Saturday 4 June, 2011

பாபா ராம்தேவ் - ஒருநாளில் பிரபலம் ஆகவேண்டுமா..??

தேசம் உங்களை கவனிக்கவில்லையே என்று வருந்துகிறீர்களா..தேசம் உங்களைப் பற்றி ஒருநாளாவது பேசவேண்டும் என்று விரும்புகிறீர்களா…நீங்கள் சார்ந்த துறைகளில் கடுமையாக உழையுங்கள்..படிபடியாக முன்னேறுங்கள்..தோராயாமாக எவ்வளவு நாளாகும். ஒரு 20 வருடங்கள்..அல்லது 30 வருடங்கள்..அடப்போங்க சார்..அதுவரைக்கும் காத்திருக்கமுடியாது..நாளைக்கே தேசம் என்னைப்பற்றி பேசவேண்டும். எந்த சானலை திருப்பினாலும் என் முகம்தான் தெரியவேண்டும்..என்ன முடியுமா..

முடியும்..எப்படி..முக்கு கடையில் 50 ரூபாய்க்கு ஒரு சமுக்காளத்தை வாங்கிக் கொள்ளுங்கள். கடைக்காரன் 80 ரூபாய் சொல்லுவான்…விடாதீர்கள்..50 ரூபாய்க்கு பேரம் பேசுங்கள்..இறங்கி வருவான். நேராக மெரினா பீச் செல்லுங்கள். நட்ட நடு இடத்தைப் பார்த்து உக்கார்ந்து கொள்ளுங்கள்..எல்லாருக்கும் கேட்கும்படி சத்தமாக “ஊழலை ஒழிப்போம்..மத்திய அரசே நடவடிக்கை எடு..ஊழல் ஒழியும் வரை சாகும் வரை உண்ணாவிரதம்” என்று அடித்தொண்டையில் இருந்து கத்துங்கள்..நன்றாக கவனியுங்கள்..”மத்திய அரசே நடவடிக்கை எடு” என்று கவனமாக சொல்லவேண்டும்..அப்போதுதான் வடஇந்திய சானல்கள் அலறியடித்துக் கொண்டுவரும். உணர்ச்சிவசப்பட்டாவது “மத்திய” அரசிற்கு பதில் “தமிழக” அரசே என்று சொல்லிவிடக்கூடாது..அப்படி உளறிவிட்டால் போச்சு..பொடா, தடா, கடா சட்டங்கள், கடுமையாக உங்கள் மேல் பாய்ந்து 2 வருடங்கள் உள்ளிருக்க நேரிடும். அதனால் வார்த்தைகளில் கவனம் வேண்டும்.

இப்படித்தான் இருக்கிறது தேசத்தின் நிலை. அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தபோதுதான், நம் இளைஞர்களுக்கு தேசபக்தி பீறிட்டுக்கொண்டு வந்தது. “ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் அன்னா ஹசாரேவுடன் கரம் கோர்ப்போம்” என்ற முழக்கம், பேஸ்புக் மற்றும் இணையதளங்களில் நொடிக்கொரு முறை ஒளிபரப்பப்பட்டது. அதென்னமோ தெரியவில்லை, நம் இளைஞர்களுக்கு, சுதந்திர தினத்தின் போது முட்டாய் கொடுக்கும்போதோ, தியேட்டர்களில் தேசியகீதம் ஒளிபரப்பபடும்போதோ, ரோஜா படத்தில் “தமிழா, தமிழா..” என்று கொடியை எரிக்கும்போது மட்டும்தான் தேசபக்தி பொத்துக்கொண்டு வருகிறது..

இதன்விளைவுதான், அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ் உண்ணாவிரதத்தின் போது புல்லரித்துப்போய் “ஊழலை ஒழிப்போம்” போன்ற வெற்று கோஷங்கள்..அடக்கொடுமையே..கோஷம்போட்டு ஊழலை ஒழிக்கமுடியுமா என்ன..அப்படி புல்லரித்து கோஷம்போட்டு, உண்ணாவிரதத்தின் முதல்வரிசையில் உக்கார்ந்து இருக்கும் இளைஞர்களிடம் கேட்டு பாருங்கள்..”எத்தனை பேர் கடந்த தேர்தலில் ஓட்டுபோட்டீர்கள்..” தொண்ணூறு சதவீதம்பேரிடமிருந்து “இல்லை” என்றுதான் பதில் வரும். அப்புறம் எப்படி வெங்காயம் ஊழலை ஒழிப்பது.

நல்லவர்களை தேர்ந்தெடுத்தாலே போதுமே, பாதி ஊழலை ஒழித்து விடலாமே..நாம் ஓட்டு போடாததால் தானே, ஊழல் அரசியல்வாதிகள் ஆட்சிக்கு வருகிறார்கள்..நாம் ஓட்டு போடாததால் தானே, கிரிமினல்கள் ஆட்சிக்கு வருகிறார்கள். ஊழலின் வேரை நன்றாக தழைக்கவிட்டு, “கிளை”யை வெட்டுவோம் என்று கூச்சல் போடுவதால் என்ன பயன், இவன் இல்லை என்றால் அடுத்தவன் வருவான். அதே ஊழலை, இன்னும் வித்தியாசமாக செய்வான். அதை ஒழிப்பதாக கோஷம் போட்டுக்கொண்டே, அன்னா ஹசாரேக்களும், பாபாக்களும். இவர்களும் ஏதோ ஊழலை நாளைக்கு ஒழித்து, சுத்தமான தேசத்தை கொண்டு வந்துவிடுவார்கள் என்று நம்பிக்கொண்டு, இன்னும் ஓட்டுபோடாத இளரத்தங்களும் முதல்வரிசையில்..

சரி..ஊழலை ஒழிக்கமுடியுமா என்று கேட்டால், முடியும் என்றே சொல்லுவேன். அது அன்னா ஹசாரே, பாபாராம்தேவ் கைகளில் இல்லை..நம் கைகளில்தான் உள்ளது. செய்த தவறை மறைக்க போக்குவரத்து காவலர்களின் கையில் நைசாக 10 ரூபாய் திணிக்கும்போதே ஊழல் ஆரம்பித்துவிடுகிறது. எங்கே கொடுக்கமாட்டோம் என்று அடம்பிடித்து அவரை ஒழுங்காக ரசீது கொடுக்க சொல்லுங்களேன். அங்கேயே, ஊழலுக்கு முதல் அடி..இப்படி ஒவ்வொருவரும் ரசீது கேட்க ஆரம்பித்தால் போதும், எந்த போக்குவரத்து போலீஸ் சைடில் காசு கேட்பார். அய்யோ 200 ரூபாய் ஆகுமே என்றால், கட்டித்தான் ஆகவேண்டும்..நாம் ஒழுங்காக போக்குவரத்து விதிகளை மீறினதற்கு தண்டனையாக இதை எடுத்துக்கொள்ளலாமே.

மேலே நான் சொல்லியது ஒரு எடுத்துக்காட்டுதான். இப்படி பல சம்பவங்கள், நம் வாழ்க்கையோடு ஒரு அங்கமாக இருக்கிறது. எல்லா ஊழல்களுக்கும் நாமே காரணமாக இருந்து விட்டு “அய்யோ 100 கோடி அடிக்கிறான். 1000 கோடி அடிக்கிறான்..” என்று கத்தி என்ன பயன். நாம்தானே அவர்களை தேர்ந்தெடுக்கிறோம்..நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் லஞ்சம் கொடுக்கமாட்டேன் என்று அடம்பிடித்துதான் பாருங்களேன்..கொஞ்சம் செலவுதான் ஆகும்..ஆகிவிட்டுதான் போகட்டுமே..ஒரு தேசமே நன்றாக இருக்குமே. ஒவ்வொரு இந்தியனும், ஊழல் செய்ய பணம் கொடுக்கமாட்டேன் என்று அடம்பிடித்தாலே, நாட்டில் ஊழல் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும்.

அப்படி இல்லையென்றால், ஒரு நாள் கூத்துக்காக, அன்னா ஹசாரேக்களும், ராம்தேவ் பாபாக்களும், செய்யும் உண்ணாவிரதத்துக்கு, புல்லரித்துக்கொண்டு போகும் இளைஞர் பட்டாளத்தை காண்பிக்கும் நியூஸ் சானல்களை, வீட்டில் பஜ்ஜி தின்றுகொண்டே பார்க்கவேண்டியதுதான்.ஊழலின் ஒரு மசுரையும் புடுங்கமுடியாது..

18 comments:

Anonymous said...

Fantastic

CrazyBugger said...

//Anonymous said...
Fantastic

Aveenga raasa corruption starting here... neengalae pathivu pottu commenting podringa paarunga..

rajamelaiyur said...

Very true statements friend . . .

rajamelaiyur said...

When we put 100% vote in this time only india will get Good politicans

அத்திரி said...

அருமையான பதிவு.........

selvarajan said...

what you are saying is very very impractical.. At least Anna and Ramdev are doing some practical things...

It seems you are writing this post to get easy attention.. cheap mentality..

Anonymous said...

Nenappu thaan polappa kedukkum. Rasa, you try this Rs.50 "samukkalam" matter and see if you are getting popular in a day. In a country of 1.3 billion the fight against corruption will have to start at the Top and to be brought to bottom; not the other way.
There is no use of people like you

bandhu said...

ஏதோ அவராவது ஏதாவது பண்றார். அவருக்கு இதன் மூலம் பிரபலம் ஆகமுடியும் என்ற காரணம் இருந்தாலும், அவர் ஏற்கனவே பிரபலமாக இருப்பதால் தான் அரசு அவர் உண்ணாவிரதத்தை கண்டு பயப்படுகிறது! அவர் கோரிக்கைகளில் முக்கியமான ஒன்று கருப்பு பணத்தை தேசிய சொத்தாக அறிவிக்க வேண்டும் என்பது. உண்மையில் அது மட்டும் முழுமையாக கடைபிடிக்கப்படுமேயானால் இந்தியாவில் உள்ள பெரும்பாலான பணம் கணக்கில் வந்து விடும். வெளிநாட்டு வங்கிகளில் தூங்கிக்கொண்டிருக்கும் கருப்பு பணம் நமது நாட்டுக்கு பயன் படும்

நம்மால் தான் எதுவும் செய்ய முடியவில்லை. செய்பவரை பாராட்டலாமே!

Anonymous said...

I agree with Selva.. The example you have given (traffic sergent) doesn't seem worthy. Better luck next time.

அவிய்ங்க ராசா said...

////////////////////////////////
Anonymous said...
Fantastic
4 June 2011 1:44 PM
CrazyBugger said...
//Anonymous said...
Fantastic

Aveenga raasa corruption starting here... neengalae pathivu pottu commenting podringa paarunga..
///////////////////////
நன்றி அனானி நண்பர்..மற்றும் நண்பர் க்ரேசி..

அவிய்ங்க ராசா said...

/////////////////////////////
என் ராஜபாட்டை"- ராஜா said...
Very true statements friend . . .
5 June 2011 1:42 AM
"என் ராஜபாட்டை"- ராஜா said...
When we put 100% vote in this time only india will get Good politicans
5 June 2011 1:44 AM
அத்திரி said...
அருமையான பதிவு.........
5 June 2011 2:05 A
/////////////////////////////
நன்றி ராஜா, அத்திரி..

அவிய்ங்க ராசா said...

//////////////////////////////
selvarajan said...
what you are saying is very very impractical.. At least Anna and Ramdev are doing some practical things...

It seems you are writing this post to get easy attention.. cheap mentality..
5 June 2011 2:28 AM
/////////////////////////////
செல்வா, கவன் ஈர்ப்பு வேண்டுமென்றால், நடிகையின் கவர்ச்சி படத்தையல்லவா போட்டிருப்பேன். லஞ்சம் தரமாட்டேன் என்பது இன்பிராக்டிகல் என்று சொல்லும் அளவுக்கு இருக்கிறதே என்பது முதல்கொடுமை..

அவிய்ங்க ராசா said...

//////////////////////////////
nonymous said...
Nenappu thaan polappa kedukkum. Rasa, you try this Rs.50 "samukkalam" matter and see if you are getting popular in a day. In a country of 1.3 billion the fight against corruption will have to start at the Top and to be brought to bottom; not the other way.
There is no use of people like you
5 June 2011 2:34 AM
/////////////////////////////
நாமே லஞ்சத்தை கொடுத்தும், வாங்கிக்கொண்டும், "லஞ்சத்திற்கு எதிரான போராட்டம்" என்பது நகைப்பாக உள்ளது. முதலில் லஞ்சம் கொடுக்கமாட்டோம் என்று உறுதி கொள்வோம்.

அவிய்ங்க ராசா said...

/////////////////////////////////
ஏதோ அவராவது ஏதாவது பண்றார். அவருக்கு இதன் மூலம் பிரபலம் ஆகமுடியும் என்ற காரணம் இருந்தாலும், அவர் ஏற்கனவே பிரபலமாக இருப்பதால் தான் அரசு அவர் உண்ணாவிரதத்தை கண்டு பயப்படுகிறது! அவர் கோரிக்கைகளில் முக்கியமான ஒன்று கருப்பு பணத்தை தேசிய சொத்தாக அறிவிக்க வேண்டும் என்பது. உண்மையில் அது மட்டும் முழுமையாக கடைபிடிக்கப்படுமேயானால் இந்தியாவில் உள்ள பெரும்பாலான பணம் கணக்கில் வந்து விடும். வெளிநாட்டு வங்கிகளில் தூங்கிக்கொண்டிருக்கும் கருப்பு பணம் நமது நாட்டுக்கு பயன் படும்

நம்மால் தான் எதுவும் செய்ய முடியவில்லை. செய்பவரை பாராட்டலாமே!
5 June 2011 3:02 AM
////////////////////////////////
பந்து உங்களிடம் எனக்கு பிடித்தது என்ன தெரியுமா..நாகரிகமாக கருத்து தெரிவிப்பது..முதலில் அதற்கு நன்றி..நான் ஏற்கனவே சொல்லியபடி, லஞ்சம் என்று பேய், முதலில் நம்மிடம்தான் உள்ளது. அதை விரட்டினாலே போதும், அரசாங்கம் மாறிவிடும். ஊழ்ல்வாதிகளுக்கு பயம் வரும். இல்லையெனில் 14 கோடி செலவு செய்து ராம்தேவ் நடத்தும் இந்த 5 ஸ்டார் உண்ணாவிரதத்தினால் ஒரு பயனும் இல்லை..

அவிய்ங்க ராசா said...

/////////////////////////
Anonymous said...
I agree with Selva.. The example you have given (traffic sergent) doesn't seem worthy. Better luck next time.
5 June 2011 11:33 AM
//////////////////////////////
மேலே சொன்னபதில்தான் உங்களுக்கு. நான் லஞ்சம் கொடுப்பேன்..ஆனால் லஞ்சத்தை எதிர்த்து போராடுவேன் என்பது நகைப்புக்குரியது..

Anonymous said...

so far what you have done other than this.

sid said...

aveenga rasa, ungal karuthu varaverkka thakkathu..atleast they show some initiatives ..cant blame them. Instead of sitting idle infront of tea shop and bluffing something..this kind of initiatives are better for future india !

அவிய்ங்க ராசா said...

/////////////////////////
Anonymous said...
so far what you have done other than this.
6 June 2011 7:08 AM
sid said...
aveenga rasa, ungal karuthu varaverkka thakkathu..atleast they show some initiatives ..cant blame them. Instead of sitting idle infront of tea shop and bluffing something..this kind of initiatives are better for future india !
/////////////////////////////
அனானி நண்பா..எதுவும் செய்யவேண்டியதில்லை..லஞ்சம் வாங்காமல் கொடுக்காமல் இருந்தாலே போதும்..

சித்..14 கோடி போட்டு என்ன ஒரு எளிமையான உண்ணாவிரதம்...))

Post a Comment