Thursday 23 June, 2011

தி பர்ஸ்யூட் ஆப் ஹேப்பினஸ் - ஆங்கில திரைப்பட விமர்சனம்


வில் ஸ்மித் என்ற நடிகனை எம்.ஐ.பி என்ற படத்தில் பார்த்தது. அப்படி ஒன்றும் கவரவில்லை. ஏதோ பத்தோடு, பதினொன்றாகத்தான் எனக்கு பட்டது. போன வாரம், யதேசசையாக இந்த படத்தை பார்க்க நேர்ந்தது. பார்த்துவிட்டு என்னால் இரண்டு நாட்கள் நார்மலாக இருக்க முடியவில்லை.

அப்படியே வாழ்க்கையின் யதார்த்தம். நம்மில் பலர், அமெரிக்கா முழுவதும் பணக்காரர்கள் நிரம்பிய நாடு என்று எண்ணிக்கொண்டு இருக்கிறோம். இங்கும் ஒருவேளை உணவு கிடைக்காமல் எவ்வளவோ பேர் பசியால் இறக்கிறார்கள். தங்குவதற்கு இடம் கிடைக்காமல், தெருத்தெருவாக அலைகிறார்கள். அப்படி ஒருவன் பற்றிய உண்மைக்கதைதான் இந்தப்படம்.


கிறிஸ் கார்டனர்..இதுதான் வில்ஸ்மித் பாத்திரம். நியூயார்க நகரில் வாழும் சாதாரண மனிதன்..ஸ்கேன் பண்ணும் மருத்துவ உபகரணத்தை வாங்கி, தெருதெருவாக விற்கும் ஒரு சாதாரணன். மாதத்திற்கு இரண்டு மிஷின் விற்றாலே பெரிய விஷயம். மிசின் விற்றால் மட்டுமே அவனுக்கு அன்றைக்கு பிழைப்பு. வேண்டாவெறுப்பாக அவனோடு இருக்கும் மனைவி, எப்போதும் பாசத்தோடு இருக்கும் சிறுவயது மகன். எங்கு பார்த்தாலும் கடன். ஒருகட்டத்தில் கடன்காரர்கள் கழுத்தை நெறிக்க, மனைவி அவனிடமிருந்து எஸ்கேப் ஆகிறார்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் ஒரு பால்யகால சிநேகிதனைப் பார்க்கிறான். அவ்னோடு படித்தவன் தான். ஆனால் பெராரி கார், புதுமாடல் செல்போன் என்ற பந்தாவோடு..இவனுக்கு ஆச்சர்யம். விவரவம் கேட்க, தான் ஷேர்மார்க்கெட் புரோக்கர் என்றும், அதில்தான் இவ்வளவு வருமானம் வருகிறது என்று சொல்ல, கிறிஸ்ஸுக்கும் அதன்மேல் ஒரு பிடிப்பு வருகிறது.

அப்படி, இப்படி என்று அலைந்து 6 மாதம் பயிற்சி காலத்தில் வேலைக்கு சேர்கிறார். சம்பளம் இல்லை. 6 மாதம் உழைக்கவேண்டும் கடைசியாக ஒரு தேர்வு, மற்றும் பயிற்சி காலத்தில் எவ்வளவு கஷ்டமர்களை கொண்டு சேர்க்கிறீர்களோ, அதைப்பொறுத்துதான் வேலை நியமனம். வேறு வழியில்லாமல் வேலைக்கு சேர்கிறான்.


இந்த நேரத்தில் கிறிஸ்ஸுக்கு சோதனைமேல்சோதனை. வாடகை கட்டாமல் வீட்டை விட்டு வெளியே துரத்துகிறார்கள். மகனோடு ஹோட்டலில் தங்குகிறான். டாக்ஸ் கட்டாத்தால், பேங்கில் உள்ள எல்லா சேமிப்பு பணத்தையும் அரசு எடுத்துக்கொள்ள, ஹோட்டலில் இருந்தும் வெளியே துரத்துகிறார்கள். இப்போது, தன் சிறுவயது மகனோடு நடுத்தெருவில். நம்மில் பலர் கண்டிப்பாக தற்கொலை செய்து கொள்வோம். ஆனால், க்றிஸ்..போராடுகிறான். சத்திரம் போய் தங்குகிறான். அதற்கும் இடம் கிடைக்காமல் போக, பஸ்ஸடாண்டில் உள்ள பொதுக்கழிப்பறையில், தன் மகனோடு தூங்குகிறான். வாழ்க்கையில் போராடுகிறான். கடுமையாக உழைக்கிறான். கஷ்டப்படி கஷ்டமர்களை கொண்டு வருகிறான். இரவு பகல் பாராமல் தேர்வுக்கு படிக்கிறான்.

முடிவாக அவன் கேட்க நினைத்த வார்த்தை கேட்கிறது….நீ செலக்ட் ஆகிவிட்டாய்..எப்படி இருக்கும்….அப்படியே தெருவில் ஓடுகிறான். பள்ளி சென்று மகனை கட்டிக்கொண்டு அழுகிறான். அப்படியே, யதார்த்தமாக படம் முடிகிறது.

ஒரு ஹீரோயிசம் இல்லை. துப்பாக்கி இல்லை, ஆக்சன் இல்லை. படம் முழுவதும் யதார்த்தம்…ஒரு மனிதனுக்கு வறுமை எவ்வளவு கொடியது என்று இந்த படம் பார்த்து அறிந்து கொள்ளலாம். வில்ஸ்மித் மற்றும் அவருடைய உண்மையான மகன்..யப்பா.என்ன ஒரு நடிப்பு..தன் மகனோடு, கழிப்பறையில் தூங்கும்போது அழும் காட்சியிலும், கடைசியாக வேலை கிடைத்துவிட்டு என்று தெரிந்து சந்தோசத்தை வெளிப்படுத்த முடியாமலும் அழுகையைக் கட்டுப்படுத்த, முடியாமல், நெகிழும் காட்சியுலும்..கிளாஸ்..

இந்த படம் பார்த்தவுடன், கண்டிப்பாக ஒரு தன்னம்பிக்கை பிறக்கும்…வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக பாருங்கள்..

13 comments:

THOPPITHOPPI said...

என்னங்க சார் ரொம்ப இம்ப்ரஸ் ஆகிட்டிங்க போல profile போட்டோ மாத்திட்டிங்க?

அவிய்ங்க ராசா said...

வில்ஸ்மித்..இன்னும் அந்த அப்பாவாய் நெஞ்சுக்குள்ள நிக்குறாருண்ணே..என்ன ஒரு நடிப்பு..இன்னும் அந்த பாதிப்பு போகும்வரை, அவர்தான் என் ப்ரோபைலில்..)

அசோகபுத்திரன் said...

இந்த படத்தை நான் பலமுறை பார்த்துவிட்டேன். Excellent Movie... இந்த படத்தின் தாக்கம் உங்கள் எழுத்துக்களில் இல்லை என்றே தோன்றுகிறது. Better luck next time...

• » мσнαη « • said...
This comment has been removed by the author.
• » мσнαη « • said...

அருமையான படம்....இது Christopher Paul Gardner என்பவரின் உண்மைக்கதை ...நானும் சமீபத்தில் தான் பார்த்தேன்... will smith என்ற கலைஞனின் நடிப்பு திறமைக்கு இது ஒரு மைல் கல்..... I,ROBOT,MIB போன்ற படங்களில் பார்த்த WILL SMITH தா இது.....அதிலும் இவரது மகன் JADEN SMITH-ன் நடிப்பு இன்னும் அருமை...இந்த படத்தின் தாக்கம் குறைந்தது ஒரு வாரத்தில் மேல் இருந்தது.....sony pix அடிக்கடி போடுவார்கள்...ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம்...மொக்கை படத்தை பார்த்துவிட்டு விமர்சனம் எழுதுபவர்கள் கவனிக்கவும்/திருந்தவும் !!!!

செ.பொ. கோபிநாத் said...

வில் ஸ்மித் உண்மையில் அற்புதமான நடிகர். அவருடைய Independence Day, Enemy of the State, Ali, I Am Legend, Seven Pounds போன்ற திரைப்படங்கள், அவருடைய நடிப்புக்கு ஆதாரம். Seven Pounds திரைப்படம் தொடர்பில் என்னுடைய பார்வை http://spggobi.blogspot.com/2010/03/seven-pounds.html இங்கு வாசிக்கலாம்.

VELAN said...

படம் பார்த்து விட்டு எப்படியும் ஒரு ஐம்பது பேரிடமாவது இந்த படத்தை பார்க்க சொல்லி கெஞ்சி இருப்பேன்.

செவென் பவுண்ட்ஸ் படத்தை விட இது தன வில்ஸ்மித்தோட சிறந்த படம்.

Anonymous said...

நியூயார்க நகரில் வாழும் சாதாரண மனிதன்..

San Francisco not new york

அவிய்ங்க ராசா said...

///////////////////////////
dhanu said...
இந்த படத்தை நான் பலமுறை பார்த்துவிட்டேன். Excellent Movie... இந்த படத்தின் தாக்கம் உங்கள் எழுத்துக்களில் இல்லை என்றே தோன்றுகிறது. Better luck next time...
24 June 2011 1:19 AM
/////////////////////////////
100% ஒத்துக்கொள்கிறேன். படம் எனக்கு ஏற்படுத்திய தாக்கத்தை என்னால் எழுத்தில் கொண்டுவரமுடியவில்லை. ஆனால், வில்ஸ்மித் ஏற்படுத்திய பாதிப்பே, என்னுடைய ப்ரொபைல் படத்தை மாற்றும் அளவுக்கு வந்தது

அவிய்ங்க ராசா said...

நன்றி RSM
நன்றி கோபி
நன்றி வேலன்.
திருத்தியதற்கு நன்றி அனானி நண்பர்

இவன் சிவன் said...

கழிவறையில் அழும் காட்சி வாய்ப்பே இல்லை...
வில்ஸ்மித் இப்டிலாம் நடிப்பார்னு இந்த படம் பார்த்த போது தான் தெரிந்தது...

அமுதா கிருஷ்ணா said...

அருமையான படம்

Sundar said...

Boss..after reading your review in your blog i was desparately searching for this video and fortunately i happened to see this movie in Sony PIX channel yesterday..Will Smith's expressions and acting are really superb..

Post a Comment