Saturday 31 July, 2010

ஒரு நிமிடம்

“நீ எனக்கு கால் பண்ணி எவ்வளவு நாள்..சாரி..எவ்வளவு வருசம் இருக்கும்..”

“ம்…ப்ச்..இப்ப என்ன பண்ணுற…”

“ம்..வால்மார்ட்ல உனக்குதான் ப்ரூட்ஸ் வாங்கிக்கிட்டு..ஏ..என்ன வாங்கி வரச்சொன்ன..ஆப்பிளா..ஆரஞ்சா…”

“அதுக்குள்ள மறந்துட்டியா..ஆரஞ்சு..ஆப்பிள்தான் நான் சாப்பிட மாட்டேனே..”

“மறந்துட்டேன்..”

“வரவர உனக்கு ஞாபகமறதி ரொம்ப ஜாஸ்தி ஆகிடுச்சு..”

“ஆமா..எல்லாம் உன்னைக் கல்யாணம் பண்ணுனதுக்கு அப்புறம்தான்..”

“அடேங்கப்பா..இவர் பெரிய துரை..உனக்கு ஞாபக மறதி வியாதின்னு தெரிஞ்சிருந்தா உன்னைக் கல்யாணம் பண்ணியிருக்கவே மாட்டேன்..”

“ஆஹா..அப்படின்னா..நான் குதிரையில வந்து உன்னை தூக்கிட்டு போயிருப்பேன்..”

“குதிரை பாவம்டா..”

“சரி..பேச்ச மாத்தாத..நீ இனக்கு கால் பண்ணி எவ்வளவு நாள் இருக்கும்..”

“ஆமா..போடா..நான் ஆசியா கண்டத்துலயும், நீ ஐரோப்பா கண்டத்துலயும் இருக்குறோம் பாரு..இருக்குறது ஒரே வீடு..ஆபிஸ விட்டா நேரா வீட்டுலதான் வந்து இருக்க…இதுல அய்யாவுக்கு போன் வேற பேசணுமாக்கும்..”

“ப்ச்..பேசணும்..அப்பதான ஆபிஸ்ல எல்லாரும் பெருமையா பார்ப்பாங்க..பாரு இப்பதான் கல்யாணமாயிருக்கு..அமெரிக்காவுக்கு வேலை விஷயமா வந்தா கூட இன்னமும் ஹனிமூன் மூடுலதான் இருக்கான்னு..”

“ச்ச்ச்சீ..இப்படி ஒரு பெருமையா..வெட்கமா இல்லை..போடா..”

“எனக்கு எதுக்கு வெட்கம்..பொண்டாட்டி கூட பேசுறதுக்கு நான் பெருமையில்லபடணும்..சரி..நீ இல்லைன்னா விடு..எத்தனையோ பேரு.,.”

“ஓ..அய்யாவுக்கு இப்படி ஒரு நினைப்பு இருக்கோ..வீட்டுக்கு வா..சப்பாத்தி கட்டை ரெடியா இருக்கு,,,”

“ஹா..ஹா..நான் அப்பவே எடுத்து ஒளிச்சு வைச்சுட்டனே..ஹே..இரு ஒரு நிமிசம்..பில் போட்டுறேன்… ஹௌ மச்..”

“56 $”

“தாங்க்யூ..ஹேவ் அ குட் டே…”

“ஏ..லைன்னுல இருக்கியா..”

“ம்..56 $ ஆ..”

“எல்லாம் நீ தின்னுற தீனிதான்…ஹே..எனக்கு ஒரு ஆசை..கல்யாணத்துக்கு பின்னாடி நீ ஒரு தடவை கூட என் போனுக்கு கால் பண்ணினது இல்லைல..இப்ப கட் பண்ணுறேன்..கால் பண்ணுறியா..”

“ஆமா..இன்னும் பத்து நிமிசம்..வீட்டுல இருப்ப..இப்ப எதுக்கு கால் பண்ணனும்..”

“ச்…சொன்னக் கேட்கணும்..வாழ்க்கையில ஒரு தடவையாவது உங்கிட்ட இருந்து எனக்கு கால் வரணும்..”

“ம்ம்..இப்ப எங்க இருக்க..”

“கார் பார்க்கிங்க் வந்துட்டேன்..கார் எடுக்கணும்..சூப்பரா இருக்குல்ல அமெரிக்கா..எப்போதும் கார்..பெரிய பெரிய மால்ஸ்..ஷாப்பபிங்க்..லைட்டிங்க்..டாலர்..அனுபவிக்கிறோம்ல..”

“என்ன இருந்தாலும்..நம்ம ஊரு..நம்ம ஊருதான்..”

“தூக்கி குப்பையில போடுடி என் பொண்டாட்டி....அமெரிக்கா, அமெரிக்கா..தான்..சொர்க்கம்..இப்ப கட் பண்ணுறேன்..கால் பண்ணுறியா..வாவ்..உன் முதல் காலை நான் அட்டெண்ட் பண்ணப்போறேன்..…நீ கால் பண்ணுனா மட்டும் கேக்குற மாதிரி ஒரு காலர் ட்யூன் செட் பண்ணியிருக்கேன் தெரியுமா..என்ன சொல்லு..உனக்கு புடிச்ச சாங்க்..அங்காடித்தெரு பாட்டு..”உன் பேரை சொல்லும்போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்…” ஏ..ஒரு நிமிசம் இரு..யாரோ வெள்ளைக்காரன் ஏதோ கேக்குறான்..”

“……………..”

“வாட்…நோ..ஐ டோண்ட் ஹேவ் எனி டாலர்..”

“…….”

“நோ…வெயிட்..வெயிட்…டோண்ட் ஷூட் மீ..”

“-------“

ட்ட்ட்ரக்…ட்ரக்க்……ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷூட்…

“ஏ..என்னடா அங்க சத்தம்..என்ன நடக்குது..”

பீப்..பீப்…பீப்…பீப்..பீப்…

“-------------“

“-------“

“-------“

.பீப்…பீப்..வொய்ப் காலிங்க்..வொய்ப் காலிங்க்…வொய்ப் காலிங்க்…

“உன் பேரை சொல்லும்போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்…”

“-----------------------------“

“---------------------“

“---------------“

“----------“

“------“

“----“

“---“
“--“

“-“

“”

10 comments:

அப்துல்மாலிக் said...

என்னாதிது கடைசிலே புள்ளியா போட்டு... வாழ்க்கை அவ்வளவுதானா???? வாழ்க்கை புள்ளிலே அடங்கிடுச்சா

FunScribbler said...

hey very niceeeeeee!!:)))

அன்புடன் நான் said...

இதான் சொல்லுறது..... உணர்வுக்கும் உறவுக்கும் உண்மையான மரியாதை எங்கிருக்குன்னு பாத்திங்களா?

அங்க டாலர் இருக்கு ... அத அனுபவிக்க உயிர் இருக்கா!
கதை மிக இயல்பா இருக்கு பாராட்டுக்கள்.

Santhose said...

This is too much. Our desi guys always have a negative opinion abt blacks and I heared this in ny subway. They wont harm you if you refuse to pay a dollar. But our guys exagrated this too much. I asked abt this to my son who is born in india and brought up here. (He is U.S Marine reservist)

He once (when I am with him) told the guys who asked for a dollar, "Wat the F***". The beggar simply step backward and approach other desi guys.

Our desi guys are the reason (who always pay them because of their fearness)

Santoz

அவிய்ங்க ராசா said...

/////////////////////
அப்துல்மாலிக் said...
என்னாதிது கடைசிலே புள்ளியா போட்டு... வாழ்க்கை அவ்வளவுதானா???? வாழ்க்கை புள்ளிலே அடங்கிடுச்சா
31 July 2010 12:41 AM
////////////////////
வாழ்க்கையே அம்புட்டுதாண்ணே..

அவிய்ங்க ராசா said...

///////////////////////////
Thamizhmaangani said...
hey very niceeeeeee!!:)))
31 July 2010 4:09 PM
//////////////////////////
thanks...

அவிய்ங்க ராசா said...

///////////////////////
சி. கருணாகரசு said...
இதான் சொல்லுறது..... உணர்வுக்கும் உறவுக்கும் உண்மையான மரியாதை எங்கிருக்குன்னு பாத்திங்களா?

அங்க டாலர் இருக்கு ... அத அனுபவிக்க உயிர் இருக்கா!
கதை மிக இயல்பா இருக்கு பாராட்டுக்கள்.
31 July 2010 5:20 PM
/////////////////////////
நன்றி கருணாகரசு..

அவிய்ங்க ராசா said...

/////////////////////
Santhose said...
This is too much. Our desi guys always have a negative opinion abt blacks and I heared this in ny subway. They wont harm you if you refuse to pay a dollar. But our guys exagrated this too much. I asked abt this to my son who is born in india and brought up here. (He is U.S Marine reservist)

He once (when I am with him) told the guys who asked for a dollar, "Wat the F***". The beggar simply step backward and approach other desi guys.

Our desi guys are the reason (who always pay them because of their fearness)

Santoz
31 July 2010 5:28 PM
/////////////////////
சார்..முதலில். கருப்பர் இனத்தை சேர்ந்தவர் சுட்டார் என்று நான் எங்கும் சொல்லவில்லை. இது போன்ற நிக்ழ்வுகள் நிறைய நடக்கின்றன. கண்டிப்பாக என்னால் புள்ளி விவரம் தரமுடியும். எனக்கே இது நடந்திருக்கிறது. மயிரிழையில் தப்பித்தேன்..

அன்புடன் நான் said...

சார்..முதலில். கருப்பர் இனத்தை சேர்ந்தவர் சுட்டார் என்று நான் எங்கும் சொல்லவில்லை. இது போன்ற நிக்ழ்வுகள் நிறைய நடக்கின்றன. கண்டிப்பாக என்னால் புள்ளி விவரம் தரமுடியும். எனக்கே இது நடந்திருக்கிறது. மயிரிழையில் தப்பித்தேன்.. //

இதற்கான பதிலை திரு சண்ட்தோஷிடமிருந்து எதிர் பார்க்கிறேன்.

Anonymous said...

இஙக குவாட்டருக்கே கொலை பண்ணுவானுக.

Post a Comment