“யம்மா..நல்லா இருக்கீங்களா..”
“இருக்கேன்பா ராசா..”
“வோட்டெல்லாம் போட்டுட்டீங்கள்ள..நம்ம ஊருல யாரு வருவா,,”
“ஏதோ மாம்பழமும், ரெட்டை இலையும் நிக்குதாம்..”
“நம்ம ஊருல யாருமா ஜெயிப்பாய்ங்க..”
“நம்ம ஊருல மாம்பழம் சின்னம் யாருக்குமே தெரியாது. உதயசூரியன் நின்னா ஜெயிச்சிருக்கும். ரெட்டை இலைதான் வரும்..”
“நீங்க யாருக்கு ஓட்டு போட்டீங்க..”
“நம்ம என்னைக்கும் கலைஞருக்குதான்..”
“நம்ம வூட்டுல இருக்குற எல்லாருமா..”
“ஆமா..அண்ணன், அண்ணி எல்லாம் சேர்த்து 8 ஓட்டு கலைஞருக்குதான்..”
(DMK = 8, ADMK = 0)
==================================================================
“என்னடா மாமூ..எப்படிடா இருக்க..”
“நம்மளுக்கு என்னடா இருக்கேன்..”
“என்னடா..தேர்தல் கலக்குது போல..”
“முன்ன மாதிரி இல்லடா..தேர்தல் கமிஷன் ரொம்ப ஸ்ட்ரிக்டு..ஒரு ப்ளெக்ஸ் பேனர், தோரணம்..ம்..ஹூம்..எதுவுமே இல்லை..வெறிச்சோடி கிடக்குது..”
“உங்க வீட்டுல யாருக்கு ஓட்டு..”
“இரட்டை இலைதான்a..”
“வணக்கம் தம்பி..அப்பா உங்ககிட்ட பேச சொன்னாங்க..”
“அது கிடக்கு தம்பி..யாரு ஜெயிச்சாலும் கொள்ளைதான் அடிக்க போறாய்ங்க..அதனாலயே நம்ம அதை கண்டுக்குறது இல்ல”
“யாருதான் ஜெயிப்பாய்ங்க..”
“தெரியல தம்பி..ரெண்டு பேருக்கும் சமமா வரும்னு சொல்ல்க்கிறாயிங்க..யாரு வந்தாலும் நம்ம பொழைப்பு மாறவா போகுது..”
“நீங்க யாருக்கு ஓட்டு போட்டீங்க,,”
“நானும் என் சம்சாரமும் காலங்காலம் காங்கிரசுதாம்பா..”கை” க்குதான் ஓட்டு
(DMK = 10, ADMK = 2)
“என்னடா..உங்க ஊருல எலக்சன் எப்படி..”
“செம காசாம்டா..அள்ளி அள்ளி கொடுத்துருக்காயிங்களாம்..”
“உங்க ஏரியா நிலவரம் எப்படி..”
“நம்ம ஊருப்பக்கம் எப்போதுமே ரெட்டை இலைக்கும் காங்கிரசுக்கும்தான் போட்டி..எங்க வீட்டுல உள்ள 4 ஓட்டுமே ரெட்டை இலைக்குதான்..அவிங்களும் கொஞ்சநாளைக்கு சம்பாதிக்கட்டுமே..”
(DMK = 10, ADMK = 6)
திமுக கூட்டணி = 10 அதிமுக கூட்டணி = 6
13 comments:
அவசரம்: ராஜபட்சேவை தண்டிக்க உதவுங்கள்
http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_16.html
(இது TIME கணிப்பு அல்ல)
எப்படி நீங்க அவிங்கக்கிட்ட காசு வாங்கிட்டீங்களா? நீங்களுமா?
ஏண்ணே..... இப்பிடித்தான்... சர்வேன்னு சொல்லி இந்த பத்திரிக்ககாரைங்க எல்லாம் செயலலிதா வரும்னு சொல்றாங்களோ..
என்னது இது?
சர்வே சொல்லி இப்படி பீதியை கிளப்புறீங்க?
எனக்கு தெரிஞ்சுபோச்சு. எலக்சனுக்கு ரெண்டு நாள் முன்னால தயாநிதி மாறன் அனுப்புன 200கோடி டாலர் வாங்குன ஆளு நீங்கதானே?
//நம்ம ஊருல மாம்பழம் சின்னம் யாருக்குமே தெரியாது. உதயசூரியன் நின்னா ஜெயிச்சிருக்கும். ரெட்டை இலைதான் வரும்..”
“நீங்க யாருக்கு ஓட்டு போட்டீங்க..”
“நம்ம என்னைக்கும் கலைஞருக்குதான்..”
“நம்ம வூட்டுல இருக்குற எல்லாருமா..”
“ஆமா..அண்ணன், அண்ணி எல்லாம் சேர்த்து 8 ஓட்டு கலைஞருக்குதான்..”//
As per comment there is no SUN. then how to vote to SUN.
So all 8 votes are sellatha ottu.
Final Result
திமுக கூட்டணி = 10-8=2 அதிமுக கூட்டணி = 6
:-)
///////////////////////////
அருள் said...
அவசரம்: ராஜபட்சேவை தண்டிக்க உதவுங்கள்
http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_16.html
(இது TIME கணிப்பு அல்ல)
16 April 2011 8:21 AM
////////////////////////////
கண்டிப்பாக அருள்..
///////////////////////////////
niramilla sinthanai said...
எப்படி நீங்க அவிங்கக்கிட்ட காசு வாங்கிட்டீங்களா? நீங்களுமா?
16 April 2011 9:13 AM
//////////////////////////////////
ஆஹா..இதுக்கெல்லாம் கொடுப்பாய்ங்களா..எங்கன்னு சொன்னா நல்லா இருக்கும்..))
/////////////////////////////
Jabar said...
ஏண்ணே..... இப்பிடித்தான்... சர்வேன்னு சொல்லி இந்த பத்திரிக்ககாரைங்க எல்லாம் செயலலிதா வரும்னு சொல்றாங்களோ..
16 April 2011 10:22 AM
/////////////////////////////////
ஆஹா..ஒருவேளை அப்படியும் இருக்குமோ..??...)))
/////////////////////////
மனோவி said...
என்னது இது?
சர்வே சொல்லி இப்படி பீதியை கிளப்புறீங்க?
16 April 2011 12:18 PM
////////////////////////////
ஆஹா..இது சக்கரை இல்லையா..???
////////////////////////
வானம் said...
எனக்கு தெரிஞ்சுபோச்சு. எலக்சனுக்கு ரெண்டு நாள் முன்னால தயாநிதி மாறன் அனுப்புன 200கோடி டாலர் வாங்குன ஆளு நீங்கதானே?
16 April 2011 1:38 PM
/////////////////////////////
ஆத்தி..கோடிக்கு எத்தனை சைபருன்னு கூட தெரியாதே...))
//////////////////////////////////
K.MURALI said...
//நம்ம ஊருல மாம்பழம் சின்னம் யாருக்குமே தெரியாது. உதயசூரியன் நின்னா ஜெயிச்சிருக்கும். ரெட்டை இலைதான் வரும்..”
“நீங்க யாருக்கு ஓட்டு போட்டீங்க..”
“நம்ம என்னைக்கும் கலைஞருக்குதான்..”
“நம்ம வூட்டுல இருக்குற எல்லாருமா..”
“ஆமா..அண்ணன், அண்ணி எல்லாம் சேர்த்து 8 ஓட்டு கலைஞருக்குதான்..”//
As per comment there is no SUN. then how to vote to SUN.
So all 8 votes are sellatha ottu.
Final Result
திமுக கூட்டணி = 10-8=2 அதிமுக கூட்டணி = 6
:-)
16 April 2011 3:16 PM
///////////////////////////////
எப்பே..இது புதுகதையால்ல இருக்கு..உதயசூரியன் சின்னத்துல போட்டாயிங்கன்னு சொன்னேனா..? கலைஞருக்காக மாம்பழ சின்னத்தில போட்டாயிங்கன்னு விலாவரியா எழுதுனாத்தான் ஒத்துக்குவீங்களோ... ஆத்தி..எப்படில்லாம் சிக்க வைக்கிறாயிங்க...)))
உங்க எழுத்துமேலே கொஞ்சம் பிடிப்பு இருந்திச்சு. ஆனா இப்படி நாட்டை கொள்ளை அடிக்கிறவங்க வெல்லன்னுமின்னு ஆவலா இருக்கிறதை பார்த்தா உடல் கூசுதிண்ணே!
Post a Comment