Sunday, 11 April 2010

பதிவர் சந்திப்பு அனுபவங்கள்

லக்கிலுக் பதிவர் சந்திப்புக்கு இன்று அழைத்திருந்தார். போன தடவை பதிவர் சந்திப்பு கொடுத்த ஏமாற்றங்களால் இந்த முறை போகலாமா வேண்டாமா என்ற தயக்கம் நிறைய இருந்தது. 5 மணிக்கு என்றதால் 4 மணிக்கு மனைவியை எழுப்ப சொல்லி குட்டி தூக்கம் போட்டேன்.

ஆளைக் கொல்லும் வெயில், மெரினா பீச் டிராபிக் இவற்றையெல்லாம் தாண்டி காந்தி சிலையை அடைவது, ஏதோ சிந்துபாத் பயணம் போல் இருந்தது. அங்கு சென்று பார்த்தால் யாரையும் காணவில்லை. இடம் மாறி வந்துவிட்டோமா, அல்லது 11 ஆம் தேதியோ என்ற சந்தேகம் தோன்றியது. சரி யாரிடமாவது கேட்போமா என்று பார்த்தால் எல்லாரும் கொலைவெறியோடுதான் திரியிறாயிங்க. தள்ளுவண்டியில் சுண்டல் விற்கும் நண்பர் ஒருவரிடம் கேட்டேன்.

“இன்னாப்பா..இன்னா வேணும்..சுண்டலா…”

“இல்லைண்ணே..இங்க பதிவர் சந்திப்பு..”

“அய்யே..பதிவரா..அப்படிண்ணா…”

“இல்லைண்ணே..இண்டெர்நெட்டுல எழுதுவாயிங்களே..அவிங்க..”

“இன்டெர்நெட்டா..எனக்கு குத்துவெட்டுதான் தெரியும்(ஆத்தாடி..)..போவியா..நானே காலையிலிருந்து ஒன்னும் விக்கலைன்னு கொலைவெறியா இருக்கேன்..”

இதுக்குமேல கேட்டா, காலையில நம்ம போட்டோ தினத்தந்தில வந்திரும்குறதால அங்கிருந்து எஸ்கேப் ஆகி, ஒரு கடையில் டீ குடிக்க கிளம்பினேன். டீ குடித்து விட்டு காந்தி சிலைக்கு வந்தால் என்ன ஒரு ஆச்சர்யம்..அனைத்து பதிவர்களும் வந்திருந்தார்கள்.

அதைவிட ஆச்சர்யம் எல்லோரும் சினேகமாக சிரித்தார்கள். சந்தோசமா இருந்தது. இந்த முறை பதிவர் சந்திப்பு முறையான கோ-ஆர்டினேசனோடு நடந்தது உண்மையிலேயே உலக அதிசயமாக இருந்தது. சண்டை துளியளவும் இல்லை. முக்கியமாக குரூப்பாக சென்று யாரும் பேசவில்லை.

அனைவருக்கும் பேச வாய்ப்பளிக்கப்பட்டது. என்னால் நம்பவே முடியவில்லை. எவ்வளவு சந்தோசமாக, இருக்கிறார்கள் பதிவர்கள். பின்பு ஏன் தேவையில்லாத சண்டை. “கடவுளே..பதிவுலகம் இப்படியே இருந்துவிடக்கூடாதா..” என்று வேண்டிக்கொண்டேன்.

லக்கிலுக்தான் கோஆர்டினேட் பண்ணினார்..மிகவும் நகைச்சுவையாக ஆரம்பித்தார்..

"அழைப்பை ஏற்று அனைவரும் வந்ததற்கு நன்றி. நாம் எல்லோரும் இன்னும் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதற்கு இதுவே சான்று..”

‘ஏ…எப்போதும் ஒற்றுமையாத்தான்பா இருக்கோம்..சும்மா எப்பயாவது சண்டை போடுறது பொழுது போகுறதுக்குத்தான்..”

என்று உண்மைத்தமிழன் காதுகுளிர சொல்லி, லக்கிலுக்கின் தோளின் மேல் நட்பாக கை போட்டார்..கூடவே அதிஷாவும் சேர்ந்து கொள்ள, ஒரு “தளபதி” படம் பார்ப்பது போல் இருந்தது..

இந்த நேரத்தில் உண்மைத்தமிழன் அண்ணாச்சி ஒரு சந்தோசமான தகவலை சொன்னார்..இனிமேல் பத்து பக்கம் மேல் எழுதமாட்டாராம்..எல்லார் வயிற்றிலும் பீர் வார்த்த மாதிரி இருந்தது.

கேபிள் சங்கர் இன்னும் இளமையாக வந்திருந்தார்..உண்மத்தமிழன் சபதத்தைப் பார்த்து “நானும் இனிமேல் கொத்து புரோட்டாவில், ஏஜோக் எழுத மாட்டேன்..” என எனக்கு அழுகையே வந்து விட்டது. ஜாக்கிசேகர் இந்தமுறை கேமிரா இல்லாமல் வந்திருந்தார்..கூலிங்கிளாஸ் கூட இல்லாமல் வந்திருந்துதான் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.

அன்றைக்கு நிகழ்ச்சியின் ஹைலைட்டே பெரியவர் டோண்டு அவர்கள் நோட்புக் இல்லாமல் வந்திருந்து அனைத்து பதிவர்களின் பேச்சுக்களையும் பொறுமையாக கவனித்தார்…

யப்பா..என்னையே நான் கிள்ளிப்பார்த்துக் கொண்டேன். புதிய பதிவர்கள் அனைவருக்கும் பேச வாய்ப்பளிக்கப்பட்டது. முக்கியமாக பிரபல பதிவர்கள், புதிய பதிவர்களிடம் சந்தோசமாக பேசிக் கொண்டிருந்தது கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது..

நான் இன்னும் வியந்தது, கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது ஒரு பதிவர் கூட டீ குடிக்க போகவில்லை. முக்கியமாக பதிவர் கார்க்கி ஒரு இடத்தில் மட்டுமே அமர்ந்திருந்தார்..இங்கும், அங்குமாக அவர் நடக்காதது மற்றுமொரு இன்ப அதிர்ச்சி. இன்னொரு அதிர்ச்சி நண்பர் நர்சிம்..”வாட் இஸ் திஸ்..எல்லாரும் கவனிங்க..கீப் கொயட்..” என்று ஆங்கிலத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்துவார் என்று பார்த்தால் மனிதர் முழுவதும் தமிழில்தான் பேசினார்..

ஆனால் இந்தமுறை முன்வரிசையில் உட்கார எல்லா பதிவர்களும் பயந்ததுதான் ஒரு மாதிரியாக இருந்தது..

யாருண்ணே..பேசிக்கிட்டு இருக்குறப்ப மூஞ்சியில தண்ணி ஊத்துறது. அதுவும் சுடுதண்ணியை..ஆஹா..எல்லாம் கனவா…

“ஏங்க..எந்திரிங்க..அது என்ன தூக்கத்தில அப்படி ஒரு சிரிப்பு..சந்தோசம்..ஏதாவது நல்ல கனவு கண்டீங்களா..”

“ஆமாண்டி..பதிவர் சந்திப்பு அமைதியா நடந்தது மாதிரி கனவு தெரியுமா…ஒரு சண்டை கூட இல்லைடி..எல்லாருக்கும் பேசவாய்ப்பு..புதிய பதிவர்களை உற்சாகப்படுத்துதல்ன்னு…சூப்பர் கனவுடி…””

“சரி..4 மணியாகிடிச்சு..பதிவர் சந்திப்புக்கு போகலையா…”

“அய்யோ வேணாண்டி..இதெல்லாம் கனவாகவே இருக்குட்டும் நேருல போய் இந்த அருமையான கனவை கெடுத்துக்க விரும்பலை..அப்படியே போனாலும் நான் போயி ஒரு ஓரமா உக்கார்ந்து இருப்பேன்..மைக் கிடைக்கிறவியிங்க எல்லாம் பேசிட்டு சண்டை போட்டுட்டு ஆளுக்காளு திட்டி கடைசியாக ஒரு பதிவைப் போடுவாயிங்க….நான் டைரக்டா பதிவையே படிச்சிக்கிறேன்..”

“என்னமோ பண்ணி தொலைங்க….சரி..சும்மாதானே உக்கார்ந்து இருக்கீங்க..அந்த அடுப்புல சாம்பார் கொதிக்குது பாருங்க..கிண்டி விடுறீங்களா..”

பேசாம பதிவர் சந்திப்புக்கு போயிருக்கலாமோ….

32 comments:

சரவணகுமரன் said...

:-)

Unknown said...

அண்ணே நானும் போகலண்ணே...
அங்க போய் மொக்க போடுறதுக்கு,
சாம்பார் கிண்டலாம் ...

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-)))

செந்தில் நாதன் Senthil Nathan said...

:-)

தேவன் மாயம் said...

“என்னமோ பண்ணி தொலைங்க….சரி..சும்மாதானே உக்கார்ந்து இருக்கீங்க..அந்த அடுப்புல சாம்பார் கொதிக்குது பாருங்க..கிண்டி விடுறீங்களா..”///

நல்லா கிண்டிவிட்டிருக்கீங்க!!

dondu(#11168674346665545885) said...

//அன்றைக்கு நிகழ்ச்சியின் ஹைலைட்டே பெரியவர் டோண்டு அவர்கள் நோட்புக் இல்லாமல் வந்திருந்து அனைத்து பதிவர்களின் பேச்சுக்களையும் பொறுமையாக கவனித்தார்…//
நிச்சயமா நோட்புக்கோடத்தான் போனேன், ஆனாக்க எல்லோரையும் பொறுமையா கவனிச்சது என்னவோ நிஜமே. அப்போத்தானே பின்னாலே பதிவு போட முடியும்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

தமிழ் அமுதன் said...

;;;))))))

CrazyBugger said...

ithuellam oru pollappah?

அக்னி பார்வை said...

:)))))))))))))))

ஜெய்லானி said...

//யாருண்ணே..பேசிக்கிட்டு இருக்குறப்ப மூஞ்சியில தண்ணி ஊத்துறது. அதுவும் சுடுதண்ணியை..ஆஹா..எல்லாம் கனவா//

இவ்வளவு அழகா நீங்க சொல்லும் போதே நினைச்சேன். அது சரி பகல் கனவா???

//நான் டைரக்டா பதிவையே படிச்சிக்கிறேன்..”//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ilavanji said...

// ஏங்க..எந்திரிங்க.. தொலைங்க…இருக்கீங்க..பாருங்க.. //

//ஆமாண்டி..இல்லைடி..கனவுடி…வேணாண்டி.. //

ஏங்க இப்படி? :)

Jackiesekar said...

வரவே இல்லை அதுக்கு இத்தனை அலம்பளா??? சரி சொன்ன நேரத்துக்கு உங்க வீட்ல எழுப்பி விடுறாங்களா? கொடுத்து வச்ச ஆள்யா நீர்...

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

:))

Unknown said...

:-)

அவிய்ங்க ராசா said...

///////////////////////
சரவணகுமரன் said...
:-)
10 April 2010 9:25 PM
///////////////////////

நன்றி சரவணகுமரன்..

அவிய்ங்க ராசா said...

/////////////////////////
கே.ஆர்.பி.செந்தில் said...
அண்ணே நானும் போகலண்ணே...
அங்க போய் மொக்க போடுறதுக்கு,
சாம்பார் கிண்டலாம் ...
10 April 2010 9:27 PM
/////////////////////////
ஆஹா…அங்கேயும் இதை கதைதானா..))

அவிய்ங்க ராசா said...

///////////////////////
T.V.ராதாகிருஷ்ணன் said...
:-)))
10 April 2010 9:32 PM
செந்தில் நாதன் said...
:-)
10 April 2010 9:33 PM
சென்ஷி said...
:-)
////////////////////
இம்புட்டு ஸ்மைலியா…நன்றீங்கண்ணா..))

அவிய்ங்க ராசா said...

////////////////////
தேவன் மாயம் said...
“என்னமோ பண்ணி தொலைங்க….சரி..சும்மாதானே உக்கார்ந்து இருக்கீங்க..அந்த அடுப்புல சாம்பார் கொதிக்குது பாருங்க..கிண்டி விடுறீங்களா..”///

நல்லா கிண்டிவிட்டிருக்கீங்க!!
10 April 2010 10:01 PM
////////////////////
ஹி..ஹி..

அவிய்ங்க ராசா said...

///////////////////
dondu(#11168674346665545885) said...
//அன்றைக்கு நிகழ்ச்சியின் ஹைலைட்டே பெரியவர் டோண்டு அவர்கள் நோட்புக் இல்லாமல் வந்திருந்து அனைத்து பதிவர்களின் பேச்சுக்களையும் பொறுமையாக கவனித்தார்…//
நிச்சயமா நோட்புக்கோடத்தான் போனேன், ஆனாக்க எல்லோரையும் பொறுமையா கவனிச்சது என்னவோ நிஜமே. அப்போத்தானே பின்னாலே பதிவு போட முடியும்?

அன்புடன்,
டோண்டு ராகவன்
10 April 2010 10:09 PM
///////////////////////
முதல் வருகைக்கு நன்றி சார்..பதிவர் சந்திப்பு அனைத்தும் என் கனவே என்று சொல்லியிருக்கேன்..))

அவிய்ங்க ராசா said...

///////////////////////////////
ஜீவன்(தமிழ் அமுதன் ) said...
;;;))))))
10 April 2010 11:15 PM
Maduraimalli said...
ithuellam oru pollappah?
10 April 2010 11:28 PM
அக்னி பார்வை said...
:)))))))))))))))
11 April 2010 12:56 AM
ஜெய்லானி said...
//யாருண்ணே..பேசிக்கிட்டு இருக்குறப்ப மூஞ்சியில தண்ணி ஊத்துறது. அதுவும் சுடுதண்ணியை..ஆஹா..எல்லாம் கனவா//

இவ்வளவு அழகா நீங்க சொல்லும் போதே நினைச்சேன். அது சரி பகல் கனவா???

//நான் டைரக்டா பதிவையே படிச்சிக்கிறேன்..”//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
11 April 2010 1:29 AM
/////////////////////
அம்புட்டு ஸ்மைலிக்கும் நன்றி..)))

அவிய்ங்க ராசா said...

/////////////////////
இளவஞ்சி said...
// ஏங்க..எந்திரிங்க.. தொலைங்க…இருக்கீங்க..பாருங்க.. //

//ஆமாண்டி..இல்லைடி..கனவுடி…வேணாண்டி.. //

ஏங்க இப்படி? :)
11 April 2010 1:56 AM
//////////////////////
ஆஹா..என்னண்ணே..நான் என் மனைவிய செல்லமா இப்படித்தான் கூப்பிடுவேன்..அவளும்..சாரி..அவர்களும் இதைத்தான் விரும்புகிறாள்..சாரி..விரும்புகிறார்கள்..)))

அவிய்ங்க ராசா said...

///////////////////////////
ஜாக்கி சேகர் said...
வரவே இல்லை அதுக்கு இத்தனை அலம்பளா??? சரி சொன்ன நேரத்துக்கு உங்க வீட்ல எழுப்பி விடுறாங்களா? கொடுத்து வச்ச ஆள்யா நீர்...
11 April 2010 2:27 AM
ச.செந்தில்வேலன் said...
:))
11 April 2010 3:06 AM
KVR said...
:-)
////////////////////////
ஹி..ஹி..ஜாக்கி அண்ணா..நன்றி செந்தில், கேவி.ஆர்..

ராம்ஜி_யாஹூ said...

all the bloggers meet, so far went well except the one organised for sangam opening.

எல் கே said...

//சும்மாதானே உக்கார்ந்து இருக்கீங்க..அந்த அடுப்புல சாம்பார் கொதிக்குது பாருங்க..கிண்டி விடுறீங்களா..”/

நலல் வேலைதான்.

அஷீதா said...

ஹி ஹி உங்களையும் நம்பி உங்க மனைவி உங்கள சாம்பார் கிண்ட விட்டுருகாங்களே...அவங்களோட மனதைரியத்தை பாரட்டலாமுங்க :)))))))))

Unknown said...

நல்ல பதிவு.. ;))

taaru said...

இக்கி இக்கி இக்கி

Vijayashankar said...

4 மணிக்கு யாரு வீட்டிலே சாம்பார் வைப்பாங்க?

Cable சங்கர் said...

:)

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Gazy... said...

சரி இவிங்க எல்லாம் எதுக்கு அடிகடி கூடுரைங்க?எதாவது அரசியல் கட்சி ஆரம்பிக்க போறிங்களா?

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ரொம்ப நல்லா இருந்ததுங்க ...அது சரி எங்க ஊர்ல பதிவர் கூட்டம் போடுவாங்களா? நாங்க எப்ப சண்ட போடறது?

Post a Comment