Sunday 14 August, 2011

என்ன புள்ள செஞ்சே நீ…

சைட் அடிச்சிருக்கியா…இந்த வார்த்தையை யாரிடமாவது கேட்டு பாருங்கள்..கொஞ்சம் வெட்கித்தான் போவார்கள்..”என்னங்க..இதப்போய் எல்லார் முன்னாடியும் கேட்டுகிட்டு..” என்று திருப்பி கேட்பவர்கள் உண்டு..நண்பன் ஒருவனிடம் கேட்டால் சொல்லுவான்..”மச்சி..சைட் அடிக்காதவன் அரை மனிதன்..” சைட் என்பது “பார்வை” என்று பொருள்படும் என்று ஆரம்பித்தால், போயாங்க..என்று எல்லாரும் சைட் அடிக்கப்போய்வுடுவீர்கள் என்று தெரியும்…

சைட் என்ற வார்த்தை எப்போது தொடங்கி இருக்கவேண்டும் என்று கேட்டால், நம் கல்வெட்டுக்களில் இதற்கான அடையாளம் இருந்ததாய் தெரியவில்லை... எனக்கு தெரிந்தவரை, நான் சின்னபிள்ளையாக இருந்தபோதே, இந்த வார்த்தையை அடிக்கடி கேட்டிருக்கிறேன்.”என்ன மாமூ..சைட்டா..”, “வாடா மச்சி, சைட் அடிச்சிட்டு வருவோம்..”, “மச்சான்..அவ என்ன சைட் அடிக்கிறாடா.” கல்லூரி மாணவர்களி பேவரைட் டயலாக்காக இருந்தது “சைட் அடிப்போம்..” என்ற வார்த்தை..என்னிடம் கேட்டால், சைட் அடிக்கத் தெரியாதவன் குருடன் என்பேன்..

எதிரில் அழகான, அல்லது உங்களை கவரக்கூடிய வகையில் ஒரு பெண் நடந்து சென்றால், ஆட்டோமேட்டிக்காக, உங்கள் பார்வை அந்த பெண்ணின் பக்கம் சென்றால், அதுதான் “சைட்..” நன்றாக கவனிக்கவும்.அதோடு நிறுத்திக்கொண்டால்தான் “சைட்…” இதற்கு மேல் சென்று “எக்ஸ்க்யூஸ்மி…வாட் இஸ் டைம் தி நவ்..” என்று ஆரம்பித்தால், அது “சைட்” டின் அடுத்த கட்டம்..கல்யாணம் ஆனவர்கள், இந்த கட்டத்திற்கு செல்லாமல் இருப்பது, உடல், பொருள் ஆவிக்கு நலம்..

என் தமிழ்வாத்தியாரிடம் கேட்டால், “போடா தம்பி…சங்ககாலத்திலேயே, சைட் பத்தி விரிவாக சொல்லியிருக்காங்க” என்பார்..தலைவி நடந்து செல்லும்போது, சைட் அடிக்காத தலைவர்களே இல்லையாம்..புராணத்திலேயே சைட் அடித்துள்ளார்கள் என்றால், நாயர் கடையில் டீயும்,வடையும் அடிக்கும் நாமெல்லாம் எம்மாத்திரம் என்று, பல பொழுதுகள் வியந்ததுண்டு..

திரைப்படங்களில் சைட்டுகள் இல்லாமல், காதல் படங்களே இருக்காது..காதல் என்பது சைட்டோடுதான் ஆரம்பிக்கும்..நாயகி அடிக்கும் முதல் சைட்டுலேயே, எங்கிருந்து வருமோ தெரியவில்லை, நாயகனுக்கு லவ்வு பிச்சுக்கிட்டு வரும். என்னைக் கவர்ந்த திரைப்படத்தில் வந்த ஒரு சைட், காதலுக்கு மரியாதை படத்தில், ஷாலினி, டாக்குடரு விஜய்யை பார்த்து அடிக்கும் சைட்டுதான்..கொஞ்சம் வெட்கம், கொஞ்சம் பயம், கொஞ்சம் காதல், இவையெல்லாம் கலந்து ஷாலினி ஒரு பார்வை பார்ப்பாரே…யாத்தே..அந்த நேரம் பார்த்து நம்ம மொட்டை சார், “விழியில் விழுந்து, இதயக்கதவு.” என்று ஒரு ட்யூன் போட, அந்த சைட்டே, அதகளமாக இருக்கும்..

பொதுவாக ஆண்கள் மட்டும்தான் சைட் அடிப்பார்களா..பெண்கள் சைட்டு அடிக்க மாட்டார்களா, என்று கேட்டால், உங்களுக்கு இன்றைக்குதான் பல் முளைத்திருக்கிறது என்று அர்த்தம். பெண்கள் அடித்த சைட்டுகள் நாட்டில் பல கலவரங்களை உருவாக்கியதும், அடக்கியதுமாய் பல வரலாறுகள் உண்டு. ராமன் வில்லை உடைக்க நடந்து போன்போது, சீதை அடித்த சைட் பற்றி, ஒரு பெரிய பாடலே உண்டு என்று கூறுவர்…”He is handsome” என்று சிம்பிளாக மேலை நாடுகளில் சொல்லிவிடுவர். ஆனால் அந்த வார்த்தையை சொல்லுவதற்கு, நம் கலாச்சாரம் போட்டுள்ள தடையே, பெண்ணடிமைத்தனம்.”அது என்ன, பொம்பளை தெருவுல நடக்கும்போது, தலை நிமிர்ந்து நடக்குறா..ஒருவேளை கேரக்டரு..” என்று சொன்ன கலாச்சாரத்தில் இருந்து சிறிது, சிறிதாக வெளிவந்து கொண்டிருக்கிறோம் என்றே நினைக்கிறேன். ஊர்ப்பக்கங்களில், இன்னும் பல திருவிழாக்கள், சைட்டுக்காகவே சிறப்புறுவதுண்டு..

சைட் என்பது ஒரு கெட்டவார்த்தை என்ற நிலை மாறி, “சைட் அடிப்பதற்காகவே, பல மால்களும், கபேக்களும்” கட்டப்பட்டு, வெற்றிகரமாக பணம் ஈட்டப்படுகின்றன. ஆனால், சைட் அடித்தலும், ஒரு அளவுக்குதான்.. பார்க்கும் பெண்ணை எல்லாம் சைட் அடித்துக்கொண்டே இருந்தால், ஒரு கட்டத்தில் வாழ்க்கை வெறுப்பாகி, சைட் இல்லாத தெருக்களில் நடக்க பயப்படும், சைட் அடிக்கமுடியாத பஸ்களில் ஏறமுடியாத நிலை ஏற்படும் என்ற பிரபல மனநல மருத்துவர் அவியிங்க ராசா உரைக்கிறார்..

சைட்டோ, கைட்டோ, “அவ அழகாக இருக்கா” என்பதோடு நிறுத்திக்கொள்வதே நலம்..”அவ என்ன பிரா போட்டிருக்கா..அவ சைஸ் என்ன” என்று அடுத்த கட்டத்திற்கு செல்வது, வக்கிரத்தின் வெளிப்பாடே..அப்படி வெளிப்பட்டால், அந்த சைட்டின் அழகே கேவலப்பட்டு, உங்கள் சைட் பறிபோகும் வாய்ப்பு உண்டு…அட..எங்க போறீங்க..சைட் அடிக்கத்தானே…

5 comments:

rajamelaiyur said...

Happy independence day . . .

டக்கால்டி said...

Haiyo Haiyo...

டக்கால்டி said...

கடைக்கண் பார்வை தனை கன்னியர்தம் காட்டிவிட்டால்
மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாம்...

நான் நிறைய முறை கடுகு பார்த்திருக்கேன்...ஹி ஹி

aotspr said...

பதிவுக்கு நன்றி.
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

Lehigh Acres Land Surveyors said...

Great blog postt

Post a Comment