Sunday 1 April, 2012

ஹல்லோ…துபாயா…அங்க என் பிரதர் மார்க் இருக்காரா..





ஊருப்பக்கத்துல சில மைனர்களைப் பார்க்க அம்புட்டு கடுப்பா இருக்கும்ணே….மஞ்சள் கலருலயோ, இல்லாட்டி, பச்சைக் கலருலயோ, ஆள அடிக்கிற மாதிரி, ஒரு வேஷ்டியும் சட்டையும் போட்டுக்கிட்டு, ஒரு புல்லட்டுலடப..டப..” ன்னு வர்றப்ப ஆச்சர்யமா இருக்கும்..அடங்கொய்யால, போன வருசம் வரைக்கும், முக்குத்தெருவுல மூக்கு ஒழுகிக்கிட்டு இருந்த பயபுள்ளைதான இவன்..இவனுக்கு என்னடா, இம்புட்டு பவுசுன்னு ஆச்சர்யப்பட்டு கேட்டா

விஷயமே தெரியாதா..பயபுள்ள, துபாய்ல போயி வேலை பார்த்துட்டு போனவாரம்தான், செழிப்பா வந்து இறங்கியிருக்கான்.”ன்னு சொல்லுவாய்ங்க..எனக்குனா ஆச்சர்யம்..ஆஹா.துபாயில என்ன ஏதாவது தங்கம் விளையுதா..அப்படின்னு ஒரு டவுட்டு..அவிங்ககிட்ட ஏதாவது கேட்டுப்புட்டா, “துபாயில நாங்கெல்லாம்..” அப்படின்னு ஆரம்பிச்சா ரெண்டு காதுலயும் ரத்தம் ஒழுகும்குறதுனால, அப்படியே மனசுக்குள்ள வைச்சு பூட்டிப்புடுவேன்..

அப்புறம்வெற்றி கொடிகட்டுபடம் பார்த்தபிறகுதான் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துருச்சு..ஆஹா..பயபுள்ளைக, “கேக்ரான்..மேக்ரான்..” கம்பெனியிலதான் வேலைபார்த்துருக்குகளா..அந்தப் படம் வந்தப்பிறகு, அம்புட்டு புள்ளைகளையும் ஒரு வாரத்துக்கு தெருப்பக்கம் காணோம்..நாங்களும் ஊருக்குள்ளார வலைவீசி தேடிப்பிடிச்சு, ஒரு ஆளை புடிச்சோம்..பயபுள்ளைய கத்திமுனையில வைச்சி கேட்டப்பதான்..அவிங்க படுற பாடுங்க எல்லாம் கண்ணீர் கதையா வெளியே வந்துச்சு..

அந்த கொடுமை எல்லாம் சொல்லி, செண்டிமெண்டாக்க விரும்பலை. ஆனாலும் இந்த துபாயை ஒரு நாளைக்காவது சுத்திப் பார்த்துருணும்னு மூக்கம்புட்டு ஆசைண்ணே..நம்மளும் ஒரு நாளைக்குபில்டிங்க் காண்டிராக்டர்ன்னு ஊருக்குள்ள சொல்லிக்கிட்டு திரியனும் அப்படின்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன். ஆனா, துபாய, இதுவரைக்கும் படத்துலதான் பார்க்க முடிஞ்சுச்சு.

ஆனா, போனவாரம்தான், அந்த இனிப்பான செய்தி வந்துச்சு..”ஆமாண்ணே..துபாய்க்கு வர்றேன்….அமெரிக்கால இருந்து சென்னைக்கு வர்றதுக்கு துபாயில பயபுள்ளைக லேண்ட் ஆகுறாய்ங்களாம்…9 மணிநேரம் துபாயில இருக்க வாய்ப்பு..என்னால நம்பவே முடியலண்ணே..ஆஹா..துபாய பார்க்கப் போறேன்..அப்படிங்குற நினைவே கண்ணுமுன்னாடி ஓடிக்கிட்டு இருக்கு

என் பிளாக்க மொத்தம் 100 பாசக்கார பயபுள்ளைக படிக்கிறீங்க..அதுல 20 பயபுள்ளைக, துபாயா இருக்கும்(வேறென்ன..பக்கத்துல இருக்குற ஹிட்கவுண்டர் தான்..ஹி..ஹி). அதனால துபாயில இருக்குற நம்ம ஊருக்காரபயபுள்ளைக கிட்ட ஒரே ஒரு வேண்டுகோள்..இல்லாட்டி, விண்ணப்பம்..ம்ம்ம்..வேணாம் உதவின்னே வைச்சிக்கலாம்..நடுநடுவுல மானே, தேனே, பொன்மானேன்னு போட்டுக்குங்ககண்மணி..அய்யயோ

துபாயில நம்ம பயபுள்ளைக இருந்தா, தயவுசெய்து, எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணமுடியுமாசில விவரங்கள் தேவை..

1) துபாயில் 7 மணிநேரம் செலவழிக்க தகுந்த மாதிரியான இடங்கள் எவை
2) துபாயில் டாக்சி எடுப்பது நல்லதா..அல்லது ஏதாவது கவர்மெண்டு பஸ்(அதாவது 12பி, 37சி..அது மாதிரி)
3) துபாய்புர்ஜ் காலிபாஎன்ற உயர்ந்த கட்டிடத்திற்கு செல்ல ஆசை..ஏர்போர்டில் இருந்து பக்கமா..எவ்வளவு தூரம்

அடுத்த கொஸ்டினுலதான், துபாய்க்கார பயபுள்ளைக, அலறி அடிச்சு ஓடப்போறாய்ங்க

4) நேரம் இருந்தால், உங்களுக்கு சிரமம் இல்லையென்றால், ஒரு 7 மணிநேரம் என் கூட வர இயலுமா….உங்களுக்கு எந்த பொருட்செலவு, மற்றும் சிரமம் கொடுக்கமாட்டேன் என்பதற்கு நான் கேரண்டி..ஏனென்றால், புது இடம் என்பதால், தனியாக செல்ல கொஞ்சம் தயக்கமாக உள்ளது

இந்த நாலு கொஸ்டினுல ஒரு கொஸ்டின் ஆன்சர் தெரிஞ்சாலும்எனக்கு aveengarasa@gmail.com மெயில் பண்ணுங்க..நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம்

ஹல்லோ..துபாயா..என் பிரதர் மார்க் இருக்காரா..என்னது 20 எண்ணைக்கிணறு எரிஞ்சு போச்சா..கூல்டவுண்..கூல்டவுண்..கூல்டவுண்...மே மாசம் அங்க வர்றேன்அப்ப பார்த்துக்கலாம்..அட்லீஸ்ட் 20 க்ரோர்ஸ் லாஸ்யா..அதுக்குப்போய் சின்னப்புள்ள அழுகுற மாதிரி அழுகுறான்யா..ஹே..மணி கம்ஸ் டுடே..கோஸ் டுமாரோயா..

14 comments:

கோவை நேரம் said...

போங்க...போங்க...வாழ்த்துகள்

Anonymous said...

Dear brother welcome to dubai.Burj Khalifa is near to Airport only.GOvt tourist buses available for sight seeing. if you inform me your arrival date, i will help you. my contact details pls check your e-mail .bye...

Anonymous said...

welcome to dubai.
u can use the metro

yyy said...

welcome to dubai,
use metro rail from dubai airport station to burjkhalifa station.u would be spend whole time not limit to visit burjkhalifa along with world biggest mall 'dubai mall'

அவிய்ங்க ராசா said...

நன்றி கோவை நேரம்.

நன்றி நண்பர்களுக்கு. தாங்கள் அன்பிற்கு..நிறைய மெயில்கள் வந்துள்ளன. ஏதாவது சந்தேகம் இருந்தால் கண்டிப்பாக கால் செய்கிறேன்..

boopathy perumal said...

Dear Raasaa,

If you want to visit Burj Khalifa, Please visit the following site & book it. https://tickets.atthetop.ae/eticketing/SearchResult.aspx
Boopathy
Dubai

Gemini said...

ya, that's correct, To visit burj khalifa, you should book the ticket well in advance. but metro is not a correct choice for the sight seeing. only if you would like to enjoy the ride you can choose, other wise take a sight seeing trip ' Bigbus' also available. best option will be in a car if any one joins with you.
Burj al arab, Palm jumeirah, Atlantis are also can be suggested aprt from Burj kalifa and Aquarium in Dubai mall. if it is evening time then music fondation in dubai mall also will be interesting.
Desert Safari is a unique trip to be enjoyed, but the 7 hrs stay will not be sufficient.

i can suggest

அவிய்ங்க ராசா said...

நன்றி பூபதி, ஜெமினி..நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்..

Anonymous said...

Hellow boss neenga dubai airporta vittu velila poka mudiathu boss. oruvelai unga kitta dubai visa irunthal mattume suththi parkka mudium illenna air port ullathan irukkanum...........

அவிய்ங்க ராசா said...

நண்பர்..டிரான்சிட் விசா தருகிறார்கள், அங்கேயே..

யாஸிர் அசனப்பா. said...

புர்ஜ் கலிபாவை பார்க்க பகல் நேரத்தினை தேர்வு செய்து கொள்ளுங்கள். இரவை விட பகலில் துபாய் உயரத்தில் இருந்து பார்ப்பதற்கு அழகாகத் தெரியும். இதன் டிக்கெட் ஆன்லைனின் மூலமாகவும் புக் செய்து கொள்ளலாம், நேரிலும் வாங்கலாம்.
துபாய் ஏர்போர்டில் இருந்து நேராக புர்ஜ் கலிபாவிற்கு மெட்ரோ ரயில் இருக்கின்றது. இதனை தேர்வு செய்வது புத்திசாலித்தனம் என்பேன் நான். ஏனென்றால் அதனை நீங்கள் தேர்வு செய்வதன் மூலம் நேரத்தினை மிச்சப்படுத்தலாம்.
புர்ஜ் கலிபா எமிரேட்ஸ் மாலின் பின்புறம் உள்ளது. அந்த மாலினை மட்டும் பார்க்கவே ஒரு நாள் பத்தாது. அதே போல அங்கிருந்து சுமார் 20 நிமிட தூரத்தில் பத்தூத்தா மால் இருக்கின்றது.
புர்ஜ் கலிபாவிற்கு 150 திர்ஹம்ஸ் டிக்கெட் (இந்திய ரூபாய் சுமார் 1800).
நான் அபுதாபியில் இருப்பதால் தங்களுக்கு நேரடியாக வந்து உதவயியலாது. உங்களது அழைபேசி எண்ணை கொடுத்தால் என்னால் உதவமுடியும்.

அவிய்ங்க ராசா said...

Thanks Mohammed.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

அப்புறம் என்ன ஆச்சு.

ஹுஸைனம்மா said...

இப்போத்தான் பார்த்தேன் இந்தப் பதிவை. துபாய் வந்து சென்றுவிட்டீர்களா?

இல்லையெனில், வார விருமுறை நாட்களான வெள்ளி-சனியில் வந்தால் கண்டிப்பாக (பதிவர்கள் யாராவது) உங்களுடன் ஊரைச் சுற்றிக்காட்ட வரமுடியும். மற்ற நாட்கள் விடுமுறை எடுப்பது சிரமம்.

Post a Comment