Monday 27 September, 2010

எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு…

பொதுவாக எனக்கு கோபம் வருவதில்லை. வந்தால் கூட அதிகபட்சம் இரண்டு நிமிடங்கள் தான். முற்றிலும் மறந்துவிடுவேன். ஆனால் என்னவென்று தெரியவில்லை, நேற்று, எழுந்ததிலிருந்து ஒரே கோபம்தான்.

முதல் கோபம், படுக்கையிலிருந்து ஆரம்பித்தது. நான் தூக்கத்திற்கு அடிமையான ஆள். இரவு என்னிடம் இறைவன் தோன்றி ஏதாவது வரம் வேண்டுமா என்று கேட்டால் கூட “சாரி லார்ட், காலையில் வரமுடியுமா..நான் தூங்கவேண்டும்” என்று சொல்வேன். சனி, ஞாயிறுதான் நன்றாக தூங்கமுடிகிறது. முடிந்த அளவுக்கு காலை 10 மணிவரை தூங்குவேன். அது போல எனக்கு பிடிக்காதது தூக்கத்தில் எழுப்புவது. இப்படிதான் நேற்று தூங்கி கொண்டு இருந்தபோது “மழை வருதே..” என்ற பசங்க பாட்டு கேட்டது. நான் வைத்திருக்கும் ரிங்க் டோன் அது. கட் பண்ணி விட்டு தூங்கினேன். திரும்பவும் கால், கட் பண்ண, கால், கட் பண்ண, இப்படி 12 தடவை. எனக்கு வெறி ஏறிவிட்டது. மவனே யாரா இருந்தாலும் பரவாயில்லை, இன்னைக்கு விடுறது இல்லை, என்று போனை எடுத்தால் “சயமுயகஞயமுயஜங்க்” என்று ஒரு பெண் பேசினாள். “ஆத்தா தாயே என்ன பேசுற” என்று ஆங்கிலத்தில் கேட்க “மே ஐ ஸ்பீக்கிங்க் டு வூ ஜாங்க்” என்றாள். ராங்க் கால். எனக்கு வந்த கடுப்பில் ஆங்கிலத்தில் நான் இதுவரை பேசாத கெட்ட வார்த்தைகளை பேச, அவள் “ராங்க் கால் வந்தா ராங்க் நம்பர்ன்னு சொல்லு. அதென்ன ராங்கா பேசுறது..” என்று வடிவேல் பாணியில் திட்டியிருப்பாள் என்று நினைக்கிறேன்.

அப்புறம் எங்கே தூங்குவது என்று காலைகடனை முடிக்கலாமென்றால் இருக்கிற ஆத்திரத்தில் மூத்திரம் கூட வரவில்லை, பல்விளக்க பேஸ்டை எடுக்க பேஸ்ட் இல்லை. கடுப்பில் அதை தூக்கி எறிந்தேன். ஆத்திரம்.. சரி குளிக்கலாம் என்று ஷவரை திறக்க, தேவர் மகன் படத்தில் சொல்வது போல் வெறும் காத்துதான் வந்தது. இன்னும் கொஞ்சம் அழுத்தி திறக்கிறேன். கைபிடி கையோடு வந்தது. வந்த கோபத்தில் அதை தூக்கி எறிய கண்ணாடியின் மேல் பட்டு கண்ணாடி டமார்..

இப்போது சொல்லுங்கள். ஒரு மனிதன் கோபப்படுவதில் நியாயம் இருக்கிறதல்லவா..சரி, பக்கத்தில் உள்ள கடைக்கு சென்று பேஸ்டாவது வாங்கிவரலாம் என்று காருக்கு செல்கிறேன். டிரைவர் சீட்டில் ஒரு பூனை ஹாயாக தூங்கிறது. நேற்று அவசரத்தில் கார் கண்ணாடி மூட மறந்துவிட்டேன். நான் காலை கடனை முடிக்கும்முன்பே, அது என் சீட்டில் முடிந்திருந்தது. வந்த கடுப்பில் அதை திட்டுவதற்கு வாயை திறக்கிறேன். பல் நாற்றம் தாங்க முடியாமல் அதுவே ஓடிவிட்டது. ஒருவழியாக பேஸ்ட் வாங்கிவந்து பல்விளக்கி, காலை கடனை முடித்து குளித்து இன்டெநெட்டை திறக்கிறேன். பி.பி ஏறியது. எனக்கு எப்போதும் பிடிக்காத ஒரு எழுத்தாளர் வழக்கம்போல் அவர் பாணியில் எழுதியிருக்க என்னால் படிக்க முடியவில்லை. எனக்கு கோபம் ஏறவே லேப்டாப்பை மூடிவிட்டேன். இதற்கு மேல் என்னால் இந்தநாளை தள்ளமுடியாது என்று உணர்ந்தேன்.

ஏன் எனக்கு இதுபோல நடக்கிறது. என்னை காலையில் இருந்து கோபமூட்டுவது எது. என்னால் கண்டுபிடிக்கமுடியவில்லை. சிறிய காரணத்திற்காக என் மனைவி மேல் எறிந்து விழுந்தேன். நண்பனிடம் கோபம் காட்டினேன், எனக்கே என்னை பிடிக்காமல் போய்விட்டது. நான் ஏன் இப்படி ஆனேன். என்னை மாற்றியது எது. இப்படியே இருந்தால் மிருகமாகிவிடுவேனோ..பயம் என்னை ஆட்கொள்ள, இதற்கு முடிவுதேட முயற்சித்தேன்.

என் மனம் எப்போதும் அலைபாயும் போது, என் நண்பரிடம்தான் செல்வேன். ஏன் நண்பன் என்று சொல்லாமல் நண்பர் என்றேன் என்றால் அவருக்கு வயது 50. மனதளவில் இன்னும் இளைஞர். என்னுடைய பிரச்சனைகளுக்கு முடிவு சொல்பவர்., அவருடைய முகத்தில் கோபத்தை பார்ப்பது என்பதே அரிது. அவருடைய முகத்தைப் பார்த்தாலே பாதி கோபம் போய்விடும். முதலில் என்னை பார்த்தவுடன் பாசத்துடன் அணைப்பார். அதிலேயே மீதி கோபம் போய்விடும். என்னைப் பார்த்ததுமே அடையாளம் கண்டுகொண்டார்

“என்ன ராசா..ரொம்ப கோபம இருக்கீங்க போலிருக்கு..”

காலையிலிருந்து நடந்ததை எல்லாம் சொன்னேன்.

“இப்ப சொல்லுங்க நண்பர்..நான் கோபப்படுறதுல நியாயம் இருக்குள்ள..”

சிரித்தார்..

“ராசா..உன்னோட கோபத்திற்கு யார் காரணம்னு நீ நினைக்கிற..”

“ம்..அது..விதி..”

“இல்லை. முழுக்க முழுக்க நீயே..”

“சார்..நான் எப்படி..நான் என்ன செய்தேன்..”

“சரி..முதலில் இருந்து வருவோம்..இன்று யார்மேல் முதல் கோபம்..”

“அந்த சீனாக்காரி மேலதான் சார்..மனுசன் சனி ஞாயிறுதான் தூங்குறான்..அப்பவும் போன் பண்ணி டிஸ்டர்ப் பண்ணி.,.”

“இப்ப சொல்லு ராசா..சீனாக்காரிக்கும் உனக்கும் முன்பகை இருக்கா..அவ உன்னை எதுக்கு அந்த நேரத்தில் டிஸ்டர்ப் பண்ணனும்..”

“அது..தெரியாம..”

“நீயே சொல்லிட்ட..தெரியாம..அவளுக்கு பாவம் என்ன எமர்ஜென்சியோ..எவ்வளவு அவசரம் இருந்தால் 12 முறை கால் பண்ணி இருப்பா..அவகிட்ட “சாரி, ராங்க் நம்பர்ன்னு ஒரு வார்த்தை சொன்னா உன்னோட கவுரவத்திற்கு ஏதாவது இழுக்கு வந்துடுமா..”

“…”

“அடுத்த கோபம்..??”

“அந்த பேஸ்ட் மேல..”

“அது உயிரில்லாத பொருள். நேற்று நீ பல்விளக்கும்போதே உனக்கு தெரியவில்லையா..தீரப்போகிறது என்று. அதை வாங்கி வைப்பதுதானே, நீ செய்யவேண்டியது..அதற்கு அது என்ன பண்ணும்…”

“…”

“சரி..அடுத்த கோபம்..”

“ஷவர் கைபிடி..”

“சரி..எத்தனை முறை திறக்க முயற்சித்தாய்..”
”ஒரு பத்து முறை..”

“ஏன்..”

“வந்த ஆத்திரத்துல..”

“ஹா..ஹா..உன்னோட ஆத்திரத்திற்கு அது என்ன பண்ணும். நீ அதன்மேல் உன் ஆத்திரத்தை காட்ட முயற்சித்தாய்..அது தாங்கவில்லை. தப்பு, உன்மேலா..அதன்மேலா..”

எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்தது..

“சரி..அந்த பூனை..”

“ராசா..வெளியில் உள்ள குளிருக்கு அது என்ன பண்ணும். ஒதுங்க இடம் தேடியிருக்கும். பாவம் அதற்கு என்ன தெரியும், காரில் தூங்ககூடாதென்று. ஒரு பூனைக்கு கூட இடம் கொடுக்காத அளவுக்கா உன் மனது சுருங்கிவிட்டது..”

“ம்ம்ம்ம்..”

“கடைசியான கோபம்..”

“அந்த எழுத்தாளர்..எப்போதுமே இப்படிதான் எழுதுறாரு..என்ன ஒரு ஆட்டிடியூட்..எப்படி அவர் எழுதாலம்..ஒரு மனசாட்சி இல்லை..அவர சும்மா விடக்கூடாது..”

“சரி..அவர் ஒரு படைப்பாளி என்பதை ஒத்துக்கொள்கிறாயா,..”

“ஆமாம்..”

“படைப்பாளனுக்கு படைப்பு சுதந்திரம் இல்லையா…அவருடைய படைப்பில் தலையிட நீ யார்..யார் அந்த சுதந்திரம் கொடுத்தார்.,.”

“அதுக்காக அவர் எப்படி எழுதலாம்..”

“ஓ..எப்படி எழுதவேண்டும் என்று எதிர்பார்க்கிறாய்..”

“எனக்கு பிடிக்கும்படி..”

“ஓ..அதாவது உனக்கு அடிமை போல..கரெக்ட்..யோசித்து பார்..சுதந்திர உலகத்தில் இருக்கிறாய். எல்லாருக்கும் அவர் படைப்ப எழுத உரிமை இருக்கிறது. இப்படிதான் எழுதவேண்டும் என்று சொல்ல நீ, யார்..யார் அந்த உரிமையை கொடுத்தது. அவரை மாற்ற நீ ஏன் முயற்சிக்கிறாய். உனக்கு பிடிக்கவில்லையென்றால் அவரை ஏன் மீண்டும், மீண்டும் படிக்கிறாய்…பிடிக்கவில்லையென்றால் அவரை புறக்கணித்து விடு. அவர் எழுதுவது தப்பென்றால் ஒருவர் பின் ஒருவராக எல்லாரும் அவரை புறக்கணிப்பர்..அவரே அதை உணர்வார்…இப்போது சொல், குற்றம் யார்மேல்..உன்மேலா..அவர்மேலா..”

“---------------“

“ம்..இப்போது சொல்..இன்று முழுவதும் உன்னுடைய கோபத்திற்கு யார் காரணம்…”

தெளிவாக சொன்னேன்..

“நாந்தான்..”

என்மனம் லேசாகி போனது. அதே தெளிந்த மனதோடு வீட்டிற்கு சென்றேன். சிலவேளைகள் செய்த பிறகு என்னுடைய ப்ளாக்கை திறந்தேன். திறந்தவுடன், அந்த கமெண்ட் தெரிந்தது..

“டே..ராசா..சொறி பிடிச்ச நாயே..என்ன திமிரு இருந்தா, எந்தலைவனை பத்தி தப்பா எழுதுவ…”

இந்தமுறை எனக்கு கோபம் வரவில்லை..

Saturday 25 September, 2010

சூழ்நிலை கைதிகள்

உடம்பு கொஞ்சம் வெயிட் போட ஆரம்பித்து விட்டதால், சாயங்கால வேளைகளில் வாக்கிங்க் செல்ல பழகிகொண்டேன். எங்கள் அபார்ட்மெண்டில், ஒரு பெரிய குளம், அதைச்சுற்றி சிறிய புல்வெளி அழகாக அமைந்திருக்கும். அந்த புல்வெளியில் தினமும் வாக்கிங்க் செல்வதை பழக்கமாக்கி கொண்டேன். சுத்தமான காற்று, பச்சை பசலேன்று பூமித்தாய் மேல் போர்வை போர்த்தினார்போல் அழகு, எப்போதோ கிடைக்கப்போகும் மீனுக்காக இன்னும் ஒற்றைக் காலில் நிற்கும் கொக்குகள், வாயை அடக்காமாட்டாமல், வேர்க்க விறுவிறுக்க நடைபோடும் பெருசுகள், அம்மா வருகிறார்களா, என்று திரும்பி பார்த்துக் கொண்டே ஓடும் குழந்தைகள், அந்த நடையைப் பார்த்து பார்த்து களிப்புறும் பெற்றோர்..என்று அந்த ஏரியாவே ரம்யமாக காட்சியளிக்கும். ஓடுவதால் உடம்பு குறைகிறதோ இல்லையோ, எப்போதும் கணிப்பொறியைக் கட்டி அழும், என் போன்றோர்க்கு இதெல்லாம் ஒரு வரப்பிரசாதம்..

நேற்றும் இதுபோன்று வாக்கிங்க் செல்லும்போது அந்த பெண்மணியைப் பார்த்தேன். வயது சுமார் 65 இருக்கும், பார்த்தவுடனே தெரிந்து கொள்ளலாம், நம்ம ஊரிலிருந்து வந்தவர்கள் என்று. குளத்தையே வெறித்து பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார்கள். பார்வையில் ஒரு வெறுமை தெரிந்தது. நான் மதுரைக்காரன் என்று எப்போதும் என் நெற்றியில் ஒட்டியிருப்பதால், சுலபமாக என்னை அடையாளம் கண்டு கொண்டார்கள்..

“தம்பிக்கு மதுரையா..”

“ஆமாம்மா..நீங்க..”

“திருமங்கலம்….நல்லா இருக்கீங்களா..”

“நல்லா இருக்கேம்மா..என்ன இந்த பக்கம்..”

ஏதோ காய்கறி சந்தைக்கு வந்தாற்போல கேட்டேன். சிரித்துக் கொண்டார்கள்.

“பையன், இங்கதான வேலை பார்க்குறான். மருமகளுக்கு இப்பதான் பிரசவம் ஆச்சு...அதான் உதவிக்கு வந்தேன்..”

“அமெரிக்கா வந்து எவ்வளவு நாள் ஆச்சு..”

“ம்ம்..பையன் வந்து ஒரு 3 வருசம் இருக்கும். நான் போன மாசம்தான் வந்தேன்..”

எனக்கு நேரமாகிவிட்டதால், விடைபெறலாம் என்று எண்ணினேன்,,

“சரிங்கம்மா..இன்னொருநாள் பார்க்கலாம்..கிளம்புறேன்..”

சொல்லிவிட்டு கிளம்பலாம் என்று எத்தனித்தேன்..

“தம்பி..”

குரலில் ஒரு தழுதழுப்பு கேட்டு திரும்பி பார்த்தேன். அந்த அம்மாதான். அதிர்ந்து போனேன். கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. அடுத்த வார்த்தையிலேயே அழுது விடுவார்கள் போல தெரிந்தது..

“அய்யோ.என்னமா..என்ன ஆச்சு..ஏன் ஒருமாதிரி இருக்கீங்க..”

“கொஞ்சம் இருந்து பேசிட்டு போப்பா..மனசுக்கு ஆறுதலா இருக்கும்..”

“ஏம்மா..”

“இந்த ஊருல பேசுறதுக்கு யாருமே இல்லையேப்பா..வாழ்க்கையே வெறுத்து போச்சு..எவ்வளவுநேரம், அந்த நாலு சுவத்தைப் பார்த்து கிட்டே இருக்குறது..எப்படி தம்பி, இங்க இருக்கீங்க..”

இந்த முறை அழுதே விட்டார். அவசரமாக சேலை தலைப்பை எடுத்து துடைத்தார்..

“கண்ணுல ஏதோ விழுந்துருச்சி போல..” மறைக்க முயற்சி செய்தார்கள்.. ஆனால் முடியவில்லை..

“ஏம்மா..மகனும், மருமகளும் இருக்காங்கள..அவங்ககூட பேசலாம்ல.”

“எங்கப்பா..பையன் 9 மணிக்கு போயிட்டு 8 மணிக்கு வர்றான். மருமக, 9 மணிக்கு போயிட்டு 7 மணிக்கு வர்றா..வந்தவுடனே களைப்புல தூங்கிறாங்க..அவுங்களை சொல்லியும் குத்தமில்லை..நாந்தான்..”

“ஏன்..”

“காலையிலிருந்து அந்த நாலு சுவத்துக்குள்ளாற எவ்வளவு நேரம்தான் டி.விய பார்த்துகிட்டே இருக்குறது. குழந்தைய வேற பார்த்துக்கணும்.. சரி..வெளிய வந்து நாலு மனுச மக்கள பார்க்கலாமுன்னு பார்த்தா, வெறிச்சோடி கிடக்குது. பக்கத்து வீட்டுக்காரங்க கூட வெளியே வரமாட்டுறாங்க…ஒரு கடை கண்ணிக்கு கூட போக முடியல..ப்ச்..ஏதோ ஜெயிலுக்குள்ள இருக்குற மாதிரி இருக்குது..நீங்க எப்படிப்பா இருக்கீங்க..”

“வேற என்னமா பண்ணுறது. பொழைப்பு ஓடணும்ல..உங்க கணவரை கூப்பிட்டு வந்துருக்கலாமுல..”

“இல்லப்பா..ஊருப்பக்கம் சொத்து கிடக்கு..பார்த்துக்குற ஆள் வேணுமில்ல..அதான் அங்கேயே இருக்காரு..40 வருசம் தம்பி..ஏன் கூடயே இருப்பாரு..ஒருநாள் கூட பிரிஞ்சு இருக்கமாட்டாரு..இப்ப எப்படி இருக்காரோ..மாத்திரை கூட சரியா போடுறாருன்னு தெரியலை.”

குரலில் பிரிவின் வலி தெரிந்தது..

“அய்யோ தம்பி..பாவம் என்னோட கஷ்டத்தை உங்ககிட்ட சொல்லி உங்களையும் கஷ்டப்படுத்துறேன்..நீங்க ஏதோ அவசரமா போகனுமுன்னு சொன்னீங்கள்ள..கிளம்புங்கப்பா..”

குரல்தான் போகச்சொல்லியது... மனசு இன்னும் கொஞ்சம் நேரம் இருப்பா என்று சொல்லுவது போல தோன்றியது. அலுவலக வேலையாக அவசரமாக செல்லவேண்டி இருந்ததால், கிளம்ப வேண்டியிருந்தது..

“சரிங்கம்மா..அந்த பக்கம் வந்தா வீட்டுக்கு வாங்க..23 நம்பர்தான்..”

“கண்டிப்பா..நீயும் இந்தப்பக்கம் வர்றப்ப கொஞ்சம் பேசிட்டு போப்பா..மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும்..”

மனதுக்கு கஷ்டமாக இருந்தது. பெற்றோர்கள்தான் எவ்வளவு பெரிய தியாகிகள்..ஒவ்வொரு முறையும், எவ்வளவு சம்பாதிக்கலாம் என்றே எண்ணி கொண்டிருக்கிறோம். ஆனால், தன் கடைசிநிமிடத்தில் கூட “சாப்பிட்டயா..” என்று மகனையோ, மகளையோ பார்த்து கேட்கும் எண்ணம் யாருக்கு வரும். ஒவ்வொரு நிமிடமும், தன் மகளுக்கோ, மகனுக்கோ வாழும் நடமாடும் தியாகிகள்..

“அமெரிக்கா போயிருந்தேன்..மகனையும் மருமகளையும் பார்த்தேன்..” என்று அவர்கள் சொல்லும் பெருமித குரலுக்கு பின்னால் எத்தனை தியாகங்கள். சோகங்கள்.. பலவித எண்ண ஓட்டங்களுடன் அவர்களிடம் விடைபெற்று வீட்டுக்கு சென்றேன்..

மனைவி இருந்தாள்..

“என்னங்க..வீட்டுல இருந்து உங்கம்மா கால் பண்ணியிருந்தாங்க..”

“என்ன சொன்னாங்க..”

“அதாங்க..அம்மா இங்க வர்றதுக்கு விசா அப்ளை பண்ணியிருந்தோம்ல..அப்பாயிண்ட்மெண்ட் தேதி வந்துருச்சாம்..ஏதோ கேள்வி கேக்கணுமாம்..

“ “

“என்னங்க..குழந்தைய நல்லா பார்த்துக்குருவாங்கள்ள..”

Thursday 23 September, 2010

மிக்சர் ஜூஸ்

இந்த வார நன்றிகள்

மனமார்ந்த நன்றிகள், அனானி நண்பர்களுக்கு. இரண்டு பதிவுதான், எந்திரனைப் பற்றி எழுதியிருந்தேன். அதற்குள் எந்திரன் ரசிகர்களின் அன்பு பாராட்டு மழைதான். கமெண்டுகளை படிக்கும்போது கண்ணீர் வந்தது. எம்மேல இம்புட்டு பாசாமாண்ணே…(நம்பி கமெண்டு பக்கம் போயிடாதீங்க..கெட்ட கெட்ட வார்த்தையா திட்டிருக்காயிங்க..). ஆனாலும் பரவாயில்லைண்ணே..ரசிகர்களின் தரம் முன்னேறியுள்ளது என்று சொல்வேன். முன்பெல்லாம் காதுல இருந்து ரத்தம் வர அளவுக்கு திட்டுவாயிங்க, இப்பெல்லாம் டீசண்டா திட்டுறாயிங்க(உதாரணாமா, “**** மூடிட்டு போடா” , த்தூ இதெல்லாம் ஒரு பொழைப்பா..”, “போடா நாயே..”) ஒருத்தரெல்லாம் இன்னும் ஒரு படி மேலே போய், ஒரு பதிவையே கமெண்டா போட்டுருக்காரு..அனைத்து அனானிகளின் அன்பிற்கும் நன்றிகள்(இதுக்கும் திட்டுவாயிங்க பாருங்க..)

இந்த வார படம்

“ஹோஸ்ட் டவுண்” என்று ஒரு ஆங்கில படம் பார்த்தேன். கதவு டப்டப், வெள்ளை உடை அணிந்து அமெச்சூர்தனமான ஆவி படங்களையே பார்த்து பழகிப் போன எனக்கு வித்தியாசமான ஒரு அனுபவம். கதை இதுதான். யாரோடும் ஒட்டாமல் தனியாகவே வாழ்ந்து வரும் ஒரு உம்மணாமூஞ்சிக்கு நடக்கும் ஒரு விபத்தால் எதிர்பாராத திருப்பம். மனம் சாந்தியடையாமல் திரியும் ஆவிகள் அவர் கண்களுக்கு மட்டும் தெரிய ஆரம்பிக்கின்றன. அவைகளும் இவரோடு பேச ஆரம்பிக்கின்றன. பின்ன என்ன, அமர்க்களம்தான். ஒரு பத்து பதினைந்து ஆவிகள் அவரை துரத்து துரத்தென்று துரத்த, இவர் படும் பாடு இருக்கிறதே..நகைச்சுவையான அவஸ்தைதான். டி.வி.டி கிடைத்தால் கண்டிப்பாக பாருங்கள்..

இந்த வார விவாதம்

கடந்த வாரங்களில் நண்பர்களோடு ஒரு கருத்து விவாதம் நடந்தது. சுவையாகவும் இருந்தது. விவாதம் இதுதான், எந்த அன்பு உண்மையானது, நண்பர்களின் அன்பா, கூடப்பிறந்தவர்களின்(பெரியப்பா வகை சொந்தங்கள் அல்ல) அன்பா..விவாதம் ஆரோக்கியமாக இருந்தது. இது போன்ற விவாதங்களை நிகழ்த்தும்போது, மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சிறிது கேலி பண்ணினாலும், அடுத்தவர்களின் உணர்வுகள் புண்பட வாய்ப்பு உள்ளது. நண்பர்கள், அவர்களின் வாழ்க்கையில் நடந்த நிறைய அனுபவங்களை சொன்னார்கள். என்னுடைய அனுபவங்களை சொன்னேன். முடிவாக ஒரு கணக்கெடுப்பு நடத்தினோம். ஜெயித்தது நண்பர்கள் அன்பே. என்னது நான் யாருக்கு ஓட்டு போட்டேனா..உங்களுக்கு தெரிந்திருக்குமே..உங்களை ஓட்டு போடச்சொன்னால் யாருக்கு??

இந்த வார கொடுமை

“கை அரிக்குதுன்னு பாம்பு புத்துக்குள்ள கைய விட்டானாம்” என்று எங்கள் ஊர் பக்கம் ஒரு பழமொழி சொல்லுவார்கள். நேரம் போகவில்லையென்று காமெடி டிவி பக்கம் சென்றேன். தாமு, சார்லி, வையாபுரி என்று ஒரு காமெடி போட்டார்கள். கழுத்தை தொட்டு பார்த்தால் ஒரே ரத்தம். எவ்வளவு பேர் சான்ஸ் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்கு ஒரு சான்ஸ் கொடுத்திருந்தால் பின்னி எடுப்பார்கள். உதாரணமாக கலைஞர் டிவியில் நடக்கும் நாளைய இயக்குநரில் சென்ராயன் என்பவர் நடித்திருப்பார். இந்த நகைச்சுவை நடிகர்களெல்லாம் அவரிடம் பாடம் படிக்கவேண்டும்.

இந்த வார சிந்தனை

எவ்வளவோ விஷயங்களை பற்றி நினைத்து பார்த்திருக்கிறோம். யாராவது இறப்பை பற்றி நினைத்திருக்கிறொமா..இறப்பு எப்படி இருக்கும். கட்டிலை சுற்று நான்கு ஐந்து பேர்.

“ப்ச்..டாக்டர் என்ன சொல்லியிருக்காரு…”

“இரண்டு நாள்தான் தாங்குமாம்..”

“அய்யயோ..அப்ப லாஸ் ஆப் பே தானா”

“சிக்கிரம் ஆனா நல்லா இருக்குமோ..”

“ம்ம்..எப்படி வாழ்ந்த மனுசன்..”

“ஏ..மகன் வர்றாரு வழிவிடுங்கப்பா…”

“அப்பா..”

“ம்…”

“அப்பா..”

“ம்…”

“இந்த நேரத்துல கேக்ககூடாதுதான்…உயில் எழுதிட்டீங்களாப்பா..”

Monday 20 September, 2010

எந்திரன் நான் பார்ப்பேன்

"ங்கொய்யாலே..தலைவனைப்பத்தியா தப்பா எழுதுற.."
"எந்திரன் நான் பார்ப்பேன்.."
"அது என்னங்க, தலைவன் படம் வர்றப்ப மட்டும் உங்களுக்கு சமூக அக்கறை பொத்துகிட்டு வருது.."
"எந்திரன் நான் பார்ப்பேன்.."
"வேலூரில் எந்திரன் படம் வெற்றி பெற ரசிகர்கள் காவடி, மண்சோறு.."
"எந்திரன் நான் பார்ப்பேன்.."
"**** மவனே..இனிமேல் தலைவனைப் பத்தி ஒருவார்த்தை தப்பா எழுது.."
"எந்திரன் நான் பார்ப்பேன்.."
"அவியிங்க ராசாவை ஊர விட்டே துரத்துங்கடா.."
"எந்திரன் நான் பார்ப்பேன்.."
"சாவுடி..என் தலைவன் படத்துக்கு போறதை வேண்டாமுன்னு சொல்லுறியா.."
"எந்திரன் நான் பார்ப்பேன்.."
"எந்திரன் சினிமா போஸ்டருக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம்..."
"எந்திரன் நான் பார்ப்பேன்.."
"வறுமையினால் மதுரையில் ஒரு குடும்பமே தூக்கில் தொங்கியது.."
"எந்திரன் நான் பார்ப்பேன்.."
"தண்ணி தராம இருக்காங்களே..அவங்களை உதைக்க வேண்டாமா.."
"எந்திரன் நான் பார்ப்பேன்.."
"அய்யோ மன்னிச்சிடுங்க..நான் அந்த மீனிங்குல சொல்லல.."
"எந்திரன் நான் பார்ப்பேன்.."
"நான் எப்ப வருவேன், எப்படி வருவேனுன்னு தெரியாது.."
"எந்திரன் நான் பார்ப்பேன்.."
"தலைவா..தங்க தலிவா...வருங்கால முதல்வரே...."
"எந்திரன் நான் பார்ப்பேன்.."
"டைரக்டர் சொல்லுறதைதான் நான் பேசுறேன்..நீங்க தப்பா புரிஞ்சுகிட்டா நான் என்ன பண்ணுறது"
"எந்திரன் நான் பார்ப்பேன்.."
"தமிழினத்தின் மூத்த தலைவர் கலைஞர்.."
"எந்திரன் நான் பார்ப்பேன்.."
"தைரியலட்சுமி ஜெயலலிதா.."
"எந்திரன் நான் பார்ப்பேன்.."
"பாபா பட பெட்டி கடத்தல். ரஜினி ரசிகர்களுக்கு அடி, உதை.."
"எந்திரன் நான் பார்ப்பேன்.."
"ரஜினிக்கு திருமாவளவன் கடும் கண்டனம். ரசிகர்களுக்கும் விடுதலை சிறுத்தைகளுக்கும் மோதல்..ரசிகர்கள் காயம்.."
"எந்திரன் நான் பார்ப்பேன்.."
"திருமணத்திற்கு ராமதாஸ், திருமாவளவனுக்கு நேரில் சென்று பத்திரிக்கை.."
"எந்திரன் நான் பார்ப்பேன்.."
"யாரும் கல்யாணத்துக்கு வந்திராதீங்க.."
"எந்திரன் நான் பார்ப்பேன்.."


நண்பன் கோவாலு : ராசா..வரவர உனக்கு கோவமே வர்றதில்லையே....என்ன ஆச்சு.."

ஆங்..மறந்துட்டேன்..இந்த தொடர்பதிவுக்கு என்னைப்போன்று கோவமே வராத நல்லபிள்ளைகளை அழைக்கிறேன்,..

இப்படிக்கு அவிங்கராசா,
இணைய எந்திரன் தற்கொலை படைக்கு பெல்ட் குண்டு பொருத்திவிடும் பிரிவு,
எந்திரன் மேல் சமூக அக்கறையுள்ளோர் வட்டம்
மண்சோறு பால்காவடி, கடஅவுட்டுக்கு காசு கொடுப்போர் சங்கம்
கடவுள் எந்திரன் தெரு.,
பேரிக்கா..சாரி..அமெரிக்கா.

ஏங்க..சப்போர்ட்டாதாங்க பேசிருக்கேன்..இதுக்கும் திட்டி பின்னூட்டம் போட்டுறாதீங்க...

Wednesday 15 September, 2010

எனக்கு பிடிக்காத இயக்குநர்கள்

பொதுவாக எனக்கு பிடித்த இயக்குநர்கள் என்று பதிவு எழுதுவார்கள். ஒரு மாற்றத்துக்காக, எனக்கு பிடிக்காத இயக்குநர்கள். சில இயக்குநர்கள் படத்திற்கு போனால், வெளியே எப்படி தப்பித்து வரவேண்டும் என்று முயற்சி செய்வோம். ஆனால், தயாரிப்பாளருக்கும், தியேட்டர்காரர்களுக்கும் உள்ள ஒப்பந்தத்தால், கதவு பூட்டு போட்டு பூட்டிவிடுவார்கள். நாம் கெஞ்சுவோம், கதறுவோம். மனசாட்சி இல்லாதவர்கள், கதவைத்திறந்து
விடமாட்டார்கள். அப்படி வதைபட்டு, மனம் புழுங்கியதன் விளைவே இந்தப் பதிவு. சத்தியமாக சொல்கிறேன், இந்த இயக்குநர்களின் இயக்கத்தில் எனக்கு பிடித்த ஹாலிவுட் நடிகர் டென்சல் வாஷிங்கடன் நடித்தால் கூட போக மாட்டேன். ஏன் உனக்கு இந்திய நடிகர்கள் யாரும் பிடிக்காதா
என்று கேட்கலாம். சாரி..எனக்கு சாம் ஆண்டர்சன் தவிர எந்த இந்திய நடிகரும் பிடிக்காது,,

1. விக்ரமன்

"தம்பி.,,எப்போதும் தெருவிலே சுத்திக்கிட்டு இருக்குமே, நம்ம தெருநாய் செத்துருச்சு...." என்று ஹீரோ ஆஸ்கார் ரேஞ்சுக்கு செண்டிமெண்டாக எஸ்.ஏ ராஜ்குமார் போடுவார் பாருங்கள் ஒரு அருவா..சாரி..மியூசிக்.."லா..லா..லா..லா.." அப்படியே செத்து போகலாம் போல தோன்றும்.
இவர் படத்தில் ஹீரோ, உலகமாக நல்லவர். வில்லனே பரிதாபப்பட்டு "தம்பி..கொஞ்சம் கண்ணை மூடிக்கிறீங்களா..உங்களை கொலை பண்ணனும்" என்ற ரேஞ்சுக்கு கேட்பார் என்றால் பார்த்து கொள்ளுங்கள். இவர் இயக்கத்தில் மாதவன் நடித்த ஏதோ ஒரு படத்தைப் பார்த்து
இரண்டு நாட்களாக காய்ச்சல் வந்து கிடந்தேன். பின்பு இவர் இயக்கத்தில் விஜய்காந்த் நடித்த "மரியாதை" படத்திற்கு என் அமெரிக்க கிளையண்டை கூட்டி சென்று பழிவாங்கியதை ஒரு பதிவாக எழுதியுள்ளேன். இவருடைய படத்தின் மொக்கை ஜோக்குகளைக் கேட்டு
விழுந்து விழுந்து அழுதிருக்கிறேன். ஆனாலும், இவரிடம் எனக்கு பிடித்த ஒன்று ஆபாசமில்லாமல் படம் எடுப்பது.

2. விஜய டி.ராஜேந்தர்

"வாடா என் பஜ்ஜி..வாழைக்காய் பஜ்ஜி.." என்று இவர் ஹைடெசிபலில் கத்தினால் போதும், உடம்பில் உள்ள அனைத்து நோய்களும் குணமாகிவிடும் என்பது ஒரு ஐதீகம். சிரித்து சிரித்துதான். இவருடைய தமிழ்செம்மொழி பாடலான "டாய் டாய், டிங்கிரிடோய்,
டாய் டாய் டிங்கிரிடோய்..கத்திரிக்கோலு" என்ற பாடலின் அர்த்தம் கேட்டு புல்லரித்து போனேன். இன்னும் இளைஞர்களுக்கு சிரிப்பு மருந்தாக திகழ்கிறார். வீராச்சாமியில் "தங்கச்சி" என்று ஒரு லுக் விடுவார் பாருங்கள். டாம் க்ரூஸ் போன் பண்ணி கேட்டதாக ஒரு கிசுகிசு இருக்கிறது. அடுத்த படத்திற்கு தமிழகமே வெயிட்டிங்க், மொத்தமாக லீவ் எடுப்பதற்கு. இவரிடம் எனக்கு பிடித்தது
தன்னம்பிக்கை.

3. பேரரசு

நல்லாதான் போய்கிட்டு இருந்தது. ஆனால் ஒரு படத்தில் வந்து பஞ்ச் டயலாக் பேசுவார் பாருங்கள்,,தியேட்டர் புல்லா ஒரே கிளாப்ஸ்தான்,அப்பதான் அடுத்த டயலாக்கு கேக்காதுன்னுதான். பஞ்ச் டயலாக் பேசியே பலபேரை பஞ்சராக்கியவர். ஓவர் மசாலா உடம்புக்கு ஆகாது என்று அடிக்கடி நிரூபிப்பவர். அடுத்த தானே இசையமைத்து, ஹீரோவாக நடிக்கப்போகிறார் என்பது தமிழகத்திற்கான புயல் எச்சரிக்கை அறிவிப்பு. இவரிடம் பிடித்தது இன்னும் ஹீரொவாக நடிக்காமல் தமிழகத்தை காப்பாற்றுவது

4 .எஸ் ஏ சந்திரசேகர்

"எங்கப்பா சொன்னா கேட்கமாட்டாரு, எப்ப பார்த்தாலும் படம் பண்ணிகிட்டு நஷ்டப்பட்டு இருப்பாரு" என்று விஜய் சீரியசாக சொன்னாலும் அதை ஜோக்காக நினைத்ததன் விளைவே இவருடைய படங்கள். கிட்டத்தட்ட ரேப்சீன் களை மறந்த தமிழ் பட உலகத்தில், ரேப் சீன் களை
வைத்து இன்னும் வெறியேத்துபவர். அமெச்சூர்தனமாக இவருடைய படங்கள் பார்த்து பலமுறை தியேட்டர் கதவைத் தட்டியிருக்கிறேன், உள்ளிருந்து வெளியே ஓடுவதற்கு. இவரிடம் பிடித்தது சலிக்காமல் பல படங்களை எடுத்து, தியேட்டர் கேண்டினுக்கு கல்லா கட்டுவது..

இப்படி பல எழுதிக்கொண்டே போகலாம். ஆனால் பேரரசு பட சண்டைக்கு இணையான பல காட்சிகள் பதிவுலகத்தில் அரங்கேறுவதால், அதையெல்லாம் படிக்கேவேண்டியிருக்கிறது. அதனால் இப்போதைக்கு மீ த அப்பீட்டு...

Monday 13 September, 2010

நாங்களும் புனைவு எழுதுவோம்ல....

சுந்த்ர்ராமனுக்கு சுருக்கென்று இருந்தது. சத்தியமூர்த்தியா இப்படி பேசியது. இல்லை. ஏதோ தவறு நடந்திருக்கிறது. சத்தியமூர்த்தி இப்படி பேசக்கூடியவனில்லை.

"இதுக்கே மேலேயும் என்னங்க அவமானம் இருக்கு,..." ஆதங்கத்துடன் மனைவி ஆரம்பித்தாள்...

"ஏ..இருடி..அவனுக்கு என்ன பிரச்சனையோ.."

"என்னங்க அப்படி ஒரு பிரச்சனை..யோசிச்சு பாருங்க. இந்த ஊருக்கு வர்றப்ப, கையில ஒரு நையா பைசா இல்லாமதான வந்தாரு உங்க நண்பர்..
நீங்கதான, மூணுவேளை சோறு போட்டு ஒரு வேலையும் சொல்லிக் கொடுத்தீங்க..ஒரு நன்றி விசுவாசம் வேண்டாம்.."

"ப்ச்..இப்ப என்ன நடந்திச்சு.."

"இதுக்கு மேல என்ன நடக்கணும்..செருப்ப கழட்டி அடிச்ச மாதிரி இல்லை..போன் பண்ணி மகன் கல்யாணத்துக்கு கூப்பிடவேண்டாம். மூஞ்சில அடிச்ச
மாதிரி வரவேணாமுன்னு சொல்றாரு..இது உங்களுக்கு அவமானமா தோணலை.."

"ப்ச்..விஷேஷத்துல பெரிய பெரிய ஆட்களெல்லாம் வருவாங்க.."

"என்ன பெரிய ஆளுங்க..நீங்க வளர்த்து விடலைன்னா எப்படிங்க அவருக்கு இந்த பெரிய ஆளுங்க கிடைக்கும்.."

"ஒருவேளை..நான் போனா..அங்க எனக்கு ஏதாவது அவமானம் நடந்துருமோன்னு கூப்பிடலையோ என்னமோ.."

"ஆஹா..என்ன ஒரு சப்பைக்கட்டு..ஞாபகப்படுத்தி பாருங்க..ஒவ்வொரு பிஸினஸ் தொடங்குறதுக்கு முன்னாடி, உங்களை கூப்பிட்டு வேலை வாங்குவாரே..
அடேங்கப்பா..பிஸினஸுக்காக என்ன அலை அலைஞ்சீங்க..தெரு, தெருவா நடந்து போயி அவர் அறிமுகப்படுத்த போற ப்ராடக்ட் பத்தி கூச்சமே இல்லாம
விளக்குனீங்களே..கொஞ்சம் கூட நன்றி விசுவாசம் இல்லீங்க..?? இதுக்கெல்லாம், நீங்க வேணும்.ஆனா பையன் கல்யாணத்துக்கு மட்டும் வரவேணாமுன்னு
சொல்றப்ப, உங்களுக்கு கோபம் வரலை.."

"ம்..எப்ப பார்த்தாலும் என் நண்பனை குத்தம் சொல்லுவியா.."

"சரி..திருமணத்துக்கு கூப்பிட்டிருக்காரே, கிள்ளி வளவன், ராஜாமணி..இவுங்க எல்லாம் யாருங்க.."

"ம்...அது வந்து..."

"இந்த கிள்ளிவளவன் உங்க நண்பரை என்ன பேச்சு பேசுனாரு..உங்க நண்பரைப் பத்தி பேசுனாருன்னு தெரு தெருவா, அவுங்க ஆளுககிட்ட சண்டைக்கு போயி
அடி வாங்கி வந்தீங்களே..இன்னும் அந்த ரத்த காயம் கூட அப்படியே இருக்குங்க.."

"நீ சும்மா இருக்க மாட்ட.."

"இந்த ராஜாமணி..உங்க நண்பர் பிசினஸ் பண்ற எந்த ஒரு பொருளும் ஏரியாவுக்குள்ள வரக்கூடாதுன்னு என்ன ஆர்ப்பார்ட்டம் பண்ணினாரு..அவரை எதிர்த்துகிட்டு
என்னமா அடிவாங்கினீங்க..சே..ரெண்டு நாளு ஹாஸ்பிடல்ல..நானும் கூடவே இருந்தேங்க..ரெண்டுநாள் ஒரு பொட்டு தூங்கல தெரியுமா..கடவுளே, என் புருசனைக்
காப்பத்துன்னு நான் கெஞ்சாத சாமி இல்லை.."

"ஏ..என்ன நீ பெரிய இவளாட்டம்..என் நண்பன்.."

"ஆமா..இப்படியே பேசுங்க..அவரு உங்களை நல்லா வேணுங்கறப்ப மட்டும் நல்லா யூஸ் பண்ணிட்டு, வேண்டாங்குறப்ப துக்கி போடுவாரு....நீங்களும் தன்மானமே
இல்லாம "நண்பன் வாழ்கன்னு கோஷம் போடுங்க...ஏங்க நாம இப்படி இருக்கணும்..நம்மளுக்கு குடும்பம் குட்டி இருக்குங்க..முதுகெலும்பு இருக்குங்க..
நம்ம எல்லாம் படிச்சவங்க..த்ப்புன்னு தெரிஞ்சுக்கிட்டே திரும்ப திரும்ப நண்பனுக்கு அடிமையா இருக்கீங்களே..தப்புன்னு புத்திக்கு உறைக்கலை..நாம எல்லாம்
சோத்துல உப்பு போட்டு தான..."

இதற்குமேல் சுந்தர்ராமனால் பொறுக்க முடியவில்லை. எழுந்து ஒரே அறை..பொறி கலங்கி போனாள்..திருமணம் ஆனதிலிருந்து இதுவரை கைநீட்டி அடித்ததில்லை..
அவள் கண்களில் பொலபொலவென்று கண்ணீர் வழிந்தோடியது...

"உன்னை...என் நண்பனைப் பத்தியா தப்பா பேசுற..கொல்றேண்டி..உன்னை.." வெறிபிடித்தாள் போல் கத்தினார்..செல்போன் மணி அழைக்கவே எழுந்து உள்ளே சென்றார்..
திரும்பி வரும்போது சுந்தர்ராமன் முகத்தில் புன்னகை..

"அடியே..இவளே..பாருடி என் நண்பனை..இப்பதான் கால் பண்ணினான்..எங்களுக்குதான் தனியா பார்ட்டி வைக்கிறானாம்..நண்பண்டி..." பெருமிதம் தெரிந்தது..

"ஓ...ஓ..யாருக்காம்..."

"அது..அது வந்து..ஆபிஸில வேலை பார்க்குற எல்லாத்துக்கும்.."

"ப்ச்....போய் நல்லா சோறு சாப்பிட்டு அடிமையாவே இருங்க....இப்ப நீங்க இருங்க..உங்களை பார்த்து நம்ம மகன் இருப்பான்..அவனைப் பார்த்து நம்ம பேரன் இருப்பான்..இப்படியே
அடிமையாவே இருப்போம்..ஏன்னா வெள்ளைக்காரங்கிட்ட அடிமையா இருந்தவங்கதானே நாம.."

"உன்னையெல்லாம் சாகடிச்சாதாண்டி புத்தி வரும்..." சுந்தர்ராமன் எழுந்து கை ஓங்கவே செல்போனில் எஸ்.எம்.எஸ் ஒலி கேட்டது...எடுத்து பார்த்தார்...

"சுந்தர்..சத்தியமூர்த்திடா...பங்கசன்ல நடந்த பார்ட்டியிலே வீடு கொஞ்சம் அசுத்தமாயிடுச்சு..கொஞ்சம் காஸ்ட்லி திங்க்ஸ் இருக்கு..வேலைகாரனுங்கள நம்ப முடியலை..
சுத்தம் பண்ணனும்..வர்றியா..."

Saturday 11 September, 2010

மிக்சர் ஜீஸ்

இந்த வார சோகம்

முரளி.,.மரணம் எல்லாருக்கும், எப்போதும் வரும் என்று சமாதானம் சொன்னாலும், சற்று மனசை ஆட்டிப்பார்க்கும். இன்னும் சொல்லப்போனால், சிலரது மரணம், மனதை ஒரு
உலுக்கி உலுக்கி விடும். அப்படிப்பட்ட நிகழ்வுதான் நடிகர் முரளியின் மரணம். அவரது அசைவற்ற உடலைப் பார்த்துவிட்டு, காபி வித் அனுவில் அவரது பேச்சை தொடர்ந்து
கேட்க முடியவில்லை. என்னை அறியாமல் கண்ணீர் விட்டுவிட்டு டி.வியை ஆப் செய்து விட்டேன். வசீகரமான முகம், மற்றும் அந்த பேச்சு..,,ம்,,மரணம்தான் எத்தனை
கொடியது.

இந்த வார வேண்டுகோள்

வேறு யாருக்கு..நம்ம பதிவுலகத்திற்குதான். திரும்பவும் சண்டையை ஆரம்பித்து விட்டார்கள். உண்மையிலேயே சலிப்பாக இருக்கிறது. தங்களுக்குள் பேசியோ, "சாட்" செய்தோ
தீர்த்து கொள்ளவேண்டிய பிரச்சனைகள் நடுத்தெருவுக்கு வருகின்றன. யாராவது, யாரையாவது குற்றம் சொல்லிக்கொண்டே இருக்கின்றனர். அவரும் நான் குற்றமற்றவன்
என்று காண்பிப்பதற்காக ஒரு பதிவிடுகிறார்...ஓட்டுகள் கன்னாபின்னாவென்று விழுகின்றன. தமிழ்மணம் அட்மின் என்ன செய்கிறார் என்று தெரியவில்லை. அட்மின்
ஐயா..தயவு செய்து இது போன்ற பதிவுகளை 100 ஓட்டு வாங்கினாலும் பரவாயில்லை. மட்டுறுத்துங்கள். அட்லீஸ்ட் அந்த இடத்திற்கு, ஒரு புதிய பதிவரின் நல்ல
பதிவு இடம் பெற்ற புண்ணியமாவது கிடைக்கும்.

இந்த வார படங்கள்

இந்த வாரம் ஆணி புடுங்குவது கம்மியாக இருந்ததால், நிறைய படங்கள் பார்த்தேன். பலே பாண்டியா, சிந்து சமவெளி, பாணா காத்தாடி, இரண்டு முகம்..இதில் என்னைக் கவர்ந்தது
பாணா காத்தாடி. நூல் போன்ற ஒரு கதையை, அழகாக பட்டமாக்கி பறக்க விட்டுள்ளனர். திரைக்கதையும், இசையும் அழகாக வானில் பறக்கின்றன. எனக்கென்னமோ, இந்தப்
பையன் அதர்வா கண்டிப்பாக ஒரு ரவுண்ட் வருவான் போல தோணுகிறது, அடுத்த படத்தில் பக்கத்தில் உள்ள வேலிக்கல்லை உடைக்காதவரை.. அடுத்து என்னைக் கவர்ந்த
ஒரு ஆங்கில படங்கள் "தி பிளைட் ஆப் த பீனிக்ஸ்", அப்புறம் "த மேன் ஆப் த ஹானர்..", "போன் பூத்..", "ஷூட்டர்" அனைத்தும் டாப் கிளாஸ் படங்கள். முடிந்தால் பாருங்கள்

இந்த வார பாடல்கள்

இசைஞானி இளையராஜாவின் பழைய(கவனிக்கவும், பழைய) பாடல்களுக்கு நீங்கள் மயங்காவிடால், நீங்கள் இந்த பூமியில் பிறந்தே வீண். இரவுப் பொழுதில் அவருடைய 80, 90 காலத்து பாடல்களை கேட்டுக் கொண்டு தூங்க முயற்சி செய்யுங்கள். இன்னொரு உலகத்திற்கு எடுத்து சென்று விடும். அத்தனையும் தேன். அப்படி மயங்கிய சில பாடல்கள்.

1. விழியிலே, உன் விழியிலே...
2. மஞ்சம் வந்த தென்றலுக்கு
3. சொர்க்கமே என்றாலும்
4. காதல் கவிதைகள் படித்திடும்
5. பூங்கதவே தாழ்திறவாய்
6. நான் தேடும் செவ்வந்தி
7.பூவே செம்பூவே
8. கீரவாணி, இரவிலே
9. பனிவிழும் இரவு
10. பனிவிழும் மலர்வணம்
11. என் கண்மனி, உன் காதலி
12. காதல் ஓவியம், பாடும் காவியம்
13. நான் பாடும் மௌனராகம்
14. பேசக்கூடாது
15. காதலின் தீபம் ஒன்று
16. நீ ஒரு காதல் சங்கீதம்
17. மயங்கினேன் சொல்ல தயங்கினேன்.
18. சங்கீத மேகம்
19. எங்கே என் ஜீவனே
20. வானிலே..தேனிலா..

கைவலிக்குதுயா..இசைஞானியே..இப்ப எங்க இருக்கீங்க...
இந்த வார வெற்றி

கடைசியாக ஜோடி நம்பர் ஒன் முடிவுக்கு வந்துவிட்டது. எனக்கு பிடித்த பிரேம் கோபாலே வின்னர் ஆனதில் கொஞ்சம் சந்தோசம்தான். ஆனால் பைனலில் அவரது டான்ஸ் ஏனோ எனக்கு
பிடிக்கவில்லை. ஆனால் பிரீபைனலில் ஒரு ஆட்டம் போட்டார் பாருங்கள். அதற்கே இந்த மகுடம். வலிக்க, வலிக்க ஈழத்தமிழர்களின் நிலையை சொன்ன விதம் அருமை.
நல்ல டான்ஸர் ஷெரீப் தோற்றது வருத்த்மே. விஜய் டிவியின் செல்லப்பிள்ளை டி.டி எந்த மகுடமும் வாங்காதது ஆச்சர்யமாக இருக்கிறது. விஜய் டி.வி திருந்திவிட்டதா???

இந்த வார உதவி

ஹிட்லரின் கடைசி நிமிடங்களை சொல்லும் படம் ஏதாவது இருக்கிறதா..இருந்தால் பெயர் சொல்ல முழியுமா..??(வாழ்கேர், தி பியானிஸ்ட், ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் , தி டௌன் பால் தவிர...)

இந்த வார சுவை(18++) (நண்பன் சொன்னது)

சுய இன்பம் பற்றி ஒரு ஆராய்ச்சியாளர் சர்வே ஒன்றை எடுத்திருந்தார். அதன் முடிவை சொல்வதற்காக அனைத்து பத்திரிக்கையாளரையும் அழைத்திருந்தார்.

ஆராய்ச்சியாளர்: நண்பர்களே நான் எடுத்த சர்வே, ஆச்சர்யம் அளிக்கிறது. இந்த உலகத்தில் 95% பேர் தாங்கள் சுய இன்பத்தில் ஈடுபடுவதாக ஒத்துக் கொள்கின்றனர்

பத்திரிக்கையாளர்: அப்படியானால் அந்த 5% பேர்

ஆராய்ச்சியாளர் : பொய் சொல்வதாக ஒத்துக் கொள்கிறார்கள்

Friday 10 September, 2010

சிந்து சமவெளி பட விமர்சனம்

படங்களில் இரண்டு வகை உண்டு. மனைவி, குழந்தைகளோடு பாப்கார்ன் கொறித்து கொண்டோ அல்லது கடலைமுட்டாய் சாப்பிட்டு கொண்டோ "விஜய் சூப்பரா நடிக்குறாருல்ல.." என்று பொய் சொல்லிக்கொண்டு பார்ப்பது. இன்னொரு வகை படம், தலையில் துண்டைப் போட்டுக்கொண்டு யாரும் பாக்குறாயிங்களா, என்று திருட்டுப்பார்வைப் பார்த்து கொண்டே இருட்டுக்குள் அமர்ந்து கொண்டாலும் "சார்..சீன் எப்ப போடுவாயிங்க.." என்று பக்கத்து சீட்டுக்காரர் கேட்க, "தெரியலையேப்பா.." என்று நாயகன் கமல் பாணியில் சொல்லிக் கொண்டே பார்ப்பது. இரண்டாவது வகை படங்களை பார்ப்பவர்கள் பொதுவாக கதை, திரைக்கதை, வசனம் எல்லாம் எதிர்பார்த்து போவதில்லை. அதுவும் இடைவேளைக்கு அப்புறம் செல்பவர்களே அதிகம்.
சிலநேரம் அண்ணனோ, ஆசிரியரோ பக்கத்து சீட்டில் அமர, திடிரென்று பார்த்து கொள்ள, அதிர்ச்சியாக "நீயா..நீயா..கண்ணா..நீயும், நானுமா.." என்று சிவாஜி டயலாக் பேசிக்கொண்டு அலறி அடித்து ஓடிய சம்பவங்கள் பல வர்லாற்றில் இடம் பெற்றிருக்கின்றன. இவையெல்லாம் உனக்கு எப்படி தெரியும் , அனுபவமா என்று நீங்கள் கேட்டால் "உங்களில் ஒரு குற்றமும் செய்யாதவன், என்மேல் முதல் கல்லை எறியட்டும்.." என்று பைபிள்
டயலாக் பேசுவேன்..

சிந்து சமவெளி, மேலே சொல்லப்பட்ட இரண்டாம் வகையறா படங்களை சேர்ந்தது. சென்னையில் எங்கு ரிலீஸ் பண்ணியிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
அனேகமாக "பரங்கிமலை ஜோதி" யாக இருக்க கூடும். ஏற்கனவே "துரோகம் நடந்தது என்ன.." என்ற படம் பார்த்துவிட்டு வெறி பிடித்த ரசிகர்கள் ரீபீட் ஆடியன்ஸாக மாறி, இந்த படத்திற்கும் சென்று நூறு நாட்கள் ஓடும் வாய்ப்பு உண்டு..

சரி, படத்தின் சதைக்கு..அய்யோ..கதைக்கு வருவோம். ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற அப்பா, தன் எஞ்சிய காலத்தை வீட்டிலேயே கழிக்கலாம் என்று வீட்டிற்கு வருகிறார். ஒரு இரவுவேளையில் பாம்பு கடித்து மனைவி இறந்துவிட தனிமரமாகிறார். சரி, பையனுக்கு ஒரு கல்யாணம் பண்ணி சந்தோசப்படலாம் என்ற எண்ணத்தில் அவனது காதலியையே கல்யாணம் செய்து வைக்கிறார். மகன் ஆசிரியர் பயிற்சிக்காக வேறு ஊருக்கு செல்லும்போது,
தன் அப்பாவை நம்பி, மனைவியை விட்டு செல்ல, மாமனாருக்கும், மருமகளுக்கும் நடக்கும் கூத்தே படத்தின் ஹைலைட். மாமனராவது பரவாயில்லை,மருமகள் ஒரு படி மேலே. விட்டால் புருசனை கொன்று விட்டு "ரோசாப்பூ...சின்ன ரோசாப்பூ.." என்று மாமனாருடன் டூயட் பாடாத குறைதான். சீன் பட ரசிகர்கள் புல்லரிக்கும் வாய்ப்பு நிறைய உண்டு..கடைசியில் ஆனந்த விகடனில் தன் புருஷன் எழுதிய கதையை பார்த்து மனம் உடைந்து, ரயில் விழுந்து தற்கொலை
செய்து கொள்கிறார், மனைவி..கூடவே ரசிகர்களும்..கடைசியில் உண்மை தெரிந்து, மகனே, அப்பனை போட்டு தள்ள "ப்ச்..சீன் கொஞ்சம் கம்மிதாம்பா.." என்று
முணுமுணுத்து கொண்டே வெளிவருகிறார்கள் ரசிகர்கள்...

பொதுவாக நம் கலாசாரத்தின் மதிப்பே, உறவுகளுக்குள் இருக்கும் ஒழுங்குதான். அந்த ஒழுங்கின் அழகை படம்பிடிக்காமல், எங்கேயோ ஒரு இடத்தில் நடக்கும் தவறுகளை படமாக எடுத்து "இது எல்லா இடத்திலும் நடக்கும் கதைதான்.." என்று சப்பை கட்டு கட்டுகிறார் இயக்குநர் சாமி. படம் முழுவதும் வக்கிரத்தை தூவி விட்டு கடைசியில் "எல்லாரும் ஒழுங்கா இருக்கணும்பா..": என்று போதிப்பது விவேக் படத்தில் வரும் "மக்கா..தெரியாம குத்திட்டேண்டா." என்று சொல்வது போல இருக்கிறது. இதற்கு அவர் டைரக்டாக ஒரு சீன் படமே எடுத்து இருக்கலாம். நான் ஏற்கனவே சொல்லியது போல் சீன் படத்தில், கதை, திரைக்கதை, வசனம், இசை எதுவும் முக்கியம்
இல்லை என்பதால் அதைப் பற்றி விமர்சனம் செய்ய விரும்பவில்லை. அப்புறம் ஏண்டா விமர்சனம் எழுதுகிறாய் என்று கேட்டால்.."இந்தப் படம், எல்லோரும் பார்க்க வேண்டிய படம்" என்று டைரக்டர் சொல்லி பொதுமக்களின் பார்வைக்கு வைப்பதால் வரும் கோபத்தில்தான். இந்த படம் படைக்கப்படவேண்டியது பொதுமக்களுக்காக அல்ல.

என்னது படம்பற்றிய கடைசி பஞ்ச்லைனா..???

பீடா ஒன்றை வாயில் போட்டு மென்று கொள்ளவும்..நன்றாக எச்சில் ஊறவிடவும்..இப்போது உதட்டை ரெடியாக குவிக்கவும்...ரெடியா...

"த்த்த்...த்த்த்...த்த்த்....தூதூதூதூதூதூதூ...."

Tuesday 7 September, 2010

தாய்மை..

எத்தனை நாளு தள்ளி போயிருக்குமா..??
இனிமேல்தான் ரொம்ப ஜாக்கிரைதையா இருக்கணும்...
ரொம்ப உறைப்பு, உப்பு சேர்க்ககூடாதும்மா..
ஒருகழிச்சே படுமா..மல்லாக்க படுக்காத..
நிறைய பழம் சாப்பிடு...
மாசாமாசம் மெடிக்கல் செக்கப் போயிடு..
குங்குமப்பூ பாலுல கலந்துக்க..புள்ள சிவப்பா பொறக்கும்..
வயிறு எப்படி இருக்கு..புள்ள உதைக்கிறானா..
பப்பாளி பழம் பக்கம் தலைவைச்சும் படுக்காத...
ரெண்டு மாசம் அப்படிதான் வாந்தி இருக்கும்..
ஆண்குழந்தை பொறந்தா நல்லாதான் இருக்கும்..
வாக்கிங்க் போறியா...
மாப்பிள்ளை மேல ஒரு கண்ணு வைச்சுக்கோ...
சுகரு எப்படி இருக்கு..பாவக்காய் சாப்பிடு..
டெய்லி பால் சாப்பிடு...
கனமான பொருளை எதுவும் தூக்காதே..
அனைத்தும் பிடித்திருக்கிறது...
அம்மா என்ற ஒரு வார்த்தையைக் கேட்பதற்கு...


கங்கிராஜூலேஷன் மச்சான்..கலக்கிட்ட..
வாழ்த்துக்கள் மாப்பி...
எங்கடா டிரீட்...
என்ன டெலிவரிக்கு ஊருக்கு அனுப்புறயா...
டெய்லி ஒரு ஆப் வாங்குறோம்..அசத்துறோம்..
என்னடா..பிகர் சூப்பருல.....
அப்புறம் என்னடா..ஒரே கிளப்புதான்....
பத்து மாசம் நல்லா எஞ்சாய் பண்ணிக்கடா...
நண்பன் பில்லுல ரெண்டு முட்டை புரோட்டா பார்சல்..
அப்பாவாகப் போறயில்ல..செலவழிடா...
சீன் பட சீ.டி ரெண்டு வாங்குவோமா..
மவனே..இதுதான் டிரீட்டாடா..
அனைத்தும் பிடித்திருக்கிறது..
கையில் உள்ள மணிபர்ஸ் காலியாகும் வரை...

ஒன்னுக்கு கீழ ஒன்னு..
கவிதை..
நாராயணா..இவிங்க கொசுத்தொல்லை தாங்க முடியலைய்யா...