Saturday 11 October, 2014

என்னுடைய முதல் குறும்படம்


சனிக்கிழமை இரவு சொர்க்கத்துக்கு அருகே படைக்கப்பட்டதோ என நினைக்கிறேன். வழக்கம்போல் அந்த சனிக்கிழமை, ஹோட்டலுக்கு சென்று உணவருந்த குடும்பத்தோடு அமர்ந்தேன்...

அந்த அரைமணிநேரம் ஹோட்டலில் நடந்த நிகழ்வுதான் ஒரு குறும்படத்தையே எழுதி, இயக்கி தயாரித்து உங்கள் பார்வை வரைக்கும் கொண்டு வந்திருக்கிறது என்பதை என்னால் இன்னமும் நம்பமுடியவில்லை..

படத்தைப் பற்றி சொல்லுவதைவிட உங்கள் பார்வைக்கு கீழே வைத்திருக்கிறேன்..என்னுடைய முதல் பையன் பிறந்ததைவிட மிகவும் ஆனந்தமாக உணர்கிறேன்..

“பையன் அவ்வளவு அழகா இல்லையே..”

“கை விரல் பாருங்க கொஞ்சம் சிறுசோ..”

“என்னா இருந்தாலும் கலர் கம்மிதான..”

“அழுதானா...”

என்று என்னதான் கமெண்டுகளை எதிர்நோக்கி இருந்தாலும், இந்த குறும்படத்தை பார்வைக்கு வைக்கும்போது, 2 வருடங்கள் தவம் இருந்து, மருத்துவமனை வாசத்தில், “இந்தாங்க சார்..உங்க பையனை வாங்கிக்கங்க” என்று தொப்புள் கொடியோடு தூக்கி என் முதல்பையனை கொடுத்தபோது, என்னை அறியாமல் இரண்டு கண்கள் முழுக்கவும் கண்ணீர்..அதே மனநிலைதான், இப்போதும்...

இந்த குழந்தையை, இனிமேல் நீங்கள் பார்த்துகொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்..குறைகள் நிறைய இருந்தாலும், முதல் படத்திற்காக மன்னித்து, உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்து, இந்த படத்தின் கருவை நிறைய பேருக்கு சென்றடைய செய்வீர்க்ள் என்ற நம்பிக்கையுடன்..

என்றும் நட்புடன்


அவிய்ங்க ராசா....

படத்திற்கான யூடியூப் லிங்க் கீழே...

https://www.youtube.com/watch?v=6WNPf5I6I_w&feature=youtu.be






11 comments:

இரா. கண்ணன் said...

அருமையான முயற்சி.. என் மனதையும் அந்த வலி தொட்டது.. உணரவைத்தது.. குறும்படம் பார்க்கும் அனைவரும் இனி அவர்களை நடத்தும் விதம் மாறும்.. வாழ்த்துக்கள்.. ராஜா.. ஒரு சின்ன விண்ணப்பம்.. எப்போதுமே ஒரே வகையான கதைகளை எடுத்துக்கொள்ளாமல்.. உங்கள் நகைச்சுவை வசனங்களுடனும் சில படங்கள் எடுக்கவும்..

Anonymous said...

ஜி...படம் நல்லாயிருக்கு :)) அந்த திருநங்கை கேரக்டர் நடிப்பு அட்டகாஷ்...செம்ம..வாழ்த்துகள் :)

ram's said...

நல்லா இருந்துச்சு விக்டர். பிரதிப் நல்லா நடிச்சிருக்கான். பாத்ததும் விஸ்வருபம் நளினம் தான் ஞாபகம் வந்துச்சு. கவுண்டமணி பாணி காமெடிக்கெல்லாம் சிரிப்பு வரல... வேகத்தடை தான். Great Team Effort. All the Best.

Saravanabhavan Thangavel said...

மிகச்சிறப்பு. மிக நேர்த்தியாக கதை சொல்லும் திறம். வாழ்த்துக்கள்.

Anonymous said...

Long time reader of your page...but did nt check for a year...Cane to see now and got to see your short filem....Tears rolled down sir...Awesome !! No words....

பராசக்தி said...

ஏங்க அவிய்ங்க, ஆமா புள்ள அழுதாங்க, நாங்க சிரிச்சோம்க, அவுக எதிர்காலம் நல்லாயிருக்குமுங்க

Unknown said...

Superb short film...

வெற்றி-[க்]-கதிரவன் said...

saw today only too good

thamizh said...

Vazhthukkal sir

Gopikaa said...

ரொம்ப அருமையான படம். இதுலே திருநங்கையா வந்தவரோட நடிப்பு டாப் -க்லாஸ். செமையா எக்ஸ்ப்ரஸந்ஸ் பண்ணி இருக்கார். சின்ன சின்ன முக பாவனை, புன்னகை, நளினம்-ன்னு எல்லாமே அருமை. பின்னணி இசை கூட கதையோட ஒட்டி ரொம்பவே இனிமையா இருக்குது! மொத்தமா சொல்லணும்னா அட்டகாசம் விக்டர்! வசனங்களால் ரொம்ப சலிக்க வைக்காம இசையாலும் முக பாவனைகலாலும் கதையைக் கொண்டு போன உங்கள் டைரக்சன் திறமை அபாரம்!

patyacono said...

TITIAN EAT ARTS - The Tinian Editions - TITanium Art
TITIAN EAT ARTS. benjamin moore titanium All about the TINIAN EAT ARTS and TIPMENTARY GIVES you titanium scrap price more fun cost of titanium than playing the game titanium cartilage earrings of best titanium flat iron poker! Join the team to make the best

Post a Comment