எளுத்தாளரே..என்ன தலைவா, எழுத்தாளரேன்னு சொல்லாம எளுத்தாளரேன்னு சொல்லுறன்னு பார்க்குறியா..நீ சொல்லிக்கொடுத்ததுதான் தல..பின்நவீனத்துவம்.வீட்டுல கூட கேட்டாய்ங்க.பின்னாடி என்னடா நவீனம் வேண்டிகிடக்குன்னு..விடலையே..தெளிவா சொல்லிப்புட்டேன். எளுத்தாளருதான் என் கடவுள். அவர் எது செஞ்சாலும் ரைட்டாத்தான் இருக்கும்னு.
கொஞ்ச நஞ்ச இலக்கியமா எழுதியிருக்க தல. நீ எழுதுன புத்தகம்தானே எனக்கு தலையணை. டெய்லி இரண்டு வரி படிக்கலைன்னா எனக்கு தூக்கமே வராது, தெரியுமா..அதுவும் உன்னோட “பப்பரப்பா..” புத்தகத்துல ஒரு வரி எழுதியிருப்ப பாரு…” 4 மணிக்கு கதவை சாத்தி பாப்பா போட்டாள் தாழ்ப்பா..”வாவ்..வாவ்..வரே.வரே.வாவ்.என்ன ஒரு வரிகள்…சீன எழுத்தாளர் “கிம் கு டுக்” அப்புறம், “அகிரோ குரொசாவா” எழுதுன மாதிரியே இருந்துச்சு..பின்னி எடுத்துட்ட தல..உலக இலக்கியம் படைக்கவேண்டிய ஆளு நீ..இந்த உள்ளூருல வந்து மாட்டிக்கிட்ட..
அப்புறம், தல..நீ தண்ணி அடிக்கிறதுக்கு, பணம் வேணுமுன்னு அக்கவுண்ட் நம்பர் போட்டிருந்தியே..என்ன கொடுமையான உலகம் இது தல..ஒரு எழுத்தாளனுக்கு தண்ணியடிக்க பணம் இல்லைன்னா ஜெகத்தினை அழித்திடுவோம்..ஒரு மாசமா நான் சேர்த்து வைச்சிருந்த அம்புட்டு காசையும் அனுப்புட்டேன் தல..நீ நல்லா தண்ணி அடி தல..அப்பத்தான், உலக இலக்கியம் நல்லா பீறிட்டு வரும்.. அதுவும் பாவம் நீயே, காசு பத்தாமத்தான், உன் தகுதிக்கு ஒத்தே வராத பைவ் ஸ்டார் ஹோட்டலுல போய் தண்ணி அடிக்கிற..எளுத்தாளன் நிலை பாத்தியா தல..இது பொறுக்கல இவிங்களுக்கு…
அய்யோ..பேச்சுவாக்குல கேட்க மறந்துட்டேனே தல..உங்களைப் பத்தி இல்லாததும், பொல்லாததுமா சொல்லுறாயிங்க தல..ஏதோ, லேடிஸ் பத்தி..தல..நீ கவலையே படாத தல..அத போய் நம்புவோமோ..அப்படி நீ பேசியிருந்தாலும், அது காதல் வரிகள் தல.பின்நவீனத்துவ வெளிப்பாடு..நீ கூட உன்னோட புத்தகத்துல கூடஒரு இடத்துலயே சொல்லியிருப்பியே..”மனசு ஒரு தோசை மாதிரி..திருப்பி போடலைன்னா கருகிடும்..” அது மாதிரி தல உன் மனசு..நீ ஒரு அப்பாவி..
அப்புறம் தல..உன்னை அவதூறு பண்ணுனவயிங்கள பத்தி விசாரிச்சோம்..திடிக்கிடும் தகவல்கள் தல..உன்னை குத்தம் சொல்லுறதுக்கு ஒரு தகுதியும் இல்லை..அவிங்க, சின்ன வயசுல பக்கத்துல உக்கார்ந்து இருக்குற பையன கிள்ளி வைச்சுருக்காய்ங்க தல..அப்புறம் அவன் திங்குற முட்டாயை திருடி தின்னுருக்காயிங்க தலை..இப்படிப்பட்ட ஆளுங்க உன்னைப் பத்தி தப்பா பேசுறதுக்கு என்ன தகுதி இருக்குங்குறேன்.
தல..நீ கவலைப்படாமே இரு..நாங்க இருக்கோம்.. நீ கொலையே பண்ணுனாலும், நாங்க ஒத்துக்க மாட்டோம்..அது கொலை அல்ல “வதை” ன்னு எங்களுக்கு தெரியாதா என்ன.. நீ இன்னைக்கு யாரைப் பத்தி நல்லா பேசிட்டு, நாளைக்கு திட்டுனா கூட நாங்க, கவலைப்பட்மாட்டோம்..ஏன்னா உன்னோட புத்தகத்துல கூட அதைப்பத்தி சொல்லிருக்கியே..” யக்கா, மக்கா சொக்கா..சோத்துக்கு பன்னீர் டிக்கா..” ..யப்பா..நீ எங்கயோ இருக்க வேண்டிய ஆளு தல..
தல.உங்க கூடயே நாங்க இருப்போம்..அதனாலே..நீ யாரைப்பத்தியும் கவலைப்படாமே, உன்னோட பாதையில் நீ பாட்டுக்கு போய்கிட்டே இரு தல…ஆங்க்..மறக்காம, போறப்ப, நீ எப்போதும் போடுற ஜாக்கி ஜட்டிய எடுத்துட்டு போயிடு…
இப்படிக்கு,
பின்நவீனத்துவ அல்லக்கை..
420, ஆல் அல்லைக்கைஸ் க்ரூப் தெரு,
ரெமி மார்ட்டின் வட்டம்,
ஜாக்கி ஜட்டி தெரு.,
நித்தியானந்தம் மாவட்டம்.. .
10 comments:
//ஆங்க்..மறக்காம, போறப்ப, நீ எப்போதும் போடுற ஜாக்கி ஜட்டிய எடுத்துட்டு போயிடு…//
அட, இது எப்படியா தெரியும்.
வாய் விட்டு சிரித்தேன்
jacki a vampilukalainna ungalukku thookkame varaathu pola ha...ha...haa
stepni
He He...Right...Neenga sonnathu jockey jatti thana..'Jacki' nu thappa purinthu kolla vaaippu irukka anne...
ஹா.ஹா
Oththa... Mavane... Yen kaila kedachina... Sukka mattan kooda serthu pakkava sapitruven...
நன்றி பாலா.
ஆஹா..அனானி நண்பா..என்னை மாட்டிவுடிறதுல அவ்வளவு ஆசையா
நன்றி டகால்டி..சூதானமா இருக்கணும் போலேயே.))
நன்றி பட்டாபட்டி
நன்றி அனானி நண்பா..
இந்த பொழப்புக்கு... ஏதாவது சொல்லிட போறேன்..
யக்கா மக்கா சொக்கா
சோத்துக்கு பன்னீர் டிக்கா
சாருக்கு ஒரு மட்டன் சுக்கா!
அடியேன் உங்களுக்கு என்ன கொக்கா
இல்லை மூடி இல்லாத ஜக்கா
கொண்டாடுறான் கேரளாவுல என்னை சோக்கா
என்னய படிச்சா போவான் கக்கா
போயி வேலைய பாரு மக்கா
//Jackiesekar said...
Oththa... Mavane... Yen kaila kedachina... Sukka mattan kooda serthu pakkava sapitruven...//
இது சாருவை பற்றியது. நீங்கள் தப்பாக புரிந்து கொண்டீர்கள்
"""என்னய படிச்சா போவான் கக்கா
போயி வேலைய பாரு மக்கா""
சூப்பரு
Post a Comment