Monday, 9 November, 2009

நீயா நானாவில் விளக்காமாத்தடி

“தேங்க்யூ..தேங்க்யூ..வெல்கம் டூ, லயன் டேட்ஸ் சிரப் நீயா, நானா..இந்த சமூகத்தில் விளக்குமாறுக்கு முக்கியப் பங்கு உண்டு. பொதுவாக சுத்தம் செய்வதற்கு பயன்படும் இந்தப் பொருள் சமீபகாலமாக தண்டிக்கும் பொருளாக பயன்படுகிறது..உதாரணமாக சொல்வதனால் மனைவியிடம் வெளக்கமாத்தடி வாங்காதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்..அப்படிப்பட்ட சூழ்நிலையில், இன்று நாம் விவாதிக்கப் போகும் தலைப்பு, கணவர்கள் அதிகம் விளக்கமாத்தடி வாங்குவது திருமணத்திற்கு முன்பா, திருமணாத்திற்கு பின்பா..”

(கணவர்கள் தரப்பிலிருந்து ஒருவர்)

“சார்..வெலக்கமாறு என்று சொல்லவேண்டுமா..வெளக்கமாறு என்று சொல்ல வேண்டுமா..”

“ரொம்ப முக்கியம்..அடிவாங்குறப்ப “ஐயோ அம்மா..காப்பத்துங்க” என்று சொன்னால் உயிருக்கு உத்திரவாதம் உண்டு..நான் மனைவிகள் சைடுல இருந்து வர்றேன்..நீங்க சொல்லுங்க..கணவர்களை அடிக்க ஆயிரத்தெட்டு ஆயுதங்கள் இருக்க ஏன் விளக்குமாறு..”

(மனைவி அழுக ஆரம்பிக்கிறார்) தொகுப்பாளர் மெதுவாக அருகில் சென்று

“ஏம்மா..இப்பவே அழுகாதீங்கம்மா..நாங்க சொன்னா மட்டும் அழுதால் போதும்..அப்படியே நீங்க அழுகலைன்னாகூட நாங்க கேள்வி கேட்டே அழுக வைச்சிடுவோம்..”

“சரிங்க சார்..அது வந்து..இந்த வெளக்கமாறு பாருங்க..இதுதான் சரியான ஆயுதம் சார்..சல்லி விலையில கிடைக்குது..பிஞ்சு போனாக்கூட 10 ரூபாயில வாங்கிக்குருவோம்..இன்னொரு முக்கியமான விசயம் என்னன்னா..நாங்க அடிக்கிறப்ப கணவர் உயிருக்கு பாதிப்பு இல்லை பாருங்க..”

தொகுப்பாளர் கண்கலங்குகிறார்..

“என்ன ஒரு அன்பு..என்ன ஒரு அன்பு..இப்படி ஒரு அன்பு நான் இதுவரை பார்த்ததில்லை..இவர்கள்தான் இந்த சமூகத்திற்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்கள்..உங்களை பார்த்து நாங்கள் பெருமை கொள்கிறோம்..இந்த பெண்ணுக்கு ஒரு ஸ்டாண்டிங்க் ஓவேசன் கொடுக்கலாமே..”

தொகுப்பாளர் எல்லோரையும் எழுந்திருக்க சொல்ல அனைவரும் எழுகின்றனர்..பிண்ணணி இசையில் கிளாப் சௌண்ட்..

“நன்றி..,நன்றி..இப்ப கணவர்கள் பக்கம் வருவோம்.அடி அடிவாங்கியே, ஆடிப்போய் உக்கார்ந்து இருக்கிற நீங்க சொல்லுங்க..உங்க பொண்டாட்டி, விளக்கமாத்தால அடிக்கிறப்ப உங்களுக்கு எப்படி இருக்கும்..”

(கேமிராமேன் அழகாக அமர்ந்திருக்கும் பெண்களையே போகஸ் பண்ணா, தொகுப்பாளர் டென்சனாகிறார்)

“கேமிராமேன்..கொஞ்சம் இந்த பாவப்பட்ட ஜென்மங்கள் மேலயும்

கொஞ்சம் போகஸ் பண்ணுங்கப்பா..நீங்க சொல்லுங்க சார்..”

“சார்..அந்தப் பக்கம் வெளக்கமாத்தால அடிவாங்குறத எவ்வளவு சாதரணமா சொல்லிட்டாங்க..எவ்வளவு கஷ்டமா இருக்கும் தெரியுமா சார்..உச்சிமுதல் உள்ளங்கால் வரைக்கும் ஊமைக்காயம் சார்..5 நிமிசம் காதுக்குள்ளா “கொய்ங்க்” ன்னு ஒரு சத்தம் கேட்கும்..வெளியில கூட சொல்ல முடியாது சார்..”

குமுறி, குமுறி அழ ஆரம்பிக்கிறார்..கேமிரா நன்றாக போகஸ் பண்ண ஆரம்பிக்கிறது..

“நன்றி..நன்றி..நீங்க நல்லா அழுதுக்கிட்டே இருங்க..வெளக்கமாத்தடி பற்றி பல சூடான விவாதங்கள் ஓரு சிறிய விளம்பர இடைவெளிக்குப் பிறகு..”

(சிறிய விளம்பர இடைவெளிக்குப் பிறகு)

“வெல்கம் பேக் டூ லயண்டேட்ஸ் சிரப் நீயா…நானா….இப்ப டாபிக்குக்கு வருவோம்..மனைவிகள் பக்கத்துல சொல்லுங்க..நீங்கள் வெளக்கமாத்தால அதிகம் அடித்தது, திருமணத்திற்கு முன்னா, திருமணத்திற்கு பின்னா..”

“திருமணத்திற்கு பின்பு சார்..”

“கொஞ்சம் எக்ஸ்பிளையின் பண்ண முடியுமா..”

“அது வந்து சார்..நாங்க நல்ல பிள்ளைகளா, சீரியல் பார்த்துக்கிட்டு இருப்போம்..அப்ப வந்து…கடுப்பேத்துற மாதிரி, சோறைப் போடு, குழம்பை ஊத்துன்னு, டிஸ்டர்ப் பண்ணின எந்த பொண்ணுக்கு சார் கோபம் வராமல் இருக்கும்

“நியாயமான கோபம்..ஏங்க..கணவன்மார்களே..இது நியாயமான கோபம்தானுங்களே..”

“இல்லை சார்..மனுசன் ஆபிஸுக்கு போய்ட்டு டயர்டா வந்தா..இந்த சீரியல் இருக்கே சார்..ஏண்டா கல்யாணம் பண்ணினோம்னு இருக்கு சார்..திருமணத்திற்கு முன்பு நிறைய தடவை விளக்கமாத்தடி வாங்கிருக்கோம்..ஆனா, அதுதான் சார் சுகம்..உண்மைய சொல்லப்போனா திருமணத்திற்கு முன்புதான் சார் அதிகம் அடிவாங்கிருக்கோம்..ஆனால் அதில் எல்லாம் ஒரு காதல் தெரியும்..ஆனா திருமண்த்திற்கு முன்பு வாங்குகிற அடி இருக்கே..அதுல ஒரு வெறி தெரியுது சார்..வாங்குற அடியில 2 நாளைக்கு எந்திருக்கவே முடியலை சார்..”

திரும்பவும் கண்கலங்கிறார்..மனைவியை பார்த்து கத்துகிறார்..

“அடியே..நீயும் அழுதுறுடி..அப்பதான் டீ.வியில காண்பிப்பாயிங்க..”

இப்போது மனைவியும் அழுகிறார்..

“ஆஹா..இதுவல்லவோ தம்பதி..உண்மையான அன்பு..வாங்க ரெண்டு பேரும் எந்திரிச்சு இங்க வாங்க..”

ரெண்டு பேரும் எழுந்து வருகின்றனர்..

“சொல்லுங்க மேடம்..இப்படி பாசமா இருக்கிற கணவரை அடிப்பது தப்பில்லையா..”

“தப்புதான் சார்..தப்புதான்..ஆனாலும் நான் என்னதான் அடி, அடின்னு அடிச்சாலும், அவரு ரொம்ப நல்லவரு சார்..எதிர்த்து ஒரு வார்த்தை பேச மாட்டாரு சார்..”

“ஆஹா..நீயா நானா இது போன்ற தம்பதிகளை சேர்த்து வைப்பதில் பெருமை கொள்கிறது..”

“ஆமா சார்..என் சிட்பெண்ட்..சீ..ஹஸ்பெண்ட்..நான் கடுப்பா இருக்குறப்ப எவ்வளவு பாடுவார் தெரியுமா..அவர் பாட்டைக் கேட்கும்போது எனக்கு அழுகை அழுகையா வரும் சார்..(அழுகிறார்)..அவ்வளவு உருக்கமா பாடுவார் தெரியுமா..”

“ஆஹா..அப்படியா..எங்க, மைக்க அவருகிட்ட கொடுங்க..சார் நீங்க பாடுங்க….மேடம் , நீங்க அழுக ஆரம்பிங்க..”

(கணவர் உருக்கமாக பாட ஆரம்பிக்கிறார்)

“டாய்..டாய்…டிங்கிரிடோய்..டாய்..டாய்..டிங்கிரிடோய்..

கத்திருக்கோலு..”

மனைவி விசும்பி விசும்பி அழுகிறார்..

“அடப்பாவி..நீ பாடுற பாட்டைக் கேட்டா, மனைவி மட்டுமல்ல, பாக்குறவியிங்க எல்லாருமே அழுவாயிங்களே..”

(தொகுப்பாளரும் கண்கலங்குகிறார்..)

மனைவி கணவரைப் பார்த்து

“ஐ..லவ் யூ புருசா..”

“ஐ..லவ் யூ..பொண்டாட்டி..”

எல்லாரும் உணர்ச்சிப் பெருக்கால் கைதட்டுகின்றனர்..

“நீயா நானா வரலாற்றில் இதுவரை நடக்காத ஒன்று இது..இதுபோன்ற உணர்ச்சிமிக்க வரலாற்றை, நீயா நானா பதிவு செய்வதில் பெருமை கொள்கிறது..மேடம்..இதுல இருந்து..நீங்க உங்க கணவர் மேலே அன்பு வைச்சிருக்கிறது இவ்வளவு தெளிவா தெரியுது..நீங்க எப்படி அவரை விளக்காமாத்தால அடிச்சீங்க..கொஞ்சம் டெமான்ஸ்ட்ரேசன் பண்ணிக் காட்ட முடியுமா..”

“அதுக்கு விளக்கமாறு வேண்டுமே சார்..”

“நீயா..நானா..உங்களுக்கு அதைக் கொடுக்கும்..”

எங்கிருந்து ஒரு விளக்காமாறு பறந்து வர, மனைவி அதை மனைவி லாவகமாக கேட்ச் செய்கிறார்..

தொகுப்பாளர் கண்வனைப் பார்த்து..

“கிட்ட வாங்க சார்..கல்யாணத்துக்கு முன்னாடி மட்டும் அடிவாங்குறதுக்கு ஓடி வர்றீங்கள்ள..இப்ப வந்து வாங்கிங்க”

மனைவி வெறியுடன் கணவரை சாத்து சாத்து என சாத்த கணவர் கதறுகிறார்..

“அடப்பாவிங்களா..டாபிக்கை விட்டுட்டு இப்படி அடிவாங்க வைக்கிறீங்களேயா..வீட்டிலதான் அடிவாங்குறோமுன்னா இங்கேயுமா….”

கதறுகிறார்..கேமிரா அவர்களையே போகஸ் பண்ண..அங்கு இருக்கும் பெண்களெல்லாம் அவர்களை போகஸ் பண்ண வேண்டும் என்ற எண்ணத்தில், ஆளுக்கு ஒரு விளக்காத்தை எடுத்துக் கொண்டு கணவன்மார்களை நோக்கி ஓடிவர கணவன்மார்கள் எல்லாம் உயிரைக்கையில் பிடித்துக் கொண்டு ஓட ஆரம்பிக்கிறார்கள்..

(ஆத்தாடி..நீங்க எங்க ஓடுறீங்கப்பூ..கீழே உள்ள ஓட்டைப் போட்டுட்டு ஓடுங்க...))

63 comments:

ரோஸ்விக் said...

என்னாண்ணே, வீட்டுல அவய்ங்களோட சண்டையா? சூதானமா இருந்துக்கங்க...
நல்ல நிகழ்ச்சியாதான் இருந்துச்சு....ஆனா, இப்ப என்னமோ இப்படி போகுது....

Anbu said...

:-)

gopi said...

Lion dates will soon loose its market , because of sponcering this kind of worst programs.
Vijai tv starts iritating people.
particularly gopinath activities iritating us.
It is high time for vijai tv to change it self.

D.R.Ashok said...

நல்லாதான்ய்யாயிருக்கு

கோவி.கண்ணன் said...

:)

சூப்பர், நீயா நானா நிகழ்ச்சிக்கு இது எவ்வளவோ பரவாயில்லை.

வானம்பாடிகள் said...

அய்யோ சாமி முடியல=)). வரிக்கு வரி இப்படியா. பிரமாதம்.

jackiesekar said...

நல்லா கவனிச்சு வாரி இருக்கிங்க.. ரசித்தேன்..

கதிர் - ஈரோடு said...

பட்டாசு கிளப்பிட்டீங்க...

அபுஅஃப்ஸர் said...

GOOD LAUGH..!!!

கலகலப்ரியா said...

ungalukku ean inthak kolai veri... =))

உங்கள் தோழி கிருத்திகா said...

கிட்ட வாங்க சார்..கல்யாணத்துக்கு முன்னாடி மட்டும் அடிவாங்குறதுக்கு ஓடி வர்றீங்கள்ள..இப்ப வந்து வாங்கிங்க”

மனைவி வெறியுடன் கணவரை சாத்து சாத்து என சாத்த கணவர் கதறுகிறார்.//////////////

செம ஷாட்....
ஏங்க இப்புடி????
நீங்க முன்ன பின்ன வாங்கிருக்கிங்களோ

இராகவன் நைஜிரியா said...

அய்யா ரங்கமணிகளை இப்படி கலாய்பதை, ரங்கமணிகள் சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது.

KVR said...

செம கலக்கல்

வழக்கறிஞர் சுந்தரராஜன் said...

:)

Anonymous said...

பெண் அடிப்பதைப்போல பாசாங்கு; ஆண் அடிவாங்குவதைபோல பாசாங்கு. இதுவே இன்றைய உலகம்.

பட்டிக்காட்டான்.. said...

ஹா.. ஹா.. அருமை..

அன்புடன்-மணிகண்டன் said...

அண்ணே.. விஜய் டிவி நிகழ்ச்சிகள் உங்கள ரொம்பவே பாதிச்சிருச்சி போல?!?! :)

லெமூரியன் said...

ம்ம்ம்....இப்போலாம் குடும்பத்தோட உக்காந்து ரொம்ப நேரம் டிவி பாக்கிற மாதிரி தெரியுதே.... எங்க போய் முடியும்னு தெரியலையே...! :-)

தூரிகை - Pandiyarajan said...

Nallaaa thaan sir poyittu irunthadhu, But kevalama poyiduchu ippa... Antha varisaiyila Innum sila

1) Anu alavum Bayam illai
2) Antha kaalam Intha Kaalam
.
.
.
.
Mudiyala????!!!!???????

கருவாச்சி said...

ராசா அண்ணே காமெடி பின்றீங்களே கோபிக்கு பதிலா உங்கள "போட்ருவோம்" (அண்ணே நிகழ்ச்சிலதாண்ணே)

மர தமிழன் said...

ஆமாங் யாருக்கு டி.வி கொடுத்தாங்கன்னு சொல்லலியே?? (அதாங்க கூப்டுவெச்சு கடைசில கலர் பேப்பர் சுத்தி தருவாங்களே அது) மற்றபடி எதுக்கும் மற்றபடி பதிவை ஒரு காப்பி ரைட் போட்டு வெச்சுகுங்க அப்படியே சுட்டாலும் சுட்டுடுவாங்க... ) மற்றபடி சிரித்து மாளல...

நட்பு said...

நீயா நானா நிகழ்ச்சி ரொம்ப பிரமாதம்.. கூடிய சீக்கிரம் இப்படி ஒரு தலைப்பு வந்தாலும் ஆச்சர்யபட்ரதுகில்ல.. பட்டாசு கெளப்புறீங்க அண்ணே!

ஊடகன் said...

ரொம்ப நல்லாருக்கு.........
ஒரு சின்ன லொள்ளு சபாவை அரேங்கேற்றி இருக்கிறீர்கள்.....

taaru said...

//உண்மைய சொல்லப்போனா திருமணத்திற்கு முன்புதான் சார் அதிகம் அடிவாங்கிருக்கோம்..ஆனால் அதில் எல்லாம் ஒரு காதல் தெரியும்..ஆனா திருமண்த்திற்கு முன்பு வாங்குகிற அடி இருக்கே..அதுல ஒரு வெறி தெரியுது சார்//
இங்கனக்குள்ள கொஞ்சம் கொளம்பிட்டேன். முன்பு பின்புனு Crazy மோகன் dialogue மாதிரி ... இருந்துச்சு..

நிகழ்ச்சி இப்போல்லாம் கொண்டு கொலையா.. அக்குறாய்ங்க!!! அண்ணே ஊருக்கு வரோம்ற ஞாபகமே இல்லையா? எல்லாரையும் சவட்டுமேனிக்கு டர்ர்ரு ஆக்குரீக... அப்புடியே ஒரு show பாத்த மாதிரி இருக்கு... narrating style சூப்பரா வருதுண்ணே...

இவன் சிவன் said...

ரொம்ப சரினே!!!!!!!!! அது ஏன்னே நீங்க விஜய் டிவி மேல மட்டும் கொலைவெறி தாக்குதல் நடத்துறீங்க??? உங்களையும் "சாரு" மாதிரி காசு கீசு கொடுக்காம ஏமாத்திட்டாய்ங்களா..
சொல்லுங்க தூக்கிருவோம்!!!!!

Mullai said...

Enna Raja, US-la irunthu autola varunumunu romba asaiya? airportuku auto anupidaporanga:)

♠புதுவை சிவா♠ said...

இன்னாப்பா கடைசியில சிறப்பு விருந்தினரை விட்டுடிங்களே

1. சிறப்பு விருந்தினரை : கோவாலு இவர் கடந்த 15 வருடங்களாக அவர் மனைவியிடம் விளக்கமாறால் வீட்டின் உள் அடிவாங்கியவர்

2.. சிறப்பு விருந்தினரை : சு.சாமி இவர் கடந்த 10 வருடங்களாக மனைவி மற்றும் மாமியாரல் வீதி மற்றும் பேருந்து , இரயில் பயணத்தின் போதும் விளக்கமாறால் அடிவாங்கியவர்.

தொகுப்பாளர் : இப்ப நீங்க சொல்லுங்க சார் வீட்டில அடிவாங்கரத்து பாதுகாப்பா இல்ல இவர்மாதிரி வீதியில அடிவாங்கரத்து நல்லதா?

பல சூடான விவாதங்கள் ஓரு சிறிய விளம்பர இடைவெளிக்குப் பிறகு..”

:))))))))))))))))

सुREஷ் कुMAர் said...

ராசா.. ஏன் ராசா.. ஏன்.. ஏனிந்த கொலைவெறி.. டயலாக் எல்லாம் பட்டைய கெளப்புது போங்க..

அவிய்ங்க ராசா said...

////////////////////////
ரோஸ்விக் said...
என்னாண்ணே, வீட்டுல அவய்ங்களோட சண்டையா? சூதானமா இருந்துக்கங்க...
நல்ல நிகழ்ச்சியாதான் இருந்துச்சு....ஆனா, இப்ப என்னமோ இப்படி போகுது....
9 November, 2009 8:35 PM
////////////////////////
ஆஹா..குடும்பத்துல குழப்பத்தை உண்டு பண்ணிருவீங்க போலேயே..)))))

அவிய்ங்க ராசா said...

//////////////////
Anbu said...
:-)
9 November, 2009 8:42 PM
///////////////////
நன்றி அன்பு..

அவிய்ங்க ராசா said...

//////////////////////
gopi said...
Lion dates will soon loose its market , because of sponcering this kind of worst programs.
Vijai tv starts iritating people.
particularly gopinath activities iritating us.
It is high time for vijai tv to change it self.
9 November, 2009 9:05 PM
////////////////////////
ஆமாண்ணா..கடுப்பு ஏறுது…

அவிய்ங்க ராசா said...

//////////////////
r, 2009 9:05 PM
D.R.Ashok said...
நல்லாதான்ய்யாயிருக்கு
9 November, 2009 9:11 PM
///////////////
நன்ரி அஷோக்..

அவிய்ங்க ராசா said...

///////////////////////
er, 2009 9:11 PM
கோவி.கண்ணன் said...
:)

சூப்பர், நீயா நானா நிகழ்ச்சிக்கு இது எவ்வளவோ பரவாயில்லை.
9 November, 2009 9:24 PM
//////////////////
நன்றிண்ணே..

அவிய்ங்க ராசா said...

///////////////////////
வானம்பாடிகள் said...
அய்யோ சாமி முடியல=)). வரிக்கு வரி இப்படியா. பிரமாதம்.
9 November, 2009 9:35 PM
//////////////////////
நன்றி வானம்பாடிகள்..உங்கள் தொடர்வருகை கண்டிப்பாக எனக்கு உற்சாகம் அளிக்கிறது.,,

அவிய்ங்க ராசா said...

//////////////////
, 2009 9:35 PM
jackiesekar said...
நல்லா கவனிச்சு வாரி இருக்கிங்க.. ரசித்தேன்..
9 November, 2009 9:51 PM
///////////////////////////
நன்றி ஜாக்கிசேகர்..

அவிய்ங்க ராசா said...

////////////////////
r, 2009 9:51 PM
கதிர் - ஈரோடு said...
பட்டாசு கிளப்பிட்டீங்க...
9 November, 2009 9:52 PM
///////////////////////
நன்றி கதிர்..உங்கள் கவிதையைப் போலவே..

அவிய்ங்க ராசா said...

////////////
er, 2009 9:52 PM
அபுஅஃப்ஸர் said...
GOOD LAUGH..!!!
9 November, 2009 9:53 PM
////////////////
நன்றி அபுஅப்ஸர்..))

அவிய்ங்க ராசா said...

//////////////////
r, 2009 9:53 PM
கலகலப்ரியா said...
ungalukku ean inthak kolai veri... =))
9 November, 2009 10:27 PM
/////////////////////
ஹி..ஹி…

அவிய்ங்க ராசா said...

//////////////////////
er, 2009 10:27 PM
உங்கள் தோழி கிருத்திகா said...
கிட்ட வாங்க சார்..கல்யாணத்துக்கு முன்னாடி மட்டும் அடிவாங்குறதுக்கு ஓடி வர்றீங்கள்ள..இப்ப வந்து வாங்கிங்க”

மனைவி வெறியுடன் கணவரை சாத்து சாத்து என சாத்த கணவர் கதறுகிறார்.//////////////

செம ஷாட்....
ஏங்க இப்புடி????
நீங்க முன்ன பின்ன வாங்கிருக்கிங்களோ
9 November, 2009 10:46 PM
/////////////////////
அதெல்லாம் குடும்ப ரகசியம்..))

அவிய்ங்க ராசா said...

//////////////////////
er, 2009 10:46 PM
இராகவன் நைஜிரியா said...
அய்யா ரங்கமணிகளை இப்படி கலாய்பதை, ரங்கமணிகள் சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது.
9 November, 2009 10:56 PM
//////////////////////
ராகவன் அண்ணனை தங்கமணிகள் சங்கம் கண்டிப்பதாக தற்போது கிடைத்த தகவல்கள் சொல்கின்றன..))

அவிய்ங்க ராசா said...

//////////////////////
KVR said...
செம கலக்கல்
9 November, 2009 11:29 PM
////////////////////////
நன்றி கே.வி.ஆர்..

அவிய்ங்க ராசா said...

/////////////////////
வழக்கறிஞர் சுந்தரராஜன் said...
:)
9 November, 2009 11:31 PM
///////////////////////
நன்றி சுந்தர்ராஜன்..

அவிய்ங்க ராசா said...

//////////////////////
Anonymous said...
பெண் அடிப்பதைப்போல பாசாங்கு; ஆண் அடிவாங்குவதைபோல பாசாங்கு. இதுவே இன்றைய உலகம்.
9 November, 2009 11:47 PM
///////////////////////
என்னண்ணே..காமெடி ஷோவில தத்துவம்லாம்..)

அவிய்ங்க ராசா said...

//////////////////////
r, 2009 11:47 PM
பட்டிக்காட்டான்.. said...
ஹா.. ஹா.. அருமை..
10 November, 2009 12:12 AM
//////////////////////
நன்றி பட்டிக்காட்டான்..

அவிய்ங்க ராசா said...

////////////////
அன்புடன்-மணிகண்டன் said...
அண்ணே.. விஜய் டிவி நிகழ்ச்சிகள் உங்கள ரொம்பவே பாதிச்சிருச்சி போல?!?! :)
10 November, 2009 12:54 AM
///////////////////////
ரொம்ப அண்ணே..

அவிய்ங்க ராசா said...

/////////////////
லெமூரியன் said...
ம்ம்ம்....இப்போலாம் குடும்பத்தோட உக்காந்து ரொம்ப நேரம் டிவி பாக்கிற மாதிரி தெரியுதே.... எங்க போய் முடியும்னு தெரியலையே...! :-)
10 November, 2009 1:10 AM
/////////////////
விளக்கமாத்தடிலதான்..))))

அவிய்ங்க ராசா said...

//////////////////////
ber, 2009 1:10 AM
தூரிகை - Pandiyarajan said...
Nallaaa thaan sir poyittu irunthadhu, But kevalama poyiduchu ippa... Antha varisaiyila Innum sila

1) Anu alavum Bayam illai
2) Antha kaalam Intha Kaalam
.
.
.
.
Mudiyala????!!!!???????
10 November, 2009 1:54 AM
///////////////////////
ஆமாண்ணே..அதுவும் அணு அளவும் ரொம்ப ஓவருண்ணே..))

அவிய்ங்க ராசா said...

//////////////////////
ber, 2009 1:54 AM
கருவாச்சி said...
ராசா அண்ணே காமெடி பின்றீங்களே கோபிக்கு பதிலா உங்கள "போட்ருவோம்" (அண்ணே நிகழ்ச்சிலதாண்ணே)
10 November, 2009 2:25 AM
///////////////////////
ஆஹா..ஆட்டோவெல்லாம் அனுப்புச்சிராதிங்கண்ணே..

அவிய்ங்க ராசா said...

/////////////////////
ber, 2009 2:25 AM
மர தமிழன் said...
ஆமாங் யாருக்கு டி.வி கொடுத்தாங்கன்னு சொல்லலியே?? (அதாங்க கூப்டுவெச்சு கடைசில கலர் பேப்பர் சுத்தி தருவாங்களே அது) மற்றபடி எதுக்கும் மற்றபடி பதிவை ஒரு காப்பி ரைட் போட்டு வெச்சுகுங்க அப்படியே சுட்டாலும் சுட்டுடுவாங்க... ) மற்றபடி சிரித்து மாளல...
10 November, 2009 3:02 AM
///////////////////////
நன்றி மரத்தமிழன்(மறத்தமிழன்???)

அவிய்ங்க ராசா said...

/////////////////////
ber, 2009 3:02 AM
நட்பு said...
நீயா நானா நிகழ்ச்சி ரொம்ப பிரமாதம்.. கூடிய சீக்கிரம் இப்படி ஒரு தலைப்பு வந்தாலும் ஆச்சர்யபட்ரதுகில்ல.. பட்டாசு கெளப்புறீங்க அண்ணே!
10 November, 2009 3:22 AM
///////////////////////
நன்றி நட்பு அண்ணே..

அவிய்ங்க ராசா said...

////////////////
ஊடகன் said...
ரொம்ப நல்லாருக்கு.........
ஒரு சின்ன லொள்ளு சபாவை அரேங்கேற்றி இருக்கிறீர்கள்.....
10 November, 2009 3:59 AM
/////////////////
நன்றி ஊடகன்..

அவிய்ங்க ராசா said...

//////////////////////
er, 2009 3:59 AM
taaru said...
//உண்மைய சொல்லப்போனா திருமணத்திற்கு முன்புதான் சார் அதிகம் அடிவாங்கிருக்கோம்..ஆனால் அதில் எல்லாம் ஒரு காதல் தெரியும்..ஆனா திருமண்த்திற்கு முன்பு வாங்குகிற அடி இருக்கே..அதுல ஒரு வெறி தெரியுது சார்//
இங்கனக்குள்ள கொஞ்சம் கொளம்பிட்டேன். முன்பு பின்புனு Crazy மோகன் dialogue மாதிரி ... இருந்துச்சு..

நிகழ்ச்சி இப்போல்லாம் கொண்டு கொலையா.. அக்குறாய்ங்க!!! அண்ணே ஊருக்கு வரோம்ற ஞாபகமே இல்லையா? எல்லாரையும் சவட்டுமேனிக்கு டர்ர்ரு ஆக்குரீக... அப்புடியே ஒரு show பாத்த மாதிரி இருக்கு... narrating style சூப்பரா வருதுண்ணே...
10 November, 2009 4:52 AM
//////////////////////
ஆமாண்ணே..இப்பதான் கவனிச்சேன்..”பின்பு” என்றுதான் இருக்கவேண்டும்..நன்றிண்ணே,.,ஹெல்ட்மேட் போட்டுதான் வ்ர்வோம்ல..

அவிய்ங்க ராசா said...

//////////////////////
இவன் சிவன் said...
ரொம்ப சரினே!!!!!!!!! அது ஏன்னே நீங்க விஜய் டிவி மேல மட்டும் கொலைவெறி தாக்குதல் நடத்துறீங்க??? உங்களையும் "சாரு" மாதிரி காசு கீசு கொடுக்காம ஏமாத்திட்டாய்ங்களா..
சொல்லுங்க தூக்கிருவோம்!!!!!
10 November, 2009 5:36 AM
//////////////////////
பார்க்கிறதே விஜய் டீ.வி மட்டும்தான்னே..அதுதான்..

அவிய்ங்க ராசா said...

///////////////
Mullai said...
Enna Raja, US-la irunthu autola varunumunu romba asaiya? airportuku auto anupidaporanga:)
10 November, 2009 9:43 AM
/////////////////
ஆஹா..விட்டா, நீங்களே ஆட்டோ அனுப்புவீங்க போலயே..

அவிய்ங்க ராசா said...

////////////////
♠புதுவை சிவா♠ said...
இன்னாப்பா கடைசியில சிறப்பு விருந்தினரை விட்டுடிங்களே

1. சிறப்பு விருந்தினரை : கோவாலு இவர் கடந்த 15 வருடங்களாக அவர் மனைவியிடம் விளக்கமாறால் வீட்டின் உள் அடிவாங்கியவர்

2.. சிறப்பு விருந்தினரை : சு.சாமி இவர் கடந்த 10 வருடங்களாக மனைவி மற்றும் மாமியாரல் வீதி மற்றும் பேருந்து , இரயில் பயணத்தின் போதும் விளக்கமாறால் அடிவாங்கியவர்.

தொகுப்பாளர் : இப்ப நீங்க சொல்லுங்க சார் வீட்டில அடிவாங்கரத்து பாதுகாப்பா இல்ல இவர்மாதிரி வீதியில அடிவாங்கரத்து நல்லதா?

பல சூடான விவாதங்கள் ஓரு சிறிய விளம்பர இடைவெளிக்குப் பிறகு..”

:))))))))))))))))
10 November, 2009 10:33 AM
/////////////
ஆஹா..இதயே ஒரு பதிவா போடலாம் போலேயே..கலக்கல் போங்க..)))

அவிய்ங்க ராசா said...

//////////////////
er, 2009 10:33 AM
सुREஷ் कुMAர் said...
ராசா.. ஏன் ராசா.. ஏன்.. ஏனிந்த கொலைவெறி.. டயலாக் எல்லாம் பட்டைய கெளப்புது போங்க..
10 November, 2009 11:26 AM
//////////////////////
நன்றி சுரேஷ்..

..:: Mãstän ::.. said...

ஹஹஹ... கலக்கல் ராசா.

ம்ம்ம்ம்ம்... பாதிப்பு பலமா இருக்கும் போல???

Anonymous said...

sooper.nallathaan pinnittinga.

Anonymous said...

அந்த நிகழ்ச்சியை கொஞ்ச நேரம் பாத்தேன், டென்சன் ஆகி டிவி பொட்டிய ஒடச்சுருவேன்னு பயந்து ஆப் பண்ணிட்டேன் ( டிவி நான் வாங்கினது, கலைஞர் குடுக்கலை) :)

Suvaiyaana Suvai said...

கலக்கல்!!

அவிய்ங்க ராசா said...

//////////////////////
r, 2009 6:58 PM
..:: Mãstän ::.. said...
ஹஹஹ... கலக்கல் ராசா.

ம்ம்ம்ம்ம்... பாதிப்பு பலமா இருக்கும் போல???
10 November, 2009 7:31 PM
Anonymous said...
sooper.nallathaan pinnittinga.
10 November, 2009 9:12 PM
mayil said...
அந்த நிகழ்ச்சியை கொஞ்ச நேரம் பாத்தேன், டென்சன் ஆகி டிவி பொட்டிய ஒடச்சுருவேன்னு பயந்து ஆப் பண்ணிட்டேன் ( டிவி நான் வாங்கினது, கலைஞர் குடுக்கலை) :)
10 November, 2009 9:12 PM
Suvaiyaana Suvai said...
கலக்கல்!!
17 November, 2009 12:45 PM
/////////////////////
நன்றி மஸ்தான், அனானி, சுவை..

அருண் பிரசாத் ஜெ said...

அண்ணே சூப்பரண்ணே !!!
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுண்ணே !!!
கலக்கிட்டிங்க போங்க !!!
---
அன்புடன் அருண்
prasathj@gmail.com

I LOVE YOU said...

AV,無碼,a片免費看,自拍貼圖,伊莉,微風論壇,成人聊天室,成人電影,成人文學,成人貼圖區,成人網站,一葉情貼圖片區,色情漫畫,言情小說,情色論壇,臺灣情色網,色情影片,色情,成人影城,080視訊聊天室,a片,A漫,h漫,麗的色遊戲,同志色教館,AV女優,SEX,咆哮小老鼠,85cc免費影片,正妹牆,ut聊天室,豆豆聊天室,聊天室,情色小說,aio,成人,微風成人,做愛,成人貼圖,18成人,嘟嘟成人網,aio交友愛情館,情色文學,色情小說,色情網站,情色,A片下載,嘟嘟情人色網,成人影片,成人圖片,成人文章,成人小說,成人漫畫,視訊聊天室,a片,AV女優,聊天室,情色,性愛

Post a Comment