Monday, 9 December, 2013

சுத்தம் என்பது நமக்குமூன்று நாட்களாக பையனுக்கு இடைவிடாத காய்ச்சல். தந்தைகளுக்கு வாழ்க்கையின் கொடுமையான தருணமே, பிள்ளைகள் வலியால் துடிக்கும்போதுதான். எதற்கு அழுகிறான், ஏன் அழுகிறான் என்று தெரியாமல், மகன் விழுந்து, விழுந்து அழும்போது பார்க்க கொடுமையாக இருக்கும்.

இரத்த பரிசோதனை எடுத்து பார்த்தபோது, டைபாய்ட் என்று சொன்னார்கள். டெங்கு வரவில்லை என்று சந்தோசப்படுவதா, அழுவதா என்று தெரியவில்லை. 

எதுவும் சாப்பிட அடம்பிடிக்கிறான். சகஜமாக விளையாட முடியவில்லை. எப்போதும் அழுகைதான். காய்ச்சல் வேறு 104 பாரன்ஹீட். படிபடியாக காய்ச்சல் குறைந்தாலும், இன்னும் அவன் சகஜமாகவில்லை. ஏதோ ஒரு கண்டத்திற்கு இழுத்து வந்தாற் போல உணர்கிறான். மனிதர்களை கண்டால் அலறுகிறான்.

டைபாய்ட் பற்றி விவரங்கள் படித்தேன். சுத்தமில்லாத தண்ணீர் மற்றும் உணவினால் டைபாய்ட் பரவுவதாக சொல்கிறார்கள். இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில், அதிகம் இந்த நோய் பரவுவதாக சொல்கிறார்கள்.

எப்போதும் பார்த்த மருத்துவமனைதான். ஆனால் இப்போது பார்க்கும்போது அசூசையாக இருக்கிறது. இத்தனைக்கும் நான் மகனை கொண்டு சென்றது, தனியார் மருத்துமவனை. எங்கு பார்த்தாலும் , எச்சில் துப்பிய கறைகள். அதில் ஈக்கள் மொய்க்கின்றன. கழிவறை பக்கம்,சாக்கடை தண்ணீர் தேங்கி, கொசுக்கள் மொய்த்து கொண்டு இருக்கின்றன.
அதற்கு பக்கத்திலேயே, கவலை தோய்ந்த முகங்களோடு, பிள்ளைகளை அணைத்து கொண்டு பெற்றோர்கள். காய்ச்சலோடும், வயிற்று வலியோடும், அம்மா மடியில் சாய்ந்து கொண்டிருக்கும் குழந்தைகள். “டோக்கன் போடணும் சார்” கறாராக பேசும் உதவியாளர்கள். “ரிச் கெட் ரிச்சர், புவர் கெட் புவர்.” இட்த்திற்கு சம்பந்தமே இல்லாமல் சத்தமாக ஹாலில் ஓடிகொண்டிருக்கும், டி.வியில் ரஜினி. அதையும் ஆர்வத்தோடு பார்த்து கொண்டிருக்கும், ஆண்களும், பெண்களும்.

இந்த மொத்த சூழ்நிலையும் பார்க்கும்போது, கடவுளை காண்பதற்கு அனைவரையும் க்யூவில் நிற்பதுபோன்ற உணர்வு. பவ்யமாக, பயந்து, பயந்து உள்ளே செல்லவேண்டியிருக்கிறது. “என்னா செய்யுது..” இதுதான் முதல்வார்த்தை. பேசுவதை கவனிப்பாரா, இல்லையா என்று தெரிவதற்குள், அடுத்த பதில் வந்து விழுகிறது..”டெஸ்ட் எடுத்திருங்க”

“சார் காய்ச்சல் சரியாகிடுமா” என்று பயந்து பயந்து கேட்டால், “ம்..அதெல்லாம் ஆகிடும்.” அடுத்து என்று வாசலில் உதவியாளரை பார்க்கிறார்..உதவியாளர் வந்து “வாங்க சார்..” என்று இழுத்து செல்லாத குறையாக இழுத்து செல்கிறார்கள்..

அடுத்த வார்த்தை பேசுவதற்குள், அவருடைய செல்பேசி அழைக்கிறது..”ஓகே..ஓகே..முடிச்சிடலாம், சாதாரணம்தான்..” என்று பேசிக்கொண்டே, “இன்னும் நீங்க கிளம்பலையா” என்று பார்க்கிறார். அவமானத்தில் கூனிகுறுகி வெளியே வந்தால், குழந்தையை அணைத்து கொண்டு, கண்ணில் பயத்துடனும், ஏக்கத்துடனும், கடவுளை காண்பதற்கு நிற்கிறார் அடுத்த பெற்றோர்..

மருந்துகளை வாங்கி கொண்டு வெளியே வந்தால் “******** குழந்தைகள் சிறப்பு மருத்துவமனை” என்ற பெயிண்ட் போன போர்டு நம்மை பார்த்து சிரித்து கொண்டிருக்கிறது.  அதற்கு கீழே, சாக்கடை தண்ணீரும், குப்பையும், மக்கி போய், செத்த எலி ஒன்றின் மேல் ஈக்கள் மொய்த்து கொண்டிருக்கின்றது.

“ஓட, ஓட விரட்டி படுகொலை..உயிரோடு எரிப்பு”, அடுத்த டீ கடையில் தினத்தந்தி வெளியில் தொங்கிகொண்டிருக்கிறது..

பக்கத்து தெருவில் கல்யாண வீட்டில் பாட்டுச்சத்தம் காதை பிளக்கிறது..


“சுத்தம் என்பது நமக்கு, சொர்க்கம் உள்ள வீடுதான்...”

12 comments:

சக்கர கட்டி said...

என்ன பண்ணுவது நாம் இருப்பது இந்தியா \\\\

Anonymous said...

nejamaave romba kashtam thaan..eppadiyavathu 1 year gap'ku appuram pudhu H1-B'la thirumbi odida vendiyathu thaan..namakku inimel india'la irukka mudiyaathu..

Cherub Crafts said...

ஊருக்கு இப்போதான் சென்றிருக்கீங்க அதனால் காலநிலை/மாற்றத்துக்கு சின்னபிள்ளை பழக கொஞ்சம் நாளெடுக்கும் ..உடனே வெளியில் எங்கும் கொண்டு போகாதீங்க ..க்ராஜுவலா கொண்டு போங்க .கொசுக்கள் கிட்ட இருந்து மட்டும் பிள்ளையை பத்திரமா பாதுகாத்துக்கோங்க .

Angelin.

Maatamil said...

தமிழ் பதிவர்கள் இணைந்து நடத்தும் மாதமிழ் தளத்தில் தங்களின் பதிவுகளையும் இணைத்து உதவுமாறு அன்போடு வேண்டுகிறோம்

http://maatamil.com

நன்றி

Avargal Unmaigal said...

இந்தியாவில் டாக்டர்களும் தெய்வமும் ஒன்றுதான் இருவருக்கும் பணத்தை புடுங்குவதை தவிர வேறு ஏதும் தெரியாதுங்க..

கவலைப்படாதீங்க கல்யானத்திற்கு அப்புறம் மனைவிக்கிட்ட இருந்து அடியும் உதையும் வாங்குவது போல இதுவும் போகப் போகப் பழகிடும்.......

அவிய்ங்க ராசா said...

ஆமாம் சக்கரகட்டி..(
அனானி நண்பர்..1 வருட கேப்னு கரெக்டா சொல்லுதீகளே..தெரிஞ்ச ஆளா இருக்குமோ..))
நன்றி ஏஞ்சலின்..கொசுக்களோடு தினமும் நடக்கும் போராட்டம்,..அய்யோ..))
அவர்கள் உண்மைகள்..கரெக்டுதான்...நானும், சில முயற்சிகள் எடுக்கப்போகிறேன்..முதலாக, என்னுடைய செலவில், கொஞ்சம் குப்பை தொட்டிகளை தெருமுழுக்க வைத்து, தெரு நண்பர்களிடம், கொஞ்சம் விளக்கி, குப்பைகளை முறைப்படுத்த முயற்சி செய்யபோகிறேன்..ஏதோ, என்னால் முடிந்தது..((

சே. குமார் said...

நம்ம ஊருங்க... இப்படித்தான் இருக்கும்... மனிதாபிமானமற்ற டாக்டர்... இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ANaND said...

கொஞ்சம் குப்பை தொட்டிகளை தெருமுழுக்க வைத்து, தெரு நண்பர்களிடம், கொஞ்சம் விளக்கி, குப்பைகளை முறைப்படுத்த முயற்சி செய்யபோகிறேன்..ஏதோ, என்னால் முடிந்தது..((////////

உண்மைலே இது ஒரு நல்ல விசயம் அண்ணா ... Good job .. Keep it up

Thekkikattan|தெகா said...

நான் கிட்டத்தட்ட பேரிக்காவில் 17 வருடங்கள் குப்பை கொட்டிவிட்டு ஊருக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டது. வீட்டில் அனைவருமே அந்தூரு பிரஜைகள், எனது பெண்ணிற்கு ஆறு வயதாகிறது. மெல்லிய தேகம் இது வரையிலும் அங்கு போட்ட தடுப்பூசிகளைத் தவிர வேறு எந்த விதமான ஊசிகளையும் போட்டதில்லை எங்கும்.

மெது மெதுவாக ஊருக்கு உங்கள் குழந்தையை பழக்கப்படுத்துங்கள். நிச்சயமாக கொஞ்சம் மாதங்களுக்கு அச்சமூட்டுவதாக இருக்கும், பின்பு ஊர் உங்கள் அனைவரையும் சுவீகரித்துக் கொள்ளும். வாழ்த்துக்கள்!

ILA Raja said...

நல்ல பதிவுன்னு சொல்லி பாராட்டுறதா? இல்லை உங்க குழந்தைக்கு உடல் நிலை இப்படியிருக்க எப்படி பாராட்டுறதுன்னு நினைக்கிறதா?

Indian said...

“சொர்க்கம்என்பது நமக்கு,சுத்தம் உள்ள வீடுதான்...”

ராமுடு said...

Take care of him. We won't be able to raise our voice at few places, where our closest one need attention.. Its fate of India. Wherever you go, take some hot water (prepared at home). Don't buy water bottle outside, even thought its labeled with big companies. My pray for his speedy recovery.

Post a Comment