நீங்கள் தற்கொலை செய்யும் எண்ணம் உள்ளவரா..வலி இல்லாமல் உயிர் போக வேண்டுமா..ஒன்றும் கஷ்டப்படவேண்டுடாம்..தெருமுனையில் உள்ள பொது நவீன கழிப்பறைக்கு சென்று ஒரு நிமிடம் நின்று பாருங்கள். நாற்றம் தாங்க முடியாமல் உயிர் தானாகவே போய்விடும்.
மேலே உள்ள வார்த்தைகள் நகைச்சுவைக்காக இருந்தாலும், உண்மையான நிலைமை அப்படித்தான் உள்ளது. வாழ்க்கையின் எல்லா செயல்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் நாம் இதற்கு மட்டும் மூக்கைப் பொத்திக்கொண்டு சகித்துக் கொண்டு விடுகிறோம். இந்த உலகத்தில் சாவே இல்லாத ஒரு வீடைக் காட்டு என்று சவால் விட்ட புத்தர் இன்று இருந்தால் இந்தியாவில் உள்ள ஒரு சுத்தமான கழிப்பறையைக் காட்டு என்று சவால் விட்டிருப்பார்..
தெரு கழிப்பறைகள் இப்படி என்றால், நாம் ஸ்டைலாக செல்லும் எல்லா கமர்சியல் காம்ப்ளெக்ஸ் கழிவறைகளும் இந்த நிலையில்தான் உள்ளன. எடுத்துக்காட்டாக தி.நகரில் உள்ள க்ளோபஸ் காம்ப்ளெக்ஸ் கழிப்பறைக்கு(அங்க யாருய்யா போகச் சொன்னா என்று கேட்காதிர்கள்..வந்தா போய்த்தானே ஆகணும்) இயற்கை உந்துதல் காரணமாக செல்ல நேர்ந்தது. யப்பா..பொதுக்கழிப்பறை பரவாயில்லை..துணிகளை ஷோவாக அடுக்குவதில் உள்ள அக்கறை ஏன் இவர்களுக்கு இல்லை என்பது தெரியவில்லை.
ஆண்களுக்கு கூட இதில் அதிகம் பிரச்சனை இல்லை. ஏதாவது ஒதுக்குபுறமாக ஒதுங்கி விடுகிறார்கள். பெண்களின் நிலைமையை யோசித்துப் பாருங்கள். கொடுமை. வெளியில் கூட சொல்ல முடியாத அளவிற்கு சமூக கட்டுப்பாடுகள். அவசரம், அவசரமாக ஏதாவது கழிப்பறை உள்ள உணவகத்திற்கு கூட்டி சென்றால் கூட, கழிப்பறையின் சுத்தத்திலே வெறுத்துப் போய் விடுவர்.
நானும் பல வீடுகளுக்கு சென்று இருக்கிறேன். வீட்டின் இன்டீரியர் டெக்கரேஷனுக்கு காட்டும் அக்கறை கூட இதில் காட்டப்படுவதில்லை. சுத்தமில்லாமல் ஏதோ, ஏனோ தானென்று..சில மல்ட்பிளெக்ஸ் தியேட்டர்களை தவிர மற்ற தியேட்டர்களில் கழிப்பறை அதோ கதி. நாம் செலுத்தும் கேளிக்கை வரி கழிப்பறைக்கும் சேர்த்து என்பது பல பேருக்கு தெரியவில்லை. அப்படியே அசுத்தமாக இருந்தாலும், வேறு வழி.. ஒரு ஓரமாக நின்று நம் கடமையை ஆற்ற வேண்டியதுதான்.
ரோடுகளின் நிலைமையைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதும் சில பத்திரிக்கைகள் கூட பொதுக்கழிப்பறைகளின் நிலைமையைப் பற்றி அலட்டிக் கொள்வதில்லை. வெளிநாடுகளில், ஒவ்வொரு கடையிலும், பொதுக்கழிப்பறை இருக்கவேண்டும் என்று சட்டம் உள்ளது. அப்படி இல்லையென்றால் அந்த கடைக்கு அனுமதி கிடைக்காது. தெருவிற்கு தெரு மொபைல் பொதுக்கழிப்பறைகள், அனைத்தும் சுத்தமாக,.அவர்கள் இதில் கண்டிப்பாக உள்ளனர்.
இங்கு அதைப்பற்றி பேசவே கூச்சப்படுகிறோம். ஒரு பெண் எங்கவாது ஒரு ஆணிடம் சென்று இங்கு கழிப்பறை எங்கு இருக்கிறது என்று கேட்க முடிகிறதா..அவ்வளவிற்கு சமூக கட்டுப்பாடுகள்.அனைத்தையும் தகர்த்தெறியவேண்டும்..
என்னுடைய அப்பா இங்கு வந்திருந்தபோது சென்னையை சுற்றி காண்பிப்பதற்காக கூட்டிச் சென்றேன். எம்.ஜி.ஆர் சமாதி அருகே ஒரு பொதுக்கழிப்பறை உள்ளது. அப்பா இயற்கை உந்துதல் காரணமாக செல்லவே, நான் வெளியில் நின்று காத்திருந்தேன். அங்கே நான் கண்ட காட்சிகள், சென்னையில் பொதுக்கழிப்பறை செல்வது தவறு என்று எனக்கு உணர்த்தியது. அங்கு உள்ள இரண்டு பேர் செய்கை எனக்கு ஏதோ தவறு நடக்க போகிறது என்று எனக்கு உணர்த்தவே அவசரமாக கழிப்பறையை நோக்கி நடந்தேன். நான் வருவதைப் பார்த்த அந்த இரண்டு பேரில் ஒருவர்..”டே..யாரோ வர்றாயிங்கடா.. என்று கத்தவே, அவசரமாக உள்ளிருந்து இரண்டு பேர் வந்தனர். அவர்கள் கையில் பெரிய கத்தி, மற்றும் இன்னொரு ஆயுதம். அப்போதுதான் எனக்கு புரிந்தது. நான் செல்லவில்லையென்றால் இந்நேரம் என் அப்பாவை மிரட்டி அனைத்தும் பிடுங்கியிருப்பார்கள். எனக்கு ஒரு நிமிடம் மூச்சே நின்று விட்டது. என்ன நடக்கிறது, நம் பொதுக்கழிப்பறைகளில்
இப்போது ரவுடிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுக்கழிப்பறைகளை அரசு கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும். அதற்கென்று தனி ஆட்களை போட்டு சுத்தம் செய்து பரமாரிக்க வேண்டும்.கோயில்கள் கொள்ளையர்களின் கூடாரமாக மாறுகிறதோ இல்லையோ கழிப்பறகள் கொள்ளையர்களின் கூடாரமாக மாறுவதை தடுக்க வேண்டும். இல்லையென்றால் சிங்கார சென்னை என்பது பெயரளவிலே தான் இருக்கும்.
8 comments:
//நானும் பல வீடுகளுக்கு சென்று இருக்கிறேன். வீட்டின் இன்டீரியர் டெக்கரேஷனுக்கு காட்டும் அக்கறை கூட இதில் காட்டப்படுவதில்லை.//
ரொம்ப கரெக்ட் Raja....
//தெருமுனையில் உள்ள பொது நவீன கழிப்பறைக்கு சென்று ஒரு நிமிடம் நின்று பாருங்கள். நாற்றம் தாங்க முடியாமல் உயிர் தானாகவே போய்விடும்//
:))
//இப்போது ரவுடிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுக்கழிப்பறைகளை அரசு கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும்.//
எல்லாம் ஒண்ணுதானய்யா!
ரவுடின்னா - கொள்ளை!
அரசுன்னா - லஞ்சம்!
நல்ல இடுகை ராசாண்ணே!! நான் முடிந்த வரை எங்கள் கழிவறைகளைச் சுத்தமாக வைத்திருக்கிறேன். டாஸ்மாக் இருக்கும் அளவிற்கு நல்ல கழிவறைகள் இருந்தாலே.. சாலை ஓரம் ஒதுங்குவது குறைந்துவிடும்.
என்ன செய்ய??
//நானும் பல வீடுகளுக்கு சென்று இருக்கிறேன். வீட்டின் இன்டீரியர் டெக்கரேஷனுக்கு காட்டும் அக்கறை கூட இதில் காட்டப்படுவதில்லை.//
அதேதாங்க, வீடு மட்டும் பகட்டா இருக்கும், பாத்ரூம் பக்கம் போயிட முடியாது!!
ட்ரெயின் டாய்லெட்டும் கிட்டத்தட்ட இதே கதைதான், ரயில் பயணங்களை வெறுக்க இதுவும் ஒரு காரணம்.
இந்தியா வரும்போது, நீண்ட பயணங்கள் இதற்காகவே தவிர்க்கலாமா என்று தோன்றும். இங்கயும் சிலசம்யம் அப்படியிருக்கும்.
இந்தக் கழிப்பறைகளை நல்ல படியாக பராமரிப்பதில் பொது மக்களுக்கும் பங்கிருக்கிறது.
நான் கடந்த முறை இந்தியா வந்திருந்த போது ரிலையன்ஸ் பெட்ரோல் பங்குகள் முக்கிய சாலைகளில் A1 plaza என்ற பெயரில் சாப்பாடு கடைகளையும் சேர்த்து வைத்திருந்தார்கள் - கிட்டத்தட்ட அமெரிக்க சர்வீஸ் ஏரியாக்கள் போல. அப்படி ஒரு ப்ளாசாவில் காலை நுழைந்தோம். ஆச்சரியப்படத்தக்க வகையில் பாத்ரூம் மிகவும் சுத்தமாக இருந்தது. மாலை அதே வழியில் திரும்ப வர நேரிட்டதும் காலை அனுபவத்தில் உள்ளே நுழைந்தோம். இப்போது அதே பாத்ரூமுக்குள் நுழைய முடியவில்லை. ஒரே மூத்திர நாற்றம். இவ்வளவுக்கும் ஒவ்வொரு யூரினலுக்கும் ப்ளஷ் வசதி வைத்திருக்கிறார்கள். உபயோகிக்கும் நம்மைப் போன்றோர் யூரின் போய் விட்டு ப்ளஷ் செய்யாமல் வெளியேறினால் நாறாமல் என்ன செய்யும்?
இந்த ஏ1 ப்ளாசாவுக்கு செல்பவர்கள் நடுத்தர மற்றும் உயர் நடுத்தர வகுப்பினரே. இவர்களே இப்படியிருந்தால், கல்வியறிவில்லாத மக்களைக் குறை சொல்லி என்ன செய்ய?
எல்லா வசதிகளையும் அரசாங்கம் செய்து தர மாட்டேன் என்கிறது என்று சொல்லும்முன் நாம் அவ்வசதிகளை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.
அப்பட்டமான உண்மை. முதலில் பொது கழிப்பிடங்களை நாம் நன்றாக ( சுத்தமாக, சேதப்படுத்தாமல், கிறுக்காமல் ) பயன் படுத்த வேண்டும். தண்ணீர் வசதி செய்து தர, அணைத்து ப்லாகர்களும் எழுத வேண்டும். கவர்ன்மன்ட் ஒத்துக்கொள்ளுமா....? நான் வேலை செய்யும் இடத்தில, கை அலம்பும் தண்ணீர், தோட்டத்திற்கு பயன் படுத்து. நான் பெல்ஜியத்தில் பார்த்தது, தெருமுனையில் சிறிய ஓட்டை போல இறுகும், அதில் தான் ஆண்கள் வரிசையாக ஒன்றுக்கு செல்வார்கள், ஓபனாக! பெண்களுக்கு மூவபிள் பாட்டி. நியூ யார்க்கில் டைம்ஸ் ஸ்கொயரில் புத்தாண்டு இரவில், எல்லோரும் ( பெண்கள் உட்பட ) ரோட்டில் தான் மூத்திரம் பெய்வார்கள். அங்கும் விதிவழக்கல்ல.. ஹூஸ்டனில் நகரில், மேக்ட்னால்ட்சில் காசு கொடுத்து உணவகத்தில் சாப்பிடாமல் ட்டாயலட் போகலாம். இந்தியாவில் முடியுமா?
Thanks Vijay Anand, ahamed, sibi, senthil, husainamma, suresh, mugilan(thanks for your detaled response)
Post a Comment