athu tamilnadu alla! குஜராத்! (இங்கே கூட இந்த முறை அப்படி நடக்க வில்லை!) வரும் குஜராத் therthalil யார் ஜெயிக்க pokiraarkal endru நீங்கள் எண்ணுகிறீர்கள்?

Karthik
Karur

Post a Comment