Saturday 21 April, 2012

கிரேசி மோகனின் சாக்லேட் கிருஷ்ணாவுடன் ஒரு அனுபவம்




அமெரிக்காவில், எங்கள் ஊர் தமிழ்மன்றம் சார்பாக க்ரேசி மோகனின்சாக்லேட் கிருஷ்ணாஎன்ற நாடகத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். கடந்த 2 மாதங்களாக, எந்த, இந்திய கடைக்கு சென்றாலும், கலர் பேனர்களில் கிருஷ்ணராக, கிரேசி சிரித்துக்கொண்டிருந்தார். தமிழ்மன்றமும், டிக்கெட்டுகள் விற்பதற்கு நிறைய ஏற்பாடுகள் செய்திருந்தார்கள்.

நாடகம் 7 மணிக்கு அரங்கேறுவதகாக விளம்பரம் செய்திருந்தார்கள். இந்த வாரம் முழுவதும், வேலை நிறைய இருந்தது. ஆபிசில் நிறைய ஆணிகள் புடுங்க வேண்டியிருந்ததால், 7 மணிக்கு போவனோ, இல்லையோ என்ற பயம் வேறு. சரி, வேலை இல்லையென்றால்க்ரேசி மோகன்வேலை இருந்தால்லூஸ் மோகன்என்று என்னை நானே தேற்றிக்கொண்டேன்.

வெள்ளைக்காரன் மாதிரி சரியாக 7 மணிக்கு அரங்கத்திற்கு சென்றேன். நம்பமுடியாதபடி கூட்டம். ஏதோ ரஜினி படத்திற்கு வந்தாற் போல ஒரு பிரமை. தட்டுத்தடுமாறி உள்ளே சென்ற போது, யாரோ ஒருவர்மைக் டெஸ்டிங்க்செய்து கொண்டிருந்தார். வழக்கம்போலதொழில்நுட்ப கோளாறுகளால், இன்றைய நாடகம் சற்று தாமதமாகஎன்று சொல்லியபோது, “தமிழேன்டாஎன்று மார்தட்டிக்கொண்டேன்..ஒரு ஓரசீட்டாக பார்த்து உக்கார்ந்தேன். கூட்டம் கொஞ்சம் அதிகமாகி கொண்டு இருக்க எங்கள் வீட்டு கிருஷ்ணர் வேலையை ஆரம்பித்தார். வேறு யாரு, என் ஒன்றரை வயது, மகன்தான்.

அங்கு அழகாக தொங்கிக்கொண்டிருந்த சீரியல் பல்புகளை சாக்லேட் பல்பு போல கடிக்க நினைக்க மனம் பதறியபடி, ஒவ்வொன்றாக தூக்கி சுவற்றில் போட்டேன்அவன் பின்னே, நான் ஓட, என் பின்னே நான் ஓட, அங்குள்ள குழந்தைகளுக்கு ஒரே காமெடி ஷோ தான். சரி, இதற்கு மேல் சரிப்பட்டு வராது என்று நினைத்து, சிறுவர்களுக்கு பிரேத்யேகமா கொடுத்திருந்த அறைக்கு சென்றேன்..அங்கு குழந்தைகளுக்குடாய் ஸ்டோரிஓட்டிக்கொண்டிருந்தார்..ஊர்ப்ப்க்கம் அடிப்பம்பில் கைவைத்து வைத்து குடிக்கும் நம்ம ஊர் குழந்தைகள்..” வாவ்இட்ஸ் டெர்ரிப்பிள்என்று சொல்லியபோது, “அடங்கொக்கா மக்காஎன்று சொல்லத்தோன்றியது..அங்கு ஓடிக்கொண்டிருந்த ஒரு வாண்டை கூப்பிட்டுஏம்பா டிராமவுக்கு போகலையாஎன்று கேட்டபோது, “செம போர் அங்கிள்..டாய் ஸ்டோரி இட்ஸ் குட்அண்டு டோண்ட் வாண்ட் சிட் வித் காமன் பீபிள்அதவாது நம்ம பாஷையில் சொன்னால் , “உங்களை மாதிரி கம்மனாட்டிக கூடல்லாம் உக்கார மாட்டோம்டாஎன்று ரைம்ஸ் ஒப்பிப்பது போல் சொன்னபோது, பெற்றோர்களை நினைத்து பெருமை கொண்டேன்..”என் குழந்தை இங்கிலீசெல்லாம் பேசுது…”



மதியம் வேறு சாப்பிடவில்லையா, பசி உயிர் போனது. பால் நழுவி, பீரில் விழந்தாற் போல, அங்கு குழந்தைகளுக்கு “பீட்சாவும்” குழந்தைகள் பிஸ்கெட்டும் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். நம்ம பையன், பால் தவிர எதுவும் சாப்பிடமாட்டானே..நம்ம எப்படி போய் கேட்பது என்று பயம் வேறு. கொடுப்பது, இந்த ஊர்க்கார பெண்மணி..ஆனால், பசித்தால், டைனோடரும், முக்குகடை பிரியாணி சாப்பிடும் என்ற பழமொழிக்கேற்ப, பையனை பகடை காய் ஆக்கி, பிஸ்ஸாவை சாப்பிடுவது என்று முடிவெடுத்தேன்…நேராக அங்கு சென்று..

“கேன் ஐ ஹேவ் ஒன் பிஸ்ஸா அண்டு குக்கி(பிஸ்கெட்)” என்று கேட்க, அந்த அமெரிக்க பெண்மணி மேலும் கீழுமாக என்னைப் பார்க்க எனக்கு பயமாகி போனது. ஒருவேளை க்ராமர் மிஸ்டேக்கா இருக்குமோ என்று “கேன் ஐ..” என்று திரும்ப ஆரம்பிக்க, “இந்த குழந்தைக்கா” என்று பையனைப் பார்க்க, என் பையன் முகத்தைத் திருப்பிக்கொண்டான்..”பிட்சா, இந்த மீசை வைத்த குழந்தைக்கு” என்று கேட்டால் ஒரு மாதிரியாக இருக்குமோ என்று “ஆக்சுவலி..எங்க குழந்தை, 6 மாசத்துல\, பிட்சா, பர்கர்ன்னு சாப்பிட பழகிட்டோம்” என்று நாகூசாமல் ஆங்கிலத்தில் பொய் சொல்ல, அவர்கள் சிரித்துக்கொண்டே, அந்த பிட்சாவை கொடுக்க “ஒரு நாளைக்கு சோத்துக்கு சிங்கி அடிப்படா” என்று என் அப்பா கொடுத்த சாபம் நினைவுக்கு வந்தது. என் பையனைப் பார்க்க “அடங்கொன்னியா, என் பேரை சொல்லி நீ பிட்சா கட்டுறியா” என்று பார்த்தான்..வாழ்க்கையிலேயே, ஒன்றரை வயசு பையன் அப்பாவுக்கு ரெண்டு பிட்சா சம்பாதித்து கொடுத்திருக்கிறான் என்றால், அது என் பையன் தான்…

ஒருவழியாக, அவனை சமாதானப்படுத்தி, அரங்கத்துக்குள் சென்ற போது, க்ரேஷி மோகன் கிருஷ்ணர் வேஷம் போட்டு, “மாது..” என்று ஆரம்பித்துக்கொண்டு இருந்தார். வழக்கம்போல, க்ரேஷி மோகனின் “மாது”, “மைதிலி”, “திருட்டுப்பாட்டி” என்று வழக்கமான க்ளிஷேக்கள். குழந்தைகளுக்கு பிடிக்கும் என்பதால், “சாக்லேட் கிருஷ்ணர்” என்று பேர் வைத்ததாக சொன்னதை, எந்த குழந்தையும் கேட்டதாக தெரியவில்லை…..ஒருவேளை அவர் மீசைவைத்த குழந்தைகளைப் பற்றி சொன்னாரா என்று தெரியவில்லை…

சில இடங்களில் சிரிப்பு வந்தது. நிறைய இடங்களில் கொட்டாவி வந்தது. சாப்பிட்ட பிட்சா வேறு வயிற்றுக்குள் ஏதோ செய்ய, வயிறு குலுங்கி எங்கும் சிரிக்கமுடியவில்லை. இந்த நாடகத்தை 500வது தடவை அரங்கேற்றியிருப்பதாக சொல்ல, “அடப்பாவேமே” என்று சொல்லத் தோன்றியது..நாடகத்தில் சொல்லப்பட்ட ஜோக்குகளை காட்டிலும், என் மகன் அடித்த லூட்டிகளுக்குத்தான் விழுந்து விழுந்து சிரித்தேன்…

சாக்லேட் கிருஷ்ணா..பெயரில் மட்டும்தானோ…..

Sunday 1 April, 2012

ஹல்லோ…துபாயா…அங்க என் பிரதர் மார்க் இருக்காரா..





ஊருப்பக்கத்துல சில மைனர்களைப் பார்க்க அம்புட்டு கடுப்பா இருக்கும்ணே….மஞ்சள் கலருலயோ, இல்லாட்டி, பச்சைக் கலருலயோ, ஆள அடிக்கிற மாதிரி, ஒரு வேஷ்டியும் சட்டையும் போட்டுக்கிட்டு, ஒரு புல்லட்டுலடப..டப..” ன்னு வர்றப்ப ஆச்சர்யமா இருக்கும்..அடங்கொய்யால, போன வருசம் வரைக்கும், முக்குத்தெருவுல மூக்கு ஒழுகிக்கிட்டு இருந்த பயபுள்ளைதான இவன்..இவனுக்கு என்னடா, இம்புட்டு பவுசுன்னு ஆச்சர்யப்பட்டு கேட்டா

விஷயமே தெரியாதா..பயபுள்ள, துபாய்ல போயி வேலை பார்த்துட்டு போனவாரம்தான், செழிப்பா வந்து இறங்கியிருக்கான்.”ன்னு சொல்லுவாய்ங்க..எனக்குனா ஆச்சர்யம்..ஆஹா.துபாயில என்ன ஏதாவது தங்கம் விளையுதா..அப்படின்னு ஒரு டவுட்டு..அவிங்ககிட்ட ஏதாவது கேட்டுப்புட்டா, “துபாயில நாங்கெல்லாம்..” அப்படின்னு ஆரம்பிச்சா ரெண்டு காதுலயும் ரத்தம் ஒழுகும்குறதுனால, அப்படியே மனசுக்குள்ள வைச்சு பூட்டிப்புடுவேன்..

அப்புறம்வெற்றி கொடிகட்டுபடம் பார்த்தபிறகுதான் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துருச்சு..ஆஹா..பயபுள்ளைக, “கேக்ரான்..மேக்ரான்..” கம்பெனியிலதான் வேலைபார்த்துருக்குகளா..அந்தப் படம் வந்தப்பிறகு, அம்புட்டு புள்ளைகளையும் ஒரு வாரத்துக்கு தெருப்பக்கம் காணோம்..நாங்களும் ஊருக்குள்ளார வலைவீசி தேடிப்பிடிச்சு, ஒரு ஆளை புடிச்சோம்..பயபுள்ளைய கத்திமுனையில வைச்சி கேட்டப்பதான்..அவிங்க படுற பாடுங்க எல்லாம் கண்ணீர் கதையா வெளியே வந்துச்சு..

அந்த கொடுமை எல்லாம் சொல்லி, செண்டிமெண்டாக்க விரும்பலை. ஆனாலும் இந்த துபாயை ஒரு நாளைக்காவது சுத்திப் பார்த்துருணும்னு மூக்கம்புட்டு ஆசைண்ணே..நம்மளும் ஒரு நாளைக்குபில்டிங்க் காண்டிராக்டர்ன்னு ஊருக்குள்ள சொல்லிக்கிட்டு திரியனும் அப்படின்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன். ஆனா, துபாய, இதுவரைக்கும் படத்துலதான் பார்க்க முடிஞ்சுச்சு.

ஆனா, போனவாரம்தான், அந்த இனிப்பான செய்தி வந்துச்சு..”ஆமாண்ணே..துபாய்க்கு வர்றேன்….அமெரிக்கால இருந்து சென்னைக்கு வர்றதுக்கு துபாயில பயபுள்ளைக லேண்ட் ஆகுறாய்ங்களாம்…9 மணிநேரம் துபாயில இருக்க வாய்ப்பு..என்னால நம்பவே முடியலண்ணே..ஆஹா..துபாய பார்க்கப் போறேன்..அப்படிங்குற நினைவே கண்ணுமுன்னாடி ஓடிக்கிட்டு இருக்கு

என் பிளாக்க மொத்தம் 100 பாசக்கார பயபுள்ளைக படிக்கிறீங்க..அதுல 20 பயபுள்ளைக, துபாயா இருக்கும்(வேறென்ன..பக்கத்துல இருக்குற ஹிட்கவுண்டர் தான்..ஹி..ஹி). அதனால துபாயில இருக்குற நம்ம ஊருக்காரபயபுள்ளைக கிட்ட ஒரே ஒரு வேண்டுகோள்..இல்லாட்டி, விண்ணப்பம்..ம்ம்ம்..வேணாம் உதவின்னே வைச்சிக்கலாம்..நடுநடுவுல மானே, தேனே, பொன்மானேன்னு போட்டுக்குங்ககண்மணி..அய்யயோ

துபாயில நம்ம பயபுள்ளைக இருந்தா, தயவுசெய்து, எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணமுடியுமாசில விவரங்கள் தேவை..

1) துபாயில் 7 மணிநேரம் செலவழிக்க தகுந்த மாதிரியான இடங்கள் எவை
2) துபாயில் டாக்சி எடுப்பது நல்லதா..அல்லது ஏதாவது கவர்மெண்டு பஸ்(அதாவது 12பி, 37சி..அது மாதிரி)
3) துபாய்புர்ஜ் காலிபாஎன்ற உயர்ந்த கட்டிடத்திற்கு செல்ல ஆசை..ஏர்போர்டில் இருந்து பக்கமா..எவ்வளவு தூரம்

அடுத்த கொஸ்டினுலதான், துபாய்க்கார பயபுள்ளைக, அலறி அடிச்சு ஓடப்போறாய்ங்க

4) நேரம் இருந்தால், உங்களுக்கு சிரமம் இல்லையென்றால், ஒரு 7 மணிநேரம் என் கூட வர இயலுமா….உங்களுக்கு எந்த பொருட்செலவு, மற்றும் சிரமம் கொடுக்கமாட்டேன் என்பதற்கு நான் கேரண்டி..ஏனென்றால், புது இடம் என்பதால், தனியாக செல்ல கொஞ்சம் தயக்கமாக உள்ளது

இந்த நாலு கொஸ்டினுல ஒரு கொஸ்டின் ஆன்சர் தெரிஞ்சாலும்எனக்கு aveengarasa@gmail.com மெயில் பண்ணுங்க..நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம்

ஹல்லோ..துபாயா..என் பிரதர் மார்க் இருக்காரா..என்னது 20 எண்ணைக்கிணறு எரிஞ்சு போச்சா..கூல்டவுண்..கூல்டவுண்..கூல்டவுண்...மே மாசம் அங்க வர்றேன்அப்ப பார்த்துக்கலாம்..அட்லீஸ்ட் 20 க்ரோர்ஸ் லாஸ்யா..அதுக்குப்போய் சின்னப்புள்ள அழுகுற மாதிரி அழுகுறான்யா..ஹே..மணி கம்ஸ் டுடே..கோஸ் டுமாரோயா..