Saturday, 13 October, 2012

மாற்றான் - மரணமொக்கைநீங்கள் படத்தயாரிப்பாளரா..கதை, திரைக்கதையே இல்லாமல் உங்கள் படம் ஓடவேண்டுமா..எந்த கஷ்டமும் படவேண்டியதில்லை.. என்னிடத்தில் வாருங்கள்..உங்கள் படத்தைமரணமொக்கைஎன்று எழுதுவேன்..உங்கள் படம் ஹிட்டு..

என்னது நம்பமாட்டீங்களா..என் கடந்தகால விமர்சனங்களையும், கணிப்புகளையும் அலசி பாருங்க சார்..குறிப்பாக தாண்டவம் படத்திற்கு முதல் விமர்சனம் நான்தான் எழுதினேன் என்று நினைக்கிறேன்..படம் எனக்கு பிடித்திருந்தது..விக்ரமுக்கு ஒரு ஹிட் என்று எழுதிட்டு பார்க்குறேன்..ங்கொய்யால..அம்புட்டு பயபுள்ளைகளையும், அந்த படத்தை வாரு, வாருன்னு வாறி, “மரணமொக்கைன்னு எழுதி, விக்ரம் கேரியரை, டிபன் கேரியரா மாத்திட்டாய்ங்க..மூணு மணிநேரம், மாற்றான் என்ற மரணமொக்கை படத்தை பார்த்துட்டு வந்துமாற்றான் மரணமொக்கைன்னு எழுதப்போறேன்..எல்லாம் சேர்ந்து ஹிட் ஆக்கிருய்ங்கய்யா..நீங்கெல்லாம், நல்லா வருவீங்கய்யா..

தக்காளி..இந்தப் படத்தை பார்க்குறதுக்கு, இந்த ஊரு தியேட்டருல  2 மணிநேரம் காத்துக்கிடந்தேய்யா..2 மணிநேரம் கழிச்சு, தியேட்டருல போய் உக்கார்ந்தா, உங்களுக்கு , பணம் உத்தரவாதம் இல்லையோ..தூக்கம் உத்தரவாதம்..ஆவ்..

கதையெல்லாம், எல்லாப்பேரும் சொல்லிருப்பாய்ங்க..நம்ம மத்ததை பேசுவோம்..ஒட்டிப்ப்பிறந்த இரட்டைக்குழந்தை என்று வித்தியாசமாக ஆரம்பிக்கும் திரைக்கதை, முதல்ல ஸ்டெயிட்டா போகுது, அப்புறம் லெப்டுல திரும்புது..அப்புறம் ரைட்டு..அப்புறம் ஸ்டெய்ட்டு..அப்புறம் பேக்..அப்புறம் லெப்டு..அப்புறம்அடப்போங்கைய்யா..எங்கிட்டு போகுதுன்னு டைரக்டருக்கே தெரியலை..

சூர்யா, வழக்கம்போல கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார்..ஆனால், பாவம்..அவர் என்ன பண்ணமுடியும்..இப்படி ஒரு திரைக்கதையை வைத்துக்கொண்டு..ஒரு சூர்யாவை காதலிக்கும், காஜல் அகர்வால், அந்த சூர்யா இறந்தபின்பு, “அந்த முட்டாய் இல்லைன்னா என்ன..இன்னொரு முட்டாய் இருக்க்குல்லஎன்று அடுத்த காட்சியிலேயே, அடுத்த சூர்யாவைக் காதலிப்பது, அமெச்சூர்தனத்தின் உச்சகட்டம்..

முதல் பாதியில் அவ்வப்போது வரும், நகைச்சுவை மட்டுமே, படத்திற்கு சிறிய ஆறுதல்..ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் நம்மளே ஸ்கிரினூக்குள்ள கையை விட்டு பிரிச்சுவிட்டுருவோமான்னு தோணுது, இயக்குநருக்கு கிடைத்த வெற்றி..அதாவது, மக்களை வெறியேத்தியதற்கு..

நம்ம ஊரு டாட்டாசுமோ மாதிரி, இரண்டு கார்களில் உக்ரைனின் ராணுவத்தளபதி வருவதும், அவரை நம்ம ஊரு பயபுள்ளைக போட்டுத்தள்ளுவதெல்லாம், செம காமெடி..குறிப்பாக, கிளைமாக்ஸ் காட்சியில் வருமே ஒரு இழுவை..இது..சாரி..தூக்கம்..பொண்டாட்டி போன் பண்ணின பின்புதான் எழுந்தேன்னா பார்த்துக்குங்களேன்..

ஹாரிஸ் ஜெயராஜ், வழக்கம்போல் அவருடைய பாடல்களை, அவரே சுட்டு போட்டிருக்கிறார்..இங்கு கேண்டினில் பப்ஸ் எதுவும் கிடைக்காதது ஏமாற்றமாக இருக்கிறது..படத்தில் வில்லனாக வருபவர் மட்டும் கொஞ்சம் கவர்கிறார்..மத்தபடி, கொஞ்சம் கூட நம்ப முடியாத காட்சிகளும், நத்தை போல இழுக்கும், இரண்டாவது பாதியும், படத்தை மரணமொக்கையாக்குகின்றனஆனாலும், நான் எழுதிட்டேனுங்குறதினால, நீங்களெளல்லாம் சேர்ந்து ஹிட் ஆக்குவீங்க்ன்னு தெரியும்..ஆனாலும் சொல்லவேண்டியது, என் கடமை..இந்த விமர்சனத்தை படிச்சுட்டு,, இரண்டு, மூணு உசுரு காப்பற்றப்படட்டுச்சுன்னா, எனக்கு போதும்யா..

முடிவாக மாற்றான் – மரணமொக்கை..


படஉதவி - நன்றி பேஸ்புக் நண்பர்

9 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

annee neengka theerkka arisinne :)))

Robert said...

தாண்டவம் படத்திற்கு முதல் விமர்சனம் நான்தான் எழுதினேன் என்று நினைக்கிறேன்..படம் எனக்கு பிடித்திருந்தது..விக்ரமுக்கு ஒரு ஹிட் என்று எழுதிட்டு பார்க்குறேன்.// மைண்டுல வச்சி இருக்கேண்ண!!!!!!!!!

! சிவகுமார் ! said...

ஜனாதிபதி விருது பெரும் லாஸ்ட் சீன் சூர்யாவை கிண்டல் செய்ததால் தங்களை மிதவாத குண்டர் சட்டத்தில் கைது செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

Anonymous said...

Mokkai Film

John Simon C said...

Nanri nanbaaa!

John Simon C said...

Hi hi hi en manaivi parthe theeranum enru kodi pidikura! So, nan matikiten makkale!

amalprabhu said...

neenga mattum thaan indli la maatranuku correct vemarshanam fantastic brother

துபாய் ராஜா said...

மொத்தத்துல பார்த்தவன் செத்தான்ங்கிறீங்க... :))

Cable சங்கர் said...

super padam நான் நீங்க போட்டிருக்கிற சிவாஜி படத்தை சொன்னேன்.

Post a Comment