Tuesday, 31 March, 2009

என்னுடைய முதல் பதிவும் ஏர்டெல் சூப்பர் சிங்கரும்

நம்ம முதல் பதிவு…..என்ன எழுதலாம்….ஏதாவது வரலாற்று சிறப்பு மிக்கதா எழுதணும்….
ஏங்க இந்த ஏர்டெல் சூப்பர் சிங்கர் போடுங்க……..
முதல் பதிவு எழுதுறேன்…..தொந்தரவு செய்யாதே….நீயே போட்டுக்கோ……….
இணையில்லா சந்தோசம்..அளவில்லா சங்கீதம்…..இது உங்க ஏர்டெல் சூப்பர் சிங்கர்……
ம்ம்ம்ம்….ஏதாவது தலைவர் பற்றி எழுதலாம்….காந்தி…நேரு…காமராஜர்……..
உன்னிஜி…..ஸ்ரீனீஜி….சுஜாதாஜி………….
ராஜாஜி…..
வாவ்….வாழ்க்கைலே உருப்படியா ஒன்னு சொன்னீயே…ராஜாஜி பத்தி தானே சொன்ன..
இல்லங்க…உங்க பெயரைத் தான் ஜி போட்டு கூப்பிட்டுப் பார்த்தேன் மாலினி பேசுறமாதிரி……
(கொலை வெறியுடன்..)..ஆமா..சிவாவ மாலினி மாதிரி எப்படி கூப்பிடுவ…..
சிவாஜி…..
ஏன்டி….சிவாவ கூப்பிட சொன்னா சிவாஜியை கூப்பிடுற……….
(கொலை வெறி ஷிப்டு ஆகி….)நைட் ஆப்பம் கேட்பிங்கல ….அப்ப வச்சிகிறேன்….
ஏன்ன நிம்மதியா எழுத விடு…ம்ம்ம்..என்ன எழுதலாம்…சீனா புரட்சியை பற்றி எழுதலாமா…
இந்த பிரசன்னா பையன் என்னமா புரட்சி பண்றான் பாத்திங்களா….சங்கீதம் தெரியாம இருந்துகிட்டு இவ்வளவு ரவுண்டு வந்திருக்கான்…என்ன சொல்றீங்க….
என்னை எழுதவிடு…என்ன எழுதலாம்…சாருமாதிரி பின்னவீனதுவம் எழுதலாமா..கிம் கி டுக்………
நீங்க பாடுனது ப்லாலெஸ்ஸா இருக்கு..என்டிங் நோட்ஸ் சரியாயில்லை..க்ராக்காகுது…ஆனாலும் நல்ல பாடுறீங்க..நீங்க அடுத்த ரவுண்டு போகலாம்…..
அய்யோ…கிம் கி டுக்..கிம் கி டுக்…..அய்யோ அவர் என்ன பாடினார்…..
அய்யோ …பாருங்க….ராகினிஸ்ரீய வழக்கம்போல அடுத்த ரவுண்டுக்கு செலக்ட் செய்துட்டாங்க….ரொம்ப அநியாம்ங்க…….
அந்த சனியனை முதல்ல ஆப் பண்னு…ம்ம்ம்…ஐடியா…..ஜெயமோகன் மாதிரி விளிம்பு நிலை மனிதனைப் பற்றி எழுதலாம்…….
நன்னா இருந்திச்சி..ராகினி…உங்க டிரஸ் நல்ல இருக்கு..நல்ல ஸ்மைல் பண்றீங்க..ராகினி இப்ப நல்ல இம்புருவ் ஆயிருக்கிங்க….
நம்ம எழுதுவது புதுசா எழுதலாம்... இந்த சேகுவாரா….
சே……..ரவி என்னமா பாடுறான் பாருங்க…அவன் பாடும் போது ஏன் வாத்து மாதிரி கழுத்தை வச்சிக்கிறான்………
அம்மா தாயே….அவன் டெய்லி வாத்து கறி சாப்பிடுறான்….ஆள விடு….நான் எழுதணும்….
அது எப்படிங்க..அவன் பிராமின் பையன் இல்ல….எப்படி சாப்பிடுவான்….
ஆகா..நான் வரலை இந்த கேமுக்கு….அப்புறம் டோண்டு மாமா வந்து அடிப்பாரு…..
இந்த அஜீஸ் எம்புட்டு நல்ல பாடுறான் …..அவன் பைனல்லில் வந்துவிடுவானா…..
எனக்கு தெரியாது…நான் உன் பக்கத்தில உக்காந்து எழுதவே மாட்டேன்….
டங்க்க் யு….
அய்யோ இது என்ன…..
ஹிஹி….தேங்க்யூ..…மாலினி ஸ்டைல்ல சொன்னேங்க…………
கடவுளே.. இது வேறயா…ஆமா மாலினி பக்கத்துல நின்னுக்கிட்டு இருக்காரே ….அவர் முதல்லயிருந்து ,எதுவும் பேச மாட்டுங்கிராறே…….
இப்ப பேசுவாரு பாருங்க…..”This is Yukenderan Vasudevan Nair Signing Off..”
ஆள வூடுங்க சாமி…………

…………
17 comments:

victor said...

வாழ்த்துக்கள்....

எட்வின் said...

தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

ராஜா said...

வருகை மிக்க நன்றி எட்வின் அவர்களே !

மணிகண்டன் said...

பிரிச்சி மேய்ஞ்சி இருக்கீங்க. முன்னாடி வேற பேருல எழுதிக்கிட்டு இருந்தீங்களா ? உண்மைய சொல்லுங்க !

மணிகண்டன் said...

இல்ல போல. word verification வச்சி இருக்கீங்க. நீங்க புது பதிவர் தான் ~!

கடைக்குட்டி said...

வாழ்த்துக்கள்!!!

கடைக்குட்டி said...

அந்த யுகேந்திரன் மேட்டர் சூப்பர்.. நெறய எழுதுங்க.. நாங்க படிக்கிறோம்... (ஹ்ம்ம்... என் கடைக்கு வரவே ஆள் இல்ல.. இதுல உதவி வேற..)

ஊரான் பிளாக்-அ ஊட்டி வளத்தா நம்ம பிளாக்.... அதேதான்..

ராஜா said...

//பிரிச்சி மேய்ஞ்சி இருக்கீங்க. முன்னாடி வேற பேருல எழுதிக்கிட்டு இருந்தீங்களா ? உண்மைய சொல்லுங்க!//
//இல்ல போல. word verification வச்சி இருக்கீங்க. நீங்க புது பதிவர் தான் ~!//
வருகை நன்றிங்க!அப்படியே ஓட்டும் போட்டுவிடுங்க!

மணிகண்டன் said...

ப்ராக்சி வோட் கூட போட்டுட்டேன். ஏற்கனவே பிரபல பதிவும் ஆயிடுச்சு.

ஆனா, நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லலையே !

ராஜா said...

இல்லீங்கண்ணா...நான் புது பதிவர் தான்...ஆனா நிறைய பதிவு படிச்சிருக்கேன்...

ராஜா said...

//ஊரான் பிளாக்-அ ஊட்டி வளத்தா நம்ம பிளாக்.... அதேதான்//

நன்றி கடைக்குட்டி அண்ணா..நானும் கடைக்குட்டி தான் வீட்டுக்கு...

தமிழ்நெஞ்சம் said...

எங்க குடும்பத்திலே cost cutting செய்வதற்காக முதல் வேலையா Cable TV ஐக் cut பண்ணிட்டோம்.

அதனால இதெல்லாம் பார்க்க முடியல..

ராஜா said...

//எங்க குடும்பத்திலே cost cutting செய்வதற்காக முதல் வேலையா Cable TV ஐக் cut பண்ணிட்டோம்.

அதனால இதெல்லாம் பார்க்க முடியல.//

வருகைக்கு நன்றி அண்ணா....நல்ல வேளை..தப்பிச்சிட்டீங்க...

பிரதீப் said...

dei, kalakkure...vaa, vaa! oru varshama padichathai ellam sethu vachi ezutha aarambichitta...vazthukkal!

Mullai said...

hey victor, mullai here...enna blog ellam ore kallakala irruku :)

sukanmani said...

எதேச்சையாக உங்கள் வலைப்பதிவு கண்ணில் பட்டு , வாசிக்க ஆரம்பித்து இன்று உங்கள் வாசகியாகவே ஆகிவிட்டேன். நன்றாக எழுதுகிறீர்கள் ராஜா.
உங்களின் வெற்றி , நகைச்சுவை கலந்த எழுத்துதான். தொடர்ந்து எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்!!!!

sukanmani said...

முதல் பதிவிலிருந்தே ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன்.
என்னால் தாங்கவே முடியல. ரொம்ப காமெடி ஸ்டாக் வைச்சிருக்கீங்க போல.
உண்மையிலேயே கலக்கிட்டீங்க. ஆனாலும் அவங்களை வைச்சே தொடக்கி இருக்கீங்க. அவங்க வாசிக்கிறதில்லயோ?? தொடர்ந்து கலக்குங்க ராஜா!!!

Post a Comment