சும்மாதானே இருக்கோம்னு கொள்ளிக்கட்டையை எடுத்து சொரிஞ்சுக்கிட்டானாம் ஒருத்தன் கிறமாதிரி, பொழுதுபோகலைன்னா, குறள் டி.வி பார்க்குறத விட்டுட்டு, என் கிரகம்(சனியன், 7ஆம் இடத்துல இருக்கு போல), பொன்னர் சங்கர் ன்னு ஒருபடம் பார்த்தேண்ணே..
பிரசாந்த தளபதி கெட்டப்புல பார்த்தவுடனே, பயபுள்ளக்கு சிரிப்பு தாங்கலை. சிரிப்பை அடக்காமாட்டாம மேற்கொண்டு பார்க்க ஆரம்பிக்க, வேட்டிக்குமேலே டவுசர் போடுவாரே..யாருண்ணே அவரு..ம்..ராஜ்கிரண்..தக்காளி..செந்தமிழ்ல பேசுறப்ப, தக்காளி, சிரிப்பு பொத்துக்கிட்டு வந்துருச்சுண்ணே..கெக்கபிக்கே, கெக்கபிக்கேன்னு ஒரே சிரிப்பு, சிரிப்பு.. இதுல அவரு மீசைய தடவிக்கிட்டு “பொன்னர்…சங்கர்” ன்னு சொல்லுறப்ப..ஐயோ..இருங்கண்ணே..சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது..ஸ்..அப்பா….சிப்பு சிப்பா வந்து, கண்ணுல தண்ணியா வந்து..கடைசியில தாங்கமுடியாம, இந்த பதிவை போடுறேண்ணே..
கதையின்னு கேட்டீங்கன்னா, ஜெயா டிவில ஜாக்பாட் ப்ரோகிராம் நடிச்சுட்டு திமுகவுக்கு பிரச்சாரம் பண்ணின குஷ்புவும், “தடித்த கறுத்த தமிழச்சி” ன்னு சொல்லி இன்னும் தமிழ்படத்துல நடிச்சுக்கிட்டு இருக்குற ஜெயராமும், என்னதான் நடிச்சாலும், முன்னுக்கு வராத, நடிகர் அருண்குமாரின் அப்பாவும், நாட்டாமை படத்துல நசுங்கி போன சொம்புல பொலிச்சு, பொலிச்சுன்னு எச்சியத் துப்புற நடிகர் விஜய்குமாரின் எதிர்ப்பை மீறி கல்யாணம் பண்ணிக்கிறாங்க..
குஷ்புக்கு நிச்சயம் பண்ணி, ஜஸ்ட் எஸ்கேப் ஆன, செல்லம் பிரகாஷ்ராஜ், “அப்பாடா, தப்பிச்சோம்னு” ஓடுறத விட்டுட்டு, பயங்கரமா சதித்திட்டம் தீட்டுறாரு.. குஷ்புக்கு “பொன்னர்” “சங்கர்” ன்னு படம் பார்க்குறவியிங்க உசுரை எடுக்குறதுக்குன்னே பொறந்த டபுள் ஆக்ட் பிரசாந்த்..பைட் சீனுல கூட அர்ஜெண்டா வெளிக்கி வர்ற மாதிரியே எக்ஸ்பிரசன் குடுக்குறப்ப, நம்மளுக்கும் அர்ஜெண்டாகி, பாத்ரூம் பக்கம் ஓடுறோம். “எவனும் வெளியே போயிரக்கூடாது” ன்னு திமுகவுல இருந்து ஏற்பாடு பண்ணுன ரெண்டு பேர் அருவாளும் கையுமா, கதவுபக்கம் நிக்குறதால, பயந்துகிட்டு திரும்பவேண்டியிருக்கு.
குஷ்புவுக்கு பொறந்த ரெண்டு குழந்தைகளை காப்பாத்துறத தன் கடமையா நினைச்சுக்கிட்டுற இருக்கிற சோலையம்மா புருஷன் “ராஜ்கிரண்” தக்காளி வேட்டிய தூக்கி கட்டிக்கிட்டு ரெண்டு பேரையும் காப்பாத்தி வளர்க்குறாரு. நம்ம செல்லம் பிரகாஷ்ராஜ், பனைமர உயரத்துக்கு வளர்ந்திருக்குறவரும், ஜீவன் சாப்ட்வேர் கம்பெனி வைச்சிருக்குறவருமான, குவார்ட்டர்..சாரி..நெப்போலியனோட கூட்டு சேர்ந்துகிட்டு, நம்ம உசிரை எடுக்கிறாயிங்க..
இதுக்கு நடுவுல, “இதுதான் கடைசி படமோ” ன்னு நினைக்கிற அளவுக்கு, படத்துக்கு ம்யூசிக் போட்ட, இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் வந்து, இருக்குற கொஞ்சம் நஞ்ச உசிரையும் எடுக்க நடைபிணமா போற நமக்கு, நல்லா இளநீரில பீரு ஊத்துனமாதிரி வர்ற ரெண்டு ஹீரோயினை பார்த்தவுடனேதான் ஆக்சிஜன் கிடைக்குது.. கிடைச்ச கொஞ்சநஞ்ச ஆக்சிஜனுல எழுந்து உக்கார,நேரம் பார்த்து, கலைஞரின் வசனங்கள் கடுமையாக தாக்க, தக்காளி, உசிரு போனாலும் பரவாயில்லைன்னு தலைதெறிக்க ஓடுற அப்பாவி பயபுள்ளைங்க கண்டிப்பாக ரெட்டை இலைக்குதான் ஓட்டுப் போடுவான்..
பொன்னர் சங்கர் – தியேட்டர் பக்கம் போனா, உசிருக்கு உத்திரவாதம் இல்லை..அதிமுக அதிகவாக்கு வித்தியாசத்துல ஜெயிச்சா, இந்த படம்தான் முக்கியகாரணம்..
18 comments:
தக்காளி மலிவா கிடைக்குது ஒத்துக்கிறேன். அதுக்காக பதிவுல இவ்வளவு தக்காளியா, போட்டிருக்கவேண்டியதில்லை .
தக்காளி மலிவா கிடைக்குது ஒத்துக்கிறேன். அதுக்காக பதிவுல இவ்வளவு தக்காளிய, போட்டிருக்கவேண்டியதில்லை .
சரியான நகைச்சுவை விமர்சனம். அண்ணே நம்ம விமர்சனத்தையும் படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க...
http://ragariz.blogspot.com/2011/04/ponnar-sankar-review.html
என்னய்யா இது....
பிரிச்சு மேஞ்சுருக்கீங்க..
உங்களைச் சொல்லணும்,தாத்தா கதை வசனம் எழுதியிருக்காருன்னு தெரிஞ்சும் படம் பாக்க உக்காந்தீங்கல்ல...
சாவுங்க..
ஐயா கதை வசனத்துல ஒரு படம் வந்துச்சே,ராதிகா பாட்டி நடிச்சது,அதோட ஐயா கத வசனமுன்னா,ரொம்ப உசாரா இருந்துக்குறது என்னோட பழக்கம்..ஒரு கொள்கையாவே வச்சுருக்கேன்.
அதான் பட போஸ்டர்லேயே ‘கலைஞர் படம் நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக்கேடு’ன்னு பிரிண்ட்டு பண்ணியிருக்காய்ங்க. அதையும் மீறி படத்தை பாத்துபுட்டு ‘அய்யய்யோ காக்காவலிப்பு வந்துருச்சே, ரத்தரத்தமா போகுதே’ன்னு பொலம்புனா என்ன பண்ண முடியும்?
என்னது? ராச்சுகிரண் வேட்டி மேல டவுசர் போடுவாரா? ஓ அவரு கட்டுறது வேட்டிதானா, நான் எதோ கோவணத்துணிய கட்டுறாருன்னு நெனைச்சேன். வேட்டிய அம்புட்டு சின்னதாவா தயாரிக்கிறாய்ங்க?
Nalla vela enka urula antha padam(!) Odala. .
இப்படி, படம் காமெடியா இருக்குதுன்னு போட்டு
படத்துக்கு நீங்களே விளம்பரம் போட்டுட்டீங்களே!!]
neeye oru sombu .... unakku jalra poda naalu kooja.... podaa kena punda.....
anony comment potta Jackie valga ....
vakkli ore thakkaliyalla irukku
Anonymous said...
neeye oru sombu .... unakku jalra poda naalu kooja.... podaa kena punda.....
நான் நிணைக்கிறேன் இதை கருணாநிதியே வந்து எழுதியிருப்பாரு நிணைக்கிறேன்.
தக்காளி ... எப்படியும் ரெண்டு வாரத்துல கிழவர் டிவி ல போடுவானுங்க .. அப்ப பாத்துக்கலாம்.
அப்ப வெடிவேலுக்கு ஆப்புத்தானா?
Thanks for all your comments. Sorry the alaghi software is not working in my PC, and not able to connvey my thanks individually. Thanks for your support
இன்னிக்கி தான் ஆர்வ கோளாறுல அந்த படம் பார்த்தேன் . முடியல . ஒரு மிக சிறந்த தமிழர்க்கு பொதுவான சரித்திர கதைய மொக்க படமமாக்கி பாக்கிறவன கடுப்பு ஏத்தி இருக்க வேணாம் . நெறிய செலவு பண்ணி இருக்காங்க, ஆனா நிறைய சீன் மலயூர் மம்பட்டியான், ஜீன்ஸ் பட பிரசாந்த் அக்டிங்நு ரொம்ப கஷ்ட்டபடுத்துது . :-(
பிரசாந்த் வானத்துல கயித்த புடிச்சிகிட்டு இடுப்புல ஈரோயினை தூக்கிட்டு பறக்குற சீனு இருக்கே.. இதயம் பொங்கி இடது கண்ல ஆனந்த கண்ணீர் கொட்டி சட்டை பாக்கெட்டே ரொம்பிடுச்சி...
ரொம்ப வெறுத்து போயிருக்கீங்களே... அவ்வளவு மோசமா
Post a Comment