Saturday, 2 April, 2011

இந்தியா ஜெயித்த போது கொலைவெறியில் எழுதியது

அடங்கொய்யாலே மாப்பு..

வைச்சோமா இலங்கைக்கு ஆப்பு..

தூக்குனோம்ல வேர்ல்டு கப்பு..

எடுடா அந்த வேர்ல்டு மேப்பு..

இந்தியாதாண்டா எப்போதுமே டாப்பு

டோணி அடிச்ச சிக்சர்தாண்டா தீர்ப்பு…

தல சச்சின் மேல எங்களுக்கு ஒரு ஈர்ப்பு..

அடிச்சான்ல கம்பீர் டைம் பார்த்து ஒரு கேப்பு..

இனி வேர்ல்ட் கப்பு எல்லாம் எங்களுக்கு ஒரு சோப்பு..

அடங்ககொய்யால மாப்பு

வைச்சோமா இலங்கைக்கு ஆப்பு

ங்கொய்யால..வேர்ல்ட் கப்பு ஜெயிச்ச அஞ்சு நிமிசத்துல எழுதுறேன். இனிமேல் என்னய்யா இலக்கியத்தரம்..யப்பா..என்னா ஒரு மேட்ச்சு..நானும், ஒரு 10 பங்காளிகளும் ஒரு நண்பனின் வீட்டில் உக்கார்ந்து ஒரு பால் விடாம பார்த்தோம்..விரலை கடிச்சு துப்பாத குறைதான்…எவ்வளவு டென்சன். அவிங்களை 275 அடிக்கவிட்டப்ப எல்லாரும் நொந்து போனோம். அய்யய்யோ, எல்லாரும் கிளம்பிரலாம்னு கிளம்பும்போதுதான், சரி எதுக்கும் பார்த்துட்டு போகலாம்னு ஒருத்தன் சொன்னான். சரின்னு பார்க்க ஆரம்பிச்ச முதல் ஓவருலயே சேவாக் அவுட்..அடிவயித்துல பக்குன்னு இருந்துச்சு.. அடுத்து நம்ம தல தெண்டுல்கர் அவுட்டானவுடனே நிறைய பேரு கிளம்ப பார்த்தாய்ங்க..அவிங்களை புடிச்சு உக்காரவைச்சு ஒவ்வொரு பாலும் பார்க்க ஆரம்பிச்ச ஒவ்வொரு நொடியும் எங்களில் யாரும் இதுவரை அனுபவித்ததில்லை. ய்ப்பே..ஒவ்வொரு 4 அடிக்கும்போது நாங்க போட்ட கூச்சல் இருக்கே..பக்கத்து வீட்டுக்காரயிங்க வராத குறைதான்.

விராத் கோலியும், கம்பீரும் அவுட்டானவுடனே டென்சன் அதிகமாக, எல்லாரும் பயந்துட்டாயிங்க..ஆனா, ரொம்ப நாளா பார்மே இல்லாம இருந்த டோனி, ஆடியவிதம் இருக்குதே..யோவ் டோனி, இனிமேல் நீ விளையாடவே வேணாம்யா..இது போதும்யா..நாங்க வாழ்ந்த காலத்துல, ஒருதடவையாவது உலகக்கோப்பைய வாங்கிருவோம்னு கனவ கண்டதை பலிக்க வைச்சுட்டயா..ங்கொய்யால அதுவும் கடைசிய நீ சிக்சர் அடிச்சப்பா நாங்க போட்ட ஆட்டம் இருக்கே..ஜென்மத்துக்கும் மறக்க மாட்டோம்யா..கண்ணீரோட சொல்றோம்யா…நீ சிங்கம்யா…எங்க இருந்தாலும் நல்லா இருய்யா…

16 comments:

ஊரான் said...

துன்பக் கடலில் துவளும் இந்தியா!
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோற்றிருந்தால்....
http://hooraan.blogspot.com/2011/04/blog-post_02.html

Mahi_Granny said...

instant kavithai arumai. i felt the same (while watching the match ) as u hv written

Anonymous said...

Aha easa.. communist madiri ethavathu eluthuvannu partha... Ada poppa..

Jayadev Das said...

\\ஒவ்வொரு 4 அடிக்கும்போது நாங்க போட்ட கூச்சல் இருக்கே..பக்கத்து வீட்டுக்காரயிங்க வராத குறைதான்.\\ அவங்க நினைச்சிருப்பாங்க, அவங்க போட்ட கூச்சலில் நீங்க வராத குறைதான்னு. ஹா..ஹா...ஹா...\\யோவ் டோனி, இனிமேல் நீ விளையாடவே வேணாம்யா..\\ இந்த உலகை கோப்பை மேட்சுகளில் இறுதியாட்டம் வரைக்குமே இவரு அடிச்ச அதிக பட்ச ரன்கள் 34 தான். கடைசி மேட்சில் மட்டும் ஆடிவிட்டு அதை வச்சே இன்னும் நாலு வருஷம் இவன் ஒட்டிவிடுவான், ஹா...ஹா..ஹா.. அதுசரி, மேட்சுக்கு மின்னடி ராஜேந்தர் படம் பார்த்தீங்களா!!!

வானம் said...

கவிதைல ஒண்ணுதான் விட்டுப்போச்சு.
அது -
‘ ஏ டண்டணக்கா,
ஏ டணக்குணக்கா.....

sat said...

ஐயா, இந்தியா வென்றது சந்தோசம். ஆனால், 70 இல் இந்தியா Hockey இல் முதன்மையாக இருந்தது. இன்று அதன் நிலை என்ன? Perth நகரில் இந்தியன் ஹாக்கி டீம் வந்த போது, காப்டினிடம் கேட்டோம் எப்படி இருக்குது இந்தியாவில் ஹாக்கி என்று. அதற்கு அவர் சொன்னார், எனது ஹாக்கி uniform இன் நிலை தான் என்று கிழிந்த தனது சட்டையை காட்டினார். 1 பில்லியன் மக்கள் இருக்கும் நாடு, 14 நாடுகள் மட்டும் விளையாடும் போட்டியில் தான் தனது பெருமையை கொண்டாடுவது வேதனையானதும் வேடிக்கையானதும் ஆகும்.

அவிய்ங்க ராசா said...

///////////////////////////////
ஊரான் said...
துன்பக் கடலில் துவளும் இந்தியா!
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோற்றிருந்தால்....
http://hooraan.blogspot.com/2011/04/blog-post_02.html
2 April 2011 8:59 PM
////////////////////////////////
வருகைக்கு நன்றி..

அவிய்ங்க ராசா said...

//////////////////////////
2011 8:59 PM
Mahi_Granny said...
instant kavithai arumai. i felt the same (while watching the match ) as u hv written
2 April 2011 9:57 PM
////////////////////////////
நன்றி மஹி..

அவிய்ங்க ராசா said...

////////////////////////////
Anonymous said...
Aha easa.. communist madiri ethavathu eluthuvannu partha... Ada poppa..
3 April 2011 10:51 AM
////////////////////////////
நான் ரொம்ப யதார்த்தவாதீங்கோ..))

அவிய்ங்க ராசா said...

/////////////////////////////
Jayadev Das said...
\\ஒவ்வொரு 4 அடிக்கும்போது நாங்க போட்ட கூச்சல் இருக்கே..பக்கத்து வீட்டுக்காரயிங்க வராத குறைதான்.\\ அவங்க நினைச்சிருப்பாங்க, அவங்க போட்ட கூச்சலில் நீங்க வராத குறைதான்னு. ஹா..ஹா...ஹா...\\யோவ் டோனி, இனிமேல் நீ விளையாடவே வேணாம்யா..\\ இந்த உலகை கோப்பை மேட்சுகளில் இறுதியாட்டம் வரைக்குமே இவரு அடிச்ச அதிக பட்ச ரன்கள் 34 தான். கடைசி மேட்சில் மட்டும் ஆடிவிட்டு அதை வச்சே இன்னும் நாலு வருஷம் இவன் ஒட்டிவிடுவான், ஹா...ஹா..ஹா.. அதுசரி, மேட்சுக்கு மின்னடி ராஜேந்தர் படம் பார்த்தீங்களா!!!
3 April 2011 1:29 PM
///////////////////////////////
கண்ணா..எந்த மேட்சுல அடிச்சாங்குறது முக்கியமில்லை..கடைசியல யாரு ஜெயிக்கவைக்கிறாங்கன்னுதான் முக்கியம்..டி.ராஜேந்தர் படம் பார்த்தனானு கேட்டிங்கள்ள..இல்லீங்க சொம்பு..இது சாரி..சிம்பு படம் பார்த்தேன்..அதுதான்..ஹி..ஹி..

அவிய்ங்க ராசா said...

////////////////////////////
வானம் said...
கவிதைல ஒண்ணுதான் விட்டுப்போச்சு.
அது -
‘ ஏ டண்டணக்கா,
ஏ டணக்குணக்கா.....
3 April 2011 1:56 PM
///////////////////////////////
எடுத்துக் கொடுத்ததுக்கு நன்றிங்கோ..அப்படியே இதையும் சேர்த்துக்குங்க..

"யே..யய..யே..யே..தமிழன்..நான் தமிழன்...அப்படியே தட்டிவிட்டா ம்யூசிக்கா வரும்...ஏ டண்டனக்கா..ஏ..டனக்குனக்கா..

அவிய்ங்க ராசா said...

///////////////////////////
sat said...
ஐயா, இந்தியா வென்றது சந்தோசம். ஆனால், 70 இல் இந்தியா Hockey இல் முதன்மையாக இருந்தது. இன்று அதன் நிலை என்ன? Perth நகரில் இந்தியன் ஹாக்கி டீம் வந்த போது, காப்டினிடம் கேட்டோம் எப்படி இருக்குது இந்தியாவில் ஹாக்கி என்று. அதற்கு அவர் சொன்னார், எனது ஹாக்கி uniform இன் நிலை தான் என்று கிழிந்த தனது சட்டையை காட்டினார். 1 பில்லியன் மக்கள் இருக்கும் நாடு, 14 நாடுகள் மட்டும் விளையாடும் போட்டியில் தான் தனது பெருமையை கொண்டாடுவது வேதனையானதும் வேடிக்கையானதும் ஆகும்.
3 April 2011 7:29 PM
/////////////////////////////////
அய்யா..உலகக்கோப்பையை ஜெயித்த தருணங்களை கொண்டாடுவதற்கு கூட ஆயிரம் காரணங்களை பார்க்கவேண்டுமா...முதல்ல கொண்டாடுவோம்க..பின்னாடி மத்ததெல்லாம் பார்த்துக்கல்லாம்...

Anonymous said...

அய்யா..உலகக்கோப்பையை ஜெயித்த தருணங்களை கொண்டாடுவதற்கு கூட ஆயிரம் காரணங்களை பார்க்கவேண்டுமா...முதல்ல கொண்டாடுவோம்க..பின்னாடி மத்ததெல்லாம் பார்த்துக்கல்லாம்...

Ethe mananilaiyai Ella visayathilum edhir pakkalama

தனுசுராசி said...

உங்க பதிவ படிச்சிட்டு கொல வெறியில ஓட்டு போட்டு தாக்கிடலாம்னு தமிழ்மணத்துல போனா No Such Post-ன்னு வருது...

வெறி சேட் லா...

நிஷாந்தன் said...

//அதுவும் கடைசிய நீ சிக்சர் அடிச்சப்பா நாங்க போட்ட ஆட்டம் இருக்கே..ஜென்மத்துக்கும் மறக்க மாட்டோம்யா..கண்ணீரோட சொல்றோம்யா…நீ சிங்கம்யா…எங்க இருந்தாலும் நல்லா இருய்யா…//

ஆஹா..என்னவொரு உணர்ச்சி மயமான பதிவு. இதை அப்படியே காந்திமதி ஸ்டைலில் படித்துப் பாருங்களேன்..மெய் சிலிர்க்கிறது. ( நெசமாத்தேன்... நம்பு ராசா ! ).

sharfu said...

sangakarra said;

Sachin mattum oru century adichirundha .................
naanga than win.

bad time contiunues............................

Post a Comment