Wednesday 10 August, 2011

அவியிங்க ராசாவின் அவசரப் பார்வை

இப்போதெல்லாம் முன்பு மாதிரி அடிக்கடி எழுதமுடிவதில்லை. பேஸ்புக்கில் அவ்வப்போது கமெண்டுவதோடு சரி. எழுதி, என்னத்தை கண்டோம் என்ற அலுப்பு கூட இருக்கலாம். அல்லது கற்பனை வறட்சியாக கூட இருக்கலாம்.

அந்த விஷயத்தில் நடிகர் அஜீத்தின் தற்போதைய ஸ்டேட்மெண்ட் எனக்கு பிடித்திருக்கிறது. நடிகனை, நடிகனா பாருங்கடா என்று செவிட்டில் அறைந்தாற்போல சொன்னதுபோல இருக்கிறது. இதைதான், நானும் காலங்காலமாக சொல்லி வந்து நிறைய கெட்டவார்த்தை கமெண்டுகளும் வாங்கி ஓய்ந்து போய்விட்டேன். ரஜினி, அஜீத் படம் பிடிக்கிறதா, நன்றாக அவருடைய படத்தை பார். கைதட்டு, சந்தோசப்படு..அதோடு நிறுத்திக்கொண்டு வந்து வேலையை பார். உனக்கும் குடும்பம் இருக்கிறது. அதை விட்டுவிட்டு ரசிகர் மன்றம் வைத்துக்கொண்டு, கட் அவுட்டுக்கு பால் ஊத்துவது, லவுட்ஸ்பீக்கரை கட்டிக்கொண்டு, காதை டேமெஜ் பண்ணுவது, “தலைவா, தமிழக விடிவெள்ளியே” என்று போஸ்டர் அடிப்பது, நடிகர் செல்லும் இடத்திற்கெல்லாம், கொடியை பிடித்துக்கொண்டு செல்வது, நடிகன் படம் வருவதற்கு முன்னாடியே பித்துபிடித்த மாதிரி அலைவது…இவை எல்லாம் நம்முடைய முன்னேற்றத்திற்கு ஒருபோதும் உதவியாக இருக்கப்போவதில்லை. நடிப்பு என்பது ஒரு தொழில். நடிகன் ஒன்றும் சமூகசேவைக்கு படத்தில் நடிக்கவில்லை. கோடி, கோடியாக சம்பளம் வாங்குகிறான். நடிக்கிறான். அவன் ஒன்றும் “என் ரசிகர்களே” என்று உருகுவதில்லை. வீட்டை மறந்து ரசிகர்களோடு தெருவில் இறங்கி போராடுவதில்லை,,ரசிகனுக்கு ஒன்றென்றால், பதறிப்போவதில்லை. அவனுக்கும் குடும்பம் குட்டி என்று தெளிவாகத்தான் இருக்கிறான். ரசிகர்களாகிய நாம்தான் இந்த அக்கப்போர் பண்ணி, வீட்டையும், நாட்டையும் தொல்லைப்படுத்திக்கொண்டு இருக்கிறோம். “அட உனக்கு என்னடா வந்தது, நாங்கள் அலும்பு பண்ணினால்” என்று கேட்டால் சொல்லுவேன்…”அடப்பாவமே..ஒரு தலைமுறையே கெடுத்துக்கொண்டு இருக்கிறீர்கள் தெரியுமா…ஒரு வீட்டில் உக்கார்ந்து நீங்கள் இதையெல்லாம பண்ணினால் யார் கேட்கப்போகிறார்கள்..தெருவில், வீதியில் இறங்கி செய்வதால் தானே இவ்வளவு பிரச்சனை..உன்னை பார்த்து, பள்ளி செல்லும் மாணவன் கட் அவுட்டுக்கு பால் ஊத்துகிறான். ரசிகர் மன்றத்தில் சேர்கிறான். படிப்பை மறந்து “தலைவா” என்று கத்துகிறான்..”. அவனைப்பார்த்து சிலபேர், இன்னும் சிலபேர், இன்னும் சிலபேர் என்று ஒரு தலைமுறையே அல்லவா, கெடுத்துக்கொண்டிருக்கிறோம். சத்தியமாக சொல்லுகிறேன்..”தலைவா” என்ற வார்த்தையை கேட்டாலே எரிச்சலாக வருகிறேன்.

ரசிகன் மட்டும்தானா..நன்றாக படித்த, பலபேரும் இதைதான் செய்துகொண்டிருக்கிறோம்..ஒரு எழுத்தாளருடைய , அல்லது பதிவருடைய எழுத்து பிடிக்கிறதா..சந்தோசப்படு, கொண்டாடு.முடிந்தால் தினமும் கூட அவருடைய எழுத்துக்களை படி..அதைவிட்டுவிட்டு “ஐய்யயோ..நீங்கள் எழுதாமல் சோறு தண்ணியே இறங்குவதில்லை…”, “உங்களை பார்க்கணும்போல ஆசையாக உள்ளது.. சொல்லுங்க..என்ன வேலை இருந்தாலும் அப்படியே விட்டுவிட்டு வருகிறேன்..ஒன்னா சேர்ந்து தண்ணி அடிக்கலாம்..” என்பதும், அப்புறம் காசு செலவழித்து தண்ணி அடித்துவிட்டு, அதை பெருமையாக “அவருடன் நான்” என்று படம் காட்டுவதும், “அவரை பார்த்தபோது தெய்வத்தை பார்த்தது போல இருந்தது, நாக்கு ஒட்டிக்கொண்டது” என்று புளகாங்கிதம் அடைந்து பேஸ்புக்கில் கமெண்டு போடுவதும், அவருடைய அக்கவுண்டு நம்பரை பார்த்ததும், கஷ்டப்பட்டு சேர்த்த காசை, பைனான்ஸ் கம்பெனியில் போட்ட மாதிரி அப்படியே, அவருடைய அக்கவுண்டில் போடுவதும்….அவர் என்னதன தப்பு செய்தாலும் “அய்யோ..அவர் அப்பாவி” என்று வக்காலத்து வாங்குவதும்…அடப்பாவமே..எழுத்தை காட்டி மயக்கி உன்னை வைத்து, ஒரு கூட்டமே வாழ்ந்து கொண்டிருக்கிறதே…முதலில் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும். எழுதுவதால் நான் ஒன்றும் கடவுள் அல்ல..என் எழுத்துக்கள் எல்லாம் என் எண்ணங்கள் அல்ல…மனம் முழுதும் அழுக்கை வைத்துக்கொண்டு நான் யோக்கியன் மாதிரி கூட எழுதலாம்…எழுத்துக்களை ரசிக்கவேண்டுமே அன்றி எழுத்தாளனையோ, பதிவனையோ அல்ல..அதனால் தான், எனக்கு வந்த வாசகர் கடிதம் என்று பதிவை பார்க்கும்போதும் எரிச்சல் வருகிறது..அது பொறாமையால் அல்ல…ஆற்றாமையால்.

சமச்சீர் கல்வியில் தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் குட்டுபட்டிருக்கிறது. இதை ஒழுங்காக அப்போதே நடைமுறை படித்தி இருந்தால், இந்த அலைச்சல் இருந்திருக்காது, மாணவர்களுக்குதான் எவ்வளவு கஷ்டம்..இனி, சனி, ஞாயிறு கிழமைகளில் கூட பள்ளிக்கு வரவேண்டியிருக்கும்.ப்ச்..

சாப்ட்வேர் கம்பெனிகள் வேலை பார்க்கும் நண்பர்கள் ரெடியாகிக்கொள்ளுங்கள்…அமெரிக்க பொருளாதாரத்திற்கு கொஞ்சம் கெட்டகாலம். இன்னொரு ரெஷசன் ரெடியாகி கொண்டிருக்கிறது..கல்யாணம் செய்யாதவர்கள்..நாளைக்கே திருமணம் செய்வது நலம்.இன்னும் கொஞ்சநாள் போனால் ஒரு பய பொண்ணு கொடுக்க மாட்டான்..

பதிவர்களில் எனக்கு கேபிள் சங்கர் எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். போலித்தனம் இல்லாமல் இயல்பாக இருக்கும்..எனக்கு பாருடா எத்தனை வாசகர்கள் என்று அலும்பி கொள்ளவே மாட்டார்..என்னதான் கிண்டல் செய்தாலும், நேரில் பார்த்தால், "என்ன தலைவா" என்பார்..சற்று லேட்டாக இருந்தாலும், அவருக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

(இன்னும் எழுதுவேன்…)

6 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

மிகவும் சரியாக சொல்லியிருக்கிறீர்கள்.. நடிகன் என்றவன் என்றைக்குமே கடவுள் இல்லை.. என்னை பொருத்தவரை வேறு எதையும் பற்றி யோசிக்க விடாமல் மூன்று மணி நேரம் நிம்மதியாக பொழுது போக்கினால் அது ஒரு நல்ல படம். அதற்காக அந்த படத்தில் நடித்த நம்மை போன்ற ஒரு சாதாரணமான மனிதனை கடவுள் ரேஞ்சுக்கு கொண்டு செல்வது முட்டாள் தனமான விசயமே..

எழுத்து விஷயம் அதுவும் நீங்கள் கூறுவது மிகவும் சரியானதே.. வெறும் எழுத்துக்களை கொண்டு எந்த மனிதனையும் கணக்கிட முடியாது.

நல்ல பகிர்வு..

ம்ம மறந்திட்டேன்..
கேபிள்ஷங்கர் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் இங்கே சொல்லிக்கொள்கிறேன்.

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஆணித்தரமான பதிவு. நன்றி

Mohamed Faaique said...

நல்ல பதிவு நன்பரே!!

சினிமா என்பது பொழுதுப்போக்கு மட்டுமே!!.. ஆனால், நம் மத்தியில்தான் எல்லாமே தலைகீழ்...

bandhu said...

இந்த கொடுமை எல்லாம் நம்ப ஊரில தான். எத எதையோ காப்பி அடிக்கறோம் -தெய்வ திருமகளை சொல்லல :-) - இத கத்துக்கலாமே.

மனசாலி said...

அருமையான கருத்துக்களை சொன்ன தங்க தலைவன் தானை தலைவன் அவய்ங்க ராசா வாழ்க . அவய்ங்க ராசாவுக்கு இதுக்காகவே ரசிகர் மன்றம் ஆரம்பிக்கலாம்.

பின்ன நாங்க எல்லாம் மதுரகாரங்கள!!! :-)

ஜிஎஸ்ஆர் said...

மாற்று கருத்து இல்லை

Post a Comment