இந்த வார கசப்பு
வேறு என்ன பதிவுலகம்தான். கடந்த ஒரு வாரமாக பயங்கர அடிதடி..பதிவுலகம் அமைதியாக இருக்க நாம் பிரார்த்தனை..யோவ்..யாருய்யா பேசிக்கிட்டு இருக்கும்போது கல்லைக் கொண்டி எறியுறது…என்னது நான் அல்லக்கையா..நீதான்யா அல்லக்கை..நோ..நோ..நோ பேட் வேர்ட்ஸ்….நோ…ஒன்லி பூட்ஸ்..யூ மீன்ஸ் வேஸ்ட்லேண்ட்….ஓ காட்..ஹே….மை இமேஜ் டோட்டல் டேமேஜ்..மீ பதிவர் நோ..ஐ கம் ஜஸ்ட் பார் பொழுதுபோக்கிங்….மீ கோ..பதிவர் கம்ஸ்..
இந்த வார சிரிப்பு
வேறு யாரு..சாரு நிவேதிதாதான்..போன வாரம் நீயா நானாவில் சாருவைப் பார்க்க கஷ்டமாக இருந்தது. வேறு வழியில்லாமல் மன்னிப்புக்கேட்டார்..அல்லது மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டார்..நான் ஏற்கனவே சொல்லியபடி, நீயா நானா, நிகழ்ச்சி, ஜோடிக்கப்பட்ட ஒன்று. என் நண்பர்கள் பலர் அதில் கலந்து கொண்ட அனுபவம் ஒன்று. அதை நடத்துபவர் கீ கொடுக்கப்பட்ட ஒரு பொம்மை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். யாராவது மாட்டினால் அழவைத்துவிட்டு அதை அடிக்கடி டிரெயிலரில் போட்டு நிகழ்ச்சியைப் பிரபலபடுத்திவிடுவார்கள். சாரு அதில் மாட்டிக்கொண்டது துரதிருஷ்டம்தான்.
இந்த வார துணைநடிகர்கள்
எதேச்சையாக விஜய் டீ.வி அவார்ட்ஸ் பார்க்கநேர்ந்தது. போனவருடம் சிறந்த நடிகர்களை விட சிறந்த துணை நடிகர்களே அதிகம். என்னை மிகவும் கவர்ந்தவர்களும் அவர்களே. அதிலும், நாடோடிகள் படத்தில் வரும் காதுகேட்காத கேரக்டரில் வரும் பரணி, சிறந்த கண்டுபிடிப்பு. கலக்கியிருப்பார். நான் கடவுளில் வரும் அனைத்து கேரக்டர்களின் நடிப்பும் சிறப்பு. ரேணிகுண்டாவில் வரும் அந்த சிறுவனின் நடிப்பும் பிரமாதம். என்னை விருது கொடுக்க சொன்னால் கீழ்கண்டவாறுதான் கொடுப்பேன்.
1. சிறந்த நடிகர் – ஆர்யா(நான் கடவுள்)
2. சிறந்த நடிகை – பூஜா(நான் கடவுள்)
3. சிறந்த புதுமுக நடிகை – அனன்யா(நாடோடிகள்)
4. சிறந்த கேமிராமேன் – ஈரம் படத்தின் கேமிராமேன்
5. சிறந்த புதுமுக நடிகர் – விமல்(பசங்க)
6. சிறந்த டைரக்டர் – பாண்டியராஜ்(பசங்க)
7. சிறந்த திரைக்கதையாசிரியர் – சமுத்திரக்கனி(நாடோடிகள்)
8. சிறந்த குணசித்திர நடிகர் – பரணி(நாடோடிகள்)
9. சிறந்த குணசித்ர நடிகை – அபிநயா(நாடோடிகள்)
10. சிறந்த வில்லன் – நான் கடவுளில் பயமுறுத்துபவர்
11. சிறந்த வில்லன் சிறப்புப் பரிசு – நந்தா(ஈரம்)
12. சிறந்த படம் – பசங்க
13. சிறந்த நகைச்சுவை நடிகர் – சந்தானம்(சிவா மனசில சக்தி)
14. சிறந்த பாடலாசிரியர் – நா.முத்துக்குமார்(சிவா மனசில சக்தி)
15. சிறந்த பாடகர் – கார்த்திக்(விழி மூடி யோசித்தால்)
16. சிறந்த பாடகி – அனுராதா ஸ்ரீராம்(லேசா பறக்குது)
17. சிறந்த இசை அமைப்பாளர் – ஹாரிஸ் ஜெயராஜ்
18. சிறந்த கண்டுபிடிப்பு – தமன்
19. சிறந்த துள்ளலிசை பாடல் – ஆத்திச்சூடி(த.நா), கரிகாலன்(வேட்டைக்காரன்)
20. சிறந்த மெலோடி – நான் போகிறேன் மேலே மேலே – நாணயம்
லேசா பறக்குது – வெண்ணிலா கபடி குழு
மழை வருதே – பசங்க
விழி மூடி யோசித்தால் – அயன்
மழையே, மழையே – ஈரம்
ஒரு சின்னத்தாமரை - வேட்டைக்காரன்
21. சிறந்த எடிட்டிங்க் – ஈரம் படத்தின் எடிட்டர்
22. சிறந்த டான்ஸ்மாஸ்டர் – ஷோபி(ஆத்திச்சூடி)
23. சிறந்த ஸ்டண்ட் மாஸ்டர் – நான் கடவுள் ஸ்டண்ட் மாஸ்டர்
24. சிறந்த டீம் ஒர்க் – நாடோடிகள் படக்குழு
ஏதோ எனக்கு தெரிஞ்சது!!!!
இந்த வார கொடுமை
மங்களூர் விமானவிபத்து. கேள்விப்பட்டதிலிருந்து நெஞ்சு பதறுகிறது. எத்தனை உயிர்கள்.எத்தனை குடும்பம். எத்தனை கனவுகள். அத்தனையும் ஒரு நிமிடத்தில் பஸ்பமாகிவிட்டது. அனைத்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் என்னுடைய அனுதாபங்களும், ஆறுதலும்..எதிர்காலத்தில் இதுபோல விமானவிபத்து நடக்காமல் இருக்க அரசு ஆவண செய்யவேண்டும்
இந்த வார சாப்பாட்டுக்கடை
11 comments:
// அதென்ன பேசிக்கிட்டு இருக்கும்போது கை நீட்டுற பழக்கம்..))) //
Hahaha....
cameraman - மனோஜ் பரமஹம்சா
villain - ராஜேந்திரன்.
இந்த வார சிரிப்பு இன்னும் பாக்கல.. பாத்துட்டு அப்புறம் அத பத்தி பேசுவோம்..
சூசு - தாகம் தனிஞ்சுடுத்து..
கரெக்டா நீங்க அமெரிக்க போன உடன் வலையுலகில் கலகம் வெடித்து இருக்கிறதே இதன் பின்னால் நீங்கள் இருப்பதாக ஒரு வதந்தி நிலவுகிறதே உண்மைங்களா ராசா
ஜூஸ் சுவை மிக அருமை.
நல்லா இருக்கு உங்க ஜூஸ். விருதுகள் குறித்த பகிர்வுக்கு நன்றி. KFC, Mc Donald க்கே இங்க முடியல... இதுல Burger King வேறயா அவ்வ்வ்வ்வ்
mail me
awards, right selection....bt
''பீசா ஹட் ‘’ ஐ விட்டுட்டீங்களே .
Burger King chennai-ku vanthacha...enakkku sollave illai !
nice mix! lesa parakkudhu paattu anuradha sriram illa.. chinmayee!
நன்றி விஜய் ஆனந்த்
நன்றி தாரு
ஆஹா... உடன்பிறப்பு அண்ணே..இது யாரு கிளப்புறது..)))
நன்றி வெறும்பய..
நன்றி எட்வின்..தமிழனா பொறந்துட்டு இதுக்கெல்லாம் பயந்துட்டா எப்படி..)))
ரம்யா கண்டிப்பா.
நன்றி சாந்தினி
ஜெய்லானி..பீசா ஹட் எனக்கு பிடிக்காதுண்ணே..
பாபு..இது அமெரிக்காவுல
நன்றி ராஜி..
Post a Comment