Saturday 19 June, 2010

ராவண் - பொகுத் அச்சா ஹே.


பொதுவாக நான் ஹிந்தி படங்கள் பார்ப்பதில்லை. திராவிட பராம்பரியத்தில் இருந்து வந்தவன் என்பதற்காகவெல்லாம் இல்லை. மொழி தெரியாமல், டவுசர் கிழிந்து விடும் என்பதால்(வாழ்க திராவிட பாரம்பரியம்)... ஹிந்திக்கும் எனக்கும் புளோரிடாவுக்கும், கலிபோர்னியாவுக்கும்..சரி..விடுங்க..சோழவந்தானுக்கும், ஆட்டையாம்பட்டிக்கும் உள்ள தூரம்... கல்லூரியில் படிக்கும் போது சேட்டு பிகர்களை பார்ப்பதற்காக
ஷெனாய் மாதிரி டிரஸ் பண்ணிக்கொண்டு "எக்ஸ்கியூஸ்மி..குச்சு, குச்சு ஹோத்தா ஹே என்று சொல்ல நினைத்து டங்க் ஸ்லிப் ஆகி கெட்ட வார்த்தையாகி வாங்கி கட்டிக்கொண்ட அனுபவங்கள் உண்டு. இன்னும் நம்பவில்லையென்றால், இந்த பதிவின் தலைப்பைப் பார்த்தாலே புரிந்திருக்கும்.

இங்கு புளோரிடாவில் ராவண் படம் ரிலீஸ் என்ற கேள்விப்பட்டு அவசரமாக சென்றவன் போஸ்டரை பார்த்தவுடன், ரஞ்சிதா இல்லாத நித்தியானந்தம் போல்
ஏமாறறம் அடைந்தேன். இது தமிழ் படம் இல்லை. ஹிந்திப்படம்..சப்டைட்டில் எல்லாம் போடுவார்கள் என்று நண்பர்கள் சொன்னவுடன் தான் நிம்மதியே வந்தது.

இப்போது விமர்சனம். மணிரத்னத்தின் கலியுக ராமாயணம். மணிரத்னத்தின் அந்தக்கால படைப்புகளை கண்டு வியந்திருக்கிறேன். அவரது, தளபதி, மௌனராகம்,
அஞ்சலி, நாயகன் படங்களை பார்த்தபோது, கமர்ஷியல் சாக்கடையிலிருந்து தமிழ்சினிமாவை மீட்டெடுக்க வந்த அவதார புருசனாகவே எனக்கு தெரிந்தார்.
ஆனால் அந்த அவதார புருஷனே "திருடா, திருடா" என்று கமர்ஷியல் சாக்கடையில் விழுந்தபோது கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. காம்ப்ரமைஸ் பண்ணாத
அடுத்த படைப்புகளான "பம்பாய், கன்னத்தில் முத்தமிட்டால், ஆயுத எழுத்து." என்று மீண்டு எழுந்தார். இப்போது ராவணன்..சாரி..ராவண்..

ஐஸ்வர்யாராயின் புருசன் அபிஷேக்பச்சன் தான் ராவணன்..ஹி..ஹி..இன்னும் பாதிப்பு போகலை....ஐஸ்வர்ராய்தான் லோகட் வெள்ளுடை அணிந்த சீதை.
நம்ம அந்நியன் அம்பி விக்ரம் தான் வில்லன் ராமன். மரத்திற்கு மரம் தாவும் பாரஸ் ஆபிசர் கோவிந்தாதான் அனுமன்.. கேங்க் ரேப் பண்ணுவதற்காக திரை உலகிற்கு
அர்ப்பணிக்கப்பட்ட பிரியாமணிதான் சூர்ப்பனகை. இப்போது கதை புரிந்திருக்குமே. கரெக்ட்..சூர்ப்பனகையை நாசம் செய்த போலீஸாரை பழிவாங்குவதற்காக
ஐஸை அல்லது ஐஸ்கட்டி போன்ற ஐஸ்வர்யா ராயை(ஏ..அந்த பூரிக்கட்டையை உள்ள வை..எத்தனை தடவை சொல்லுறது..பூரிக்கட்டையை பூரிக்கு மட்டும்
உபயோகிக்கனும்னு..) ராவணன் கடத்தி செல்கிறார். ராவண் நல்லவன் என்பதால் பதினாலு நாட்கள் சுண்டு விரல் கூட படாமல் ராமயணத்தை கட்டிக்காட்கிறார்.
இடையில் அனுமானான கோவிந்தா தூது செல்கிறார். கடைசியில் ராமன் வழக்கம்போல் சீதையை சந்தேகப்பட்டு விட தீக்குளிக்க..சாரி..டீக்குடிக்க செல்வது போல
ராவணனை பார்க்க போகிறார்..அப்போது மறந்திருந்த ராமன் மணிரத்னம் சொல்லியும் கேட்காமல்..பட்..பட்..டிஷ்யூம்..சீதையின் மேல் கொண்ட காதலுடன்
ராவண்...இருங்க..தண்ணி குடிச்சுக்குறேன்..

மணிரத்னத்திற்கு ராமன் மேல் என்ன கோபம் என்று தெரியவில்லை. மசாலா பட வில்லன் ரேஞ்சுக்கு "அவனை வெட்டுங்கடா.." என்பது போல் எடுத்திருக்கிறார்.
அடிக்கடி ராமாயணத்தை நினைவூட்டுவதற்காகவே "பத்து தலை ராவணன்.." மரத்திற்கு மரம் தாவும் அனுமன் என்று வலிய திணித்திருக்கிறார். ஆனால் மனிதர் எடுத்து
கொண்ட கடின உழைப்பை பாராட்டியே ஆகவேண்டும். ஒவ்வொரு காட்சியுலும் மணியின் கைவண்ணம் தெரிகிறது. அதுவும் மலை உச்சி, சேறு சகதி என்று உசிரை
கொடுத்து உழைத்திருக்கிறார்கள். இதை போன்று முயற்சிகளை பாராட்டி ஏற்று கொள்ளாவிட்டால், குருவி, வில்லு பார்ட் 2 வந்து உயிரை மொத்தமாக எடுத்து விடும்
அபாயம் உண்டு.

அடுத்து பாராட்டபடவேண்டியர்கள்,கேமிராமேன் சந்தோஷ்சிவன், ஆஸ்கார் தலைவன் ஏ.ஆர் ரகுமான். பின்னி பெடலெடுத்திருக்கிறார்கள். அதுவும் இயற்கை கொஞ்சும் அந்த
மலை உச்சி ஷாட்டுகள். தண்ணீருக்குள் ஐஸ்வர்யாராய் ஷாட்டுகள், ஒளிப்பதிவை அடுத்த தளத்திற்கு எடுத்து செல்கிறது(எங்க செக்கண்ட் புளோருக்கா, என்று கேட்பவர்கள்
சீதையின் சாபம் அடையக் கடவது)..பீரா, பீரா..என்று பாடல் கேட்கும்போது, கோவாலு "இங்க இருக்கு பீரு" என்று பீர்பாட்டிலை காண்பித்தபோது பற்றிக்கொண்டு வந்தது.
ஏ.ஆர் ரகுமான் உலகதரத்தை எப்போதோ அடைந்துவிட்டார் என்பது தெரியும், ஆனால் அதை மெயின்டெயின் பண்ணுகிறார் என்பது இந்த படத்தை பார்த்தால் தெரியும்.
இசை அன்னை நமக்கு கொடுத்த வரம் ஏ.ஆர் ரகுமான்..படம் முடிந்து வரும்போது கோவாலிடம் "கேமிரா சூப்பருல்ல" என்றபோது "என்னடா ராசா..படம் முழுக்க கவனமா
பார்த்தேன் ஒரு எடத்துல கூட கேமிராவை காமிக்கவில்லையே" என்றபோது கோவாலுவின் குழந்தை மனதை கண்டு புளகாகிதாம்..சாரி..புளிகாகிதான்..ஐயோ..புளங்காகிதம்
அடைந்தேன்.

அடுத்து ராவண் அபிஷேக் பச்சன்..பாவம் புள்ள ரொம்ப கஷ்டப்பட்டிருக்கு..சேறு, சகதியுமாக புள்ளைகளை பார்த்தபோது "பாவம்..யாரு பெத்த புள்ளைகளோ" என்று பக்கத்தில்
உக்கார்ந்திருந்த வெள்ளைக்கார தாத்தா பர்கரை மென்று கொண்டு கார்த்திக் குரலில் சொன்னபோது கண்கலங்கியது. அடுத்த பச்சை மண்ணு ஐஸ்வர்யாராய்..புள்ள..
என்னாம நடிச்சிருக்கு..ஆனால் விக்ரம் ஐஸ்வர்யாராயை கட்டிபிடிக்கும்போது அபிஷேக் பச்சனுக்கு வரவேண்டிய புகை, தியேட்டரில் உக்கார்ந்திருந்த எல்லார் காதிலும் வந்ததை
பார்த்தபோது அவருடைய அழகின் வீச்சு தெரிந்தது. இதிலிருந்து ஒரு பயபுள்ளை கூட ஐஸின் நடிப்பை பார்த்திருக்காது(நான் உள்பட) என்பது திண்ணம். விக்ரம் தனக்கு கொடுத்த
வில்லன் கேரக்டரை சரியாக செய்து எல்லாரிடம் வாங்கி கட்டிக்கொண்டார்..ஆனால் மனசாட்சியே இல்லாத அந்த கேரக்டர், மணிரத்னத்தின் குரூர படைப்பு. வழக்கம்போல்
பிரியாமணி, ஷாப்பிங்க் போவது போல கேங்க் ரேப் ஆகி இறந்து போய் பரிதாபத்தை கட்டி கொள்கிறார். கோவிந்தா அடிக்கடி மரத்திற்கு மரம் தாவி தான் அனுமன் என்பதை
நினைவுபடுத்துகிறார்.

ராமாயணத்தை காபி அடித்திருந்தாலும், இது போன்ற படைப்புகள்தான் இந்திய சினிமாவின் ஆணிவேர். இந்திய சினிமாவை வேறு பாதைக்கு எடுத்து செல்ல உதவும் பாலம்.
மணிரத்னத்தின் உழைப்பு ஒவ்வொரு பிரேமிலும் ஜொலிக்கிறது. எடுத்து கொண்ட முயற்சிக்காக கண்டிப்பாக பார்த்து பாராட்டவேண்டிய படம்.

முடிவாக ராவண், என்னுடைய இந்தியில் சொல்வதென்றால்,,..."பொகுத் அச்சா ஹே..."

18 comments:

Anonymous said...

குருவி, வில்லு பார்ட் 2 வந்து உயிரை மொத்தமாக எடுத்து விடும்//

ஐய்யோ. ,வேண்ண்ண்ண்ண்ண்ண்ண்டாம்

ராம்ஜி_யாஹூ said...

even it is free, I dont want to watch. I dont have patience to watch prithiviraj, aishwarya rai for 2 .30 hrs.

I will watch priyamani related scenes only in net.

taaru said...

ராவண் - ராமாயணம்; சரி ..
அப்போ ராவணன் - ? சந்தனக் காடு[title courtesy: மக்கள் டிவி] -part II [வாழ்க வீரப்பன்,தேவாரம் & மணி சார்]
அந்த பரதநாட்டிய பாடல் ரும்போ [thanks Gowthami] நல்லா கொரியோ [choreography யின் short form] பண்ணி இருந்தாங்கள்ள அண்ணே? [youtubeல பாத்தேன்] என்னா அழகு .. நான் dance அ சொன்னேன்...!!!

அமுதா கிருஷ்ணா said...

ஹிந்தி தமிழ் இரண்டும் பார்க்கணும்.நல்ல விமர்சனம்..

அவிய்ங்க ராசா said...

//////////////////////////
மயில் said...
குருவி, வில்லு பார்ட் 2 வந்து உயிரை மொத்தமாக எடுத்து விடும்//

ஐய்யோ. ,வேண்ண்ண்ண்ண்ண்ண்ண்டாம்
19 June 2010 12:21 AM
//////////////////////////
நன்றி மயில்..கடவுள் அந்த அளவுக்கு சோதிக்க மாட்டார்..))

அவிய்ங்க ராசா said...

///////////////////////////
ராம்ஜி_யாஹூ said...
even it is free, I dont want to watch. I dont have patience to watch prithiviraj, aishwarya rai for 2 .30 hrs.

I will watch priyamani related scenes only in net.
19 June 2010 12:29 AM
///////////////////////////
நல்லாத்தாங்க இருக்கு..

அவிய்ங்க ராசா said...

//////////////////////////
taaru said...
ராவண் - ராமாயணம்; சரி ..
அப்போ ராவணன் - ? சந்தனக் காடு[title courtesy: மக்கள் டிவி] -part II [வாழ்க வீரப்பன்,தேவாரம் & மணி சார்]
அந்த பரதநாட்டிய பாடல் ரும்போ [thanks Gowthami] நல்லா கொரியோ [choreography யின் short form] பண்ணி இருந்தாங்கள்ள அண்ணே? [youtubeல பாத்தேன்] என்னா அழகு .. நான் dance அ சொன்னேன்...!!!
19 June 2010 12:43 AM
///////////////////
ஆஹா..நீங்க ஒரு பல்கலைக்கழகமா இருக்கீங்களேப்பூ...)))

அவிய்ங்க ராசா said...

////////////////////////
2010 12:43 AM
அமுதா கிருஷ்ணா said...
ஹிந்தி தமிழ் இரண்டும் பார்க்கணும்.நல்ல விமர்சனம்..
19 June 2010 1:01 AM
//////////////////////
நன்றி அமுதா..

இளைய கவி said...

हः जी रावण बगुथ मूवी जी , अप्प कहाँ येया मूवी धिकया ? रोम्बा नल्ला विमर्चानाम बस !

இளைய கவி said...

हः जी रावण बगुथ मूवी जी , अप्प कहाँ येया मूवी धिकया ? रोम्बा नल्ला विमर्चानाम बस !

எம்.எம்.அப்துல்லா said...

//மொழி தெரியாமல், டவுசர் கிழிந்து விடும் என்பதால்(வாழ்க திராவிட பாரம்பரியம்)...

//

அடடா! ஹிந்தி தெரியாம நீங்க சாப்பாட்டுக்கே சிரமப்படுறீங்கன்னு நினைக்கையில ரொம்ப வருத்தமா இருக்கு.

அவிய்ங்க ராசா said...

இளைய கவி அண்ணா..ஏன் இந்த கொலைவெறி..))

அப்துல்லா அண்ணே..ஆமாண்ணே..என்னா இருந்தாலும் தமிலை..சாரி..தமிழை விட்டு கொடுக்கமாட்டோமில்ல..))

எம்.எம்.அப்துல்லா said...

ராசாண்ணே,

இதே வேற ஆளா இருந்து இருந்தா நான் இந்த கமெண்டை போட்டு இருக்க மாட்டேன். நீங்கங்குறதாலதான் போட்டேன் :)))

SHANTHINI said...

(ஏ..அந்த பூரிக்கட்டையை உள்ள வை..எத்தனை தடவை சொல்லுறது..பூரிக்கட்டையை பூரிக்கு மட்டும்
உபயோகிக்கனும்னு..)
நெறைய அனுபவம் போல!!!!!!!!!

வால்பையன் said...

தல உங்க போன் நம்பர் வேணுமே!

9994500540

ஒரு எஸ்.எம்.எஸ் ப்ளீஸ்!

இளைய கவி said...

வால்பையன் said...
தல உங்க போன் நம்பர் வேணுமே!

9894916242

ஒரு எஸ்.எம்.எஸ் ப்ளீஸ்

அவிய்ங்க ராசா said...

அப்துல்லா..கண்டிப்பா எழுதலாம்..))
ஆமாங்க சாந்தினி..உங்க வீட்டுல எப்படி?
வால்பையன், இளையகவி..நன்றி..கண்டிப்பாக மெசெஜ் செய்கிறேன்...

வெடிகுண்டு வெங்கட் said...

மக்களே,
நிரம்ப நாட்களாக நானும் இந்த ஒலக சினிமா விமர்சனம் எதையாவது எழுதணும் என்றே நினைத்துக் கொண்டு இருந்தேன். இப்போது ஆரம்பித்தும் விட்டேன். இனிமேல் நான் ரசித்த ஒலக சினிமா காவியங்களை உங்களுக்கு பகிரவும் முடிவெடுத்துவிட்டேன்.

இந்த வரிசையில் முதல் படமாக ஓல்ட் டாக்ஸ் Old Dogs 2009 என்ற படத்துடன் ஆரம்பித்துள்ளேன். இந்த படத்தை பொறுத்த வரையில் இந்த படத்தின் இயக்குனர் ஒரு முக்கிய காரணம். மேலும் படிக்க இங்கே செல்லவும்:

வெடிகுண்டு வெங்கட்டின் ஒலக சினிமா

Post a Comment