ரோட்டுப் பக்கம் சென்று மனிதர்களையும், அவர்கள் செய்யும் வேலைகளையும் பார்க்கும்போது, “எவ்வளவு கஷ்டம்டா” என்று எண்ணியதுண்டு. எந்த வேலையும், எளிதான வேலையில்லை. உடலுக்கும், மனதுக்கும் எவ்வளவு அயர்ச்சி. ஆனால், வேலையே இல்லாமல், சம்பளம். தங்குவதற்கு ஒரு மாளிகை. கை தட்டினால், ஓடி வர பணியாட்கள். மாதத்திற்கு ஒருமுறை நினைத்தால் உலக டூர். கண்கொத்தி பாம்பாய், பின்னாலே, பாதுகாப்புக்கு வரும் கருப்புப்படை பூனைகள்..கேட்கவே, ஆவலாய் இருக்கிறதல்லவா..ஆனால், கனவில் நினைத்தாலும், இந்த வேலைக்கு நாமெல்லாம் செலக்ட் ஆக மாட்டோம்..அப்படி என்ன வேலை என்று கேட்கிறீர்களா. நம்ம நாட்டின் ஜனாதிபதிதான்.
நான் கேள்விப்பட்டவரை நம்மநாட்டு ஜனாதிபதி, நாட்டுமக்களுக்கு உருப்படியாய் எதுவும் செய்ததாய் நினைவில்லை. முகத்தில் ரெடிமேட் சிரிப்போடு, அயல்நாட்டு பிரதமர்கள், அதிபர்கள் வந்தால் கைகுலுக்குவது, அல்லது, அவர்கள் நாட்டுக்குச் சென்று, குலுக்கிய கையை இன்னொரு முறை குலுக்குவது, தேசிய விருது கொடுத்துவிட்டு,போட்டோவுக்கு போஸ் கொடுப்பது. பதவியேற்பு கொடுப்பது, என்று. எந்த ஜனாதிபதியாவது, நாட்டில் பெட்ரோல் விலை ஏறினால் குரல் கொடுத்திருக்கிறார்களா..எந்த ஜனாதிபதியாவது, விலைவாசி ஏற்றத்தை கண்டித்து, பிரதமரிடம் ஒரு வார்த்தை பேசியிருக்கிறார்களா, எந்த ஜனாதிபதியாவது, தினமும் அல்லல்படும் ஏழைமக்களின் துயர்துடைக்க, ஒரு துளி நேரம் ஒதுக்கியிருப்பார்களா..
இப்படி ஒன்னுமே செய்யாத, அல்லது செய்ய இயலாத, இந்தப் பதவிக்கு, அப்துல் கலாம் வந்தால் என்ன, ஆம்ஸ்ட்ராங்க் வந்தால் என்ன…ஏதாவது மாற்றம் நடக்கப்போகிறதா..வழக்கம்போல நடக்கும், விலையேற்றங்கள், விலைவாசி கொடுமைகள், ஊழல் குற்றச்சாட்டுக்கள், பாலியல் கொடுமைகள். குண்டுவெடிப்புக்கள், பட்டினி சாவுகள், என, ஒருதுளி மாற்றம் ஏற்படுத்தாத, இந்தப் பதவிக்கு, ஏண்ணே இம்புட்டு போட்டி..
ஆனாலும், இந்தப் பதவிக்கு என்னுடைய சாய்ஸ் பிரணாப் முகர்ஜிதான். ஏன் தெரியுமா..மேலுள்ள படத்தை பாருங்கள்..என்ன ஒரு அருமையான தூக்கம்..இதற்குமேல் இந்தப் பதவிக்கு என்ன தகுதிவேண்டும். அதுவுமில்லால், பெட்ரோல் விலையேத்தி, அனைவரின் வயித்திலும், அமிலத்தை பரவச்செய்த பிரணாப் முகர்ஜியை, நிதியமைச்சர் பதவியிலிருந்து தூக்க, இதுதான் நல்ல சான்ஸ்.. அதற்குத்தான் சொல்லுகிறேன்,..அவரை ஜனாதிபதியாக்கினால் நாட்டுக்கு நல்லது..இல்லையன்றால், நிதியமைச்சராக இருந்து, இருக்குற விலையை முழுதும், ஏற்றி, இனிமேல் கட்டை வண்டியில்தான் ஆபிசுக்கு போக வேண்டிய நிலை ஏற்படும்..ஜாக்கிரதை…
5 comments:
sema comedy.. :) :) namaku ithuthanu eluthiiruku, vera enna seiya.. :)
Correct ...
நம்ம அப்துல் கலாம், சோனியா காந்தியை திருப்பி அனுப்பியது மறந்துவிட்டீர்களா...
எப்படி அண்ணே.. இப்படி எல்லாம்... சிந்திக்கறீங்க... படத்தை எங்கிருந்து பிடிச்சீங்க.. ?
நீங்க சொல்றதைப் பார்த்தா மற்ற நாட்டு தலைவர்களிடம் கைகுலுக்கவும், வெளிநாடு செல்லவும்தான் குடியரசுத் தலைவர் பதவி...! இல்லையா?
அந்த பொம்மைப் பதவிக்கும் போட்டி போடுறாங்களே... அது ஏண்ணே? அந்த விளக்கத்தையும் கொடுத்திருந்தீங்கன்னா நல்லா இருந்திருக்கும்..
ராசா பதிவு சூப்பர் அடுத்த பதிவு எப்போ
Post a Comment